Wednesday, April 15, 2015

சீன தத்துவமேதை கன்ஃபூசியஸ்

சீன மக்களின் அடிப்படை கருத்துகளைத் தொகுத்து ஒரு கோட்பாடாக வகுத்த முதல் மனிதர் பெரும் சீனத் தத்துவ அறிஞரான கன்ஃபூசியஸ் ஆவார். அவருடைய கோட்பாடு தனி மனிதனின் அறவொழுக்கத்தையும், அற நெறியின் அடிப்படையின் மக்களை ஆண்டு பணி புரியும் அரசாங்கத்தைப் பற்றிய கருத்தையும் தழுவியது. 2000 ஆண்டுகளாக சீன மக்களின் வாழ்க்கையும், பண்பாடும் இதில் ஊறித் திளைத்திருந்தன. இதன் செல்வாக்கு உலக மக்கள் தொகையில் ஒரு பகுதி முழுவதும் பரவியிருந்தது.

கன்ஃபூசியஸின் கருத்துப்படி, "ஜென்" , "லி" ஆகியவையே இரு முக்கிய நற்பண்புகளாகும். உயர்ந்தோர் இவற்றிற்கேற்ப ஒழுகுவர். "ஜென்" என்பது சிலவேளை " அன்பு" என மொழி பெயர்க்கப்படுகின்றது. ஆனால் அதைப் " பிறரிடம் காட்டும் அன்பு கூர்ந்த அக்கறை" என விளக்குதல் நன்று. "லி" என்பது ஒழுக்க முறைகள், வழிபாடு, வழக்கம், ஒழுக்க நயம், முறைமை ஆகியவற்றைக் குறிக்கும்.

கன்ஃபூசியஸ் ஒரு மதத்தை நிறுவியவராகப் போற்றப் படுகின்றார். ஆனால் அது முற்றிலும் உண்மையன்று. அவர் கடவுளைப் பற்றி மிக அரிதாகவே குறிபிட்டார். மறு உலக வாழ்வு பற்றி வாதிக்க மறுத்தார். எல்லா வகை யான மெய்விளக்க ஊகக் கோட்பாடுகளையும் தவிர்ட்த்தார். அடிப்படையில் அவர் ஓர் உலகியல் தத்துவ அறிஞர் ; தனிமனித, அரசியல் அறநெறியிலும் ஒழுக்கத்திலும் அக்கறை காட்டினார்.

கன்ஃபூசியஸ் காலத்திற்கு முன்பே முன்னோர் வழிபாடு அடிப்படை சீன சமயமாக இருந்தது. அவர் குடும்பப் பற்றையும் பெற்றோரிடம் காட்ட வேண்டிய மதிப்பையும் வலியுறுத்தி அதற்கு உறுதியளித்தர். மனைவியர் கணவருக்கும், குடிகள், அரசருக்கும் மதிப்பளித்துக் கீழ்ப்படிய வேண்டுமென்றும் அவர் போதித்தார். ஆயினும் அந்தச் சீன ஞானி கொடுங்கோன்மையை ஆதரிக்கவில்லை. அரசு மக்களின் நலன்களுக்காக இல்லையென்றும் அவர் நம்பினார். அரசன் வன்முறையாலன்றி அறநெறி முன்மாதிரியினால் ஆள வேண்டுமெனப் பலமுறை வலியுறுத்தி வந்தார். 

அவரது மற்றொரு கோட்பாடு கிறிஸ்து பெருமானின் பொன்னான விதியின் திரிபு ; அதாவது " பிறர் உனக்கு எதைச் செய்ய வேண்டா மென விரும்புகிறாயோ, அதை பிறர்க்குச் செய்யாதே". கன்ஃபூசியஸின் அடிப்படை நோக்கு பழமைப் பற்றுடையது. அவர் கடந்த காலமே பொற்காலமென்று நம்பினார். அரசரும் மக்களும் பழைய டஅறநெறித் தரங்களையே பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆயினும், உண்மையில், அறநெறி முன்மாதிரியினால் ஆள வேண்டுமெனும் கன்ஃபூசியஸின் இலட்சியம் முற்கால நடைமுறை டயாக இருந்ததில்லை. ஆகவே கன்ஃபூசியஸ் புதியது புனைந்த சீர்த்திருந்ததவாதியாகவே இருந்தார்.

கன்ஃபூசியஸ் சூ வம்ச காலத்தில் வாழ்ந்தார். அது சீனாவில் பெரும் அறிவுக் கிளர்ச்சிக் காலமாகத் திகழ்ந்தது. அவர் காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் அவருடைய திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் அவர் இறந்த பின் அவருடைய கருதூதுகள் நாடு முழுவதும் பரவின. ஆயினும் கி.மு. 221 இல் சின் வம்ச காலம் தோன்றியதும் கன்ஃபூசியஸின் கொள்கைகள் நலிவுறத் தொடங்கின. சின் வம்ச முதல் மன்னரான ஷி - ஹூ - வாங்தை கன்ஃபூசியஸின் செல் வாக்கை அழித்து, கடந்தகாலத் தொடர்பை அறுத்தெறிய உறுதி பூண்டார். கன்ஃபூசியஸின் போதனைகள் பரப்புவதை தடுக்கவும், அவருடைய நூல்களை எல்லாம் எரிக்கவும் ஆணையிட்டார். இத்தடுப்பு முறைகள் தோல்வியடைந்தன. 

சில ஆண்டுகள் கழித்து சின் வம்ச காலம் முடிவுற்றதும் கன்ஃபூசிய அறிஞர்கள் திரும்பவும் அவருடைய கோட் பாடுகளைப் பரப்பத் தொடங்கினர். அதன் பிறகு தோன்றிய ஹான் வம்ச காலத்தில் (கி.மு. 206 - கி.பி. 220) கன்ஃபூசியக் கொள்கை சீன அரசின் தத்துவமாக நிலை நாட்டப் பெற்றது. 
ஹான் வம்ச காலம் முதல் நாளடைவில் சீன அரசர்கள் அரசாங்க அலுவலர்களை அரசுப் பணித் தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். காலப்போக்கில் இத்தேர்வுகள் கன்ஃபூசியஸின் நூல்களைப் பற்றிய அறிவின் அடிப்படையிலே நடைபெற்றன. சீனப் பேரரசில் அரசாங்க ஆட்சித் துறைப் பணியில் சேர்வதே உயர் வருமானத்திற்கும் சமூக நன்மதிப்பிற்குமுரிய முக்கிய வழியாக இருந்ததால், அரசுப் பணித் தேர்வுகளில் பெரும் போட்டி ஏற்பட்டது. 

ஆகவே, சீனாவில் பல தலைமுறைகளாக அறிவும் ஆரூவமுமிக்க இளைஞர் பலர் கன்ஃபூசியஸின் நூல்களைப் பல ஆண்டுகளாக ஆழ்ந்து படித்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக, சீன ஆட்சித் துறையினர் கன்ஃபூசிய தத்துவத்தில் ஊறி திளைத்த நோக்குடையவராக இருந்தனர். இம்முறை சீனாவில் (சில தடங்கல்கள் தவிர) கி.மு. 100 முதல் கி.பி. 1900 வரை ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருந்தது. கன்ஃபூசியஸின் கொள்கை சீன அரசாங்கத்தின் தத்துவமாக மட்டும் இருக்கவில்லை. சீன மக்களுள் பெரும்பாலோர் கன்ஃபூசியஸின் இலட்சியங்களை ஏற்றுக் கொண்டிருந்தனர். அவை 2000 ஆண்டுகளாக அவர்களுடைய வாழ்விலும் சிந்தனையிலும் உயரிடம் பெற்றிருந்தது.

கன்ஃபூசியஸ் சீன மக்களைக் கவர்ந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது அவருடைய வாய்மையும் நேர்மையும் ஐயத்திற்கிடமானவையல்ல. இரண்டாவது, அவர் மிதவாதியாகவும், நடைமுறைவாதியாகவும் இருந்ததார். மக்கள் தம்மால் சாதிக்க முடியாதவற்றைச் செய்யுமாறு அவர் சொல்லவில்லை. அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று அவர் கூறியபோது, அவர்கள் புனிதர்களாக இருக்கவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. இதிலும் பிறவற்றிலும் அவர் சீன மக்களின் நடைமுறை மனப்பாங்கையே பிரதிபலித்தர். அவருடைய கொள்கைகள் சீனாவில் பெரும் வெற்றி பெற்றதற்கு இதுதான் ஒருவேளை காரணமாக இருக்கக் கூடும்.

கன்ஃபூசியஸ் சீன மக்களைத் தம் அடிப்படை நம்பிக்கைகளை விட்டு விடுமாறு கேட்கவில்லை. அதற்கு மாறாக அவர் அவர்களுடைய மரபான அடிப்படை இலட்சியங்களையே தெளிவாகவும் உறுதியாகவும் திரும்ப எடுத்துக் கூறினார். ஒரு வேளை உலக வரலாற்றில் வேறு எந்தத் தத்துவ அறிஞரும் கன்ஃபூசியஸைப் போல் தம் நாட்டடவரின் அடிப்படைக் கருத்துகளுடன் அவ்வளவு நெருங்கி இருந்ததில்லை எனலாம். 

மக்களின் உரிமைகளைவிட மிகுதியாக வலியுறுத்தும் கன்ஃபூசிஸியக் கொள்கை இன்றைய டமேல்நாட்டு நோக்கதுல் செயல திறமற்றதாகவும் கவர்ச்சியில்லாததாகவும் தோன்றலாம். ஆயினும் அரசாங்கத்தின் கோட்பாடு என்ற வகையில் அது நடைமுறையில் பயனுறுதியுள்ளதாக இருந்தது. உள்நாட்டு, அமைதியையும், செழிப்பையும் பேணும் திறமையை அது பெற்றிருந்ததால் பொதுவாக சீனஒ‘ 2000 ஆண்டுகளாக நல்லாட்சி பெற்ற நாடாகத் திகழ்ந்தது.

கன்ஃபூசியஸின் இலட்சியங்கள் சீனப் பண்பாட்டுடன் நெருங்கிப் பிணைந்திருந்ததால், அவை கிழக்கு ஆசியாவுக்கு வெளியே பெரிதும் பரவலில்லை. ஆயினும் கொரியா விலும் ஜப்பானிலும் அவற்றின் விளைவுகளைக் காணலாம். அந்நாடுகள் இரண்டிலும் சீனப் பண்பாடு பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்தது.

இன்று கன்ஃபூசியஸின் கொள்கை சீனாவில் மிகத் தாழ்ந்த நிலையை அடைந்துள்ளது. சீனப் பொதுவுடமை வாதிகள் (மா சே துங்) மாவோஸ்ட்கள் கடந்த காலத் தொடர்புகளைத் துண்டிக்கும் முயற்சியுயில் கன்ஃபூசியஸையும் அவருடைய கோட்பாடுகளையும் வன்மையாகத் தாக்கி வருகின்றனர். வரலாற்றில் கன்ஃபூசியஸ் பெறிருந்த செல்வாக்குக் காலம் முடிவடைந்தது.


ஆதார நூல் : The 100 அந்த நூறு பேர்கள் 


No comments:

Post a Comment