Saturday, April 11, 2015

கற்பழிக்கப் பட்ட பெண்ணை காப்பாற்ற உதவிய பேஸ்புக்.

பிலிப்பைன்ஸ் பெண் தொழிலாளி லூனா 
பேஸ்புக்கில் நேரப் போக்கிற்க்காக எழுதுபவர்கள் மொக்கை போடுபவர்கள் வெட்டிக் கதை அடிக்கிற வேலை வெட்டி இல்லாதவர்கள் நிறைந்த இடம் என்பது போன்ற முன்முடிவு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் பேஸ்புக் தவிர்க்க முடியாத அதிவேக ஊடகமாக மாறி இருக்கிறது அதனை ஆக்கபூர்வமாக கையாளும் நல்லுள்ளம் கொண்டவர்களும் இந்த ஊடகத்தில் நிறைந்து நின்று நம்பிக்கையூட்டுகிறார்கள்.

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அப்பு லூனா (வயது 28) இவர் பஹ்ரைனில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் கற்பழித்து விட்டதாகவும். தினமும்  அடித்து உதைப்பதாகவும்  சமூக வலைதளமான பேஸ் புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை 19 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 78 ஆயிரம் ஷேர் செய்யபட்டு இருந்தது.இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து  தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கபட்டார்.
3 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் லூனா கூறியது :தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை கற்பழித்து விட்டதாகவும். மேலும் நான் வெளிவர உதவி செய்யுங்கள், இப்போது வரை,  நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். என்  பிறப்புறுப்பு காயமடைந்து உள்ளது. நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார்கள் அதனால் காலில் காயமாக உள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார். என கூறுகிறார்


அவரது முதலாளி அவரது மகன் கற்பழித்ததையும் அடித்து உதைப்பதையும் நம்ப வில்லை. ஓப்பந்தம் மீதம் முள்ள 2 மாதங்களையும் முடித்து விட்டு நீ உன் நாட்டுக்கு போ எனச் சொன்னதாகச் சொல்கிறார். நீ கர்ப்பமாக இருந்தால் கருகலைப்பு செய்து விடு என முதலாளி அறிவுறுத்தியாகவும் சொல்லி அழுகிறார். 


லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு புகார் அளித்து உள்ளார். பேஸ்புக்கில் பரவலாக செய்தி சென்ற பிறகு மீட்கபட்ட பிறகு அப்பு லூனா வெளியீட்டு இருந்த வீடியோவில் தான்  தூதரக பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.  இது குறித்து பில்ப்பைன்ஸ் தூதரக அதிகாரி கூறும் போது லூனாவை வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அவர் வேலை செய்யும் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளார். 


ஆதே சமயத்தில் லூனா தாக்கபட்ட குற்றசாட்டை போலீசார் மறுத்து உள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் தூதர துணை அதிகாரி ரிக்கி ஆரகன் தகவல் வெளியீட்டுள்ளார். எது எப்படியே பிடிக்காத இடத்திலிருந்து மீட்ட உதவியிருக்கிறது சமூக வலைத்தளமான பேஸ்புக்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அந்நாட்டை சேர்ந்த இலட்சணக் கணக்கான பெண்கள் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை போன்ற பல வேலைகளில் ஈடுபாடுகிறார்கள். இதுபோன்ற பெண்கள் வீட்டுக்குள் முடங்கினாலும் சமூக வலைத் தளங்கள் மூலம் தங்களை தற்காத்துக் கொள்ள முயல்வது ஆரோக்கியமனதுதான் அதே சமயத்தில் தவறான பயன்படுகளுக்கான சாத்தியம் இல்லாமல் இல்லை.(பிலிப்பைன்ஸ் பெண் பேஸ்புக் மூலம் மீட்பு முதலாளியின் மகன் தன்னை கற்பழித்து அடித்து உதைத்ததாக கதறல். நன்றி - மூலச் செய்தி தினந்தந்தி ) 


No comments:

Post a Comment