மனிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.
இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.
வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள்.
மதங்களின் மீதான இத்தகைய விமர்சன் ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.
ஒரு மதத்தை மற்றவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பதைப் பார்க்கக் கூடாது. மாறாக அம்மதம் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதையே அறிய வேண்டும்.
இந்த வார்த்தைகள் இந்நூலின் ஆசிரியர் மற்ற மதங்களில் போரைப் பற்றி என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்ய போகும் முன் உதிர்த்த வார்த்தைகள்.
இந்த புத்தகம் நடுநிலையோடு மற்ற மதங்களையும் இஸ்லாத்தையும் எப்படி ஆய்வு செய்திருக்கிறது என்பதற்கு மேலேயுள்ள அவருடைய வாக்குமூலங்களே போதுமானாது.
இந்த நூலின் ஆசிரியர் டெல்லியில் இருந்தபோது
’இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளோர் அனைவரும் இந்துக்களாக இருந்தவர்களே! அவர்களை மறுபடியும் இந்துக்களாக மாற்ற வேண்டும்’ என்பதைக் குறிக்கோளாய் கொண்டு ’சுத்தி இயக்கம்’ ஒன்றை அக்காலத்தில் ‘ஆரிய சமாஜம்’ நடத்தி வந்தது.
அவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலரும் பொது மேடைகளில் அண்ணல் பெருமானார் அவர்களை மிகக் கேவலமாகத் திட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். 1919ம் ஆண்டு சுவாமி சுத்தானந்தா என்பவர் அவ்வண்ணம் ஒரு மேடையில் அண்ணலாரைத் திட்டுவதைக் காணச்சகிக்காத கருத்தை கருத்தால் சந்திக்க திராணியற்ற கோழையான ஒர் இஸ்லாமிய இளைஞன் அவரைக் குத்திக் கொன்றுவிட்டான்.
இஸ்லாம் என்பதே வன்முறையின் மறுபெயர். எடுத்தற்கெல்லாம் கத்தியைத் தூக்குவதே இவர்களின் வழக்கம் என்று காந்தி போன்ற தலைவர்கள் உட்பட ஒருத்தர் விடாமல் அனைவரும் பேச ஆரம்பித்தனர்.
டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் வெள்ளியுரை நிகழ்த்திய மெளலானா முஹம்மது அலி ஜெளஹர் என்பவர். ’இஸ்லாமைப் பற்றியும் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றியும் ஆளுக்கு ஆள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுள்ளார்கள் இங்கே அமர்ந்திருக்கும் இளைஞர்களில் யாரேனும் ஒருவர் இதைப் பற்றி அலசி ஆராய்ந்து இஸ்லாமிய ஜிஹாதைக் குறித்து முழுமையான நூல் ஒன்றை வெளியிடக் கூடாதா என்று எனக்கு ஏக்கமாக இருக்கின்றது’ என அவர் தனது உரையில் ஆதங்க்கத்தோடு குறிப்பிட்டார்.
எதேச்சையாக அவ்வுரையை அபுல் அஃலா மெளதூதி கேட்டுக் கொண்டிருந்தார். மெளலானாவின் வேண்டு கோளை மானசீகமாக ஏற்றுக் கொண்ட அவர் அதற்காக உழைக்கத் தொடங்கினார். 1927 ம் ஆண்டில் புத்தகமாக இந்நூல் வெளிவந்தபோது இவருடைய வயது 23 .
472 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்திற்காக இந்த நூலின் மூல ஆசிரியர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நாட்கள் 2190.
இவர் இந்நூலை ஆறு அத்தியாயங்களாக தொகுத்திருக்கிறார்
1.இஸ்லாமிய ஜிஹாதின் நிலை
2.தற்காப்புப் போர்
3.சீர்திருத்தப் போர்
4.இஸ்லாமியப் பரவலும், வாளும்
5.போர் சமாதானம் பற்றிய இஸ்லாமிய சட்டங்கள்
6. வேற்று மதங்களில் போர்
ஒவ்வோரு தலைப்பிலும் ஆசிரியரின் உழைப்பும் ஆய்வும் நமக்கு மலைப்பை ஏற்ப்படுத்துபவை.
இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய ஜிஹாதை பற்றியும் தவறான எண்ணங்கொண்ட மற்று மத சகோதரர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல்.
ஆசிரியர்
சையத் அபுல் அஃலா மெளதூதி
தமிழக்கம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
வெளியீடு
திண்ணை தோழர்கள் பதிப்பகம்
10/57, அரசு குடியிருப்பு பின்புறம்
ராயபுரம் முதன்மைச் சாலை
திருப்பூர் 641601,
டிஸ்கி: ‘ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாத வரை அவர் வேறு; இவர் வேறு”- பாரசீகக் கவிதை. knowledge is the shortest distance between two communities.அறிவு (பரஸ்பர அறிமுகம்) இரு சமூகங்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.
நமக்குள் நல்ல புரிதலும் பரஸ்பர ஒற்றுமையும் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூல் அறிமுகம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteசகோ.ஹைதர் அலி..!
///நமக்குள் நல்ல புரிதலும் பரஸ்பர ஒற்றுமையும் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூல் அறிமுகம்.///--தெளிவு..!
நூல் நன்றாக ஆரம்பிக்கிறது..! அறிமுகத்திற்கு நன்றி சகோ.
@முஹம்மத் ஆஷிக்
ReplyDeleteஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
நன்றி சகோ
மௌலானா மௌதூதியின் ஆக்கம் என்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல... ஆசிரியர் பற்றிய ஞானமே அந்த புத்தகத்தை நேசிக்க வைக்கும், என்றாலும் புத்தகத்தை பற்றியும் எழுதியிருக்கலாம்... ஒரு வேளை அடுத்த பதிவில் வாசிப்போ??
ReplyDelete//////// கருத்தை கருத்தால் சந்திக்க திராணியற்ற கோழையான ஒர் இஸ்லாமிய இளைஞன் அவரைக் குத்திக் கொன்றுவிட்டான்.////////////////
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் அண்ணா.
///////////இஸ்லாம் என்பதே வன்முறையின் மறுபெயர். எடுத்தற்கெல்லாம் கத்தியைத் தூக்குவதே இவர்களின் வழக்கம் என்று காந்தி போன்ற தலைவர்கள் உட்பட ஒருத்தர் விடாமல் அனைவரும் பேச ஆரம்பித்தனர்./////////////////
இஸ்லாம் மீது விருப்பமில்லாதவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை கலங்கப்படுத்த இதுபோன்ற முஸ்லிம்களின் செயலைத்தான் கையில் எடுத்துகொள்கிறார்கள் என்பதுதான் 100க்கு 100 உண்மை
சிறந்த நூலின் அறிமுகம் இந்த நூலில் உள்ள பலவிசயம் நமக்கே புதிதாக தோன்றும் நூலின் அசிரியர் பாராட்டுக்குறியவர்.
ReplyDelete@அன்னு அவர்களுக்கு
ReplyDeleteஇந்த புத்தகத்தை படித்துவிட்டு எதை எழுதுவது எதை விடுவது என்று குழப்பம் ஏற்பட்டது எனேன்றால் இப்புத்தகத்தில் உள்ளவை அனைத்தும் முக்கியமானவை
அதனால் இப்பதிவை ஒரு திசை காட்டும் பதிவாக இட்டேன்.
நன்றி சகோ
@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDeleteநன்றி சகோ
@ராஜவம்சம்
ReplyDeleteஉங்களின் வாசிப்புக்கு நன்றி
//ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.
ReplyDeleteவெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள்.// இந்த கருத்தை ஒவ்வொருவரும் நம்பியே ஆக வேண்டும்.
@Issadeen Rilwan - Changes Do Club
ReplyDelete// இந்த கருத்தை ஒவ்வொருவரும் நம்பியே ஆக வேண்டும்.//
இந்த புத்தகம் எனக்குள்ளும் நிறைய மாற்றங்களை எற்ப்படுத்தியது சில வரிகள் சுயவிமர்சனம் செய்ய வைத்தன
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டுமாக!
ReplyDeleteமௌதூதி அவர்களின் பல புத்தகங்களும் இஸ்லாமிய அறிவை நமக்கு அள்ளி வழங்கும். முஸ்லிம்களிடத்திலேயே இவரின் ஆக்கங்கள் இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி.
வாழ்த்துக்கள்.
@சுவனப்பிரியன் அவர்களுக்கு
ReplyDeleteநீங்கள் சொல்வது சரியானது
நிறைய புத்தகங்கள் உருதுவில் இருந்து தமிழில் மெழிமாற்றம் செய்யப்பாடமல் கிடக்கிறது