பெண்கள் வீட்டின் கண்கள், கண் போல் பாதுகாப்போம் இது போன்ற பழமொழிகளுக்கும், கண்ணை மையப்படுத்தி எழுதப்படுகின்ற பாடல்களுக்கும் கவிதை வரிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த அளவுக்கு கண் என்பது மிக முக்கியமான உறுப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை நாம் சரியான முறையில் பாதுகாக்கிறோமா? அதற்கான பயிற்சிகள் செய்கிறோமா?
எந்த ஒரு விஷயமும் அது நம்மிடம் இல்லாத போதுதான் அதனுடைய மதிப்பு விளங்கும். ஒரு நிமிடம் கண்களைக் கட்டிக்கொண்டு அலுவலகத்தில் அல்லது வீட்டில் நடந்துப் பாருங்கள் முழு வாழ்க்கையும் இருண்டுவிட்ட மனநிலையை உணர்வீர்கள்.
ஒரு காலத்தில் விளையாட்டு பொழுதுபோக்கு என்றால் அது முழு உடல் சார்ந்து இருக்கும் ஆனால் இன்று விளையாட்டு, பொழுதுபோக்கு அனைத்துக்கும் கணினியைச் சார்ந்துதான் இருக்கிறோம்.
கணினியில் நிறைய நண்மைகள் இருந்தாலும் அது முதலில் முதலில் காவு வாங்குவது நமது கண்களைத்தான்.
சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
எப்படி காலையில் எழுந்ததும் பல் துலக்குவது என்பது நடைமுறைப் பழக்கத்தில் இருக்கிறதோ அதேபோன்று மற்ற உறுப்புகளுக்கும் செய்யவேண்டிய பயிற்சிகளையும் நடைமுறை பழக்கமாக மாற்றிக் கொண்டால் பற்களை விட முக்கியமான உறுப்பான கண்களை பாதுகாத்து விடலாம்.
பயிற்சிக்குள் நூழையும் முன்
காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடங்கள் நம் கண்களுக்காக ஒதுக்கி கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்யலாம். நாள் முழுவதும் நமக்காக வேலை செய்யும் கண்களுக்காக ஒரு நாளில் பத்து நிமிடம்கூட ஒதுக்கவில்லை என்றால் எப்படி?
இந்த பயிற்சியை எப்போது வேண்டுமானலும் செய்யலாம் கணினியில் நீங்கள் இருக்கும் போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த பயிற்சிகளை செய்துவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் கைகளை நீட்டி செய்ய வசதி இல்லையென்றால், கைகளை நீட்டாமல் கண்களை சுழல விடுங்கள்.
.(செய்து பாருங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள்)
சரி வாங்க, இப்ப பயிற்சிக்குள் நூழைவோம்
இந்த வீடியோவை நன்றாக கவனித்து பாருங்கள்
செய்முறை விளக்கம்:
1. நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை தோள்களுக்கு நேராக நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண் பார்வையை மட்டும் திருப்பி வலது கட்டைவிரலை பாருங்கள். பின்பு இடதுகட்டைவிரலை பாருங்கள். இப்படி 20 முறை பார்க்கவும்(வலதைப் பார்த்து இடதை பார்ப்பது ஒருமுறை என்ற கணக்கில்)
2.அதன் பிறகு இடதுகட்டைவிரலில் ஆரம்பித்து வலது கட்டைவிரலை பார்க்கவும் இதுவும் 20 முறை
3.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதிப் பத்தில் வேகமாக செய்ய வேண்டும் இந்த வீடியோவையும் நன்றாக கவனித்து பாருங்கள்
(இது இரண்டாவது சுழல் பயிற்சி முறை)
1.நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண் பார்வையை மட்டும் திருப்பி வலது கட்டை விரலை பாருங்கள். பின்பு தரையை பாருங்கள். பிறகு இடதுகட்டைவிரலைப் பாருங்கள். பிறகு மேலே மேற்கூரையை பாருங்கள்.
2.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதிப் பத்தில் வேகமாக செய்ய வேண்டும் (மோத்தம் 20 முறை செய்ய வேண்டும்)
.
எதிர்மறையாக செய்யக்கூடிய இந்த வீடியோவை கவனித்து பாருங்கள்
இந்த வீடியோ செய்முறை விளக்கத்தில் சிறு பிழை நிகழ்ந்து விட்டது
(சுட்டிக் காட்டிய சகோ. ராஜவம்சம் அவர்களுக்கு நன்றி)
கீழே உள்ள விளக்கத்தைப் படித்து அதன்படி மாற்றி செய்யவும்
1. நேராக நிமிர்ந்து நின்று உங்கள் கைகளை தோள்களுக்கு நேராக நீட்டுங்கள். கட்டைவிரலை மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக்கொள்ளுங்கள். இப்போது தலையைத் திருப்பாமல் கண்பார்வையை மட்டும் திருப்பி முதலில் இடது கட்டைவிரலைப் பாருங்கள். பிறகு தரையை பாருங்கள். பிறகு வலது கட்டைவிரலை பாருங்கள். அப்புறம் மேற்கூரையை பாருங்கள்.
2.ஆரம்பத்தில் 10 வரை மெதுவாக பார்க்க ஆரம்பித்து இறுதி பத்தில் வேகமாக செய்ய வேண்டும் (மோத்தம் 20 முறை செய்ய வேண்டும்)
கண்களை வேகமாக சுழல விட வேண்டும்
|
இந்த புகைப்படத்தில் உள்ளது போன்று |
பயிற்சி முடிந்த பிறகு
கைவிரல்களை சூடு பறக்க தேய்த்து விட்டு கண் இமைகளின் மீது மெதுவாக
(பொத்துவது போல்) தடவி விடவும்.
இந்த பயிற்சியினால் ஏற்ப்படக்கூடிய பலன்கள்:
-இந்த பயிற்சின் மூலம் கண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது.
-கண்களை சுற்றியிருக்கின்ற நரம்புகளுக்கு நல்ல வேலை கொடுத்து அவைகளை செயல்பட வைக்கிறது.
-கண்களில் கருவளையத்தை போக்கி விடும்.
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பலனை உடனடியாக உணர்வீர்கள்!
பதிவு எழுதுபவர்கள், ஐ.டி துறையில் உள்ளவர்கள், வீடியோ கேம் பார்க்கும் சிறுவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய பயிற்சி.
வாழ்வில் ஒளி பெற கண்ணொளி அவசியம். கண்களை 'கண்களைப்போல்' போற்றிப் பாதுகாப்போம்!
இறுதியாக,
இதை விட முக்கியமான பயிற்சி ஒன்று இருக்கிறது அதை அடுத்த பதிவில்
சொல்லித் தருகிறேன் அந்த பயிற்சியின் மூலம் மூளை நன்கு புத்துணர்ச்சி பெறும். முடி கொட்டுவது நின்று, முடி நன்றாக வளரும்.
அந்த பயிற்சியை நீங்கள் ஒரளவுக்கு ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
இப்பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.