மலேசியாவில் மங்காத்தா என்ற பதிவில் மலேசியாவில் சூதாட்டத்தினால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் அவலம் இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள. இங்கே அழுத்துங்கள் இதனுடைய தொடர்ச்சி தான் இனி வரபோகிற பதிவு.
பல லட்சக்கனக்கான தொழிலாளர்கள் வன்ன வன்ன கனவுகளுடன் வெளிநாட்டு வேலைக்காக வந்தாலும் எல்லோருக்கும் சரியான வேலை அதற்கான வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. சிலருக்கு நல்ல வேலை கிடைத்தும் மனநிறைவு அடைவதில்லை. மேலும் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கிறார்கள், யோசித்து சரியான வழிகளில் முயற்சிப்பது தவறு இல்லை அது வரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விடயமும் கூட ஆனால்?
பணம் ஒன்றே குறிக்கொளாய் குறுக்கு வழியில் எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற எண்ணமே பல தகாத அசிங்கமான தொழில்களுக்கும் செயல்களுக்கும் ஈட்டு செல்கிறது. அரபிகள் நம்பி ஒப்படைத்து செல்லும் அலுவலகத்தில், கடைகளில் திருடுவது.சாரயம் காய்ச்சுவது,வட்டிக்கு விடுவது கள்ளத்தானமாக சூதாடுவது இவையெல்லாம் இங்கு தடை செய்யப்பட்டு இருந்தும் அதனை மீறி செயல்படுவது இதனால் சிலர் ஆதாயமடைய பலரின் வாழ்க்கையை நாசமாகி விடுகிறது.
மலேசியா சூதாட்ட கடை
மலேசியாவை பொறுத்த வரை சூதாட்டம் சட்டப்படி தடை செய்யப்படவில்லை பிரத்யேகமான சூதாட்ட கடைகள் இருக்கின்றன. ஆனால் சவூதியில் சூதாட்டம் தடை செய்யப்பட்ட குற்றசெயல் மலேசியாவில் உள்ள சூதாடிகளை விட இங்குள்ள கள்ளசூதாடிகள் இருவகையான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
ஓன்று. சூதாட்டத்தில் பெரும்பாலும் பணத்தை இழந்து ஏமாற்றப்படுகிறார்கள்
இரண்டு. ஒரு பெரும் பரிசுத் தொகை விழுந்து அதனை அந்த ஏஜெண்ட் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டால் அதை இங்கு யாரிடமும் போய் முறையிட முடியாது (அப்படி நிறைய சம்பவங்கள் நடந்து மனநோயளியானவர்கள் இருக்கிறார்கள்)
பீகாரைச் சேர்ந்த நண்பன் 10 ரியால் எழுதினால் 4000 ரியால் கிடைக்கும் என்று சொன்னவனிடம் ஏன் பத்து ரியாலுக்கு எழுதுகிறாய் 100 ரியாலுக்கு எழுது 40000 ரியால்.இந்திய மதீப்பிற்கு 520000 கிடைக்குமே என்று கிண்டலாக சொன்னபோது. இல்லே பாய் அவ்வளவு எழுதுனா ஏஜெண்ட் கொண்டு வந்து தரமாட்டார்கள் என்று இயல்பாக சொன்னார்.
தூங்க போவதற்கு முன் பயங்கரமாக ஒதி கொண்டு தூங்க செல்வார்
அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் கனவில் வந்து நல்ல அடிக்கக் கூடிய நம்பராக சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில். இப்படித்தான் ஒருமுறை கனவில் நம்பர் வந்தது அதில் இரண்டாயிரம் ரியால் அடித்தது என்றவரிடம். அந்த கனவில ஷைத்தான் வந்திருப்பான் என்றேன். கடுப்பாகி விட்டார்.
தாய்லாந்து லாட்டரி என்று சொல்லப்படுகின்ற இந்த சூதாட்ட லாட்டரிக்கு பெரும் நெட்வேர்க் இருக்கிறது பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இதன் எஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.
எனக்கு தெரிந்து திருநேல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நடுத்தர வயதுடைய நண்பர் 8 வருடங்களாக ஊருக்கு போகமாலும் வீட்டுக்கு பணம் அனுப்பாமாலும் சம்பாதிக்கும் முழு சம்பளத்தையும் தாய்லாந்து லாட்டரியில் தொலைத்துக் கொண்டிருந்தவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.
இங்குள்ள இஸ்லாமிய அமைப்பு மூலமாக அவரை சடலத்தை மீட்டெடுத்து. அவருடைய ஊர் முகவரியை கண்டுபிடித்து அவருடைய மனைவியிடம் உங்கள் கணவர் இறந்துவிட்டார் அவருடைய உடலை ஊருக்கு அனுப்புகிறோம் என்று சொன்னபோது அவருடைய மனைவி சொன்ன பதில் ஆச்சர்யமடைய வைத்தது. அவர் இறந்து எட்டு வருடங்களாகி விட்டது குடும்பத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை நானும் இரண்டு பெண் குழந்தைகளும் பீடி சுத்தி தான் கஞ்சி குடிக்கிறோம். அவர் உயிரோடு இருந்த வரை எந்த நல்ல, கெட்ட காரியங்களை பற்றியும் விசாரித்ததில்லை. அவர் எங்களுக்கு பயன்படவில்லை அதனால் அவரை அங்கேயே புதைத்து விடுங்கள் என்றார்.
இங்கு என் நண்பர் மாதம் 1500 ரியால் சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியர் அதில் மாதம் 1000 ரியாலுக்கு தாய்லாந்து லாட்டரி எழுதுவார். ஒரு மூன்று நமபர்களை எடுத்துக் கொண்டு அதை பலவகைகளை மாத்தி மாத்தி எழுதி ஒவ்வோரு நம்பருக்கும் பத்து பத்து ரியாலாக எழுதுவார்.
இப்படிதான் எழுதுவார்கள் (இது நண்பனுக்கு தெரியாமல் அவர் அறையில் சுட்டது ஒருவேளை நாளை இந்த பதிவை நண்பன் படித்தால் என்னை அடிக்க கூட வரலாம்)
மனநோயளி போன்று எதோ யோசனையில் நம்பர்களை மாத்தி மாத்தி எழுதிக் கொண்டிருப்பர் அதற்கு சில ஷாட்டுகள் வைத்திருப்பார் அதையும் பாருங்கள்.
இவரை எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன் ஒரு கட்டத்தில் உன் வேலையை பாத்துகிட்டு போ என்று கோபமாக திட்டி விட்டார். வெளிநாட்டிற்கு வந்து வாலிபத்தையும் இழந்து மனைவி மக்களோடு இருக்கும் குடும்ப சூழலும் அற்றுப் போய் ஹராமாக (தடுக்கப்பட்ட) வழியில் செல்பவர்களை நினைத்து வேதனைப் பட்டுயிருக்கிறேன். எப்பவாவது யாருக்காவது,அல்லது இவர்களுக்கு விழுகிற பரிசுத்தொகைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.
திருவள்ளுவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
இதனை சாலமன் பாப்பையா அவர்கள் விளக்கும்போது:
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.
திருவள்ளுவர் மட்டுமல்ல தமிழ் சங்க இலக்கிய நள தமயந்தி கதையில்.
மனைவியை வைத்து சூதாடிய மகாபாரத கதைகள்,அனைத்து மத வேதங்களும் சூதாட்டத்தை பெரும் தீமையாகவே பார்க்கின்றன என்னதான் கதை சொன்னாலும் அறிவுரை சொன்னாலும் இறையச்சம், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் இல்லாதவர்களை ஒன்றும் செய்து விடமுடியாது நாம் எதாவது சொன்னால் நான் நாசமா போகிறேன் உனக்கென்ன என்கிறார்கள்.
திருக்குர்ஆன் இப்படி எச்சரிக்கிறது
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திருக்குர்ஆன்: 5-91)

இக் கதைகளின்படி, நளன் நிடத நாடு
என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும்
நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில்
நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி.
மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச்
சனி பீடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன்
சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான்.
நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன்
தானும் வருவேன் எனத் தமயந்தி
பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும்
முள்ளிலும் நடந்து துன்பப் படுவது
கண்டு பொறாத நளன், வழியிலேயே
அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன்
பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு
ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப்
பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.
மனைவியை வைத்து சூதாடிய மகாபாரத கதைகள்,அனைத்து மத வேதங்களும் சூதாட்டத்தை பெரும் தீமையாகவே பார்க்கின்றன என்னதான் கதை சொன்னாலும் அறிவுரை சொன்னாலும் இறையச்சம், உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் இல்லாதவர்களை ஒன்றும் செய்து விடமுடியாது நாம் எதாவது சொன்னால் நான் நாசமா போகிறேன் உனக்கென்ன என்கிறார்கள்.
திருக்குர்ஆன் இப்படி எச்சரிக்கிறது
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (திருக்குர்ஆன்: 5-91)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் (ஹலாலானதா, ஹராமானதா)முறையானதா, முறையற்றதா என்பவனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி
சூதும் ஒரு போதைதான்.
ReplyDeleteஎச்சரிக்கைப்பதிவு!
மேற்கோள் காட்டிய விதம் அருமை!
சூதாட்டம்???????????? ஷேர் மார்க்கெட்???????????????? கம்மோடிடி மார்கெட்??????????
ReplyDeleteஇல் அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ. சகோ:ஹைதர் அருமை என்று சொல்வதைவிட கொடுமை என்றுதான் சொல்லவேண்டும்.எனக்கு தெரிந்த ஒரு பிறமத சகோ ஒருவர் தையல் காரர் பகலில் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இரவில் கண் விழித்து பார்த்து பார்த்து எழுதுவார்,அவர் சொல்வார் எனக்கு தாய்லாந்து லாட்ரி அடிக்காமல் ஊருக்கு போகமாட்டேன். எப்படியும் ஐந்து வருடம் பார்த்திருப்பேன் ஊருக்குப் போகவில்லை அவரை நான் கண்டு எட்டு வருடம் ஆச்சு ஊருக்குப் போனாரா ?
ReplyDeleteஸலாம் சகோ.ஹைதர் அலி,
ReplyDeleteசவூதியில் லாட்டரி தடை செயப்பட்டு இருந்தாலும் ஒளித்து மறைத்து நடத்துகிறார்களா..? மாட்டிக்கொண்டால் அதோகதிதான்..! இப்படியெல்லாம் நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்விஷயம், நீங்கள் சொல்லித்தான் சவூதியில் ஏழு வருஷமாக இருக்கும் எனக்கும் தெரியும்.
வேண்டற்க வென்றிடினும் சூதினை என்றார் வள்ளுவர். அதுவும் சூது திருட்டுத்தனமாக நடக்கிறது என்றால் நம்ப முடியவில்லை. விரிவாக எழுதுங்கள். இங்கு மட்டும் என்ன வாழ்கின்றது? தடுக்கப்படும். பின்னர் பச்சைக்கொடி காட்டினால் திறக்கப்படும். சூதாட்டம் எதற்கு? சாராய சுனாமி ஒன்றே போதாதா? தலைமுறையே தமிழ்நாட்டில் அழிந்துகொண்டிருக்கின்றது.
ReplyDeleteசலாம் சகோ ஹைதர்!
ReplyDeleteஇந்த தாய்லாந்து லாட்டரியில் அழிந்த பலரை எனக்கும் தெரியும். பிரார்த்தனைதான் நம்மால் செய்ய முடிந்தது.
சிறந்த பகிர்வு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.....
அந்த பொன்மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
@கோகுல்
ReplyDelete//சூதும் ஒரு போதைதான்.//
மட்டமான போதை
கருத்திற்கு நன்றி சகோ
@Online Works For All
ReplyDeleteவிளம்பரமா நடக்கட்டும் நடக்கட்டும்
நல்ல விஷயமாக இருந்த ஒகே
@suryajeeva
ReplyDelete//சூதாட்டம்???????????? ஷேர் மார்க்கெட்???????????????? கம்மோடிடி மார்கெட்??????????//
இதை பற்றி உங்களிடம் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்
@அபு ஃபைஜுல்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//ஒருவர் தையல் காரர் பகலில் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இரவில் கண் விழித்து பார்த்து பார்த்து எழுதுவார்,அவர் சொல்வார் எனக்கு தாய்லாந்து லாட்ரி அடிக்காமல் ஊருக்கு போகமாட்டேன். எப்படியும் ஐந்து வருடம் பார்த்திருப்பேன் ஊருக்குப் போகவில்லை அவரை நான் கண்டு எட்டு வருடம் ஆச்சு ஊருக்குப் போனாரா ?//
கேள்விக்குறியோடு முடித்து இருக்கிறீர்கள் உண்மையில் தாய்லாந்து லாட்டரி எழுதுபவர்களின் வாழ்வு கேள்விகுறியோடுதான் முடிகிறது
வருகைக்கு நன்றி
@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
//சவூதியில் லாட்டரி தடை செயப்பட்டு இருந்தாலும் ஒளித்து மறைத்து நடத்துகிறார்களா..? மாட்டிக்கொண்டால் அதோகதிதான்..! இப்படியெல்லாம் நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்விஷயம், நீங்கள் சொல்லித்தான் சவூதியில் ஏழு வருஷமாக இருக்கும் எனக்கும் தெரியும்.//
கம்பெனி வேலை முடிந்தால் வீடு என்று இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை ஆனால் நான் இது போன்றே விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேலை முடிந்ததும் ஊர் சுத்துகிறேன் அல்லது கடைநிலை ஊழிய நண்பர்கள் அதிகம்
வருகைக்கு நன்றி சகோ
@சீராசை சேதுபாலா
ReplyDelete//சாராய சுனாமி ஒன்றே போதாதா? தலைமுறையே தமிழ்நாட்டில் அழிந்துகொண்டிருக்கின்றது.//
சரியாக சொன்னீர்கள்
இது சமபந்தமான விரிவான இடுகை
http://valaiyukam.blogspot.com/2011/07/blog-post_12.html
மது ஒரு பொதுத்தீமை
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@சுவனப்பிரியன்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
பிரார்த்தனையும் செய்வோம் களத்தில் இதற்கேதிராக பிரச்சாரமும் செய்வோம்
சகோ
@மு.ஜபருல்லாஹ்
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம்
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கிறீர்கள்
//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.....//
அதுவும் பேராசை கொண்ட திருடன் திருந்தாவிட்டால்..
வருகைக்கு நன்றி
அன்புச்சகோதரனுக்கு...
ReplyDeleteஇவரை எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன் ஒரு கட்டத்தில் உன் வேலையை பாத்துகிட்டு போ என்று கோபமாக திட்டி விட்டார்.
என்றபோது வலிகள் நட்புடன் மோதி பிரிவுகள் சாதகமாய் சினேகிக்கம்.
ஆனால் அந்த பிரிவுகள் வேண்டாம் என்று சில ஆதாரங்களை வெளியில் அம்பலப்படுத்தி பலரை திருத்த முயல நினைப்பது ஒரு சாதாரண நெறி முறை அல்ல.
அவை தான் மனித தொண்டில் ஒரு வகையில் சேர்கின்றது.
பல விடையங்கள் உங்கள் பக்கத்தில் நான் கற்க நிறைந்து விடுகின்றது.
எனினும் கற்கின்றேன் நல்ல புத்தகத்தின் பக்கம் விழியை திருப்பியபடி
நல்லது மகிழ்ச்சிகள்
வாழ்த்துக்கள் என பலவாறு சொல்வதிற்கு என்னால் போது அளவு போதாது இருந்தும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
தொடர்க எழுத்தாணியின் மறுபக்கத் திருத்தொண்டுகள்.
@தமிழ்விழி வானலை யாழகிலன்.
ReplyDeleteஅன்புச் சகோதரர்ரே
உங்கள் அன்புக்கு நன்றி
http://suryajeeva.blogspot.com/2011/04/blog-post_29.html
ReplyDeletehttp://suryajeeva.blogspot.com/2011/06/blog-post_12.html
ஏற்கனவே இரு பதிவுகள் போட்டிருக்கிறேன், கம்மோடிடி மார்கெட் குறித்து இப்பொழுது தான் தெரிந்து கொண்டு வருகிறேன்... அதை பற்றியும் விலை வாசி உயர்வு குறித்த பதிவுகளில் போடுவது உண்டு... இது எகோநோமிக்ஸ் என்பதால் ரொம்ப சுத்த விட்டு உள்ளார்கள்.. புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது...
@suryajeeva
ReplyDeleteநன்றி நண்பரே
படித்தேன் அந்த லிங்குகளையும் பார்த்தேன்