Thursday, March 3, 2011

நான் புரிந்து கொண்ட நபிகள்-அ.மார்க்ஸ், புத்தக அறிமுகம்

ஆசிரியர்:அ.மார்க்ஸ்
கருப்பு பிரதிகள்
45A,இஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை,சென்னை-5
ரண்டு அம்சங்களை இங்கே குறிப்பிட வேண்டியவை. பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய ஒரு வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இவ்வுலகிலேயே நிறைவேற்றத் தக்க ஒரு
சமூகத் திட்டத்தையும் முன் வைத்து இயங்குவதால் அது மிகுந்த செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது.

அதுபோலவே நபிகள் ஒரு வெறும் இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.

அவரின் அன்றாட வாழ்க்கை, உரையாடல்கள்,வெற்றிகள், தோல்விகள், மாண்புகள், பலவீனங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நம்பத் தகுந்த, எல்லோரும் ஏற்றுக் கொண்ட வரலாற்று ஆவணங்களாக அவை உள்ளன.இறைத்தூதர் முஹம்மதின் வாழ்வை அறிய அறிய அவரின் மானுடத் தன்மையில் நான் என் உளம் இழந்தேன். அவரது ஆளுமையில் கரைந்து போனேன்.

மானுடராய் நம் முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் விளைவாகவும் அவரின் வாழ்வு வண்ண மயமானதாக அமைகிறது. ஏராளமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள்.

நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற ஒரு ஏசு நாதரையோ, புத்தரையோ நாம் பார்த்துவிட முடியாது.சிரித்து மகிழ்கிற, அழுது குலுங்கிற, காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு மாமனிதராக முஹம்மது நபிகள் நம்முன் நிற்கிறார்.

முன்னுரை பகுதியில் அ. மார்க்ஸ் அவர்களுக்கே உரித்தான எழுத்தாற்றலோடு எழுதியவைகள்.

இனி இந்த புத்தகத்தில் என்னைக் கவர்ந்த நான் கோடிட்ட வரிகள் உங்கள் பார்வைக்கு


எங்களைப் பொருத்தமட்டில் நபிகளையும் இஸ்லாமையும் நோக்கி நாங்கள் ஈர்க்கப்பட்டதற்கு இறையியல் சார்ந்த காரணங்களைக் காட்டிலும் அரசியல் சார்ந்த காரணங்களே முதன்மை பெறுகின்றன. அரசியல் மற்றும் சமூகவியல் அடிப்படையில் நம்மை ஈர்க்கக்கூடிய தகுதி இன்றைய பெருமதங்களில் இஸ்லாமுக்கு மட்டுமே உண்டு.

மதங்களின் சமூகவியலைப் பற்றி ஆய்வு செய்கிறவர்கள் இஸ்லாம், பவுத்தம்,கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களை மட்டும் மனிதகுல முழுமைக்குமான மதங்கள் (Universal Religions)என்பார்கள். நாடு, இனம், மொழி,சாதி எல்லாவற்றையும் கடந்து யாரொருவரும் எந்தக் கணத்திலும் இம்மதங்களுக்குள் சரண் புக முடியும்.

இம்மூன்று மதங்களிலும் கூட இஸ்லாம் தனித்துவமாக விளங்குவதற்கு காரணம் அது மட்டுமே தன்னை அண்டியவர்களுக்கு இந்த மண்ணிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட்டத்தை முன் வைக்கிறது. தன்னை ஏற்று வந்தவர்களுக்கான ஒரு மத நிறுவனத்தை (Church/சங்கம்)  அமைப்பதைப் பற்றி மட்டுமே கிறிஸ்தவமும், பவுத்தமும் பேசின.

இவ்விரு மதங்களையும் நிறுவிய இயேசும், புத்தரும் நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டக்கூடிய ஒரு அரசைத் தாமே உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சிற்றும் இல்லாதவர்களாக இருந்தனர். எனவே நிலவும் அரமைப்புகளுடன் அவர்கள் நிறுவிய மதமும் அவர்களும் சமாதானமாகிப் போனார்கள்; சமரசம் செய்து கொண்டார்கள்.

நிலவுகிற அரசமைப்பிற்குக் கட்டுப்படுதலைக் கிறிஸ்தவம் எப்போதும் போதித்து வந்தது. தான் வாழ்ந்த காலத்திலேயே புத்தர் அரசுகளோடும், ஆதிக்க சக்திகளோடும் பல சமரசங்களைச் செய்து கொண்டார். சமூகத்திலுள்ள ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தம் வந்தபோது கடனைத் தீர்த்துவிட்டு வருகிறவர்களுக்கு மட்டுமே சங்கத்தில் இடம் உண்டு என்றார். அடிமைகளுக்கு இடமில்லை என்றார்.


கொல்லாமையைப் போதித்த புத்தர் ஒரு கட்டத்தில் அரசப் படைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தார்.அன்று உருவாகி வந்த முடியரசு ஒன்றால் அவர் பிறந்த சாக்கிய சமூகம் அவரது கண்முன் அழிக்கப்படுவதை ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே புத்தரால் முடிந்தது.


ஆனால் இஸ்லாமோ அரசுகளற்ற இனக்குழுச் சமூகங்கள் மத்தியில் ஒரு சிறிய பிரிவாக உருவாகி ஒரு இயக்கமாகப் பரிணமித்து, ஏக இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்கிற கருத்தியலைப் பிரச்சாரம் செய்து, எண்ணற்றத் தியாகங்களை மேற்கொண்டு ஒரு கட்டத்தில் புலம் பெயர்ந்து, கொண்ட கொள்கைக்காகப் போராடி, அவற்றை நிறுவுவதற்கான ஒரு அரசியல் கட்டுமானத்தை (அரசை) உருவாக்கியது.

மறுமை குறித்த உயர் நோக்கங்களோடு நில்லாமல், இம்மையில் சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்டும் செயல் திட்டங்களும் கொண்டு இயங்கியதால்தான் இங்கேயே தோன்றிய மதங்களாயினும், வெளியிலிருந்து வந்தவையாயினும் இந்தியாவின் சாபக்கேடான வருணத்தையும், சாதியையும்,தீண்டாமையையும் ஒப்பீட்டளவில் வென்ற ஒரே மதமாக இஸ்லாம் மட்டுமே அமைந்தது.

இப்படி வித்தியாசமான கோனத்தில் அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துக்கள் ஜொலிக்கின்றன. அ. மார்க்ஸைப் பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை அதனால் இந்நூலை வெளியிட்ட கருப்புப் பிரதிகள் பதிப்பகத்தின் ஆசிரியர் அ.மார்க்ஸைப் பற்றி கொடுத்துள்ள குறிப்புகளை சுட்டிக் கட்டி இந்த நூல் அறிமுகத்தை முடித்துக் கொள்கிறேன்.


அ. மார்க்ஸ்மதங்களை முற்றிலும் நிராகரித்த பெரும் சிந்தனையாளர் பெரியாருக்குக் கூட இஸ்லாத்தின் மீது தனிக் கரிசனம் இருந்தது. இந்தச் சாதீயச் சமூகத்தில்  கலகமாக இஸ்லாம் மட்டுமே இருக்க இயலும் என்பதாலேயே அவர் இறுதி வரை மதமற்றத்தை வலியுறுத்தி வந்தார். அவரின் சாதியொழிப்புச் சமத்துவ நடவடிக்கைகளுக்குக் கையில் கிடைத்த நாயகர்களில் தலையாயவர் நபிகள் நாயகம். 

மற்ற மதங்களை அழிக்க முனைந்த பெரியார் இஸ்லாத்தை மட்டும் சீர்த்திருத்தப் பார்வையோடு, 'சந்தனக் கூடு வைக்காதீர்சமாதியை வணங்காதீர்என அதில் கலந்து போன மூடநம்பிக்கைகளை மட்டும் ஒழிக்க வேண்டுகோளிட்டதன் பின்னணியும் இதுவே. ஹிஜ்ரி ஆண்டு முறையைக் கடைப்பிடிப்போம்என்று கூடச் சொன்னார்.

பெரியார் முன்னிருந்த சமூகச் சூழல் இன்னும் பெரிதாய் மாறிவிடவில்லை.
இந்நிலையில் இப்பனியைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டவர் அ.மார்க்ஸ் எப்போதும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கருத்தியலோடு உற்ற நட்பைப் பேணி வருபவர் அவர்.விமர்சனங்களே இன்றி அதீத நிலை எடுத்துத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டுபவர் என்கிற குற்றசாட்டு கூட அவர் மீது உண்டு.

10 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நபி(ஸல்)அவர்கள், உமர்(ரலி) அவர்களை எதிர்பார்த்தார்கள் அல்லவா?

  சகோ.அ.மார்க்ஸ் அவர்களை நான் ரொம்பவும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்..!

  நூல் அறிமுகத்திற்கு நன்றி, சகோ.ஹைதர் அலி.

  ReplyDelete
 2. @முஹம்மத் ஆஷிக்

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நானும் உங்களோடு இனைந்து எதிர்பார்க்கிறேன்

  நன்றி சகோ

  ReplyDelete
 3. சகோதரர்,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  மனம் நெகிழும் நூல் அறிமுகம். ஜசக்கல்லாஹ்...இஸ்லாத்தை திறந்த மனதோடு படிக்கும் எவரும் அதனுடன் ஒன்றி போவது நிதர்சனம். முஹம்மது ஆஷிக்கின் எண்ணம் ஈடேற வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

  உங்கள் புத்தக அறிமுகங்கள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. தொடர்ந்து சிறப்பாக செயலாற்றுங்கள். உங்களுக்கு வலிமையை கொடுக்க ஏக இறைவன் போதுமானவன்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. 'நான் புரிந்து கொண்ட நபிகள்' என்ற புத்தகத்தை எழுத அ.மார்க்ஸ் முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி நிறைய படித்திருப்பார்,
  உண்மையில் அவர்களின் வாழ்க்கைத் தத்துவங்களை கவர்ந்துதான் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

  அ. மார்க்ஸ் நபியை தனது வாழ்வின் முன்மாதிரியாக கொண்டு அவர் போதித்த இஸ்லாம் என்கிற மனிதகுல வ்ழிகாட்டுதலை பின்பற்ற நான் அழைப்புவிடுக்கின்றேன்.

  ReplyDelete
 5. Assalaamu Alaikkum Sago.

  Nalladhoru Arimukam Vaazhththukkal.

  ReplyDelete
 6. //அதுபோலவே நபிகள் ஒரு வெறும் இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.//

  சகோ மார்க்ஸ் இறைதூதை நன்கு அடையாளம் கண்டு கொண்டார் , தன்னை படைத்தவனையும் விரைவில் கண்டுகொள்வார், இன்ஷா அல்லாஹ்

  அபூ நஸீஹா

  ReplyDelete
 7. @Aashiq Ahamed

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //. உங்களுக்கு வலிமையை கொடுக்க ஏக இறைவன் போதுமானவன்.//

  உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோ

  அல்ஹம்துலில்லாஹ்

  ReplyDelete
 8. @Issadeen Rilwan - Changes Do Club

  //அ. மார்க்ஸ் நபியை தனது வாழ்வின் முன்மாதிரியாக கொண்டு அவர் போதித்த இஸ்லாம் என்கிற மனிதகுல வ்ழிகாட்டுதலை பின்பற்ற நான் அழைப்புவிடுக்கின்றேன்.//

  சிறந்த அழைப்பு
  நன்றி சகோ

  ReplyDelete
 9. @அந்நியன் 2

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  அல்ஹம்துலில்லாஹ்

  நன்றி சகோ

  ReplyDelete
 10. @Abu Naseeha

  //சகோ மார்க்ஸ் இறைதூதை நன்கு அடையாளம் கண்டு கொண்டார் , தன்னை படைத்தவனையும் விரைவில் கண்டுகொள்வார், இன்ஷா அல்லாஹ்//

  அபுதாலிப் அவர்களை போன்று புற ஆதரவு சக்தியாக இருந்து மரணித்து விடக் கூடாது என்பதுதான் என்னுடைய கவலையும்

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete