Sunday, October 2, 2011

பதிவுலகுக்கு பொருந்தும் பழமொழிகள்

ஓநான்கள் ஊரில் கழுதைகளும் வித்வான்கள்.என்ன புரியவில்லையா?

ஒரு கழுதை இருந்தது சாதரண கழுதையல்ல தன்னை பெரிய பாடகன்,வித்தகன் என்று நினைத்த கழுதை. அது அன்னாந்து வானை பார்த்ததும் தன் பறப்பதாக நினைத்துக் கொண்டும்,அதுவும் பாடிக் கொண்டே பறப்பதாக நினைக்கும் கழுதை.



மிருகங்கள் பறவைகள் கூட்டமாக இருப்பதைப் பார்த்தால் தன்னுடைய திறமையை நிருபிப்பதற்காக தன்னுடைய காட்டு கத்தல் கச்சேரியை ஆரம்பித்துவிடும். அன்றும் அப்படித்தான் காக்கைகள் குழுவாக இருந்த இடத்தில் நின்று கொண்டு தனது கச்சேரியை ஆரம்பித்தது. இதை ரசிக்கமுடியாத காக்கைகள் ஒன்று சேர்ந்து தலையில் கொத்தி விரட்டி விட்டன.

உடனே இடத்தை காலி பன்னிவிட்டு ஓநான்கள் குழுவாக இருந்த வேலியின் பக்கம் நின்று கச்சேரி செய்ய ஆரம்பித்தது. ஓநான்களின் இயல்பு தலையை தலையை ஆட்டுவது. அவை இயல்புக்கேற்றவாறு தலையை ஆட்டுவதை பார்த்த கழுதை தன்னுடைய கச்சேரியை ரசிப்பதாக நினைத்து இன்னும் உரக்க கத்தியதாம்.

இந்த கதைவடிவிலான பழமொழி பிறரை நோக்கி சொல்வதற்காக அல்ல நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு பக்குவப்படுவதற்கான பழமொழி.

நம்மை விட எதாவது ஒரு துறையில்(எல்லோருக்கும் எல்லாம் தெரியாது) திறமை குறைந்தவர்களிடம் நாம் திறமையாளராக தெரியலாம்.அதுபோன்ற சமயங்களில் எனக்கு தெரிந்தது அவருக்கு தெரியவில்லை என்ற ஆனவம் நம்மை தொற்றிக் கொள்ளக் கூடாது.நம்மை விட திறமை அதிகமாக உள்ளவர்களிடம் நாம் செல்லாகாசு என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
ஒருவேளை தலையாட்டுகிறவர்கள் மத்தியில் நாம் வித்வானாக தெரியலாம்.

அவர் என்னுடைய நண்பர்,என் ப்ளாக்கின் பாலோவர்,எனக்கு திரட்டிகளில் வாக்களிப்பவர்,என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவர் அதற்காக அவர் என்ன பதிவு எழுதினாலும் மொக்கை,அபத்தம் எதுவாக இருந்தாலும் ஆஹா ஒகோ என்று பின்னூட்டம் போடுவேன் என்கிற மொய் எழுதுகிற மனநிலை ஓநான்களை நினைவுட்டுகிறது.

இது போன்ற பின்னூட்டவாதிகள் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு நண்பரையும் ஏமாற்றுகிறார்கள் தவறான பதிவுகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள் நண்பர் சரியானதை தெரிந்துக் கொள்ளக் கூடும்.அதேபோன்று நாம் தவறாக எழுதும்போது சுட்டிகாட்டும் நண்பர்களை எதிரிகளாக பார்க்கும் மனநிலை வேண்டாம்.

"No Politics Please.No big fundas, Wanna only cool things" (அரசியல் வேண்டாம், பெரிய சர்ச்சைகள், தத்துவங்கள் எல்லாம் வேண்டாம்,மச்சி..! ஜாலியாக பொழுது போக வேண்டும். அதற்கு வழி சொல்லு போதும்) என்கிற பதிவர்களைப் பற்றி நான் இங்கு பேசவில்லை இணையத்தில் நல்ல விஷயங்களை சமூகத்துக்கு கொடுக்க நினைக்கிற நண்பர்கள் யாரக இருந்தாலும் வாருங்கள். கைகோர்ப்போம் நல்ல விஷயங்களை சொல்வோம்.

வளைந்த மூங்கில் அரசனின் கையில் வில்லாக பூஜிக்கப்படுகிறது
வளையாத மூங்கில் கலைக் கூத்தாடின் காலில் மிதிபடுகிறது

20 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    நம்மை விட திறமை அதிகமாக உள்ளவர்களிடம் நாம் செல்லாகாசு //

    அருமை

    என்கிட்ட திறமை இருக்குன்னு காத்து கத்து கத்துரத விட்டுட்டு கல்லாதது உலகளவுன்னு நெனச்சு புதிய பாதையில் பயணிக்க வேண்டும்

    ReplyDelete
  2. மிகவும் அழகாக பதிவுலகின் ஒழுங்குகளை ஒழுங்குபடுத்தி எழுதி இருக்கிறீர்கள்.

    புரிபவர்களுக்கு புரிந்தால் சரிதான்

    அபு நிஹான்

    ReplyDelete
  3. அன்பு நண்பரே...

    அழகாக ஆழமாக

    வலையுலகிற்குத் தேவையான கருத்தைப் பதிவிட்டுள்ளீர்கள்...

    உண்மைதான்..

    தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்று பலருக்கும் இல்லை..

    நானறிந்த பொன்மொழி...

    ஒருவரிடம் இன்னொருவர் கருத்துக் கேட்கிறார் என்றால்...

    அவர் தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று பொருள்“

    சிந்திக்கவேண்டிய ஒரு செயலை அடிக்கோடிட்டுக் காட்டியது தங்கள் பதிவு..

    ReplyDelete
  4. மிக சரியான அலசல்

    ReplyDelete
  5. அக்கு வேறு ஆணி வேறா பிரித்து எழுதிட்டீங்க , மிக அருமை

    ReplyDelete
  6. பின்னூட்டம் என்பதே மக்களின் மன நிலையை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பமே... அதை விட்டு விட்டு அதை வலைபூக்களுக்கு வர வைக்கும் தந்திரமாக மாற்றி விட்டார்கள்... இதெல்லாம் சகஜம்... தவறான கருத்துக்கள் கொண்ட பதிவை தாங்கிய வலைப்பூவின் உரிமையாளரிடம் இது குறித்து பின்னூட்டம் போட்டேன்... தவறான கருத்து என்று பின்சேர்க்கை சேர்க்க சொன்னேன்.. கேட்க்காததால் என் வலைப்பூவில் களை என்று ஒரு பக்கத்தை திறந்து அதில் பதிவு செய்துள்ளேன்...

    ReplyDelete
  7. assalaamu alaikkum(varah)....arumaiyaana, thevaiyaana pathivu...

    ReplyDelete
  8. நாம தெரிஞ்சுக்க்வேண்டியதே இன்னமும் நிறையா இருக்கே.

    ReplyDelete
  9. அபு ஃபைஜுல்October 2, 2011 at 12:16 PM

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ. சகோ:ஹைதர் அலி, சரியாக சொன்னீர்கள். பசித்தவனால் தான் சரியாக சாப்பிட முடியும். தனக்கு தெரியாது என்று நினைத்தால் மட்டுமே அதிகம் கற்றுக் கொள்ளமுடியும்.

    ReplyDelete
  10. இணையத்தில் நல்ல விஷயங்களை சமூகத்துக்கு கொடுக்க நினைக்கிற நண்பர்கள் யாரக இருந்தாலும் வாருங்கள். கைகோர்ப்போம் நல்ல விஷயங்களை சொல்வோம்.

    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ............

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.ஹைதர் அலி...

    ///இது போன்ற பின்னூட்டவாதிகள் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு நண்பரையும் ஏமாற்றுகிறார்கள் தவறான பதிவுகளை தைரியமாக சுட்டிக் காட்டுங்கள் நண்பர் சரியானதை தெரிந்துக் கொள்ளக் கூடும்.அதேபோன்று நாம் தவறாக எழுதும்போது சுட்டிகாட்டும் நண்பர்களை எதிரிகளாக பார்க்கும் மனநிலை வேண்டாம்.///

    ---அத்தனையும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியன..!

    நான் எழுதும் பதிவில் உள்ள சொற்குற்றம் பொருட்குற்றம் இவற்றை சரியான ஆதாரங்கள் அல்லது லாஜிக்கலான வாதங்கள் இவற்றால் மறுப்போரை எனக்கு மிக மிக மிக மிக மிக பிடிக்கும். அவர்களுக்கான வரவேற்பு பட்டுக்கம்பளம் எப்போதுமே என் வலைப்பூவில் விரித்து வைக்கப்பட்டுள்ளது.

    அருமையான இடுகை. நன்றி.

    ReplyDelete
  12. உண்மைதான் தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும் அப்பொழுதுதான் நம்மை மேம்படுத்திக்கொள்ளமுடியும்

    ReplyDelete
  13. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    நன்றி சகோ

    ReplyDelete
  14. @முனைவர்.இரா.குணசீலன்


    //ஒருவரிடம் இன்னொருவர் கருத்துக் கேட்கிறார் என்றால்...

    அவர் தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று பொருள்“//

    அதற்கு மாற்றமாக சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள் சரியான முரையிலான கருத்துரை நண்பரே

    ReplyDelete
  15. நன்றி சகோ!
    வலை வந்து வாழ்த்தினீர்!
    தங்கள் பதிவைப் படித்தேன்
    தாங்கள் மருந்தாளுனர் அல்லவா
    உளநலம் பெற நல்ல (கசப்பு சிலருக்கு) மருந்து கொடுத்துள்ளீர்
    முற்றிலும் உண்மை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்கும் மனம் பக்குவப்பட்டது. ஆனால் நீ எனன சொல்வது நான் என்ன கேட்பது என்ற திமிர்தனம் பெரும்பாலரிடம் அதிகமாக காணப்படுகிறது. இது ஆரோக்கியமான செயல் அல்ல.
    காலத்திற்கேற்ற பதிவு!

    ReplyDelete
  17. // நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு பக்குவப்படுவதற்கான பழமொழி //

    உண்மை தான் சகோ...

    // அரசியல் வேண்டாம், பெரிய சர்ச்சைகள், தத்துவங்கள் எல்லாம் வேண்டாம்,மச்சி..! ஜாலியாக பொழுது போக வேண்டும். அதற்கு வழி சொல்லு போதும்) என்கிற பதிவர்களைப் பற்றி //

    நான் என்றுமே கவலைப்பட்டது இல்லை, ஏனெனில் எந்த வலைப்பூ தரம் வாய்ந்தது என்று எனக்கு தெரியுமே....

    ReplyDelete