Thursday, August 4, 2011

வானம் வசமானதா? விஷமானதா?

து என்னுடைய மீள்பதிவு. 
சில ஜன்மங்கள் பதிவுலகில் புகழுக்காகவும். ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் புனிதமான நாட்களையும் தன்னுடைய வாழ்வையும் கெடுத்து கொள்கிறார்கள். அது போன்ற பொது கழிவறையில் கிறுக்கும் அசிங்க பேர்வழிகளுக்காக மறுபடியும் இந்த மீள் பதிவு.


விண்மீன்கள் கண்சிமிட்டும் வான்வெளியில் வியாபித்திருக்கும் சாட்லைட்கள் யுகத்தில் தொழில் நுட்பத்தின் தவிர்க்க முடியாததுமான வலையுகத்தில் விரும்பியோ (விரும்பாமலோ) வெறுத்தோ வாழ்கிறோம். வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது. துரதிஷ்டவசமாக அதிகமான இணைய பயனாளர்கள் அமில மழையில் நனைந்து இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.

இணையத்தின் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிவுக்களஞ்சியம். கேட்டதை கொடுக்கும் அலாவுதீன் பூதம் என்ற
கற்பனையை விஞ்சக்கூடிய தேடு பொறிகள். இறைக்க இறைக்க நீர் சுரக்கும் கிணறு.
இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இது என்னை போன்றவர்களுக்கு இனிப்பானச் செய்தி.


நம் உள்ளம் கவர்ந்த உரைகள்.  கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்கள். ஆச்சரியமூட்டும் அசையும் காணொளிகள். மனம் கிளரும் ஒளிப்படங்கள். இவற்றை கேட்பதோடு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


அன்றாட தமிழ் பத்திரிக்கையின் (பிராடு) மற்றும் உண்மைசெய்திகள்
வித்தியாசமான நாடு கடந்த நண்பர்களால் நடத்தப்படும் குழுமங்கள்
எழுத்து திறனை உளி கொண்டு செதுக்கி நம்மை ஒளிர செய்யும் நட்புகள். 
வாசிப்பார்வத்தை தண்ணீருற்றி வளர்க்கும் ஏராளமான பதிவாளர்களின் கவிதை கட்டுரை சிறுகதை மற்றும் நேர்காணல்களை தாங்கி வரும் இணைய தளங்கள். 
யாரிடமும் முறையிட முடியாத சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவை வளர்க்கும்
உபயோகமான இணையதோழமைகள்.

இணையத்தின் விஷம் தேய்ந்த மறுபக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.


அரசியலில் அடாவடித்தனம் செய்பவர்கள், தம் சுயத்தை
இழந்து நடிப்பு,விளையாட்டு விளம்பரத்துறைகளில் விலைபோனவர்கள்,
மேக்-அப் மன்னர்கள், வெகுளி வேடம் தரித்தவர்கள், ஆபாசப் பேர்வழிகள், சமூக விரோதிகள், கீழமை எண்ணம் கொண்டவர்கள், இவர்களின் பாதுகாப்பான புகலிடமாக இணையம் மாறிபோயிருக்கிறது.


இணையம் ஒரு திறந்த ஊடகம். தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது.இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாக தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு.


தன் சொந்த வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருப்பவர்கள் (பஸ் ஸ்டாண்ட்) பொது கழிவறையை அசிங்கப்படுத்துபவர்கள். யார் வந்தார்கள் அசிங்கமாக கிறுக்கினார்கள் என்று யாருக்கும் முகம் தெரியாது. 


பொது கழிவறையில் பொறுப்பில்லாமல் கிறுக்குபவர்களை விட மூர்க்கமான வக்கிர ஆபாச பேர்வழிகள் திறந்த இணைய ஊடகத்தில் இறைந்து கிடக்கிறார்கள்.
தன் வீட்டை தன் குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருடுகிற திருட முயற்சிக்கிற கேடு கெட்டவர்களுக்கு இணையம் எளிமையான பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
புகழ் பெற வேண்டும் என்பதற்காக இணையத்தில் பொறுப்பில்லாமல் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க தயங்காத விளம்பர பிரியர்களின் விளம்பரங்கள் குப்பைபோல் கொட்டி கிடக்கின்றன.ஒரு பெண்ணும் இளைஞனும் சாட்டிங்கில் நீண்ட நாட்களாக (அசிங்கமான) நட்பாக பழகியதில் அந்த இளைஞனின் ரோமண்டிக்கான பேச்சில் மயங்கிய அந்த பெண் இருவரும் நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து நகரின் மத்தியுள்ள பூங்காவில் சந்திக்க திட்டமிட்டனர்.அடையாளம் கண்டுக் கொள்ள welcome  என்ற பெயர் பொறித்த சிகப்பு கலர் டி சார்ட் அணிந்து வர வேண்டும் என்று முடிவெடுத்து சந்தித்தார்கள். சந்தித்த பிறகு தான் தெரிந்தது இத்தனை நாள் தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞன் தன்னுடைய மகன் என்று.
இது அமெரிக்காவில் 2006-ல் நடந்த உண்மை சம்பவம்.தீயை விளக்கேற்ற பயன்படுத்தாமல் தானும் அந்த வீட்டில் தான் வசிக்கின்றேன் என்ற பொது அறிவுகூட இல்லாமல் வீட்டை எரிக்க பயன்படுத்துகிறவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

26 comments:

 1. நல்லவைகளை எடுத்துக்கொண்டு,அல்லதை விட்டுவிடல்,இணையத்திற்கும் பொருந்தும்.நல்ல பதிவு.மற்ற பதிவுகளையும் பார்த்தேன்.நிறைய பயனுள்ள பதிவுகள்.குறிப்பாக உடல்நலம் குறித்த பதிவுகள்.பாராட்டுகள்.

  ReplyDelete
 2. @நண்பர் R.Elan.அவர்களுக்கு

  //நல்லவைகளை எடுத்துக்கொண்டு,அல்லதை விட்டுவிடல்,இணையத்திற்கும் பொருந்தும்.நல்ல பதிவு.மற்ற பதிவுகளையும் பார்த்தேன்.நிறைய பயனுள்ள பதிவுகள்.குறிப்பாக உடல்நலம் குறித்த பதிவுகள்.பாராட்டுகள்.//

  மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 3. மீண்டும் ஒரு ‘நச்’ பதிவு பாய்... ஒன்னு, தன் புத்தி இருக்கணும், இல்லை சொல் புத்தி இருக்கணும்... ரெண்டும் இல்லாம அடுத்தவன் வந்து சொல்லற மாதிரி வச்சுக்கரவங்களை... அதையும் பப்லிஷ் செஞ்சு விளம்பரம் தேடறவங்களுக்கு.... இப்படித்தான் ஸ்பீக்கர்ல போட்டு 'உணர்த்த’ முடியும்..!!

  ReplyDelete
 4. ///தீயை விளக்கேற்ற பயன்படுத்தாமல் தானும் அந்த வீட்டில் தான்வசிக்கின்றேன் என்ற பொது அறிவுகூட இல்லாமல் வீட்டை எரிக்க பயன்படுத்துகிறவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  ///


  இதுபோன்ற நல்ல கட்டுரைகளைப் படித்தாவது திருந்தட்டும். பாராட்டிக்கல் நண்பா!

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்
  நல்ல பதிவு

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும்
  நல்ல பதிவு

  ReplyDelete
 7. @அன்னு அவர்களுக்கு

  தங்களின் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 8. @சிவா அவர்களுக்கு

  நன்றி நண்பரே

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்ல பகிர்வு சகோ!!!

  இனியேனும் நல்வழி நாடட்டும் :)

  ReplyDelete
 10. சகோ உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் வரவும்.

  ReplyDelete
 11. எல்லாத்லயுமே நல்லது கெட்டதும் கலந்துதான் இருக்கு. நாமதான் தெளிவா இருக்கணும். நல்லதையே எடுத்துக்கபழகனும்.

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

  அருமையான பதிவு சகோ..சரியான சாட்டையடி .....

  ReplyDelete
 13. அபு ஃபைஜுல்August 5, 2011 at 2:18 PM

  அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.

  திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! திருக்குர்ஆன் 86:11. இவர்கள் நேர்வழிப் பெற. இறைவனிடம் இறஞ்சுவோம்.

  ReplyDelete
 14. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

  தொழுகை

  ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

  கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

  ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

  அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

  இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

  ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

  தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

  ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

  உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

  இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

  உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

  தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

  நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

  உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

  பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

  "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

  இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

  தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

  இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

  தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

  நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

  தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

  தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


  வாஞ்சையுடன் வாஞ்சூர்.

  .

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும்

  தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமான (மீள்)பதிவு சகோ.!

  ReplyDelete
 16. @ஆமினா
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  வருகைக்கு நன்றி தங்கை

  ReplyDelete
 17. @அந்நியன் 2

  கண்டிப்பாக வருகிறேன் சகோ

  ReplyDelete
 18. @Lakshmi
  அவர்களுக்கு


  //எல்லாத்லயுமே நல்லது கெட்டதும் கலந்துதான் இருக்கு. நாமதான் தெளிவா இருக்கணும். நல்லதையே எடுத்துக்கபழகனும்.//
  தங்களின் தெளிந்த சிறந்த அறிவுரைக்குநன்றி சகோ
  நல்லதையே எடுத்து பழகுவோம்

  ReplyDelete
 19. @ஆயிஷா அபுல்.

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்றி சகோ

  ReplyDelete
 20. @அபு ஃபைஜுல்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
  குர்ஆன் வசன ஒளியில் தங்கள் அளித்த கருத்துரைக்கு நன்றி

  ஆம் அவர்களுக்கு பிரார்த்தனை செய்வோம்

  இறைவன் நேர்வழி காட்ட போதுமானவன்

  ReplyDelete
 21. @Abdul Basith

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்றி சகோ

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
  மிகவும் உபயோகமான பதிவு.... //எழுத்து திறனை உளி கொண்டு செதுக்கி நம்மை ஒளிர செய்யும் நட்புகள்.
  வாசிப்பார்வத்தை தண்ணீருற்றி வளர்க்கும் ஏராளமான பதிவாளர்களின் கவிதை கட்டுரை சிறுகதை மற்றும் நேர்காணல்களை தாங்கி வரும் இணைய தளங்கள்.
  யாரிடமும் முறையிட முடியாத சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.
  உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவை வளர்க்கும்
  உபயோகமான இணையதோழமைகள்.//// அல்ஹம்துலில்லாஹ் எனக்கு கிடைச்சது இதான்.... :)

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

  மிக அருமையான பதிவு!. கோபம் பதிவில் மிளிர்கிறது, அது நியாயமான கோபமும் கூட.

  பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

  ReplyDelete