Tuesday, September 20, 2011

மலேசியாவில் மங்காத்தாலேசியாவில் ஒரு வாகன விபத்து. சம்பவ இடத்தில் நானும் என் மலேசியா நண்பனும் இருந்தோம்.  எங்கள் கண்களுக்கு முன்பு மோதிய இரு வாகனங்களும் சாலையில் சிதைந்து கிடந்தன. சாலையில் இருபுறத்தில் இருந்தவர்களும் வாகனங்களை நோக்கி ஓடி வந்தார்கள். நாங்களும் தான். சரியான கூட்டம் வாகனத்தைச் சுற்றி.

மலேசியா மக்களுக்கு என்ன ஒரு மனிதாபிமானம்! வாகன விபத்து நடந்தவுடன் காப்பாற்ற, முதலுதவி செய்ய இப்படி கூடிவிட்டார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே... அந்த நினைப்பில் என் நண்பன் மண்ணை அள்ளிக் கொட்டினார். வாகன நம்பரை குறித்துக் கொண்டிருந்தவரிடம்,


'ஆம்புலன்ஸுக்கு போன் பண்ண‌வா?' இல்லை. 
'அப்புறம் எதற்கு?' சூதாட. 
'சூதாடாவா? என்ன சொல்றீங்க?!' ஆமா, எந்த கார் மோதுதோ அந்த கார்களின் நம்பரை தாய்லாந்து நம்பர் லாட்டரியில் எழுதினால் பரிசு கிடைக்கும். இது அதிர்ஷட நம்பர். இன்னொரு அதிர்ஷ்ட நம்பரும் இருக்கு. அதாவது இங்கு இரண்டு கார்கள் அடிபட்டிருக்கு, இதில் கிடைப்பது நம்பர் இரண்டு (2), முதல் காரில் அடிப்பட்டது ஒரு ஆள் (1), இரண்டாவது காரில் அடிபட்டவர்கள் மூன்று பேர் (3), இப்பொழுது அந்த அடைப்புக்குறிக்குள் உள்ள இலக்கங்களை இணைக்கவும். மொத்தம் 213. இந்த மூன்று இலக்க நம்பரை எழுதினால் கண்டிப்பாக பரிசு கிடைக்கும். சாலையில் போகிற கார்களில் இந்த கார் மட்டும் ஏன் அடிபடவேண்டும்? மற்ற கார்கள் ஏன் அடிபடவில்லை? அதனால் இந்த நம்பர் கண்டிப்பாக ஏறும் என்று விளக்கினார் அந்த சிந்திக்காத அறிவிலி!


213 என்ற நம்பரை 10 வெள்ளிக்கு எழுதினால் நம்பர் அப்படியே விழுந்தால் 4000 (ரிங்கிட்) வெள்ளிகள். 100 வெள்ளிக்கு எழுதினால்.. இப்படி கணக்கு போட்டுக் கொண்டு வந்தவர்களில் முக்கால்வாசி பேர் பேனாவில், மொபைலில் கார் நம்பரையும் அடிபட்டவர்களின் எண்ணிக்கைகளையும் குறித்துக் கொண்டிருந்தனர்.

இது 3 இலக்க நம்பர் ஷாட்

இத ஒரு மாதிரியாக கூட்டி, பெருக்கி

நம்பரை மாற்றி மாற்றி எழுதுவார்கள்.

சிலர் காப்பாற்ற ஓடி வந்தது உண்மைதான். ஆனால் அரைகுறை உண்மை. “முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள்” என்பதை விளங்கிக் கொண்டேன்! பணத்தாசையும் மூடநம்பிக்கையும் ஒன்று சேர்ந்து இவர்களின் இரக்க உணர்ச்சியை, மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்துவிட்டதே என்று ஆதங்கப்பட மட்டுமே என்னால் முடிந்தது.தாய்லாந்து லாட்டரி எனும் சூதாட்டம் மலேசியா அரசின் அனுமதியோடும் முழு ஆதரவோடும் நடக்கும் ஒரு தீமையான வியாபாரம். இதற்கென பிரத்யேகமாக கடைகள் இருக்கின்றன. நாம் வாங்கிய சூதாட்ட லாட்டரி சீட்டு முடிவுகளை அறிய எங்கும் போக தேவையில்லை. சிக்னலில் நிற்கும்போது சிக்னலில் இருக்கும் பெரிய மானிட்டரில் இன்றைய சூதாட்ட லாட்டரி சீட்டு முடிவுகள் ஓடும். ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு முன்னால் இன்றைய லாட்டரி முடிவுகள் திரையில் தெரியும்.

மலேசியாவில்  நம்பர் லட்டரி கடை
இதுவும் சூதாட்டக் கடைதான்
இந்த நம்பர் எழுதுபவர்கள் இதற்கு அடிமையாகி ஒருவிதமான மனநோயாளியாக ஆகிவிடுகின்றனர். இவர்களின் சிந்தனை முழுவதும் நம்பரில்தான் இருக்கும்.மொபைல் புதிதாக வாங்கினால் அந்த மாடல் நம்பரை எழுதுவார்கள். அவர்களின் மொபைல் நம்பரின் கடைசி மூன்று நம்பரை எழுதுவார்கள். புதிதாக ஒரு நண்பர் அறிமுகமானால் அவரின் பெயரைக் கேட்டு அந்த பெயரின் கூட்டு நம்பரை எழுதுவார்கள். கிரிக்கெட் விளையாட்டின் இறுதி ரன்களின் மொத்த எண்ணிக்கையை எழுதுவார்கள். இவ்வளவு ஏன், இங்கு நான் கொடுத்திருக்கிற நம்பரை சூதாட்ட பைத்தியங்கள் பார்த்தால் இதையும் எழுதுவார்கள்.
இந்த சூதாட்டத்தின் விளைவாக அமைதியிழந்த குடும்பங்கள், நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் இவர்களை வாழும் சாட்சியாக நான் பார்த்திருக்கிறேன்.
ஏன் இங்குள்ள மலேசியர்கள் சாமி கும்பிடும்போது அவர் முதலில் வைக்கிற கோரிக்கையே 'சாமி! எனக்கு தாய்லாந்து லாட்டரி விழணும்' என்றுதான் இருக்கும்.

மலேசியாவில் தம்பிரான் சுவாமி என்பவர் பேட்டி கொடுக்கும்போது "கடவுள்கிட்ட போயி வழிபாடு செய்றவங்க, 'எனக்கு லாட்டரி டிக்கட் விழணும், காடி வாங்கணும், வீடு கட்டணும்' அப்படின்னுதான் வேண்டிக்கிறாங்க. அதுக்கு அஞ்சு காசு கற்பூரத்தைக் காட்டி, தேங்காய் உடைத்து சாமிக்கிட்ட பேரம் பேசுறாங்க" இப்படி மலேசியர்களின் ஆன்மாவை உலுக்கி கேள்வி கேட்டார்.

இதைவிட கொடுமை மலேசியாவில் 1999 ல் நடந்த மனதை உலுக்கிய உண்மை சம்பவம். நகரின் ஒதுக்குப்புற காளி கோவிலில் கொடூரமாக வயிற்றை கிழித்து கொல்லப்பட்டு, குடல்களை காளியின் சிலையில் மாலையாக்கிய நிலையில் ஒரு சிறுமியின் பிணம் கிடைத்தது. போலீஸ் பல மாதங்கள் தேடி கண்டுபிடித்ததில் இந்த கொலையை செய்தவர் பத்ரகாளியின் பக்தர்; அப்படியே சூதாட்டத்தின் தீவிர பக்தர்; அவரின் கனவில் தோன்றிய காளி, 'மகனே! வயது வராத ஒரு சிறுமியின் வயிற்றைக் கிழித்து, குடலை வெளியே எடுத்து, மாலையாக என்னுடைய சிலையின் கழுத்தில் போடு; உனக்கு சூதாட்ட லாட்டரியில் 10 லட்சம் ரிங்கிட் விழும்' என்று சொல்ல இவரும் 'அதுபோலவே சிறுமியைக் கடத்திக் கொன்றேன்' என்று போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.


சிவகங்கையைச் சேர்ந்த மைதீன் என்பவர் மலேசியாவிற்கு என்னைப் போல பிழைப்புக்காக வந்தவர். மலேசியா வந்த புதிதில் வெள்ளந்தியாக திரிந்தவர் ஒருமுறை நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, 'அண்ணே.. பெப்ஸி குடிக்கணும், எங்கே வாங்கலாம்?' என்று கேட்டார். நாங்க பெப்ஸி தானியங்கி இயந்திரத்தைக் கைக்காட்டி அதில் ஒரு வெள்ளியை போடுங்கள், பெப்ஸி இயந்திரத்தின் அடியில் விழும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னபோது, 'அண்ணே.. கேலி பண்ணாதீங்கே, அது எப்படி காசு போட்டா பெப்ஸி விழும்?' என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தவர்.


எப்படியோ கெட்ட தொடர்பு ஏற்பட்டு, சூதாட்ட லாட்டரி அறிமுகம் கிடைத்து முதலில் விளையாட்டாக 4 வெள்ளிகளுக்கு எழுதினார். அதில் உல்டா நம்பராக 500 வெள்ளி என்று நினைக்கிறேன் பரிசு விழுந்தது. மனமகிழ்ந்துப் போன அவர் நண்பர்களுக்கு பீர் பார்ட்டி வைத்தார். மலேசியாவில் என்னைத் தவிர அனைத்து நண்பர்களும் அங்கு குடிக்கக் கூடியவர்கள். என்னையும் வற்புறுத்தினார்கள், 'அடே இது சாராயம் இல்லை, பீர்தான்; அதுவும் இந்த கின்னஸ் பீரில் 8 சதவீத ஆல்கஹால்தான் சேர்த்து இருக்கிறார்கள்' என்றெல்லாம் கூறி குடிக்கவைக்க முயற்சித்து தோற்றுப் போனார்கள்.


அதன்பிறகு அவர் நம்பர் எழுதுவதில் மூழ்கிப்போனார். கொஞ்சமாக எழுத ஆரம்பித்து முழு சம்பளத்தையும் எழுத ஆரம்பித்தார். ஊருக்கு பல மாதங்கள் பணம் அனுப்பாமல் மனைவியும் குழந்தைகளும் அங்கு பட்டினி. அவர்கள் சாப்பாட்டு செலவிற்காக ஊரைச் சுற்றி அவர் மனைவி கடன் வாங்கி பல மாதங்களை சமாளித்து இவரை அனுப்பச்சொல்லி போன் பண்ணும்போதெல்லாம், விதவிதமான பொய்க் காரணங்களை சொல்லி தவிர்த்தார். நண்பர்கள், 'ஏன் இப்படி பொய் சொல்கிறாய், வீட்டுக்கு பணம் அனுப்பித் தொலை' என்று சொல்லும்போதெல்லாம், 'இல்லை ஹைதர்.. போனமுறை ஒரு நம்பரில் போச்சு. இந்த முறை சரியான நம்பர் எழுதி இருக்கிறேன். அவ வாங்குன மொத்த கடனையும் அடைச்சிடலாம்' என்று சொல்லியே போலீஸில் பிடிபடும்வரை ஊருக்கு பணமே அனுப்பவில்லை. ஊருக்கு போகும்போது பெரும் கடன்காரனாய் போய்ச் சேர்ந்தார்.


இங்கு மலேசியா நாடு சட்டப்படி அனுமதிக்கிறது. இங்குள்ளவர்கள் தெரிந்தே நாசமாகப் போகிறார்கள். ஆனால் நான் தற்போது வேலைப் பார்க்கும் சவூதியில் இதே சூதாட்ட அடிமைகள் இருக்கிறார்கள். இங்கு சட்டப்படி அனுமதி இல்லை. ஆனாலும் இங்கு கள்ளத்தனமாய் சூதாட்ட தாய்லாந்து லாட்டரி எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விபரங்கள் ஆதாரங்களுடன் விபரமாக
சவூதியில் மங்காத்தா (கள்ளசூதாடிகள்) என்ற பதிவில் இன்ஷா அல்லாஹ் விரிவாக பார்ப்போம்.


27 comments:

 1. நவூதுபில்லாஹ். எவ்வளவு பெரிய குற்றம். ஆனால் குற்றம் என்று தெரியாமலே, பாவம் என்று தெரியாமலே, நரக படுகுழியில் தள்ளும் என்று தெரியாமலே பல சகோக்கள் இதை செய்வது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதை அனுமதித்த மலேசியா அரசாங்கமும் பதில் சொல்ல கடமைபட்டுள்ளார்கள்.

  சிவகங்கை சகோதரரின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. இதை போல் எத்தனை சகோக்கள் தங்களின் வாழ்க்கையை இழந்து, குடும்பத்தினரை இன்னல்படுத்தி, மன உலைச்சலில் இருக்கிறார்களோ. நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் வழங்குவானாக.

  ReplyDelete
 2. மாப்ள எம்புட்டு கொடுமையா இருக்கு!

  ReplyDelete
 3. மலேசியா, சவூதி ரெண்டுமே இஸ்லாமிய நாடுகள்!! என்ன சொல்ல!! இறைவன் காக்க.

  ReplyDelete
 4. சலாம் அண்ணா
  எங்கள் பக்கத்து வீட்டு நேநேயும் சீன ஆண்டியும் அடிக்கடி என்னை அடகு கடைக்கு அழைத்துசெல்வார்கள். நகையை அடகு வைத்து அந்த லாட்டிரி வாங்கவும், லாட்டரி விழுந்ததா என பாக்கவும்.....

  உண்மை தான். முன்பு தமிழ்நாட்டில் இருந்த லாட்டரி பைத்தியங்கள் பரவாயில்ல போலும்....... மலேசியவாசிகள் ரொம்ப அடிமையாகி தான் இருக்காங்க :-(

  ReplyDelete
 5. சகோ மலேசிய சூதாட்ட லாட்டரியைப்பற்றி இப்ப தான் கேள்வி படுறேன்... உழைக்க மறுத்து அதிர்ஷ்டத்தை நம்பினால் என்ன ஆகுமென இந்த பதிவு உணர்த்திருக்கு ப்கிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. தமிழரான அனந்த கிருஷ்ணன் தான் மலேசிய லாட்டரி கிங்! இவர்தான் தயாநிதி - ஏர்செல் பிரச்சனையில் அடிபட்டவர்.

  இந்த லாட்டரி படுத்தும் பாடு பெரிய கொடுமை!

  ReplyDelete
 7. சமுதாயத்திற்கு அவசியமான பதிவு சகொ.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  அன்பு சகோ ஹைதர் பாய்
  நிகழ்கால கொடுமைகளை நிதர்சனமாக பதிவு செய்துள்ளீர்கள் அதற்கு முதலில் என் பாராட்டுக்கள்.,
  மலேசியா- மங்காத்தா.. குறித்து தெளிவாக விளக்கியுள்ளீர்கள் எனினும் நானும் இது தொடர்பாக சில தகவல்களை இங்கு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது கொஞ்சமாவது ஏனையோருக்கு பயன்பட்டால் நல்லது இன்ஷா அல்லாஹ்!
  =======
  நாலு நம்பரு அப்படினு சொல்றது தான் இங்கே அதுக்கு கோட்வேர்டு.,
  மொத்தம் 3 வகையான நிலையில் இந்த சூதாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதாவது 4D -5D மற்றும் 6D
  எனினும் 4D எனும் நாலு நம்பர் தான் இங்கே ரொம்ப பேமஸ்

  மொத்தம் TOTO,KUDA,MAGNUM போன்ற கேளிக்கை நிறுவனங்களே சும்மா ஜம்மென்று அரசின் அனுமதியோடு இத்தகைய சூதாட்ட விளையாட்டுகளை நடத்திகொண்டிருக்கிறது. அதிலும் TOTO உலக பிரசித்தி பெற்ற நிறுவனமே இங்கு ஏனைய நிறுவனத்தை விட அதிக செல்வாக்கு வாய்ந்தது.,
  இந்த சூதாட்டம் குறித்து திரட்டப்பட்ட தகவல் அதிகமாக கிடைத்தது எனினும் குழப்பமாக இருந்ததால் கொஞ்சம் மட்டும் உங்க கவனத்திற்கு

  சரி விளையாட்டுக்கு வருவோம்.,

  RM (Rengitt Malaysia) ஒன்றிலிருந்தே... இவ்விளையாட்டுக்கான தொகை தொடங்கப்படுகிறது. மேலும் அதற்கான நான்கு எண்ணை நாமே தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு RM ஒன்றுக்கு ஒரு டோக்கன் வாங்கினால் நமது விருப்பத்திற்கு தகுந்தார்போல் நான்கு எண்ணை தேர்வு செய்யலாம்
  பரிசு விபரம்
  முதல் = RM 2500/-
  2 ம் பரிசு = RM 1500/-
  3ம் பரிசு =RM 500/-
  இவ்வாறு RM ஒன்றுக்கு வாங்கப்படும் டோக்கனுக்கு மேற்கண்ட பரிசு முறை அதுவே தொகை அதிகரிக்க பரிசு விகிதம் பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கும் அதாவது,
  RM 5 க்கு டோக்கன் எடுத்தால் 5 X 2500 = 12500 முதல் பரிசு அதுப்போலவே முறையே இரண்டாம் , மூன்றாம் பரிசு 5 X 1500 ,5 X500 வழங்கப்படும்
  மேலும் RM 10க்கு டோக்கன் எடுத்தால் RM 25000 முதல் பரிசு...

  இவ்விளையாட்டிற்கான டோக்கன் குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் விற்கப்படுகிறது .விழா காலங்களில் மற்றும் ஏதேனும் குறிப்பிட்ட தினங்களில் சிறப்பு விற்பனையாக செவ்வாய் கிழமையும் விற்கப்படுகிறது. இதற்கான ரிசல்ட் அடுத்த நாள் இணையத்தில்/ செய்தித்தாளில் அல்லது அதற்கான சோ ரூம்களில் காண கிடைக்கும்.

  ReplyDelete
 9. தொடர்ச்சி...
  இதிலும் பெரியது சிறியது என்ற இரட்டை சுழற்சி முறை விளையாட்டு வேறு உண்டாம்.அதன் அடிப்படையில்
  RM ஒன்றுக்கு டோக்கன் வாங்கினால்
  4D க்கு முறையே 1 2 3 பரிசு
  RM 2500+3500
  RM 1500+2000
  RM 500+1000

  5D க்கு
  முதல் பரிசு
  RM 15000 ,இரண்டாம் மூன்றாம் பரிசு தெரியவில்லை
  அதுப்போலவே 6D முதல்பரிசு RM 100000 (ஒரு இலட்சம்)
  ஆனால் இந்த விளையாட்டிற்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகை
  அதாவது எடுக்கப்படும் எண்ணிற்கு அதாவது
  நமது எண் 1 2 3 4 5 6 என கொண்டால்
  முதல் மூன்று நிலைகளில் பரிசு விழா விட்டால் அடுத்த நிலையில் அதாவது அதை தொடர்ந்து 10 ஆறுதல் பரிசுகள் உண்டாம்???
  ஆக இதே எண் முழுவதும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட எண்ணுக்கு பரிசு உண்டு. அதாவது
  1 2 3 4 5 - ஒரு பரிசு அல்லது
  1 2 3 4 - ஒரு பரிசு அல்லது
  1 2 3 இதுக்கும் ஒரு பரிசு ஆனால் தொகை எடுப்பபடும் டோக்கனுக்கு தகுந்தார்போல் பெருகி கொண்டு போகும்...

  உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்ன இப்பவே கண்ண கட்டுதா...
  சரி சரி முடிச்சிடுக்கிறேன்.,
  4D,5D மற்றும் 6D பொதுவாக விளையாடப்பட்டாலும் மக்களின் வேண்டுகோளுகிணங்க இதில் JACKPOT 4D , SUPER MEGA SUPER POWER போன்ற விளையாட்டு முறையும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  ஓகே வா....?

  இவ்வளவு தகவல் எதுக்குனா இப்படிப்பட்ட ஹரமான காரியத்தில் தப்பி தவறிக்கூட நாம் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக தான்.,
  அல்லாஹ் நம் யாவரையும் அத்தகைய தீங்கிலிருந்து காத்தருள்வானாக!!!

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

  ReplyDelete
 10. நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் லாட்டரி வாங்காமலேயே நம் உழைப்பின் மூலமாய் ஏற்படட்டுமாக..!

  மலேஷியாவில் இது தொடரும் என்றால்... எந்த தடையும் இதற்கு வராது என்றால்... அதன் இறுதி நிலை குறித்து கவலைப்பட்டு அதன் மனமாற்றம் குறித்து துவா செய்வோம்.

  அடுத்து சவூதியில் நடப்பது... நான் இங்கு ஆறு வருடம் இருந்தும் இதுவரை கேள்விப்படாத புதிய விஷயம்.

  இந்நேரத்தில்... தமிழ்நாட்டில் லாட்டரியை தடை செய்து சட்டம் போட்ட முதல்வர் ஜெ.க்கு மனமார்ந்த பாராட்டை தெரிவித்துக்கொள்வோம்.

  அனுபவப்பூர்வமான புதிய விஷயம் சொன்ன பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.

  ReplyDelete
 11. @ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் துஆ விற்கும் நன்றி சகோ

  ReplyDelete
 12. @விக்கியுலகம்

  என்ன மாப்ளா செய்யுறது குறுக்கு புத்தி கொண்டவர்கள் இருக்கும் வரை

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  சரியான வழியில் மக்களை சந்தோஷமாக வாழவைக்கவேண்டிய ஒரு இஸ்லாமிய அரசாங்கம் இதற்கு அனுமதியளித்து மக்களை மடையர்களாக ஆக்கி சீரழிப்பது வேதனையான விஷயம். மலேஷியாவில் நடக்கும் இந்த லாட்டரி சம்பந்தமான‌ பல சம்பவங்களை என் கணவரும் வருத்தப்பட்டு சொல்வார்கள். அங்கு இஸ்லாமிய முறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை :( ஆட்சியாளர்களுக்கும் இறைவன் நல்வழியைக் கொடுக்கட்டும்.

  ReplyDelete
 14. @ஹுஸைனம்மா

  //மலேசியா, சவூதி ரெண்டுமே இஸ்லாமிய நாடுகள்!! என்ன சொல்ல!! இறைவன் காக்க.//

  இப்படித்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் ஆனால் உண்மை வேறு

  ReplyDelete
 15. @ஆமினா
  வாங்க தங்கை ஆமினா

  //எங்கள் பக்கத்து வீட்டு நேநேயும் சீன ஆண்டியும் அடிக்கடி என்னை அடகு கடைக்கு அழைத்துசெல்வார்கள். நகையை அடகு வைத்து அந்த லாட்டிரி வாங்கவும், லாட்டரி விழுந்ததா என பாக்கவும்..... ///

  அடகு வச்ச அடப்பாவமே இறைவன் தான் இவர்களை காப்பற்ற வேண்டும்

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  விபத்து நடக்கும்போதும் லாட்டரியை பற்றி சிந்திக்கும் இவர்களை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

  உழைப்பவர்களும் இதற்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது. விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சகோ.!

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அளக்கும் சகோ

  அவசியமான பதிவு சகோ.

  மலேசியா,சவூதி மட்டுமல்ல.என் கணவர் இருக்கும் புருனையிலும்

  இதில் நம் சமுதாய மக்கள் நிறைய பேர் இதற்கு அடிமை.

  அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக...

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  இங்கு குவைத்தில் கூட இந்த தாய்லாந்து லாட்டரி சட்டத்திற்கு போக்குகாட்டி கொடிகட்டி பறக்கிறது.
  இதில் வேதனையான விசயம் இஸ்லாமிய சகோதரர்கள் அதிக அளவில் அடிமையாய் இருப்பதுதான். அதிலும் வேதனை அரசு வேலைகளில் அதிகமான சம்பளம் வாங்குபவர்கள்தான் இதில் பழியாய் கிடப்பது.

  ஹலாலான ஊதியத்தையும் அதில் அபிவிருத்தியையும் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் என்றென்றும் தந்தருள்வானாக!

  ReplyDelete
 19. @மாய உலகம்

  //சகோ மலேசிய சூதாட்ட லாட்டரியைப்பற்றி இப்ப தான் கேள்வி படுறேன்..//

  வருகைக்கு நன்றி இன்னும் சவூதி சூதாட்ட பற்றியும் அடுத்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 20. @bandhu

  //தமிழரான அனந்த கிருஷ்ணன் தான் மலேசிய லாட்டரி கிங்! இவர்தான் தயாநிதி - ஏர்செல் பிரச்சனையில் அடிபட்டவர்.//

  இந்த ஊரை அடித்து உலையில் போடுபவனை பற்றி விரிவாக ஒரு பதிவு போட்டு விடுவோம்

  நினைவு படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 21. @அந்நியன் 2

  சமுதாயத்திற்கு அவசியமில்லாத ஜலி பதிவுகள் தேவையில்லையே சகோ

  நன்றி சகோ

  ReplyDelete
 22. @G u l a m

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

  மலேசியாவிலிருந்து இதற்காக களம் சென்று உழைத்து விரிவான தகவல் கொடுத்ததிற்கு நன்றி சகோ

  ReplyDelete
 23. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~


  //நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் லாட்டரி வாங்காமலேயே நம் உழைப்பின் மூலமாய் ஏற்படட்டுமாக..!//

  சரியான துஆ சகோ

  பிரார்த்தனைக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 24. @அஸ்மா

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //மலேஷியாவில் நடக்கும் இந்த லாட்டரி சம்பந்தமான‌ பல சம்பவங்களை என் கணவரும் வருத்தப்பட்டு சொல்வார்கள்.//

  நேர்மையான மனதுள்ள யாருக்கும் இது வருத்தத்தை தரக்கூடிய விஷயம் தான் சகோ


  //அங்கு இஸ்லாமிய முறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை :( ஆட்சியாளர்களுக்கும் இறைவன் நல்வழியைக் கொடுக்கட்டும்.//

  சகோ அது இஸ்லாமிய நாடுதான் ஆனால் செயலில் இல்லை
  உங்களின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வானாக

  நன்றி சகோ

  ReplyDelete
 25. @Abdul Basith

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  //உழைப்பவர்களும் இதற்கு அடிமையாவது வருத்தமளிக்கிறது. விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி சகோ.!//

  இந்த விஷயம் எனக்கும் முரணாக தெரிகிறது உழைப்பை நம்பக் கூடியவர்களும் எப்படி இதற்கு அடிமையாகிறார்கள் என்று

  ReplyDelete
 26. @ஆயிஷா அபுல்.

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

  //மலேசியா,சவூதி மட்டுமல்ல.என் கணவர் இருக்கும் புருனையிலும்

  இதில் நம் சமுதாய மக்கள் நிறைய பேர் இதற்கு அடிமை.//

  அப்ப புருனையிலும் மங்காத்தா தான் ஆட்சி செய்கிறது ம்ம் ரொம்ப குஷ்டம்

  ReplyDelete
 27. @மு.ஜபருல்லாஹ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

  குவைத்திலுமா? சட்டத்திற்கு போக்கு காட்டி வருத்தமாக இருக்கு சகோ

  தகவலுக்கு நன்றி சகோ

  ReplyDelete