Wednesday, December 21, 2011

ஈழத்தமிழனே எங்களை எப்போது புரிந்துக் கொள்ள போகிறாய்..?.

முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்
என்ற தலைப்பில் சந்ருவின் பக்கம் என்ற பிளாக்கில் சகோதரர் யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார். நன்றி 

இருந்தாலும் மனதில் வலிகுறைய வில்லை சவூதியில் வீட்டு வேலைக்கு வந்து மாட்டிக் கொண்ட ஈழ சகோதரியை மீட்க போகும் போது அரபி செருப்பை கழட்டி அடித்தபோது வலிக்கவில்லை.ஆனால் சொந்த சகோதரன் மண்ணை அள்ளி தூற்றும் போது மனது வலிக்காமல் இருக்க முடியவில்லை.

ஏன் நமக்குள் புரிதலில் இத்தனை தவறுகள்? எப்போது புரிந்துக் கொள்ள போகிறோம்? போராளிகளை(காட்டிக் கொடுத்தார்களா இல்லையா என்பது வேறுகதை) காட்டிக் கொடுத்தார்கள் என்று சொல்லப்பட்டு பள்ளிவாயிலில் தொழுகும் போது என் சகோதரர்கள் கொல்லப்பட்டு 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில்முழு தமிழ் முஸ்லிம்களையும் துடைத்தெறிந்த சம்பவம் நீங்காத வடுவாக பதிந்து இருந்தும்.
யாழ்ப்பாணாத்திலிருந்து விரட்டப்பட்டு அகதி முகாமில் அடிப்படை வசதியின்றி இருக்கும் தமிழ் முஸ்லிம்கள்.
என் தமிழ் முஸ்லிம் சகோதரன் அமீர் ஈழ சகோதரனுக்கு சாந்தியும் சாமதானமும் உண்டாக வேண்டும் என்பதற்காக போராடி சிறை சென்ற போதெல்லாம் ஈழ மக்களுக்காக போராடும் தமிழ் இஸ்லாமியர்கள் என்று தலைப்பிட்டு எழுதவில்லையே ஏன்? அப்போது தமிழர்களா தெரிந்த உனக்கு ஒரு சிலர் தவறு செய்யும் போது மட்டும் எப்படி இஸ்லாமியனாக தனியாக தெரிகிறார்கள்?.
மனது வலிக்கிறது என் தமிழ் சகோதரனே எப்போது புரிந்துக் கொள்ள போகிறாய்?

22 comments:

 1. மன்னிப்பு கேட்ட்கிறேன் தமிழன் சார்பில்

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஹைதர் அலி,

  பதிவு வழக்கம் போல் மிகவும் நன்றாக உள்ளது.
  இந்த கட்டுரைக்கு பவுடர் ஸ்டார் உட்பட சில இலங்கைத் தமிழர்கள் எதிர் கருத்து
  தெரிவித்து இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.

  சிராஜ்

  ReplyDelete
 3. @கவி அழகன்புரிதலுக்கு நன்றி சகோ...

  ReplyDelete
 4. கரையில் இருந்து ....December 21, 2011 at 8:59 AM

  வலியை ஏற்படுத்திய பதிவு ...

  நான் இங்கு ஒன்றை பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன் ...
  இழத் தமிழ் மண்ணில் போர் நடை பெற்று கொண்டு இருந்தபோது மெட்ராஸ் விமான நிலையத்துக்கு ஒரு பிணம் வந்தது அதை பார்பதற்கு இந்துத்துவாவின் முக்கிய தலைவர்கள் வருகை புரிந்தார்கள்.அந்தே பிணம் (நபர்) கடந்தே பாத்து வருடங்கள் மேல் யாழ்ப்பாணத்தில் வேலை செய்தவர் இவனின் பிணத்தை பார்க்க ஏன் பெரிய நபர்கள் (இந்துத்துவாவின் ) வரவேண்டும் ????

  இதில் இருந்து தெரியவில்லைய ????

  இந்துத்துவ இவர்களிடத்திலும் பரவிவிட்டது.....

  நான் வேலை செய்யும் இடத்தில தமிழனுகாக குரல் குடுத்த அவர்கள் என்னை அவமானம் படுத்துகிறார்கள் நான் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால் ....என் மார்க்கத்தை விட்டு கொடுக்க மாட்டேன் !!!

  இதுவெல்லாம் இந்துத்துவாவின் செயலே !!!!

  நான்
  பிறப்பால் இஸ்லாமியன்
  இனத்தால் திராவிடன்
  மொழியால் தமிழன்
  தேசத்தால் இந்தியன் ....

  இதை மட்டும் அழுத்தமாக சொல் விரும்புகின்றேன் !!!

  இறைவனின் சாந்தி உண்டாகட்டும் எம் மக்களுக்கு !!!

  ReplyDelete
 5. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
  தமிழ்ப்பெண்களுக்கு எதிரான வன்முறை நீடிப்பு
  சர்வதேச மனித உரிமைகள் குழு தகவல்

  கொழும்பு, டிச.22-

  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச மனித உரிமைகள் குழு தெரிவித்து உள்ளது.

  பெண்களுக்கு எதிரான வன்முறை

  இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், அப்பாவி தமிழர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.

  போர் முடிந்த பின்னரும் அங்கு தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பிரசல்ஸ் நகரைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்து உள்ளது.

  இதுபற்றி அந்த குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  தனிமையில் பெண்கள்

  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்து உள்ளன. போரில் கணவர் இறந்ததாலோ அல்லது பெற்றோர் இறந்ததாலோ பல பெண்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

  சில பெண்களின் கணவர்களை விசாரணைக்காக ராணுவத்தினர் பிடித்து வைத்து இருப்பதால் அந்த பெண்கள் தனிமையில் வசிக்கிறார்கள். சில பெண்கள் குழந்தைகளுடன் வசிக்கிறார்கள்.

  பாலியல் பலாத்காரம்

  அப்படி வசிக்கும் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்கிறார்கள். சில பெண்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்படுகிறார்கள்.

  தங்களுடைய கணவர் அல்லது குடும்பத்தில் உள்ள மற்ற ஆண்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி விசாரிப்பதற்காக ராணுவத்தினரிடம் செல்லும் சமயங்களில் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். அந்த பகுதிகளில் ராணுவத்தினரை கட்டுப்படுத்தவும் முடியாது.

  அச்சம்

  பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதுபற்றி யாரிடமும் புகார் செய்வதும் இல்லை. அப்படி புகார் செய்தால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

  http://www.dailythanthi.com/article.asp?NewsID=696519&disdate=12/22/2011

  ReplyDelete
 6. ஒரு சிலரின் செய்கைகளால் எல்லா ஈழத்தமிழர்களையும் குறைகூறிவிட முடியாது!

  சந்துரு அவர்களின் பதிவு தலைப்பு என் மனதையும் பாதித்தது, ஓரிருவரின் நடத்தைக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் பெயரை கேவலப்படுத்துவது சரியல்ல!

  பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு,யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் போன்றவற்றை தொடர்ந்து குத்திக்காட்டுவது நமக்கு அழகல்ல என நினைக்கிறேன் சகோ.. அந்த சம்பவங்களோடு சம்பந்தபட்டவர்களே அதை மறந்து மன்னித்துவிட்டார்கள்.

  ReplyDelete
 7. * மத்திய அரசா? மதிகெட்ட அரசா? கூடங்குளம் அணுஉலையில் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தில் நடத்தப்படும் நாடகம்.

  * எதிரிகளுக்கு புரியும் மொழியில் பேசுங்கள்! வரலாற்று ரீதியாக தமிழர்கள் வீரமும், தன்மானமும் மிக்கவர்கள். அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு என்ன நிகழ்ந்தது.

  * விஷ செடியில் பூத்த விஷ மலர் (தினமலர்) பார்பன தினமலமும் அதன் ஹிந்துத்துவா கோட்டான்களும் எப்படியாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடவேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகின்றன!.

  * வெத்து வேட்டு விஜயகாந்து! காவிரியை இணக்கப் போறோம் என்று சொல்லுங்கள் அப்போ தெரியும் உங்களுக்கு கர்நாடகாகாரன் யார்?

  ReplyDelete
 8. அந்த பதிவை நானும் படித்தேன் நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள் தோழா! வீணாக தமிழக மக்களிடம் நிலவும் ஒற்றுமையை குலைக்க நினைக்கிறார். இவருக்கு தெரிந்தது இவ்வளவுதான். இவரது அரைவேக்காட்டு தனமான பதிவால் எந்த நன்மையையும் ஏற்படப்போவது இல்லை.

  ReplyDelete
 9. @கவி அழகன்

  சகோதரர் கவி அழகன் அவர்களுக்கு
  மன்னிப்பேல்லாம் பெரிய வார்த்தை நமக்குள் சரியான புரிதல் ஏற்பட வேண்டும் அது தான் மகிழ்ச்சி

  வருகைக்கும் தங்களின் நல்ல மனதிற்கும் நன்றி

  ReplyDelete
 10. @சிராஜ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  //பதிவு வழக்கம் போல் மிகவும் நன்றாக உள்ளது.
  இந்த கட்டுரைக்கு பவுடர் ஸ்டார் உட்பட சில இலங்கைத் தமிழர்கள் எதிர் கருத்து
  தெரிவித்து இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.//

  எதிர்க் கருத்துக்கள் நல்ல திசை காட்டியாக இருக்கும் வரை ஆரோக்கியமானது தான் என சார்பில் நீங்கள் தெரிவித்த நன்றிக்கு மகிழ்ச்சி

  ReplyDelete
 11. மாப்ள கண்டிக்க வேண்டிய விஷயம்...எப்ப பாரு இந்து, கிறிஸ்துவன், முஸ்லீம்..எப்பய்யா தமிழன்னு குரல் கொடுக்கப்போறோம்...தம்புடி பெராதவன்லாம் நம்மல வச்சி அரசியல் பன்ரானுங்கய்யா!

  ReplyDelete
 12. உம்மைப் போன்றவர்களுக்கு சந்ரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதோ கிழக்கிலே அரசுடன் தொழிற்படும் கருணாவின் ஆதரவாளர் என்பதோ தெரியாது. வழக்கம்போல கும்பலாக அடிக்கமட்டுமே தெரிந்த ஆளுங்களப்பா நீங்கள்! மீதி 22 தம்ஸ் அப் வந்திருக்கவேணுமே? வந்துகிட்டிருக்கா?

  உண்மைகள் போன்ற இழிவாக மற்றவர்களை வசைபாடும் பேர்வழிகளை விடவா சந்ரு யோகராஜா மோசமான ஆள்? உண்மைகளுக்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் நீங்கள்

  ReplyDelete
 13. @Anonymous

  நண்பரே அனானி

  //உம்மைப் போன்றவர்களுக்கு சந்ரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதோ//

  நண்பர் சந்ரு யாழ்ப்பாணம் என்று நான் சொல்லவே இல்லையே ராசா

  //கிழக்கிலே அரசுடன் தொழிற்படும் கருணாவின் ஆதரவாளர் என்பதோ தெரியாது.//

  நீங்க சொல்லித்தான் தெரியும் ஆனால் கிழக்கு மகானத்தில் உள்ள காத்தன்குடி பள்ளிவாசலில் தலைமை கட்டளையை ஏற்று கிழக்கு மகான தளபதி கருணா எவ்வாறு இரக்கமில்லாமல் செயல்பட்டார் என்பது மட்டும் நன்றாக தெரியும்

  ReplyDelete
 14. @Anonymous

  நண்பரே அனானி

  //மீதி 22 தம்ஸ் அப் வந்திருக்கவேணுமே? வந்துகிட்டிருக்கா?//

  நேற்று மதியம் இட்ட பதிவு 8 தம்ஸ் அப்க்கே தினறிகிட்டு இருக்கு நீங்க இரக்கப்பட்டு ஒரு தம்ஸ் அப் கொடுத்த நல்லாயிருக்கும்.

  அப்புறம் என்னுடைய பதிவுகளை ஒவ்வன்றாக பாருங்கள் 22 தம்ஸ் அப் என்பது ரொம்ப ஆபூர்வமாக இருக்கும்.

  ReplyDelete
 15. @கரையில் இருந்து ....

  //நான் வேலை செய்யும் இடத்தில தமிழனுகாக குரல் குடுத்த அவர்கள் என்னை அவமானம் படுத்துகிறார்கள் நான் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால்///

  உங்களின் இந்த அனுபவபூர்வ கருத்தை படித்த பிறகு மனது இன்னும் வேதனையடைகிறது சகோ
  விமர்சனங்களை கண்டு உடைந்து விடாதீர்கள்

  இறைவன் உங்களுக்கு நண்மைகளை செய்வானாக

  ReplyDelete
 16. @UNMAIKAL

  //பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதுபற்றி யாரிடமும் புகார் செய்வதும் இல்லை. அப்படி புகார் செய்தால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.//

  இந்த நிலையை மாற்ற அனைவரும் போராட வேண்டும் நண்பரே

  தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 17. @Riyas

  //ஒரு சிலரின் செய்கைகளால் எல்லா ஈழத்தமிழர்களையும் குறைகூறிவிட முடியாது!//

  உடன்படுகிறேன் சகோதரரே

  //சந்துரு அவர்களின் பதிவு தலைப்பு என் மனதையும் பாதித்தது, ஓரிருவரின் நடத்தைக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் பெயரை கேவலப்படுத்துவது சரியல்ல!//

  என்னையும் தான்

  //பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு,யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் போன்றவற்றை தொடர்ந்து குத்திக்காட்டுவது நமக்கு அழகல்ல என நினைக்கிறேன் சகோ.. அந்த சம்பவங்களோடு சம்பந்தபட்டவர்களே அதை மறந்து மன்னித்துவிட்டார்கள்.//

  சரிங்க சகோ கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும்

  ஆனால் அப்போது அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் இன்னும் அடிப்படை வசதியில்லாமல் அவதியுறுகிறார்கள் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை சகோ

  ReplyDelete
 18. @PUTHIYATHENRAL

  அனைத்தையும் படித்து விட்டேன் உங்கள் வாசகன் நான் என்பதை நினைவுப் படுத்துகிறேன்

  ReplyDelete
 19. @PUTHIYATHENRAL

  //அந்த பதிவை நானும் படித்தேன் நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள் தோழா! வீணாக தமிழக மக்களிடம் நிலவும் ஒற்றுமையை குலைக்க நினைக்கிறார். இவருக்கு தெரிந்தது இவ்வளவுதான். இவரது அரைவேக்காட்டு தனமான பதிவால் எந்த நன்மையையும் ஏற்படப்போவது இல்லை.//

  தமிழ்நாட்டை பொறுத்தவரை தெளிவான அரசியல் சிந்தனையுடைய நாம் மனரீதியில் நேருக்கமாக இருப்பது உண்மைதான் அதையாரும் பிளக்க முடியாது தோழரே

  ReplyDelete
 20. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்December 24, 2011 at 5:22 AM

  அஸ்ஸலாமு அலைக்கும் ஹைதர் அண்ணே நானும் சகோ.யோகராஜ் அவர்களின் கட்டுரைக்கு பாதிக்கப்படும் பெண்களுக்காக எனது வருத்தத்தையும் குற்றம் செய்த கயவர்களையும் கண்டித்து சகோ எழுதிய தலைப்பை பரீசிலிக்குமாறுதான் மறுமொழி கொடுத்தேன். ஆனால் அவர் ஏனோ அதை வெளியிடவில்லை.நான் அதில் எந்த தவறான கருத்துக்களையும் பதியவில்லை.படிக்காமலே நீக்கிவிட்டாரா இல்லை வேண்டுமென்றே நீக்கினாரானு தெரியவில்லை.அவரு(சந்ரு)டைய தலைப்பி(எண்ணத்தி)ற்கு கண்டனம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.சமுதாய மக்களுக்காக சகோ ஹைதர் அலி சொன்னதையே நானும் சொல்கிறேன் எங்களை புரிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே.

  ReplyDelete
 21. சகோதரனே இலங்கைத்தமிழன் நன்றி கேட்ட நாய்கள் உங்களுக்கு தெரியாது ஒரு சில தமிழர்கள் உயிர் வாழ்ந்தது முஸ்லீம்களின் பாதுகாப்பில் தான் அதையெல்லாம் மறந்து விட்டானுகள் சொறிநாய்கள்.

  ReplyDelete