அன்றுவியட்நாமை வல்லரசுகள் ஆக்கிரமித்த போது எதிர்த்து நின்ற பெண் சிங்கம் |
இன்று அதே வியட்நாமில் மேற்கத்திய சூழலில் வளர்ந்து ஆடாக மது சுமக்கும் மாது |
ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்சிங்கம் ஒன்று இரைத்தேடி ஆட்டு மந்தைகளுக்கு ஊடாக பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆடுகள் விலக பெரும்பாறையொன்றில் மோதி இறக்கும் தருவாயில் குட்டி சிங்கம் பிறந்து விட்டது. தாய் இல்லாமல் விடப்பட்ட அந்த சிங்கம் ஆட்டுமந்தையில் ஆடுகளோடு ஆடாக வளர ஆரம்பித்தது. ஆடுகள் தின்னும் உணவைத் தின்று, அவைகள் போன்றே பயந்து, ஆட்டுக்குரல் போன்றே சன்னமாக கத்தி மேய்ப்பானிடம் அடி வாங்கி வளர்ந்து வந்தது.
அப்பொழுது ஒரு நாள் பெரிய சிங்கம் ஒன்று இரைக்காக அந்த ஆட்டு மந்தை மீது பாய்கிறது. ஆடுகள் எல்லாம் பயந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓட ,அந்த குட்டி சிங்கமும் ஓடுகிறது. இதைப் பார்த்த இரைத் தேடி வந்த சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஆடுகள் ஓடுவது சரி இவன் ஏன் ஓடுகிறான்?
இரையை விட தனது கேள்விக்கான பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆடுகளை விட்டு விட்டு அந்த குட்டி சிங்கத்தை பாய்ந்து பிடிக்கிறது.
"ஏய் நீ ஏன் என்னை பயந்து ஓடுகிறாய்? நீ சிங்கம் என்னைப் போல் ஒருவன்."
"இல்லை நான் ஆடு அவர்களோடு தான் வளர்ந்தேன் அவர்களின் உணவைத்தான் தின்கிறேன் நான் சிங்கமல்ல ஆடு."
"ஸ்ஸ்ஸ்... சொன்னா கேளு! நீ சிங்கம் ஆடுகளோடு சேர்ந்து ஓடி என்னை அசிங்கப்படுத்தாதே!
சரி நான் சிங்கம் என்பதற்கு என்ன ஆதாரம்?
இங்கே குளத்துக்கு பக்கம் வா தண்ணீரில் உன் முகத்தை பாரு என் முகத்தை பாரு ஒரே மாதிரி இருக்கா?
எங்கே என்னை மாதிரி கர்ஜனை செய்? ம்ம் அது.
கதை சொல்லும் நீதி
"வரதட்சணை வாங்குவது கேவலம் வாங்காதே! நீ சிங்கம்" என்று சொல்லும் போது இல்லை சீர், வீடு, பைக், வாங்கி கொடுப்பது எங்க ஊர் வழக்கம் என்று நண்பர்கள் ஆடுகளாக விலை போகும் போதும்,
"ஏங்க உங்க பெண்ணுக்கு வரதட்சனை கொடுக்குறீங்கே?" என்று கேட்டால் "இல்ல தம்பி கொடுக்கவில்லை என்றால்பொண்ணு கரையேறாது" என்று பெண் சிங்கங்கள் சொல்லுவதை கேட்கும் போதும்,
தர்ஹா,சமாதிவழிபாடு,சந்தனக்கூடு,தயத்து போன்ற விஷயங்களை எங்களின் முன்னோர்கள் செய்தார்கள் அதனால் நாங்களும் செய்கிறோம் என்று தர்ஹாவதிகள் சொல்லும் போது.
"கீழ்ஜாதி என்று தன்னை நினைத்துக் கொள்கிற நண்பன் ஆதிக்க சாதீக்காரர்களை பார்த்து தாழ்வுமனப்பான்மையுடன் ஒதுங்கும் போதும்,
பகிர்வுக்கு நன்றி மாப்ள!
ReplyDeleteகதை சொல்லும் நீதி அருமை அண்ணா
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிங்கங்கள் நான் நினைத்துக் கொண்டிருந்தவை ஆடுகள் என பிறகுதான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஇப்படிக்கு
ஒரு உண்மையான சிங்கம்
கதை சொல்லும் நீதி நல்லா இருக்கு.
ReplyDelete@suryajeeva
ReplyDeleteநன்றி நண்பரே
@விக்கியுலகம்
ReplyDeleteவருகைக்கு நன்றி மாப்ளே
@ஆமினா
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி!
@bandhu
ReplyDeleteவருகைக்கு நன்றி
@மஸ்தூக்கா
ReplyDelete//ஒரு உண்மையான சிங்கம்//
சில நேரங்களில் சில சிங்கங்கள்..
@Rathnavel
ReplyDeleteநன்றி ஐயா
@Lakshmi
ReplyDeleteநன்றி
ஆம் சகோ! ஆடுகளாக திரியும் மனங்களுக்கு எடுத்துறைக்கும் அருமையான நீதிக்கதை... பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteசிங்கவேடமிட்டு கர்ஜித்துக் கொண்டிருக்கும் நரிகளையும் சற்று அடையாளம் காட்டுங்களேன் சகோதரரே.
ReplyDeleteசிங்கவேடமிட்டு கர்ஜித்துக் கொண்டிருக்கும் நரிகளையும் சற்று அடையாளம் காட்டுங்களேன் சகோதரரே.
ReplyDelete