Wednesday, November 28, 2012

உங்களுக்கு தெரியுமா சேதி...?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.
‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’

வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார்.  ‘ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’

 ‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’

‘அதில்லை...’

 ‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’

 ‘இல்லை’

 ‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’

 ‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக் கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம் செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா? என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?

எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர். ‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில் இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?’

 ‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத் திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?’

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104:1 )

23 comments:

 1. மிக மிக அருமையான பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 2. சலாம் சகோ.

  அற்புதமான பதிவு ...இங்கு சிலர் கேட்கலாம்..நாம் என்ன இல்லாததையா கூறினோம் ?இருப்பதை தானே கூறினோம்..???இல்லாததைதான் கூறக்கூடாது..இருப்பதை கூறினால் என்ன தப்பு.?

  “புறம் என்றால் என்ன என்பதைபற்றி நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அறிவீர்களாக என கேட்டபோது, அல்லாஹ்வும், அவன் தூதருமோ தவிர மிகவும் அறிந்தவர் என தோழர்கள் கூறினார்கள். (புறம் என்பது) உன் சகோதரன் வெறுப்பதை நீ பேசுவதற்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அவ்வாறு நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தால் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீ சொல்வது அவாிடம் இருந்தால் புறம் பேசி விட்டாய். அவ்வாறு அவாிடம் இல்லை என்றால் அவர் மேல் இட்டு கட்டிவிட்டாய் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

  நன்றி !!!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே

   மிக அருமையான ஹதீஸ் நினைவூட்டிமைக்கு நன்றி

   இந்த பதிவே ஒரு சுயவிமர்சன பதிவு சகோ.
   நான் கூட சமயங்களில் குறை கூறித் திரிந்திருக்கிறேன் இனி முற்றிலுமாக பிறரைப் பற்றி குறை கூறி திரிவதை நிறுத்திக் கொள்ள போகிறேன் இன்ஷா அல்லாஹ்

   தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 3. // குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(அல்குர்ஆன் 104:1 )//

  நிச்சயமாக...

  ReplyDelete
 4. /குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோதரரே

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ அண்ணா...
  மாஷா அல்லாஹ் இரண்டு உதாரணங்களுமே மிக அருமை.வாழ்வில் நாம் அனைவரும்
  கடைபிடிக்க வேண்டிய அழகிய அறிவுரை. ஜஸக்கல்லாஹ் ஹைர் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ தம்பி
   வருகைக்கு ஜஸாக்கல்லாஹ் கைர தம்பி

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 7. பஞ்சு உதாரணம் மிகப் பொருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. ///பஞ்சு உதாரணம் மிகப் பொருத்தம்.///

   ஆமாம் சிந்திக்க வைத்த மிகப் பொருத்தமான உதாரணம்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 8. உண்மையை உறைக்கச் சொன்னீர்கள் சகோ
  இந்த வலியும் வேதனையும் என்றும் மறையாது :(
  மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. அம்பாளடியாள்
   வாங்க சகோதரி

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. புறம் பேசுபவர்கள் இதை கொஞ்சம் யோசித்து பார்த்தாலாவது மாறுவார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒருவர் திருந்தினால் கூட அது இந்த பதிவு கிடைத்த வெற்றி என மகிழ்வேன்

   தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. அறம் கூறாதவனாக ஒருவன் இருந்தாலும் பரவாயில்லை
  ஆனால் அவன் புறம் கூறாதவனாக இருக்க வேண்டும்

  வதந்தியை பற்றி இப்படிஇடித்து கூறுவது திருக்குறள்

  ReplyDelete
  Replies
  1. ///அறம் கூறாதவனாக ஒருவன் இருந்தாலும் பரவாயில்லை
   ஆனால் அவன் புறம் கூறாதவனாக இருக்க வேண்டும் ///

   சும்மா சொல்லக் கூடாது இரண்டே வரிகள் என்றாலும் இப்பதிவுக்கு மிகப் பொருத்தமான வரிகள் ரொம்ப நன்றி!

   Delete
 11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 12. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ

  அருமையான பதிவு ...................அந்த இரண்டு "நச்" சம்பவங்களையும் படித்து முடித்தவுடன் ................
  "குட கம்பி போல" எம்மனசுலேயும் குத்துது ....நாமும் புறம் பேசி திரிந்தோமே என்று நினைக்கையில் .......

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே

   ///"குட கம்பி போல" எம்மனசுலேயும் குத்துது ....நாமும் புறம் பேசி திரிந்தோமே என்று நினைக்கையில் .......///

   கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் சகோ இனி மாற்றிக் கொள்லுவோம் இன்ஷா அல்லாஹ்.

   ஆதமின் மகனே!
   மூன்று நாள்கள்தான் உனக்குரியவை
   'நேற்று' அது சென்று விட்டது
   'நாளை' அது இன்னும் வரவில்லை
   'இன்று' அதில் நீ இறைவனை அஞ்சி வாழு!

   Delete