Sunday, December 4, 2011

சுதந்திரத்தைக் கொலை செய்து விடாதே...

பிறரது பண்புகளை உனக்குள் புகுத்தாதே. மற்றவர்களில் நீ மறைந்து போகாதே.
இது நிரந்தர வேதனை.பெரும்பாலானோர் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களையே மறந்து விடுகிறார்கள். தங்களது குரல்களை,அசைவுகளை,வார்த்தைகளை,திறமைகளை,நல்ல பன்புகளை மறந்து விடுகிறார்கள்.இறுதியில் தமது இருப்பையும் சுயசார்பையும் இழந்து போலித்தனமாக வாழ்கிறார்கள்;அதனால் அவதியுறுகிறார்கள்.

ஆதி மனிதர் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை ஒரே வடிவில் இருவர் இருக்க மாட்டார்கள்.பிறகு எப்படி அவர்களது குணங்களும் திறமைகளும் ஒரே மாதிரி இருக்க முடியும்?

நீ மற்றொருவன்.உலகில் உன்னைப் போல் வேறு எவரும் பிறந்திருக்க முடியாது.இனி பிறக்கவும் முடியாது.

நீ இவனை விட அவனை விட முற்றிலும் மாறுபட்டவன். எனவே கண்மூடித்தனமாக இவனை பின்பற்ற வேண்டும், அவனை போல வாழ வேண்டும் என உன்னை நீ வற்புறுத்தாதே.

“ஒவ்வொருவருக்கும் ஒரு திசை உண்டு. அதை அவர் முன்னோக்குவார்.
எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 2:148)

நீ எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாயோ அவ்வாறு வாழு. உனது குரலை பேச்சு நடையை மாற்றாதே .உனது நடை எதுவோ அவ்வாறே நட.அதற்கு மாறு செய்யாதே.வேத அறிவிப்புக்கு ஏற்ப உன்னை நீ செதுக்கு. ஆனால்,உனது இருப்பை வீணாக்கி விடாதே. உனது சுதந்திரத்தைக் கொலை செய்து விடாதே.

உனக்கென ஒரு சுவை உண்டு.உனக்குரிய சுவையை சுவைத்து,நிறத்தை ரசித்து நீ வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.ஏனெனில்,நீ இவ்வாறே படைக்கப் பட்டிருக்கிறாய்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “உங்களில் எவரும் சுயசார்பற்றவராக இருக்க வேண்டாம்”.(நூல்திர்மிதி)

மனிதர்களின் பன்புகள் மரஞ் செடிகளின் உலகத்திற்கு ஒப்பானது. அவற்றில் சில இனிக்கும். சில புளிக்கும். சில உயரமாக இருக்கும். சில குட்டையாக இருக்கும். மனிதர்களின் பண்புகளும் இப்படித்தான் அமைந்துள்ளன. எனவே, நீ வாழைப் பழத்தைப் போன்றவனாக இருந்தால், எட்டிக்காயைப் போல மாற நினைக்காதே. ஏனெனில், உனது அழகும், மதிப்பும் நீ வாழைப் பழமாக இருப்பாதால் தான் கிடைக்கின்றன. நமது நிறம்,மொழி, திறமை,ஆற்றல் ஆகியவை வேறுபட்டிருப்பது இறைவனது சான்றுகளில் ஒன்று. அவனது சான்றை நீ மறுக்காதே.

( நன்றி: அரபிக் கவிஞர் டாக்டர் ஆயிழ் அல்கர்னீ)

8 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே

    ReplyDelete
  3. இவங்க தான் என் ரோல் மாடல்ன்னு சொன்னா எனக்கு சிரிப்பா வரும். அவரவர்க்கு தனித்துவம் இருக்கையில் ஏன் தன் சுயத்தையும் அடையாளத்தையும் தொலைக்க வேண்டும் :-)

    நல்ல பதிவு அண்ணா

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நல்லது, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஸலாம்

    இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தில் இருப்பது போல் காட்டுகின்றனர் ...

    //அல்லாஹ்வின் ஒளியைத்(மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை (மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)//

    என்னுடைய கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன் ..

    ReplyDelete
  6. ஸலாம்

  7. மாஷா அல்லாஹ் சூப்பர் அண்ணா....

    ReplyDelete