Thursday, February 2, 2012

ஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)


1996ல் சேலத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது  உடன்  வேலை பார்த்த சலீம் நண்பனாகி போனான்.  சலீமுடைய அக்கா ஆமீனா.அவனோடு நட்பு இறுக்கமாகி வீடு வரை போயி நாளடைவில் ஆமீனக்கா எனக்கும் அக்காவாகி போனார்.

தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பம் அது.  ஆமீனா அக்காவுக்கு 30 வயதிற்கும். ஆனால் திருமணம் ஆகாத முதிர்கன்னி. இவர்  தான் அக்குடும்பத்தில் மூத்தவர். மதராஸாவில் ஓதிய மாணவி (ஆலிம்மா). நல்ல மார்க்கப்பற்று உள்ளவர். எனக்கு ஆரம்பத்தில் மார்க்கம் என்றால் என்னவேன்று தெரியாமல் இருந்தபோது கற்றுக் கொடுத்த என் ஆரம்ப ஆசிரியை. கொஞ்சம் கருப்பாக இருப்பார். நிறமும் ஏழ்மையும் சேர்ந்து அவரை 30 வயதுவரை முதிர்கன்னியாக்கி வீட்டில் அடைத்து வைத்திருந்தது.

  என் நண்பன் சலீம் படிப்பை தொடர முடியாமல் அவன் எதாவது வேலைக்கு போயி சம்பாதித்தால் தான் குடும்பம் ஓடும் என்கிற சூழலில் ஜவுளிக்டையில் வேலைக்கு சேர்ந்தவன்.

அவனுக்கு 17 வயது. அப்போது என்னுடைய வயதும் அதுதான். சலீமோடு சேர்த்து என்னையும் அவரின் சொந்த சகோதரனாக பாவித்து தாயுள்ளத்தோடு அன்பு செலுத்தியவர் ஆமீனாக்கா.

ஜவுளிக்கடை மெஸ் சாப்பாடு அவ்வளவு நல்லா இருக்காது.சலீமின் அம்மா வீட்டில் இட்லி,இடியாப்பம் சுட்டு விற்பார்கள். அதையும் சாப்பிட மாட்டேன்.  பழைய கஞ்சி சுண்டவைத்த குழம்பு காலையில் ரொம்ப நல்லாயிருக்கும். அக்காவின் சமையல் தான்.  ரொம்ப நல்லாயிருக்கும். இப்போது கூட அந்த மனமும் சுவையும் வந்து போகிறது. மறக்க முடியவில்லை. சலீமோடு சேர்ந்து நானும் அவனின் சின்ன சின்ன குடும்ப செலவுகளை பகிர்ந்து கொள்வேன். நானாக முன்வந்து செய்வேனே தவிர  அவர்கள் எப்போதும்  என்னிடம் எதிர்பார்த்ததில்லை.சலீமுடைய மாத சம்பளம் 800. என்னுடைய சம்பளமும் அதுதான்.

கடையில் பெண்கள் உள்ளாடை பிரிவில் கீதாஅக்கா,பாக்கியலஷ்மி அக்கா இவர்கள் வேலை பார்த்தார்கள்.  அத்தோடு அழகு சாதன பொருட்களை சேர்த்து அந்த பிரிவை முதலாளி விரிவுபடுத்தியதால் இன்னும் சில பெண் வேலையாட்களை சேர்க்க வேண்டிய சூழல். பாக்கியலஷ்மி அக்கா என்னை கூப்பிட்டு, "சலீம் அக்காவை இங்கு வேலைக்கு வரச் சொல்லி கேட்டுப் பார். நாம பாத்துகிருவோம். அவர்களுடைய குடும்ப வருமானமும் கூடும். என்ன சரியா?? நாளைக்கு கேட்டு விட்டு வந்து சொல்லு! முதலாளி இக்பாலிடம் நான் சொல்லி சேர்த்து விடுகிறேன்" என்றார்.

ஆமீனா அக்காவிடம்  நானும் பேசினேன். "சும்மா இருக்கீங்க! கடைக்கு வாங்க... மாதம் 600 ரூபாய் சம்பளம்,  மாலை 6 மணிக்கெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்து விடலாம். குடும்ப கஷ்டமும் கொஞ்சம் குறையும். என்ன சொல்றீங்கே?" என்றேன். "சரிப்பா" என அவரும் சம்மதம் சொன்னார். கடையில் சேர்த்து விட்டோம்.  அன்றைய காலகட்டங்களில் புர்கா போடும் இஸ்லாமிய பெண்களை காண்பது மிகவும் குறைவு. அக்கா கடைக்கு முதல் நாள் புர்கா போட்டுக் கொண்டு வேலைக்கு வந்தார். மாலையானதும்  வீட்டுக்கு போய் விட்டார்.

அக்கா கடையைவிட்டு போன பின் முதலாளி பாக்கியலஷ்மி அக்காவை கூப்பிட்டு என்னவோ சொன்னார்.  எனக்கு காதில் விழவில்லை. அதற்குபிறகு பாக்கியலஷ்மி அக்கா என்னிடம் வந்து "ஹைதரு நாளைலிருந்து அவுங்க வேலைக்கு வரவேண்டாம் என்று முதலாளி இக்பால் சொல்லுகிறார்" என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  "ஏங்க்கா? என்ன காரணம்?" என்றேன்.  "விடுப்பா வேற வேலை பார்ப்போம்" என்று முடித்துக் கொண்டார்.
ஆனால் எனக்கோ மனம் கேட்கவில்லை. முதலாளி அறைக்குப் போனேன்.(முதலாளி பள்ளபட்டி என்ற ஊரை சார்ந்தவர்). "அண்ணே! அவுங்க கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்தவங்க.  அதனால் நான் அக்காவை இங்கு கூட்டிகிட்டு வந்தேன். என்ன காரணத்திற்காக அவரை விலக்குனீங்க? சொல்ல முடியுமா?" என்றேன்.

"ஒன்னுமில்ல...... புர்கா போட்டுக் கொண்டு,  முழுவதுமாக மூடிக் கொண்டு  கடைக்கு வருகிறார். அது அழகில்லை அதான்........" என்று இழுத்தார்.  (என்னை மீறி உதடுகளில் வரதுடித்த கோப வார்த்தைகளை அடக்கிக்கொண்டே) "அண்ணே அவுங்க வேலை செய்வது பெண்கள் உள்ளாடை பிரிவு. பெண்கள் தான் அங்கு வருவார்கள். அவர்களிடம் இவர் விற்க போகிறார். இதுக்கு எதுக்கு அழகு, கவர்ச்சி...???"  என்றேன்.  "அதற்கில்லை உள்ளாடைகள் மற்றும்  அழகு சாதன பொருட்கள்  என சின்ன சின்ன பொருட்களை விக்கிறோம்.  அவற்றை எடுத்து புர்காவுக்குள்  போட்டுக் கொண்டால் நமக்கு ஒன்றும் தெரியாது. கீதா, பாக்கியலஷ்மியெல்லாம்  புர்கா போடுவதில்லை. அதனால் திருடி ஒளிக்க வாய்ப்பில்லை.  மாலையில் வேலை முடிந்து போகும் போது மேலோட்டமாக பார்த்து அனுப்பி விடலாம். ஆனால் இவர் திருடி ஒளித்துக் கொண்டு போக வாய்ப்புண்டு" என்றார் முதலாளி.

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "இக்பால் அண்ணே அவுங்க மதராஸா மாணவி (ஆலிம்மா.) இறையச்சமுள்ளவர். திருட வாய்ப்பில்லை. புரிந்து கொள்ளுங்கள்"  என்றேன்.  அதற்கவர் ஒரே வார்த்தையில் "புர்கா போடாமல் வருபதாக இருந்தால் வரச்சொல்" என்றார்.

அடுத்த நாள் காலை ஆமீனா அக்காவிடம் புர்கா போடாமல் கடைக்கு வரமுடியுமா....??? என்று மெதுவாக இழுத்தேன். ஒற்றை வரியில் "முடியாது" என்று மறுத்து, "என்னுடைய உடை இதுதான். புர்கா அணியாமல்  நான் வரமுடியாது என்று சொல்லிவிடு" என்றார் கோபமாக. அன்று அவருடைய பிடிவாதம் அப்போது மார்க்கம் தெரியாத எனக்கு புரியவில்லை.

37 comments:

  1. தீன்குல பெண்மணி ஆமினாவுக்கு எனது ராயல் ஸ்ல்யூட்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாஷா அல்லாஹ் சூப்பர் பதிவு..

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.ஹைதர் அலி...

    //கீதா, பாக்கியலஷ்மியெல்லாம் புர்கா போடுவதில்லை. அதனால் திருடி ஒளிக்க வாய்ப்பில்லை.//---அடப்பாவிகளா..

    சகோ.ஹைதர் அலி...

    நீங்கள் உள்ளாடைகள் ஏதும் அணியாமல் கடைக்கு வந்துவிட்டு...

    தினமும் ஒரு புது பனியனும் ஒரு புது ஜட்டியும் சட்டை பேண்டுகள் மாட்டிக்கொண்டு சென்றுவிட்டால் என்ன பண்ணுவார் இவர்..?

    இப்படி எல்லாமா சிந்திக்கிறார்கள்..?

    ReplyDelete
  4. கும்புடுறேனுங்க... என்னோட முதல் வருகை இது!

    ReplyDelete
  5. Avargaludan payaniththa unarvu yerppattadhu...... Vaazhththukkal varun prakash

    ReplyDelete
  6. //மாலையில் வேலை முடிந்து போகும் போது மேலோட்டமாக பார்த்து அனுப்பி விடலாம். ஆனால் இவர் திருடி ஒளித்துக் கொண்டு போக வாய்ப்புண்டு" என்றார் முதலாளி.//

    அட மனுஷன் மனசு அலைபாயும், மிக கேவலமானது அது, அதை விடுங்க,

    //அடுத்த நாள் காலை ஆமீனா அக்காவிடம் புர்கா போடாமல் கடைக்கு வரமுடியுமா....??? என்று மெதுவாக இழுத்தேன். ஒற்றை வரியில் "முடியாது" என்று மறுத்து, "என்னுடைய உடை இதுதான். புர்கா அணியாமல் நான் வரமுடியாது என்று சொல்லிவிடு" என்றார் கோபமாக. அன்று அவருடைய பிடிவாதம் அப்போது மார்க்கம் தெரியாத எனக்கு புரியவில்லை.//

    இதுதான் இப்பதிவோட ஹைலைட்.

    ReplyDelete
  7. ஆமினா அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறந்த பதிவு!

    ReplyDelete
  8. சலாம் சகோ ஹைதர் அலி,

    தனியான லிங்க் லாம் தேவை இல்லை. உங்களுடைய URL ஐ காபி செய்து, அதில் ".in " மற்றும் அதற்க்கு பின் வரும் அனைத்து எழுத்துக்களையும் நீக்கிவிட்டு
    ".com /ncr " என்று டைப் செய்தால் தமிழ்மணம் பட்டை வேலை செய்யும். இது ஏதோ ஒரு தளத்தில் கிடைத்த தகவல், நண்பர் கஸாலி சொன்னது.

    Ex :"http://valaiyukam.blogspot.in/2012/02/blog-post.html" should changed to "http://valaiyukam.blogspot.com/ncr"
    New page will open, in that click the heading, that post will open in separate tab. There you can find tamilmanam"

    ReplyDelete
  9. வித்யாசமான பிரச்சனை.. வறுமையிலும் தன் முடிவில் உறுதியாக அவர் நின்றதை பாராட்ட தோன்றுகிறது..

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    ஆமினா சகோவுக்கு ஒரு சள்யூட்.
    அந்த முதளாளி இன்னும் உயிரோடவா இருக்கின்றார்?
    இறந்திருந்தால் அவருக்காக நாம் துஆ செய்வோம் உயிரோடு இருந்தால் சகோ ஆமினாவிடம் மன்னிப்பு கேட்பதே மேல்.

    சகோ ஆமினாவின் வாழ்க்கை என்ன ஆயிற்று?

    ReplyDelete
  11. சலாம் அண்ணா

    அருமையான கதை.

    ஆமினா அக்காவை பார்த்து பெருமையா இருக்கு.

    ReplyDelete
  12. நம்பிய கொள்கைகளில் பிடிச்சு நிக்கறாங்க பாருங்க. அது! சகோதரி ஆமினாவுக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    நல்லா இருக்கணும். ஆசிகள்.

    ReplyDelete
  13. அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்

    ReplyDelete
  14. இதே போன்றதொரு நிகழ்வு எனது அனுபவத்திலும் உண்டு . நான் அப்பொழுது பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எழுதிகொண்டிருந்த நேரம் , அப்பொழுது பறக்கும் படை வந்தது .அதில் ஒரு பெண்மணி முஸ்லிம் மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் அளவு மீறினார் . அப்பெண்களிடம் அவர்களது புர்காவை கழட்டுமாரும் இல்லையேல் தேர்வு எழுத அனுமதிக்க இயலாது எனவும் அதட்டினார் . ஒரு சில மாணவிகள் தங்களது புர்காவை கழட்டினர் .ஆனால் ஒரு மாணவி மட்டும் புர்காவை கழட்ட மறுத்ததோடு மட்டுமல்லாமல் , அப்படி புர்காவை அகற்றிதான் நான் இந்த தேர்வை எழுத வேண்டும் என்று சொன்னால் அப்படிப்பட்ட இந்த படிப்பு எனக்கு தேவை இல்லை என்றும் சொன்னாள்.இத்தனைக்கும் அந்த மானவை பள்ளியின் முதல் தரம் எடுக்கும் மாணவி.

    ReplyDelete
  15. சலாம் சகோ....
    அவ்வாறு சொன்னது ஒரு முஸ்லிம்..வெட்ககேடு...

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    படிக்க படிக்க மனம் கனத்து போனது!

    ReplyDelete
  17. @Jafar Safamarva

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //படிக்க படிக்க மனம் கனத்து போனது!/

    என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற கனத்த நிகழ்வுகள் என்னை பக்குவப் படுத்தியது உண்மை சகோ

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. @NKS.ஹாஜா மைதீன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //அவ்வாறு சொன்னது ஒரு முஸ்லிம்..வெட்ககேடு...//

    வெட்கத்திலும் வெட்ககேடு

    ReplyDelete
  19. @Adirai Iqbal

    நீங்கள் சொல்லும் சம்பவமும் இந்த பதிவுக்கு பொருத்தமான சம்பவம் சகோ

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. @சகோ அர அல

    //அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்//

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  21. @துளசி கோபால்

    //நல்லா இருக்கணும். ஆசிகள்.//

    உங்களின் முதல் வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி

    ReplyDelete
  22. @ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //ஆமினா அக்காவை பார்த்து பெருமையா இருக்கு.//

    இறையருளால் அவர் பெருமைக்குரியவர் தான்

    ReplyDelete
  23. @அந்நியன் 2
    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    //சகோ ஆமினாவின் வாழ்க்கை என்ன ஆயிற்று?//

    இப்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  24. @bandhu

    உங்களின் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  25. @சிராஜ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தமிழ்மண பிரச்சனைக்கான தீர்வு கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன்

    சுட்டிக்காட்டிமைக்கு நன்றி

    ReplyDelete
  26. @சுவனப்பிரியன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  27. @Syed Ibramsha

    நன்கு பதிவை விளங்கி படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  28. @மௌனகுரு

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  29. @தாமரைக்குட்டி

    வாழ்த்தும் தங்களின் அன்பு மனதிற்கு நன்றி

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    உண்மை சம்பவம்
    மெய் சிலிர்க்க வைக்கிறது!

    ReplyDelete
  31. மிக அருமையான உண்மை கதையை பகிர்ந்து இருக்கீங்க>
    அப்படி சொன்ன முதலாளிய ஓங்கி ஒரு அப்பு அப்புனும்....

    ReplyDelete
  32. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பாவா, படித்ததில் உருகியது.....

    ReplyDelete
  33. அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்

    ReplyDelete
  34. அந்த சகோதரியின் ஈமான்,சுபானல்லாஹ்.அல்லாஹ் அவர்களுக்கு இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்

    ReplyDelete
  35. அல்லாஹ்விற்கு பயப்படாமல் எப்படி வேண்டிமானாலும் இருக்கலாம் என்று இருக்கும் ஒரு சில நம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மத்தியில் ஆமினா அக்கா வறுமையிலும் தன் முடிவில் உறுதியாக அவர் நின்றதை பாராட்ட தோன்றுகிறது..

    ReplyDelete