Thursday, March 10, 2011

கணினியில் இருந்து கண்களைப் பாதுகாக்க எளிய பயிற்சி முறைகள்.

  பெண்கள் வீட்டின் கண்கள், கண் போல் பாதுகாப்போம் இது போன்ற பழமொழிகளுக்கும், கண்ணை மையப்படுத்தி எழுதப்படுகின்ற பாடல்களுக்கும் கவிதை வரிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த அளவுக்கு கண் என்பது மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை நாம் சரியான முறையில் பாதுகாக்கிறோமா? அதற்கான பயிற்சிகள் செய்கிறோமா?

எந்த ஒரு விஷயமும் அது நம்மிடம் இல்லாத போதுதான் அதனுடைய மதிப்பு விளங்கும். ஒரு நிமிடம் கண்களைக் கட்டிக்கொண்டு அலுவலகத்தில் அல்லது வீட்டில் நடந்துப் பாருங்கள் முழு வாழ்க்கையும் இருண்டுவிட்ட மனநிலையை உணர்வீர்கள்.


ஒரு காலத்தில் விளையாட்டு பொழுதுபோக்கு என்றால் அது முழு உடல் சார்ந்து இருக்கும் ஆனால் இன்று விளையாட்டு, பொழுதுபோக்கு அனைத்துக்கும் கணினியைச் சார்ந்துதான் இருக்கிறோம்.
கணினியில் நிறைய நண்மைகள் இருந்தாலும் அது முதலில் முதலில் காவு வாங்குவது நமது கண்களைத்தான்.


சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

எப்படி காலையில் எழுந்ததும் பல் துலக்குவது என்பது நடைமுறைப் பழக்கத்தில் இருக்கிறதோ அதேபோன்று மற்ற உறுப்புகளுக்கும் செய்யவேண்டிய பயிற்சிகளையும் நடைமுறை பழக்கமாக மாற்றிக் கொண்டால் பற்களை விட முக்கியமான உறுப்பான கண்களை பாதுகாத்து விடலாம்.

பயிற்சிக்குள் நூழையும் முன்

காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடங்கள் நம் கண்களுக்காக ஒதுக்கி கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்யலாம். நாள் முழுவதும் நமக்காக வேலை செய்யும் கண்களுக்காக ஒரு நாளில் பத்து நிமிடம்கூட ஒதுக்கவில்லை என்றால் எப்படி

இந்த பயிற்சியை எப்போது வேண்டுமானலும் செய்யலாம் கணினியில் நீங்கள் இருக்கும் போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த பயிற்சிகளை செய்துவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் கைகளை நீட்டி செய்ய வசதி இல்லையென்றால், கைகளை நீட்டாமல் கண்களை சுழல விடுங்கள்.
.(செய்து பாருங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள்)

சரி வாங்க, இப்ப பயிற்சிக்குள் நூழைவோம்


              இந்த வீடியோவை நன்றாக கவனித்து பாருங்கள்
செய்முறை விளக்கம்:
1. நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை தோள்களுக்கு நேராக நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண் பார்வையை மட்டும் திருப்பி வலது கட்டைவிரலை பாருங்கள். பின்பு இடதுகட்டைவிரலை பாருங்கள். இப்படி 20 முறை பார்க்கவும்(வலதைப் பார்த்து இடதை பார்ப்பது ஒருமுறை என்ற கணக்கில்)


2.அதன் பிறகு இடதுகட்டைவிரலில் ஆரம்பித்து வலது கட்டைவிரலை பார்க்கவும் இதுவும் 20 முறை


3.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதிப் பத்தில் வேகமாக செய்ய வேண்டும்
இந்த வீடியோவையும் நன்றாக கவனித்து பாருங்கள்
(இது இரண்டாவது சுழல் பயிற்சி முறை)

1.நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண் பார்வையை மட்டும் திருப்பி வலது கட்டை விரலை   பாருங்கள். பின்பு தரையை பாருங்கள். பிறகு இடதுகட்டைவிரலைப் பாருங்கள். பிறகு மேலே மேற்கூரையை பாருங்கள்.

2.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதிப் பத்தில் வேகமாக செய்ய வேண்டும் (மோத்தம் 20 முறை செய்ய வேண்டும்)
.
      எதிர்மறையாக செய்யக்கூடிய இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்

இந்த வீடியோ செய்முறை விளக்கத்தில் சிறு பிழை நிகழ்ந்து விட்டது
(சுட்டிக் காட்டிய சகோ. ராஜவம்சம் அவர்களுக்கு நன்றி)
கீழே உள்ள விளக்கத்தைப் படித்து அதன்படி மாற்றி செய்யவும்

1. நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை தோள்களுக்கு நேராக நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண்பார்வையை மட்டும் திருப்பி முதலில் இடது கட்டைவிரலைப் பாருங்கள். பிறகு தரையை பாருங்கள். பிறகு வலது கட்டைவிரலை பாருங்கள். அப்புறம் மேற்கூரையை பாருங்கள்.

2.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதி பத்தில் வேகமாக செய்ய வேண்டும் (மோத்தம் 20 முறை செய்ய வேண்டும்)

கண்களை வேகமாக சுழல விட வேண்டும்
இந்த புகைப்படத்தில் உள்ளது போன்று

பயிற்சி முடிந்த பிறகு 

கைவிரல்களை சூடு பறக்க தேய்த்து விட்டு கண் இமைகளின் மீது மெதுவாக
(பொத்துவது போல்) தடவி விடவும்.

இந்த பயிற்சியினால் ஏற்ப்படக்கூடிய பலன்கள்:

-இந்த பயிற்சின் மூலம் கண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.

-கண்களை சுற்றியிருக்கின்ற நரம்புகளுக்கு நல்ல வேலை கொடுத்து அவைகளை செயல்பட வைக்கிறது.

-கண்களில் கருவளையத்தை போக்கி விடும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பலனை உடனடியாக உணர்வீர்கள்!

பதிவு எழுதுபவர்கள், ஐ.டி துறையில் உள்ளவர்கள், வீடியோ கேம் பார்க்கும் சிறுவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய பயிற்சி.

வாழ்வில் ஒளி பெற கண்ணொளி அவசியம். கண்களை 'கண்களைப்போல்' போற்றிப் பாதுகாப்போம்!

இறுதியாக,


இதை விட முக்கியமான பயிற்சி ஒன்று இருக்கிறது அதை அடுத்த பதிவில்
சொல்லித் தருகிறேன் அந்த பயிற்சியின் மூலம் மூளை நன்கு புத்துணர்ச்சி பெறும். முடி கொட்டுவது நின்று, முடி நன்றாக வளரும்.

அந்த பயிற்சியை நீங்கள் ஒரளவுக்கு ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

 இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.
     

37 comments:

  1. நல்ல பயனுள்ள பயிற்சி. காணொளிகளில் விளக்கமாக உள்ளன. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. @Chitra அவர்களுக்கு

    நன்றி சகோ

    உடனடியாக கருத்து தெரிவித்து ஓட்டு போட்டதிற்கும் ரொம்ப நன்றியுங்க

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
    அனைவருக்கும் பயனுள்ள பதிவு. வீடியோவும் நல்ல தெளிவாக
    உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. assalamu alaikkum Mr.Haither. nantry melum thodara valthukkal. (hair falling) adutha varavukkaha waiting. Thank you.

    ReplyDelete
  5. Assalamu alaikkum Mr.Haithar Bai. Thank you very much. I am waiting for next (Hair Fall). pls send before falling all.

    ReplyDelete
  6. நன்றி நண்பரே,
    இந்த வகையில் தினமும் செய்ய வேண்டுமா?
    நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாமா?
    (அந்தப் பக்கம் இந்தப் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு பிறகு கண்களைச் சுழற்றுவது நல்லது, இல்லன்னா.. கண்வலி போய் புதுசா ஏதாவது வலி வந்துடும் இல்ல?)
    மீண்டும் நன்றி.
    நா.முத்துநிலவன்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்!

    பதிவர்களுக்கு அவசியம் பயனுள்ள பதிவு. இது போன்ற பதிவுகளை நிறைய தாருங்கள்.

    ReplyDelete
  8. @ஆயிஷா அபுல்.

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    நன்றி சகோ

    ReplyDelete
  9. @M.Tajudeen

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  10. @Muthu Nilavan

    //(அந்தப் பக்கம் இந்தப் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு பிறகு கண்களைச் சுழற்றுவது நல்லது, இல்லன்னா.. கண்வலி போய் புதுசா ஏதாவது வலி வந்துடும் இல்ல?)//

    இத நான் யோசிக்கவே இல்லை

    இப்புடி ஒரு ஆபத்து இருக்கோ

    சிரிக்க வைத்து விட்டீர்கள்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...

    சகோ.ஹைதர் அலி மாஸ்டர்.

    இந்த 'விழி சுழல்' பயிற்சி ரொம்ப நல்ல பயிற்சி. "நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை". கண்களுக்கு நன்றாக ரத்த ஓட்டம் பாயும்.

    செய்முறைகளுடன் விரிவாக நல்லதொரு பதிவு சகோ.மிக்க நன்றி.

    ReplyDelete
  12. @முஹம்மத் ஆஷிக்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //"நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை"//

    இதுவும் அருமையான சரியான பதிவு

    ஏற்கனவே உங்கள் தளத்தில் படித்தேன்

    //செய்முறைகளுடன் விரிவாக நல்லதொரு பதிவு//

    இன்னும் நிறைய இருக்கு சகோ

    நன்றி

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்..

    பயணுள்ள தகவல்.

    ReplyDelete
  14. @இளம் தூயவன்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    நன்றி சகோ

    ReplyDelete
  15. அருமையான எளிமையான பயிற்சி. அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  16. @அமுதா கிருஷ்ணா

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி

    இன்னும் மூன்று நாட்களில் அடுத்த பதிவு

    தொடர்ந்து படியுங்கள் நன்றி

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! மிகவும் அவசியமான‌ அருமையான பதிவு. இந்த பயிற்சிகளுக்கிடையில் சிறிது நேரம் கண்களை மூடியிருந்து திறப்பது நல்லது என்பார்களே? அப்படியா சகோ?

    ReplyDelete
  18. பயனுள்ள இடுகைங்க ஹைதர் அலி.. நன்றியும்..

    ReplyDelete
  19. @அஸ்மா

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..


    //இந்த பயிற்சிகளுக்கிடையில் சிறிது நேரம் கண்களை மூடியிருந்து திறப்பது நல்லது என்பார்களே? அப்படியா சகோ?//

    சரிதான் மூடியிருந்து திறப்பதும் நல்லதுதான்

    நன்றி சகோ

    ReplyDelete
  20. @க.பாலாசி

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியுங்க..

    ReplyDelete
  21. @ராஜவம்சம்
    பதில் தாமதமாக கொடுப்பதற்கு மன்னிக்கவும்

    முதல் வீடியோ இருபக்கம் மட்டும் பார்க்கும் வேற பயிற்சி

    இரண்டாவது மூன்றாவது இருக்கும் வீடியோ இரண்டாவது பயிற்சி

    முதல் வகை பயிற்சிக்கு ஒரு வீடியோ

    இரண்டாவது பயிற்சிக்கு இரண்டு வீடியோ

    சரி

    இரண்டாவது வீடியோ

    வலது கட்டை விரலை பாருங்கள், பின்பு தரையை பாருங்கள் பிறகு இடதுகட்டைவிரலை பாருங்கள் பிறகு மேலே மேற்கூரையை பாருங்கள்.

    மூன்றாவது வீடியோ


    இடது கட்டைவிரலை பாருங்கள் பிறகு மேலே பாருங்கள் பிறகு வலது கட்டைவிரலை பாருங்கள் அப்புறம் தரையை பாருங்கள்.

    வித்தியாசம் தெரிகிறதா

    நன்றி நண்பரே

    ReplyDelete
  22. சகோதரர் ஹைதர் அலி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தொடந்து தரமான பதிவுகளை தந்து வருகின்றீர்கள். ஜசக்கல்லாஹ்...

    இரு வருடங்களுக்கு முன் கண் பிரச்சனையில் சிக்கியபோது நீங்கள் பதிவில் கூறியுள்ள சில பயிற்சிகளை செய்ய சொன்னார்கள் மருத்துவர்கள். அன்றிலிருந்து காலையில் ஒருமுறை, இரவில் தூங்க செல்லும் மற்றொருமுறை என்று தவறாமல் செய்து வருகின்றேன். நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டிருப்பதாக உணர்கின்றேன். கணங்கள் காய்ந்து போயுள்ளதாக கூறிய மருத்துவர்கள் இன்று அந்த பிரச்சனை இல்லையென்று கூறுகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

    சிறப்பாக தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  23. @சுவனப்பிரியன்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    உங்கள் அன்பு கட்டளையை ஏற்றுக் கொள்கிறேன்

    நன்றி சகோ

    ReplyDelete
  24. @Aashiq Ahamed
    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //தொடந்து தரமான பதிவுகளை தந்து வருகின்றீர்கள். ஜசக்கல்லாஹ்..//

    அல்ஹம்துலில்லாஹ்

    உங்களுடைய அனுபவப்பூர்வமான பலனை பகிர்ந்துக் கொண்டதிற்கு நன்றி சகோ

    ReplyDelete
  25. இன்று உலகமே கணினிமயமாகியுள்ள இக்கால கட்டத்தில்,கணினியில்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் கணினியில் இருந்து கண்களைப் பாதுகாக்க அருமையான பயிற்சியை வழங்கியுள்ளீர்கள்.நன்றி தொடரட்டும் உங்கள் பணி......

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும்.நல்ல ஜிம்முக்கு போய்வந்ததுபோல் இருந்தது. அனைவருக்கும் பொதுவான அத்தியாவசியமான பதிவு.

    ReplyDelete
  27. @Sadikeen

    //தொடரட்டும் உங்கள் பணி......//

    உங்களின் ஆதரவோடு

    நன்றி சகோ

    ReplyDelete
  28. @மு.ஜபருல்லாஹ்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //ஜிம்முக்கு போய்வந்ததுபோல் இருந்தது. அனைவருக்கும் பொதுவான அத்தியாவசியமான பதிவு.//

    நன்றி சகோ

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  29. @M.Tajudeen

    Inshallah, I will post about Hair fall in next three days... Thanks for visiting my web page.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    வரலாற்று தொடர்களுக்கு மத்தியில் சிறப்பான விழிப்புணர்வு தொடர்., உங்களது நீண்ட பணிகளுக்கு மத்தியிலும் இதைப்போன்ற தேவையான பதிவுகளை அதிகம் தருவது மகிழ்வளிக்கிறது அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்து இன்னும் ஏராளமான பதிகள் எழுத அருள் புரிவானாக!

    ReplyDelete
  31. @G u l a m

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    அல்ஹம்துலில்லாஹ்

    //அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்து இன்னும் ஏராளமான பதிகள் எழுத அருள் புரிவானாக!//

    உங்களுடைய பிரார்த்தனையை கண்டு மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது சகோ
    அல்ஹம்துலில்லாஹ்

    நன்றி சகோ

    ReplyDelete
  32. http://www.ayurvedictalk.com/eye-exercise-in-yoga/311/

    I really appreciated Mr.Hyder for his efforts for making this blog...

    But All the eyes ball movements should be slow...Not as shown in Video...please check the link on the top(per yoga)

    Refer also
    http://en.wikipedia.org/wiki/Saccade#Comparative_physiology

    There are more simply exercises for those who work continuous on computer..please check link below..

    http://www.wikihow.com/Exercise-Your-Eyes

    Anyhow, thanks my friend for making this blog...

    ReplyDelete
  33. அஸ்ஸலாமு அழைக்கும்
    அனைவருக்கும் பயனுள்ள பதிவு

    ReplyDelete
  34. en kankal siruthu ulle irukirathu .frnds kudai kanna endru koorugindranar alavai perithakka veliye kondu vara ethum payirchi irukirathaa ? ..bala

    ReplyDelete
  35. @BaSHa
    அண்ணே பாட்ஷா வோகம்ன 100 கிலோ மீட்டர் வோகமில்லை

    மித வேகமாக சுழற்ற வேண்டும்

    நீங்கள் கொடுத்த சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  36. @Jainudeen

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    நன்றி சகோ நட்பை தொடருங்கள்

    ReplyDelete
  37. பதிவுக்கு நன்றி! தொடரவும்.

    ReplyDelete