Wednesday, December 7, 2011

தினமலர் தீக்குளித்து தற்கொலை


உலகத்திலேயே நம்பர் ஒன் (பொய் & பிராடு) பத்திரிக்கையான தினமலர் உண்(பொய்)மையின் உரைகல்லைக் கொண்டு பயங்கரமாக உரசியதால் பத்திரிக்கை தர்மம், நேர்மை போன்றவைகள் ஏற்கனவே அரைகுறையாக எரிந்து அழுகி நாறி போயிருந்த நிலையில் நாற்றம் அதிகமாகவே தன்னை முழுமையாக எரித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இப்போது இருப்பது வெறும் பிணம் மட்டும் தான்.

மறுபடியும் இந்த தினமலர் என்ற தினபிணம் தனது நரித்தனத்தை காட்டியிருக்கிறது. எத்தனை முறை அம்பலப்பட்டாலும் இன்னும் நம்மை நம்பக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் தினமலருக்கே உரித்தான மட்டரகமான பணியில் 07/12/11 வியாழன் இன்று 

“தீ மிதித்து மொகரம் அனுசரிப்பு இந்துக்களும் பங்கேற்றதால் ஒற்றுமை”
என்ற வழக்கமான போஸ்ட் தந்திர உத்தியோடு ஒரு செய்தி. தலைப்பை பாருங்க என்ன ஒரு நரித்தனம் (செய்தி தலைப்பு போடுவதற்காகவே தனியாக ஸ்பெஷல் வகுப்பு எடுப்பார்கள் போல).இந்த செய்தியின் தலைப்பை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு இது சமய நல்லிணக்க செய்தி போன்று தெரியும் (அதுதான் தினமலரின் ஸ்பெஷாலிட்டி) ஆனால் செய்தியை ஊன்றி படித்தால் தினமலரின் அக்மார்க் சானக்கியத்தனம் புரியும். 
தினமலர் வெளியிட்ட செய்தி படிக்க படத்தை
அழுத்துங்கள்
தினமலர் இணையதள ஸ்கிரின் ஷாட்

மொகரம் பண்டிகையின் போது, முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.ராயபுரத்தில் உள்ளது மஜித்த பர்குண்டா பள்ளி வாசல். இங்கு மொகரம் பண்டிகையை ஒட்டி அசேன் உசேன் தீமிதி திருவிழா நடைபெறும். பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார். அவர் நினைவாக இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டோர் முறைப்படி விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்த தீ மிதித்தனர். இதில் 15 பேர் இந்துக்கள்.மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துவதற்கான குழியை வெட்டுகின்றனர். ஐந்து நாள் வரை குழியைக் காய வைக்கின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவுக்குப்பின் அதிகாலை 3 மணிக்கு தீ மிதி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் 10ம் நாள் மொகரம் பண்டிகை. அன்று தீ மிதிக்கும் குழியை மூடி நிகழ்ச்சி நிறைவு செய்கின்றனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீபா கூறும் போது, ""தீமிதிக்கும் நிகழ்ச்சியில் ஆண்டு தோறும் கலந்து கொள்கிறேன். இந்துக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்,'' என்றார்.மண்ணடி, ஐஸ்ஹவுஸ், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் முன்பும் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த செய்தியில் இந்துக்கள் கலந்து கொண்டதால் ஒற்றுமை என்று எழுதியிருக்கும் தலைப்பிற்குள்ளே கலந்து கொள்ளவில்லையென்றால் ஒற்றுமை கிடையாதா? என்ற எதிர் கேள்வி இயல்பாக வரும். ஒற்றுமையை ஏற்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்க பண்டிகையில் கலந்துக் கொள்வது தான் ஒற்றுமை என்பது போல் உளறிக் கொட்டியிருக்கிறது.


அதற்கு அடுத்தபடியாக பாத்திமா நாச்சியாரின் மகன்களான அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு, பாத்திமா தீக்குளித்து இறந்தார் என்று அசிங்கமாக வரலாற்றை திரித்து, முஸ்லிம்களின் உயிருக்கு மேல் மதிக்கக்கூடிய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற அவதூறை கை கூசாமல் எழுதுகிறது எவ்வளவு பெரிய அபாண்டம்.

தற்கொலை எந்த சூழலிலும் எந்த காரணத்திற்காகவும் செய்யக் கூடாது. வாழ்க்கையில் எதிர்த்து போராடியே ஆக வேண்டும் என்று போதித்த தலைவரின் மகளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று புளுகியிருப்பது எதார்த்தமானது அல்ல.


வரலாற்று உண்மை என்ன?

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாசத்துக்குரிய மகள் பாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்கள் இறந்த ஆறு மாதத்திற்கு பிறகு இயற்கையான முறையில் இறந்தார்கள்.அப்போது அவரது மகன்கள் ஹசன் (ரலி),ஹுசைன் (ரலி) இருவரும் சிறுவர்கள் (புகாரி 3903)

ஹிஜ்ரி வருடம் 11ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3ம் நாள் செவ்வாய் இரவு பாத்திமா (ரலி) மரணித்தார்கள்(நூல்:அல் இஸாபா 11583)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அலீ (ரலி), ஃபழ்ல் (ரலி) ஆகியோர் கப்ரில் இறங்கி இரவில் அடக்கம் செய்தனர். (அல் இஸாபா 11583 பாகம் 2, பக்கம் 128)


பாத்திமா (ரலி) இறந்தது ஹிஜ்ரி 11ல் அவரது மகன் ஹுசைன் (ரலி) போரில் கொல்லப்பட்டது ஹிஜ்ரி 61-ல். கிட்டதட்ட 50 வருட இடைவெளி. கவனிக்கவும் இதுதான் தினமலர் செய்தி தரும் இலட்சணம்.

தற்கொலை செய்யக் கூடாது என்பதற்கான இஸ்லாமிய சட்டங்கள்.

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்(குர்ஆன்2:195)


உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் (குர்ஆன்4:29)
கொஞ்சம் இந்த வீடியோக்களை பாருங்கள் தற்கொலை எப்படி முழுமையாக தடுக்கப்பட்ட (ஹாராம்) என்பதை Dr.Kvs ஹபிப் முஹம்மது விளக்குகிறார்
கற்பைக் காக்க தற்கொலை செய்யலாமா? என்ற கேள்விக்கு விரிவான விளக்கத்தை தருகிறார். மார்க்க அறிஞர் பி.ஜே அவர்கள்.


தினமலரின் மேல் ஆரம்ப காலகட்டங்களில் (1999 களில்) நல்ல அபிப்ராயம் இருந்தது. அறியாமல் எழுதுகிறார்கள் என்று நினைத்து அப்போது பெரிதாக இணையதள வசதியில்லாத காலம் என்பதால் பிளாக்கில் பின்னூட்டம் (கருத்துரை) எழுவதற்கு முன்பே சரியான நிலைப்பாடை விளக்கி வாசகர் கடிதங்கள் எழுதியிருக்கேன். அவர்கள் ஒன்றை கூட பிரசுரித்தது கிடையாது.

இது உங்கள் இடம் என்கிற பகுதியில் இஸ்லாத்தையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வருகிற கற்பனை கதை பாணியிலான கடிதங்கள் வெளியாவதை பார்த்து தெளிவடைந்தேன். உதாரணத்திற்கு தாலி கட்டும் பழக்கம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இது உங்கள் இடம் என்கிற இடத்தில் வருகிற பதிலை பாருங்கள்.

முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து ஆட்சி செய்த போது கடைத்தெருவுக்கு வந்து திருமணம் முடிக்காத இந்து பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். தவறுதலாக திருமணமான பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடக்கூடாது என்பதற்காக தாலிக் கயிறு அடையாளமும் கட்டும் பழக்கமும் ஏற்பட்டது என்று ஒரு வாசகர்!? எழுதுகிறார். இது அந்த பகுதியில் வரவேற்பை பெறுகிறது. இந்த செய்தியை படிக்கிற சகோதர இந்துக்கள் தங்கள் மனைவியின் தாலியை பார்த்தால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அடியாளத்தில் ஏற்பட வேண்டும் என்கிற தந்திரத்தை புரிந்துக் கொண்டேன்.

அடுத்து ஒரு செய்தி. அப்போது பயர் என்கிற ஓர் பாலின உறவு கொள்கிற இளம் விதவைகளின் கதையை மையமாக கொண்ட படம் நந்திதாஸ் என்கிற நடிகை மேட்டுக்குடி உயர்ஜாதி பெண்ணாக நடித்து சர்ச்சைக்குள்ளான நேரம். இது உங்கள் இடத்தில் ஒரு வாசகர்!? கேள்வி கேட்கிறார். அதற்கு பதில்
முகலாய மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது அந்த இஸ்லாமிய பெண்களிடம் அந்த பழக்கம் இருந்தது. அப்படியே அந்த பழக்கம் இந்துப் பெண்களை தொற்றிக் கொண்டது என்று அதே முகலாய கதையை கைக்கூசாமல் வாசகர் என்ற பெயரில் விஷத்தை விதைத்தார்கள்.

அதற்கு கருத்தியல்ரீதியாக பதில் எழுதினேன். இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மறுமணம் செய்து வைத்து விடுவார்கள். மறுமணம் செய்து வைக்க மறுக்கிற சமூகத்தில் தான் லெஸ்பியன் / ஓர் பாலின உறவு தேவைப்படும் என்கிற ரீதியில் நான் எழுதிய வாசகர் கடிதங்கள் எந்த குப்பையில் கிடக்கிறதோ? தெரியவில்லை.


தினமலர் இலவச இணைப்பு சிறுவர் மலரில் குருபக்தி என்ற என்ற பட சிறுகதையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கற்பனையான உருவப்படம் வரைந்து நபித் தோழரான அபுபக்கர் (ரலி) அவர்கள்  நபியவர்கள் காலில் விழுந்து வணங்குவது போல் வரைந்திருந்தது.


நபியவர்கள் நடந்து வரும்போது மரியாதைக்காக எழுந்த நபித் தோழரின் தோளைப் பிடித்து அமுக்கி அமர சொன்னார்கள் நபிகளார். அவர்கள் காலில் விழுவதை அனுமதிப்பார்களா? காலில் விழுவதை இஸ்லாம் தடை செய்த விஷயமும் முஹம்மது நபிக்கு உருவம் வரையக்கூடாது என்கிற விஷயமும் தனக்கு தெரியாது என்று சமாளித்தது.


தினமலர் அளித்த விளக்கம் முழுப்பொய் என்பதை நிருபிக்கும் விதமாக டென்மார்க்கில் வெளியாகி பல கலவரங்களையும்  உயிர் பலியும் ஏற்படுத்திய முஹம்மது நபி உருவப்பட கார்டூனை தமிழ் பத்திரிக்கையில் அதுவும் ரமளான் மாதத்தில் வெளியிட்டு தன் உண்மை முகத்தை காட்டியது.



இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமல்ல இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூக மக்களை பற்றியும் இதே பாணியிலான செய்திகளை வெளியிடுவது அனைவரும் அறிந்த உண்மை.



உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தினமலரை தீக்குளிக்க வைத்த போது.

நியாய உணர்வுள்ள நடுநிலைவாதிகளும், சிறுபான்மை இன மக்களும் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மற்றும் தமிழினவாதிகளும் தினமலரை அம்பலப்படுத்தி புறக்கனிக்க வேண்டும்.

தினமலர் சென்னை தொடர்பு எண்கள். அனைவரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.


மெயில் ஐடி coordinator@dinamalar.in


Mobile No: -             9944309600      
Ph:             044 2841 3553      , 2855 5783

            044-24614086      

உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள்

76 comments:

  1. பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி மாப்ள!

    ReplyDelete
  2. தினமலம்,தினபிணம்,தினவிஷம்,தினசதி,தினத்தீ,தினப்புரட்டு,..
    இப்படி தினமும் தீமையையே விதைக்கிறார்களே, இதன்
    விளைச்சலின் பலன் அவர்களுக்கு எதிராகத் திரும்பும்
    நாள் எந்நாளோ இறைவா!

    ReplyDelete
  3. ஸலாம்,

    தினமலர் மெயில் ஐடி

    coordinator@dinamalar.in

    தினமலர் சென்னை முகவரி:

    Chennai
    219, Anna Salai ,
    Chennai - 600 002
    Mobile No: - 9944309600
    Ph: 044 2841 3553, 2855 5783
    Fax: 044 2852 3695
    Advertisement Ph: 044-24614086
    Email: dmrcni@dinamalar.in

    ReplyDelete
  4. இதன் வாரமலரின் ”இது உங்கள் இடம்” பகுதி 90-களில் பிரபலமாக இருந்தது. அப்போது அதில் வந்த - வந்ததாக இட்டுக்கட்டப்பட்ட ஒரு கடிதம் இவர்களின் மனநிலையைத் தெளிவாகச் சொன்னது:

    இரு கல்லூரிப் பெண்கள், வெயிலுக்காக தலையில் முக்காடு போட்டுச் சென்றார்களாம். அப்போது வழியில் இருந்த ஒரேயொரு வொர்க்‌ஷாப்பில் வேலைசெய்துகொண்டிருந்தவர்கள் இவர்களை தகாத முறையில் சைகை செய்திருக்கிறார்கள். அப்பெண்கள் ஏனிப்படிச் செய்தீர்கள் என்று கேட்க, அவர்கள் அதற்கு “தலையில் முக்காடு இட்டிருந்தால் “அந்த மாதிரிப் பெண்கள்” என்று அடையாளம். அப்படி நினைத்து அழைத்தோம்” என்று சொன்னார்களாம்!! இதன் செய்தி புரிகிறதா?

    அப்போது பர்தா பிரபலமாகாத காலம்; முஸ்லிம் பெண்கள் சேலையால் முக்காடணிந்து செல்வதே வழக்கம். எந்த ஊரில் ஒழுக்கமற்ற பெண்கள் உடலை முழுதும் மறைக்கும்விதமாக முக்காடணிவதைக் கண்டார்கள் இக்கயவர்கள்?? (தாங்களே எழுதிய) இக்கடிதத்திற்கு முதல் பரிசு கொடுத்துத் தங்களை மகிழ்வித்துக் கொண்டார்கள்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ஹைதர் அலி,
    உங்கள் பதிவின் தலைப்பே ஆயிரம் அர்த்தம் சொல்கிறது. இந்த தினமலத்தை, அதன் ஆசிரியர்களை மனித மலம் கொண்டு அடித்தாலும் அதை அவர்கள் வாயில் ஊற்றினாலும் திருந்த மாட்டார்கள். சட்டப்போராட்டத்தின் மூலமாக கூட இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம். எனவே வேறு வகையில் அடித்தால் தான் அவர்கள் திருந்துவார்கள்.

    முதலில் அவர்களின் விற்பனையை தடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் தினமலருக்கு எதிராக மக்களிடம் எடுத்து சொல்லி அதை வாங்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    இரண்டாவது தினமலர் பத்திரிக்கையை கொண்டு வரும் வாகனத்தை முற்றுகையிட்டு விற்பனையாளர்களுக்கு சென்று சேராமல் மக்கள் திரள் போராட வேண்டும். இரண்டு நாள் பத்திரிகை சரியாக போகாவிட்டால் தானே வழிக்கு வரும் தினமலர். அடிமடியில் கை வைத்தால் தான் அவர்கள் திருந்துவார்கள்.

    ReplyDelete
  6. ஸலாம்...

    தீ மிதிக்கும் மூடநம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இது போன்றவற்றை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கின்றது. யாரோ சில மார்க்கம் தெரியாத அறியாமை மனிதர்கள் செய்யும் முட்டாள்தனங்களை ஒற்றுமை நிகழ்வாக கூறி தன் சிண்டு முடித்துவிடும் வேலையை மறுமடியும் செய்திருக்கின்றது தினமலர்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோ ..

    2855 5783 நான் இந்த நம்பர்க்கு தொடர்பு கொண்டேன் ,சென்னையில் சில பேர்கள் வந்து பேசியதாக சொல்லி போன்னை கட் செய்துவிட்டனேர்.

    ReplyDelete
  8. நீ வெட்கமில்லதவனாக இருந்தால், வேண்டியதை செய்து கொள் என்கிறது ஒரு கவிதை. அது போல்தான் தினம்லரும் ஆகிவிட்டது போலும்.../

    ReplyDelete
  9. தினமலர் முகவரி:

    Puducherry
    TVR House, Thattanchavadi,
    Puducherry - 605 009.
    Mobile No: - 9894009001.
    Ph: 0413 224 9301/03
    Fax: 0413 224 9306

    Email: dmrpondy@dinamalar.in





    Madurai
    TVR House, Dinamalar Avenue,
    Madurai - 625 016.
    Mobile No: - 9894009400.
    Ph: 0452 238 0903-04,435 2901
    Fax: 0452 238 0907

    Email: dmrmdu@dinamalar.in




    Coimbatore
    TVR House, Sunderapuram,
    Coimbatore - 641 024,
    Mobile No: - 9894009200,
    Fax: 0422 267 6024

    Email: dmrcbe@dinamalar.in

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..
    தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்....நன்றி...இவங்களுக்கு எத்தனை சொன்னாலும் விளங்காது...மத துவேஷத்தில் ஊறித் திளைத்தவர்கல்லவே...இந்த எதிர்ப்பு அவர்களை எட்டவேண்டும்..வாருங்கள் அனைவரும் கைகோர்ப்போம்...

    ReplyDelete
  11. 11 வருட இடைவெளியில் மரணித்த தன் மகன்களின் இறப்புக்கு சுமார் 37 & 48 வருடங்களுக்கு முன்னரே மரணித்துவிட்ட ஒரு தாய்க்கு, அதெப்படி மகன்கள் இறந்த விஷயம் தெரிந்து... மரணித்தவர் தீக்குளித்து.... அடப்பாவி தினமலரே..! பொய் சொல்ல அளவில்லையா..? இதுவா நீ செய்தி தரும் லட்சணம்..?

    இவ்விஷயத்தில்....

    தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்..!


    தொடர்ந்து இஸ்லாம் பற்றியும், இறைத்தூதர் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும், அவதூறு பொய்களை செய்திகளாக இட்டுக்கட்டி அள்ளி விட்டுக்கொண்டே இருக்கும் நீ திருந்துவதாக தெரியவில்லையே..? எத்தனை முறைதான் உன்னை மன்னிப்பது..?

    ReplyDelete
  12. @Aashiq Ahamed
    அலைக்கும் ஸலாம்...

    ///யாரோ சில மார்க்கம் தெரியாத அறியாமை மனிதர்கள் செய்யும் முட்டாள்தனங்களை ஒற்றுமை நிகழ்வாக கூறி தன் சிண்டு முடித்துவிடும் வேலையை மறுமடியும் செய்திருக்கின்றது தினமலர்.///


    ---புகைப்பட ஆதாரம் இன்றி வந்திருக்கும் இதுவரை நாம் கேள்விப்படாத அப்படியான ஒரு செய்தியே கூட பொய்யாக இருக்கலாம்...!

    தினமலர் கூறுவதை எல்லாம் இனி யாரும் நம்பப்போவதில்லை..!

    ReplyDelete
  13. Pannaada paarpana parathesikku phone seithen antha pannaadaigal maruppu pottu vittathaam... By/ musthafa.

    ReplyDelete
  14. இவர்கள் திருதுபவர்கள் அல்ல திருதபட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  15. தினமலர் இன்று தனது சென்னை பதிப்பில் மூன்றாம் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. இஸ்லாத்தில் தற்கொலை இழிவானது என முஸ்லிம் அமைப்புகள் விளக்கம் என்று தலைப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் தான் செய்த தவறுக்கு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கவில்லை.

    மேலும் அந்த ராயபுரம் மஜித்த பர்குண்டா பள்ளிவாசலின் தலைவர் தீமிதி விழா தமது பள்ளிவாசலின் சார்பில் நடத்தப்படவில்லை என்றும் அதற்கும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இப்படி தனிப்பட்டவர்கள் ஏற்பாடு செய்த விழாவை பள்ளிவாசலின் விழா என்று பொய் செய்தி வெளியிட்டு அதற்கும் வருத்தம் தெரிவிக்கவில்லை இந்த தினமலம் பத்திரிக்கை.

    ReplyDelete
  16. கேவலமான தொழில் செய்து குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை இவர்களுக்கு உருவாகிவிட்டது போலும்...

    என் ஆழ்ந்த கண்டனங்கள்...

    செத்தொழியட்டும் பொய்யின் உரைகல்

    ReplyDelete
  17. ஸலாம்

    இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தில் இருப்பது போல் காட்டுகின்றனர் ...

    //அல்லாஹ்வின் ஒளியைத்(மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை (மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)//

    என்னுடைய கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன் ..

    ReplyDelete
  18. ஸலாம்

    இஸ்லாத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லீம்கள் செய்யும் அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தில் இருப்பது போல் காட்டுகின்றனர் ...

    //அல்லாஹ்வின் ஒளியைத்(மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை (மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)//

    என்னுடைய கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன் ..

    ReplyDelete
  19. எத்தனை முறை செருப்படி வாங்கினாலும் புத்தி வராத மானங்கெட்ட ஜென்மம் இந்த தினமலர்! இறைவனின் தண்டனைகளை இவர்கள் அனுபவிக்கும் நாள் நெருங்கிவிட்டதோ..?!

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும்!

    எவ்வளவுதான் திட்டினாலும் அனைத்தையும் உதறி விட்டு மறுபடியும் பழைய இடத்திலேயே நிற்கும் இந்த கூட்டத்தை இறைவனின் சாபம் நெருங்கும் நாள் தொலைவில் இல்லை.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும்
    எவ்வளவு நாசூக்காக விசக்கருத்துகளை அப்பாவி வாசகர்களிடம் புகுத்துகின்றனர்!!
    இவ்வாறு வரலாற்றை திரிக்கும் கும்பல்களின் அடாவடிகள் என்றுதான் அடங்கும்?????

    என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  22. விஷ ஊசியை மெல்ல ஏற்றி நாட்டு மக்களிடையே விஷக் கருத்தை பரப்பி மக்களை கூறு கூறாக பிரிக்கும் தினமலம் தன்னுடைய புத்தியை மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளது. தினமலம் போன்ற ஏடுகள் இனியும் நாட்டில் தனது செய்திகளை திணித்துக் கொண்டு இருந்தால் அனைத்து இன மக்களின் கலாச்சாரமும் பாதித்து விடும். நாட்டை துண்டாட முயலும்காவி சிந்தனை உள்ள தினமலத்திற்கு இஸ்லாமிய வரலாற்றை புரியவைப்பதுடன், பொய்களை பரப்பும் தினமலம் ஏட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றேன்,

    ReplyDelete
  23. தினமலத்தை காசுக்கு வாங்குவதில்லை என்றும், தினமலரில் விளம்பரப்படுத்தப் படும் நிறுவனங்களையும் அவற்றின் விற்பனைப் பொருட்களையும் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். இதை ஜும்ஆ மேடைகளில் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    நாய் வாலைக்கூட நிமிர்த்தி விடலாம், குடுமியை நிமிர்த்தவே முடியாது என்பதை தினமலம் திரும்ப திரும்ப நிரூபிக்கிறது.

    ReplyDelete
  24. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்December 8, 2011 at 6:00 AM

    தினமலரே தவறு "நீ ப(ன்னி)ண்ணிவிட்(டை)டாயே" .இதற்கு முன்னும் தவறு "நீ ப(ன்னி)ண்ணினா(நாயே)யே".இப்பொழுதும் தவறு "நீ ப(ன்)ண்றியே".தெரியாமல் செய்திருக்க வாய்ப்பில்லை தெரிஞ்(ச்..சீ)தான் பண்ணுவ.உன்னுடைய நாளிதழ் பெயர் தினமலமா,தினமயிரா?

    ReplyDelete
  25. அருமையான பதிவு சகோ தொடர்ந்து தினமலரின் இந்த அடாவடி நடந்தேறிவருகிறது அதை தடுப்பதற்கு நடவெடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுமென்றால் நீதிமன்றம் வரை செல்லத் தயங்கக்கூடாது இலங்கை என்றால் இவர்களின் நிலை படு மோசமாக இருக்கும் நன்றி

    ReplyDelete
  26. தின மலத்திற்கு எனது கண்டனங்கள்

    இஸ்லாத்தில் எங்கே ஐயா தீமிதி திருவிழா இருக்கிறது ? ஒரு செய்தியை வெளியிட முன் அதனை பற்றி ஆராயமலா செய்திகள் வெளியிடுகின்றீர்கள் , ?? அப்படி என்றால் உங்கள் ஏனைய செய்திகளில் எத்தகைய உண்மைத்தன்மை உண்டு ? இது நிச்சயமாக திட்டமிட்டு இஸ்லாத்தினை கொச்சை படுத்துவதற்கு வெளியிட்ட செய்தி ., இன்னும் ரெண்டு நாளில் தவறுக்கு வருந்துகின்றோம் என்றொரு செய்தி வரும்
    இதனை இப்பொழுதே தடுப்போம்
    தனமலதினை புறக்கணிப்போம்
    தினமலதிற்கு விளம்பரம் சாயும் நிறுவன பொருட்களையும் புறக்கணிப்[போம்

    ReplyDelete
  27. assalamualikkum
    இந்த தினமலம் அடிக்கடி முஸ்லீம்கைள சீன்டிப்பார்ப்பதும் எதிர்ப்பு வரும்போது மண்ணிப்பு கேட்பதும் அந்தப்பகுதியை நீக்கிவிட்டோம என்பதும் வாடிக்கையாகிவிட்டது இதற்க்ு ஒரே தீர்வு சமுதாயஇயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக இவர்களின் அலுவலகத்தில்போய் உள்ளிருப்புப் போராட்டம் செய்து ஒருவாரம் பத்திரிக்கை வௌியிடுவதை ஸ்தம்பிக்கச் செய்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள் மற்றமீடியாக்களுக்கும் அது பாடமாக அமையும்

    ReplyDelete
  28. தினமலத்தின் ஈன புத்தியை அவ்வபோது இப்படித்தான் காட்டிக்கொள்ளும் ...
    காரணம் அறிந்ததே , பார்பானீய பாசிச பிறவி புத்தி......
    அதுனாலே நாம் நமது எதிர்ப்பை ஆக்கபூர்வமான வழிகளில் தான் காட்டவேண்டும் .
    அதாவது தமிழ்மணத்தை (திரட்டி) எப்படி சவுதியில் நிப்பாட்டினோமோ, அதை போன்றே
    ஒட்டு மொத்த அரபு நாடுகளிலும் தினமலத்தின் வெப் சைட்டை காணமுடியாதபடிக்கு
    செய்யவேண்டும் .....இப்பொழுதே அந்த காரியத்தை செய்ய முயற்சி செய்யணும் ......
    நம் எதிர்ப்பு கண்டனங்களை பதிவில் தெரிவிப்பதால் யாதொறு பயனுமில்லை ....

    ReplyDelete
  29. SALAAM BRO. HYDHER ALI
    I RE-PUBLISHED THE SAME POST IN www.adiraibbc.blogspot.com
    www.adiraixpress.blogspot.com
    TO REACH ALL THE MUSLIM PEOPLES

    ReplyDelete
  30. தினமலத்தின் ஈன புத்தியை அவ்வபோது இப்படித்தான் காட்டிக்கொள்ளும் ...
    காரணம் அறிந்ததே , பார்பானீய பாசிச பிறவி புத்தி......
    அதுனாலே நாம் நமது எதிர்ப்பை ஆக்கபூர்வமான வழிகளில் தான் காட்டவேண்டும் .
    அதாவது தமிழ்மணத்தை (திரட்டி) எப்படி சவுதியில் நிப்பாட்டினோமோ, அதை போன்றே
    ஒட்டு மொத்த அரபு நாடுகளிலும் தினமலத்தின் வெப் சைட்டை காணமுடியாதபடிக்கு
    செய்யவேண்டும் .....இப்பொழுதே அந்த காரியத்தை செய்ய முயற்சி செய்யணும் ......
    நம் எதிர்ப்பு கண்டனங்களை பதிவில் தெரிவிப்பதால் யாதொறு பயனுமில்லை ....

    ReplyDelete
  31. சகோதரம் இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?

    ReplyDelete
  32. //abdul hakkim said... 31

    assalamualikkum

    இந்த தினமலம் அடிக்கடி முஸ்லீம்கைள சீன்டிப்பார்ப்பதும் எதிர்ப்பு வரும்போது மண்ணிப்பு கேட்பதும் அந்தப்பகுதியை நீக்கிவிட்டோம என்பதும் வாடிக்கையாகிவிட்டது

    இதற்க்ு ஒரே தீர்வு சமுதாயஇயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளாக இவர்களின் அலுவலகத்தில்போய் உள்ளிருப்புப் போராட்டம் செய்து ஒருவாரம் பத்திரிக்கை வௌியிடுவதை ஸ்தம்பிக்கச் செய்தால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள்

    மற்றமீடியாக்களுக்கும் அது பாடமாக அமையும்


    // Nasar said...

    நாம் நமது எதிர்ப்பை ஆக்கபூர்வமான வழிகளில் தான் காட்டவேண்டும்

    ஒட்டு மொத்த அரபு நாடுகளிலும் தினமலத்தின் வெப் சைட்டை காணமுடியாதபடிக்கு
    செய்யவேண்டும்


    PERFECT. GOOD IDEA. MUST DO IT.


    .

    ReplyDelete
  33. அஸ்ஸலாமு அழைக்கும்,
    தின மலர் பத்திரிக்கை இஸ்லாத்தை பற்றிய தெளிவான அறிவு இல்லாமல் மூடத்தனமாக எழுதி உள்ளது. தினமலர் பத்திரிகைக்கு நாம் ஒரு குரான் தர்ஜுமா அனுப்பி வைத்து இஸ்லாத்தினை விமர்சிப்பதாக இருந்தால் குரானை படித்து விட்டு அதில் தவறான சித்தாதங்கள், அறிவியல் முரண்பாடுகள் இருந்தால் விமர்சியுங்கள் பார்ப்போம் என்று நாம் அவர்களுக்கு அரை கூவல் விடலாமே!
    அப்படி குரானை விமர்சிக்கும் நோக்கோடு படித்தாலாவது இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளட்டும், அப்படியே அவர்கள் விமர்சித்தாலும் கூட நாம் அவர்களுக்கு இன்ஷா அல்லா சிறப்பான பதிலை அளிக்கலாம்.
    By,
    Yasar Arabath,
    Udangudi.

    ReplyDelete
  34. ஏன் இப்படி தவறான தகவல்களை ஊடகங்கள் பரப்புகிறார்கள். இல்லாத அதுவும் மார்க்கத்திற்க்கே புறம்பான ஒருசெயலை , முஸ்லீம் பெண்களின் முன்மாதிரியாக கருதப்படும் அன்னை பாத்திமா ரலியல்லாஹ் அன்ஹா அவர்கள் செய்ததாக அபாண்டமான செய்திகள் வெளியிடுவதால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. பிறமனங்களை புண்படுத்துவதே வேலையாக கொண்டலைவது எவ்விதத்தில் நியாயம்.

    இப்படியெல்லாம் செய்திகள் வெளியிட்டு வெருப்பேற்றுவதே இம்மலத்துக்கு வேலையாகிவிட்டது. தக்கபடி நடவடிகள் மேற்கொள்ளாவிடில் இன்னும்பல புரளிகளையும் வதந்திகளையும்.பொய்களையும் பரப்பக்கூடும்..

    ReplyDelete
  35. @விக்கியுலகம்

    வருகைக்கும் ஆதாரவுக்கும் நன்றி மாப்ளே

    ReplyDelete
  36. @அரபுத்தமிழன்

    //தினமலம்,தினபிணம்,தினவிஷம்,தினசதி,தினத்தீ,தினப்புரட்டு,..
    இப்படி தினமும் தீமையையே விதைக்கிறார்களே, இதன்
    விளைச்சலின் பலன் அவர்களுக்கு எதிராகத் திரும்பும்
    நாள் எந்நாளோ இறைவா!//

    அம்மாடி இம்புட்டு பெரா அவ்வளவும் உண்மைகள்

    ReplyDelete
  37. @VANJOOR

    சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  38. @Aashiq Ahamed

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    நன்றி

    ReplyDelete
  39. @ஹுஸைனம்மா

    //அப்போது பர்தா பிரபலமாகாத காலம்; முஸ்லிம் பெண்கள் சேலையால் முக்காடணிந்து செல்வதே வழக்கம். எந்த ஊரில் ஒழுக்கமற்ற பெண்கள் உடலை முழுதும் மறைக்கும்விதமாக முக்காடணிவதைக் கண்டார்கள் இக்கயவர்கள்?? (தாங்களே எழுதிய) இக்கடிதத்திற்கு முதல் பரிசு கொடுத்துத் தங்களை மகிழ்வித்துக் கொண்டார்கள்//

    இந்த மாதிரி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன சகோ

    ReplyDelete
  40. @பி.ஏ.ஷேக் தாவூத்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  41. @Aashiq Ahamed

    இதை பதிவில் சொல்ல மறந்தேன் நினைவு படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  42. @சாதிக்

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    நான் தொடர்பு கொண்ட போதும் அதே பதில் தான்

    ReplyDelete
  43. @Mohamed Faaique

    இது அரபிய பழங்காலத்து சொல் சகோ

    ReplyDelete
  44. @UNMAIKAL

    விரிவான முகவரி தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  45. @RAZIN ABDUL RAHMAN

    வ அலைக்கும் வஸ்ஸலாம்

    வாருங்கள் கைகோர்ப்போம் சரியான நோக்கத்திற்காக

    ReplyDelete
  46. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    உங்கள் பதிவை படித்தேன் நியாயமான கேள்விகள்

    ReplyDelete
  47. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    //தினமலர் கூறுவதை எல்லாம் இனி யாரும் நம்பப்போவதில்லை..!//

    ஏற்கனவே யாரும்நம்பியதில்லை சகோ

    ReplyDelete
  48. @Anonymous

    கோபத்தை அழகான முறையில் வெளிப்படுத்துவோம் சகோ

    ReplyDelete
  49. @ஆமினா

    //செத்தொழியட்டும் பொய்யின் உரைகல்//

    அசத்தியத்திற்கு அதுதான் இறுதி முடிவு சகோ

    ReplyDelete
  50. @இலக்கை நோக்கி

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //அல்லாஹ்வின் ஒளியைத்(மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை (மார்க்கத்தை அதாவது இஸ்லாத்தை ) முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)//

    அருமையான பொருத்தமான குர்ஆன் வசனம் சகோ

    ReplyDelete
  51. @அஸ்மா

    //எத்தனை முறை செருப்படி வாங்கினாலும் புத்தி வராத மானங்கெட்ட ஜென்மம் இந்த தினமலர்! இறைவனின் தண்டனைகளை இவர்கள் அனுபவிக்கும் நாள் நெருங்கிவிட்டதோ..?!//

    சந்தேகமே வேண்டாம் நேருங்கி விட்டது

    ReplyDelete
  52. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    தொலைவில் இல்லை மிக அருகில்

    ReplyDelete
  53. @Rabbani

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //எவ்வளவு நாசூக்காக விசக்கருத்துகளை அப்பாவி வாசகர்களிடம் புகுத்துகின்றனர்!!
    இவ்வாறு வரலாற்றை திரிக்கும் கும்பல்களின் அடாவடிகள் என்றுதான் அடங்கும்????//

    மிக நாசூக்காக பரப்புகிறார்கள்

    ReplyDelete
  54. @மு.ஜபருல்லாஹ்

    //விஷ ஊசியை மெல்ல ஏற்றி நாட்டு மக்களிடையே விஷக் கருத்தை பரப்பி மக்களை கூறு கூறாக பிரிக்கும் தினமலம் தன்னுடைய புத்தியை மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளது.//

    இன்னும் இதை நம்பக்கூடியவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கு சகோ

    ReplyDelete
  55. @அதிரைக்காரன்

    கண்டிப்பாக சகோ

    தங்களின் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  56. @முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

    // பண்ணுவ.உன்னுடைய நாளிதழ் பெயர் தினமலமா,தினமயிரா?//

    இந்த பெயர்களும் நன்றாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  57. @நேசமுடன் ஹாசிம்

    //தினமலரின் இந்த அடாவடி நடந்தேறிவருகிறது அதை தடுப்பதற்கு நடவெடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுமென்றால் நீதிமன்றம் வரை செல்லத் தயங்கக்கூடாது//

    இஸ்லாமிய இயக்கங்கள் அந்த நடவடிக்கைகளை எடுக்கும் இன்ஷா அல்லாஹ்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  58. @FARHAN

    வருகைக்கும் ஆதாரவுக்கும் கண்டனத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  59. @abdul hakkim

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    ஜனநாயக வழியிலான அனைத்து போராட்டங்களையும் செய்ய வேண்டும் சகோ இன்ஷா அல்லாஹ்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  60. @Nasar

    தமிழ்மணத்தையும் திணமலத்தையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டாம் சகோ நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன

    ReplyDelete
  61. @♔ம.தி.சுதா♔

    //சகோதரம் இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதா?//

    ஏஏகனவே எடுத்து இருக்கிறார்கள் இருந்தும் அடங்குவதில்லை

    ReplyDelete
  62. @balakumar

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  63. @UNMAIKAL

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நல்ல யோசனை தான் சகோ

    ReplyDelete
  64. @Unknown

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //அப்படி குரானை விமர்சிக்கும் நோக்கோடு படித்தாலாவது இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளட்டும், அப்படியே அவர்கள் விமர்சித்தாலும் கூட நாம் அவர்களுக்கு இன்ஷா அல்லா சிறப்பான பதிலை அளிக்கலாம்.//

    இவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் சகோ

    ReplyDelete
  65. @அன்புடன் மலிக்கா

    //இப்படியெல்லாம் செய்திகள் வெளியிட்டு வெருப்பேற்றுவதே இம்மலத்துக்கு வேலையாகிவிட்டது. தக்கபடி நடவடிகள் மேற்கொள்ளாவிடில் இன்னும்பல புரளிகளையும் வதந்திகளையும்.பொய்களையும் பரப்பக்கூடும்.//

    பலமுறை நடவடிக்கை எடுத்தும் கேஸ் போட்டும் திருந்துகிற மாதிரி தெரியவில்லை சகோ

    நாம் தான் ஊடகத்தை ஊடகாத்தால் சந்திக்க வேண்டும்

    ReplyDelete
  66. ஐயா,

    இதில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விடயம்,

    //மொகரம் பண்டிகையின் போது, முஸ்லிம் பள்ளி வாசல் முன் நடந்த தீமிதி நிகழ்ச்சியில்//
    //ராயபுரத்தில் உள்ளது மஜித்த பர்குண்டா பள்ளி வாசல். இங்கு மொகரம் பண்டிகையை ஒட்டி அசேன் உசேன் தீமிதி திருவிழா நடைபெறும்.//
    //இந்த பள்ளி வாசலில் 183 வது ஆண்டாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. //
    //இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 40க்கும் மேற்பட்டோர் முறைப்படி விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்த தீ மிதித்தனர். //
    //மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துவதற்கான குழியை வெட்டுகின்றனர். ஐந்து நாள் வரை குழியைக் காய வைக்கின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவுக்குப்பின் அதிகாலை 3 மணிக்கு தீ மிதி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் 10ம் நாள் மொகரம் பண்டிகை. அன்று தீ மிதிக்கும் குழியை மூடி நிகழ்ச்சி நிறைவு செய்கின்றனர்.//
    //மண்ணடி, ஐஸ்ஹவுஸ், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி வாசல்கள் முன்பும் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.//

    இது உண்மையா ? முஸ்லிம்கள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துகிறார்களா ?

    ReplyDelete
  67. @rajan

    //இது உண்மையா ? முஸ்லிம்கள் தீ மிதி நிகழ்ச்சி நடத்துகிறார்களா ?//

    உண்மைதான் ஆனால் இது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது

    வேறு எந்த நாடுகளிலும் இஸ்லாமியர்களிடம் இல்லாத பழக்கம் இது இஸ்லாமிய அடிப்படையிலும் ஒருவன் தன்னை தானே சிரமப்படுத்தி கொண்டு சடங்குகள் செய்வதற்கு அனுமதியில்லை

    ReplyDelete
  68. அன்பு ஹைதர்,
    அப்படியே ஒரு 1 மாதம் பின்னோக்கி பாருங்கள். நீங்கள் எழுதிய பதிவுதான் ’கம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்...’ என்ற பதிவும். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  69. @kalai

    தோழர் கலை அவர்களுக்கு

    மாவோ அவர்களின் மனைவி மேற்குலகத்தால் மேடம் மாவோ என்று அழைக்கப்பட்ட ”ஜியாங் சிங்” மே 14,1991-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதை உங்களால் மறுக்க முடியுமா? கலை

    நான் வரலாற்றை திரிக்கவில்லை ஆனால் தினமலர் செய்வது திரிபுவாதம் புரிந்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete