Monday, October 8, 2012

லேப்டாப் வைத்திருந்தால் பயங்கரவாதியா?

சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்ட செய்தி ஆகஸ்ட் 30 வியாழன் அன்று வெளிவந்தது. அதற்கு முந்தைய நாள் (புதன்) பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது இவர்களைக் கைது செய்தோம் என காவல்துறை கூறியது. ஆனால், சில நாட்களுக்கு முன்பே சாதாரண உடையில் வந்த சிலர் இவர்களை அழைத்துச் சென்றனர் எனவும், இது குறித்துப் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்தே கைது விவரத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர் எனவும்  அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்குப் பிறகு, ஊடகங்கள் வழக்கம் போன்று உச்சக்கட்ட கற்பனைக் கதைகள் பலவற்றை புனைந்து வெளியிட்டன. ஹூப்ளி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து மேலும் சிலர் கைது செய்யபட்டனர்.
                                தினமலர் என்கிற தினமலத்தின் உச்சக்கட்ட அவதூறு

கைது செய்யப்பட்டவர்களில் அஹ்மத் மிர்சா என்பவர் நாட்டின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான டி.ஆர். டி.ஒ.வின் பொறியாளர் ஆவார். முதீஉர் ரஹ்மான் சித்தீகி, டெக்கன் ஹெரால்டு ஆங்கில நாளிதழின் கட்டுரையாளர் ஆவார். டாகடர் நயீம் சித்திகீ நாட்டின் முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனமான திலி ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் முதுகலை மாணவர் ஆவார். கைதான மற்றவர்களும் இதே போன்று உயர்கல்வி பயின்று வரக்கூடிய மாணவர்கள்.

கர்நாடகாவின் முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்யும் நோக்கோடு லஷ்கரே தய்யிபா, ஹுஜி ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இவர்கள் சதித்திட்டம் தீட்டி வந்தனர் என காவல்துறை கூறுகிறது. இதற்கு ‘ஆதாரமாக’ சில பொருள்களையும் அது கைப்பற்றியதாம்!?.மடிக்கணினி 2, சிம் கார்டுகள் 8 , புத்தகங்கள் 7, ஈரான், இந்தியா, சீனா ஆகியவற்றின் வரைபடங்கள், இருசக்கர வாகனம் 1, சில ஆயிரம் ரூபாய்கள், 1 கத்தி. முஸ்லிம் மாணவர்களைக் கைது செய்ய இந்தப் ‘பயங்கர’ ஆயுதங்கள் போதாதா?

பெங்களூர் போன்ற தகவல் தொழில்நுட்ப நகரத்தில் மடிக்கணினி இல்லாத மாணவர்கள் உண்டா? கூகுள் தேடுதலில் இந்தியா, சீனா என டைப் செய்தால் அந்நாடுகளின் எல்லா வகையான வரைபடங்களும் தகவல்களும் எளிதாக, யாருக்கும் கிடைக்கும் என்றிருக்கையில், இவற்றைத் தீவிரவாதக் கருவிகளாகச் சித்தரிக்கும் அறிவீனம் காவல்துறைக்கு இருக்கலாம். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் என நாம் கருதுகின்ற தேசிய நாளிதழ்கள் கூட அவ்வாறு கூறுவது அநாகரிகமானது.

சேரிகளிலும், காலனிகளிலும் வசித்துவந்த ஏழை முஸ்லிம் இளைஞர்கள் தாம் இதுவரை கைது செய்யப்பட்டு வந்தனர். அப்போதெல்லாம், இவர்களுக்குக் கல்வியறிவு இல்லாததால் ‘சமூக விரோத’ சக்திகளின் வலையில்  விழுந்துவிட்டனர் எனும் கருத்துருவாக்கத்தை அறிவுஜீவிகளும் ஊடகங்களும் ஏற்படுத்தினர். இன்று கதை மாறிவிட்டது. இந்த சமூகத்திலிருந்து தன்னம்பிக்கையும், கல்வியறிவும் பெற்ற புதிய தலைமுறை உயர்ந்து வருகின்றது. ஆனால் அனைவரும் பயன்படுத்துகின்ற மடிக்கணினியையும் கைப்பேசிகளையும் அவர்கள் பயன்படுத்தினால் அவை தேசவிரோத, தீவிரவாதச் செயல் என இப்போது சித்தரிக்கப்படுகிறது.

பின்குறிப்பு:
" நாங்கள் மடிக்கணினியையும் கைப்பேசியையும் புத்தகங்களையும் வைத்திருக்கும் பதிவர்கள் எங்களையும் சிறையில் அடையுங்கள்”
மடிக்கணினி வைத்திருக்கும் எனது புகைப்படம்

எனது நூலகத்தின் ஒரு பகுதி புத்தகங்களும் இருக்கு

கைது செய்தபிறகு தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள் என்று டேபிளில் அடுக்கி வைக்கும் சிரமமும் உங்களுக்கு இல்லை நானே அடுக்கி வைத்திருக்கிறேன் டேக்கிட்.

வாங்க சார் வந்து புடிச்சு உள்ளே போடுங்க சார்.

35 comments:

 1. தோழரே.
  சங்க்பரிவாரும், ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும், பகிங்கரமாக தீவிரவாத பயிர்ச்சி அளிக்கிறான், அவன் குற்றமெல்லாம் நிரூபிக்கப்படுகிறது..ஆனால் பத்திரிகை விபச்சாரர்களும், ஊடக பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள் பிக்பாகெட் கேசில் பிடிபட்டால் கூட தீவிரவாத முத்திரை குத்தி பரபரப்பூட்டி சம்பாதிக்கிறார்கள்..

  http://marmayogie.blogspot.in/2010/09/blog-post_29.html

  நான் முன்பே பதிவிட்டிருந்த இந்த பதிவை பாருகளேன்..

  ReplyDelete
  Replies
  1. vuoooodagangalai kaikkul pottukkondu appavikalai appurappaduthaninaikkum engalnattu drokikale(sangbarivar)ethu ungalukku alivu than unmaiyai oru pothum maraikka mudiyathu ...

   Delete
 2. சலாம் சகோ. அருமையான பதிவு. மாஷா அல்லாஹ்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
  முஸ்லிம் சமூகம் குறித்து பொதுவெளியில் அரசு இயந்திரமும், ஊடகங்களும் உருவாக்கி வைத்திருக்கும் அசிங்கமான பிம்பத்தின் மற்றுமொரு பகுதியை இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நிஜமான தீவிரவாதிகள் வெளியே உலாவிக் கொண்டிருக்க அப்பாவிகளை உள்ளே தள்ளி நிஜத்திலும் அவர்களை தீவிரவாதிகளாக்க மத்திய மற்றும் மாநிலங்களின் உளவுத்துறைகள் முயற்சி செய்கின்றன.
  ஒரு காலத்தில் இது குறித்து நான் எழுதிய ஒரு கட்டுரையின் தொடுப்பு இது
  http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20907316&format=print&edition_id=20090731
  ஊடகங்கள் மற்றும் அரசு இயந்திரங்கள் என்று தான் மாறப்போகின்றதோ?
  --
  சகோதரத்துவத்துடன்,
  பி.ஏ.ஷேக் தாவூத்.
  (உதிரம் கொடுத்து உயிர் காப்போம். மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)

  ReplyDelete
 4. உண்மையிலேயே மனம் கனக்கிறது. ஒரு கூட்டம் முஸ்லிம்களை அழிக்க நினைக்கிறது, மறு கூட்டம் முஸ்லிம்களை தனிமைபடுத்தி அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற சொல்கிறது.

  ReplyDelete
 5. கைது செய்தபிறகு தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள் என்று டேபிளில் அடுக்கி வைக்கும் சிரமமும் உங்களுக்கு இல்லை நானே அடுக்கி வைத்திருக்கிறேன் டேக்கிட்.

  வாங்க சார் வந்து புடிச்சு உள்ளே போடுங்க சார்.///

  இதை வெறும் வெறுப்பில் வந்த தனி நபரின் வார்த்தையாக பார்க்க முடியவில்லை. இது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் வலி.

  ReplyDelete
 6. என்னிடமும் 2 SIM இருக்கிறாது, என் மகனிடம் பள்ளியில் கொடுத்த உலக வரைபடமும் இந்தியா வரைபடமும் இருக்கிறாது, பத்து செல்களும், 15 மேற்பட்ட புத்தகங்களும். மின்சார வேலைக்குகாக 1 கயில் ஓயரும் மற்றும் பழைய பைய்ப்புக்கள் இருக்கிறாது, வந்து என்னை புடிச்சு உள்ளே போடுங்க கொய்யலா தினமலம்

  ReplyDelete
 7. நம் நிலையை நினைத்தால் உண்மையில் ரொம்ப வேதனையாக உள்ளது... எப்பொழுது மாறும் இந்த இழி நிலை...

  ஐந்தறிவு ஜீவனுக்கு கொடுக்கும் மதிப்பும், கருணையும் கூட முஸ்லிம்களுக்கு கொடுக்க யோசிக்கிறார்கள்...

  உண்மையில் யார் குற்றம் செய்கிறார்கள், யார் குற்றவாளி என்று அனைவருக்கும் தெரியும்....

  ReplyDelete
 8. தீவிரவாத இயக்கங்களுக்கு,

  இந்திய முஜாஹிதீன், டெக்கான் முஜாஹிதீன், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில்,

  என பல கற்பனைப்பெயர்களை சூட்டி மகிழ்ந்து வந்த இந்திய போலீஸ்,


  தற்போது, தாய்-தந்தை வைத்த பெயரை மாற்றிவிடக்கூடிய அளவுக்கு "பரிணாம வளர்ச்சி"யை கண்டுள்ளது.

  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த கம்யூட்டர் சாப்ட்வேர் இஞ்சினியர் சையத் ஆபாக் இக்பால்(33).

  இவருக்கு பெற்றோர் வைத்த பெயரில், பிறப்பு சான்று, பள்ளி சான்று, கல்லூரி சான்று, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் உள்ள நிலையில்,

  ஹைதராபாத் போலீசும் குஜராத் போலீசும் "கூட்டு சதி"செய்து.

  இவருக்கு "டானிஷ் ரியாஸ்" என கற்பனைப்பெயர் சூட்டி கடத்தல் முறையில் கைது செய்து, 2011 ஜூன் முதல் குஜராத்தின் "சபர்மதி ஜெயிலில்" அடைத்து வைத்துள்ளனர்.


  CLICK >>>> உலக "தில்லு முல்லு" சாதனை: பெற்றோர் வைத்த பெயரை மாற்றும் உரிமை படைத்த இந்திய போலீஸ்! <<<< TO READ
  .

  ReplyDelete
 9. ட்ரீம் லைனர் விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

  தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை


  சென்னையில் சொகுசு விமானமான
  `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

  தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை


  ஆலந்தூர், அக்.4-

  சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சொகுசு விமானமான `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த கேரளா வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா `ட்ரீம் லைனர்' விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 206 பயணிகள் தயாராக இருந்தனர்.

  விமானம் புறப்பட இருந்த நேரத்தில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு இருக்கையில் பயணம் செய்ய இருந்த

  கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அமீத்தாவா (வயது 35), மன்சூர் (24) ஆகியோர்,

  "நாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை'' எனக்கூறி வெளியே செல்ல முயன்றனர்.


  மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பார்த்தனர்.

  அதில் `டரீம் லைனர்' விமானத்தின் அனைத்து பகுதிகளும், விமானி அறைகளும் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார், உளவுத் துறையினர் மற்றும் கிïபிராஞ்ச் போலீசார் வந்து 2 கேரளா வாலிபர்களிடமும் விசாரித்தனர்.

  அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருந்தார்களா? என பயந்து, விமானத்தில் இருந்த 204 பயணிகளையும் கீழே இறக்கி விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.

  அதில் வெடிகுண்டு ஏதுவும் இல்லை என தெரியவந்தது.

  இதையடுத்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் 13/4 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு `ட்ரீம் லைனர்' விமானம் புறப்பட்டு சென்றது.

  கேரளா வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில்,

  மன்சூர், சுற்றுலா நிர்வாக துறையில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும்,

  அமீத்தாவா கொச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

  இவர்கள் ஏன் `ட்ரீம் லைனர்' விமானத்தை புகைப்படம் எடுத்தனர்?.

  இவர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


  SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=762532&disdate=10/4/2012


  நூற்றுக்கணக்கான இணையதளங்களில் `ட்ரீம் லைனர்' விமானத்தை பற்றிய அனைத்து விபரங்களும்.


  விரிவாக `ட்ரீம் லைனர்' விமானத்தின் அனைத்து உட்பகுதிகளின் புகைப்படங்களும் காணொளிகளும் ஏர் இந்தியா `ட்ரீம் லைனர்' உட்பட‌ இருக்கின்றன.

  அதிலொன்று இதோ சொடுக்கி பார்க்கவும்.


  இதோ சொடுக்கி >>>> Air India 787-8 Dreamliner Cabin Walk-through <<<< பார்க்கவும்.


  சொடுக்கி >>>>> Photos and Videos: Air India's Boeing 787-8 Dreamliner cabin interiors revealed பார்க்கவும்.  இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),

  மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள் ?


  ஆயிரக்கணக்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் இமயமலை குவிந்து இருந்தும் கொலைகார அத்வானி, பால் தக்கரே, மோடி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் இஸட் பாதுகாப்புடன் வள‌ர்க்கும் இந்திய அரசாங்கம்

  இந்தியாவில் முஸ்லீம் அப்பாவிகளை எந்த நொண்டிச்சாக்கிலும் கைது செய்யலாம் என்னும் வன் கொடுமையை இதிலிருந்து விளங்கி கொள்ளுங்கள்.  .

  ReplyDelete
  Replies
  1. வாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை

   முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.

   கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில்,

   அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக,

   காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

   எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,

   காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல,

   இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும்

   உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.

   இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.

   இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.

   இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.

   உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை.

   சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.


   SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/


   முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க

   இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில்

   கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.

   .

   Delete
 10. //தினமலர் என்கிற தினமலத்தின் உச்சக்கட்ட அவதூறு//
  தினமலம் பத்திரிக்கை RSS யின் கொள்கை பரப்பு பத்திரிக்கை. தினமலமும் R.S.S. யும் சேர்ந்து எதோ இந்தியவை அழிக்க திட்டம் தீட்டீயிருக்கார்கள், அதற்குத் தான் முதல் கட்டமாக அடுத்தவர்கள் மேல் பழிபோடும் திட்டத்தை இந்த பார்பனா ஊடகாம் செய்துக்கொன்டு இருக்கிறது. 10 நாட்களுக்கு முன் RSS மகளிர் அணியை சேந்தா ஒர் தேத துரோகி இந்தியவின் அணு ஆராய்சி களகத்தில் போலி பெயரில் சென்று இந்தியவின் லேட்டாசு டெக்கினாஜியை திருடிவிட்டு போனது. ஒன்று அல்ல இரு மாதம் சென்றால் திருடியா டெக்கினாஜியை பயண்படுத்தி எதாவது அழிவை ஏற்படுத்தி மறுபடியும் அப்பாவிகள் மேல் பழிபோட தினமலம் அடுத்த திட்டம் வகுத்துக்கொண்டு இருக்கும்

  ReplyDelete
 11. முஸ்லிம் பெயர் இருந்தால் மட்டும் போதும்....வேறு எதுவும் தேவை இல்லை குற்றவாளி என அடையாளப்படுத்த....!இந்த அவல நிலை எப்ப மாறும்!!

  ReplyDelete
 12. தங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

  அரசு-புலனாய்வு இலாகா-ஊடகம்-காவல்துறை-நீதித்துறை இவற்றில் ஊடுருவி உள்ள ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு தெரிந்த வேலை இதுதான்..! இந்த சதிக்கூட்டத்துக்கு டிகிரி படிச்ச வாலிப வயதான வெங்காய வியாபாரியை பயங்கரவாதி ஆக்க சொன்னால் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போட்டோவுடன் எழுதி தள்ளுவார்கள்.

  ஆனால், சமீபத்தில் இஸ்ரோவில் உள்ளே புகுந்த மர்ம பெண் முஸ்லிம் இல்லாததால் அவரை பைத்தியம் என்று ஒரே போடாக போட்டு கேசை மூடி விட்டார்கள்..! உண்மையில், ஒரு முஸ்லிம் பைத்தியம் உள்ளே சென்று இருந்தால் அது, "இஸ்ரோவில் அல் கொய்தா பயங்கரவாதி கைது-இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் அச்சுறுத்தல்-இவருக்கு உதவி புரிந்த எட்டு இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது...(இவர்கள் பைத்தியத்தின் குடும்பத்தினராக இருக்கலாம்)" என்றெல்லாம் பல தலைப்புகளில் பரபரப்பு நியூஸ் ஒரு மாசத்துக்கு எல்லா மீடியாவிலும் வந்து இருக்கும். நம்ம பதிவர்களும், 'இந்த முஸ்லிம்களே இப்படித்தான்' என்று சூடான எட்டு ஹிட் பதிவு போட்டு கல்லா கட்டி இருப்பார்கள்..! ச்சீய்.... இதெல்லாம் ஒரு பொழப்பா..!

  ReplyDelete
 13. அன்புள்ள 'இஸ்லாமிய பயங்கரவாதி' ஹைதர் அலி அவர்களுக்கு....

  உங்களை விட நான் பெரிய பயங்கரவாதியாக்கும்..! உங்க கிட்டே உள்ள ஆயுதங்களுடன் சேர்த்து... நான் ஒரு ப்ளாஷ் மெமோரி, சில சிடிக்கள், சில டிவிடிக்கள், ப்ளூடூத் டிவைஸ், பிசி,கீ போர்ட், வெப் கேம், ஹெட் செட், மவுஸ், மவுஸ் பேஸ்ட் எல்லாம் வச்சி இருக்கேனே.

  இதுமட்டுமா..? மேலும், என்னிடம் இந்திய, இலங்கை வரைபடம் மட்டுமல்ல... ஒட்டு மொத்த உலக வரைபடமும் மட்டுமல்ல... இந்த சோலார் பேமிலி, கேலக்ஸி, அண்டம் மற்றும் பல்லண்டம் வரை படமெல்லாம் கூட இருக்கு...!

  அதைவிட... முக்கியமாக என் கிச்சனில் மூணு கத்தி இருக்கு தெரியுமா..! பாத்ரூமில் நாலு டோபாஸ் பிளேடு, சைனா கத்திரிக்கோல் எல்லாம் வச்சி இருக்கேன்..!

  இவ்வளவு பயங்கர ஆயுதங்கள் வச்சி இருக்கும் நானே எவ்வளவு அமைதியா அடக்கி வாசிக்கிறேன்..! என்னை கம்பேர் பண்ணினால்... நீங்க எல்லாம் சும்மா.. ஜுஜுபி..! இப்படி படம் எல்லாம் போட்டு ரொம்ப ஆடாதிங்க..! கொஞ்சம் அடங்குங்க..!

  அப்புறம் நானும், "என்னிடம் உள்ள பயங்கர ஆயுதங்கள் (Photo Gallery)" என்று ஒரு பதிவு போட வேண்டி இருக்கும்..! சொல்லிட்டேன் ஆமா..!

  ReplyDelete
 14. அநியாயமாக குற்றம் சாட்டுவதில் இருக்கும் வேகம், இவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படும் பொழுது இருப்பதில்லை இந்த மீடியாக்களிடம். இதன் காரணமாகத்தான் முஸ்லிம் என்றாலே குண்டு வைத்து கொல்பவன் என்னும் மாயத்தோற்றம் வலையுலைகையும் ஆட்கொண்டுள்ளது. அதுதானே அவர்கள் எதிர்பார்த்தது.

  ReplyDelete
 15. சலாம் சகோ.ஹைதர் அலி

  ///உங்களை விட நான் பெரிய பயங்கரவாதியாக்கும்..! உங்க கிட்டே உள்ள ஆயுதங்களுடன் சேர்த்து... நான் ஒரு ப்ளாஷ் மெமோரி, சில சிடிக்கள், சில டிவிடிக்கள், ப்ளூடூத் டிவைஸ், பிசி,கீ போர்ட், வெப் கேம், ஹெட் செட், மவுஸ், மவுஸ் பேஸ்ட் எல்லாம் வச்சி இருக்கேனே.

  இதுமட்டுமா..? மேலும், என்னிடம் இந்திய, இலங்கை வரைபடம் மட்டுமல்ல... ஒட்டு மொத்த உலக வரைபடமும் மட்டுமல்ல... இந்த சோலார் பேமிலி, கேலக்ஸி, அண்டம் மற்றும் பல்லண்டம் வரை படமெல்லாம் கூட இருக்கு...!

  அதைவிட... முக்கியமாக என் கிச்சனில் மூணு கத்தி இருக்கு தெரியுமா..! பாத்ரூமில் நாலு டோபாஸ் பிளேடு, சைனா கத்திரிக்கோல் எல்லாம் வச்சி இருக்கேன்..!

  இவ்வளவு பயங்கர ஆயுதங்கள் வச்சி இருக்கும் நானே எவ்வளவு அமைதியா அடக்கி வாசிக்கிறேன்..! என்னை கம்பேர் பண்ணினால்... நீங்க எல்லாம் சும்மா.. ஜுஜுபி..! இப்படி படம் எல்லாம் போட்டு ரொம்ப ஆடாதிங்க..! கொஞ்சம் அடங்குங்க..! ///

  மாட்டிகொண்டார் முகம்மத் ஆஷிக்... இதை அப்படியே ஸ்க்ரீன் சாட் எடுத்து "கக்கூஸ் பிரான்ச்" க்கு அனுப்ப போகிறேன்... யாருகிட்ட,....

  நன்றியுடன்
  நாகூர் மீரான்

  ReplyDelete
 16. இந்த பயபுள்ளைங்க ஐ ஏ எஸ் , ஐ பி எஸ்ன்னு என்னத்தை படிச்சுட்டு வந்ததுன்னு இந்த மாதிரி நியூஸை படிக்கும் போதே தெரியலையா..? மகா கேவலம் ..!! எம் பி , அமைச்சர் வீட்டுக்களுக்கு செக்யூரிட்டி கார்டுக்குதான் லாயக்கு போல .

  ReplyDelete
 17. PART 1. மனிதம் காலி மிருகம் மீதி

  முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப் பட்ட தீவிரவாதத்தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படு கொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

  அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமேஇருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே விடுதலைபெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை 1948 ஜனவரி 20லிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.


  நோயாளியை ஒழித்துவிட்டால் நோய் ஒழிந்துவிடும் என்ற இந்தக் குரலை ஜெர்மனியில் கேட்டிருக்கின்றோம்.

  இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக ஒரு சர்வதேசிய அரசியலைத் தொடங்கி கட்டமைக்கவேண்டிய கட்டாயம், குறிப்பாக 1908இல் இரானில் முதன் முதலாக பெட்ரோலியஎண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவால் தொடங்கிவைக்கப்பட்டது என்ற புள்ளியிலிருந்து பயணித்தால் உலகளாவிய பயங்கர வாதத்தின் வேரைகண்டடைய முடியும்.

  இந்த சர்வதேச அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின்ஒரு பகுதியாக, அதை நோக்கி நகர்த்திச் செல்லும் இயக்கக்கூறுகளாக உள்ளூர்அரசியல் இருக்கிறது.

  உள்ளூர் தீவிரவாதம்மேற்படி சர்வதேச தீவிர வாதத்தின் உள்நோக்க அரசியலுடன் பின்னிப் பிணைந்தது.


  உலகின் மொத்த பெட்ரோலிய வளத்தின் 80% அரபுப் பிராந் தியத்தில் புதைந்துள்ளது.

  இந்த உண்மையை உணர்ந்திடாத அரபு ஷேக்குகளும் சுல்தான்களும் அமீர்களும் அந்தஅளப்பரிய செல்வத்தை சுரண்டிப்போக அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டிஷ் மேற்கத்தியநாடுகளின் எண்ணெய்க் கம்பெனிகளை கட்டுப்பாடின்றி அனுமதித்தனர் என்பது தான்துயரமான வேடிக்கை.

  இந்தக் கம்பெனிகள் பெயருக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டு (ஒரு பேரலுக்குமுக்கால் டாலர்!), உலகெங்கும் கொள்ளை லாபத்துக்கு எண்ணெயை விற்று கோடிக்கணக்கில் டாலர்களைக் குவித்தன. ஆனால் இந்த செல்வத்தின் பிறப்பிடமானஅரபுநாடுகளோ சமூக-பொருளாதார வாழ்வில் பின் தங்கி ஏழைகளாக இருந்தன என்பதைஇப்போது நம்புவது கடினமே.


  இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகளாவிய தேசிய உணர் வும் சோசலிசத்தின்எழுச்சியும் அரபுநாடுகளிலும் தேசிய விடுதலை உணர்வுகளைத் தூண்டியது.

  இரானில்இந்த எழுச்சி மேலோங்கியபோது பெட்ரோலிய வயல்கள் தேசிய மயமாக்கப்பட்டன.

  இரான் தேசியத்தலைவர் மொசாதிக் இதற்கு தலைமை தாங்கினார். தமது கல்லாப்பெட்டியின் கொழுத்தபகுதியில் அடிவிழவே அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள்இந்த தேசியமயமாக்கலுக்கு தடைகளை ஏற்படுத்தின.

  இரானின் சுதந்திரமானஎண்ணெய் வர்த்தகத்தை கவிழ்த்துவிட பலவகையிலும் ஈனச் செயல்களில் இறங்கினர்.

  பிரிட்டிஷ் கப்பல்கள் இரானின் எண்ணெய்க் கப்பல்களை கடலில் தடுத்தன.

  உச்சகட்டமாக மொசாதிக் கின் ஆட்சியைக் கவிழ்த்து அவரையும் கொலை செய்தனர்.

  தனது கைக்கூலியான மன்னன் ஷாவின் பொம்மை அரசை அமெரிக்கா நிறுவியது.

  ஒருகட்டத்தில் இவனும் தேசிய இயக்கத்தின் பேரெழுச்சி அலையில் குடும்பத்தோடுஅமெரிக்காவுக்கு ஓடினான். ஏகாதிபத்திய கெடுபிடிகள் அனைத்தையும் மீறி அரபுதேசியம் வளர்ந்தது. இரானைத் தொடர்ந்து அரபுநாடுகள் அனைத்தும் தமதுஎண்ணெய்வளத்தை தேசியச்சொத்தாக பிரகடனம் செய்தன.

  வழக்கம் போலவே அமெரிக்காவும் அதன் சக கொள்ளையர்களும் இந்த நாடுகளைதொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தனர். அன்றிருந்த சோவியத் ரஷ்யா மட்டுமேஅரபுநாடுகளுக்கு துணையாக நின்றது.

  ஒரு பேரலுக்கு கேவலம் முக்கால் டாலர் என்றநிலை மாறி 30 டாலருக்கு அரபுநாடுகள் விற்கத் தொடங்கின.

  எண்ணெய் ஏற்றுமதிநாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) உருவாகி எண்ணெய் விலையைநிர்ணயிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்தது.

  வரலாற்றில் முதல்முறையாக அரபு மண்ணின் மக்கள் தமது சொந்த செல்வத்தின் மதிப்பை உணர்ந்து அனுபவித்தனர். செல்வம்குவிந்தது, ஏகாதிபத்தியத்தின் கல்லாப்பெட்டி அரசியலில் பெரும் அடி விழுந்தது.


  CONTINUED …

  ReplyDelete
 18. PART 2. மனிதம் காலி மிருகம் மீதி


  தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்று கொண்டிருந்த ஏகாதிபத்தியங்களும் ஐரோப்பிய நாடுகளும் அரபுநாடுகள் சொன்ன விலைக்கு எண்ணெயை வாங்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாயின.

  அரபுநாடுகள் இதன் பின்னரே இன்று நாம் காணும்செழிப்புநிலையை அடைந்தன.


  ஏகாதிபத்தியங்களின் பிறவிக்குணமான பிரித்தாளும் சூழ்ச்சியில் அமெரிக்கா இறங்கியது.

  இரான்-இராக் மோதல், எகிப்து-சிரியா மோதல், சிரியா-லெபனான் போர்,லெபனானில் கிறித்துவர்-முஸ்லிமிடையே கலவரங்கள், இஸ்ரேல்- பாலஸ்தீனமோதல், குவைத், இராக், இதர அரபுநாடுகளுக்கு இடையே தொடர்ந்து போரும்பதட்டமும் என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் சூழ்ச்சி அரசியலே நிலையாகஇருக்கின்றது.

  இத்தகைய சூழ்ச்சி அரசியலின் பின்னணியில் அரபுப் பிராந் \தியத்தில்தனக்கு ஒரு வேட்டைநாயாகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டை அமெரிக்கா நிறுவியது.

  தியோடர் ஹெர்ஸ் என்ப வரின் யூத இனவெறிக் கோட்பாடான ஜியோனிச சித்தாந்தத்தின் அடிப்படையில், இஸ்லாமியரது நாடான பாலஸ்தீனம் 1948ல் அமெரிக்கஆதரவுடன் பிளக்கப்பட்டு இஸ்ரேல் என்ற புதிய தேசம் 'உருவானதாக'அறிவிக்கப்பட்டது!

  பாலஸ்தீன மக்களோ ஜோர்டான், சிரியா, லெபனான், எகிப்து ஆகியநாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

  1948 முதல் 1956,1967, 1973, 1982 என தொடர்ந்து எகிப்து,சிரியா, ஜோர்டான், லெப னான், சினாய், கோலன் குன்றுகள், பாலஸ்தீனத்தின் காசா,மேற்குக்கரை என அரபுப்பிராந்தியத்தில் குண்டுவீச்சுக்களை இன்றளவும்நடத்திக்கொண்டு இஸ்ரேல் திரிவதை வரலாறு நிரூபிக்கிறது.


  எகிப்தில் நெப்போலியன் தொடங்கி, அல்ஜீரியா, லிபியா, இரான், இராக், லிபியா,பாலஸ்தீனம் லெபனான் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஒரு நூற்றாண்டுஆக்கிரமிப்பு தனியே எழுதப்பட வேண்டியது.

  கடைசியாக பேரழிவு ஆயுதங்களிருப்பதாகபொய் சொல்லி இராக்கில் நுழைந்த அமெரிக்கப்படைகளின் துணையோடு பாக்தாத்தின் வரலாற்று ஆவணக்காப்பகம், தேசிய அருங்காட்சியகம், தேசிய நூலகம் ஆகியவை திட்டமிட்டு சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.

  தொன்மையான மெசபடோ மியா, சுமேரியா, அக்காடியா, பாபிலோனியா, அசிரியா, சால்டியா, பெர்ஷியா (இரான்), கிரிஸ்,ரோம், அரபு வம்சங் கள் ஆகிய நாகரீக, கலாச்சார சின்னங்களின் மிகப்பெரும் அரிய சேமிப்புக்களுடன், உலகின் முதல் சட்ட விதிகளின் தொகுப்பு என்று கருதப்படும் ஹமுராபி சட்ட வரைவுகளின் அசல் சுவடிகள், உலகின் ஆதிப்பழமையான எழுத்து வடிவங்களான குனிபார்ம் எழுத்துச்சுவடிகள், பாடல்கள், வாய் பாடுகள், சுடுகளி மண்சுவடிகள்..என இந்த அருங்காட்சியகத்தில் இருந்த செல்வங்களின் மதிப்பு அளவிடற்கரியது.

  இராக்கிலும் ஆப்கனிலும் நுழைவதற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்ததுதான்.

  "அரபுப் பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தைக் கபளீகரம் செய்வது,எடுக்கின்ற எண்ணெயை எந்த வழியாக தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவந்து ஸ்டாக் செய்வது, விற்பது" என்ற இரு அஜெண்டாக்களின் மீதுதான் இராக்+ஆப்கன் (உள்ளே நுழைவதற்கான) போர் தொடங்கப்பட்டது.


  வளைகுடா நாடுகளின் எண்ணெய், எரிவாயுவை ரஷ்யா வழியாகவோ இரான் வழியாக பாரசீக வளைகுடாவுக்கு தரை மார்க்கமாகவோ எடுத்துவர அமெரிக்கா விரும்பவில்லை.

  ஆனால் மூன்று மாற்றுத் திட்டங்களை அது வைத்திருந்தது.

  அஜர்பைஜான், ஜார்ஜியா,துருக்கி வழியாக மேற்கே மத்திய தரைக்கடல் பகுதிக்குக் கொண்டுவருவது; அல்லது கஜக்ஸ்தான், சீனா வழியாக கிழக்கே பசிபிக் பகுதிக்கு கொண்டு வருவது;

  ஆனால் துர்க்மேனிஸ்தான் தொடங்கி மேற்கு ஆப்கன், பாகிஸ்தான் வழியே இந்தியப்பெருங்கடல் வந்த டையும் மூன்றாவது வழியே உகந்தது என்று அமெரிக்கா முடிவுசெய்தது.

  எனில் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசமாக ஆப்கனை மாற்றியமைக்கவேண்டும்.

  அதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த போது தான்அமெரிக்காவால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட பின்-லேடனும் அல்-காய்தாவும் உலகவர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஒரு வழியைத் திறந்துவிட்டார்கள்.

  இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணத்தைப் பரப்பி அமெரிக்கா இராக்கில் நுழைந்தது, சதாம் உசேனையும் கொன்றது, இராக்கில் எண்ணெய் எடுக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது.


  CONTINUED ..

  ReplyDelete
 19. PART 3. மனிதம் காலி மிருகம் மீதி


  அல்-காய் தாவை ஒழிப்பதாகச் சொல்லி ஆப்கனில் நுழைந்தது.

  9/11 தாக்குதலை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தும், தனது மக்கள் ஆயிரக்கணக்கில் சாவார்கள் என்று தெரிந்திருந்தும் தாக்குதலை அனுமதித்தது.

  காரணம் எண்ணெய் அஜெண்டாதான்.

  இதற்கான ஆதாரங்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

  அரபுப் பிராந்திய இஸ்லாமிய மக்களின் கோபத்தைத் தூண்ட முக்கிய காரணமாக இருப்பது, தங்கள் மண்ணில் உள்ள பெட்ரோலியத்தை அமெரிக்க, ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள், சுரண்டி எடுப்பதுமட்டுமல்ல.

  தங்களின் நீண்ட பாரம்பரிய மத, கலாச்சார வாழ்வையும் பாரம்பரிய அடையாளச் சின்னங்களையும் அழித்ததை, தங்கள் மதத்தின், கலாச்சாரத்தின் மீதானபடையெடுப்பாக, இன அழிப்பாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.


  அமெரிக்காவிலும் அதன் சகாக்களின் மண்ணிலும் இருக்கின்ற பெட்ரோலிய வளம் வெகுவிரைவில் வற்றிவிடும் என்று கண்டறியப்பட்டுள்ள முக்கியமான பின்னணியில் மட்டுமே அரபுப்பிராந்தியத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களின் ஆர்வம்,ஆதிக்கம், கெடுபிடி அரசியல், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' ஆகியவற்றை ஆய்வுசெய்யவேண்டும்.

  உலகின் மிகப்பெரும்பான்மை பெட்ரோலியவள நாடுகளை தனதுகாலடியின் கீழ் கொண்டு வருவதன் மூலம், உலக அரசியல்-பொருளாதாரத்தின் அச்சையே தன்னால் கட்டுப்படுத்த முடியும்,

  தான் விரும்பிய திசைக்கு நகர்த்த முடியும் என்ற ஏகாதிபத்திய அரசியல் தான் அமெரிக்காவின் நவீனகால கெடுபிடி அரசியலின்மையப்புள்ளி.

  இந்த மையப்புள்ளியில் இருந்து பிறழ்ந்து "அரபுப்பிராந்திய அரசியல்+அமெரிக்கா+உலகளாவிய பயங்கரவாதம்" என்ற அரசியலை ஆய்வு செய்வது,தன்னை ஏமாற்றிக்கொள்வது அல்லது பிறரை ஏமாற்றுவது ஆகிய இரண்டில்ஒன்றாகவே இருக்கும்.


  இந்தியாவின் பயங்கரவாதம் உண்மையில் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவேதொடங்கிவிட்டது.

  அதன் உச்சகட்டம் தான் பிவினையின் போது வடக்கு,வடமேற்குப்பகுதிகளிலும் பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள்.

  இந்த வகுப்புக் கலவரங்களில் ஆர்.எஸ்.எஸ்.இன் கைகள் இருந்ததை அதன் வரலாறு அம்பலப்படுத்துகிறது.

  ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள்,விஷ்வ இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங்கள்தான் விடுதலைபெற்ற இந்தியாவில் தீவிர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன என்ற உண்மையைப் பேசாமல் இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமைபெறாது.

  முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் நன்கு திட்டமிடப் பட்ட தீவிரவாதத்தாக்குலானது ஒரு தனிநபர் மீதான படு கொலையே, அதை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

  அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படுகொலைக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். எனவே விடுதலைபெற்ற இந்தியாவின் பயங்கரவாதத்தை1948 ஜனவரி 20லிருந்து பேசத்தொடங்குவதுதான் சரியாக இருக்கும்.

  ஜனவரி 30 அன்று கோட்சே நிறைவேற்றினான்.

  அன்றைக்கு கோட்சே செய்திருந்த ஆண்குறித்தோல் நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்யப் போகிறதுஎன்பதை அறுதியிட்டுச் சொல்வனவாக இருந்தன.

  அவர்களது நோக்கம்: சர்வதேசஅளவில் கவனத்தைப் பெற்ற, காலமெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம்,

  இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில்முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது,

  அனைத்து மத மக்களையும் 'முஸ்லிம் பயங்கரவாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது.

  மருத்துவமனையின் உள்ளேயிருந்து ஒருவன் ஓடி வந்து, "காந்தியை முஸ்லிம்ஒருவன் சுட்டுவிட்டான்" என்று கூச்சல் போட்டதும், அவனை ஜவஹர்லால் நேரு பற்றி இழுத்து கன்னத்தில் அறைந்து "முட்டாள், காந்தியை சுட்டது ஒரு இந்து" என்று சொன்னதும்,

  தொடர்ந்து வானொலியில் அதை அறிவித்து மிகப்பெரும் மதக்கலவரத்தை தவிர்த்ததும் வரலாற்று உண்மை.


  CONTINUED …

  ReplyDelete
 20. PART 4. மனிதம் காலி மிருகம் மீதி

  பயங்கரவாதத்தை, அதுவும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஊளையிடும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட

  1948 ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள்.

  இனிமேலும்பேசமாட்டார்கள்.

  நமது பாடப்புத்தகங்களில் கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்" என்ற ஒற்றைவரியோடு காந்தியின் வரலாறு அல்லது கதை முடிந்து போவது தற்செயலான ஒன்றல்ல.

  விடுதலை பெற்ற இந்தியாவின் மிகப்பெரும் திட்டமிடப் பட்ட,ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதமாக 1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கொலைவெறித் தாண்டவமும்,

  இந்திய ஜனநாயகத்தின் தூண்கள், உத்திரங்கள், ஜன்னல்கம்பிகள் என்று வர்ணிக்கப்படும் இந்திய ஊடகங்கள், 1992இக்குப் பிறகு, (தூர்தர்ஷன், ஆல் இந்தியாரேடியோ போன்ற அரசு ஊடகங்கள் உட்பட) அயோத்தி பற்றிக் குறிப்பிடும்போது 'சர்ச்சைக்குரிய' என்ற சொல்லை சிறிதுகாலம் பயன்படுத்தி வந்தன.

  ஆனால் இப்போதெல்லாம் ராமர்கோவில் என்றே ஊடகங்களில் சொல்லாடப்படுவது, கோட்சேவை 'மறந்தது' போன்ற மறதியா, திட்டமிட்ட ஒன்றா?

  இது ஊடகபயங்கரவாதமா ஊடக ஜனநாயகமா? தெரிந்தவர்கள் சொல்லலாம்.  அயோத்தியைப் போல், குஜராத்தில் அந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது பா.ஜ.க.முதல்வர் நரேந்திரமோடி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், கூடவே மாநில போலீஸ். ஆயிரக்கணக்கில் குப்பையாக அப்புறப்படுத்தப்பட்டனர் முஸ்லீம் மக்கள்.

  பெஸ்ட் பேக்கரி என்ற ரொட்டிக்கடையும் அதினுள்ளே உயிருக்குப் பயந்துஒளிந்து கிடந்தவர்களையும் இந்தக் கும்பல்தான் எரித்துக்கொன்றது.

  இதை நேரில்பார்த்த ஜாஹிரா ஷேக் என்ற இளம் பெண்ணும் அவளுக்காக வாதாட வந்த டீஸ்டாசெதல்வாத் என்ற சமூகப் போராளியும் நாயை விடவும் கேவலமாக அரசு நிர்வாகத்தால் அலைக்கழிக்கப்பட்டனர்.

  ஒருகட்டத்தில் டீஸ்டாவுக்கு எதிராகவே ஜாஹிராவாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு நரேந்திர மோடி அரசு கொடுமைப்படுத்தியது.

  இங்கேதான் வாய்கிழியும் அளவுக்கு ஜனநாயகம் பேசப்படுகின்றது.


  ஆனால் உன்னைப்போல் ஒருவனில் அமானுல்லா "பெஸ்ட் பேக்கரி சம்பவத்தால் நான்தீவிரவாதி ஆனேன்" என்று சொல்வது எத்தனை பொய் வரலாற்று மோசடி!

  2002இல்நடந்த பெஸ்ட் பேக்கரி கொடுமைக்கு பழிவாங்க 1993இல் மும்பையில் அல்லது1998இல் கோவையில் வெடிகுண்டு வைக்கின்றானாம் அமானுல்லா!

  வரலாற்றுச் சம்பவங்களை முன்பின்னாக அடுக்கி 'எடிட்' செய்வதன் மூலம் வரலாற்றைச்சிதைக்கும்-வரலாற்றைத் திரித்து எழுதும் இந்துத் துவா அஜெண்டா இக்காட்சியில்அப்பட்டமாக வெளிப்படுகிறது.

  ஏற்கனவே தீவிரவாதியாக அறிமுகப்படுத்தப் பட்ட அமானுல்லாவை, அப்பாவி முஸ்லிம்களின் பிரதிநிதி யாகப் பேசவைக்கும்போது,"ஒருதீவிரவாதி நியாயம் பேசலாமா?" என்ற கேள்வியை பார்வையாளர்களைக் கேட்கவைக்கும் உத்தி இது.

  அன்றாடங் காய்ச்சிகளாக, அகதி முகாம்களில் இன்றும்விளிம்புநிலை வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களின் நியாயங்கள், 'தீவிரவாதி'யான அமானுல்லா பேசும்போது அடிபட்டுப் போகின்றன, முற்றாக ஒதுக்கித்தள்ளப்படுகின்றன.

  "நீ ஒன்றும் பேசாதே, என்ன இருந்தாலும் நீ தீவிரவாதி"என்ற முத்திரை படம் நெடுகிலும் குத்தப்படுகின்றது.

  மாலேகான், ஹைதராபாத் மெக்கா மசூதி போன்ற இடங்களில் குண்டுவெடிக்கச் செய்தவர்கள் ராணுவ கர்னலான புரோஹித் என்பவனும், ஒரு பெண்சாமியாரும்,

  இவர்கள் இணைந்து நடத்தும் ஒரு இந்துத்துவா தீவிரவாத ஆயுதப்பயிற்சிப்பள்ளியும்.

  மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்காரே பாரபட்சமின்றி இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டதால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலால்"துரோகி" என்று தூற்றப்பட்டு படாதபாடு படுத்தினர்.

  2008 நவம்பர் 26 மும்பைதீவிரவாதத் தாக்குதலின்போது அங்கே நடவடிக்கைக்காக சென்ற கார்காரே, தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு பலியானார் ('துரோகி' என்று திட்டிய பா.ஜ.க. கும்பல்உடனடியாக 'கார்கரே ஒரு தியாகி' என்று பாடியது.

  அவரது மனைவிக்கு கோடி ரூபாய்களை சன்மானமாகத் தர மோடி முன்வந்தபோது கார்கரேயின் மனைவி துச்சமாகநிராகரித்தார்).


  CONTINUED ….

  ReplyDelete
 21. PART 5. மனிதம் காலி மிருகம் மீதி

  பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ்ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய் சிறையில் அடைத்து மனநோயாளிகளாக்கிய போதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள் பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.

  அரசு எந்திரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல்கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது


  ஆயிரக்கணக்கான அரவாக் இன பழங்குடிகளைத் தீயில் இட்டு எரித்த கொலம்பசும்,

  அரபுப்பிராந்தியத்திலும் இராக்கிலும் ஆப்கனிலும் ஒரு நூற்றாண்டாக அமெரிக்காவும்

  அதன் சகாக்களும் இப்படித்தான் பதட்டம் ஏதுமின்றி மனிதப்படுகொலையை செய்துகொண்டே இருக்கிறார்கள்.

  காந்தியாரை சுட்டு வீழ்த்திய போதும் கோட்சேயும் அவனது சகாக்களான வீரசவர்க்கார் கும்பலும் பதட்டமின்றி அமைதியாகத் தான் இருந்தார்கள்.

  அயோத்தி, ஒரிசா, குஜராத்,பிஹார், மும்பை, மாலேகான், ஹைதராபாத், ராஜஸ்தான், தென் காசி, குல்பர்க்சொசைட்டி ஆகிய இடங்களில் முஸ்லிம், கிறித்துவ மக்களை உயிரோடு கொளுத்தியும் குரல்வளைகளை அறுத்த போதும்,

  முஸ்லிம்-கிறித்துவப் பெண்களை வல்லுறவுசெய்தபோதும் நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்தபோதும் அவர்கள் பதட்டமின்றித்தான் இருந்தார்கள், நிதானமாக 'தூய்மை'ப்படுத்தினார்கள்.

  ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்துக் கொளுத்தி 'தூய்மை'ப்படுத்தியபோதும், சொரா புதீன் ஷேக், இஷ்ரத் ஜெஹான் போன்ற இசுலாமியக் குப்பைகளை போலி என்கவுன்டர்களில் சுட்டு வீழ்த்திய போதும் பதட்டமின்றிதான் இருந்தார்கள்.

  'வாட்டர்' படப்பிடிப்பின் போது மீராநாயரையும் அவரதுகுழுவினரையும் கங்கைக் கரையில் ஓடஓட விரட்டியபோதும் பதட்டம் இன்றிதான்இருந்தார்கள்.


  மீராநாயரை விரட்டிவிட்டு, கங்கையிலும் காசியிலும் மொட்டை அடித்து தெருவில்அநாதைகளாகவும் விபச்சாரிகளாகவும் விரட்டப்பட்ட இந்து மதப்பெண்களின் 'புனித'த்தைக் காப்பாற்றினார்கள்.

  குஜராத்தில் சாயாஜி பல்கலைக்கழக மாணவர்சந்திரசேகரையும், பேராசியர் பணிக்கரையும் விரட்டி அடித்து சிறையில் தள்ளியபோதும்,

  கர்நாடகாவில் இளம்பெண்களை அடித்துநொறுக்கி அவமதித்து 'பாரதப் பண்பாட்டை'க் கட்டிக்காத்தபோதும் பதட்டம் இன்றித்தான் இருந்தார்கள்.

  ஆமிர்கானின் 'பானா' திரைப்படத்தை குஜராத்தில் திரையிட்டஅரங்குகளை எல்லாம் அடித்து நொறுக்கி குஜராத்தில் தடை செய்த போதும் பதட்டமின்றி அமைதியாகத்தான் இருந்தார்கள்.

  காஷ்மீரில் முஸ்லீம் பெண்களை வல்லுறவுக்காளாக்கிய போதும், முஸ்லீம் சிறுவர்களை போலி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்து பதவிஉயர்வு பெற்ற போதும் இந்திய ராணுவத்தினர் பதட்டமின்றி நிதானமாகத்தான் இருக்கின்றார்கள்.

  பொடா, தடா, அடாபுடா போன்ற சட்டங்களின் கீழ்ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை விசாரணை ஏதும் இன்றி வருடக்கணக்காய்சிறையில் அடைத்து மனநோயாளிகளாக்கியபோதும் கூட மாண்புமிகு நீதிமன்றங்கள் பதட்டம் ஏதுமின்றி அமைதியாகத்தான் இருக்கின்றன.

  அரசு எந்திரமோ ஒரு நட்டு, போல்ட்டு, ஸ்க்ரூ கூட கழன்றுவிடாமல் எப்போதும்போல்கழுவப்படாத சிமெண்டு கலவை மெசின் போல சுழன்றுகொண்டேதான் இருக்கின்றது.

  கர்ப்பிணிப்பெண்ணின் பிறப்புறுப்பு வழியே கையை நுழைத்து கருப்பைக்குள் இருந்தகருவைக் கலைத்து கருவறுத்தார்கள்.

  உண்மைதான்!

  முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடி, வயிற்றை சூலாயுதங்களால் கிழித்து, உள்ளே இருந்த சிசுக்களை தீயில் போட்டு வாட்டிய கொடுமையும் நடந்ததே!

  எங்கே? குஜராத்தில். செய்தவர்கள் யார்?

  நரேந்திரமோடியும் போலிசும் சங்பரிவார் கும்பலும் தானே!
  CONTINUED …..

  ReplyDelete
 22. PART 6. மனிதம் காலி மிருகம் மீதி


  "நடந்தது எல்லாம் நல்லபடியாத்தான் நடந்தது". இது பகவத்கீதை வசனம் தான்.

  ஆம், பதட்டம் ஏதும் இன்றி இந்துத்துவா தீவிரவாதிகள், முஸ்லிம், கிறித்துவ குப்பைகளை நல்லபடியாகத்தான் 'தூய்மை'ப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.


  'இந்தியசமூகத்துக்கு இஸ்லாமியக் குப்பைகள் தேவையில்லாதவை,

  இடையூறு விளைவிப்பவை.

  இந்தக்குப்பைகளை அப்புறப்படுத்தி சமூகத்தைத்'தூய்மை'ப்படுத்தும் கடமையை கோட்சேயைப் போல், மோடியைப் போல்

  நிதானமாக, பதட்டமின்றி செய்யவேண்டும்' என்ற இந்துத்துவா அரசியலை வெட்கம் ஏதுமின்றி 'பாஞ்ச ஜன்ய'சங்கு எடுத்து ஊதுகின்றனர்.

  தனது வர்த்தக லாபங்களுக்காக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக ஆக்கும் உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும்,

  வர்த்தக லாபங்களுக்காக இந்திய இஸ்லாமிய மக்களை திட்டமிட்டே 'தீவிரவாதி'களாக ஆக்கும் பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

  இந்த அஜெண்டாவை செயல் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக்கூட்டணியும்,

  இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு,எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.


  பொதுவாக சமூகத்தில் சுத்தமானவர்கள், முற்போக்கானவர்கள் என்று 'அறியப்பட்ட'வர்களின் அசைவுகள், வார்த்தைகளை பொது வெளியில் உள்ள சமூகம் எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கிறது.

  அவர்கள் கூறும் வார்த்தைகளின் உள்ளே புகுந்து உண்மையைத் தேடுவதை விட்டு விட்டு வார்த்தைகளையே உண்மை எனநம்பிவிடுகின்றது.

  "அமைதிக்காலங்களில்தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப் படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்" என்ற ச.தமிழ்ச்செல்வனின் கவலையை இங்கே பதிவு செய்வது பொருத்தம்.

  முழுக்க நனைஞ்ச பின்னே கோவணம் எதுக்கு? - சாம்பல்தேசம்


  THANKS TO THE ARTICLE SOURCE: http://saambaldhesam.blogspot.sg/2011/09/2.html

  ReplyDelete
  Replies
  1. மேலே உள்ளஎனது கட்டுரையை இத்தளத்தில் மீண்டும் வெளியிட்டமைக்கு நன்றி!...
   இக்பால் (சாம்பல்தேசம்)

   Delete
  2. மனிதம் காலி மிருகம் மீதி என்ற எனது கட்டுரையை மீண்டும் இத்தளத்தில் வெளியிட்டமைக்கு என் நன்றி!
   இக்பால்

   Delete
 23. நீங்கள் எழுதியிருப்பது சீரியஸான கான்செப்ட். இப்படியான பொய்யான புனைவுகளுடன் கைதுப்படலம் நடைபெற்றவுடன் முஸ்லிம் இளைஞர்கள் திரண்டு எங்களிடமும் இதே போல ஆயுதங்கள்(லேப்டாப், வரைபடங்கள் போன்ற)இருக்கிறது அதனால் எங்களையும் கைது செய்யுங்கள் என்று போராட வேண்டும். அப்போது தான் உறைக்கும் இந்த அரசுகளுக்கு.

  எங்கெங்கு இதுவரை குண்டுவெடிப்புகள் நடைப்பெற்றது அதன் விசாரணை எதுவரை நடந்துள்ளது. யாரெல்லாம் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? யார் மீதெல்லாம் குற்றம் நிரூபிக்கப்படமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்? போன்ற விவரங்கள் அடங்கிய "வெள்ளை அறிக்கையை" மத்தியரசு வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும்.

  இந்தியாவின் குண்டுவெடிப்பு விசாரணைகளை கர்கரேகு முன், கர்கரேக்கு பின் என்றும் பிரித்து பார்க்க வேண்டும். கர்கரே மட்டும் இந்த விசாரணைக்கு நுழையாமல் போயிருந்து உண்மைகள் வெளியுலகிறகு தெரியாமல் போயிருந்தால், நாமெல்லாம் இந்துத்துவாவின் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம்களை கண்டனம் செய்து கொண்டிருந்திருப்போம்.

  அதுசரி.. குண்டு வெடிப்பும் சில முஸ்லிம்களின் கைதும் நடந்து விட்டாலே, சில நடுநிலை முக்காடு போட்ட கண்ணன்களும், செல்வன்களும் முஸ்லிம் பதிவர்களிடம் "கண்டனங்கள் எங்கே" என்று கேட்டு வாங்குவார்களே! அவர்கள் ஏன் இப்போது வாயையே திறப்பதில்லை.

  எவ்விதமான உப்பு சப்பில்லாத காரணங்களைக் குற்றம் சாட்டி முஸ்லிம்களை சிறையில் அடைக்கலாம் கேட்க நாதியற்ற சமூகம் தானே என்ற இறுமாப்பு எண்ணங்கள் அரசுகளிடமும் உளவு துறையினரிடமும் இருக்கிறது. இதை இந்திய இளைய முஸ்லிம் சமூகம் அவதானிக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாதவாறு வியூகங்கள் அமைக்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு கேட்டு போராடும் முஸ்லிம் இயங்கங்கள், இந்த மாதிரியான பிரச்சினைகளிலும் அகில இந்தியளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

  ஊடகத்துறையில் குறிப்பிடும்படியாக முஸ்லிம்கள் இப்போது வளர்ந்து வருகிறார்கள். இது "அவர்களுக்கு" பிடிக்கவில்லை. அதனாலேயே ஊடகத்துறையிலிருக்கும் முஸ்லிம்களை தீவிரவாத பட்டம் சுமத்தி பழி வாங்குகிறார்கள். அது போல உயர் கல்வி பயின்று உயர்பதவிகளை நோக்கி இந்த சமூகம் முன்னேறுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற நபர்கள் மீது "தீவிரவாத பட்டம்" சூட்டப்படுகிறது. இப்படி ஒரு நிகழ்வுக்குப் பிறகு, முஸ்லிம்களை வேலைக்கு எடுப்பதை பற்றி ஒரு தயக்கம் வர வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். பிடிபட்டவர்கள் "தீவிரவாதிகள்" என்று மீடியாக்கள் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் மனங்களில் ஒரு பொதுப்புத்தியை ஏற்படுத்தி விடுவார்கள். பின்னர், விசாரணையில் அவர்கள் மீது குற்றமில்லை என்று நீதிமன்றம் விடுவித்தாலும், அவர்கள் மீடியாவின் மூலம் ஏற்படுத்திய "பொதுப்புத்தி" மக்களின் மனங்களிலிருந்து மறையாது. இது தான் அவர்களின் வெற்றி.இப்படித்தான் இந்தியாவில் பெரும்பாலும் முஸ்லிம்கள் தீவிரவாத பட்டம் சுமந்து வருகிறார்கள்.

  யாரோ இரு தலைவர்களின் முடிவுகளுக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மேல் விழுந்தது "பிரிவினைவாதிகள்" பட்டம்.
  யாராரோ வைக்கிறார்கள் வெடிக்கிறார்கள் ஆனாலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மேல் விழுகிறது "தீவிரவாதிகள்" பட்டம்.

  என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள களம் கொடுத்த சகோ. ஹைதர் அலிக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 24. //கடந்த 2007ம் ஆண்டில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட 3 முஸ்லிம் இளைஞர்களும் "நிரபராதிகள்" என டெல்லி "தீஸ்ஹசாரி" நீதிமன்ற நீதிபதி சுவேதாராவ், வெள்ளியன்று (05/10) தீர்ப்பளித்தார்.

  இது,கடந்த ஒரு மாதத்தில் "முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை" என நிரூபிக்கும் 2வது தீர்ப்பாகும்.

  கடந்த 2007ம் ஆண்டில் "டெல்லியை தகர்க்க சதி" செய்ததாக, ஷபக்கத் இக்பால், ஷப்பீர் பட், முஹம்மத் காசிம் ஆகிய மூவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் "லஷ்கர் தையிபா" அமைப்பில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் எனவும், லஷ்கரின் கமாண்டர் "அக்மல்" என்பவரின் கட்டளையை ஏற்று, டெல்லியை தகர்க்க வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

  விசாரணையில், போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது. ஷபக்கத் இக்பால், ஷப்பீர் பட் ஆகிய இருவரும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள், வேலை தேடி டெல்லிக்கு வந்தவர்கள். இதில், ஷபக்கத் இக்பால் திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில், இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு "பிழைப்பு"த்தேடி வந்து 5 ஆண்டுகளாக "சிறைவாசம்" அனுபவித்துள்ளார்.

  போலீஸ் தரப்பில் "லஷ்கர் கமாண்டர்" என்று சொல்லப்பட்ட "அக்மல்" ஒரு கற்பனை பாத்திரம் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. அது மட்டுமல்லாமல், போலீஸ் தரப்பில் சாட்சிகள் என சொல்லப்பட்ட பொது மக்களும், போலீசின் கதையை ஆதரிக்கவில்லை. போலீஸ் காரர்கள் "பிடி-பிடி" என்று கூச்சல் போட்டுக்கொண்டிருந்தனர். நான் அருகில் சென்று பார்த்தபோது, அங்கு மிகவும் அமைதியான சூழலில் 3 நபர்களின் முகத்தை "கறுப்புத்துணி"யால் மூடப்பட்டு இருந்த காட்சியை கண்டதாக, பொதுமக்கள் தரப்பு சாட்சிகளில் ஒருவர் கூறினார். முகத்தை கறுப்புத்துணியால் மூடப்படுவது குறித்தும் நீதிமன்ற விசாரணையில் வெகுவாக வாதிடப்பட்டது. மேலும்,இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் குறித்தும், அவை, எப்படி? யாரால்? கைப்பற்றப்பட்டது - தற்போது எங்குள்ளது? என்ற எந்த கேள்விக்கும் போலீஸ் தரப்பில், பதில் இல்லை.

  இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட இன்னொரு நபர் முஹம்மத் காசிம், பாகிஸ்தான் பிரஜை என்பதும் அவருக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்ததுமில்லை என்பதும், நீதிமன்ற விசாரணையில் நிரூபணமானது. என்றாலும், கைது செய்யப்பட்ட போது, பாகிஸ்தான் பிரஜையிடம் போதிய ஆவணங்கள் இல்லாமலிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதற்காக அவர் ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டபடியால், அவரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார், நீதிபதி சுவேதா.// source: Maruppu

  இப்படியான பொய்யான குற்றச்சாட்டில் அந்த அப்பாவி முஸ்லிம்கள் இழந்த வாழ்க்கையையும் தொலைத்த இளமையையும் யார் தருவார்கள்? நீதி மறுக்கப்படுவதே இன்னொரு பக்கம் பயங்கரவாத எண்ணங்களை தோற்றுவிக்கும் ஊற்றுகண்.

  ReplyDelete
 25. உண்மையான தீவிரவாதிகள் என்றால் நிச்சயம் கைது செய்தது சரிதான். ஆனால் நிரபராதிகள் என்றால் நிச்சயம் தவறு ஆகும்.

  ReplyDelete
 26. ஸலாம்

  நீங்க வச்சு இருக்க புக்குக்கு ஏகப்பட்ட பதிவு எழுதலாம், கொஞ்சம் பதிவு கூட கடன் கொடுங்க ...

  என் கூட பேச மாட்டீங்களா @@@@@

  ReplyDelete
 27. கொடுமை... இவையெல்லாம் மாற வேண்டும்...

  ReplyDelete
 28. ஹைதர்...இது நமது பூமி. எந்த கொம்பனுக்கும் சிறப்பு அதிகாரம் இல்லை. பெரும்பான்மை மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் வாய் நீளக்கூடாது. தவறான பார்வையில் சிறுபான்மையினரை நோக்கும் சிறுமூளைக்காரர்கள் பற்றி கவலை வேண்டாம்.

  ReplyDelete
 29. சலாம் சகோ..

  நல்ல பதிவு... நிரபராதிகள் யாராக இருந்தாலும், எந்த நாடு, எந்த மதம், எந்த இனமாக இருந்தாலும் தண்டிக்கப்படக் கூடாது..

  நீதி செலுத்துங்கள், அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே.( அல் குரான்)

  ReplyDelete
 30. அஸ்ஸலாமு அலைக்கும் வரக்

  பதிவின் தாக்கம்...
  தலைப்பிலே மிளிர்கிறது.

  இதையும் படித்து உங்கள பிடிச்சி உள்ள போட்டுட போறாங்க மச்சான். அதுவும் ஐ விட்னெஸ் வேற பதிவிலே கொடுத்து இருக்கீங்க...

  ReplyDelete