Friday, November 30, 2012

உடல் எடையை குறைக்க என்ன வழி...?

ஊதிய உடலை இளைக்க வைப்பது எப்படி என்பது விஞ்ஞானிகளுக்கே கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கிறது. இதற்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் ‘உட்கார்ந்து தீனி தின்னாதே; ஓடியாடு; உடற்பயிற்சி செய்’ என்பதாகும். ஆனால் காலம் காலமாக நிலவி வரும் இந்தப் பொன்மொழி இப்போது பொலிவிழந்து வருகிறது என்கிறார், க்ரெட்சென் ரெனால்ட்ஸ்(http://well.blogs.nytimes.com/2009/11/04/phys-ed-why-doesnt-exercise-lead-to-weight-loss/).

கையைக் காலை ஆட்டினால் காலரிகள் எரிந்து அதனால் கொழுப்பு குறையும் என்பது உண்மைதான்; சோபாவில் சரிந்து கிடந்து டி.வி பார்ப்பதை விட, எழுந்து நடக்கும்போது அதிக காலரிகள் செலவாவதும் உண்மை. ஆனால் நிமிடத்துக்கு நாலைந்து காலரிகளைத்தான் இப்படி உதிர்க்க முடியும். எண்பத்தைந்து கிலோ மக்களுக்கு இந்த ரேட் போதாது ! உடல் இளைக்க வேண்டுமென்றால், பட்டர் மசாலா கேட்கும் நாக்கைப் பல்லால் கடித்து அடக்க வேண்டும்; பசித்தால் பச்சை முட்டைக்கோஸைத் தின்று தண்ணீர் குடிக்க வேண்டும்; சுருங்கச் சொன்னால், எடையைக் குறைக்க ஒரே வழி, சற்றேறக் குறைய சாப்பாட்டை நிறுத்துவதுதான் !


கொலராடோ மருத்துவக் கல்லூரியில் செய்த ஓர் ஆராய்ச்சியில் மூன்று விதமான மக்களைப் பிடித்துக்கொண்டு வந்து பரிசோதித்தார்கள். முதல் பிரிவினர், காற்றுப் போல் லேசாகக் காணப்பட்ட பந்தய வீரர்கள். இன்னும் சிலர், உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒல்லியான உடல் வாகு கொண்ட அதிர்ஷ்டசாலிகள். கடைசி பிரிவினர் கொழு கொழு குண்டர்கள். எல்லோரையும் மாபெரும் காலரி மீட்டர் அறை ஒன்றில் அடைத்து, மனித உடல் தன் கொழுப்புத் திப்பிகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஆராய்ந்தார்கள்.
நமக்கு நடமாட சக்தி தருபவை கார்போ ஹைட்ரேட், கொழுப்பு இவை இரண்டும்தான். பார்ப்பதற்கு ஓமப் பொடி போல் இருப்பவர்களுக்குக் கூட உடலில் கொழுப்பு செல்கள் ஏராளமாக உண்டு. உடலின் ஓடியாடும் தேவைகளுக்கு நேரடியாக இந்தக் கொழுப்பை எரித்துப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் தொப்பை கரையும்; இடுப்பும் தொடையும் மெலியும்; பஸ்ஸில் பக்கத்து சீட்காரர் முறைக்க மாட்டார்.
எக்ஸர்ஸைஸ் செய்யும்போது அந்த நேரத்தில் கொஞ்சம் கொழுப்பு உபயோகிக்கப்படுவது உண்மை. ஆனால் உடற்பயிற்சியை முடித்து தினசரிக் கடமைகளுக்குத் திரும்பின பிறகும், உடல் தொடர்ந்து கொழுப்பை எடுத்துக் கொள்கிறதா என்று பார்ப்பதுதான் கொலராடோ பரிசோதனையின் நோக்கம். ஃபிட்னஸ் புத்தகங்களில் இதை ஆஃப்டர் பர்ன் என்பார்கள்.
சோதனையில் கலந்து கொண்டவர்களை முதலில் காலரி மீட்டருக்குள் 24 மணி நேரம் புத்தகம் படித்துக்கொண்டு அமைதியாக உட்காரச் சொன்னார்கள். வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் தினம் மூன்று வேளை தலப்பாக் கட்டு பிரியாணி கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே மிதமான வேகத்தில் சைக்கிள் பெடல் போட வைத்தார்கள். உடற்பயிற்சியை மிதமாகச் செய்யும்போதுதான் கொழுப்புகளை உடல் எடுத்துக்கொள்ளும். தலை தெறிக்க ஓடினால் உடனடி சக்தி தேவைப்படுவதால், கார்போ ஹைட்ரேட்களைத்தான் சீக்கிரமாக ரத்தத்தில் அனுப்பி தசைகளுக்கு சக்தி தர முடியும். எக்ஸர்ஸைச் செய்தால் அன்றைக்கு ஆஃப்டர் பர்ன் நிகழ்கிறதா என்று பார்ப்பதே விஞ்ஞானிகளின் நோக்கம். கொழுப்பு எரிவதை அளவிடுவதற்கு காலரி மீட்டர்.
கொலராடோ பரிசோதனையில், கலந்துகொண்டவர்கள் யாருக்கும் ஆஃப்டர் பர்ன் ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லை ! சொல்லப் போனால், ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்த அன்றைக்கே அதிகம் கொழுப்பு செலவானதாக சந்தேகம்.
இதன் அடிப்படைச் செய்தி, காலரி சாப்பிட்டால் காலரியை எரித்தே ஆக வேண்டும். அரை மணி நேர உடற்பயிற்சியில் சராசரியாக 200-300 காலரிதான் இழக்க முடியும். டவலால் துடைத்துக்கொண்டு களைப்புத் தீர ஒரு கோக் குடித்தால் அத்தனை காலரியும் திரும்ப வந்துவிடும் !
ஆனால் உடற்பயிற்சியால் பலனே இல்லை என்பதல்ல; கார்டியோ குதிப்புகள் இதயத்துக்கு நல்லது.  எக்ஸர்ஸைஸ் செய்தால் சில பல ஹார்மோன்கள் சுரந்து நம் மூடை உற்சாகமாக்கும். பட்டினியால் குறைத்த எடையை அங்கேயே மெயின்டென்ய்ன் செய்யவும் மிதமான உடற்பயிற்சி உதவும். இதயத் துடிப்பு 105 முதல் 134 வரை இருக்கும்படி செய்யும் எக்ஸர்ஸைஸ்தான் கொழுப்பு கரைக்கும் ரேஞ்ச். ஆனால் மிக முக்கியம், அத்தனை காலரிகளையும் உடனே சாப்பிட்டுத் திரும்ப எடுத்துக் கொண்டுவிடக் கூடாது !
அந்த மசாலா சிப்ஸ் பாக்கெட்டை அப்படியே கொண்டு போய் நாய்க்குப் போடுங்கள்.
பின்குறிப்பு: ஆலோசனை சொன்னா 10,000 ரூபாய் பரிசு. பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னேடுத்தும் செல்லும் "இஸ்லாமிய பெண்மணி" தளம் தற்போது மற்றொரு முயற்சியாக ஒரு மாபெரும் பரிசுப்போட்டியை அறிவித்துள்ளது. கலந்துக் கொள்ளுங்கள் அதனை கான கட்டுரைப் போட்டி இங்கே அழுத்துங்கள்.

32 comments:

 1. வயது ஏற ஏற உணவின் அளவைக்குறைப்பது நன்று! அற்றால் அளவறிந்து உண்க!என்பதும் அதுவே!

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாக அழகாக சொன்னீர்கள் ஐயா
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. உபயோகமான நல்ல பதிவு!.

  இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்ற ஒரு கருத்து நிலவுகிறது, அது பற்றி உடற்பயிற்சி விஞ்ஞானிகள் கூறுவது என்ன?. அவர்கள் எது போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்?.

  ReplyDelete
  Replies

  1. ///இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்ற ஒரு கருத்து நிலவுகிறது, அது பற்றி உடற்பயிற்சி விஞ்ஞானிகள் கூறுவது என்ன?. அவர்கள் எது போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்?.///

   இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் மிதமான சீரான கிரவுண்ட் உடற்பயிற்சி செய்யலாம் சகோதரரே அது போன்ற பயிற்சிகள் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தும்

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி சகோதரி

   Delete
 4. காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு நண்பா.

  ReplyDelete
 5. Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 6. Replies
  1. அப்ப பதிவு ஹா ஹா
   நன்றி! சகோ

   Delete
 7. ஒரு பக்கம் உண்ண உணவில்லாமல் மெலிந்து தவிக்கும் மக்கள், இன்னொரு பக்கம் உண்டு கொழுத்து எப்படிடா வெயிட்டைக் குறைப்பது என்று ரூம் போட்டு யோசிக்கும் கூட்டம். இது ரெண்டும் பேலன்ஸ் ஆனா பிரச்சினை தீருமோ!!

  ReplyDelete
  Replies
  1. கருத்து போடுவதற்கும் நீங்கள் ரூம் போட்டு யோசிப்பிங்க போலே ஹா ஹா
   அருமை அருமை

   வருகைக்கு நன்றி!

   Delete
 8. அண்ணா...

  சாப்பாடு குறைக்காம, எக்சர்ஸைஸ் பண்ணால உடம்பு குறைக்க எதாச்சும் வழி இருந்தா சொல்லுங்களேன் :( :( :(

  (ஹி..ஹி..ஹி...)

  ReplyDelete
  Replies
  1. ///சாப்பாடு குறைக்காம, எக்சர்ஸைஸ் பண்ணால உடம்பு குறைக்க எதாச்சும் வழி இருந்தா சொல்லுங்களேன் :( :( :( ///

   வாங்க தங்கச்சி

   ஆமா அப்படி ஒரு பதிவு எழுதினால் ரொம்ப பெரு படிப்பாங்கனு நினைக்கிறேன் ஹா ஹா

   Delete
 9. பயனுள்ள கருத்துக்கள்...

  நன்றி...

  ReplyDelete
 10. மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே!
  பகிர்வுக்கு நன்றி,

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கும் ஆதாரவுக்கும் நன்றி நண்பரே

   Delete
 11. நமது அழகான உடலின் அழகை அட்டகாசமாக மெருகூட்டுவது எது தெரியுமாங்க ? நிச்சயமாக “தொப்பை” யாகத்தான் இருக்கும்...

  என்ன ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், சிரிப்பாகவும், கிண்டலாகவும் இருக்குதா... வேணும்டா... ஆட்டையே கழுதையாக்குன ( ! ? ) நம்மூர் நகைச்சுவை பாணியிலே “PhD” அல்லாத ஆய்வுக்கு இதை உட்படுத்தாலமுங்க... சரியா ?


  1. முதலில் ஆளில்லா ஓர் அறையின் சுவர் எதிரே நிண்டுகொள்ளவும்.

  2. கண்டிப்பாக குனியாமல் நேராக நிண்டுகொள்ளவும்.

  3. அப்படியே கண்ணை சைலண்டா மூடிக்கொள்ளவும்.

  4. அப்படியே சத்தம் போடாமல் மெதுவாக நடந்து செல்லவும்.

  5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் “உம்மா” “உம்மம்மா” என்ற சப்தம் போட்டு மோதி நிற்பீர்கள்.

  6. அப்படியே வலியையும், அழுகையையும் அடக்கிக்கொண்டு மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.

  7. இப்ப சொல்லுங்க உங்கள் உடலின் எந்த பாகம்ங்க சுவரில் மோதி ஈக்கிது ?


  கண்டிப்பாக மலை விழுங்கி “தொப்பை”யே... எப்பூடி நம்ம ஆய்வு ( ? ! )

  என்னதாங்க பயன் ?


  1. கீழே குப்புற விழுந்து மண்ணைக் கவ்வும்போது முகத்தில் அடிபட்டு மூக்கும், சோடாப்புட்டி கண்ணாடியும் உடையாமல் நம்மை காப்பாத்தும்ங்க.


  2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்தும்ங்க . உதாரணமாக பெரிய பெரிய தொப்பையைக் கொண்ட “மாமுலா”ன போலீசாரைக் கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்துதுங்க.


  3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுதுங்க... உதாரணமாக வேலையில்லாமெ ச்சும்மா தில்லா வெட்டியா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொப்பையை மெதுவா தட்டிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாதுங்க.


  4. உறங்கும்போது குறட்டையை வரவழைத்து அருகிலுள்ள நம்ம பக்கத்து பெட்டு எதிரிகளை ( ! ? ) படுக்க விடாமல் தடுக்கலாமுங்க.


  5. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்ங்க.


  6. கூகுள் பேராண்டிகள் ஆழ்ந்து அயர்ந்து படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட யாஹு “அப்பா”வின் தொப்பையைத் தானுங்க.


  இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொப்பையை வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றை தினமும் சைலண்டா செய்வதை மறந்துவிட்டு...

  நொறுக்குத்தீனிகள், பொரிச்ச கோழிகள், குளிர் பானங்கள், சைடிஸ்கள் போன்றதை மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு...


  கண்டிப்பாக தொப்பையை நாம் போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் உள்ளே போட்டு வளர்ப்போம் !!

  ReplyDelete
  Replies
  1. //கண்டிப்பாக தொப்பையை நாம் போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் உள்ளே போட்டு வளர்ப்போம் !!///

   என் பதிவுக்கு எதிர்பதிவு மாதிரி தெரியுது ஹா ஹா ரசித்தேன்

   Delete
 12. காக்கா,
  நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு !!!

  ReplyDelete
  Replies
  1. தகவல்களை அடக்கி கொடுக்கத்தானே நாம இருக்கோம்

   Delete
 13. தக்க காலத்தில் தகுந்த பகிர்வு.

  ReplyDelete
 14. அண்ணா..மிக மிக அவசியமான பதிவு. தற்காலத்தில் இந்த உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதிப்படுவதை நேரிலேயே பார்கிறேன்.

  பேசாமான நான் டாக்டருக்காவது படிச்சிருக்கலாம் விடலயே என்னயத்தான் ஹூம்ம்..

  ReplyDelete
  Replies
  1. ///பேசாமான நான் டாக்டருக்காவது படிச்சிருக்கலாம் விடலயே என்னயத்தான் ஹூம்ம்..///

   அப்ப நீங்க டாக்டர் இல்லையா

   ஒரு மெடிக்கல் கடை வையுங்க டாக்டர் ஆகி விடலாம் முக்கால்வாசி கிராம மக்களுக்கு மெடிக்கல் கடை தான் ஆஸ்பத்திரி. ஹா ஹா

   வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாக்கல்லாஹ் கைர

   Delete
 15. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை..இருந்தாலும் ஆமினா கேள்விக்கு யாராவது விடை கண்டுபிடித்தால் எப்பூடியிருக்கும்னு ஒரு அல்ப ஆசை.
  வயிறு நிறையும் முன்னயே நிறுத்து.1/4 வயிறை காலியா விடுன்னு நபிகளார் சொல்லித் தந்தது சும்மாவா.மிகவும் பயனுள்ள பதிவு சகோ

  ReplyDelete
  Replies
  1. ///ஆமினா கேள்விக்கு யாராவது விடை கண்டுபிடித்தால் எப்பூடியிருக்கும்னு ஒரு அல்ப ஆசை.///

   உண்மையில் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தால் அது சாத்தியமே ஆனால் செயற்கையில் நான் ஏற்கனவே முழ்கி விட்டோம்.

   //வயிறு நிறையும் முன்னயே நிறுத்து.1/4 வயிறை காலியா விடுன்னு நபிகளார் சொல்லித் தந்தது சும்மாவா.///

   மிகவும் அறிவுப்பூர்வமான சொல் அது

   வருகைக்கும் ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி

   Delete