Tuesday, February 15, 2011

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபி-இறுதி பாகம்


சென்ற பதிவில் உயைனா பகுதி ஆட்சியாளர் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அப்துல் வஹ்ஹாப் அவர்களை வெளியேற்றியே தீருவது என்று முடிவெடுத்து வெளியேற்றியதையும், இமாமவர்களின் வார்த்தைகள் அவரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் பார்த்தோம்
இந்த பதிவின் முந்தைய பாகங்கள் 

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்?

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபி.பா- 2


இனி...

என்னதான் அந்த ஆட்சியாளர், இமாமை ஊரைவிட்டு வெளியேற்ற முற்பட்டபோதும், இமாமவர்களின் சத்தியப் பணியைக் கண்டதன் விளைவாக, அவரைப் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.

அஃத்திரையா என்பதும் ரியாத்தை சேர்ந்தது தான். அக்காலத்தில் சவூதி பல குட்டி பிரதேசங்களாக பிரிந்து கிடந்தது.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அஃத்திரையாவுக்குள் முதன்முறையாக நுழைகிறார்கள். இமாமவர்களுக்கு எதிரிகள் இருந்த அளவுக்கு ஆதரவாளர்களும் இருந்தனர். அஃத்திரையா பகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இமாமவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். இவருடைய பரம்பரையை சேர்ந்தவர்களைத்தான் சவூதியா என்று சொல்கிறோம். சவூதி நாட்டையும் இவர்களுடைய பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறோம்.

முஹம்மது இப்னு சவூதிடம் இமாமவர்களின் ஆதரவளர்கள் குழு ஒன்று சென்று, உயைனாவில் இமாம் அவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ எழுச்சியை எடுத்துரைத்து, நமது பகுதியில் இவர் பிரச்சாரம் செய்தால் இறைவனின் உதவி கொண்டு சீர்திருத்தம் ஏற்படலாம். எனவே இமாமுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

முஹம்மது இப்னு சவூத் அவர்களும் இந்த பணியின் அவசியத்தை உணர்ந்திருந்ததால் இமாமுடைய ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 


முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுடைய ஆட்சியை உறுதிப்படுத்துவான், உங்களுக்கு  வெற்றியைத் தருவான், உங்களுடைய ஆட்சியை அல்லாஹ் விரிவாக்கி தருவான், உங்களை கண்ணியப்படுத்துவான் என்றார்கள்.

மன்னரும் அதற்கு சரி நான் உங்களுடைய பணிகளுக்கு தோள் கொடுக்கிறேன். நான் உங்களோடு இருக்கிறேன், உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டும் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இஸ்லாமிய 
பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய  அனுமதி கொடுத்து முழு ஒத்துழைப்பையும் பூரண சுதந்திரத்தையும் வழங்கினார்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், நான்கு கலீஃபாக்கள் ஆட்சிக்காலத்திலும் எவ்வாறு ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றாக இருந்து இணைந்து செயல்பட்டதோ அதே சூழல் மறுபடியும் ஏற்பட்டது. ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடக்கிறது.

முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றதுமன்னர் சவூத் மக்காமதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே செல்கிறார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, அழைப்புப் பணி மட்டும் செய்யாமல் மன்னரின் சிறந்த போர்ப்படை தளபதியாகவும் இருந்தார்கள். படைவீரர்களுக்கு பயிற்சியளிப்பது, வெற்றி பெற்ற பகுதிகளில் கவர்னர்களை நியமிப்பது, மக்களை எகத்துவ கொள்கையின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்துவது என்று பம்பரமாக சுழன்று முழு அரேபியாவிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

இதனைக் கண்ட அன்றைய வல்லரசுகளான பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், கஃலீபாக்கள் காலத்திய தூய இஸ்லாமிய அரசியல் முறைப்படி நடக்கின்ற ஆட்சியை பரவவிட்டால் நமக்குதான் முதல் ஆபத்து என்பதை உணர்ந்து, பிரான்ஸின் மறைமுக அடிமையாக கிடந்த உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிராச்சரத்தையும் அதற்கு துணைபுரிகின்ற ஆட்சியாளர்களையும்   இப்படியே  விட்டு வைத்தீர்கள் என்றால்  
உஸ்மானிய சாம்ராஜ்ஜியம் அவர்களால் வீழ்த்தப்படும், துருக்கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள்.  துருக்கிய ஆட்சியாளரும் அதனை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது டையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

  
இமாமவர்களை பெருங்கூட்டம் ஒன்று எவ்வாறு ஆதரித்ததோ அவ்வாறே பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்க்கவும் செய்தது. இதை இமாமவர்கள் வாழ்ந்த சமகாலத்தின் வரலாற்றுப் புத்தகங்களை படித்தால் இன்னும் உங்களுக்கு தெளிவாக விளங்கும்.  அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது.  அரபு நாடுகளை ஆய்வு செய்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அறிஞர்கள்  அனைவரும் முஹம்மது ப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை மிக மிக மோசமான காலகட்டம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்தளவுக்கு முஸ்லிம்கள் மாற்றுக் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.
சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர்  - சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானி சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்  என்று எழுதுகிறார்.

சஹாபாக்கள் காலத்தில் எவ்வாறு இஸ்லாம் வேகமாக வளர்ச்சி பெற்றதோ அதுபோல் இமாமவர்களின் காலக்கட்டத்திலும் தூய இஸ்லாம் எழுச்சி பெற்றது.
ஹிஜ்ரி 1200 க்கு பிறகு ஏற்பட்ட ஏகத்துவ புரட்சிக்கு ஆரம்ப புள்ளியாக இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தான் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.

இறுதியாக, ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்திய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள்.

20 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
    வரலாறு சிறப்பாக இருந்ததது, ஆனால் ஒரு ஏமாற்றம் சுருக்கமாக முடித்துள்ளதால். மேலும் இது போன்ற உண்மை வரலாறுகளை வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள் இறைவன் அருள் புரிவான்.

    உண்மை என்றும் கசக்கும் அது போல் இஸ்லாமிய வரலாறு என்றால் மக்களுக்கு படிக்கும் ஆர்வம் குறைந்து போகின்றது, மாறாக ஒரு நடிகையின் புதிய நகல் (போட்டோ) என்று தலைப்பு வைத்தால் போதும் மக்கள் அலைமோதுகிறார்கள். இரண்டு உலகிலும் வெற்றியை தருவது உண்மை மட்டுமே, ஆகையால் நமது சகோதரர்கள் நமது பதிவு பலரால் பார்க்கப்பட வில்லை என்று மனம் சளைக்காமல் தொடர்ந்து உண்மையின் பக்கம் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஒரு வரலாற்றுத்தொடரை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிருவீங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை சகோ.ஹைதர் அலி.

    ஆனாலும், படித்த விஷயங்கள் யாவும் நம்மைப்போன்ற இந்தியர்களுக்கு புதியன.

    உபயோகமான பதிவுகள்.

    //ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்திய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள்.//--இன்னலில்லாஹி வ இன்னாஇலைஜி ராஜிவூன். அல்லாஹ் அவர்கள் கபூர் மற்றும் மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கி வைக்க துவா செய்வோம்.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோ. உங்கள் இந்த இடுகை மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!

    சிறந்த ஒரு தொடரை வழங்கினீர்கள். சில புதிய விபரங்களும் தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  5. நன்றி. நிறைய எதிர்பார்த்திருந்தோம், முடித்துவிட்டீர்கள். அவரது பிரச்சாரத்தின் இன்றைய பயன் மற்றும் அவர் எழுதிய இன்று பாவனையில் இருக்கும் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் தானே!.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
    அன்புச் சகோதரர் ஹைதர் அலி.. மிகுந்த பணிச்சுமையின் காரணமாக தங்களின் வலைப்பக்கம் வர இயலாமல் போயிற்று.. இமாமவர்களின் வரலாற்றை மிக சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.. இருந்தாலும் புதிய விஷயங்கள் நிறைய தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கு வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறேன்.. வல்ல அல்லாஹ் உங்களுடைய ஞானத்தை மென்மேலும் விசாலமாக்கி வைப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்தித்தவனாக..

    முஹம்மது ரஃபீக்.

    ReplyDelete
  7. சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதரர் ஹைதர் அலி,

    மிக நிறைவான பதிவு. உங்களுடைய இந்த பணிக்கு தகுந்த கூலி வழங்க ஏக இறைவனை பிரார்த்தித்தவனாக...

    இன்றைய காலத்தில் இமாம் அவர்களின் பணியை இணையதளங்களும் ஏற்று கொண்டதாகவே தெரிகின்றது. தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள இனி சில கிளிக்குகள் போதும்.

    இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் யாவும் இறைவன் நமக்களித்த மாபெரும் கிருபை. இன்ஷா அல்லாஹ், இவற்றின் மூலமாக தூய இஸ்லாம் இன்னும் பலரை சென்றடையும்.

    இமாம் வஹ்ஹாப் போன்ற எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து தோன்றிட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத்

    ReplyDelete
  8. ஸாதிக்கீன்February 16, 2011 at 12:34 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...சகோதரர் ஹைதர் அலி இமாம் அவர்களின் வரலாறு ஒவ்வெரு ஏகத்துவவாதியும் தெரிந்திறிக்க வேண்டிய செய்தி.குறிப்புக்களை துள்ளியமாக சொல்லியுள்ளீர்கள்.முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.நன்றி.

    ReplyDelete
  9. @M. Farooq

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...


    //ஆனால் ஒரு ஏமாற்றம் சுருக்கமாக முடித்துள்ளதால். மேலும் இது போன்ற உண்மை வரலாறுகளை வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள் இறைவன் அருள் புரிவான். //

    ஆரம்பத்திலேயே சுருக்கமாக எழுத வேண்டும் என்று முடிவேடுத்து தான் எழுதினேன்

    பின்னூட்டத்தின் போக்கைப் பார்த்து அல்லாது வரவேற்பு பெறவில்லை என்பதற்காக சுருக்கி கொள்ளவில்லை

    உங்களுடைய ஆதரவுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  10. @முஹம்மத் ஆஷிக்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...


    //ஒரு வரலாற்றுத்தொடரை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிருவீங்கன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை//

    நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் நீங்கள் ஆய்வில் இறங்குங்கள் சகோ

    ReplyDelete
  11. @இளம் தூயவன்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    அலஹம்துலில்லாஹ்

    நன்றி சகோ

    ReplyDelete
  12. @சுவனப்பிரியன்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    அல்ஹம்துலில்லாஹ்

    நன்றி சகோ

    ReplyDelete
  13. @Issadeen Rilwan - Changes Do Club

    நீங்கள் நிறைய எதிர்பார்த்ததிற்கு நன்றி

    பிரிதொரு சந்தர்ப்பத்தில் நிகழ்கால தாவாவை பற்றி பதிவு போடுகிறேன்

    ReplyDelete
  14. @Rafiq
    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //மிகுந்த பணிச்சுமையின் காரணமாக தங்களின் வலைப்பக்கம் வர இயலாமல் போயிற்று..//

    பணிச்சுமைக்கிடையில் வந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. @Aashiq Ahamed

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..


    //மிக நிறைவான பதிவு. உங்களுடைய இந்த பணிக்கு தகுந்த கூலி வழங்க ஏக இறைவனை பிரார்த்தித்தவனாக...//


    அல்ஹம்துலில்லாஹ் உங்களுடைய பிரார்த்தனையை கண்டு மனதுக்கு நிறைவாய் இருக்கிறது

    நன்றி சகோ

    ReplyDelete
  16. @ஸாதிக்கீன்

    அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    //இமாம் அவர்களின் வரலாறு ஒவ்வெரு ஏகத்துவவாதியும் தெரிந்திறிக்க வேண்டிய செய்தி.//

    சரியாகச் சொன்னீர்கள் வரலாற்றை தெரிந்து இருக்க வேண்டும்.

    ரொம்ப நன்றி உங்களின் முதல் வருகைக்கும் ஆதரவுக்கும்

    ReplyDelete
  17. அரசூர் ஃபாரூக்February 24, 2011 at 9:20 AM

    அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி பரக்காத்தஹூ

    காலதாமதம் ஆகிவிட்டது இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  18. அரசூர் ஃபாரூக்February 24, 2011 at 9:23 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காத்தஹூ

    ReplyDelete
  19. @அரசூர் ஃபாரூக் அவர்களுக்கு

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    வாருங்கள் சகோ தாமதமாக வந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி

    தொடர்ந்து வாங்க

    ReplyDelete
  20. இமாம் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பணி போற்றத்தக்கது.ஆனால் துருக்கி கலிபாவை பலவீனமாக்க பிரிட்டிஷ் உளவாளி லாரன்ஸ் ஏற்பாட்டின் பேரில் அராபியர்கள் துருக்கி கிலாபாத்தை எதிர்த்து போரிட்டதுதன் வரலாறு.வஹ்ஹபிசம் மீதுள்ள பற்றால் வரலாற்றை மாற்றி கூறாதிர்கள்.வராலாற்றை வஹ்ஹபிச வெளிச்சத்தில் ஆராயாமல் இஸ்லாமிய வெளிச்சத்தில் ஆராயுங்கள்.

    ReplyDelete