Friday, May 6, 2011

வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தாலிபானா..? பதில் சொல்..!

       வன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.

இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?

 ஆனால் அந்த நபர் வருகிறார் அடிவாங்கி கிழிந்த சட்டையின் ஒட்டை வழியாக அந்த உள்பனியனை பார்க்கிறார். ஆ பச்ச பனியன் உள்ளே அல்லாஹு அக்பர் என்று எழுதியிருக்கிறது. இவருக்கு முகம் சிவக்கிறது செவப்பு பனியன் போட்டு அதில் செவ்வணக்கம் என்று அல்லவா இருக்க வேண்டும்? அவர் எதிர்பார்த்தது இல்லை ஏண்டா இப்படி திருடுற சார் இவனை அடியுங்க சார் என்கிறார்

  இது புனைவாக இருந்தாலும் சுடும் உண்மை


டிப்டாப் ஆசாமி அமெரிக்க வல்லாதிக்க வெறியர்கள் காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு மண் வீடுகளில் வசிக்கின்ற ஆப்கானியர்களின் வீட்டில் புகுந்து திருடுகிறான் கொல்லுகிறான் ஊடக பலமில்லாத ஊமையர்களான ஆப்கானியர்களின் வீட்டில் நடக்கும் எழவு வீட்டு ஒப்பாரி வெளியே கேட்பதில்லை.

தங்களை முற்போக்குவாதிகள், நடுநிலைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்கள் என்று சொல்லி கொள்கிற வினவு குழுவினர் பாதிக்கப்பட்டவன் செவப்பு சட்டைக்காரனா என்று குழியைத் தோண்டி பார்க்கிறார்கள். செவப்பு சட்டையாக இருந்தால், பார்த்தீர்களா அநியாயத்தை மக்களுக்காக போராடிய போராளிகளை புதைத்து விட்டார்கள் என்று அலறுகிறார்கள். அதே வேறு கலராக இருந்தால் இவர்களும் சேர்ந்து மண்ணை அள்ளி மூஞ்சியில் போடுகிறார்கள்.

ஆம் வினவு என்கிற நக்சலைட்டுகள், அல்லது ம.க.இ.க அமைப்பைச் சேர்ந்த  குழுவினர்.
பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்! என்ற பதிவில் அப்பட்டமாக அதை தான் செய்தார்கள்.

இந்த அவதூறு பதிவில் வரிக்குவரி அவதூறுகள் அள்ளி வீசப்பட்டு இருக்கிறது. தாலிபான்களை பயங்கரவதிகளாக சித்தரிக்கிற ஊடகங்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இப்படி ஒரு பிரச்சாரத்தை யார் முடுக்கி விட்டு சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் அரசியல் ஆதாயம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா வினவு?

  
கடந்த நூறு ஆண்டுகளில் உலகளவில் சுமார் நூறு செய்தி நிறுவனங்கள் சேவையாற்றிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அது இருபதாகச் சுருங்கிவிட்டது. இதில் 66% செய்தி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது உலகில் 0.3விழுக்காட்டினராக இருக்கும் யூதர்களே ஆவர். அவர்கள் தரும் செய்திகளை ஊடகங்கள் எவ்வித விசாரணையுமின்றி அப்படியே வெளியிடுகின்றன.

இந்தியாவில் எட்டு விழுக்காட்டினராக (8%)இருக்கும் உயர் ஜாதிப்பிரிவினரே தேசிய ஊடகத்தின் மேல்மட்டத்தில் எழுபத்தோரு (71%) விழுக்காடு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இவர்கள் மாவோயிஸ்ட்களை பற்றி வெளியிடும் செய்திகளை மட்டும் மறுத்து பாசிச முதலாளிவர்க்க ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் என்று சொல்ல தெரிகிற வினவுக்கு தாலிபான்களை பற்றி வெளியிடுகிற செய்திகள் மட்டும் எப்படி உண்மையாக்கப்படுகிறது?

 1980,90 களில் கம்யூனிஸ நாடுகளை குறிவைத்து உள்ளே புகுந்து துவம்சம் செய்த ஜேம்ஸ்பாண்ட், ராம்போ போன்ற ஹாலிவுட் கதாபத்திரங்கள் இப்போதெல்லாம் கம்யூனிஸ நாடுகளுக்குள் நுழைவதில்லை. பெரிய முண்டாசு கட்டி, தாடி வைத்திருப்பவர்களை ஹாலிவுட்டில் துவம்சம் செய்து கொண்டிருக்கின்ற விஷயம் வினவு குழுவினருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லையே?
மாவோயிஸ்ட்களின் அரசியலை தெரிந்துக் கொள்வதற்காக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க நேர்ந்தது. 

இந்த புத்தகத்தில். 112 வது பக்கத்தில் ஒரு செய்தியை பாருங்கள்.

இயக்கத்தில் புதிதாகச் சேருவோருக்கு -குறிப்பாகச் சிறுவர்களுக்கு வன்முறையின் மீதான பயம் போகவேண்டுமென்பதற்காக மாவோயிஸ்ட்கள் மேற்கொள்ளும் ஓர் உத்தி, ஆப்கனிஸ்தானில் தாலிபன் இயக்கத்தில் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவது.

குற்றவாளி என்று அவர்கள் தீர்மானிக்கும் ஒருவரைப் பொது இடத்தில் கட்டிவைத்து ரத்தம் வர அடிப்பது, விரல்களை வெட்டுவது போன்ற தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றுவது, சுட்டுக் கொல்வது ஆகியவற்றைப் புதியவர்கள் முன்னிலையிலேயே பெரும்பாலும் செய்வார்கள். இம்மாதிரி ஏழெட்டு தண்டனை நிறைவேற்றங்களைப் பார்த்தபிறகு, ஒரு சில தண்டனைகளைப் புதியவர்களே நிறைவேற்றவும் வாய்ப்புத் தரப்படும். அதன் பிறகு அவர்களுக்கு ரத்த பயம் இராது.

அதே புத்தகத்தில் 114ம் பக்கத்தில் இன்னொரு செய்தியை பாருங்கள்.


கடத்தல் மாவோயிஸ்ட்களின் மிக முக்கியமான வருமான வழி இதுதான். ஆள்கடத்தல்,வழிப்பறி, பெரும் நில உடமையாளர்களிடமிருந்து அபகரிப்பது என்று சில வழிகளில் மாவோயிஸ்டுகள் தமது வருமானத்தைப் பெறுகிறார்கள். தவிரவும் மலைக்காடுகளில், மறைவிடத்தில் போதைப் பயிர் விளைவித்து, அதை ஏற்றுமதி செய்வதன் மூலமும் மாவோயிஸ்டுகள் தமது தேவைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அப்புறம் 115ம் பக்கத்தில்.

ஆகஸ்ட் 14,2007 அன்று ஒரிஸ்ஸா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்டத்தில் ஒரு கிராமவாசியை(போலீஸ் இன்ஃபார்மர் என்று சொல்லப்பட்டவர்) மாவோயிஸ்ட்கள் வெட்டிக் கொன்றார்கள். தனி இடத்தில் கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலை ஊர்ப் பொதுவுக்குக் கொண்டு வந்து போட்டு, ஆதிவாசி மக்களை சத்தமிட்டு அழைத்து, அவர்கள் எதிரே, கொல்லப்பட்ட மனிதரின் உடலைப் பிய்த்து அப்படியே பச்சையாகத் தின்னத் தொடங்கினார்கள்.

இறந்தவர் பெயர் முகுந்த மாதி.சம்பவம் நடந்த இடம்,பண்டிகுடா. மாவோயிஸ்ட் இயக்கத்தின் பப்லூர் பிரிவு கமாண்டர் பகத் என்பவரே அப்படிக் கொலை செய்து மனித மாமிசத்தைத் தின்றார்.

இந்த புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்களா வினவு? முடியாது தானே?

கிழக்கு பதிப்பகம் படிக்காதீர்கள், ஏதாவது பரபரப்பாக எழுதி வியாபரத்தை பெருக்கும் உத்தி. மாவோயிஸ்ட்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? கீழைக்காற்று பதிப்பக புத்தகங்களை படியுங்கள் என்று சொல்ல உங்கள் வாய் எத்தனிக்கிறதா? தேவையில்லை, நாங்கள் நிதானமாகத்தான் இருக்கிறோம். உங்களை போன்று பிற கொள்கைகளை இழிவுபடுத்தி எங்கள் கொள்கைதான் சரி என்று நிரூபிக்கிற தேவை எங்களுக்கு இல்லை.
மாவோயிஸ்ட்களை சந்தித்து பேசும் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள்


மாவோயிஸ்ட்கள் நல்லவர்கள் என்பதற்காக அவர்களை நேரடியாக சந்தித்த அருந்ததி ராய் அவர்களை பற்றிய விளக்கங்களை விரிவாக எழுத தெரிந்த உங்களுக்கு, தாலிபான்களின் சிறைக் கைதியாகி இருந்து தாலிபான்களைப் பற்றி உண்மைகளை சொன்ன யுவான் ரிட்லியின் செய்திகளை மறைக்கும் அவசியமென்ன வினவு?

பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்! இந்த பதிவில் நீங்கள் வைத்த அவதூறுகள் பா.ராகவனையும் மிஞ்சி விட்டீர்களே.


இதோ உங்களுடைய அவதூறுகள்


//பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர்.//


இது அப்பட்டமாக இந்துத்துவா வாதிகளின் பொய் பிரச்சாரத்தை அதாவது மதரசாக்களில் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்ற அவதூறுகளை வினவும் தனது பங்கிற்கு மெருகேற்றி விடுகிறார். இஸ்லாமிய அடிப்படையிலான மதரசாக்களுக்கும் தீவிரவாத‌த்திற்கும் என்ன சம்பந்தம்? குர்ஆன் வாங்க அமெரிக்க டாலர் கொடுப்பதற்கு முன் இஸ்லாமியரிடம் யாரிடமும் குர்ஆன் இல்லை அப்படித்தானே? 

//பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்///


அல்கைய்தா என்ற ஒரு அமைப்பே கிடையாதாம், உங்களுக்கு தெரியுமா வினவு? கீழேயுள்ள இரண்டு வீடியோவையும் பாருங்கள்.

                                              


// பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது.//

அய்யா வினவு பர்தா போடாவிட்டால் பெண்களை அடிக்க முடியுமா? கட்டுன புருஷன் மனைவியை அடிப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கும்போது அது எப்புடியிண்ணே புர்கா போடாத பெண்களை அடிக்க முடியும்?


”என் துணைவியரிடம் மதீனாவை சேர்ந்த பெண்கள் பலர் தங்கள் கணவர்கள் தங்களை அடிப்பதாக முறையிட்டுள்ளனர்.இவ்வாறு மனைவியை அடிப்பவர்கள் உங்களில் சிறந்தவர்கள் இல்லை.மக்களே! அல்லாஹ்வின் பெண் அடியார்களை உங்கள் மனைவிமார்களை அடிக்காதீர்கள்!” (நூல்:அபூதாவூத்)
இப்படி நடைமுறையில் ஒரு ஹதீஸ் இருப்பது உங்களுக்கு தெரியுமா வினவு?


அப்புறம் கல்வி கற்ற பெண்களுக்கு கல்லடி கிடைத்ததா? இந்த செய்தி ஒங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
”கல்வி கற்பது ஆண் பெண் இருவர் மீதும் கட்டாய கடமையாகும்” (அல்குர்ஆன்) என்று ஒரு வசனம் இருப்பது ஒங்களுக்கு தெரியுமா வினவு?

தீவிர மதவாதிகளான கடுங்கோட்பாட்டு கொள்கையுடைவர்கள் என்று உங்களால் சான்றிதழ் கொடுக்கப்பட்ட தாலிபான்கள் எப்படி குர்ஆன் கட்டளைக்கு எதிராக செயல்படுவார்கள்?


தாலிபான் என்கிற புஷ்துன் மொழி வார்த்தையின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா? கல்வி அளிப்பவர்கள் என்று பொருள்.

யுவான் ரிட்லி (Yvonne Ridley) என்கிற செய்தி சேகரிப்பாளர் தாலிபான்கள் கூட இருந்து தாலிபான்களின் உண்மை சித்திரத்தை உலகுக்கு சொன்னாரே அவரைப் பற்றி சொல்ல உங்களை தடுத்தது எது? இதுல நடுநிலைவாதியாம்!


இனி யுவான் ரிட்லி சொல்வதை பாருங்கள்.
யுவான் ரிட்லி அவர்கள்
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டியிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.//புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது.//
இஸ்லாமிய சட்டப்படி இப்படி இடிப்பது தவறுதான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விஷயத்தில் அவர்கள் கம்யூனிஸ்ட் போல செயல்பட்டார்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனும்போது ஜெகத்தினை எரிப்போம் என்று பாரதியார் சொன்னது போல.
இதே தமிழீழவாதி சீமான் சொல்வதை கேளுங்கள்.
//ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது.//


இப்படி உங்கள் பார்வையில் காலாவதியான இந்த மார்கத்தைப் பற்றி இவ்வளவு பெரிய பதிவா? இதில் ஒன்று மட்டும் தெரிகிறது இன்னும் உலகம் அழியும் வரை இயங்குவியல் மார்க்கமாக இருக்கிறது என்பதை உங்கள் எதிர்ப்பின் மூலம் விளங்கிக் கொள்கிறோம் வினவு.                                                                                                                                             

34 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ.ஹைதர் அலி,
  வினவை நையப்புடைத்து இருக்கிறீர்கள். மரண அடி..!

  அமெரிக்கா வாந்தி எடுப்பதை வினவு அப்படியே நம்பி விழுங்கிறது. ஆனால், நாம் ராகவன் சொல்வதை நம்பக்கூடாதாமா..? நல்ல கதை..!

  யுவான் ரிட்லி சொல்வதை நாம் நம்புவோம்..!

  வினவு நம்பாதது ஏன்..?

  சகோ.யுவான் ரிட்லி...
  ஓ..! அந்த பஸ்ஸில் பிக்பாக்கடிடம் பர்சை களவு கொடுத்து அடிவாங்கும் அல்லாஹுஅக்பர் பச்சை பனியன் போட்ட அப்பாவி அல்லவா இவர்..?

  ம்ஹூம்...! உண்மையை சொன்னாலும் இவர் "ஒத்துவராத மறுமொழி"க்கு உரியவர்..! அந்த அப்பாவி 'நெத்தியடி' மாதிரி..!

  அப்புறம் அந்த 'டிப்டாப் பிக்பாக்கெட் ஆசாமி' யாரு..?

  அமெரிக்கவா..?

  ரஷ்யாவும்தானே..?

  அதை சொல்லலையே.. சகோ..!

  ரஷ்யா... அப்டீன்னா... அப்போ.. அந்த பிக்பாக்கட்டு வினவு ஏற்பாடு செஞ்ச கேள்விக்குறியா..?

  அட..!

  வில்லன் கூடவா இங்கே 'டபுள் ஆக்டு'..!?

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
  ஆக்கபூர்வமான பதிவு. வினவு மட்டுமல்ல அனைத்து செங்கொடி கம்பெனிகாரர்களும் சிந்திக்க வேண்டிய விஷயம். உண்மையை அறியாதவர்களல்ல அவர்கள். ஆனால் அறிந்த உண்மையை உலகிற்கு சொன்னால் தமது சித்தாந்தத்தின் தேவை இல்லாமல் போய்விடுமோ என்று நடுங்கி அஞ்சி உண்மையை மறைப்பவர்கள். உங்களின் பதிவிற்கு பதில் கொடுக்க வேண்டியவர்கள் இணையத்தில் இன்று கேள்விக்குறிகளாய் மாறி நிற்கிறார்கள். கேள்விக்குறிகள் ஒருநாள் ஆச்சரியக்குறிகளாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஒரு காலத்தில் சிவப்பு கம்பெனியில் இருந்து வந்த ஹைதர் அலியிடமிருந்தே இத்தகைய கூர்மையான வினாக்கள் (தாக்குதல்கள்) வரும் என்று வினவு கம்பெனியார் எண்ணியிருக்க மாட்டார்கள். ஹைதர் வினவியிருக்கிறார். விடையளிக்குமா வினவு கம்பெனி?

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சமயத்தில் வினவை நினைத்தால் வருத்தம் தான் வரும். அப்புறம் அவங்க கொடுத்த பாராட்டு பத்திரத்தை பார்த்தீங்களா? ஒரு இயக்கம் போல முஸ்லிம்கள் கட்டுகோப்புடன் செயல்படுகின்றார்களாம். ஆனாலும் என்று இழுத்து தன் வேலையை காட்டி இருக்கின்றார்கள் வினவு குழுவினர்.

  "அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

  யுவான் ரிட்லியின் இந்த வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

  நல்ல காரமான பதிவு. வினவு என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்

  சிறந்த பதிவு. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.

  ReplyDelete
 5. மிக முக்கியமான பதிவு.
  வினவுத்தோழர்கள் கட்டாயம் கவனிக்கவேண்டியகேள்விகள் இருக்கிறது. இனத்தால்,நிறத்தால்,மதத்தால் ஜாதியால் பிரிந்துகிடக்கிறது போராளிகளின் உலகம்.
  பொதுவாக இந்தியாவில் இந்துமனப்பாண்மை சக்கடைக்குழியின் நாற்றம்போல பிரிக்கமுடியாது கிடக்கிறது.அதில் விதிவிலக்கானவர்கள் ரொம்பக்கம்மி.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.நெற்றிப்பொட்டில் அடித்தது போல் கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள். பதில் கொடுப்பார்களா? வினவு குரூப் பிரைவேட் லிமிடெட் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஹைதர்..

  வினவு மட்டுமல்ல,இது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டிய அவசியமான பதிவு..

  வாழ்த்துக்கள்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 8. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்May 8, 2011 at 12:44 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  "நடுநிலை தவறி விடுபவர்கள் சுயநலவாதிகள்" என்பதை சுட்டிகாட்டி ரொம்ப அழகாக எடுத்தெழுதி இருக்கின்றீர்கள் சகோ.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வினவன்May 8, 2011 at 2:18 AM

  வினவு சொன்னதுல என்ன தவறு இருக்கு.


  /////இப்படி உங்கள் பார்வையில் காலாவதியான இந்த மார்கத்தைப் பற்றி இவ்வளவு பெரிய பதிவா?/////

  காலாவதியாகி இருந்தா பேச்சே இல்லையே நண்பரே.

  ReplyDelete
 10. @முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'

  //அமெரிக்கா வாந்தி எடுப்பதை வினவு அப்படியே நம்பி விழுங்கிறது. ஆனால், நாம் ராகவன் சொல்வதை நம்பக்கூடாதாமா..?//

  இதுதான் இந்த பதிவின் பிரதான கேள்வி? பதிலில்லையே

  //ரஷ்யாவும்தானே..?//

  ஆமாம் சகோ பதிவில் விடுபட்டுவிட்டது சரியாக சொன்னதிற்கு நன்றி

  ReplyDelete
 11. @பி.ஏ.ஷேக் தாவூத்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்கள் வருகைக்கும் துனை கேள்விகளுக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 12. @Aashiq Ahamed

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 13. @சுவனப்பிரியன்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.//

  சிந்திப்பார்களா?

  ReplyDelete
 14. @காமராஜ்

  நண்பர் காமராஜ் அவர்களுக்கு

  உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் சரியான புரிதலுக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 15. @Feroz

  வாங்க சகோ
  உங்களின் ஆதாரவுக்கு நன்றி

  ReplyDelete
 16. இஸ்லாம் என்ற மத கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பாருங்க,யாரு தீவிரவாதின்னு தெரியும்.

  ReplyDelete
 17. அன்புச் சகோ.ஹைதர் அலி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்

  துணிவான பதிவு வாழ்த்துக்கள்!!

  ”கவனத்தில் கொள்க !அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை.
  அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்”
  (10:62)

  ReplyDelete
 18. வினவின் அடிப்படை புரிதல் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, கிழிக்கப்பட்டும்...

  ம்ம்ம்... வினவை காணவில்லை..!

  அதனை மறுக்கக்கூட எந்த அல்லக்கைகளையும் காணவில்லை..!

  தன்னை மட்டுமே ஒரிஜினல் என்று கூறிக்கொள்ளும் 'Monoபோலி கம்மூனிச' வினவின் கொள்கையற்ற பிழைப்புவாதம் மீண்டும் ஒருமுறை அம்பலம்.

  நன்றி சகோ ஹைதர் அலி.

  ReplyDelete
 19. vinauku, nailla pathiladi..
  alahana eluthu nadaimurai, vaalthukal.

  ReplyDelete
 20. vinauku nailla pathiladi, vinau enimeal unmai mattumthan eluthum enru nenikeran...
  thangal eluthu nadimurai meha alahu. vaalthukal.

  ReplyDelete
 21. @RAZIN ABDUL RAHMAN

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //வினவு மட்டுமல்ல,இது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டிய அவசியமான பதிவு..//

  சரியாகச் சொன்னீர்கள் சகோ

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 22. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  நன்றி சகோ

  ReplyDelete
 23. @வினவன்

  //வினவு சொன்னதுல என்ன தவறு இருக்கு.//

  நிறைய தவறு இருக்கு நண்பரே

  மறுபடியும் பதிவை படித்துப் பாருங்கள்

  வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 24. @வலிபோக்கன்

  வினவும் நீங்களும் கம்யூனிஸ சிவப்பு கண்ணாடியை கழட்டி வைத்து விட்டுப் பாருங்கள் உண்மை விளங்கும்

  வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 25. @அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்)

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  முகமூடி அனிந்துக் கொண்டு அட்டை கத்தியை சுழட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை சகோ.

  சத்தியத்தை நேருக்குநேராக சொல்ல வேண்டும்.


  நன்றி சகோ

  ReplyDelete
 26. @முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'

  பதில் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை அரசியல் நேர்மையற்றவர்கள்

  நன்றி சகோ

  ReplyDelete
 27. @Rahim

  உங்கள் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 28. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மாஷா அல்லாஹ், நடக்கும் உண்மை நிலவரத்தை அருமையான உதாரணக் கதையுடன் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் சகோ. எழுத வாய்ப்பு கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பவர்களுக்கு நல்ல பதிலடி! நடுநிலையாளர்களையும் சிந்திக்க வைக்கும் பதிவு, அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
 29. மேற்கத்திய ஊடகங்கள் 'வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குது' என்று எழுதினால் 'ஆமாமாம்.. அதுக்கு நாலு காலு இருந்துச்சு' என்று சேர்த்து எழுதுவதுதான் பிற ஊடகங்களின் 'ஊடக தர்மமாக' இருந்து வருகிறது.

  வினவு போன்றோர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். இவர்கள் 'அந்த வெள்ளைக் காக்காவை பறக்க வைத்ததே மேற்கத்திய அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளின் சதி' என்று எழுதுவார்கள்.

  மொத்தத்தில் 'வெள்ளைக் காக்கா மல்லாக்க பறந்ததை' தன்னையறியாமலேயே இவர்களும் ஒப்புக் கொள்வர்.

  ReplyDelete
 30. @இப்னு பஷீர்

  சகோ உங்களின் முதல் வருகைக்கும்
  அழகான விளக்க பின்னூட்டத்திற்க்கும் நன்றி சகோ

  ReplyDelete
 31. @அஸ்மா

  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  //எழுத வாய்ப்பு கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்பவர்களுக்கு நல்ல பதிலடி! நடுநிலையாளர்களையும் சிந்திக்க வைக்கும் பதிவு,//

  ஆமா திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று தெரியும் போது சிலர் முழு வீரத்தையும் காட்டுகிறார்கள்

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 32. ஒரு தீவிரவாதத்தை மற்றொருதீவிரவாதத்தால் சமபடுத்தமுடியாது புனைகதைகளால் உண்மையைமறைக்கமுடியாது

  ReplyDelete