Sunday, April 5, 2015

கத்தரிக்காய், தாக்காளியில் அல்லாஹ்வின் பெயரா??

எப்படி தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் எதிர்மறையாக மாற்று மதங்களை திட்டி தாங்கள் மதத்தை உயர்வாக காட்ட முயல்வார்களோ அதேபோன்றுதான் தங்கள் மதத்தை மிகைப் படுத்தி பொய்யான தோற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்த சிந்தனையுடையவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். (அல்குர்ஆன் 6:108 )
பிற மதக்கடவுள்களை திட்டக் கூடாது என்று குர்ஆன் கட்டளை இடுவது போலவே கேள்விப் படுகிற செய்திகளை அப்படியே  பரப்பி விடக் கூடாது அப்படி பரப்பினால் அவரும் பொய்யர் என்கிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம் 6 )

இணையதள ஊடகங்களில் கிராஃபிக்ஸ் போட்டோஷாப் துணையுடன் பொய்களை பரப்புவதற்காகவே தக்காளிப் பழம், ஆப்பிள் பழம், தர்புசணி ஆகிய பழங்களை மிக இலாவகமாக பயன்படுத்து கிறார்கள். அதாவது தக்காளிப் பழத்தை இரண்டாக வெட்டினால் அதன் விதைகள் வளைந்து நெழிந்து காணப்படும் அவைகளில் அரபு எழுத்து போன்ற வடிவம் தென்பட்டால் போதும் உடனே அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் வந்துவிட்டது என்கிறார்கள் இந்த பழங்களில்  அல்லாஹ்வின் பெயர் காணப்பட்டால் அதனால் இவைகளில் ஏதாவது தனிச்சிறப்பு வந்துவிடுமா?
அல்லாஹ் என்கிற அரபு எழுத்து தெரிகிறது என்றே வைத்துக் கொள்வோம் இதேபோன்றே இயற்கையாக ஏசு தெரிவது போலவும் பிள்ளையார் தெரிவது போலவும் வடிமைத்திருக்கிறார்களே அதை என்ன சொல்வது??
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு பிராணிகளின் தோல்களில் ஏதாவது அரபு எழுத்து வடிவம் தென்பட்டால் உடனே அல்லாஹ்வின் பெயர் பிராணியின் முதுகில், மடியில், தலையில் வந்துவிட்டது என பரப்புகிறார்கள் இவர்கள் ஆடு மாடுகள் கால்நடைகள் போல் வந்து விழ மாட்டார்கள் சிந்திப்பார்கள் என்கிற குர்ஆனிய வசனத்தை மறந்த விளைவு இது.
அல்லாஹ் என்கிற எழுத்து மட்டுமா தெரிகிறது இது என்ன பிரமாதம் நெற்றில் சிலுவை இருக்கு பாருங்க முதுகில் ஓம் இருக்கு பாருங்க கீழேயுள்ள படத்தில்.


பொய்களை மூலதனமாக வைத்து மார்க்கத்தை பரப்ப இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது அவ்வளவு பலஹீனமான மார்க்கம் அல்ல இஸ்லாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியை கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்துவிடட்டும். அறிவிப்பவர் : யசீத் பின் சயீத் (ரலி) நூல் : அஹ்மத் (17261) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா நூல் : அஹ்மத் (21986)

விளையாட்டுக் கூட ஒருவரை கேலி பண்ணக் கூட பொய் சொல்லக் கூடாது என்கிற இஸ்லாம் எப்படி மார்க்கப் பரப்புரைக்கு பொய்யை அனுமதிக்கும்,

அற்புதத்தை கத்தரிக்காயில்,மீனில், குழந்தையின் காதில் அல்லாஹ் என்று எழுதியிருக்கிறது என்று தேடாதீர்கள் அது தேவையற்றது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். (புகாரி: 7274.)

எழுதப் படிக்க தெரியாத ஆடு மேய்த்த பழங்குடியின படிக்காத (உம்மி) நபிக்கு இறங்கிய உயர்ந்த இலக்கிய தரத்தில் அதே சமயத்தில் பாமரர்களுக்கும் புரியும் வகையிலுள்ள குர் ஆனே மிகப் பெரிய அற்புதம் இதைவிட வேறு அற்புதங்களை தேட வேண்டிய அவசியமில்லை.

4 comments:

  1. அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ..........

    ReplyDelete
  2. //எப்படி தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள் எதிர்மறையாக மாற்று மதங்களை திட்டி தாங்கள் மதத்தை உயர்வாக காட்ட முயல்வார்களோ அதேபோன்றுதான் தங்கள் மதத்தை மிகைப் படுத்தி பொய்யான தோற்றங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்த சிந்தனையுடையவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்.//
    மிக சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  3. அன்பரே...

    இன்றைக்கு தேவையான பதிவு !

    " நாட்டுப்பற்று ஈமானில் பாதி, மற்ற மதத்தினரையும் உங்கள் சகோதர்களாய் பாவியுங்கள் " என்றெல்லாம் பொன்மொழிந்த நபிகள் நாயகத்தின் இஸ்லாத்தின் பெயரில் நடக்கும் புரட்டுகளை ஆதாரத்துடன் தகர்க்கும் உங்களை போன்றவர்களின் பங்களிப்புதான் இந்த சமூகத்தின் உடனடி தேவை.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் நான் பல முறை யோசித்த விடயம் ஆனால் மண்டை வேலை செய்யல.அல்லஹ் அஅருள் செய்வானாக

    ReplyDelete