Saturday, July 7, 2012

சாகடிப்போம் சாதி வெறியை

தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிவெறியின் உண்மை முகத்தை அமபலப்படுத்தி நான் ஏற்கனவே பதிவிட்டிருந்த போது நிறைய நண்பர்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்தது போல் அப்படியா? உண்மையா? இன்னுமா சாதிவெறி இருக்கிறதா? என்று கேட்டார்கள். இவ்வளவுக்கும் அந்த சாதிவெறியால் பாதிக்கப்பட்டவன் என் நெருங்கிய நண்பன். அதை வாசிக்க இங்கே அழுத்தவும்.


இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது பி.பி.சி. செய்தியில் வெளியான ஒரு சம்பவத்தை பகிர்கிறேன் பாருங்கள்.


விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி சத்துணவு மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சத்துணவு தயாரிப்பாளர்களாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.

இதனால், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

“இப்பிரச்சனை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றபோது, கிராம மக்களின் விருப்பத்திற்கிணங்க அவ்விரு பெண்களையும் வேறொரு பள்ளிக்கு மாற்றல் செய்து, இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயன்றது அரசு” என்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலர் சாமுவேல்.

மேலும், “மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தங்கள் அமைப்பு வாதாடியதைத் தொடர்ந்து, அவர்களின் மாற்றல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டு அந்த இருவரின் ஒரு பெண் மீண்டும் அங்கே சென்று சமைக்கத் துவங்கியிருப்பதாகவும், ஆனாலும் கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை அங்கே சாப்பிட இன்னமும் அனுமதிக்கவில்லை” என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார் சாமுவேல்.



என்றுதான் ஒழியுமோ இந்த சாதி. ஆதிகால சித்தர் கோபமாக இப்படி பாடினார்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?
என்று கோபம் மேலிட்டுக் கேட்ட கேள்விக்கு ஜாதி வெறியர்கள் என்ன பதில் பேச முடியம்?
சாதாரண பலைவனத்தில் வாழ்ந்த அரேபிய பழங்குடி காட்டரபிகள் அன்றைய பெரும் வல்லரசாக இருந்த பாரசீக,ரோம் சம்ராஜியத்தை வீழ்த்திய காரணம் என்ன தெரியுமா?? இதுபோன்று நான் மேலானவன் நீ கீழானவன் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களை இஸ்லாம் இணைத்திருந்தது.
அரேபிய வரலாற்று ஆசிரியர் ‘தபரி’ எழுதுகிறார்: பாரசீக மன்னன் ரூஸ்தமை சந்திக்க சென்ற அரேபியத்தூதராக சென்ற ‘மூகிரா’ பாரசீகத் துருப்புகளின் அருகே சென்றதும் ருஸ்தமைச் சந்திப்பதற்கு முன் அனுமதி பெறுவதற்காக அவர் நிறுத்தப்ப்ட்டார்.மூகிரா அங்கே (அதாவது ருஸ்தமின் சபைக்கு) போய்ச் சேர்ந்தபோது பொன்இழைகளால் செய்யப்பட்ட அழகான உடை அணிந்த பாரசீகர்களைக் கண்டார்.
அவர்கள் தலையில் கீரிடங்கள் அணிந்திருந்தார்கள்.சிறிது தூரம் வரை கம்பளங்கள் விரித்திருந்தார்கள்.வருபவர் அந்த தூரத்தை நடந்து கடக்க வேண்டியிருந்தது. ‘மூகிரா பின் ஷோபா’ அங்கே சென்றபோது, ருஸ்தாமின் சிம்மாசனத்தின் மீது இருந்த இருக்கை மெத்தை மேல் அமர்ந்தார். சிலபேர் ஒடிவந்து அவரைக் கிழே இழுத்து விட்டார்கள்.
மூகிரா சொன்னார்: நங்களெல்லோரும் உங்களுடைய விவேகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் உங்களை விட அதிக முட்டாள்தனமான மக்கள் இல்லை என்பதை நான் இப்போது காண்கிறேன். அரேபியர்களான நாங்கள் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். நாங்கள் போரில் தவிர யாரையும் அடிமையாக்குவதில்லை.எனவே நீங்களும் அதே போல அனுதாபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று நீங்கள் செய்த செயல்களிலிருந்து, உங்களில் சிலர்,உங்களிலேயே மற்றவர்களுக்கு எஜமானர்கள் ஆகியிருப்பதைக் கண்டேன். இது சரியான வழி அல்ல. இப்படிப்பட்ட முறைகளில் வாழும் எந்த நாடும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றார்.

34 comments:

  1. பொறுத்தமான உவமையுடன் கூடிய கட்டுரை. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ///பொறுத்தமான உவமையுடன் கூடிய கட்டுரை. வாழ்த்துகள்!///

      நன்றி திங்கள் சத்யா அவர்களே உங்கள் வருகைக்கும் முதல் கருத்துரைக்கும்

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அருமையான கட்டுரை அண்ணா...

    மேலோட்டமாய் பார்ப்பவர்களுக்கு சாதி இல்லாதது போல் தான் தெரியும்...

    ஆனால்
    * இன்றும் செருப்பு போடாத மக்கள்

    *இரட்டை டம்ளர் (அதிலும் இப்ப யூஸ் அன்ட் த்ரோ கப் வச்சு தப்பிக்கிறாங்க)

    *உயர் சாதியினருக்கு மட்டும் தான் தேர் இழுக்கும் உரிமையும், தேரை அலங்கரிக்கும் உரிமையும்,

    *வேலைக்கார பெண்ணை கொல்லைவாசல் வழியாகவே வர வைத்து போக வைக்கும் வழக்கம் (வீட்டில் அனுமதிப்பதில்லை)

    *தன் குழந்தையை கீழ்சாதியினரோட பழகுவதை விரும்பாத பெற்றோர்

    *மேல் சாதியினரால் இன்றும் அடக்கப்படும் உங்கள் நண்பர் போன்ற எண்ணற்ற அப்பாவிகள்

    என இன்னும் நீளமாகவே போய்க்கொண்டிருக்கிறது சாதி வெறிக்கான உதாரணங்கள்.... பாவம் என்றுதான் மாறுமோ இவர்களின் நிலை!!! :'(

    அருமையான ஆக்கம் அண்ணா

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்

      இவ்வளவு நடந்தும் அதைப்பற்றி தெரிந்தும் தெரியாது போல் இருந்து விடுகிறவர்கள் முதல் குற்றவாளி என்பேன் விரைவில் மாற்றம் கண்போம்

      Delete
  3. சாதி பெயரிலான இதுபோன்ற செயல்கள் கண்டிக்க/தண்டிக்கதக்கது.நல்ல பதிவு!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராசின் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ) அருமையான பதிவு. இதுபோன்று தாழ்த்தப்பட்டவர்கள் எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். நன்றி சகோதரே.

    //தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்// உலகத்தில் அடிமைமுறை ஒழிந்தாலும், இந்தியவில் தீண்டாமை முறை ஒழிக்க முடியவில்லை. செத்து குழிக்குள் படுக்க வைத்தால் எல்லாம் சமம்.

    //பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
    பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?// தாழ்த்தப்பட்டவர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும். வந்தவார் எல்லாம் வந்த வழியில் (கைபர் கணுவாய்) சென்றுவிடுவார்கள். பிறகு இந்தியவில் தீண்டாமை ஒழிந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம்
      கைபர் கனவாய் வழியாக வந்தவர்களின் கைவேலைதானே இது மனிதர்களை ஏனிப்படி மாதிரி பிரித்து அடுக்கி விட்டார்கள் விரைவில் வரலாறு திரும்பும்

      வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கும் நன்றி

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    நீண்ட நாள் கழித்தபின் தங்களின் புதிய கட்டுரையை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.சூடாகவே ஆரம்பம் செய்திருக்கின்றீர்கள் போல.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

      ///நீண்ட நாள் கழித்தபின் தங்களின் புதிய கட்டுரையை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.சூடாகவே ஆரம்பம் செய்திருக்கின்றீர்கள் போல.///

      வீடு கட்டிமுடித்து குடியேறி முடிக்கும் வரை அந்த வேலைகளிலும் முழுமையாக கவனம் செலுத்தியதால் இங்கு வரமுடியவில்லை இனி தொடரும்

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. மனு சொன்னது----படித்த பறையனும் குளித்த குதிரையும் தேசத்திர்கு ஆபத்து

    ReplyDelete
    Replies
    1. //மனு சொன்னது----படித்த பறையனும் குளித்த குதிரையும் தேசத்திர்கு ஆபத்து//

      சகோதரர் pk edison அதனால் தான் கிழ்ஜாதிக்காரன் வேதத்தை கேட்டாள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் பேலே??

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. //ஆனால் இன்று நீங்கள் செய்த செயல்களிலிருந்து, உங்களில் சிலர்,உங்களிலேயே மற்றவர்களுக்கு எஜமானர்கள் ஆகியிருப்பதைக் கண்டேன். இது சரியான வழி அல்ல. இப்படிப்பட்ட முறைகளில் வாழும் எந்த நாடும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என்றார்//

    இந்தியா ஒரே நாடாக 5000 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கிறது. இருக்கும்.
    இன்று ஜாதி என்பது, ஒரு வியாபார உத்தி. தங்களை த்தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி, காசு பார்க்கும் ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது.

    ஊமைக்கு உளறு வாயன் சண்டப் ப்ரசண்டன் என்றபடி, கம்மாளத்து நாயக்கர்கள் தாழ்த்தப்பட மக்களை ஏளனம் செய்கிறார்கள்.

    ஓட்டு வங்கியைக் காப்பதற்காக, அரசியல் வாதிகள் ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள்.

    இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலும் இப்படி ஜாதிப் பிரிவு உண்டு.

    எங்கள் ஊரில் லெப்பைகள் மற்ற இஸ்லாமியர்களை விடத் தாழ்மையாகப் பார்க்கப்படுவது கண்கூடு.

    ReplyDelete
    Replies
    1. ரங்குடு அவர்களே

      //இந்தியா ஒரே நாடாக 5000 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கிறது. இருக்கும்.
      இன்று ஜாதி என்பது, ஒரு வியாபார உத்தி. தங்களை த்தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி, காசு பார்க்கும் ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது.///

      அண்ணே நீங்கே இப்படி சொல்கிறீர்கள் ஆனால் ஜகத் குரு சங்கராச்சாரி அவர்களின் வக்குமூலத்தை பாருங்கள்

      ஹிந்து என்பது நாம் பூர்வீக பெயரல்ல, வைதீக மதம், சனாதன தருமம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை என்கிறார்.

      மேலும் அவர் சொல்லும் போது
      சைவம், வைணவம், சாக்தம்,கெளமாரம்,காணாபத்யம் என்ற ஆறு மாதங்களாக பிரிந்து மோதிக் கொண்டிருந்த நம்மை
      இந்து மதம் என்று பெயர் சூட்டி ஒன்று சேர்த்தவன் பிரிட்டிஷ்காரன் தான் என்கிறார்

      ஆக,ஹிந்து(சிந்து என்பதன் பாரசீக உச்சரிப்பு)என்ற சொல்லைத் தந்தவர்கள் பாரசீகர்கள்-முஸ்லிம்கள்; அந்த’ஹிந்து’வை ஒரு மதமாக ஒன்று சேர்த்தவர்கள் பிரிட்டிஷ்க்காரர்கள்.

      எது உண்மை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்

      Delete
    2. ரங்குடு அவர்களே

      ///இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலும் இப்படி ஜாதிப் பிரிவு உண்டு.

      எங்கள் ஊரில் லெப்பைகள் மற்ற இஸ்லாமியர்களை விடத் தாழ்மையாகப் பார்க்கப்படுவது கண்கூடு.///

      அப்படி அவர்கள் பார்த்தால் அவர்களும் அழிந்து போவார்கள்

      Delete
  8. சாதிய வெறி, இன வெறி, மத வெறி அனைத்தும் மானுடத்துக்கு விரோதமானவைகளே !!! இஸ்லாமோ, கிருத்தவமோ சாதியங்களை ஊக்குவிக்கவில்லை ..

    ஆனால் தெற்காசியாவில் இருக்கும் இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் அதனை விட்டுவிட மனமில்லாதவர்களாக இருப்பதே உண்மை ... !!!

    முஸ்லிம் கலியாண வீடு ஒன்றில் கண்டக் காட்சி .. பரட்டைத் தலை, அழுக்கான சேலை, கறுத்த மேனியாக சில இஸ்லாமியர்கள் பெண்களும், குழந்தைகள் கலியாண வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள் ... ஏன் தெரியுமா ? கலியாண வீடு முடிந்ததும் மிஞ்சிய உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக !!! இதுவும் சாதிய வெறித் தானே !!! சமபந்தி பரிமாறத் தெரியாத மனிதர்கள், கௌரவம் பார்க்கும் மனிதர்கள் இருக்கும் வரை ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன ..

    மதங்கள் மனித மனங்களை மாற்றிவிட பல இடங்களில் தவறிவிடுகின்றன !!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் இக்பால் செல்வன் அவர்களே நலமா??

      //சாதிய வெறி, இன வெறி, மத வெறி அனைத்தும் மானுடத்துக்கு விரோதமானவைகளே !!! இஸ்லாமோ, கிருத்தவமோ சாதியங்களை ஊக்குவிக்கவில்லை ..//

      நல்ல புரிந்துணர்வு வட்டார பழக்க வழக்கங்களால் சாதி இருப்பதாக நினைப்பது வேறு ஆனால் மத அடிப்படை வேதநூலில் சொல்லப்படுவது அடிபடையிலேயே அவன் தாழ்ந்தவன் இழிந்தவன் என நினைப்பது மனித உரிமை மீறல்

      இஸ்லாத்தில் சாதி இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ள இந்த வீடியோ க்ளிப்பை பாருங்கள் http://www.youtube.com/watch?v=KOtZbKcKYVs

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
    2. ன்பு சகோ இக்பால் செல்வன்,
      = முஸ்லிம் கலியாண வீடு ஒன்றில் கண்டக் காட்சி .. பரட்டைத் தலை, அழுக்கான சேலை, கறுத்த மேனியாக சில இஸ்லாமியர்கள் பெண்களும், குழந்தைகள் கலியாண வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார்கள் ... ஏன் தெரியுமா ? கலியாண வீடு முடிந்ததும் மிஞ்சிய உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக !!! இதுவும் சாதிய வெறித் தானே !!! =

      இஸ்லாம் படைத்தவன் முன் படைப்பினங்கள் எல்லாம் சமம் என்கிறது. இதில் எங்கே முளைத்தது சாதிய வெறி. மனிதர் மத்தியில் பேதம் பாராட்டுபவர் முஸ்லிமே அல்ல எனும்போது நீங்கள் குறிப்பிடும் சாதிய வேற்றுமைகளை பேணுபவர் முஸ்லிகளே அல்ல. இதற்கு எப்படி மார்க்கம் பொறுப்பாகும். அவர்களின் அறியாமை அல்லது ஆணவமே முழுக்க முழுக்க பொறுப்பு.

      பாருங்கள் நீங்கள் கூட இதை உண்மைப்படுத்தும் நோக்கில்

      = சமபந்தி பரிமாறத் தெரியாத மனிதர்கள், கௌரவம் பார்க்கும் மனிதர்கள் இருக்கும் வரை ஏற்றத் தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன .. =

      அதற்கெல்லாம் ஒரே தீர்வு. நாம் அனைவரும் ஓரே தாய் தந்தையரிலிருந்தே உருவாக தொடங்கினோம் என ஒரு தாய் மக்களென உணராதவரை கேடுக்கெட்ட மனிதர்கள் மத்தியில் சாதிய தீ கொழுந்திட்டு எறியத்தான் செய்யும்.

      உங்கள் சகோதரன்
      குலாம்

      Delete
    3. இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் கூட சாதியம் இல்லை தான். ஆனால் இஸ்லாமியர், கிருத்தவர்கள் பலர் சாதியங்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவே இருக்கின்றனர் .... !!!

      Delete
  9. சலாம்!

    நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறந்த ஒரு பதிவு. தொடர்ந்து பதிவிடுங்கள். வீட்டு வேலைகள் முடிந்தது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே

      ஆமா நீண்ட இடைவெளி விழுந்து விட்டது

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    மச்சான் ஹைதர்
    சிறப்பானதொரு விழிப்புணர்வு ஆக்கம்!

    = = பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?
    பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ?
    என்று கோபம் மேலிட்டுக் கேட்ட கேள்விக்கு ஜாதி வெறியர்கள் என்ன பதில் பேச முடியம்? = =

    மானங்கெட்ட மௌனம் மட்டுமே பதிலாக வரும்

    பகிர்ந்த பதிவிற்கு
    ஜஸாகல்லாஹ் கைரன் !

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் மச்சான் குலாம்

      அந்த கள்ள மவுனத்தை கலைத்து போடுவோம்

      வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கும் நன்றி

      Delete
  11. சாதியின் முகம் மிகவும் கோரமானது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் விமலன்
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. அறியாமை என்ற இருக்குமிடம் இருள் சூழ்ந்து கிடக்கும் அறிவுப் பகலவன் இருக்குமிடம் வெளிச்சம் இருக்கும் வெளிச்சம் கிடக்க அறிவு தேவைப் படுகிறது இன்றைய நிலவுடாமையும் முதலாளித்துவமும் இதை வளர்த்தெடுக்கும் இவைகள்தான் பொருளை ஒரு இடத்தில் குவிய செய்வித்து கொள்ளையடிக்க செய்விக்கும் சாதி அழியும் போது சமத்துவம் நிலைக்கும்

    ReplyDelete
  13. விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி சத்துணவு மையத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சத்துணவு தயாரிப்பாளர்களாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை2, 2012) நியமிக்கப்பட்டனர்.

    இதனால், தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் எனக்கூறி, அக்கிராமத்தில் இருக்கும் கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

    இவர்களுக்கு யார் என்ன செ◌ால்லிப் புரியவைப்பது.

    ReplyDelete
  14. salam,
    நீண்ட நாட்களுக்கு பின் கட்டுரை எழுதினாலும் தெம்பான நல்ல வீரியமான கட்டுரை...

    பொறுப்புள்ள ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..

    புதிய வரவுகள்: வெற்றி....வெற்றி....வெற்றி....!!!,வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  15. அருமையான பதிவு..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறந்த ஒரு பதிவு. தொடர்ந்து பதிவிடுங்கள்.எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  18. உங்களிடம் வருவது உயர்வானது அதை மற்றவர்களிடம் தருவது சிறப்பானது
    மற்றவர்களிடம் வருவது உயர்வாக இருந்தாலும் அதை வெளிக்கொணர மனமில்லாமல் தவிப்பது ஏனோ !
    நல்லதை நாடு அதை பிறருக்கு அள்ளிக் கொடு .அறிவைப் கொடுப்பதால் அறிவு அதிகமாகும்
    கொடுத்தவன் இறைவன் இருக்க தடுத்தவன் நாமாக் இருத்தல் வேண்டாம் .
    செய்திகள் தந்து மக்களை சீண்டி சீரழிக்கும் செய்திதாள்கள் சில இருக்க
    கருத்துரை தந்து மக்களை அறிய வைக்கும் சேவையும் செய்யும் சிலர் இருக்க வேண்டும்
    நன்று உங்கள் சேவை .தொடரட்டும் ..தொண்டு .மக்கள் விழிப்படையட்டும்

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்! அவசியமான பதிவு.

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும்! அவசியமான பதிவு.

    ReplyDelete