Wednesday, February 9, 2011

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபி.பா- 2


முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்கள் ஒரு சாதாரண அறிஞர் அல்ல. இமாமவர்கள் குர்ஆன் தப்ஸீரில் எராளமான விளக்கங்கள் எழுதியுள்ளார்கள் .கல்வி கற்பதற்காக மக்காவை அடுத்து மதீனாவுக்கு சென்றார்கள். மதீனாவில் சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கு சென்று கல்வி கற்றார்கள். அக்காலங்களில் பண்பாட்டில் கல்வியில் ஈராக் சிறந்து விளங்கியது ஈராக்கில் கல்வி கற்று முடித்து விட்டு லக்ஷா

 (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள். இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார்கள். மார்க்கத்திற்கு விரோதமான பல நாடுகளில் நிவவிய நூதன பழக்கவழக்கங்களையும் தெரிந்துக் கொண்டார்கள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையிருந்து விலகி வாழ்ந்ததை அனுபவப் பூர்வமாக கண்கூடாக பார்த்து தெரிந்துக் கொண்டார்கள். தனது 25ஆவது வயதில் கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தை உயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத்(நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஏனென்றால் உயைனா பகுதியில் இருந்த அதிகார வர்க்கத்திடம் மார்க்க விஷயமாக முரண்பட்டு சென்றிருந்தார். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள்.


சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நபிமார்கள் வரலாற்றிலேயே இதனை நாம் பார்க்கலாம். ஆரம்பத்தில் தவ்ஹீதை சொல்லும்போது பிரச்சனைகள் ஏற்ப்பட்டன. அதே போல இமாமவர்கள் பிரச்சாரம் செய்த ஹீரைனிலா பகுதியில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிருந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.
 அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம்,என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள். அதேபோன்று ஸயித் இப்னு கத்தாப் என்ற பெயருள்ள சஹாபி, உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார் யமாமா யுத்தம் நடந்தபோது (யமாமா என்பது ரியாத்திற்கு அருகிலிருந்த ஒரு ஊர்) அதிலே கலந்து கொண்டு இறைவழியில் ஸாயித் இப்னு கத்தாப் அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி பெரிய மினராவை எழுப்பி வணங்கிக் கொண்டிருந்தனர். அதேபோன்று மிரர் இப்னு அஸ்வர் என்ற பெயருடைய சஹாபிக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீரிடம், இந்த தர்ஹாக்களை உடைக்க வேண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அமீர் (அப்பகுதி ஆட்சியாளர்) மறுத்துவிட்டார். அல்ஜீபைலா என்கிற அந்த தர்ஹாவுக்கு அருகில் இருக்கின்ற மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் அதனால் வேண்டாம் என்றார். இமாமவர்கள் நான் இன்னும் அவர்களிடம் பிரச்சாரம் செய்து சரியான இஸ்லாத்தை சொல்லி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஷிர்க்கினால் ஏற்படும் பாரதூரமான கேடுகளை விளக்கி அமீர் அவர்களையும் சம்மதிக்க வைத்து, அமீருடைய 600 படைவீரர்களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாவை உடைக்க சென்றபோது, ஜீபைலா பகுதியில் அறியாமை பழக்க வழக்கங்களில் பிடிவாதமாக இருந்த மக்கள் ஒடி வந்து இமாமவர்களை தாக்க வந்தபோது, அமீரின் படையைக் கண்டு பின்வாங்கினார்கள். இப்போது யார் உடைப்பது எல்லோரும் தயங்கினார்கள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஆழமான பிராச்சரம் செய்திருந்தும் மக்களிடம் ஊசலாட்டம் இருந்தது. யாரும் உடைக்க தயாராகவில்லை கப்ரிலே கைவைத்தால் ஏதாவது நடந்து விடுமொ என்று பயந்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சொந்த மறுமகன் அலி (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மண்ணை விட்டு ஒரு ஜான் அளவுக்கு உயரமாக எங்கு கப்ர் கட்டப்பட்டு இருந்தாலும் உடைத்துவிட்டு வாருங்கள் என்று அவர்களுடைய காலத்தில் கட்டளை பிறப்பித்தார்கள். அலி(ரலி) அவர்களும் அனைத்து கப்ர்களையும் உடைத்தெறிந்தார்கள். இந்த முன்மாதிரியை இமாம் அவர்கள் சொல்லிக் காட்டிவிட்டு, சரி நான் உடைக்கிறேன். நான் முதலில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உடைத்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கவனித்த மக்கள் அனைவரும் சேர்ந்து உடைத்தார்கள். இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த பிள்ளை தரும் மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள். இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆனால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் உயைனா பகுதியை அட்சி செய்த அமீர் அல் அக்ஸாவில் இருக்கின்ற அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார். அக்ஸா பகுதியிலுள்ள அமீர் இவருக்கு செய்தி ஒன்று அனுப்பினார். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் நமது பகுதியில் புதிய விஷயங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார் கப்ர்களையெல்லாம் உடைக்குமாறு சொல்கிறார் எனவே இவரை கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இடுகிறார். உயைனா பகுதி அமீர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை கூப்பிட்டு சொன்னார்கள், எனக்கு உங்களை கொன்றுவிடுமாறு கட்டளை வந்திருக்கிறது ஆனால் உங்களை கொல்ல விரும்பவில்லை. உங்களுடைய சீர்திருத்த பணிகளைப் பற்றி எனக்குத் தெரியும் நீங்கள் தயவுசெய்து இந்த ஊரைவிட்டு சென்று விடுங்கள் என்றார். இமாமவர்கள் அவரை பார்த்து கேட்டார்கள் நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள் நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கை லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அசல் தன்மையாகும். அது சொல்லுகிற கொள்கையாகும் இந்த கொள்கையை நான் சொல்வதற்கு நீங்கள் எனக்கு உதவி செய்தால் உங்களின் ஆட்சியை அல்லாஹ் திடப்படுத்துவான். உங்களுக்கு கண்ணியத்தை தருவான். சகல வசதிகளையும் தருவான். அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படுங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அமீர் அவர்களோ முடியாது பாலஸ்தீன பெரிய அமீர் படையோடு வந்தால் என்னால் சமாளிக்க முடியாது  போராட முடியாது தயவு செய்து போய்விடுங்கள் என்றார். தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல்.





இதன் பிறகு இமாமவர்கள் எங்கு சென்றார்கள். தனது அழைப்புப் பணியை எவ்வாறு தொடர்ந்தார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

13 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ஹைதர் அலி,

    முற்றிலும் புதிய அனுபவம் இது. இமாம் வஹ்ஹாப் ரஹ்... பற்றி இதற்கு முன் எனக்கு ஆவன்னா இனாகூட தெரியாது. அறிய நிறைய தகவல்களுடன் சிறப்பாக போகிறது பதிவுத்தொடர். நன்றி.

    சென்ற பதிவிலேயே நினைத்து ... சொல்ல மறந்து விட்டேன்.

    தயவு செய்து பதிவை பல சிறு பத்திகளாக பிரித்து எழுதுங்கள் சகோ. பெரிய பாராவாக இருப்பதால் வரி தடுமாறி படிக்க கடினமாக உள்ளது சகோ.

    என்ன பண்றது... வயசாயிடுச்சுல்லே...

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்,
    வஹ்ஹாபிகள் என்று கண் மூடிக்கொண்டு விமர்சிக்கின்ற பல சகோதரர்களுக்கு அடிப்படையை சொல்லிக்கொடுக்கும் ஒரு தொடராக இது தெரிகிறது,

    நம்மில் உள்ள சிலர் வஹ்ஹாபிகள் என்பவர்கள் இஸ்லாத்திற்கு முரணான போக்கில் வாழ்பவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களை கண்ட, கண்டமாதிரி விமர்சிக்கின்ற, அவர்களின் உபதேசங்களை விட்டும் தூரமாகி வருவது நாம் அறிந்ததே.

    இந்த கட்டுரை அந்த நிலைமை இல்லாதாக்கும் என்று நினைக்கின்றேன்.

    சகோதரர், ஹைதர் அலி அவர்களுக்கு,
    அறிஞர் வஹ்ஹாப் அவர்களின் தூய பணி இன்று எவ்வாறு சமூகத்தில் நடைமுறையில் இருக்கின்றது என்பதையும் விளக்கமாக சொல்லும்படி தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. சரி பார்போம்.........

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
    அறியாத விபரம் அறிந்து கொண்டேன்.தொடருங்கள்.வாழ்த்துகள

    //முஹம்மத் ஆஷிக் கூறியது.
    தயவு செய்து பதிவை பல சிறு பத்திகளாக பிரித்து எழுதுங்கள் சகோ. பெரிய பாராவாக இருப்பதால் வரி தடுமாறி படிக்க கடினமாக உள்ளது சகோ.//

    சகோ உங்கள் பதிவையும் குறைத்து எழுந்துங்கள்

    ReplyDelete
  5. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்February 11, 2011 at 11:47 AM

    அந்த நல்லடியாரி(வஹ்ஹாபியி)ன் சீர்திருத்தம் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் சவுதியில் தர்ஹா வழிபாடு கொடிக்கட்டி பரந்திருக்கும் அது இன்றுவரை தொடர்ந்திருக்கும்போல.

    ReplyDelete
  6. @முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    நன்றி சகோ அடுத்த பதிவில் கவனம் செலுத்துகிறேன்

    ReplyDelete
  7. @Issadeen Rilwan - Changes Do Club அவர்களுக்கு

    //அறிஞர் வஹ்ஹாப் அவர்களின் தூய பணி இன்று எவ்வாறு சமூகத்தில் நடைமுறையில் இருக்கின்றது என்பதையும் விளக்கமாக சொல்லும்படி தயவாய் வேண்டிக்கொள்கிறேன்//

    கண்டிப்பாக எழுதுகிறேன்

    ஆமா அது என்ன தயவாய் வேண்டிக் கொள்கிறேன் ரொம்ப ஒவாரக தெரியால

    ReplyDelete
  8. @Rahim

    சரி பார்த்தால் மட்டும் போதாது தவறையும் சுட்டி காட்டுங்கள்

    ReplyDelete
  9. அறியா பலவிசயங்களை அறித்தருகிறது வலையுலகம். அல்ஹம்துல்லிலாஹ். தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  10. @அன்புடன் மலிக்கா அவர்களுக்கு

    அல்ஹம்துலில்லாஹ்
    உங்களின் ஆதரவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்! அருமையான பதிவு...குறிப்பு : இமாம் வஹாப்பின் ஆசிரியர் இந்தியாவைச் சார்ந்த இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் டெஹ்லவி. ஷாஹ் வலியுல்லாஹ் இந்தியாவில் முதன் முதலாக ஹதீஸ் கிராந்தியங்களை கொண்டு வந்து மதரசாக்களில் குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர்.

    ReplyDelete