Thursday, May 19, 2011

ஜெயலலிதாவின் சாம, தான, பேத, தண்டத்தில் வீழ்ந்த இஸ்லாமிய இயக்கங்கள்.சாமம்- (சிறுபான்மையினரின் காவலர்) இன்சொல் கூறு; உறவாடி கெடு
தானம்- (பதவி, பணம், இலவசங்கள்) கொடுத்துக் கெடு 
பேதம்- மிரட்டி காரியம் சாதித்தல் அல்லது பயங்காட்டுதல்
தண்டம்- தண்டித்தல், அடித்தல் மெளரிய பேரரசர் சந்திர குப்தனின்பார்ப்பன அரசவையின் அமைச்சராக இருந்தசாணக்கியன், மேலே கூறிய இந்த நான்கு அடிப்படையில்தான் பார்ப்பன ஆட்சியை நிலைநாட்டினான் என்று வரலாறு சொல்லுகிறது. இதைஅர்த்த சாஸ்த்திரம்என்பார்கள். 

இந்த புத்தகத்தை படித்துப் பாருங்கள்.சாணக்கியனின் நயவஞ்சகம், நம்பிக்கை மோசடிஇவைகளை 'ராஜதந்திரம்' என்ற சொல்லோடு உங்களின் கண்முன் நிறுத்தும்.

சாணக்கியன் அப்படி உண்மையில் அப்படி செய்தானா அவன் சாதித்தானா என்பது கூட சந்தேகம்தான். ஆனால்செல்வி ஜெயலலிதாஇந்த சூத்திரத்தை அச்சு பிசகாமல் செய்யக்கூடியவர்.


சாமம் ‍ (சிறுபான்மையினரின் காவலர்) இன்சொல் கூறு; உறவாடி கெடு


கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்சிறுபான்மையினரின் விரோத அரசு'என்று கருணாநிதியைச் சாடியவர் தன்னை சிறுபான்மையினரின் காவலராக காட்டிக் கொண்டார். அதைவிடக் கொடுமை, விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக சிறைக்குள் தள்ளப்பட்ட வை.கோ. வின் வாயால்ஈழத்தாய்'என்று பட்டம் பெற்றார். உண்ணாவிரதம் இருந்து வை.கோ. கையால் பழச்சாறு குடித்தார். கடைசியில் இவர் வை.கோ.விற்கு அல்வா கொடுத்தது வேறு கதை.


தானம் - (பதவி, பணம், இலவசங்கள்) கொடுத்துக் கெடு 

இஸ்லாமிய இயக்கங்களான‌ த.த.ஜ, த.மு.மு.க இந்த இரு அமைப்புகளோடும் தானத்தில் இறங்கினார். த.மு.மு.க வுக்கு மூன்று பதவிகள் என்றால் த.த.ஜ. வுக்கு 5% இட ஒதுக்கீடு. த.மு.மு.க வின் பேரம் படிந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தேர்தல் அறிக்கையில் வெளியிடச் சொன்னார்கள். கலைஞர் அறிவித்த இலவசங்களை அப்படியே காப்பி அடித்து ஒன்றுக்கு இரண்டு என்று அறிவித்தவர், இடஒதுக்கீட்டை மட்டும் காரண காரியத்தோடு மறுத்ததால் அவர்கள் வெளியேறினாலும் த.மு.மு.க வின் பிரச்சாரத்தின் காரணமாக இடஒதுக்கீடு தருவார் என இஸ்லாமிய மக்களை நம்பவைத்தார். 


பேதம் - மிரட்டி காரியம் சாதித்தல் அல்லது பயங்காட்டுதல்

இதற்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை கேரளாவைப் போல் இரண்டு சீட், மூன்று சீட் வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்திருந்தால் மூன்றாவது படித்தரத்தை பயன்படுத்தியிருப்பார். நம் மக்கள் வாரி வழங்கி தனிப்பெரும்பான்மை பெறச் செய்துவிட்டபடியால் இனி நேராக தண்டம்தான். அதைத்தான் நரேந்திரமோடி விஷயத்தில் செய்தார்.
தண்டம் - தண்டித்தல், அடித்தல்.


நரேந்திர மோடியை பதவியேற்பு விழாவிற்கு வரவழைத்து முதல் அடியை முறைப்படி தொடங்கி வைத்தாலும், இன்னும் ஜெயாவிடம் நிறைய எதிர்பார்க்கலாம். ஆனால் அடி வாங்கிய‌ முனகல்கூட இல்லாமல் எப்படி இந்த இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற ம.ம.க

த.மு.மு.க என்ற பெயரோடு இருந்தபோது மேடைகளில் 'அரசியலில் இறங்கினால் செருப்பைக் கழற்றி அடியுங்கள்' என்று வீரவசனம் பேசினார்கள். 'அல்லாஹ் மீது சத்தியமாக தேர்தலில் போட்டியிடமாட்டேம்' என்று சத்தியம் செய்தார்கள். ஆனால் ம.ம.க (மனிதநேய மக்கள் கட்சி) என்ற அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்து, தேர்தல் பாதையை தேர்ந்தேடுத்தார்கள்.


நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு, அதற்கு 'ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி' (A.F.F) என பெயரிட்டு கறுப்புக் கொடியை கையில் ஏந்தி மரண வியாபாரி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லாஹ், இப்போது மோடி அழைக்கப்பட்ட பதவியேற்பு விழாவிற்கு ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கிற அளவுக்கு அரசியல் தெளிவு பெற்றுவிட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இவர்களும் எந்தவித போராட்டங்களும் அறிவிக்காமல் இருப்பது மர்மமாக இருக்கிறது. அவர்களுடைய இணைய தளத்தில் கூட இதைப்பற்றி எழுதவில்லையே, ஏன்? 

video

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் போராடத்தான் செய்வோம்' என்று சொல்கிற இவர்கள் நரபலி மோடி வருகைக்காக ஏன் போராடவில்லை? ஏன் இந்த மவுனம்?

விடியல் வெள்ளி, PDF, SDPI, MNP 

இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 'தவ்ஹீத் ஜமாஅத்', 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' இவர்கள் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியபோது பகடி செய்தார்கள். "அபூஜஹ்ல் போருக்கு வந்தபோது, முஹம்மது நபி(ஸல்)அவர்கள் 'திரும்பிப் போ, திரும்பிப் போ! அபூஜஹ்லே திரும்பிப் போ! என்று போர்டு வைத்துக் கொண்டு போராடவா செய்தார்கள்?" என்று கேலி செய்தவர்கள், மோடி போயஸ் தோட்டத்திற்கு விருந்துக்கு வந்தபோது 'நரமாமிசம் தின்ற மோடியே! உனக்கு போயஸ் தோட்டத்தில் விருந்தா?' என்று போர்டு வைத்துக்கொண்டு போராடினார்கள்.ஜனநாயக வழியில்அப்போதுபோராட வந்தது மகிழ்ச்சிக்குரியதே! அப்படி போராடியவர்கள் இப்போது மவுனமாக இருப்பது ஏன்? முதலில் அடிக்கு அடி கொடுக்கவேண்டும் என்று சொன்னவர்கள், பிறகு ஜனநாயக வழியில் தங்களை மாற்றிக் கொண்டவர்கள், அதைக் கூட புறக்கணிக்கின்ற காரணம் என்ன?

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்


தவுஸன் வால்ட் சவுண்டில் அலறிப் பேசக்கூடிய அந்த அமைப்பின் தலைவர்S.M.பாக்கர், ஜெயலலிதா வென்றவுடன் 'அதற்கு நாங்கள்தான் காரணம்; ஒவ்வொரு வீடு வீடாக சென்றோம்; மக்களைத் தட்டி எழுப்பினோம்' என்று சுடச்சுட ராஜ் டிவிக்கு பேட்டிக் கொடுக்கத் தெரிந்த அவருக்கு, மோடி வருகையைக் குறித்துப் பேச மறுத்தது ஏன்? தவுஸன் வால்ட் ஸ்பீக்கர் ஆஃப் ஆன ரகசியம் என்ன?இறுதியாக

'தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு,முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் மோடி வருகையை எதிர்க்காமல் இருந்த விஷயத்தில்!


13 comments:

 1. சகோதரர் ஹைதர் அலி,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  ----------
  'தமிழ்நாட்டில் முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு, முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் மோடி வருகையை எதிர்க்காமல் இருந்த விஷயத்தில்!
  -----------

  வருத்தப்பட வைக்கும் ஒற்றுமை....

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோதரர் ஹைதர் அலி,
  அதிரடியாய் எழுதியுள்ளீர்கள்.

  சாம பேத தான தண்டத்துக்கு அருமையான விளக்கம்.

  அத்துடன் இந்த கச்சிதமான கார்ட்டூன் எனது தற்போதைய பதிவை முழுதாக சொல்லி விடுகிறது.

  //வருத்தப்பட வைக்கும் ஒற்றுமை....//--வழிமொழிகிறேன்..!

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்!

  அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. இனியாவது நமது தோழர்கள் இது விஷயத்தில் சற்று உஷாராக இருப்பது நல்லது.

  ReplyDelete
 4. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்May 21, 2011 at 12:27 AM

  ////முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் மோடி வருகையை எதிர்க்காமல் இருந்த விஷயத்தில்!/////
  அஸ்ஸலாமு அலைக்கும்

  கட்டுரை அருமை சகோ.நரபலி மன்னன் மோடி வருகையை எந்தவொரு இஸ்லாமிய இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவிக்காமை ஏமாற்றத்தை அளிக்கிறது.பெரும்பாண்மையான தொகுதிகளை வென்று ஆளும் கட்சியாக உருவெடுத்த அதிமுகவைப்பார்த்து எல்லா இயக்கங்களும் பயத்துவிட்டார்களென்று நினைக்கிறேன் சகோ.

  ReplyDelete
 5. முஸ்லிம் இயக்கங்கள் மோடி எதிர்ப்பு விஷயத்தில் நீர்த்துப் போனது ஏன்? என்பது மனதை அரிக்கிறது. இவர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளைத் தான் பிரதிபலிக்கிறார்களா? அல்லது தங்களது அபிலாஷைகளுக்கு முஸ்லிம்களின் உணர்வுகளை அடகு வைக்கிறார்களா? ஆனால் தமிழகத்தின் பி.ஜே.பி. அதிமுக தான். பீகாரின் நிதிஷ் கூட மோடி விஷயத்தில் உஷாராக இருந்துள்ளார், மோடியை ப்ரச்சாரம் செய்ய கூட பீகாருக்கு அவர் அழைக்கவில்லை. பாஸிஸ அரசியலை தூக்கிப் பிடிக்கும் ஒரு துவேஷ அரசியல்வாதியை நியாயமானவர்கள், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யாவரும் புறக்கணித்தே வந்துள்ளனர். ஆனால் ஜெ?. ஜெயா அம்மையாரின் சாம,தான,பேத,தண்ட வைத்திய முறைகளில் ம.ம.க. அலறி புடைக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.

  ReplyDelete
 6. @Aashiq Ahamed
  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  தங்கள் வருகைக்கும் சரியான மறுமொழிக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 7. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்களுடைய பதிவை பார்த்த பிறகு தான் நானும் அது சம்பந்தமாக எழுதினேன் நன்றி சகோ

  கார்ட்டூன் சகோ சுவனப்பிரியன் அவர்களின் தயாரிப்பு அவருக்கு நன்றிகள்

  ReplyDelete
 8. @சுவனப்பிரியன்
  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
  சரியான கார்ட்டூன் வரைந்து கொடுத்ததிற்கு நன்றி சகோ

  ReplyDelete
 9. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  ஒரு வகையில் உங்களின் கூற்று உண்மையாக இருக்கலாம்

  ReplyDelete
 10. @உதயம்
  //ஆனால் ஜெ?. ஜெயா அம்மையாரின் சாம,தான,பேத,தண்ட வைத்திய முறைகளில் ம.ம.க. அலறி புடைக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.//

  பார்ப்போம் சகோ என்ன செய்கிறார்கள் என்று

  ReplyDelete
 11. ARASIYALIL ITHU ELLAAM SAKAHAMPPAA...

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும்
  இயக்கவாதியாய் இருந்த நான் இந்தவிசயத்தில் எனது இயக்கம் இயங்காமல் போனதால் இப்பொழுது நான் இயங்கா வாதியாகி விட்டேன்.
  (ஆனால் அடி வாங்கிய‌ முனகல்கூட இல்லாமல் எப்படி இந்த இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.)
  உண்மைகள் கசக்கவே செய்யும்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே

   ///உண்மைகள் கசக்கவே செய்யும்//
   சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே

   Delete