Monday, October 3, 2011

ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்(பாகம்-2)


இந்த பதிவின் முதல் பாகத்தை பார்க்க.  இங்கே அழுத்தவும்


உணவு முறையில் மாற்றம் தேவை

நம் நாட்டு உணவில் 90 சதவீதம் தானிய வகை (அரிசி)யாக உள்ளது. தானிய உணவில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து அதிகம் உள்ளது. இது அதிக கலோரிகளை தரும் உணவு வகை; எளிதில் கொழுப்பு சத்தாக மாறும் தன்மைக் கொண்டது.

மீன், மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளது. இதன் சிறப்பு இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல்.(LDL) கொழுப்பு, கெட்ட கொஸட்ராலைக் குறைக்கிறது. உடல் அணுக்களை (செல்களை) தாக்கும் ஆக்ஸிடன்ட் என்ற மூலக்கூறுக்கு எதிராகப் போராடும் ஆன்டி அக்ஸிடன்ட் (Antioxidant) தன்மை இந்த ஒமேகா-3க்கு உண்டு. ஆகவே இந்த ஒமேகா-3 இரத்த அழுத்தம்,மாரடைப்பு,சர்க்கரைநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தையும் ஆயுளை நீளச் செய்யும் என்பது அறிவியல் ஆய்வின் தீர்வு.


நண்பர் மீண்டும் கேட்டார், “என்னங்க நீங்க! நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது அதிகம் பசிக்கத்தானே செய்யும்.அதற்காக அரைகுரையாக சாப்பிட முடியுமா?

இதுஒர் சரியான கேள்வி.இதற்கும் பதில் இருக்கிறது.

நலம் தரும் நார்ச்சத்து

உணவில் காய்கறி,கீரை,பழங்கள் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய்,வெங்காயம்,முள்லங்கி,காரட் இவற்றை அரிந்து பச்சையாக (Salad) உட்கொள்ளலாம் இவற்றில் நார்ச்சத்து அதிகம்;  உடல்நலத்திற்கு உகந்தது. இந்த வகை உணவில் நார்ச்சத்து அதிகம். அதில் பூஜ்யக் கலோரிதான் உள்ளது. இதை அதிகம் சாப்பிடும்போது தானிய வகை உணவு குறைகிறது. இதனால் குறைந்த கலோரி உணவில் சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது. மேலும் நார்ச்சத்து பல நன்மைகளைக் கொண்டது.காய்கறி, கீரையில் உள்ள நார்ச்சத்துக்குக் கழிவாக மலக்குடலில் வெளியேறும் மலத்தில் நீரைத் தேக்கி வைக்கும் சக்தி அதிகம். மலச்சிக்கல் ஏற்படாது எளிதாக மலம் வெளியேறும்.

பெருங்குடல்,மலக்குடல்,நார்ச்சத்து உணவால் சிறப்பாக கழிவேற்றம் செய்கிறது. இதன் காரணமாக பெருங்குடல் புற்றுநோய்,பெருங்குடலில் மலம், மலப்பைகளாகத் தேங்குதல் (Colonic Diverticulosis) போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.(மொத்தத்தில் ஆபத்தில்லா உணவு)

வயிற்றில் அரைக்கப்பட்ட உணவு கொஞ்சம் கொஞ்சமாக சிறுகுடலை அடைய,நார்ச்சத்து உணவு உதவுவதால் சிறு குடலில் செரிப்புத் தன்மை நிதானமாகவும் சீராகவும் நடைபெறுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக அதிகரிக்கிறது.அதை கட்டுப்படுத்தும் இன்சுலினும் சீராக சுரக்கிறது. இதனால் இரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.சர்க்கரை நோயும் கட்டுப்படுத்தப்படுகிறது.

 “காய்கறி விற்கும் விலையில் தினமும் காய்கறியை எப்படி சாப்பிட முடியும்?என்கிறார் என் நண்பர்.

நியாயமான கேள்விதான். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் ஒருவகையான காய்கறிகள் அதிகம் விளையும். விலையும் குறைவாக இருக்கும். அந்தந்த சீசனில் விளையும் பழம்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பப்பாளி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் எளிய இனிய பழம். இது மலச்சிக்கலுக்கு ஓர் அற்புத மருந்து. வைட்டமின் ஏ,வைட்டமின் சி தாது உப்புகள் கொண்ட ஒரு ஆன்டி அக்ஸிடன்ட் உணவு. இதை அடிக்கடி சேர்க்கலாம்.இப்படி முறையாக உணவு உண்ணும் முறையில் மாற்றங்களை ஏற்ப்படுத்தினால் நலமாக வாழலாம்.


உடல் உழைப்பு குறைந்த நாற்காலி அலுவலர்களுக்கு உடல் உழைப்பை அதிகரிக்க எளிய வழிகள்.

.காலை அல்லது மாலையில் 1 மணி நேரம் உடற்பயிற்சி, அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். நான் இங்கு நண்பர்கள் ரூமிற்கு சொல்லும் போதேல்லாம் ஒவ்வொரு நண்பர்களும் ரூமிலும் வீட்டுக்குள்ளே ஓடுகிற மெஷின் வாங்கி வைத்திருக்கிறார்கள். அனைவரும் ஒரே குரலில் சொல்லும் வார்த்தை வாங்கிய புதிதில் 10 நாட்கள் செய்தேன் அப்புறம் டைமில்லை என்பார்கள்.அந்த மெஷின்கள் தூசி புடிச்சு போயி கிடக்கும். உண்மையில் தொடர் உடற்பயிற்சிகள் தான் பலனை கொடுக்கும்.

.சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுள்ள இடங்களுக்குச் செல்ல வாகனங்களைத் தவிர்த்து நடந்தே செல்லலாம்.

.கீ போர்டில் இருந்து கையை எடுத்து விட்டு சும்மா சாட்டில் பேசிக் கொண்டு இருக்காமல். உறவினர் நண்பர்களை நேரிலே நடைபயணமாகச் சென்று ‘ஹலோ’ சொல்லி கருத்துப் பரிமாறுங்கள். வாழ்க்கையில் பிடிப்பும் தெம்பும் பிறக்கும்.


8 comments:

 1. சாரி, நான் சைவக் குரங்கு...
  கோஸ் சாப்பிடலாம் என்று என் உடற்பயிற்சி நிபுணர் கூட சொன்னார்...

  ReplyDelete
 2. @suryajeeva

  மீன் உணவு நல்லது நண்பரே

  ReplyDelete
 3. அபு ஃபைஜுல்October 4, 2011 at 6:29 AM

  அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ.
  சகோ: ஹைதர் அலி. நீங்கள் இதுபோல் தொடர்ந்து எழுதுங்கள். நல்ல ஆலோசனைகளை சொல்லியுள்ளீர்கள்.சிலர் சொல்வார்கள். ஜாதிக்காய், கருவேலம் பூ.இப்படி நீண்டுக் கொண்டே போகும், எல்லோருக்கும் சாத்தியமா? என்பதை பார்க்க மாட்டார்கள். அதுபோல் அல்லாமல் எளியமுறையில் சொன்னீர்கள்.

  ReplyDelete
 4. //கீ போர்டில் இருந்து கையை எடுத்து விட்டு சும்மா சாட்டில் பேசிக் கொண்டு இருக்காமல், உறவினர் நண்பர்களை நேரிலே நடைபயணமாகச் சென்று ‘ஹலோ’ சொல்லி கருத்துப் பரிமாறுங்கள். வாழ்க்கையில் பிடிப்பும் தெம்பும் பிறக்கும்.//

  உங்களுக்கு நீங்களே சொல்லிக்கணும்!

  போன வாரம் வருவீங்க, வருவிஙண்டு காத்திருந்துட்டு....

  பேச்சப் பாரு! :-)

  ReplyDelete
 5. அருமையான பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .இன்று என் தளத்தைக் காணத் தவறாதீர்கள் .காரணம்
  ஒன்று உள்ளது ....

  ReplyDelete
 6. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

  வாழ்த்துக்கள்

  ReplyDelete