முட்டாள்களே,
என்ன ஆயிற்று உங்களுக்கு..?
என் அடக்கத்தலத்தில் எதற்கு இத்தனைக் கூட்டங்கள்?
சமாதி வனக்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கப் போராடிய எனக்கே சமாதி கட்டி பச்சைப் பட்டு விரித்து பூ சாத்தி,பக்தி மணக்க மயிலிறகு மந்திரங்களும் சக்கரைப் பூ நேர்ச்சையும் உண்டியலும் காணிக்கையும்....
நெஞ்சு பொறுக்குதில்லையே
ஒரே இறைவன்,குர்ஆனும் நபிவழியும் நம் வழிகாட்டுதல் என்று ஒரிறைக் கொள்கை சொன்ன என் பாடங்களை தர்கா விளக்கு திரியில் போட்டு எரிக்கின்றீர்களே...
நான் சொன்னேனா?
எனக்கு கந்தூரி வேண்டும்,உரூஸ் வேண்டும்,பூஜை வேண்டும்,நேமிதம் வேண்டும் என்று யாரிடம் சொன்னேன்?
என்னை ஏன் இழிவுப்படுத்துகிறீர்கள்?
இறைவனிடம் நேரடியாகப் பிரார்த்தியுங்கள்.அவனுக்கு இடைத்தரகர் தேவையில்லை என்று ஓங்கி ஒலித்த என்னிடமே கையேந்துகிறீர்களே?
மூடர்களே உங்கள் இழி செயலால் நான் குறுகி நொடிந்து போகிறேன்.
ஜோஸ்யங்களும் மாந்திரீகங்களும் மடத்தனத்தின் முகவரி என்று உரத்து சொன்ன என் பெயரில் பொழப்பு நடத்த யாகம் செய்யும் சுயநலமிகளே,
இறைவன் முன்னிலையில் நாம் என்ன பதில் சொல்வோம்?
மரண சிந்தனையின் வாசல் கதவில் நின்று ஆணும் பெண்ணுமாய் கொண்டாடிக் கொள்ளி கொளுத்துகின்றீர்களே...
இது இணைவைப்பின் கொடூர விதை என்பதை நீங்கள் அறிவதில்லையா?
என் மட மக்களே,
தெரியாமல்தான் கேட்கிறேன்.இந்த யானைக்கும் எனக்கும் என்னதான் தொடர்பு?
என் சமாதியில் கொடிக் கம்பம் நட்டு பச்சை நட்சத்திரங்களுடன் கொடிகளைப் பறக்க விட்டு என் கொள்கையில் சுண்ணாம்பு நீர்க்கச் செய்து கொக்கரிக்கின்றீர்களே....
என்ன நியாயம் இது?
நிறுத்துங்கள்
எனக்கும் இவ்வுலகிற்கும் இனி தொடர்பில்லை.நீங்கள் கேட்பதை நானறியேன்.
எடுத்துரைக்கும் என் கடமை முடிந்து போனது.
எனக்கேன் தர்கா? என்னைக் கண்ணியப்படுத்த விரும்பினால் இடித்துத் தள்ளிவிட்டு ஓரிறை நோக்கி போ...
எனக்காகப் பிரார்த்தனை செய்.
அதைவிட்டு...
மூடத்தனத்திற்கு என்னை காரணியாக்கும் கொடுமை தொடருமானால் மஹ்ஷர் காத்துக் கிடக்கிறது.
உங்கள் யாவருக்கும் எதிராய் என் விரல் நிளும்...
விரக்தி பெருமூச்சுடன்...
இறையடிமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஹைதர் அண்ணா
இணைவைப்பவர்களை நோக்கிய நச் பதிவு
வேறென்ன சொல்ல.... எதுவா இருந்தாலும் இறைவனிடம் கேளு என சொன்னவர்கிட்டையே எனக்காக நீ கேளுன்னு சொல்றது மடத்தனம் அல்லாமல் வேறென்ன??
அஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteசரியான சாட்டையடி...
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)
''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteவித்தியாசமான முறையில் மூடநம்பிக்கைகளை சாடியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.!
சுட்டியை சொடுக்கி கேளுங்கள். படியுங்கள். விடியோ காணுங்கள்
ReplyDelete1. >>>>>
தர்கா என்றால் என்ன? முஸ்லீகள் தர்காக்களுக்கு செல்லலாமா? <<<<<
2. >>>>>
சமாதி வழிபாடு இஸ்லாத்தில் உண்டா? <<<<<
3. >>>>>
நவீன ஷைத்தானின் உளறல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத். <<<<<
கொளுத்தி போடுங்க, பத்தினா சரி
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ReplyDeleteகப்ரு வணக்கம் இணை வைப்பதற்கு சமம் என்று குர்ஆன ஹதிஸ் ஆதாரத்தோட கூறினார்கள்.
இதுவும் வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கீரகள் அருமையான பகிர்வு.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)
‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’ (அல்குர்ஆன் 40:60)
“நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்” (அல்குர்ஆன் 2:22)
நாம் அனைவர் மீதும் இறைவனுடைய சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!
ReplyDeleteஎன்ன ஆயிற்று உங்களுக்கு, கோபம் அதிகமாகயிருக்கும் போது பதிவு எழுதாதீர்கள். ஆரம்ப முகமன் கூட இல்லாமல், இன்னும் யார் பேசுவதாக செல்கி்றது? எங்கு நடைபெருகின்ற நிகழ்ச்சியை பேசுகிறீர்கள்? எதைக் கண்டிக்கிறிகள் என்பதை என் போன்றோர்க்கு தெளிவு படுத்தவும்.
நீங்கள் மேற்சொன்ன செய்திகளுக்கு பின்னூட்டத்தில் சகாக்கள் ஆதாரம் கொடுப்பார்கள் என்று ஆதாரத்தை விட்டு விட்டீர்களோ?
வஸ்ஸலாம்!
உங்கள் ஆதங்கம் நியாயமானது சார்
ReplyDeleteநல்ல பதிவு..
எல்லா பிரிவனரிடமு இதுபோல மூட நம்பிக்கைகள் வேரூன்றித்தான் இருக்கு. எப்பதான் உணருவார்களோ?
ReplyDeleteஉங்கள் ஆதங்கத்தின் ஆழத்தை உணர்கிறேன் சகோதரா....
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நாமெல்லாம் சொல்லி கேட்காதவங்களுக்கு 'அவ்லியாவே (திரும்பி வரமுடியாவிட்டாலும்) வந்து சொல்லிவிட்டு சென்றால்தான் கேட்பார்களோ?' என்பதுபோல் உள்ளது. ஆதாரங்கள் குறிப்பிடாவிட்டாலும் வித்தியாசமான விழிப்புணர்வு பதிவு!
ReplyDelete//விரக்தி பெருமூச்சுடன்...// உண்மையிலேயே அவர்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துவிடப் போகிறார்கள் சகோ :))