Saturday, January 22, 2011

தினமலரின் காவி நரித்தனம்

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செய்திகளை உருவாக்குவதில் தினமலரின் பங்கு கனிசமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இது போன்ற காவி ஊடகங்கள் முஸ்லிம்களுக்கெதிராக மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராகவும் செய்திகளை வெளியிடுகின்றனர். மண்டல் கமிஷனுக்கு எதிராக உயர் ஜாதி வகுப்பினர் நடத்திய போராட்டங்களைப் பூதாகரமாக்கி வெளியிட்டனர். நாடே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கினர். இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டங்களைத் திட்டமிட்டு மறைத்தனர்.

 “வாளின் முனையை விட பேனாவின் முனை வலிமை மிக்கது”
என்பது நாம் வாழும் காலத்திற்கே மிகவும் பொருந்தி வருகிறது.
“ஆவதும் ஊடகத்தாலே அழிவதும் ஊடகத்தாலே” என்பது நிதர்சன உண்மை.
ஊடகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பவர் உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மக்களின் சிந்தனை, நடை, உடை, பாவனை, உணவு, பொழுதுபோக்கு இத்தனையிலும் ஊடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவர்கள் மக்களை சிந்திக்க விடுவதில்லை. மக்களுக்காக அவர்கள் சிந்திக்க விரும்புகிறார்கள். மேல்நாட்டு ஆதிக்க சக்திகளும் நம் நாட்டு ஆதிக்க சக்திகளும் இஸ்லாத்தைத் தமது பொது எதிரியாகக் கருதுகின்றன. பொதுவாக ஆதிக்க சக்திகள் ஒரு பொது எதிரியைக் காட்டியே தமது பலத்தை பெருக்கிக் கொள்வர். கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர்கள் ஒரு பொது எதிரியை தேடிக் கொண்டிருந்த வேளையில் முஸ்லிம்களில் ஒரு நுண்ணிய பிரிவினர் செய்த வன்முறைச் செயல்கள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எல்லா நிலைகளிலும், எல்லா வகைகளிலும் மோசமாகச் சித்தரித்து முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்கி சமூகங்களுக்கிடையில் இடைவெளியை அதிகரிப்பது என்ற ‘ஒற்றைத் திட்டத்தின்’ கீழ் செயல் பட துவங்கினர். அதற்காக அவர்கள் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.
உதாரணத்திற்கு 22/01/2011 சனிக்கிழமை இன்று தினமலரின் வலைத்தளத்தியுள்ள முகப்பு செய்தியை பாருங்கள்.

16hrs : 49mins ago
பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். .
என்ற செய்தியை சிறிய புகைப்படத்தோடு போட்டு விட்டு
உடனே பா. ஜ.க 30 பஸ்களை கொளுத்தியவுடன் பா.ஜ வன்முறை கட்சி என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக. இதுலாம் சின்ன வன்முறைங்க இதைவிட பெரிய வன்முறையேல்லாம் முஸ்லிம்கள் நடத்தி இருக்கிறார்கள் என்பதை நிருபிக்க காஷ்மீர் சம்பந்தமான வீடியோவை சம்பந்தமே இல்லாமல் வெளியிட்டுயிருக்கிறார்கள் (அதாவது பா.ஜ வுக்கு புகைப்படம் என்றால் முஸ்லிம்களுக்கு அதைவிட பவர்புல்லான காணொளி)
இந்த வீடியோவை பார்த்தீர்களா? கடந்த வருடத்தில் காஷ்மீர் மக்கள் செய்த கலவரத்தால் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு 700 கோடியாம் (இதோடு 30 பஸ்களை இனைத்து பார்த்தால் இது சாதரணம் அல்லாவா) சுற்றுலா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கு சேர்க்கவில்லையாம் .

ஒரு கல்லில் இரு மங்காய் அடிக்கிற ஆதிக்க சக்தியின் ஊடகத்தின் நரித்தனத்தை பாருங்கள்.

1. காஷ்மீர் காட்டுமிராண்டி முஸ்லிம் மக்களை விட பா.ஜ.தொண்டர்கள் இந்திய நாட்டிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்தி விடவில்லை.

2.பார்த்தீகளா காஷ்மீர்ல தேவையில்லாமா போராடி இப்ப பாதிப்பு யாருக்கு அந்த மக்களுக்கு தான் பாத்தீகளா காஷ்மீர்ல தொழில் துறைகள் நசிந்து வறுமையில 10 வருஷம் பின்னாடி போயிட்டாக அதனால அரசங்கத்த எதிர்த்து யாரும் போராட கூடாது .போராடினால் காஷ்மீர்க்கு ஏற்பட்ட நிலை தான் எல்லாருக்கும் என்று மறைமுகமாக பயமுறுத்தி அட்வைஸ் பன்னி ஊளை விடுகிறது தினமலர் காவி நரி தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பத்திரிக்கைகாக போட்டியிடும் மற்ற பத்திரிக்கையான,


இந்த கல்லெறித் திருவிழாவிற்கு காரானமானவன் ஜனவரி எட்டாம் தேதி காஷ்மீரில் கொல்லப்பட்ட இனாயத்கான் என்ற பதினாறு வயது இளைஞன் தான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வு பெற்ற துடிப்பான பையன் டூவிஷன் வகுப்புக்குப் போகும் வழியில் பாதுகாப்புப் படையினர் அவனை சுட்டு கொன்றனர். அவனை அடக்கம் செய்யும் போது, இனாயத், தேரே கூன்ஸே இன்கிலாப் ஆயேகா” (இனாயத் உன்னுடைய உதிரத்திலிருந்து புரட்சி வந்தே தீரும்) எனும் முழக்கம் விண்ணை அதிர வைத்தது இறந்த உயிர்களுக்கு நீதி கேட்டு சொந்த உயிர்களை பணயம் வைத்து முடிவுறாத முழக்கங்களுடன் தெருவுக்கு வருகிறார்கள் இனியும் வருவார்கள்.
கொல்லப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்க, நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக செய்திகளை மறைப்பதற்குத்தான் அரசு பெரிதும் முயன்றது. 
சென்ற ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பாதுகாப்புப் படையினர் பதின்பருவ இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறார்கள் மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி 57க்கும் மேற்பட்டவர்கள் இது வரை கொல்லப்பட்டார்கள். சிலர் விளையாட்டு மைதானத்திலும் வீட்டுச்சரிவுகளின் அருகிலும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

இவ்வாறு கடந்த juneல் மட்டும் 13 குழந்தைகள் துடிதுடித்துச் செத்திருக்கிறார்கள், ஸ்ரீநகரில் கனி மெமோரியல் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற பதின்மூன்று வயதே ஆன வமிக் பாரூக் ஜனவரி 31ஆம் நாள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி இறந்தான் அடுத்த ஐந்து நாள்களுக்குள் ஷாஹித் பாரூக் எனும் பதினாறு வயது இளைஞன் தன் வீட்டின் அருகிலேயே எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கொல்லப்பட்டான். ஏப்ரல் 13ஆம் நாள் ஜீலம் நதிக்கரை ஒரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சுபைர் அஹமது பட்(17) இராணுவத்தினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும் பிள்ளைகள் நதியில் குதித்து விட்டனர்.

மற்றவர்கள் எல்லாம் நீந்திக் கரை சேர்ந்தபோது சுபைர் மட்டும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டன். அவனைக் காப்பாற்றப் படகுக்காரர்கள் சிலர் முயன்ற போதும் அவர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்தது இராணுவம். அதனால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சுபைரின் சாவை சாதாரண விபத்து என்று குறிப்பிட்டு வழக்கை முடித்திவிட்டார்கள். நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை இதுதான் இந்திய அரசாங்கம் கஷ்மீரிகளுக்கு வழங்கும் பாதுகாப்பின் இலட்சனம். ஒரு சுகந்திர நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படவேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பும் மரியாதையும் கூட காஷ்மீர் மக்களுக்கு கிடைப்பதில்லை.
700 கோடி அரசாங்க இழப்பீடுகளை பற்றி ஊளையிடும் தினமலர் என்றைக்காவது ஜனநாயக வழியில் போராடி தங்களுடைய விலை மதிக்கமுடியாத108 உயிர்களை இழந்த காஷ்மீரிகளைப் பற்றி ஒரு தலைப்பு செய்தியாவது வெளியிட்டுருக்குமா?
ஜனநாயகத்தை நேசிக்கக்கூடிய நடுநிலையாளர்களும், முஸ்லிம்களும் தினமலரை போன்று பாசிச சிந்தனை கொண்ட பத்திரிகைக்கு எதிரான உண்மையை சொல்லும் மாற்று ஊடகத்தை கட்டமைப்பது அவசியம்.
இவையே நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய கடமைகள். ஒப்பாரி வைப்பதை நிறுத்திச் செயலில் இறங்குவோம்.
ஊடகத்தை ஊடகத்தால் சந்திப்போம்.

42 comments:

 1. இந்த படங்களை தினமலர் ராமசுப்பையர்க்கு முடிந்தால் அனுப்பி வையுங்கள். மனித நேயம் என்று ஓன்று அவன் மனதில் இருந்தால், இனியாவது சிந்திப்பான்.

  ReplyDelete
 2. கொடுமை !!!
  நாம் இந்தியாவில்தான் இருக்கின்றமா அல்லது நரகத்தில் இருக்கின்றமா ? என்ற கேள்விதான் எழுகிறது.
  எல்லைப் பிரச்சனைகளுக்காக சின்னஞ் சிறுவர்களையும் அப்பாவி பொது மக்கள்களையும் கொன்னு குவிக்கும் ராணுவத்தினர் காட்டுமிராண்டிகள், வன்மையாக கண்டிக்கப் படக்கூடியவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் சரி.

  மனித உரிமையை மீறிய காங்கிரஸ் அரசும் ,மாநில அரசும் தண்டிக்கப் படகூடியவர்கள் இவர்களின் அலட்ச்சிய போக்காலும் அத்து மீறல்களாலும் பாதிக்கப் பட்டோர் பொது மக்கள்தான்,
  குடிமக்கள்களின் மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டிய அரசே அவர்களை கொன்னு குவித்தால் தீவிரவாதம் ஏன் தலை தூக்காது ?
  குற்றம் சாட்டப்பட்டவரை,அரசோ அல்லது நீதி மன்றமோ,குற்றத்தை நீங்களாக ஒப்பு கொள்ளுங்கள் என்று வற்ப்புருத்தக் கூடாது என்று,இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 20(3)ன் படியும்,அதேபோல பிரிவு 20(1)தடுத்து இருக்கையில்,குற்றமே செய்யாதவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சித்ரவதை செய்கிரிர்களே இது எந்த விதத்தில் நியாயம் ?

  எடுத்ததற்க்கெல்லாம் இந்திய முஸ்லிம்களை பாக்கிஸ்த்தானோடு இணைத்து பேசுகிரிகளே பிறகு எதற்கு அந்த நாட்டோடு நட்ப்பை வைத்திருக்கவேண்டும் ?
  அவன்தான் முதுகிலே குத்துகிறான் என்று தெரிகிறதே,அப்புறம் அவனுடைய சள்வார்கமிசை ஏன் துவைச்சு கொடுக்கிறே ?
  அனுப்பு பட்டாளத்தை பாக்கிஸ்த்தானுக்கு,ரெண்டுலே ஒன்னு தெரியட்டும்.
  அவன் பட்டாளத்துலே லட்ச்சப் பேரு சாகட்டும் நம் பட்டாளத்துலே லட்ச்சப் பேரு சாகட்டும் இதுதான் உண்மையான போரு,அதைவிட்டு விட்டு அப்பாவி மக்கள்களையும் அறியாத பிஞ்சுகளையும் கொன்னு குவிப்பது போர் அல்ல காட்டுமிராண்டித்தனம்.

  மனதை கஷ்ட்டபடக்கூடிய போட்டோக்கள்,பாவம் ஒன்னும் அறியாத பிஞ்சுகளை நினைத்து பார்க்கையில் மனதிற்கு ரொம்பக் கஷ்ட்டமாக இருக்கின்றது எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் நம்மனால் பிரார்த்திக்க மட்டும்தான் முடியும் இன்ஷா அல்லாஹ் எல்லோரும் அதை செய்வோமாக.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்...
  ராமாசுப்பையர் இறந்துவிட்டார், தினமலர் கூட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.

  ReplyDelete
 4. இந்தப்பதிவோடு தொடர்புடையது தான் கீழ்க்கண்ட சுட்டிகள்; சுட்டிப் பாருங்கள்.

  //தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது!//
  http://meiyeluthu.blogspot.com/2010/03/blog-post_15.html

  http://meiyeluthu.blogspot.com/2008/12/blog-post.html

  ReplyDelete
 5. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்January 22, 2011 at 9:45 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  அந்த பத்திரிக்கையை தினமலம் என்றோ தினமயிர் என்றோ அழைப்பதில் தவறில்லையென்றே தோன்றுகிறது. இவர்களுடைய யோக்கிதையை எழுதினால் இந்த வலைத்தளம் போதாது ஹைதர் அண்ணே.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
  சகோ. ஹைதருக்கு இறைவன் அருள் புரிவானாக! தக்க தருணத்தில் இந்த இடுகையை இட்டு நடு நிலையாலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளீர்கள். பி ஜே பி யின் முகத்திரையை கிழிக்கத்தான் இறைவன் கர்நாடகத்தில் கவர்னரை நியமித்துள்ளான் போல! உண்மைக்கு என்றும் அழிவில்லை என்றாவது அது வெளிவந்தே தீரும். இந்த பாசிச சக்திகள் என்னதான் ஆடினாலும் அவர்களால் ஒரு எல்லைக்குள் தான் ஆட முடியும். இன்ஷா அல்லாஹ் இந்த பாசிஸ்ட்டுகள் நடத்தும் நாடகம் எல்லாம் சரிய தொடங்கி உள்ளது. அதனுடைய ஆரம்பம்தான் இது. சமூக நலம் விரும்பிகள் ஒன்று சேர்ந்து சுய நலம் பாராமல் இந்த கயவர்களை எதிர்த்தால் இருந்த வடு தெரியாமல் இன்ஷா அல்லாஹ் அழிக்க முடியும். இறைவன் இந்த மன உறுதியை எல்லோருக்கும் வழங்க பிரார்த்திப்போமாக!

  ReplyDelete
 7. இங்க ஒரு உரிமையை மீட்க போராடும் போது அங்கே ஒரு உரிமை பரிபோகும் நிலைக்கும் முஸ்லிம்களை திட்டமிட்டும் பழிவாங்கும் அபாயம் முடக்கிவிடப்பட்டிருக்கிறது. எமது பிரார்த்தனைகளில் கட்டாயம் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்

  ReplyDelete
 8. “ஃபாஸிசத்தை எதிர்ப்போம், தீவிரவாதத்தை வேரருப்போம்”

  "ஓன்றுபடுவோம் சக்தி பெறுவோம்"

  ReplyDelete
 9. உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

  பதிவும் உங்கள் ஆதங்கமும் படங்களும் மிகச்சரியானவையே.

  இந்த 'தினமல(ர்)ம்'... இவர்களுக்கு "திருடன் யார்..", "திருட்டு கொடுத்தது யார்.." என்றே தெரியவில்லையா?

  1947-ல், "சட்டம் ஒழுங்கை ஏற்படுத்திவிட்டு நாட்டை மீண்டும் உங்களிடமே தந்து விடுகிறேன்" என்று கைஎழுத்திட்டுவிட்டு அந்நிய நாட்டின் உள்ளே ராணுவத்துடன் ஊடுருவிய இந்தியா இன்னும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை. இந்த இடைப்பட்ட 63 வருட காலங்களில் 'காஷ்மீரும் இந்தியாவின் ஒரு மாநிலம்தான்' என்று புதிய தலைமுறையை நம்பவைத்திருக்கிறது.

  அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்தும் இந்தியாவும் ஒன்றா? அதேபோல்தான்... காலனி நாட்டின் மக்களும் சொந்த நாட்டு மக்களும் எப்படி ஒன்றாவர்?

  ReplyDelete
 10. தொடர்ச்சி...

  ஆக, தன் நாட்டை, சொத்தை, அமைதியை, சுதந்திரத்தை... இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூவரிடம் திருடு கொடுத்தவன் காஷ்மீரி. ராணுவ அடக்குமுறைக்கு எதிரான அவனின் போராட்டத்துக்கு ஆயிரம் அர்த்தம் உள்ளது.

  ஆனால், மக்கள் சொத்தை ஊழல் செய்து திருடிய கர்நாடக பாஜக திருட்டுப்பயல் முதல்வரை எதிர்த்து வழக்கு போட அனுமதித்த(!?) (ச்சீ.. இதற்கெல்லாம் கூட ஆளுநர் அனுமதி வேண்டுமா? வெட்கக்கேடு..!) ஆளுனரை எதிர்த்து மக்கள் சொத்தின் மீது நடத்தப்பட்ட திருட்டுப்பயல்களின் தனிச்சையான அராஜ வன்முறை வெறியாட்டம் இது.

  இதுவும் அதுவும் ஒன்றாகுமா? அடப்பாவிகளா..?

  தினமலம்(ர்) மண்டையில் உள்ள மலத்தின் நிறம் காவி..! வேறு என்ன சொல்ல?

  ReplyDelete
 11. Very Good Compilation...All will know what is real face of the daily....Better to boycott such newspapers and bring them down...

  ReplyDelete
 12. தொடர்ச்சி...

  2001 ஆகஸ்ட் முதல் 2010 வரை ஜம்மு-கஷ்மீரில் 4812 சாதாரண காஷ்மிரி மக்களும், 2219 பாதுகாப்பு படையினரும்(காஷ்மீர் மாநில காவலர்கள் உட்பட) கொல்லப்பட்டுள்ளனர்.

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 2001 முதல் ஏற்பட்ட பேரிடர்களைக் குறித்த விபரங்களை அளிக்க, அஸ்வின் ஸ்ரீவஸ்தவா விண்ணப்பித்திருந்தார். அக்கேள்விக்கு பதிலளிக்கையில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

  ReplyDelete
 13. தொடர்ச்சி...

  கர்நாடகத்தில் நேற்று வன்முறையுடன் கூடிய பாஜக பந்த்தால் ரூ. 2000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கர்நாடக தொழில் வர்த்தக சபைத் தலைவர் என்.எஸ். சீனிவாசமூர்த்தி கூறியுள்ளார்.

  வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு வரை போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  யஷ்வந்த்பூரில் உள்ள மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. இருப்பினும் சிலர் பாதிக் கதவுகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்தனர். மக்கள் யாரும் வராததால் 16,000 மூடை வெங்காயம், 12,000 மூடை உருளைகிழங்கு ஆகியவை பாதி விலைக்கு விற்கும் அவலத்திற்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.

  ReplyDelete
 14. @இளம் தூயவன் அவர்களுக்கு

  ராமசுப்பையாவின் வாரிசுகள் ஏற்கனவே இந்த படங்களை பார்த்து மகிழ்ந்து ரசித்திருப்பார்கள்

  ReplyDelete
 15. @சகோ.அந்நியன் 2

  உங்களுடைய ஆதங்கத்தோடு கூடிய கருத்துக்களுக்கு நன்றி

  ReplyDelete
 16. @இளம் தூயவன் அவர்களுக்கு


  ///ராமாசுப்பையர் இறந்துவிட்டார், தினமலர் கூட்டத்திற்கு அனுப்பி வையுங்கள்.//
  ராமசுப்பையா இறந்தால் என்ன அவருடைய பனியை தொடருகிற மூர்க்கமான வாரிசுகள் இருக்கிறார்கள்

  ReplyDelete
 17. @நண்பர் மூர்த்தி அவர்களுக்கு

  //thinamalarum cho Ram akiyor puthisalikal,///

  புத்திசாலிகளின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று பார்ப்போம்

  ReplyDelete
 18. @சகோ உதயம்

  தினமலரின் தோலுரிக்கும் இரண்டு சுட்டிகள் கொடுத்ததற்கு நன்றி

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  படிக்கதான் வந்தேன் சகோ. படங்களைப் பார்த்ததும் இதயம் தாங்க‌வில்லை :( எதுவுமே படிக்காமல் ஓட்டு மட்டும் 3 திரட்டிகளிலும் போட்டுவிட்டு, கமெண்ட் பக்கம் வந்துவிட்டேன். தலைப்பையும் கமெண்ட்களையும் பார்த்துதான் செய்திகளை ஓரளவு புரிந்துக் கொண்டேன். இவை இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் அட்டூழியங்களும் அதை மறைக்க தினமலர் செய்த‌ வாடிக்கையான கயமைத்தனமும் என்று மட்டும் தெரிகிறது. அல்லாஹ்தான் அந்த மக்களுக்கு நல்லதொரு விடிவு காலத்தை கொடுக்கணும்! அநியாயக்காரர்களை அல்லாஹ் தன் கைப்பிடிக்குள் எடுத்துக் கொள்ள ரொம்ப காலமாகாது, இன்ஷா அல்லாஹ்!

  ReplyDelete
 20. @vanjoor அவர்களுக்கு

  பதிவுலகின் மூத்த சகோதரான உங்களின் முதல் வருகைக்கும் நீங்கள் கொடுத்த லிங்கிற்கும் நன்றி

  ReplyDelete
 21. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..


  //அந்த பத்திரிக்கையை தினமலம் என்றோ தினமயிர் என்றோ அழைப்பதில் தவறில்லையென்றே தோன்றுகிறது. இவர்களுடைய யோக்கிதையை எழுதினால் இந்த வலைத்தளம் போதாது ஹைதர் அண்ணே.//

  சரியாகச் சொன்னீர்கள் இனி வருங்காலங்களில் இவர்களின் கயமைகளை தோலுரிப்போம்

  ReplyDelete
 22. @M. Farooq

  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...


  //சமூக நலம் விரும்பிகள் ஒன்று சேர்ந்து சுய நலம் பாராமல் இந்த கயவர்களை எதிர்த்தால் இருந்த வடு தெரியாமல் இன்ஷா அல்லாஹ் அழிக்க முடியும். இறைவன் இந்த மன உறுதியை எல்லோருக்கும் வழங்க பிரார்த்திப்போமாக!//

  சரியான வார்த்தைகள்
  உங்களுடைய சுயநலமில்லாத சமூக அக்கறையான என்னத்திற்கு நன்றி

  உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி

  ReplyDelete
 23. @Issadeen Rilwan - Changes Do Club

  சகோதரர் அவர்களுக்கு


  //இங்க ஒரு உரிமையை மீட்க போராடும் போது அங்கே ஒரு உரிமை பரிபோகும் நிலைக்கும் முஸ்லிம்களை திட்டமிட்டும் பழிவாங்கும் அபாயம் முடக்கிவிடப்பட்டிருக்கிறது. எமது பிரார்த்தனைகளில் கட்டாயம் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்//

  துஆ செய்வோம் அதன்பிறகு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் போராடுவோம் (இன்ஷா அல்லாஹ்)

  ReplyDelete
 24. @Rahim

  "ஓன்றுபடுவோம் சக்தி பெறுவோம்"
  கண்டிப்பாக சரியான வழிமுறையோடு

  ReplyDelete
 25. @truth seeker
  சகோதரர் அவர்களுக்கு
  தினமலரை புறக்கனிப்பதைவிட அதற்கு புத்தி புகட்டுவது சரியான வழிமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 26. @முஹம்மத் ஆஷிக்

  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

  உங்களின் நெத்தியாடி பின்னூட்டத்தை
  ரசித்தேன்
  உடனுக்குடன் live செய்திகளை கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 27. @அஸ்மா அவர்களுக்கு

  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //அல்லாஹ்தான் அந்த மக்களுக்கு நல்லதொரு விடிவு காலத்தை கொடுக்கணும்! அநியாயக்காரர்களை அல்லாஹ் தன் கைப்பிடிக்குள் எடுத்துக் கொள்ள ரொம்ப காலமாகாது, இன்ஷா அல்லாஹ்!//

  (அல்லாஹ் போதுமானவன்)

  உங்களுடைய துஆவை இறைவன் பொருந்திக் கொள்வானாக

  ReplyDelete
 28. தினமலரின் இந்த வேஷம் நாமறிந்த ஒன்றே!... சொல்லப்போனால் அது ஊடகமேயல்ல.... ஊடகமென்றால் சாதி,இன,மத,ஏழை,பணக்கார மற்றும் இத்யாதிகளுக்கு அப்பாற்பட்டதாக பாரபட்சம் பார்க்காத செய்தியைத் தருவதே ஒரு செய்திதாளின் குறிக்கோளாகயிருக்க வேண்டும்... அப்படி பார்த்தால் தினமலர் ஒரு இந்து மத நாளிதழ்... அவ்வளவே... இப்படியாக எடுத்துக் கொண்டால் அது தன் கடமையைச் சிறப்பாக செய்து வருகிறது... அதன் ஆரம்பகால நேர்மையினால் முஸ்லிம்களாகிய நாமும் சேர்ந்தே அதைப் புகழடையச் செய்துவிட்டோம்... நீங்கள் முன்வைத்த செய்திகள் போன்று பலவற்றை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்கு உண்மையிலேயே வருந்தும் மாற்றுமதத்தினருக்கும் சென்றடைந்தாலே தினமரின் புகழ் குறைய ஆரம்பித்து விடும்... மீண்டும் தரமான செய்திகளைத் தர ஆரம்பிக்கும்... இல்லையென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு செல்லட்டும்... கவலையில்லை.

  பதிவில் நீங்கள் வெளியிட்ட படங்கள் மனதை மிகவும் பாதித்துவிட்டது... அல்லாஹ் அவர்களைச் சொர்க்கத்தில் சேர்க்க துஆ செய்வோம்... அவர்களை இழந்த தாய்தந்தையருக்கும் பரிதவித்து ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கும் நமக்கும் இறைவனே போதுமானவன்...

  எதுவும் தவறாக எழுதியிருந்தால் சொல்லுங்கள்... திருத்திக் கொள்கிறேன்.. என் எழுத்தை அல்ல... என்னை..

  ReplyDelete
 29. முஸ்தபாJanuary 26, 2011 at 4:10 AM

  இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க ஒரு ஹைதா் அலி அன்று.
  சுதந்திர இந்தியாவில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயத்துக்கு குரல் கொடுக்க ஒரு ஹைதா் அலி இன்று.

  ReplyDelete
 30. @enrenrum16
  சகோ.அவர்களுக்கு

  ///எதுவும் தவறாக எழுதியிருந்தால் சொல்லுங்கள்... திருத்திக் கொள்கிறேன்.. என் எழுத்தை அல்ல... என்னை..///

  நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை அல்ஹம்துலில்லாஹ்
  நான் பதிவில் சொல்ல மறந்ததையேல்லாம் பின்னூட்டத்தில் இயங்கியல் ரிதியாக எப்படி செயல்படவேண்டும் என்பதை சரியான வழிமுறைகளை சொல்லி இருக்கிறீர்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 31. @முஸ்தபா

  ///இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க ஒரு ஹைதா் அலி அன்று.
  சுதந்திர இந்தியாவில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயத்துக்கு குரல் கொடுக்க ஒரு ஹைதா் அலி இன்று///

  அண்ணே முஸ்தபா இது ஒவர
  தெரியால?

  ReplyDelete
 32. படங்களைப் பார்த்து முடிக்க முடியவில்லை. இறைவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும், உறவினர்களுக்கு ஆறுதலையும் தரட்டும். சில அராஜகங்களைப் பார்க்கும்போது இறைவன்மீதே கோபம் வருகிறது, ஏன் இவ்வளவு பொறுமையாக இருக்கீறான் எறு. எனினும், அவனே மிக்க அறிந்தவன்.

  ReplyDelete
 33. "ulaayika hizbullaah...a'laa inna hizballaahi humul muflihoon"

  வேறொன்றும் சொல்லத் தோணவில்லை படங்களை பார்த்த பின். இன்னொரு Gazaவாக காஷ்மீரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது, இஸ்ரேலின் வழி நட‌க்கும் இந்தியா...!!!

  ReplyDelete
 34. @ஹுஸைனம்மா

  சகோதரி அவர்களுக்கு


  ///படங்களைப் பார்த்து முடிக்க முடியவில்லை. இறைவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும், உறவினர்களுக்கு ஆறுதலையும் தரட்டும்.///

  இதுதான் என்னுடைய பிரார்த்தனையும்

  //சில அராஜகங்களைப் பார்க்கும்போது இறைவன்மீதே கோபம் வருகிறது, ஏன் இவ்வளவு பொறுமையாக இருக்கீறான் என்று.//

  இதற்கு நீங்களே பதில் சொல்லி விட்டீர்கள்.
  //எனினும், அவனே மிக்க அறிந்தவன்.//

  உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 35. @அன்னு

  சகோ. அவர்களுக்கு


  //Gazaவாக காஷ்மீரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது, இஸ்ரேலின் வழி நட‌க்கும் இந்தியா...!!!//

  சரியாகச் சொன்னீர்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 36. @sakthi

  நல்லது சகோ

  உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete