Friday, February 18, 2011

தொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3


எனது சென்ற பதிவில் முதல் பாகம்தொந்தி குறைய உடற்பயிற்சி முறைகள்

இவைகளை படிக்காதவர்கள் தயவுசெய்து படித்து விட்டு எனது மூன்றாம் பாகமான இப்பதிவை பார்க்கவும்.

இப்பயிற்சியை செய்யும் முன்

வயிறு காலியாக இருக்கவேண்டும் சாப்பிட்டு விட்டு செய்யக்கூடாது. காலை எழுந்ததும் காலைக் கடனை முடித்துவிட்டு வெறும் வயிற்றில் செய்வது சரியான முறை. மலம் சிறுநீரை தேக்கி வைத்துக் கொண்டு இப்பயிற்சியை செய்யக் கூடாது.

வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை தராளமாக செய்யலாம்.

சரி உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாமா?


இந்த வீடியோவை நன்றாக கவனித்து பாருங்கள்

                               இந்த வீடியோவையும் நன்கு கவனித்து பாருங்கள்


இப்பயிற்சி செய்முறை

1.முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரையில் ஒட்டி வைக்கவும்.

2.பிறகு சுவாசத்தை உள்ளே இழுத்துக் கொண்டே இடுப்பிலிருந்து நெஞ்சுப் பகுதியை தரைலிருந்து தூக்கவும். அதே நேரத்தில், கால்களையும் மெதுவாக தரைப்பகுதிலிருந்து தூக்கவும் ஆனால், கால்கள் மடங்கக் கூடாது.

3.புட்டப்பகுதி மட்டும் தரையில் இருக்க வேண்டும். இந்த நிலையில், தரையில் வைத்திருக்கிருந்த கைகளை மேலே தூக்கி தரைக்குக் கிடைமட்டத்தில் கால்களை ஒட்டி நீட்டவும். பிறகு மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, கால்களையும், முதுகையும் இறக்கி வைத்து விட்டு மறுபடியும் இப்பயிற்சியை செய்யவும். இப்படி புதியவர்கள் பத்து முறையும் பயிற்சிகள் பழகிய பிறகு 25 முறையும் செய்யலாம்


இப்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்


இப்பயிற்சியினால் வயிற்று உறுப்புகள் நன்கு இறுக்கமடைகின்றன. கால்களும் தொடைகளும் பலம் பெறும். தசை நார்கள் துவண்டு மென்மையாகும்.  வயிற்றுக்கு இந்த பயிற்சியின் மூலம் நல்ல இரத்த ஓட்டம் ஏற்ப்பட்டு. அதனால் உண்ட உணவு நான்கு ஜிரணமாகிறது. வயிறு நசுக்கப்படுவதால் வயிற்றுக்குள் இருக்கும் கழிவுப் பொருட்கள் அவ்வப்போது வெளித்தப்படுகிறது. இதனால் வயிற்றுக்குள் புழு பூச்சிஉருவாகது. இப்பயிற்சி செய்வோருக்கு தொந்தி உருவாகது ஏற்கனவே தொந்தி இருந்தாலும் அது கரைந்து விடும்.


பெண்கள் இந்தப் பயிற்சியை செய்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு குறையும். இடுப்பு சிறுக்கும். முதுகில் தேவையில்லாத சதைகள் குறையும்.
பெண்கள் உடலை இளமையோடு வைத்திருக்க இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் போதுமானது.


வாயுக் கொளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்குவதற்கான சிறந்த பயிற்சி இது. சிறு குடலுக்கு பக்கவாட்டில் நான்கு அழுத்தம் கொடுப்பதால், ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகங்கள் நன்கு செயல்பட உதவுகிறது. தொப்பையை குறைத்து , வயிற்றுப் பகுதி தசைகளை உறுதியாக்குகிறது.


இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.
    
அன்பான பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகொள். 

இப்பதிவை நான் எவ்வித உலக ஆதாயத்திற்காக இடவில்லை இணையத்தை வாசிக்கக்கூடிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் என்னால் முடிந்த பயனுள்ள பதிவுகளை கொடுக்க வேண்டும் என்ற தூய என்னத்தில் இந்த தொடர் பதிவுகளை இடுகிறேன். உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இப்பதிவை அறிமுகப்படுத்துங்கள் ஒருவேளை இப்பதிவின் மூலம் அவர்கள் ஆரோக்கியம் அடையலாம்.

அன்புடன் உங்கள் சகோதரன். ஹைதர் அலி 

47 comments:

  1. maasha allaah. jazakallaah khair brother. with that, I need also some more information on exercise. Should we do with empty stomach or after getting t impurities out of the body? or can we do it anytime? in the night before bed? (he he he you can guess right, i have never done any ex till now. )

    :)

    wa salam.

    ReplyDelete
  2. very useful and simple exercise... Thank you very very very much.

    ReplyDelete
  3. @Chitra அவர்களுக்கு

    உங்கள் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  4. @அன்னு அவர்களுக்கு

    காலை மாலை இரவு எப்போதும் இப்பயிற்சியை செய்யலாம்

    ஆனால் உணவருந்தி குறைந்தது ஐந்து மணி நேரம் ஆகியிருக்க வேண்டும்

    நன்றி சகோ

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்

    பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  6. நீங்க இதுவரை சொன்ன மூணுமே நல்ல பயிற்சிகள். இந்தத் துறையில் நீங்க இருப்பதால் யார் யார் செய்யலாம், கூடாது, என்ன பலன் என்று சொல்வது மிகவும் பயனளிக்கிறது.

    இஸ்லாம் என்பது உலக வாழ்வும் சேர்ந்ததுதானே. அதையும் சரிவர வாழ்வதற்கு இதுபோன்ற பயிற்சிகள் அவசியமே.

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு நன்றி சார்,

    ReplyDelete
  8. @ஆயிஷா அவர்களுக்கு

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    நன்றி சகோ

    ReplyDelete
  9. @ஹுஸைனம்மா அவர்களுக்கு

    //இஸ்லாம் என்பது உலக வாழ்வும் சேர்ந்ததுதானே. அதையும் சரிவர வாழ்வதற்கு இதுபோன்ற பயிற்சிகள் அவசியமே.//

    ”ரப்ப(B)னா ஆ(த்)தினா பி(F)த்துன்யா
    ஹஸன(த்)தன் வபி(F)ல் ஆகிர(த்)தி ஹஸன(த்)தன் வ(க்)கினா அதாப(B)ன்னார்”

    ”எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக; மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக: அல்குர்ஆன் 2:201

    இறைவன் குர்ஆனில் இப்படி நம்மை பிரார்த்த்னை செய்ய சொல்லி கற்று தருகிறான்.

    நீங்கள் சொன்ன கருத்து இஸ்லாத்தை பொறுத்தவரை 100 சதவீதம் உண்மை

    நன்றி சகோ

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்...
    சகோ.ஹைதர் அலி, மிகவும் உபயோகமான தொடர்... இயந்திர மயமாகிவிட்ட வாழ்வில் நாம் அவசியம் இதுபோன்ற சிறு உடற்பயிற்சிகளையாவது கட்டாயம் நம் உடலுக்காக செய்யவேண்டும். மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்...
    சகோ.ஹைதர் அலி, மிகவும் உபயோகமான தொடர்... இயந்திர மயமாகிவிட்ட வாழ்வில் நாம் அவசியம் இதுபோன்ற சிறு உடற்பயிற்சிகளையாவது கட்டாயம் நம் உடலுக்காக செய்யவேண்டும். மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  12. @Riyas அவர்களுக்கு

    சகோதரரின் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. @முஹம்மத் ஆஷிக்

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    இயற்கையை விட்டு விலக விலக நமக்கு பிரச்சனை அதிகமாகிறது அதுவும் வெளிநாட்டில் சொல்லவே வேண்டாம்.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அருமையான பதிவு தொடரட்டும் உங்களின் சேவை

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும்...

    உடற்பயிற்சி அனைவருக்கும் இன்று அவசியம்.

    ReplyDelete
  16. @அந்நியன் அவர்களுக்கு2

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    நல்ல விஷயங்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற அதரவுக்கு நன்றி

    ReplyDelete
  17. @இளம் தூயவன் அவர்களுக்கு

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    வாங்க சகோ உங்களின் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  18. quran nil jesus pathi ullathe ...appo jesus yaar? muslim paarvaiyil ??

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

    எதிர்ப்பார்த்திருந்த உடற்பயிற்சி முறையைக் கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைரா) நன்மைக்காக நாம் செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் இறைவன் இம்மை, மறுமை இரண்டிலும் அளப்பரிய நன்மைகளைக் கொடுப்பானாக! நேரமின்மையால் 'வஹாபிஸம்' பற்றிய உங்களின் தொடரை இன்னும் படிக்க முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் எப்படியும் படிக்கணும்.

    இதில் வீடியோ & ஆடியோ இப்போது தெளிவாக உள்ளது. பொதுவாக உடற்பயிற்சி செய்யும்போது பெல்ட், வாட்ச் போன்று டைட்டாக இருப்பவற்றை கழற்றிவிடவேண்டும் அல்லவா? 'லோ பிரஷ்ஷர்' உள்ளவர்கள் உடற்பயிற்சியின்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் எதுவும் உள்ளதா சகோ?

    ReplyDelete
  20. மிக உபயோகமான நல்ல விஷயம்.. தொடருங்கள் . வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. @பெயரில்லா

    //quran nil jesus pathi ullathe ...appo jesus yaar? muslim paarvaiyil ??//

    இஸ்லாத்தை பொறுத்தவரை ஈஸா(இயேசு) ஒரு கண்ணியமான இறைத்தூதர் இறைவனின் மகனல்ல

    பார்க்க.
    http://onlinepj.com/books/iyesu_irai_makana/

    http://onlinepj.com/IM%20AUDIO/Chirist_20.mp3

    நன்றி சகோ

    ReplyDelete
  22. மிக உபயோகமான நல்ல விஷயம்.. தொடருங்கள் . வாழ்த்துகள்.
    நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  23. @அஸ்மா அவர்களுக்கு


    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...


    //எதிர்ப்பார்த்திருந்த உடற்பயிற்சி முறையைக் கற்றுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைரா)//

    வ இய்யாக்க) உங்களுக்கும் இறைவன் நன்மை அளிப்பானாக

    //நன்மைக்காக நாம் செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் இறைவன் இம்மை, மறுமை இரண்டிலும் அளப்பரிய நன்மைகளைக் கொடுப்பானாக!//

    இதற்காகத்தான் இவ்வளவு உழைப்பும்

    //நேரமின்மையால் 'வஹாபிஸம்' பற்றிய உங்களின் தொடரை இன்னும் படிக்க முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் எப்படியும் படிக்கணும்.//

    நீங்கள் கொள்கை சகோதரி என்பதால்
    இந்த பதிவுக்கு உங்களை, உங்களுடைய கருத்துக்களை மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன் இப்போது பார்த்ததில் மகிழ்ச்சி

    //இதில் வீடியோ & ஆடியோ இப்போது தெளிவாக உள்ளது.//

    போன பதிவில் நீங்கள் சுட்டி காட்டியதால் வந்த தெளிவு

    //பொதுவாக உடற்பயிற்சி செய்யும்போது பெல்ட், வாட்ச் போன்று டைட்டாக இருப்பவற்றை கழற்றிவிடவேண்டும் அல்லவா?//

    ஆமாம்

    //'லோ பிரஷ்ஷர்' உள்ளவர்கள் உடற்பயிற்சியின்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் எதுவும் உள்ளதா சகோ?//

    எதுவுமில்லை இப்பயிற்சியை நிதானமாக செய்தால் லோ பிரஷ்ஷர் சரியாக வாய்ப்பிருக்கிறது

    நன்றி சகோ

    ReplyDelete
  24. @பயணமும் எண்ணங்களும் அவர்களுக்கு

    உங்களின் முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  25. @வேடந்தாங்கல் - கருன் அவர்களுக்கு

    தங்களின் முதல் வருகைக்கும் ஆதரவுக்கும் உங்களின் ஓட்டுக்கும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும்...

    உடற்பயிற்சி அனைவருக்கும் இன்று அவசியம். அருமையான பதிவு தொடரட்டும் உங்களின் சேவை

    ReplyDelete
  27. @சுவனப்பிரியன் அவர்களுக்கு

    வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    உங்களின் ஆதரவுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  28. enna sagothara, payanulla aakkangalai alli tharugireergale, Allah ungalukkum ungal kudumbatthinarukkum immai valvilum, marumai valvilum narkooli koduppanaga.
    bro.musthafa.

    ReplyDelete
  29. sorry brother. ungal pathivugalai padikk mudiyavillai, kandippaga ella aakkangalaiyum padippen. insha Allah.

    ReplyDelete
  30. @musthafa

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    வாங்கண்ணே முஸ்தபாண்ணே

    உங்கள் வருகைக்கு நன்றிண்ணே

    ReplyDelete
  31. அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,

    நான் இந்த பயிற்சியை செய்து பார்த்தேன். கழுத்து வரை மட்டுமே எம்ப முடிகிறது. என் கணவர் கைகளை தலைக்கு கீழே கொண்டு வந்தும் எம்ப முயற்சிக்கலாம் என்றார். சரியா?

    ReplyDelete
  32. @அன்னு அவர்களுக்கு

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //நான் இந்த பயிற்சியை செய்து பார்த்தேன். கழுத்து வரை மட்டுமே எம்ப முடிகிறது. என் கணவர் கைகளை தலைக்கு கீழே கொண்டு வந்தும் எம்ப முயற்சிக்கலாம் என்றார். சரியா?//

    சரியாக சொல்லியிருக்கிறார்

    பயிற்சி சரியான முறையில் கைகூடும் வரை நீங்கள் அப்படியே செய்யலாம்

    ReplyDelete
  33. assalamu alaikkum,
    i read 3 tips for stomach exercise. its really super.but i have one doubt.can i do that 3-exercises together. please tell me.
    jazaakhallah...
    mail id:yabasheer@yahoo.co.in

    ReplyDelete
  34. @பெயரில்லா

    மன்னிக்கவும் தங்களுடைய பின்னூட்டத்தை இப்போழுதுதான் பார்க்கிறேன் கண்டிப்பாக பதில் தருகிறேன்

    நன்றி

    ReplyDelete
  35. Asslamu Alaikkum
    மிக உபயோகமான நல்ல விஷயம்.. தொடருங்கள் . வாழ்த்துகள்.
    நானும் வந்துட்டேன் உள்ளே
    இனி தினமும் வருவேன்.
    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல.

    ReplyDelete
  36. சகோ Faizal
    வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

    வாங்க சகோ நீங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி ஓட்டு போட்டதிற்கு நன்றி

    ReplyDelete
  37. முயற்ச்சிக்கிறேன்..

    ReplyDelete
  38. salaam...a m happy to see this site... continue it well, i will prayer to do so,,,

    ReplyDelete
  39. assalaamu alaikkum
    am happy to see ur site, it is use full.. i will make prayer to do soo

    ReplyDelete
  40. Great article if you ask me. Thanks for enlightning this data.

    Tom Writeman
    cellular jamming

    ReplyDelete
  41. பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  42. Maasha Allah, good job keep it up

    ReplyDelete
  43. Arumaiyana pathivu udatpayichi seya unthithalaka irukku

    ReplyDelete
  44. masha allah.... keep continue your work.......

    ReplyDelete
  45. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ............
    அவசியமான அருமையான பதிவு சகோதரரே

    ReplyDelete
  46. Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu,

    Useful Message,

    Jazakallah Hiren Sago.

    ReplyDelete