Saturday, March 19, 2011

தலைமுடி கொட்டுவதை நிறுத்த, முழு உடலும் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சி

   இன்று நான் சொல்லிக் கொடுக்க போகிற பயிற்சி மிக முக்கியமானது இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் மிகப்பெரும் பலனை அடைவீர்கள். இது முழு உடலுக்கான பயிற்சி.

இதனை யோக பயிற்சியாளர்கள் சர்வாங்காசனம் என்று அழைப்பார்கள்.
சர்வ+அங்க+ஆசனம்=சர்வங்காசனம். அங்கம் என்றால் உடற்பகுதி என்று பொருள்.சர்வம் என்றால் எல்லாம் என்று பொருள்.

இந்த பயிற்சி எப்படி முழு உடலுக்கும் பலன் அளிக்கிறது என்பதை பார்ப்போம்

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.

இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருந்தால் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒன்றையொன்று தொடர்பு கொண்டு தொழில் புரியும் நம் உடலில் உள்ள கோளங்களில் ஒன்று கெட்டாலும்,மற்ற எல்லாக் கோளங்களும் பாதிக்கப்படும்.


தைராய்டு சுரப்பியின் வரைபடம்
தைராய்டு சுரப்பி

முக்கியமாக,கழுத்தில் குரல் வளையை ஒட்டினாற்போல் உள்ள தைராய்டு கோளமானது சிறுதாமரை இலையைப் போன்று தோற்றமுடையது.உடல் வளர்ச்சிக்கு இதன் ஆரோக்கியம் அவசியமாகும்.

இக் கோளமானது தனது பணியை ஒழுங்காகச் செய்யாவிடின்,மனித உருவத்தில் இருக்கும் அபூர்வ ஜந்துவாகத்தான் மனிதன் இருக்க வேண்டி இருக்கும். வளரவே மாட்டான்.இதன் விளைவாக பெண்கள் பெண்மையையும்,ஆண்கள் ஆண்மையையும் இழக்கின்றனர்.

இந்த தைராய்டு சுரப்பி முறையாக இயங்க இப்பயிற்சி உதவி செய்யும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு


1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.5.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

6.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

7.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.

8.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

9.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும், எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை


1.இப்பயிற்சியை செய்யத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது பேச வேண்டுமெனில் பேசிவிட வேண்டும்.ஏனெனின் இப்பயிற்சியை செய்யும்போது வாய்மூடியே இருக்க வேண்டும்.
(நீ மட்டும் பேசலாமா என்று கேட்காதீர்கள் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக பேசினென்)


2.வாயில் உமிழ் நீர் ஊறினால் கூட விழுங்கக் கூடாது. பயிற்சி மூடியும் வரை உமிழ் நீரை வாயில் வைத்துக் கொண்டு பயிற்சி முடிந்த பிறகு தான் உமிழ வேண்டும். அப்படி முடியவில்லையெனில் பயிற்சியை முடித்துக் கொண்டு பிறகு செய்யவும்.
      வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்இந்த வீடியோவை நன்றாக கவனித்துப் பாருங்கள்


செய்முறை விளக்கம்:


முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் கால்களுடனும், உடலுடனும் சேர்த்தாற் போலும் நீட்டிக் கொள்ளவும்.
பின்னர், மூச்சைப் பிடித்துக் கொண்டு,சேர்த்து நீட்டி வைத்துக் கொண்டிருந்த இரண்டு கால்களையும் மேலே தூக்குங்கள். அப்படியே தூக்கிக் கொண்டே புட்டம் முதுகு முதலியவைகளையும் தூக்கி, இரண்டு கைகளையும் மடித்து இடுப்புக்குக் கீழே கொண்டு வந்து பிடித்து உடலை நேராய் நிமிர்த்தவும், தலை முன்பக்கம் குனிந்து முக வாய்க்கட்டை மார்பில் அழுத்தும்படி பார்த்துக் கொள்ளவும்.

கால்களை மேலே தூக்கும் போது மூச்சை விடக்கூடாது. கால்களை அகற்றக் கூடாது.

வாய் மூடியிருக்க வேண்டும். மூச்சை சாதாரணமாக விட்டுக் கொண்டு இருக்கவும். இப்பொழுது இப்பயிற்சி செய்பவரின் உடல் பாரமெல்லாம் நிலத்தின் மீதிருக்கும். தலை,கழுத்து தோள்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும்.

உடலின் பாரத்தை கைகளின் மீது சுமத்தக் கூடாது. அதற்குபிறகு இரத்தம் முகத்திலும் மயிர்கால்களிலும் இரத்த ஓட்டம் பாய்வதற்காக உங்களுடைய கால்களை சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்றுங்கள்.(ஆரம்பத்தில் பத்து முறை போதுமானாது)

பிறகு இரண்டு கால்களையும் நேராக வைத்து இடது காலை மேலே நிறுத்தி விட்டு வலது காலை மடக்காமல் கால்களை தலைக்கு நேராக இறக்கி தரையைதொடுங்கள் இப்படி இரண்டு கால்களைம் மாற்றி மாற்றி செய்யலாம்.
(இதுவும் ஆரம்பத்தில் பத்து முறை போதுமானாது)

சிலருக்கு எடுத்தவுடனே தரையை தொடுவதேன்பது முடியாது அவர்கள் சைக்கிள் ஓட்டுவது மட்டும் செய்தால் போதுமானாது பயிற்சி நன்றாக கைகூடிய பிறகு தரையை தொட முயற்சி செய்யுங்கள்.

இப்பயிற்சியை முடிக்கும் சமயம், இடுப்பின் அடியைத் தாங்கும் கைகளைத் தளர்த்தி, கைகளின் மேலே உடலை நழுவவிட்டுக் கொண்டே வந்து,கால்களை தரையில் வையுங்கள்.அதன்பின் கைகளை பக்க வாட்டில் நீட்டிக் கொண்டு சற்று இளைப்பாறிக் கொள்ளலாம்.

இரண்டு கால்களை மேலே தூக்குவது சுலபமாக இருக்கும். ஆனால் இடுப்பையும்,முதுகையும் சேர்ந்தாற் போல் தூக்குவது முடியாமல் சிரமமாய் இருக்கும். பிறகு நாளாக,நாளாகச் சரியாகி விடும். மிகவும் முடியாதவர்கள் சுவரின் உதவி கொண்டும் செய்யலாம்.

அதாவது-

கால்கள் இரண்டையும் சுவரில் சாய்த்து வைத்து தூக்கி, கைகளை மடக்கி முழங்கைகளை ஊன்றி, மூச்சைப் பிடித்து, இரண்டு குதிகால்களை மட்டும் சுவரில் படும்படியாக வைத்து, இடுப்பு, முதுகு இவற்றை நன்றாக தூக்க வேண்டும்.கைகளை இடுப்பில் கொடுத்து நன்றாகப் பிடித்துக் கொண்டு தூக்க வேண்டும். இப்படி பழகிய பின்பு சுவரின் உதவியின்றி இப்பயிற்சியை எளிதாக செய்யலாம்.

இப்பயிற்சியால் எற்படும் பலன்கள்:


இதனால் முதுகு,கழுத்து, முழங்கால் இவற்றில் வலி ஏற்படலாம். நாளாக நாளாகச் சரியாகிவிடும்.


இப்பயிற்சியினால் முடி கொட்டுவது நின்று முடி நன்றாக வளரும்.இது முதுமையை சீக்கிரம் வரவிடாது தடுக்கும் ஆற்றல் உடையது.தொண்டையில் சதை வளர்வதைத் தடுக்கும்.


தைராய்டு கோளமானது சரிவர வேலை செய்யுமாயின் ஆளை வளர்த்து. இளமையைக் காக்கும்.ஆண்களைக் காட்டிலும் தைராய்டு கோளமானது பெண்களுக்குத்தான் மிகவும் நன்றாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்,பிரசவம்,குழந்தைகளுக்குப் பால் கொடுத்தல் போன்றவை இவை துனையுடன் தான் செயல்படும். இத் தொந்தரவுகள் இல்லாதிருக்க,பெண்களும் இப்பயிற்சியை மேற்கொள்ளுதல் மிகுந்த பயனைத் தரும்.


இந்த பயிற்சியை செய்வதன் மூலம் இனப்பெருக்க உறுப்புகளில் தோன்றக்கூடிய அனைத்துப் பிணிகளையும் வரவொட்டாமல் தடுத்துக் கொள்ளலாம். இரத்த அழுத்தம் இருதய வியாதி,யானைக்கால் வியாதி, பொன்னுக்கு வீங்கி, காக்காய் வலிப்பு போன்றவையும் இப்பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்து வருபவர்களிடம் வரவே பயப்படும்.இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.

    
20 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஹைதர் அலி.

  மிக நல்லதொரு இலவச பயிற்சி வகுப்பு. விடியோ அருமை. ஜ்சாக்கல்லாஹ் க்ஹைர். பயனடைவோரின் துவாக்கள் என்றென்றும் உங்களுக்கு உண்டு.
  மிக்க நன்றி சகோ.

  அப்புறம், தானாக இடுப்பை தூக்குவதற்கு ஏதும் டிப்ஸ் உண்டா? என்னால் சுவரின் உதவி இன்றி தனியாக செய்ய இயலவில்லை(புதிது என்பதாலோ?).

  //இதனால் முதுகு,கழுத்து, முழங்கால் இவற்றில் வலி ஏற்படலாம். நாளாக நாளாகச் சரியாகிவிடும்.//---ஆஹா..! இதற்கு என்ன வைத்தியம்...? அதையும் சொல்லி விடுங்கள். வலி இருக்கும் போதும் செய்யலாமா?

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்!

  மிக சிறந்த பதிவு தோழரே! தேடிப் பிடித்து அரிய பதிவுகளாக தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தாலிபான்கள் சம்பந்தமான பதிவு ஏனோ திறக்கவில்லை. அதையும் சரி பாருங்கள்.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான பயிற்சிகளைத் தொடர்ந்து கற்றுத்தரும் உங்கள் பணிக்கு வல்ல இறைவன் சிறந்த நற்கூலியை வழங்குவானாக! இந்த பயிற்சியை சிசேரியன் பண்ணியவர்கள் மற்றும் லோ/ஹை பிரஷ்ஷர் உள்ளவர்கள் செய்யலாமா சகோ? அல்லது அதுபோன்றவர்கள் இந்த பயிற்சியைக் கையாள வேறு எதுவும் வழி இருக்குமா?

  ReplyDelete
 4. பிரயோசமானது, நன்றி

  ReplyDelete
 5. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்March 20, 2011 at 12:39 AM

  அருமையான மற்றும் மிகவும் தேவையான பதிவும்கூட‌ நன்றி ஹைதர் அண்ணே
  (குறிப்பு: முகநூலில் இப்பதிவை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்றிருந்தேன் ஆனால் அதற்க்கான‌ option கிடைக்கவில்லை)

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்March 20, 2011 at 11:08 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  இந்த‌ ப‌யிற்சியை முடி உதிர்ந்த(சொட்டையாக இருப்ப)வ‌ர்க‌ள் மேற்கொண்டால் முடி வ‌ள‌ர்வ‌த‌ற்கு வாய்ப்புக‌ள் இருக்கிற‌தா என்ப‌தை தெளிவுப‌டுத்துங்க‌ள் ஹைத‌ர் அண்ணே

  ReplyDelete
 8. @முஹம்மத் ஆஷிக்

  வ அலைக்கும் வஸ்ஸலாம்..

  //மிக நல்லதொரு இலவச பயிற்சி வகுப்பு. விடியோ அருமை. ஜ்சாக்கல்லாஹ் க்ஹைர். பயனடைவோரின் துவாக்கள் என்றென்றும் உங்களுக்கு உண்டு.
  மிக்க நன்றி சகோ.//

  உங்களுடைய துஆ வுக்கு நன்றி

  //அப்புறம், தானாக இடுப்பை தூக்குவதற்கு ஏதும் டிப்ஸ் உண்டா? என்னால் சுவரின் உதவி இன்றி தனியாக செய்ய இயலவில்லை(புதிது என்பதாலோ?).//

  படுத்துக் கொண்டு கால்கட்டை விரலை தலையை தொடுவது போல் கொண்டு வந்து அதே நேரத்தில் இடுப்பில் கைகளால் முட்டு கொடுங்கள் இப்போது காலை மேலே தூக்குங்கள் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம்

  //! இதற்கு என்ன வைத்தியம்...? அதையும் சொல்லி விடுங்கள். வலி இருக்கும் போதும் செய்யலாமா?//

  இதற்கு ஒரு வைத்தியமும் இல்லை

  வலி ஏற்ப்பட்டு உடல் உறுதியாகி பிறகு வலி மறைந்து விடும்

  வலிகள் எதனையும் ஏற்காமல்
  வழிகள் எதுவும் திறக்காது

  நன்றி சகோ

  ReplyDelete
 9. @சுவனப்பிரியன்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்றி சகோ விரைவில் அந்த பதிவு
  வெளிவரும்

  ReplyDelete
 10. @Pranavam Ravikumar a.k.a. Kochuravi

  உங்களின் முதல் வருகைக்கு

  நன்றி நண்பரே

  ReplyDelete
 11. @அஸ்மா
  //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான பயிற்சிகளைத் தொடர்ந்து கற்றுத்தரும் உங்கள் பணிக்கு வல்ல இறைவன் சிறந்த நற்கூலியை வழங்குவானாக! இந்த பயிற்சியை சிசேரியன் பண்ணியவர்கள் மற்றும் லோ/ஹை பிரஷ்ஷர் உள்ளவர்கள் செய்யலாமா சகோ? அல்லது அதுபோன்றவர்கள் இந்த பயிற்சியைக் கையாள வேறு எதுவும் வழி இருக்குமா?//

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  முதலில் உங்களுடய பிரார்த்தனைக்கு நன்றி.

  //சிசேரியன் பண்ணியவர்கள் மற்றும் லோ/ஹை பிரஷ்ஷர் உள்ளவர்கள் செய்யலாமா சகோ?//

  அனைவரும் செய்யலாம்

  நன்றி சகோ

  ReplyDelete
 12. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம்..

  வாங்க தம்பி ரொம்ப நாள உங்கள காணவில்லை


  //(குறிப்பு: முகநூலில் இப்பதிவை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்றிருந்தேன் ஆனால் அதற்க்கான‌ option கிடைக்கவில்லை)//

  அந்த வசதி இருக்கிறது எனது நண்பர்கள் அவர்களுடைய முகநூலில் வெளியிட்டுயிருக்கிறார்கள் முயற்சிக்கவும்

  நன்றி சகோ

  ReplyDelete
 13. @ராஜ நடராஜன்

  உங்களுடைய முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 14. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //இந்த‌ ப‌யிற்சியை முடி உதிர்ந்த(சொட்டையாக இருப்ப)வ‌ர்க‌ள் மேற்கொண்டால் முடி வ‌ள‌ர்வ‌த‌ற்கு வாய்ப்புக‌ள் இருக்கிற‌தா என்ப‌தை தெளிவுப‌டுத்துங்க‌ள் ஹைத‌ர் அண்ணே// முடி வளர வாய்ப்பு குறைவு இனிமேல் முடி கொட்டாமல் பாதுகாத்து கொள்ளலாம்

  ReplyDelete
 15. ஆ... சர்க்கஸ் வித்தை மாதிரிதான் எனக்குத் தெரியுது இந்தப் பயிற்சி!! ஏற்கனவே சொன்ன மூணுமே திகிலா இருக்கு.. இது... செய்வேன்னு தோணலை!!

  ஏற்கனவே லோ-பேக் பெயின் இருந்தாலும் செய்யலாமா?

  ReplyDelete
 16. சகோ ஹுஸைனம்மா

  இது கொஞ்சம் கஷ்டமான பயிற்சிதான்


  //ஏற்கனவே லோ-பேக் பெயின் இருந்தாலும் செய்யலாமா?//

  செய்யலாம்

  ஆனால் ரொம்ப கஷ்டப்பட்டு பயிற்சிகளை செய்யக்கூடாது

  ReplyDelete