குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.
இந்த பெயரின் அர்த்தமென்ன?
இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும்.வஹ்ஹாப் (வள்ளல்) பார்க்க குர்ஆன் 3:8,38:9,38:35
'வஹ்ஹாபி' என்றால் 'அல்வஹ்ஹாப்' என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்படும். உண்மையில் இப்படி நம்மைப் பார்த்து யாரவது அழைத்தால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.(பாய் காபி சாப்பிடுகிறீர்களா டீ சாப்பிடுகிறீர்களா? என்று அன்போடு கேட்க வேண்டும்) ஏனென்றால் நம்மைப் பார்த்து இவர்கள் அல்லாஹ்வை சேர்ந்தவர் என்று சொல்வது சாதரணவிஷயமா?
இந்த பெயர் எப்படி தவ்ஹீத்வாதிகளை குறிக்கும் சொல்லாக மாறியது?
முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்)
(அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) என்பவர் மிகப்பெரிய அறிஞர். சவூதியில் ரியாத்தை சேர்ந்தவர்.
பழங்காலத்து ரியாத் சிட்டி |
இஸ்லாமிய உலகில் (அக்கீதா) அடிப்படைக் கொள்கையில் மிகப்பெரிய சரியான மாற்றத்தை ஏற்ப்படுத்தியவர். அவர்கள் வாழ்ந்த காலக் கட்டத்தில் அதாவது 18ம் நூற்றாண்டு(கி.பி 1700) ஹிஜ்ரி கணக்குப்படி1000 மாவது ஆண்டு இந்த காலப்பகுதியில் இமாம் அவர்கள் தோன்றிய காலப்பகுதியாகும். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை பாதுகாப்பது என்று பொறுப்பெடுத்திருக்கிறான். இப்படி நபிமார்கள் ஒவ்வொருவரும் தொடராக ஒருவர் வந்து சென்றததற்குப் பின்னால் சமூகம் மீண்டும் தவ்ஹீதை விட்டும் மார்க்கம் ஏவியிருக்கின்ற எனைய அசலான கடமைகளை விட்டும் தூரமாகின்ற போது அடுத்த இறைத்தூதர்களை இறைவன் அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வருவதில்லை. வரவும்முடியாது ஆனால் சமூகம் சரியான மாற்றத்திலேயே இருப்பார்களா என்றால் இல்லை.
காலம் செல்ல செல்ல மக்கள் சரியான கொள்கைகளிலிருந்து மாற்றமடைந்துக் கொண்டே இருப்பார்கள். ஆக முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு இறைத்தூதுத்துவோம் முற்றுப் பெற்றால் வரலாற்றிலே அவர்களுக்குப் பின்னால் ஏற்ப்படுகின்ற சீர்கேடுகளை யார் சீர்ப்படுத்துவது யார் சமூகத்தை வழிநடத்துவது அல்லாஹ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏதோ அடிப்படையில் ஒரு சீர்த்திருத்தவாதியை ஏற்ப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறான்.
இது இஸ்லாமிய வரலாற்று ரீதியான உண்மை.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தின் தூணாக விளங்கினார்கள். அவர்களின் காலப்பகுதியில் அடிப்படைக் கொள்கை சம்பந்தமாக நிறைய குழப்பங்கள் தோன்றிய போது இமாமவர்கள் அதற்கு முகம் கொடுத்து சரியான இஸ்லாத்தை நிறுவினார்கள். எனவேதான் அவர்களை நாம் இமாம் சுன்னத் வல் ஜமாத் என்கிறோம் (அஹ்லே சுன்னத்தின் தலைவர் என்று பொருள்) அதற்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) மரணத்திற்குப் பின்னால் அபுபக்கர் (ரலி) அவர்களைக் கொண்டு இறைவன் இந்த இஸ்லாத்தை பாதுகாத்தான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1100 பகுதிகளிலேயே இமாம்.முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களை ஒரு சீர்த்திருத்தவாதியாக இறைவன் உருவாக்கினான்.
அவர்கள் தோன்றிய காலப்பகுதி விரிவாக
இமாவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே(இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அது இப்போது ரியாத்திலிருந்து வடமேற்கில் 70 கிலோ மீட்டர்க்கு அப்பால் இருக்கிறது.
அவர்கள் பிறந்த காலப்பகுதி எப்படி இருந்தது என்றால், இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்களிடம் பழைய அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஹிஜ்ரி 900க்குப் பிறகு உலகளாவிய இஸ்லாமிய உலகம் உறங்கிக் கொண்டு இருந்தது. எல்லா விஷயங்களிலும் அறிவுத்துறையில், அரசியல்துறையில், பொருளதாரத்துறையில் ஏனைய மார்க்கத்துறையில் அனைத்திலும் விழ்ச்சியில் இருந்த சமூகத்தை தட்டி எழுப்பியவர் ஒருவர் இருப்பாரென்றால் அவர்தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் தான். வெறும்(இணைவைப்பை) ஷிர்க்கை மட்டும் விமர்சிக்கவில்லை அனைத்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தினார்கள்.
கப்றுகளை,குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதேபோன்று சூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில் பிறந்த இமாமவர்கள் சிறுவயதிலேயே ஒரு தேர்ச்சியுள்ள நுணுக்கமான ஆற்றல் உள்ளவராக வளர்கிறார் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்திருந்தார் அவருடைய தந்தையும் ஒரு பெரிய காரி(நீதிபதி) குர்ஆனை மனனம் செய்துயிருந்த மார்க்க அறிஞர்.
முதலில் இமாமவர்கள் தனது தந்தையிடம் கல்வி பயின்றார்கள். சிறுவயதிலேயே நிறைய விஷயங்களை தந்தையிடம் கற்றுக் கொண்டார்கள் இந்த சூழலில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுடைய தந்தையும் அனுமதி அளித்து ஹஜ்க்கு அனுப்பி வைக்கிறார். அக்காலங்களில் ஹஜ் செய்வதென்றால் மிகவும் சிரமான காரியம். நீண்டபயணம் செய்ய வேண்டும். ஆனால் இமாமவர்கள் இதுபோன்ற பயணங்களின் ஊடாக சரியான இஸ்லாத்தை கற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில் மக்காவிலே நான்கு மிகாரபுகள்(தொழுகைக்காக இமாம் நிற்கும் இடம்) கஃபாதுல்லாவை வளைத்து இருந்தது. எந்த அளவுக்கு அந்த சமகால மக்களிடம் மார்க்கத்தைப்பற்றிய தெளிவில்லையென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் தனிதனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு தடவை நிறைவேற்றப்படும். அதாவது ஹஜ் வந்த ஹாஜிகளை ஹனபி,ஷாபி, மாலிக்கி, ஹம்பலி என்று நான்கு பிரிவுகளாக பிரித்து தனி தனி பிரிவினரின் இமாம்களோடு தொழுகை நடக்கும்.
(இதை பிற்காலங்களில் வஹ்ஹாபி இமாமவர்கள் ஒரே தொழுகையாக்கி மற்ற தவறான பழங்கங்களை ஒழித்தார்கள். இன்றும் இதே நிலை தொடர்வதற்க்கும் வஹ்ஹாபி இமாம் அவர்களே காரணம்) இன்னும் மக்காவிலே தாஃய்ப்பிலே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கப்ர் கட்டி வைத்திருந்தனர்.அங்கு பெரிய மினார கட்டி அதை ஹஜ்க்கு வருபவர்கள் எல்லாரும் தொட்டு முத்தமிடுவதும், அவர்களிடம் பிரார்த்திப்பதும்,
தேவைகளை கேட்பதும் அதே மாதிரியே மக்காவிலே ஹதீஜா (ரலி) அவர்களுடைய கப்ர் என்று ஒன்றும் இருந்தது. இவையெல்லாம் அன்றைய மக்களிடம் பிரபலமானவை. இது போன்று மக்காவை சுற்றி ஏகப்பட்ட தர்ஹாக்கள் இருந்தன. அக்காலகட்டத்தில் உலமாக்கள் கூட எந்த அளவுக்கு தெளிவில்லாமல் இருந்திருக்கிறார்கள்.
பழைய காஃபத்துல்லாஹ் |
இந்த சூழலில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 13ம் வயதில் ஹஜ்க்கு வந்திருந்த போது மக்காவில் காஃபாவில் ஒரு உலமா இஸ்லாமிய பயான்(சொற்பொழிவு) நடத்திக்கொண்டிருந்தார்.ஆழமான அறிவுள்ள அழைப்பாளரான அவர் சிறந்த முறையில் ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பயான் செய்து கொண்டிருந்தார். அந்த சொற்பொழிவாள் ஈர்க்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முழுபயானையும் கேட்கிறார்கள். அழகான பேச்சாக இருக்கிறது ஆனால் பேச்சை முடித்து விட்டு எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்திரிக்கிறார்.
ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பேசிய அவர்கூட சரியான இஸ்லாத்தை விளங்காமல் யாஅல்லாஹ் என்று அழைப்பதற்கு பதில் யா காஃபதுல்லாஹ் என்று அழைக்கிறார். இதனைக் கண்ட அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மிக நுணுக்கமாக இவர் பெரிய அறிஞராக இருக்கிறாரே இவரிடம் எப்படி அவர் செய்த தவறை சுட்டிக்காட்டுவது என்று யோசித்துக் கொண்டே அவரிடம் சென்று உங்களிடத்தில் நான் எனக்கு தெரிந்த சின்ன சின்ன அல்குர்ஆன் வசனங்களை ஓதி காட்டுகிறேன் நான் சரியாக ஓதுகிறேனா என்பதை நீங்கள் சரி பார்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். ஏனென்றால் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அப்போது சிறுவர்.
உடனே அந்த அழைப்பாளர் தாராளமாக நான் சரிபார்த்து சொல்கிறேன் என்றவுடன் சரி நான் குல் அவூது பி(B)ரப்பி(B)ன்னாஸ் சூரத்துன்னாஸிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக ஓதி காண்பிக்கிறேன் நீங்கள் தவறு இருந்தால் சரி பண்ணுங்கள் என்றார். அவரும் சரி ஒதுங்கள் என்றார் உடனே இமாமவர்கள் சூரத்துன்னாஸ், சூரத்துல் ஃபலக்,இக்லாஸ், தப்பத், அந்நஸ்ர், இப்படி ஒவ்வொன்றாக ஓத தொடங்கி இந்த சூரத்துல் குரைஷ் என்ற சூரா வந்தவுடன் நாம் எப்படி ஓதுவோம்
லிஈலா(F)பி குரைஷ்
ஈலா(F)பிஹிம் ரிஹ்ல(த்)தஷ் ஷி(த்)தாயி வஸ்ஸை(F)ப்
(F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத்
என்றுதான் தொடராக ஓதுவோம் அவர்கள் எப்படி ஓதினார்கள் என்றால்
ர(B)ப்ப ஹாத என்பதை விட்டுவிட்டு (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்று ஓதினார்கள் உடனே அதனை உலமா சுட்டி காட்டீனார்கள் (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்றால் என்ன அந்த வீட்டை அவர்கள் வணங்கட்டும் என்று பொருள்.
(F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றால் இந்த வீட்டின் இரட்சகன் எவனோ அவனை வணங்கட்டும் என்று பொருள். அல்லாஹ் இந்த வசனத்தில் என்ன சொல்கிறான் காஃபாவை யாரும் வணங்க வேண்டாம் அதை எவன் படைத்தானோ அவனை வணங்கட்டும் என்று சூரத்துல் குரைஸில் அல்லாஹ் சொல்லுகிறான். எனவே தான் இஸ்லாத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் காஃபாவை வணங்குவதில்லை இமாமவர்கள் (F)பல்யஃ(B)புதூ (B)பைத் இந்த வீட்டை வணங்கட்டும் என்று வேண்டுமென்றே ஓதினார் உடனே அந்த உலமா தவறாக ஓதுகிறாய் அது எப்படி வீட்டை வணங்குவது காஃபாவை வணங்கக் கூடாது என்கிறார். உடனே இமாமவர்கள் உங்களுடைய செயலில் அப்படித்தானே பார்த்தேன் நீங்கள் எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்தீர்களே அதுமட்டும் சரியா என்று கேட்டார்கள். உடனே அவர் அன்றுதான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து சரியாக விளங்கிக் கொண்டார்.
பிறகு பிறகேன்ன? பதிவு நீளமாகிவிட்டது தொடரும்.
இன்னும் முடியலையா???? எல்லாமே சரி ஓகன. நாம யார் ந?
ReplyDeleteஅஸ் ஸ்லாமு அலைக்கும் பாய்,
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்....அல்ஹம்துலில்லாஹ்..அல்ஹம்துலில்லாஹ்... இத்தகைய தொடர்களை தமிழில் படிப்பது மிக மிக உற்சாகமாயிருக்கிறது பாய். வேகமான் தொடராக் இதை தொடருங்கள். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.
வ ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோ ஹைதர் அலிக்கு,
மிகவும் அருமையான பதிவு, இது போல தான் பத்து வருடங்களுக்கு முன் தவ்ஹித் வாதிகளை " நஜாத் " பயலுங்க என்று ஏக வசனத்தில் எங்கள் ஜமாஅத் பள்ளியில் குறிபிடுவார்கள். அதன் அர்த்தம் புரியாத காரணத்தினால் எதோ எங்களை திட்டுகிறார்கள் என்று மட்டும் அறிந்து வைத்து இருந்தோம். பின்னர் தான் அதற்க்கு அர்த்தம் அறிந்தோம். "நஜாத்" என்றால் வெற்றியாளர்கள் என்று. இதை பி. ஜே அவர்களும் உறுதி படுத்தி இருந்தார். இதை அர்த்தம் அறிந்து கொண்ட அவர்கள் அது முதல் நஜாத் பயல்கள் என்று சொல்லுவதையே நிறுத்தி விட்டார்கள்.
டிஸ்கி:இந்த நஜாத் என்ற பெயர் காரணம் வர என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில் ஆரம்ப கால கட்டங்களில் தவ்ஹிதை எடுத்து சொல்ல எந்த பத்திரிக்கையும் இல்லாத காலகட்டங்களில் " அல் நஜாத் " என்ற பத்திரிக்கையை அபு அப்துல்லாஹ் என்ற பெரியவர் திருச்சியில் ஆரம்பித்துள்ளார் அதில் பி. ஜே அவர்கள் துணை ஆசிரியராக வேலை செய்து கொண்டு தவ்ஹிதை வளர்த்துகொண்டு இருந்தனர். ஆகையல் அந்த பத்திரிக்கையை படித்து தெளிவு பெற்றவர்கள் தவ்ஹிதை பற்றி பேச ஆரம்பித்தவுடன் அவர்களை "நஜாத் பயலுங்க" என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று ஒரு முறை அல் நஜாத் பத்திரிக்கையின் ஆசிரியர் அபு அப்துல்லா அவர்களை சந்தித்த பொழுது இதை பற்றி பேச்சு வரும் பொழுது அவர் கூறினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
ReplyDeleteஇந்த நல்ல பணியை செய்ய தூண்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்! தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!
ஒரு வேண்டுகோள்! இதில் வரும் எண்களை ஆங்கிலத்தில் (தமிழ் எண்களுக்கு பதில்) மாற்றி பதிந்தால் எல்லோருக்கும் எளிதாக புரியும். தமிழ் எண்கள் என் போன்றோருக்கு சிரமமாக உள்ளது!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஹைதர் அலி.. கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.. அதில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களைப் பற்றியது. சகோதரர் ஜேஜே சொன்னது போல நஜாத் காரர்கள் என்று நம்மை அவர்கள் திட்டுவதாக நினைத்துக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்..
தொடருங்கள் சகோ.. இமாம் அவர்களின் வரலாற்றினை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆவலுடன்...
முஹம்மது ரஃபீக்.
அஸ்ஸலாமு அலைக்கும்....
ReplyDeleteஇமாம் முஹம்மது அவர்களைப் பற்றிய வரலாறு படிப்பதற்கு எளிமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. விளக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி.
வஹாபிகள் மட்டுமின்றி விரைவில் முஸ்லிம்கள் அனைவருமே குர்'ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழ இறைவன் கிருபை செய்வானாக!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மிக அருமையான தொடரை தொடங்கி இருக்கிறீா்கள். அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக. ஆமீன் தோழமையுடன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ. ஹைதர் அலி,
மிக நல்ல அவசியமான விளக்கமான புதுமையான பதிவு. நன்றி. தொடரா? அடி சக்கை..! மிக்க மகிழ்ச்சி.
...இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான்(அல்லாஹ்) பொருந்திக் கொண்டேன்.... (அல்குர்ஆன் 5:3)
...நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீக ரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்... (அல்குர்ஆன் 3:19)
இஸ்லாம் அல்லாததை அல்லாஹ் ஒப்புக் கொள்ள மாட்டான். (அல்குர்ஆன் 3:85)
...அவன்(அல்லாஹ்)தான் (இதற்கு) முன்னரும், இதிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்... (அல்குர்ஆன் 22:78)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.(அல்குர்ஆன் 3:102)
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்று அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு அதன்படி தம் வாழ்க்கையை இவ்வுலகில் அமைத்துக் கொள்ளும் அடியார்களுக்கு...
"முஸ்லிம்கள்"
என்று பெயரிட்டது அல்லாஹ்..!
அப்புறம் நம்மை... ஷாஃபி, ஹனஃபி, மாலிக்கி, ஹம்பலி, வஹ்ஹாபி, தப்ளிக்கி, ஜமாத்தேஇஸ்லாமி, சுன்னத்துல்ஜமாத்தி, நஜாத்தி, ஜாக்கி, தவ்ஹித்வாதி என்றெல்லாம் அழைத்துக்கொள்வதில் என்ன பெருமை சகோதரர்களே?
குர்ஆனாயினும் ஹதீஸாயினும் அல்லாஹ்வின் இசைவால் அவன் புறத்திலிருந்தே வந்த கட்டளைகள் இரண்டும் என்பதால்...
அல்லாஹ் சொன்னபடி வாழும்/வாழ முனையும்(தவ்ஹித்வாதிகளான)நம்மை முஸ்லிம்கள் என்றே நாம் அழைத்துக்கொள்வோமே சகோதரர்களே..!
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
அல்ஹம்துலில்லாஹ்...அருமை சகோதரர் ஹைதர் அலி...
அடிப்படைவாதி என்றாலே ஜாலியாக எடுத்து கொள்ளும் நாம் வஹ்ஹாபி என்று அழைக்கப்படுவதற்கா அலட்டிக்கொள்ள போகின்றோம்?
உங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக...ஆமீன்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
@Rahim
ReplyDelete///இன்னும் முடியலையா????///
ஆய்வுகள் ஒய்வதில்லை
//எல்லாமே சரி ஓகன. நாம யார் ந?//
நாம ஆதமின் மக்கள் நீங்க என்னுடைய சகோதரர்
@அன்னு
ReplyDeleteஅவர்களுக்கு
அலைக்கும் வஸ்ஸலாம்...
நன்றி சகோ
இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுகிறேன்.
@ஜேஜே அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
ஆமாம் சகோ தமிழ்நாட்டில் நாஜத் என்று சொல்வது போல் வஹாபி என்பது இண்டர்நேஷனல் அடையளச் சொல்
@M. Farooq அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
// இதில் வரும் எண்களை ஆங்கிலத்தில் (தமிழ் எண்களுக்கு பதில்) மாற்றி பதிந்தால் எல்லோருக்கும் எளிதாக புரியும். தமிழ் எண்கள் என் போன்றோருக்கு சிரமமாக உள்ளது!//
நீங்கள் சுட்டிக் காட்டியவுடன் மாற்றி விட்டேன் நன்றி சகோ
@Rafiq அவர்களுக்கு
ReplyDelete//தொடருங்கள் சகோ.. இமாம் அவர்களின் வரலாற்றினை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆவலுடன்...//
நானும் இன்ஷா அல்லாஹ் முழுமையாக எழுதும் ஆர்வத்தில் இருக்கிறேன்
நன்றி சகோ
@enrenrum16 அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
//வஹாபிகள் மட்டுமின்றி விரைவில் முஸ்லிம்கள் அனைவருமே குர்'ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழ இறைவன் கிருபை செய்வானாக!//
வஹாபிகள் என்று ஒரு பிரிவினர் கிடையாது எதிரணி சகோதரர்கள் அப்படி அடையாளப்படுத்தி அழைக்கிறார்கள்
அடுத்த பதிவில் விரிவாக விளக்குகிறேன்
நன்றி சகோ
@Feroz அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
//அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை அளிப்பானாக.//
உங்களின் பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றி சகோ
உங்களின் முதல் வருகைக்கும் நன்றி
@முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
//அல்லாஹ் சொன்னபடி வாழும்/வாழ முனையும்(தவ்ஹித்வாதிகளான)நம்மை முஸ்லிம்கள் என்றே நாம் அழைத்துக்கொள்வோமே சகோதரர்களே..!//
அல்குர்ஆன் வசனங்களின் ஆதாரத்தோடு அழகாக
சரியாகச் சொன்னீர்கள் சகோ குர்ஆன் ஹதீஸின் படி வாழ நினைக்கும் அனைவரையும் முஸ்லிம் என்றே சொல்லுவோம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
ReplyDeleteஇந்த நல்ல பணியை செய்ய தூண்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்! தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!
ஒரு வேண்டுகோள்! இதில் வரும் எண்களை ஆங்கிலத்தில் (தமிழ் எண்களுக்கு பதில்) மாற்றி பதிந்தால் எல்லோருக்கும் எளிதாக புரியும். தமிழ் எண்கள் என் போன்றோருக்கு சிரமமாக உள்ளது
@Aashiq Ahamed அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//அடிப்படைவாதி என்றாலே ஜாலியாக எடுத்து கொள்ளும் நாம் வஹ்ஹாபி என்று அழைக்கப்படுவதற்கா அலட்டிக்கொள்ள போகின்றோம்?//
வஹாபி என்று சொன்னால் பிரியானி வாங்கி கொடுப்போம்
//உங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக...ஆமீன்..//
மாஷா அல்லாஹ்
சகோதரரின் துஆவை இறைவன் பொருந்திக் கொள்வானாக
நன்றி சகோ
சலாம் பாய் ரொம்ப அழகா தெளிவா எழுதியிறுக்கீங்க வாழ்த்துக்கள் ஓட்டும் போட்டுட்டேன்.
ReplyDeleteநிறைய புது விஷயங்களும் தகவல்களும் தந்து இருக்கீங்க.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
ReplyDeleteஅருமையான பதிவு.
சகோ, எங்கள் ஊரில் இன்னும் நஜாத் காரங்க,சென்னையில் வகாபி காரங்க.
சகோ யார் என்ன சொன்னாலும், குர்ஆன் வலிமுறையதான்
நாம் பின்பற்றி நடக்கணும். நடக்கிறோம்.
முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேரனும். குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக.
தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்!
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஹைதர் அண்ணே இமாம் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களின் வரலாறு இதுவரை நான் அறிந்துவைத்திருக்கவில்லை.உங்களுடைய வலைப்பதிவு மூலம் அதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.மேலும் உங்களது பணியை எல்லாம் வல்ல அல்லாஹ் சீராக்கிவைப்பானாக.
enrenrum16 கூறியது..
வஹாபிகள் மட்டுமின்றி விரைவில் முஸ்லிம்கள் அனைவருமே குர்'ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழ இறைவன் கிருபை செய்வானாக!
ஆமின்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசிறந்த பதிவை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ. ஹைதர் அலி,
நன்கு ஆராய்ந்து எழுதுகிறீர்கள், நிறைய நூல்கள் படிக்கும் பழக்கம் உங்களிடம் உள்ளது என்பதை உங்கள் எழுத்துக்கள் கூறுகிறது,அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
சுருக்கமான விளக்கம். சகோ. ஹைதர் அலீ பாராட்டுக்குரியவர். அற்புதமாக எழுதும் இவரைப்போல் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் உருவாக வேண்டும்.
ReplyDeleteவாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!
@mohamed
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
எழுத்துக்கள் சரி செய்யப்பட்டுவிட்டன
நன்றி சகோ
@ராஜவம்சம்
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
நன்றி சகோ முக்கியமாக ஒட்டு போட்டதிற்கு
@Chitra
ReplyDeleteநன்றி சகோ
@ஆயிஷா அபுல்.
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேரனும். குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக.//
இன்ஷா அல்லாஹ் அனைவரும் ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் ஒன்று சேர்வோம் உங்களுடைய துஆவை இறைவன் பொருந்திக் கொள்வானாக
தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்!
எனக்கு ஊக்கமளித்த உங்களின் வாழ்த்துக்கு நன்றி
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//இமாம் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களின் வரலாறு இதுவரை நான் அறிந்துவைத்திருக்கவில்லை.உங்களுடைய வலைப்பதிவு மூலம் அதை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை கொடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.//
சரியான வார்த்தைகள் அல்ஹம்துலில்லாஹ்
//குர்'ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்றி வாழ இறைவன் கிருபை செய்வானாக!//
இதுதான் சகோ என்னுடைய மனப்பூர்வமான துஆவும்
@சுவனப்பிரியன் அவர்களுக்கு
ReplyDeleteஉங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே
@இளம் தூயவன் அவர்களுக்கு
ReplyDeleteஉங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ
@வஹ்ஹாபி அவர்களுக்கு
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
நான் பெரிய எழுத்தாளன் கேடையாது எதோ நான் படித்ததை கேட்டதை
எழுதுகிறேன் அவ்வளவுதான்
மூத்த பதிவாளரான உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் ரொம்ப நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
ReplyDeleteசவுதில மக்களுக்கு மட்டுமில்லை சமுதாய மக்களுக்கும் தேவையான விசயம் இந்த நல்ல பணியை செய்ய தூண்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்!
இந்த நல்ல பணியை செய்ய எல்லா வகையிலும் அல்லாஹ் உதவி புரிவனாக
அல்ஹம்துலில்லாஹ்...
@unmaithedal அவர்களுக்கு
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
எனக்கும் புது விஷயங்களைத்தேடித்தேடிப்படிக்கும் வழக்கம் உண்டு.அதுபோல த்தான் உங்க பக்கமும் வந்தேன். எல்லா விதமான மக்களின் பாரம்பரியம் பழக்க வழ்க்கம் தெரிந்து கொள்ளலாமே. இந்த ப்பதிவு சற்றே பெரிதாக இருப்பதால் புரிந்து கொள்வதில் சற்று சிரம்மம் இருக்கு. இரண்டு மூன்று தடவை படித்தால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்னு தோனுது.
ReplyDeleteஇப்படியான நல்லப் பதிவுகளை எழுதும் போது, இஸ்லாமியர் அல்லாதவர் புரிந்துக் கொள்ளும் படி எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும். அரபு வார்த்தைகளை தமிழில் எழுதுவதால் படிக்க கடினமாக இருக்கு ! அதனை ஆங்கிலத்தில் எழுதி , பதிவுக்கு கீழே விளக்கம் கொடுக்கலாம். காபாவை வணங்குவதை இஸ்லாம் கடிவதை கூறியிருப்பது நல்லதொரு தகவல். அதே போல இன்று வகாபிகள் எனக் கூறிக் கொண்டு சௌதியில் அழிச்சாட்டியம் செய்பவர்களின் செயல்பாடு குரானுக்கு முரணாக இருப்பதாய் தோன்றுகிறது.
ReplyDeleteஎனக்கு இன்னும் சில சந்தேகங்கள் உண்டு !!! விளக்கினால் புரிந்துக் கொள்வேன் !
1. வகாபிகள் ! குற்றம் செய்தோரை கல்லால் அடித்துக் கொள்வது சரியா ! குரான் என்னக் கூறுகிறது
2. விபச்சாரம் செய்த பெண்ணைக் கொல்ல குரான் சொல்கிறதா? விபச்சாரியிடம் இருந்த ஆணைக் கல்லால் அடித்துக் கொல்வதை நான் பார்த்ததும் கேட்டதும் இல்லை ஏன் இந்த முரண்
3. இஸ்லாத்தை நம்பாதவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கிறதா? இன்று இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் செயல் குரானின் அடிப்படையானவையா?
4. ஏன் சில இமாம்கள் வேற்று மதம் சார்ந்த ஒருவர் இஸ்லாத்தை பரிகாசம் செய்தால், அவர்களை கொல்ல முனைவது சரியா? குரான் அதைத் தான் சொல்கிறதா?
5. இஸ்லாம் அறிவுப்பூர்வமான மதம் என்பது என் கருத்து? அப்படி இருக்க வன்முறையை தூண்டும் மதமாக காட்சி தருவதும் ! ஏன்?
எனது கே:ள்விகள் வன்மையாக இருந்தால் மன்னிக்கவும் ! நீங்கள் கூறும் விளக்கம் பலருக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ள் உதவும்.
@Lakshmi அவர்களுக்கு
ReplyDelete//எனக்கும் புது விஷயங்களைத்தேடித்தேடிப்படிக்கும் வழக்கம் உண்டு.//
இது ஒரு சிறந்த பழக்கம் இது போன்ற பலதரப்பட்ட விஷயங்களை தெரிந்துக் கொள்வதின் மூலம் நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளலாம்
//அதுபோல த்தான் உங்க பக்கமும் வந்தேன்.//
நன்றி சகோ உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
//எல்லா விதமான மக்களின் பாரம்பரியம் பழக்க வழ்க்கம் தெரிந்து கொள்ளலாமே//
கண்டிப்பாக தெரிந்துக் கொள்ளவேண்டும் அதன் மூலம் சரியான புரிதலை பெறலாம்
நன்றி சகோ
@ஆரோணன் அவர்களுக்கு
ReplyDeleteமுதலில் தாமதமாக நன் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்
//இப்படியான நல்லப் பதிவுகளை எழுதும் போது, இஸ்லாமியர் அல்லாதவர் புரிந்துக் கொள்ளும் படி எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்//
தவறை சுட்டி காட்டிமைக்கு நன்றி நண்பரே அடுத்த முறை சரியான தமிழ் அர்த்தத்தோடு எழுதுகிறேன்
///காபாவை வணங்குவதை இஸ்லாம் கடிவதை கூறியிருப்பது நல்லதொரு தகவல்.//
நன்றி நண்பரே இதனை சிலர் தவறாக இன்றும் விளங்கிக் கொண்டு இருக்கிறார்கள்
//அதே போல இன்று வகாபிகள் எனக் கூறிக் கொண்டு சௌதியில் அழிச்சாட்டியம் செய்பவர்களின் செயல்பாடு குரானுக்கு முரணாக இருப்பதாய் தோன்றுகிறது.//
ஆம் குர்ஆனுக்கு முரண்பாடாக நிறைய விஷயங்களை செய்கிறார்கள் இது சம்பந்தமாகவும் பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்
//எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் உண்டு !!! விளக்கினால் புரிந்துக் கொள்வேன் !//
உங்களுக்கு விளக்க வேண்டியது என்னுடைய கடமை
//1. வகாபிகள் ! குற்றம் செய்தோரை கல்லால் அடித்துக் கொள்வது சரியா ! குரான் என்னக் கூறுகிறது//
எல்லா குற்றத்திற்கும் ஒரே வகையான தண்டனையை குர்ஆன் சொல்லவில்லை குறைந்த குற்றங்களுக்கு குறைவான தண்டனை.
//2. விபச்சாரம் செய்த பெண்ணைக் கொல்ல குரான் சொல்கிறதா?//
இல்லை முதலில் விபச்சாரம் செய்தார் என்பதை நிருபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும்
(உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிருபிக்கச் சொல்லுங்கள்.4:15 ) அப்படியேநான்குசாட்சிகளோடு நிருபிக்கப் பாட்டலும் விபச்சாரம் செய்யும் பெண்களை இரு வகைகளாக குர்ஆன் பிரிக்கிறது.
1. திருமணம் ஆகாத பெண்கள்
2.திருமணம் முடித்த பெண்கள்
மணமாகத பெண்களுக்கான தண்டனைச் சட்டம்
(உங்களில் வெட்கக் கேடானதைச் செய்த அவ்விருவரையும் கஷ்டப்படுத்துங்கள் அவர்கள் மன்னிப்பு கேட்டு திருந்தி விட்டால் அவர்களை விட்டு விடுங்கள்.4:16)
இங்கு அவ்விருவரையும் என்பது விபச்சாரம் செய்த ஆணையும் குறிக்கும்
(விபச்சாரம் செய்யும் பெண்களையும் விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையாடி அடியுங்கள்.24:2 )
மணமாகி உணர்ச்சிகளை தீர்த்துக் கொள்வதற்கான வடிகால் இருந்தும் முறைகேடாக விபச்சாரம் செய்பவர்களை குர்ஆன் கொல்லச் சொல்கிறது இது ஆண்களுக்கும் பொருந்தும்
//விபச்சாரியிடம் இருந்த ஆணைக் கல்லால் அடித்துக் கொல்வதை நான் பார்த்ததும் கேட்டதும் இல்லை ஏன் இந்த முரண்//
இங்கு சவூதியில் மரணதண்டனை கொடுத்திருக்கிரார்கள். அபடி கொடுக்கவிட்டால் அவர்கள் குர்ஆனை பின்பற்றவில்லை என்று பொருள்
//3. இஸ்லாத்தை நம்பாதவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கிறதா?//
இல்லவே இல்லை
//இன்று இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் செயல் குரானின் அடிப்படையானவையா?//
நீங்கள் கூறுகின்ற அடிப்படைவாதிகள் யார் விளங்கப்படுத்தினால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும்
//4. ஏன் சில இமாம்கள் வேற்று மதம் சார்ந்த ஒருவர் இஸ்லாத்தை பரிகாசம் செய்தால், அவர்களை கொல்ல முனைவது சரியா?//
பெரிய தவறு
//குரான் அதைத் தான் சொல்கிறதா?//
முற்றாக சொல்லவேயில்லை
//5. இஸ்லாம் அறிவுப்பூர்வமான மதம் என்பது என் கருத்து? அப்படி இருக்க வன்முறையை தூண்டும் மதமாக காட்சி தருவதும் ! ஏன்?//
இது விரிவாக பேசப்படவேண்டிய விஷயம் விரைவில் ஒரு பதிவாக போடுகிறேன்
//எனது கே:ள்விகள் வன்மையாக இருந்தால் மன்னிக்கவும் ! நீங்கள் கூறும் விளக்கம் பலருக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ள் உதவும்.//
சத்தியமாக வன்மையாகயில்லை இதுபோன்ற கேள்விகள் நாம் இடைவெளியை குறைத்து நட்போடு நேருங்க செய்யும்
ரொம்ப மகிழ்ச்சி நன்றி நண்பரே
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஅருமையான பதிவு வாழ்த்துக்கள்.
வஹாபிசம் தோன்றிய பின்பற்றும் சவுதியில் ஆடம்பரமும் வீண் விரயமும் தான் அதிகமாக இருக்கிறது.உதாரணம் நேற்று இரவு எனது கம்பனியில் ஒரு விருந்து அதில் ஏராளமான உணவுகள் வினடிக்கபட்டன.எனவே நமது தவறை சுட்டி காட்டியும் நீங்கள் பதிவு இட வேண்டும்.உங்கள் பணி சிறக்க ஏக இறைவனிடம் துவா செய்கிறேன்.
வஹ்ஹாபியிசத்திற்க்கும் உணவு வீனடிக்கப்படுதலுக்கும் என்ன சம்மந்தம் சகோதரா? இப்போது இவர்கள் பனத்தில் மிதக்கின்றனர் அதன் காரனத்தால் இந்த இஸ்ராப் என்ற நிலையில் தடுமாறியிருக்கின்றனர்.
Deleteசகோதரர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் வாழ்க்கை சுருக்கத்தை பதிந்திருக்கிறார். ஜஸாஹீல்லாஹ் கைர்.
@நூருல் ஹசன் அவர்களுக்கு
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
//வஹாபிசம் தோன்றிய பின்பற்றும் சவுதியில் ஆடம்பரமும் வீண் விரயமும் தான் அதிகமாக இருக்கிறது.உதாரணம் நேற்று இரவு எனது கம்பனியில் ஒரு விருந்து அதில் ஏராளமான உணவுகள் வினடிக்கபட்டன.எனவே நமது தவறை சுட்டி காட்டியும் நீங்கள் பதிவு இட வேண்டும்//
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
உங்களின் முதல் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் ரொம்ப நன்றி சகோ
அஸ் ஸ்லாமு அலைக்கும்
ReplyDeleteபாய்,
அல்ஹம்துலில்லாஹ்
நானும் வஹாபி தான்
http://eravuryoosuf.blogspot.com/2015/05/blog-post.html
Deletehttp://eravuryoosuf.blogspot.com/2015/04/blog-post_20.html
ReplyDeletehttp://eravuryoosuf.blogspot.com/2015/05/blog-post.html
ReplyDeleteமாஷா அல்லாஹ, அருமையான பதிவு
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாகவும்