Wednesday, September 14, 2011

கவலையில்லா கவிதை....


நீ கவலைப்படாதே!
ஏனெனில் நீ மகிழ்ச்சியோடும்
மனநிம்மதியோடும் வாழ்கின்ற
நாள்கள் தான் உனது உண்மையான வயது.

கவலையிடம் உனது
வாழ்க்கையைத் தொலைத்து விடாதே.
துக்கப்பட்டு உனது
இரவுகளை வீணாக்கி விடாதே.
கவலையிடம் உனது
நேரங்களைப் பங்கு வைத்துக் கொடுத்து விடாதே
உனது வாழ்க்கையை
அதை விரயம் செய்து விடாதே.
விரயம் செய்வோரை
இறைவன் நேசிப்பதில்லை.

மகிழ்ச்சியான,உறுதியான,அமைதியான,உள்ளம்தான்
அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது.
ஏனெனில், உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது
உறுதியான,ஆக்கப்பூர்வமானநல்ல சிந்தனைகள் பிறக்கும்.
மகிழ்ச்சி என்பது ஒரு கலை.

பூமியில் மரண ஆட்சி நடக்கிறது
இந்த உலகம் நிரந்தரம் அல்ல
சேறோ அழுக்கோ அற்ற
தூய வாழ்க்கையை நீ விரும்புகிறாய்
ஆனால்,வாழ்க்கை
சேற்றில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

இயற்கைக்கு மாறாக ஒவ்வோரு நாளும்
துன்பங்களை அனுபவிப்பவன்
தண்ணீரில் எரிகொள்ளியைத் தேடுகிறான்
கிடைக்காததற்கு ஆசைப்படுவது
பள்ளத்தாக்கின் விளிம்பில்
ஆசை எனும் வீட்டை
கட்டுவதற்கு சமம்.

வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது
இரண்டுக்குமிடையே மனிதன்
கற்பனையில் நடமாடிக் கொண்டிருக்கிறான்.

எனவே
உங்கள் இலக்கை
விரைவில் அடைந்துக் கொள்ளுங்கள்
உங்கள் ஆயுள் ஒரு புனித நூல்;இரவல் பொருள்
அதைமீட்க
இளமைக் குதிரையில் வேகமாகச் செல்லுங்கள்
அமைதியாக வாழ
நீ பேராசை கொண்டாலும்
காலம் அமைதியானது அல்ல
சுதந்திரத்திற்கு எதிர்ப்பு என்பது
காலத்தின் இயல்பு.

பாலத்தை அடைவதற்கு முன்பே அதைக் கடக்காதே
பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பே
அவற்றை நினைத்துக் கவலைப்படாதே.

ஆதமின் மகனே!
மூன்று நாள்கள்தான் உனக்குரியவை
'நேற்று' அது சென்று விட்டது
'நாளை' அது இன்னும் வரவில்லை
'இன்று' அதில் நீ இறைவனை அஞ்சி வாழு!


39 comments:

  1. சிந்திக்கச் செய்யும் கவிதை.

    ReplyDelete
  2. எதிர்காலத்தை எண்ணி வருந்துவது
    இரண்டுமுறை துன்பப்படுவதற்குச் சமமானது..

    ReplyDelete
  3. //வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
    மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது//

    மரணத்தை வெற்றி கொள்வதே வாழ்க்கை என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..

    ReplyDelete
  4. அபு ஃபைஜுSeptember 15, 2011 at 1:40 AM

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்

    கவலை கொள் பிறருக்காக
    நீ மகிழ்ச்சியாக இருப்பாய்

    ReplyDelete
  5. பிண்ணிடிங்க சகோ !!!!!!!!!!

    ReplyDelete
  6. அஸ் ஸலாமு அலைக்கும் ஹைதர் பாய்..,

    என் கவிதைக்கு எதிர்-கவிதை எழுதியிருக்குன்னு யாரோ சொன்னாங்களே.... உங்க வலைப்பூவில எங்கிருக்குன்னு அந்த லின்க்கு கொஞ்சம் தர்றீங்களா ப்ளீஸ்??????

    ஹி ஹி ஹி....

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ஹைதர் அலி அண்ணன்,

    ///ஆதமின் மகனே!
    மூன்று நாள்கள்தான் உனக்குரியவை
    'நேற்று' அது சென்று விட்டது
    'நாளை' அது இன்னும் வரவில்லை
    'இன்று' அதில் நீ இறைவனை அஞ்சி வாழு!///

    அல்ஹம்துலில்லாஹ், அருமையா சொன்னீங்க...

    அப்புறம் நிரந்தர *** - ன்னு சொன்ன அடுத்த நாளு இந்த பதிவா...ரொம்ப டாப்பு...

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  8. வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
    மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது
    இரண்டுக்குமிடையே மனிதன்
    கற்பனையில் நடமாடிக் கொண்டிருக்கிறான்.



    மிகவும் அழகான வரிகள்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பல உபதேசங்கள் கொண்ட கவிதை! மாஷா அல்லாஹ், நல்லா இருக்கு சகோ.

    //ஆதமின் மகனே!
    மூன்று நாள்கள்தான் உனக்குரியவை
    'நேற்று' அது சென்று விட்டது
    'நாளை' அது இன்னும் வரவில்லை
    'இன்று' அதில் நீ இறைவனை அஞ்சி வாழு!//

    அருமையான வரிகள்! இதில் ஆதமின் மக்கள் யாருமே உரிமைக் கொண்டாட முடியாத‌ 'நாளை' என்ற நாள் 'உன‌க்குரியது' என்பது கொஞ்சம் இடிக்குதே சகோ..? :) ஒருவேளை வேறு கோணத்தில் சொல்லியிருப்பீர்களோ?

    ReplyDelete
  10. நான் மனம் திறந்து எழுதிய கவிதை.

    127 உயிர்களின் கேள்விகளாக.

    நேரம் கிடைக்கும் போது வாருங்கள் அன்பரே.

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    ReplyDelete
  11. @முனைவர்.இரா.குணசீலன்

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
    கண்டிப்பாக உங்கள் தளம் வந்து
    வாசிக்கிறேன்

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    //பூமியில் மரண ஆட்சி நடக்கிறது
    இந்த உலகம் நிரந்தரம் அல்ல.//

    எதார்த்தமாக எழுதப் பட்டாலும் ஆயிரம் அர்த்தங்கள் உங்கள் கவிதையில்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. @முனைவர்.இரா.குணசீலன்

    //எதிர்காலத்தை எண்ணி வருந்துவது
    இரண்டுமுறை துன்பப்படுவதற்குச் சமமானது.//

    இதுவும் நல்லாயிருக்கு நண்பரே

    ReplyDelete
  15. @suryajeeva

    புரிகிறது நண்பரே

    மக்களுக்கு நண்மைகளை செய்து புரட்சியை ஏற்ப்படுத்திய எத்தனையே மகான்கள் அவர் இறந்தும் மக்கள் மனதில் இறவாமல் வாழ்துக் கொண்டிருக்கிறார்கள் அதுபோல் ஆக நீங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  16. @Samantha

    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  17. @அபு ஃபைஜு

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //கவலை கொள் பிறருக்காக
    நீ மகிழ்ச்சியாக இருப்பாய்//

    சரியாகச் சொன்னீர்கள் பிறருக்காக கவலைக் கொள்வோர் பெருக வேண்டும்
    அதன் மூலம் மகிழ்ச்சியும் பெருக வேண்டும்

    நன்றி சகோ

    ReplyDelete
  18. @prasanna

    தங்களின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. @அன்னு

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //என் கவிதைக்கு எதிர்-கவிதை எழுதியிருக்குன்னு யாரோ சொன்னாங்களே.... உங்க வலைப்பூவில எங்கிருக்குன்னு அந்த லின்க்கு கொஞ்சம் தர்றீங்களா ப்ளீஸ்??????//

    எதிர்கவிதைக்கு லிங்க் இல்லை
    ஆதரவுக் கவிதைக்கு லிங்க் இருக்கு

    http://valaiyukam.blogspot.com/2011/09/blog-post_14.html

    இதை பாருங்கள் ஹா ஹா

    ReplyDelete
  20. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //அப்புறம் நிரந்தர *** - ன்னு சொன்ன அடுத்த நாளு இந்த பதிவா...ரொம்ப டாப்பு...//
    அது முந்தா நேத்து இது இப்ப எப்பூடி?

    தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  21. ஸலாமுன் அலைக்கும் சகோ.ஹைதர் அலி.

    ஆஹா... கவிதை... கவிதை... இப்போது எனக்கு புரிந்து விட்டது.

    எனக்கு புரிந்து விட்டது.

    right alignment- எழுதினால் அடிக்குறிப்பு.
    left alignment-இல் எழுதினால் கவிதை.
    center alignment-இல் எழுதினால் தலைப்பு.

    மிச்சம் இருக்கும் ஒரே ஒரு alignment-இல் எழுதினால்...

    ஹி..ஹி.. அது உரைநடை பதிவு..!

    சரிதானே சகோ..?

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அளிக்கும் வரஹ்...

    சகோ.ஹைதர் அலி,

    இவ்வுலகம் மட்டுமே நம் வாழ்க்கை எனில்...

    இன்பத்தில் சற்று குறைவு ஏற்பட்டாலும் அது துன்பமே.

    நாம் மறு உலகிற்கான சோதனைக்களத்தில் இருப்பதாக கொண்டால்...

    துன்பங்கள் வர வர அவை அனைத்தும் இன்பங்களே..!

    ஒவ்வொரு துன்பம் வரும்போதும்...
    'இறைவனின் சோதனை இவை' என எண்ணி பொறுமையுடன் கடந்து சென்றால்...

    அனைத்தும் இன்பமே..!

    ReplyDelete
  23. @Lakshmi அவர்களுக்கு

    படித்து உணர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  24. @அஸ்மா
    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //அருமையான வரிகள்!//
    எல்லா புகழும் இறைவனுக்கே

    //இதில் ஆதமின் மக்கள் யாருமே உரிமைக் கொண்டாட முடியாத‌ 'நாளை' என்ற நாள் 'உன‌க்குரியது' என்பது கொஞ்சம் இடிக்குதே சகோ..? :) ஒருவேளை வேறு கோணத்தில் சொல்லியிருப்பீர்களோ?//

    இதில் நேற்று என்பது நாம் பிறந்ததிலிருந்து நேற்று வரை உள்ள நாட்களை குறிக்கும்

    நாளை என்பது (கியாமத் நாள்) மறுமை நாள் வரை குறிக்கும் சகோ

    மனிதனை இறைவன் சமிவு (கேட்கக்கூடியவன் என்கிறான்)ஆனால் இறைவன் கேட்பது போல் கேட்க முடியாது அல்லாவா?

    அதேபோன்று நாள் ஆதமின் மகனுக்கு சொந்தம் இறைவன் சொந்தம் கொண்டாடுகிற அளவுக்கு கிடையாது அமானிதமான சொந்தம்

    நீங்கள் சொன்ன மாதிரி இது வேறி கோணம் தான் சகோ

    நன்றி சகோ

    ReplyDelete
  25. @மாய உலகம்

    மிகவும் மகிழ்ச்சி நண்பரே
    நன்றி நண்பரே

    ReplyDelete
  26. @அந்நியன் 2

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

    நன்கு விளங்கி படித்து உள்ளர்த்தோடு கருத்திட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  27. வாழ்க்கைத் தத்துவத்தை அழகிய கவிதை வரிகளாக
    கட்டுக் குலையாமல் மனம் நெகிழும்படியாக புனைந்துள்ளீர்கள் .
    அருமை அருமை அருமை சகோ!.... வாழ்த்துக்கள் மென்மேலும்
    உங்கள் ஆக்கங்கள் சிறப்படைய .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  28. நல்ல வரிகள் என்பதை விட வலு நிறைந்த வரிகள் என்பதே சரி என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அட்டா.. வலையுகம் கவிதை களமாக மாறிக்கொண்டிருப்பதை நான் லேட்டா தாங்க.. கவனித்தேன்., ஸாரி.,

    கவலையில்லா கவிதை!
    படித்ததும் கவலைப்பட வைக்கிறது
    உலக வாழ்வின் எதார்த்த நிலை அறிந்து..!


    @ சகோ அன்னு //அந்த லின்க்கு கொஞ்சம் தர்றீங்களா //
    இதல்லாம் ரொம்ப ஓவரு இல்ல.. ரொம்ப X ரொம்ப ஓவரு

    @சகோ ஆஷிக் //அப்புறம் நிரந்தர *** - ன்னு சொன்ன அடுத்த நாளு இந்த பதிவா...ரொம்ப டாப்பு...
    அது முந்தா நேத்து இது இப்ப எப்பூடி //
    அதுக்கு நாங்க பராவயில்லே "தற்காலிம் தான்" !

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்.

    ReplyDelete
  30. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்த சகோதரர் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  31. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //ஒவ்வொரு துன்பம் வரும்போதும்...
    'இறைவனின் சோதனை இவை' என எண்ணி பொறுமையுடன் கடந்து சென்றால்...//

    வாழ்வில் நிம்மதி தான் வாழ்வே ஒளிமயம் தான்

    ReplyDelete
  32. @அம்பாளடியாள்

    //அருமை அருமை அருமை சகோ!.... வாழ்த்துக்கள்//

    நன்றி நன்றி நன்றி சகோ

    ReplyDelete
  33. @உங்கள் நண்பன்

    //நல்ல வரிகள் என்பதை விட வலு நிறைந்த வரிகள் என்பதே சரி என்று நினைக்கிறேன்//

    தரமான கருத்துரைக்கும் தங்களின் முதல் வருகைக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  34. @G u l a m

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ..

    //கவலையில்லா கவிதை!
    படித்ததும் கவலைப்பட வைக்கிறது
    உலக வாழ்வின் எதார்த்த நிலை அறிந்து..!//

    ஆஹா கவலைப்படப்பிடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு மறுபடிக்கும் கவலையா?

    கவலை ஆரோக்கியத்தை தரும் என்றால் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கலாம்

    நன்றி சகோ

    ReplyDelete
  35. இன்றைய உலகியலின் இருப்பை பதிவு செய்கிறது உமது ஆக்கம் அடுத்துவரும் ஆண்டுகள் எதிர்வரும் காலம் இளமைக்கானது...எனவே அவர்களை வழி நடத்தும் போக்கு செம்மைபடுத்தும் விதம் பாராட்டு களுக்கு உரியதாகிறது நன்றி .

    ReplyDelete
  36. @மாலதி

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  37. ஹைதர் அலி அவர்களே...நீங்கள் படைத்திருக்கும் கவிதைக்கு வைத்திருக்கும் சிறுவர்கள் படம் நான் எடுத்தது ஆகும்...ஆனால் தாங்கள் அனுமதி இல்லாமல் பதிவிட்டிருப்பதும் அதை பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்பதும் எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.. இது தவறல்லவா? நீங்களும் ஒரு படைப்பாளி தானே..

    -சுரேஷ் பாபு (கருவாயன்)

    ReplyDelete
  38. வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
    மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது
    இரண்டுக்குமிடையே மனிதன்
    கற்பனையில் நடமாடிக் கொண்டிருக்கிறான்.//
    அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete