Monday, October 3, 2011

ஆபத்தான உணவு முறையும் உடல் உழைப்பும்

நாற்காலி பணி செய்யும் நண்பர்களின் ஆபத்தான உணவு முறைகளையும்.உழைக்கக் கூடிய உழைக்கும் கடைநிலை உழியர்களாக இருக்கும் நண்பர்களின் பற்றக்குறை உணவுமுறையும் அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டையும் கொஞ்சம் பார்ப்போம் இரு சாரரில் ஒருவராக நாம் இருந்தால் நாம் உணவு முறைகளை பரீசிலித்து நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம்.அதன்மூலம் ஆரோக்கியம் பெறுவோம்.

இதற்கு உடலுழைப்புக்கு ஏற்றவாறு யார் யார் எவ்வளவு கலோரிகள் கொண்ட உணவுகள் சாப்பிடவேண்டும் என்ற விளக்கத்தை பெற அத்துறையைச் சேர்ந்த
‘டாக்டர் S.K. ஹயாத் பாஷா’(துறைத் தலைவர்,உயர் வேதியியல்) அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுரைகளிலிருந்து விளக்கத்தை பார்ப்போம்.


முதலில் நாற்காலி பணி(Table Worker) செய்பவர்களின் உணவு தேவைகள்.


இந்த நாற்காலி பணி செய்பவர்களின் ஒரு நாளின் தேவையான உணவு சுமார் 1500 கிலோ கலோரிதான்.ஆனால் சாரசரியாக சாப்பிடுவதோ 4500 கலோரி உணவு மீதமுள்ள 3000 கிலோ கலோரி என்ன ஆகும்?

நாம் செலவுக்குப் போக எஞ்சிய பணத்தை சேமிப்பு வங்கியில் போடுகிறோம்.அதுபோல எஞ்சிய பயன்படாத 3000 கிலோ கலோரிகளை நம் உடல் கொழுப்பாக உடலில் சேமித்து வைக்கிறது.இது ஓர் ஆபத்தான சேமிப்பு.

எப்படி? அதிகக் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் இரத்தத்தில் உள்ள கால்சியம் பாஸ்பேட் என்ற உப்புடன் சேர்ந்து இரத்தக் குழாய்களின் உட்பக்கத்தில் சிமெண்ட் போல் படிகிறது. இதனால் இரத்தக் குழாயின் துவாரம் சிறுத்து விடுகிறது.அதனால் இரத்த அழுத்தம்(Blood Pressure),மூட்டுகளில் கொழுப்பு-உப்பு படிமானத்தால் மூட்டுவலி,கண்களில் கொழுப்பு-உப்பு படலத்தால் காண்ட்ராக்ட்(கண் பார்வை மங்கல்) எனப் பல நோய்கள்.

இதயத் தசைகளுக்கு ஊட்டச்சத்து உணவைக் கொண்டு செல்லும் இதயத்தமனியின் உட்புறத்திலும் கொழுப்பு-உப்பு படிவதால் இதயத்தமனியின் துவாரம் சிறுத்து விடுவதால்,இதயத் தசைகளுக்குப் போதிய ஊட்டம் கிட்டாது.அதனால் இதய இயக்கம் பாதிப்பு ஏற்பட்டு இதயத் தாக்குதல்(Heart Attack) ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கிறது.

இக்காலத்தில் சிறிய வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுவதின் காரணமும் இதுதான். ஓர் அழகான அறிவியல் பூர்வமான கதையை உணவு உயிர் வேதியல்(Nutrional Biochemistry) வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இன்சுலின் என்ற ஹார்மோன் கணையத்திலிருந்து சுரக்கிறது.இது இரத்த சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்கும் ஹார்மோன்.இந்த இன்சுலின் இரத்தத்திலிருந்து சர்க்கரையை செல்களுக்குக் கொண்டு செல்லும் ஓர் அழகிய படகு! இரத்தத்திலிருந்து சர்க்கரையை சுமந்து வரும் இந்த இன்சுலின் படகுக்காகத் தனிப்பட்ட கதவுகள் ஒவ்வொரு செல்லிலும் உண்டு. இன்சுலின் சர்க்கரைச் சுமையுடன் செல்லை நெருங்கும் போது இக்கதவுகள் உடனே திறக்கின்றன. சர்க்கரையை செல்லிற்குள் விட்டு விட்டுச் செல்கிறது. இந்த சர்க்கரை செல்லில் எரிக்கப்பட்டு உடலுக்கு வேண்டிய சக்தியாக நமக்குக் கிடைக்கிறது.

மனித உடல் உழைப்பு குறையும்போது, கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறைகிறது. மேலும் செல்களில் இன்சுலின் கதவுகளும் சரியாகத் திறப்பதில்லை. ஆகவே சர்க்கரை இரத்தத்தில் தேங்கி விடுகிறது. இதையே நாம் சர்க்கரை நோய் என்கிறோம். ஆகவே சர்க்கரை சரியாக எரிக்கப்பட்டு சக்தியாக மாற உடல் உழைப்பு மிக மிக அவசியம்.

 ‘உண்ணும் உணவே மருந்து’ என்ற முதுமொழிக்கு
 ‘உழைப்பிற்கு ஏற்ற உணவை உண்ணுதல்’என விளக்கம் தரலாம்.

1 கப் காப்பி 200 கிலோ கலோரி.300 மிலி பெப்ஸி,கேக் போன்ற குளிர்பானம் 500 கிலோ கலோரி.ஒரு நாளைக்கு 2 குளிர்பானம்,3 கப் காபி குடித்தாலே சுமார் 1500 கலோரி கிடைக்கிறது.இதுவோ உடல் உழைப்பு குறைந்த மனிதரின் ஒரு நாளைய தேவை! அதற்மேல் சாப்பிடும்போது அது கொழுப்பாக மாறிவிடும்.
இதுவே இரத்த அழுத்தம் அதிகரிப்பு, மரடைப்பு, சர்க்கரைநோய் போன்றவற்றிக்கு காரணமாகிறது.

இதனால் அறிவிப்பது என்னவேன்றால்.

நாற்காலியில் உட்கார்ந்து அலுவலக வேலை, பெட்டி தட்டுற வேலை செய்கிறவர்கள் 1500 கலோரி உணவுகளை மட்டும் சாப்பிடவும் அதாவது 3கப் காப்பி,2 பெப்ஸி மட்டும் குடிக்கவும். அதற்கு மேல் நாவை கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிடுவதாக இருந்தால் அதற்கேற்ற உடற்பயிற்சி செய்யவும்.
(விளையாட்டுக்கு சொல்லவில்லை ரொம்ப சீரியஸான மேட்டர்)

என் நண்பர் சொன்னர் “மருத்துவர் நடக்க சொன்னார்.தினமும் நடைப்பயிற்சி செய்யறேன்.எடை குறையவே இல்லை.” எப்பூடி குறையும்? முக்கால் மணி நேரம் நடந்தால் கூட சுமார் 500 கிலோ கலோரி தான் செலவாகிறது.அதனால் பசி அதிகமாகி வழக்கமாக சாப்பிடுவதை விட கூடுதல் இரண்டு இட்லிகள் வடிவில் அந்த 500 கிலோ கலோரி மீண்டும் உடலில் சேர்ந்துரும் என்றேன்.

அடுத்து உடல் உழைப்பு உள்ளவர்கள் எவ்வளவு கலோரி உணவுகள் உட்கொள்ள வேண்டும். பொதுவான ஆரோக்கியமான உணவுமுறைகள் என்ன என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
(நான் தொடரை விட்டாலும் அது என்னையை விடமாட்டீகிது)

11 comments:

 1. வயிற்றில் மிச்சம் வை
  இலையில் மிச்சம் வைக்காதே என்று வைரமுத்து கூறியதில் பின் பகுதி மட்டும் கடை பிடிப்பதால் இந்த பிரச்சினை

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ள பகிர்வு.

  ReplyDelete
 3. @suryajeeva

  சரியான உதாரணம் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 4. @Jaleela Kamal

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 5. அபு ஃபைஜுல்October 3, 2011 at 1:53 PM

  அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி.
  எங்க ஊரில் ஒரு சொல் வழக்கில் உண்டு. நல்லா இருக்கும் போதே உனக்கு என்ன பார பைத்தியமா என்று சொல்வார்கள். நல்லா எழுதும் போது ?

  ReplyDelete
 6. பயனுள்ள தரமான பகிர்வு மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ..
  வாருங்கள் என் தளத்திற்கும் ஒரு பாடல்வரி காத்திருக்கின்றது .

  ReplyDelete
 7. ஹோம் மேக்கர்ஸ்லாம் எத்தன கலோரி எடுத்துக்கணும்னு விஷாரிச்சு சொலுங்கண்ணே.....

  நானும் வாக்கிங்லாம் போய் பாக்குறேன்......
  ஹும்ஹும்

  இன்னைக்கு வீட்டில் தேங்காய் சாதம்,ரைத்தா,உருளைகிழங்கு போட்டு மட்டன் குழம்பு, பெப்பர் சிக்கன் :-))

  ReplyDelete
 8. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்...

  ///பெட்டி தட்டுற வேலை செய்கிறவர்கள்///

  என்னாது...பெட்டி தட்டுற வேலையா...

  இந்த நல்ல விழிப்புணர்வு பதிவுக்காக விட்டுட்டு போறேன்..

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 9. பதிவு அருமையாக உள்ளது,நன்றி,

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே...
  அருமையான பகிர்வு..

  //நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்''
  அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 4182////
  நமது கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் உணவைக் குறைவாக சாப்பிமாறு கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். மேலும், வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும்,
  இன்னொரு பகுதியை தண்ணீருக்காகவும்,
  இன்னொரு பகுதியை காலியாக விட்டு விட வேண்டும்
  என்று கூறும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள்.
  மேலும், அவர்கள் பசித்தால் மட்டுமே உண்பார்கள்.
  போதுமானவரை மட்டுமே சாப்பிடுவார்கள். அதாவது வயிறு நிறைய சாப்பிடமாட்டார்கள். ////

  நபிவழியை பின்பற்றுவது ஒன்றே இதற்க்கு தீர்வு :)

  ReplyDelete