Sunday, February 5, 2012

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இவர்களை தெரிந்துக் கொள்வோம்.

இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) ஒர் அறிமுகம்

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஹிஜிரி ஏழாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் பிறந்தவர்.(பிறப்பு ஹி.661(கி.பி.1262) அன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தில் படிந்திருந்த எல்லா மாசுகளையும் அகற்றி,அதன் வாழ்க்கை முறையில் நுழைந்திருந்த தீமைகளை நீக்கி அதனைத் தூய உருவில் உலகுக்கு எடுத்துக் காட்டினார்.

அவர் தம் விமரிசனங்களில் சிறியவரோ,பெரியவரோ-யார் மீதும் தயவுதாட்சண்யம் காட்டவில்லை மக்களின் மரியாதைக்கும் பக்திக்கும் உரியவர்கள்கூட இமாம் அவர்களின் கண்டனத்திலிருந்து தப்ப முடியவில்லை.பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமய ஆங்கீகாரம் பெறப்பட்டு ஆலிம்களும் பொருட்படுத்தாத நிலையில் சமூகத்தில் நிலவிய தவறான பழக்கவழக்கங்களை இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மிகக் கடுமையாக சாடினார்.

அவர் இவ்வாறு நேர்மையாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்து ஒளிவு மறைவின்றித் தம் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தமையால் அவருக்கு எதிராக ஓர் உலகமே திரண்டெழுந்தது அதன் காரணமாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இன்றும்கூட பெருமளவு ஆலிம்களால் அன்பாகவும் இதமாகவும் நினைவுகூறப்படுவதில்லை. அதலால் நிறைய மார்க்க சகோதரர்களுக்கு இமாவர்களின் அறிமுகம் அற்றுப் போனது.
இமாம் இப்னு தைமிய்யா அவர்களால் விமர்சிக்கப்பட்டு மனம்நொந்த அக்கால அறிஞர்கள் பலர் அவரை விசாரணைக்கு உடபடச் செய்து பன்முறை சிறைக்கு அனுப்பினர். இமாவர்கள் கல்வித்துறையில் உயர்ந்த நிலையை அடைந்திருந்ததோடு,உண்மையை எடுத்துரைப்பதிலிருந்து உலகில் எந்த சக்தியும் அவரைத் தடுத்து நிறுத்த இயலாத அளவுக்கு மன உறுதி படைத்தவராகவும் மிளிர்ந்தார் இதனால் வெஞ்சிறை சித்ரவதை அனுபவித்து சிறையிலேயே மரணிக்கவும் நேர்ந்தது.(இறப்பு ஹி.728 (கி.பி.1327)

இமாவர்களின் காலகட்டத்தில் இஜ்திஹாத்- (இஸ்லாமிய ஆராய்ச்சி) என்பது ஒரு பாவச் செயலாகக் கருதப்பட்டதோடு,பொருளற்ற அன்றைய (பித்அத்) புதிய கொள்கைகள் ஷரீஅத்தின் ஒரு பகுதியாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன.அல்லாஹ்வின் வேதத்தின் பாலும் அவனது தூதரின் வழிமுறையின் பாலும் எவரும் இஸ்லாமிய மக்களின் கவனத்தை ஈர்க்கத் துணியவில்லை.அவதூறுக்கு அஞ்சி யாவரும் வாளாவிருந்தனர்.

அறியாமையிலும் ஒழுக்கக் கேட்டிலும் ஆழ்ந்திருந்த பொதுமக்களும் உலகாசையும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட ஆலிம்களும்,கொடிய காட்டுமிராண்டி ஆட்சியாளர்களும் இணைந்து ஏற்படுத்தியிருந்த தீய சூழலுக்கு எதிராக சீர்திருத்தம் வேண்டி எவரும் குரல் எழுப்புவது எளிதான செயலாக இருக்கவில்லை இருள்மிக்க அந்த யுகத்தில் குர்ஆன்,ஹதீஸ் ஒளியை ஏந்தி சீர்திருத்தக் குரல் எழுப்பிய ஒரே செம்மல் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மட்டுமே (அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக).

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ஆளுமை, மற்றும் சிறப்புகள்.


இமாவர்கள் குர்ஆனை ஆழ்ந்து நோக்கும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஹதீஸ் கலையில் அவர் ஓர் இமாமின் தகுதிநிலையை அடைந்திருந்தார். இமாம் இப்னு தைமிய்யா அவர்களுக்கு தெரியாத,அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்த ஹதீஸும் ஹதீஸே அல்ல எனும் அளவுக்கு அவரது ஹதீஸ் பற்றிய அறிவு ஆழ்ந்து விரிந்திருந்தது. இஸ்லாமியச் சட்டத்துறையில் அவர் அதிகாரபூர்வமான வல்லுநர் என்று உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார்.

அக்காலகட்டத்தில் பகுத்தறிவுவாத கலை சார்ந்த தர்க்கவியல்,தத்துவவியல், இறைமையியல் ஆகிய துறைகளில் நியுணர்களாகத் திகழ்ந்தவர்களை இமாவர்கள் அவர்கள் விஞ்சியவராகவும் விவாதத்தில் எளிதாகத் தோல்வியுறச் செய்யும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். மேலும் யூத கிறிஸ்தவ வேத நூல்கள் பற்றியும் அவர்களின் சமயப் பிரிவுகள் பற்றியும் ஆழ்ந்த அறிவு இருந்தது.அதன் காரணமாக,“ விவிலிய நூலில் (Bible) வருகின்றவர்களைப் பற்றி ஆராய விரும்பும் எவரும் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் ஆய்வுகளை ஒதுக்கிவிட்டுத் தமது ஆராய்ச்சிகளை நடத்த முடியாது” என்று கோல்ட்ஸிஹர் எனும் அறிஞர் கூறியுள்ளார்.


இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களது மறுமலர்ச்சிப் பணியினை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.


1.அன்று செல்வாக்கில் இருந்த கிரேக்க தர்க்கவியலையும் தத்துவவியலையும் அதன் பொய்மையையும் பலஹீனங்களையும் தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டினார்.இஸ்லாமிய உம்மத்தில் கிரேக்க தத்துவத்திற்கு இருந்த முக்கியதுவத்தை உடைத்து எறிந்தார்.

2.இஸ்லாத்தின் கொள்கையை விளக்குவதற்குப் பொதுவான அறிவு வழியையே கடைப்பிடித்தார். அது இயல்பானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் குர்ஆன்,சுன்னாவின் நோக்கத்துக்கு ஏற்றதாகவும் இருந்தது. எனவே அவரது அணுகுமுறை இணையற்றதாக விளங்கிற்று. சமய அறிவு படைத்தவர்கள், இஸ்லாமியக் கட்டளைகளை எடுத்துக் கூற முடிந்ததே தவிர அவற்றுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க முடியவில்லை.

3. அவர் விடாப்பிடியாக பழைமைகளைப் பின்பற்றும் கொள்கைக்கு (தக்லீத்) வலிமையான எதிர்ப்புக் குரல் எழுப்பியது மட்டுமின்றி முன்னைய இமாம்களின் வழியில் இஜ்திஹாதையும் மேற்கொண்டார்.அவர் குர்ஆனிலிருந்தும் நபிவழியிலிருந்தும் நபித் தோழர்களின் வாழ்க்கையிலிருந்தும் நேரடியாக அகத்தூண்டுதலைப் பெற்றதோடு, பல்வேறு மத்ஹபுகளையும் திறனாய்வு செய்து சட்டவிதிகளை திருத்தினார்.
இவ்வறாக அவர் இஜ்திஹாதின்(இஸ்லாமிய ஆராய்ச்சி)  வாயிலைத் திறந்து விட்டதுமன்றி, அத்துறையில் ஒருவர் தன் ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்தலாம் என்பதற்கும் வழிகாட்டினார்.

4.இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள் இம்மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்டதோடு அன்று இஸ்லாமிய உலகை ஆக்கிரமித்திருந்த தாத்தாரிய கும்பலின் நாசவேலைக்கும் இழிசெயல்களுக்கும் எதிராக வாளையும் ஏந்தினார். தாத்தாரியரின் தவிர்க்க முடியாத தாக்குதலிலிருந்து அதுவரை தப்பியிருந்த எகிப்து,சிரியா ஆகிய நாடுகளின் மக்களை பார்த்து தாத்தாரியரின் படையெடுப்பை தைரியமாகவும் வீரத்தோடும் எதிர்த்து நிற்க வேண்டுமென வேண்டினார்.

தாத்தாரியர் என்ற பெயரைக் கேட்டாலே பொதுமக்கள் அச்சத்தால் நடுநடுங்கி,இறப்பை எதிர்நோக்குவது போல அவர்களை எதிர்நோக்க அஞ்சுவர் என்று வரலாறு கூறுகிறது. ஆனால்,இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் மக்களிடையே ஜிஹாத் உணர்ச்சியைத் தூண்டி அவர்களுக்கு வீரத்தையும் நம்பிக்கையும் ஊட்டினார்.

பின்குறிப்பு:
தாத்தாரிய மங்கோலிய படையெடுப்பை பற்றியும் அதனால் அன்றைய இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட அழிவை பற்றியும் ஓர் பதிவு வலையுகத்தில் (இன்ஷாஅல்லாஹ்) விரைவில்.

தமிழ்மண ஓட்டு போட  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138843

Friday, February 3, 2012

இலங்கை நண்பனும்,ஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகளும்


இந்த பயிற்சியைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள இங்கேஅழுத்துங்கள் 
இது பழைய பதிவுதானே ஏன் மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா?  இதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.

வெளிநாட்டு வாழ்க்கையில் எற்படக்கூடிய நட்புகள் ரயில்பயண நட்புக்கு இணையானது அவரவர் ஸ்டாப் வரும்போது இறங்கி போய்க் கொண்டே இருப்பார்கள். ஒரே கம்பெனியில் வேலை பார்த்திருப்பார்கள், சிரித்து மகிழ்ந்து பேசி, சின்ன பெரிய சண்டைகள் போட்டு, மிகவும் நட்பாக பழகி திடீரென்று வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
                                             நன்பர்கள் பாரூக்,சாதிக்கின்,ஜாபர்

என்னதான் இமெயில் ஐடி, போன் நம்பர் கொடுத்து விட்டு சென்றாலும் பிடிவாதமாக பழைய நட்பை தொடர்ந்தால்தான் உண்டு இல்லையென்றால் அந்த நட்புகள் நாளடைவில் அதிக இடைவெளி ஏற்பட்டு என்னைக்காவது நினைவுக்கு வருவார்கள். அப்படி என்னோடு நட்பாக இருந்து பிரிந்து சென்ற இலங்கை நண்பன், மெளலவி ‘சாதிக்கின்’ என்பவர்.

இவர் இஸ்லாமிய பிரச்சாரகர், பல அரபு தெரியாத நண்பர்களுக்கு அரபி வகுப்புகள் எடுத்து (அலிப்,பே) அ,ஆ விலிருந்து கற்றுக் கொடுத்து குர்ஆன் ஓதத் தெரியாத பல நண்பர்களை குர்ஆனை அரபியில் ஒத வைத்தவர். எனக்கும் நெருங்கிய நண்பர் என்னிடம் உடற்பயிற்சிகள் சில நாட்கள் கற்றுக் கொண்டவர் இப்போது இலங்கை சென்று விட்டார் நட்பும் அவ்வளவுதான் முடிந்து விட்டது.


இந்த வீடியோவில் என்னுடைய அறையில் பயிற்சி கற்றுக் கொள்ளும் நண்பன் ‘சாதிக்கின்’மெளலவி 
இந்த பயிற்சி செய்யும் போது வீடியோ எடுக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டார் அவருக்கு தெரியாமல் ரகசியமாக நண்பர் பாரூக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் அது இவருக்கு தெரிந்து போய் பறிக்க ஒடி வருகிறார் பாருங்கள்.

டிஸ்கி
தமிழ் மண ஓட்டு போடhttp://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1138464 

Thursday, February 2, 2012

ஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)


1996ல் சேலத்தில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது  உடன்  வேலை பார்த்த சலீம் நண்பனாகி போனான்.  சலீமுடைய அக்கா ஆமீனா.அவனோடு நட்பு இறுக்கமாகி வீடு வரை போயி நாளடைவில் ஆமீனக்கா எனக்கும் அக்காவாகி போனார்.

தகப்பன் இல்லாத மிகவும் ஏழ்மையான குடும்பம் அது.  ஆமீனா அக்காவுக்கு 30 வயதிற்கும். ஆனால் திருமணம் ஆகாத முதிர்கன்னி. இவர்  தான் அக்குடும்பத்தில் மூத்தவர். மதராஸாவில் ஓதிய மாணவி (ஆலிம்மா). நல்ல மார்க்கப்பற்று உள்ளவர். எனக்கு ஆரம்பத்தில் மார்க்கம் என்றால் என்னவேன்று தெரியாமல் இருந்தபோது கற்றுக் கொடுத்த என் ஆரம்ப ஆசிரியை. கொஞ்சம் கருப்பாக இருப்பார். நிறமும் ஏழ்மையும் சேர்ந்து அவரை 30 வயதுவரை முதிர்கன்னியாக்கி வீட்டில் அடைத்து வைத்திருந்தது.

  என் நண்பன் சலீம் படிப்பை தொடர முடியாமல் அவன் எதாவது வேலைக்கு போயி சம்பாதித்தால் தான் குடும்பம் ஓடும் என்கிற சூழலில் ஜவுளிக்டையில் வேலைக்கு சேர்ந்தவன்.

அவனுக்கு 17 வயது. அப்போது என்னுடைய வயதும் அதுதான். சலீமோடு சேர்த்து என்னையும் அவரின் சொந்த சகோதரனாக பாவித்து தாயுள்ளத்தோடு அன்பு செலுத்தியவர் ஆமீனாக்கா.

ஜவுளிக்கடை மெஸ் சாப்பாடு அவ்வளவு நல்லா இருக்காது.சலீமின் அம்மா வீட்டில் இட்லி,இடியாப்பம் சுட்டு விற்பார்கள். அதையும் சாப்பிட மாட்டேன்.  பழைய கஞ்சி சுண்டவைத்த குழம்பு காலையில் ரொம்ப நல்லாயிருக்கும். அக்காவின் சமையல் தான்.  ரொம்ப நல்லாயிருக்கும். இப்போது கூட அந்த மனமும் சுவையும் வந்து போகிறது. மறக்க முடியவில்லை. சலீமோடு சேர்ந்து நானும் அவனின் சின்ன சின்ன குடும்ப செலவுகளை பகிர்ந்து கொள்வேன். நானாக முன்வந்து செய்வேனே தவிர  அவர்கள் எப்போதும்  என்னிடம் எதிர்பார்த்ததில்லை.சலீமுடைய மாத சம்பளம் 800. என்னுடைய சம்பளமும் அதுதான்.

கடையில் பெண்கள் உள்ளாடை பிரிவில் கீதாஅக்கா,பாக்கியலஷ்மி அக்கா இவர்கள் வேலை பார்த்தார்கள்.  அத்தோடு அழகு சாதன பொருட்களை சேர்த்து அந்த பிரிவை முதலாளி விரிவுபடுத்தியதால் இன்னும் சில பெண் வேலையாட்களை சேர்க்க வேண்டிய சூழல். பாக்கியலஷ்மி அக்கா என்னை கூப்பிட்டு, "சலீம் அக்காவை இங்கு வேலைக்கு வரச் சொல்லி கேட்டுப் பார். நாம பாத்துகிருவோம். அவர்களுடைய குடும்ப வருமானமும் கூடும். என்ன சரியா?? நாளைக்கு கேட்டு விட்டு வந்து சொல்லு! முதலாளி இக்பாலிடம் நான் சொல்லி சேர்த்து விடுகிறேன்" என்றார்.

ஆமீனா அக்காவிடம்  நானும் பேசினேன். "சும்மா இருக்கீங்க! கடைக்கு வாங்க... மாதம் 600 ரூபாய் சம்பளம்,  மாலை 6 மணிக்கெல்லாம் நீங்க வீட்டுக்கு வந்து விடலாம். குடும்ப கஷ்டமும் கொஞ்சம் குறையும். என்ன சொல்றீங்கே?" என்றேன். "சரிப்பா" என அவரும் சம்மதம் சொன்னார். கடையில் சேர்த்து விட்டோம்.  அன்றைய காலகட்டங்களில் புர்கா போடும் இஸ்லாமிய பெண்களை காண்பது மிகவும் குறைவு. அக்கா கடைக்கு முதல் நாள் புர்கா போட்டுக் கொண்டு வேலைக்கு வந்தார். மாலையானதும்  வீட்டுக்கு போய் விட்டார்.

அக்கா கடையைவிட்டு போன பின் முதலாளி பாக்கியலஷ்மி அக்காவை கூப்பிட்டு என்னவோ சொன்னார்.  எனக்கு காதில் விழவில்லை. அதற்குபிறகு பாக்கியலஷ்மி அக்கா என்னிடம் வந்து "ஹைதரு நாளைலிருந்து அவுங்க வேலைக்கு வரவேண்டாம் என்று முதலாளி இக்பால் சொல்லுகிறார்" என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  "ஏங்க்கா? என்ன காரணம்?" என்றேன்.  "விடுப்பா வேற வேலை பார்ப்போம்" என்று முடித்துக் கொண்டார்.
ஆனால் எனக்கோ மனம் கேட்கவில்லை. முதலாளி அறைக்குப் போனேன்.(முதலாளி பள்ளபட்டி என்ற ஊரை சார்ந்தவர்). "அண்ணே! அவுங்க கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்தவங்க.  அதனால் நான் அக்காவை இங்கு கூட்டிகிட்டு வந்தேன். என்ன காரணத்திற்காக அவரை விலக்குனீங்க? சொல்ல முடியுமா?" என்றேன்.

"ஒன்னுமில்ல...... புர்கா போட்டுக் கொண்டு,  முழுவதுமாக மூடிக் கொண்டு  கடைக்கு வருகிறார். அது அழகில்லை அதான்........" என்று இழுத்தார்.  (என்னை மீறி உதடுகளில் வரதுடித்த கோப வார்த்தைகளை அடக்கிக்கொண்டே) "அண்ணே அவுங்க வேலை செய்வது பெண்கள் உள்ளாடை பிரிவு. பெண்கள் தான் அங்கு வருவார்கள். அவர்களிடம் இவர் விற்க போகிறார். இதுக்கு எதுக்கு அழகு, கவர்ச்சி...???"  என்றேன்.  "அதற்கில்லை உள்ளாடைகள் மற்றும்  அழகு சாதன பொருட்கள்  என சின்ன சின்ன பொருட்களை விக்கிறோம்.  அவற்றை எடுத்து புர்காவுக்குள்  போட்டுக் கொண்டால் நமக்கு ஒன்றும் தெரியாது. கீதா, பாக்கியலஷ்மியெல்லாம்  புர்கா போடுவதில்லை. அதனால் திருடி ஒளிக்க வாய்ப்பில்லை.  மாலையில் வேலை முடிந்து போகும் போது மேலோட்டமாக பார்த்து அனுப்பி விடலாம். ஆனால் இவர் திருடி ஒளித்துக் கொண்டு போக வாய்ப்புண்டு" என்றார் முதலாளி.

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "இக்பால் அண்ணே அவுங்க மதராஸா மாணவி (ஆலிம்மா.) இறையச்சமுள்ளவர். திருட வாய்ப்பில்லை. புரிந்து கொள்ளுங்கள்"  என்றேன்.  அதற்கவர் ஒரே வார்த்தையில் "புர்கா போடாமல் வருபதாக இருந்தால் வரச்சொல்" என்றார்.

அடுத்த நாள் காலை ஆமீனா அக்காவிடம் புர்கா போடாமல் கடைக்கு வரமுடியுமா....??? என்று மெதுவாக இழுத்தேன். ஒற்றை வரியில் "முடியாது" என்று மறுத்து, "என்னுடைய உடை இதுதான். புர்கா அணியாமல்  நான் வரமுடியாது என்று சொல்லிவிடு" என்றார் கோபமாக. அன்று அவருடைய பிடிவாதம் அப்போது மார்க்கம் தெரியாத எனக்கு புரியவில்லை.

Friday, January 27, 2012

'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...


இந்த பூமிப் பந்தை பற்றிபடர்ந்திருந்த அறியாமை இருளை அடித்துவிரட்டி, ஒளிமிக்க வாழ்க்கையை நிலைநாட்ட வந்த அருள்மிகு வேதமே திருக்குர்ஆன்.

குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.

இதர மதங்களும்,நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.

ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது.  ‘ரப்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.

சிலை வணக்கமும் உருவ வழிபாடும் மட்டுமே ‘இணைவைப்பு'  என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ‘ரப்’ என்கிற சொல்லின் பொருளை சரியாகவும், முழுமையாகவும் விளங்கிக் கொண்டால் ஆன்மீகத்தில் மட்டுமல்ல,சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களிலும் எத்தனை எத்தனை இணைவைப்புகள் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் அடையாளம் காண முடியும்.


‘ரப்’ சொற்பொருள் ஆய்வு
ர,ப, ப என்பது இந்தச் சொல்லின் மூலம் ஆகும்.அதன் முதன்மையான அடிப்படையான கருத்து பரிபாலித்தல் என்பதாகும்.பின்னர் அதிலிருந்து கவனித்தல், கண்காணித்தல்,சீரமைத்தல்,நிறைவு செய்தல் போன்ற கருத்துக்களும் ஏற்பட்டன,அதே அடிப்படையில் முதன்மை,தலைமை,தனியுரிமை மற்றும் ஆளுமை போன்ற பொருள்களும் ஏற்பட்டு விட்டன.அகராதியில் அந்தச் சொல் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

1.பரிபாலித்தால்,வளர்ச்சியூட்டல்,விரிவுபடுத்தல் அதாவது ஒரு பொருளை படிப்படியாக முன்னேறச் செய்து நிறைவுக்குக் கொண்டு வருதல். உண்மையில் அதற்குரிய பரந்த பொருளில் இதுவும் ஒரு பொருளெனக் கொள்ளலாம்.

2.பராமரிப்ப்வன்,தேவைகளை வழங்குபவன்,வழிமுறைகளையும் வளர்ச்சியையும் தருபவன்.

3.பொறுப்பாளன்,கண்காணிப்பவன்,வளர்த்து ஆளக்குபவன்,சீர்திருத்தம் செய்பவன்.

4.மைய தகுதியுடையவன்,அவனைச் சூழ்ந்து பல்வேறு மக்கள் குழுமி இருப்பார்கள்.

5.கீழ்படிய வைப்பவன், தலைவன்,அதிகாரம் கொண்டவன்,கட்டளை பிறப்பிப்பவன், முதன்மையையும் ஆதிக்கத்தையும் படிய வைப்பவன்,மற்றுவதற்குரிய அதிகாரம் உடையவன்.

6.அதிபதி, எஜமானன் இரட்சகன்


குர்ஆனில் ‘ரப்’ என்ற சொல்லின் பயன்பாடு
  قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا 
34:26“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்;
  اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ 
9:31“அவர்கள் அல்லாஹ்வை விடுத்து மார்க்க மேதைகளையும்,துறவிகளையும் தங்களின் ‘ரப்’ - கடவுளாக்கிக் கொண்டார்கள்.
وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ
3:64 “மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவானாய் ஆக்கிக் கொள்ளக் கூடாது”
 سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.
فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ
21:22“எனவே அவர்களின் பொய்யான வர்ணனையில் இருந்து அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.

குர்ஆனில் இபுறாஹீம் நபி (அலை) அவர்களின் காலத்து மக்களின் வரலாறு.

இறையமையுடன்முதலும் இரண்டாவதுமான பொருளில் வானுலக சந்திரன், சூரியன் நட்சத்திரங்களையும் பங்குதாராய் கணித்துக் கொண்டார்கள்.அதன் காரணமாக இறைவனுடன் அவற்றையும் வணக்கத்திற்குரியவைகளாக ஆக்கிக் கொண்டார்கள்.

முதலில் இப்றாஹீம் (அலை) அவர்களின் ஆரம்ப உணர்வுகளின் நிகழ்வை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் அவருடைய சத்தியதேடலின் நிலை இவ்வாறு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
  فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا ۖ قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ  فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ  فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ ۖ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ  إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
6:76”இரவு அவரை மூடிக் கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார்.”

6:77 “சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது “இதுவே என் இறைவன்” என்றார் அது மறைந்த போது “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகிவிடுவேன் என்றார்.”

6:78“பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

6:79 “வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவானாக என் முகத்தைத் திருப்பிவிட்டேன்.நான் இணை
கற்பித்தவனல்லன்” (எனக் கூறினார்)

இபுறாஹீம் நபிக்கு முன்னால் வந்த நபிமார்கள் சரியான ஏகத்துவ கொள்கையை சொல்லி கொடுத்து விட்டு சென்றார்கள் ஆனால் காலப்போக்கில் திரிந்து இறையமையோடு சந்திரன் சூரியனை கூட்டு சேர்த்தனர் ஆகவே இபுறாஹீம் நபியவர்கள். நபித்துவத்திற்கு முன்னர் இந்த வினாவுக்கு விடை தேடுவதிலேயே அவர் முனைந்திருந்தார்கள்.

இபுறாஹீம் நபி (அலை) அவர்கள் இறைத்தூதராய் ஆனபோது மக்கள் சூரியன் சந்திரனை இரட்சகனாக,‘ரப்”ஆக நினைத்ததை மாற்றினார்கள் ஒரிறையின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள்.  
وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ
 الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
6:81.உங்களுக்குஅவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
குர் ஆனின் அழைப்பு
‘ரப்’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் படைப்பினங்களின் பாரமரிப்பு, பதுகாப்பு,தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஆதரித்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாளி என்பதாகும். முந்தைய சமூக மக்களின் கண்ணோட்டத்தில் அதன் பொருள் வேறாக இருந்தது. மேன்மைக்குரிய ‘ரப்’பாக அல்லாஹ்வையே அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் இரண்டாம் தர சக்திகளாக சூரியன்,சந்திரன்,இறைநேசர்கள்,மற்றும் மதகுருமார்களையும் இணைத்துக் கொண்டார்கள்.


படைத்தவனோடு படைப்பினங்களை இறைவனுக்கு இணவைப்பது 
சரியாகாது இந்த அழைப்பை குர்ஆன் எந்த விதத்தில் அளிக்கிறது என்பதை அதன் வாயிலாகவே கேளுங்கள்:
قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّهُ ۚفَقُلْ أَفَلَا تَتَّقُونَ فَذَٰلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ ۖ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ
10:31“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.


10:32உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ
39:5அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
 هُوَ الْحَيُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ۗ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
40:65அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.


எனவே ‘ரப்’ எனும் சொல்லின் பொருளை விளங்கி விளையாட்டுக் கூட 
இணைவைப்பதிலிருந்து விலகி சரியான மார்க்கத்தை பின்பற்றுவோம்.

Monday, January 23, 2012

'மாவோ':சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம்

இணையத்தில் மாவோவை ஆசானாக கொண்ட மாவோயிஸ்ட்கள், சீடர்கள் வினவு,மற்றும் செங்கொடி வகைறாக்கள்.இந்தியாவில் எப்படியும் மவோயிஸ கொள்கை கொண்ட ஒரிஜினல் கம்யூனிஸ ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடுவோம் என்கிற கனவோடு எழுதிக் கொண்டிருக்கும் குழு. அவரவர் கொள்கையை எழுதுவது தவறில்லை. ஆனால் அவர்கள் பின்பற்றும் வழிமுறை? நேர்மையற்றது,மிகத்தவறானது

ஆசியாவில் இந்த மாவோயிஸ கம்யூனிஸம் ஆட்சி செலுத்திய இடங்களின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. எங்கெயெல்லாம் புத்த/பவுத்த மதத்தின் செல்வாக்கு இருந்ததோ அங்கு தான் இவர்களின் சரக்கு மிக ஈஸியாக செல்லுபடியாகி இருக்கிறதுஎளிமையாக ஊடுருவி அதிகாரத்தை பிடிக்க முடிந்திருக்கிறதுஉதாரணத்திற்கு சீனாதிபெத்வியட்நாம்தற்போது நேபாளம்……….  இவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்தது வேறு யாருமில்லை. நம்ம புத்த மகான்’ தான்.

அரசப்பதவிகளை உதறித் தள்ளிவிட்டு  துறவியான புத்தர் தன்னுடைய சீடர் போர்க்களத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றபோது அதுகூட கூடாதென்று தடுத்தார்.வியாட்நாமை பிரான்ஸ்,அமெரிக்க்கா போன்ற வல்லரசு நாடுகள் ஆக்கிரமித்து கொடுமையான போரை அவர்கள் மீது திணித்தபோது புத்த பிக்குகள் எதிர்த்து ஆயுதமேந்தி போராடவில்லை. புத்த மதமும் அப்படி அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக புத்த பிக்குகள் தன்னை தானே எரித்து தற்கொலை செய்துக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.அனுதாபப்பட்டு உச்சு கொட்டி எழுதிய தலைப்பு செய்திகளாக பத்திரிக்கையில் வரமுடிந்ததே தவிர தீர்வு கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் ராஜக போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாட்நாமிய புத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து போராட்டம் நடத்திய புகைப்படம்.


ராணுவப்போராட்ட அரசியலுக்கு புத்த மதத்தில் இருந்த வெற்றிடத்தை நிரப்ப அங்கு கம்யூனிஸ போராளிகள் தேவைப்பட்டார்கள்வல்லரசுகளுக்கு எதிராக போராடினார்கள்புத்த மதத்தையும் சேர்த்து வென்றார்கள். அமெரிக்கா மட்டுமல்ல புத்த மதமும் தான் வியட்நாமிய அரசியலிருந்து வெளியேறியது. அந்த இடத்தை கம்யூனிஸ கொள்கை பிடித்துக் கொண்டது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட்கள் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு சக்தியாக இருந்து சொந்த நாட்டு மக்களை அகதிகளாக்கி அவர்களின் மதநம்பிக்கையை அழித்துஅடக்கி ஒடுக்கியிருக்கிறார்கள்.

சீனாவில் சீன மக்கள் குடியரசு’ என்ற பெயரில் மவோ ஆட்சியில் அமர்ந்த கையோடு திபெத் பற்றிய தனது ஆக்கிரமிப்பு கொள்கையை அறிவித்தது.திபெத் ஆக்கிரமிக்கப் படவேண்டும்அதன் தாய்நாடான சீன மக்கள் குடியரசோடு திபெத் இணைக்கப்பட வேண்டும்சீனாவின் ஒரு பகுதி தான் திபெத். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று அறிவித்து சுதந்திர நாட்டின் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுப்போம்” என்றது.

நவம்பர் 2,1949-ல் திபெத்திய வெளிநாட்டு அமைச்சகம் ஒரு கடிதத்தை மாவோவுக்கு அனுப்பிவைத்தது. அதன் சாரம் இதுதான்:-
திபெத் ஒரு வித்தியாசமான நாடு.திபெத் முழுக்க முழுக்க புத்த மதம்ஆழமாக பரவியுள்ளது.தலாய் லாமா அவர்களின் தலைமையில் திபெத் இயங்கி வருகிறது.முந்தைய காலம் தொட்டு இன்றைய தேதிவரையில் திபெத் தனிநாடாகவே இருந்து வந்திருக்கிறது.திபெத்தின் அரசியல் நிர்வாகம் எந்தவொரு வேற்று நாட்டினரின் அதிகாரத்துக்கும்உட்பட்டிருக்கவில்லை. திபெத், தம்முடைய பிரதேசங்களை தாமாகவே பாதுகாத்துக் கொள்கிறது. இது ஒரு மத நம்பிக்கையுள்ள நாடு.


எந்த விளக்கத்தையும் கேட்க மாவோ தயராக ல்லை. ஜனவரி 1,1950.அதிகாலையில் கரகரத்த குரலில் ரேடியோ பீகிங் இந்த வருடம் செம்படைக்கு ஒரு முக்கியப் பணி ஒதுக்கப் பட்டிருக்கிறது. திபெத் கைப்பற்ற படவேண்டும் உடனடியாக போரை தொடங்கியது. அதுவும் எப்படி?????? திரும்பத் திரும்ப வானொலியிலும் துண்டறிக்கைகளிலும் தன்னை ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக காட்டிக் கொள்ளமால்,திபெத்தை விடுவிக்க வந்த நண்னாகக் காட்டிக் கொள்ள முனைந்தது மவோவின் ஆக்கிரமிப்பு படை.


மாவோ உறுதியான குரலில் திபெத்துக்குச் சில வாக்குறுதிகளை அளித்தார்.(பின்னர் கொடுத்த வக்குறுதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை)


1.திபெத்திய லாமாக்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள்பாதுகாக்கப்படும்;மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்படும்.

2.லாமாக்களின் கோயில்கள் பாதுகாக்கப்படும்.

3.திபெத்தின் தற்போதைய நிர்வாகத்திலும் ராணுவத்திலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது.

4.திபெத்தியப் படைகள் சீனாவின் பாதுகாப்புப் படைகளுடன் ஒன்றிணைக்கப்படும்.அனைத்து லாமாக்களும் அதிகாரிகளும் அவர்களது பதவிலேயே தொடர்ந்து நீடிக்கலாம்.

5.எந்தவிதமான முன்னேற்ற ஏற்பாடாக இருந்தாலும் அது திபெத்தியர்களைக் கலந்தாலோசித்த பிறகே நடைமுறைப்படுத்தபடும்.
1951-ல் சிறிய எதிர்ப்புகளைத் தகர்த்துவிட்டு திபெத்துக்குள் நுழைந்ததுசெம்படை. முதன்முறையாக சீனாவின் தலைமையை திபெத் ஏற்றுக் கொண்டது., ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிந்தது.(அன்று பணிந்த திபெத் இன்று வரை விடுபடவில்லை)
திபெத்தில் அரசியல் ட்சி அதிகாரத்தை வலுவாக பிடித்தபிறகு தங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாற்றமாக மவோ’ கம்யூனிஸ்ட்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தார்கள்…..

1.புத்த மதத்துக்கு சொந்தமான மடங்களின் சொத்துக்கள், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திபெத்தியர்கள் மீது புத்தமதம் செலுத்திவரும் நம்பிக்கையை அழித்து விட சீனா துடித்தது. மதத்தலைவர்கள் முக்கியத்துவத்தை இழக்க வைக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டனர். புத்தமதத்துக்கு எதிரான கருத்துக்களைப் போதிக்கும் புத்தகங்கள் திபெத்துக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

2.பொற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடாலயங்களுக்கு அனுப்பும் வழக்கத்தை நிறுத்தச் சொன்னார்கள் கம்யூனிஸ்ட்கள். மடாலயங்களுக்கு அனுப்பப்படாத குழந்தைகளுக்கு நவீன கல்வி அளிக்கப்படும் என்றார்கள்.

3.அரசாங்கம் ஏற்று நடத்தும் ஒரு சில மடாலயங்கள் தவிர்த்து(!?) பிற புத்த மடங்களை பொதுமக்கள் வேறுவகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.(இவர்கள் தான் தாலிபான்கள் புத்த சிலையை இடித்ததை கண்டிக்கும் மகா உத்தமர்கள்)

4.மதச்சடங்குகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்கள்.

5.பிரார்த்தனைக் கொடிகள்,துபத்திகள் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும் என்றார்கள்.

6.தலாய் லாமாவின் அனைத்து புகைப்படங்களையும் மக்கள் அழித்து விட வேண்டும் என கூறினார்கள்.


உச்சகட்டமாக தலாய் லாமாவின் அதிகாரத்தை மாவோயிஸ சீ அரசு ரத்துசெய்தது.தலாய்லாமா மற்றும் திபெத்திய பழைய அரசாங்க பிரதிநிதிகள்இந்தியாவிற்கு தப்பி அகதிகளாக வந்தனர்அதற்கு பிறகு இலட்ச கணக்கான திபெத்திய மக்கள் அகதிகளாக இந்திய எல்லைக்குள் வந்தவண்ணம் இருந்தனர். (இன்றும் அகதிகளாக இருக்கின்றனர்.)
தலாய்லாமா தப்பி இந்தியா வந்தபோது நேரு அவரை சந்திக்கிறார்
இதனிடையில் லாமா கிளம்பிய மறுநாள் விடிந்ததும் சீன படைகள் அரண்மனையை சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கபட்டன. அவருக்கு ஆதரவானவர்கள் கொல்லபட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000 திபெத்தியர்கள் கொல்லபட்டனர். மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இலங்கையின் ஈழதமிழ்மக்கள் சில நாடுகளில் அகதிகளாக இருப்பது போலவே1952 லிருந்து இவர்களும் அகதிகளாக திரிகிறார்கள். நாடு கடந்த திபெத் அரசாங்கத்தை நிறுவி அதற்கு பிரதமரையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்

நாடு கடந்த திபெத் பிரதமர் (கெலோன் டிரிப்பா)லாப்சங் சங்கே-தலாய்லாமா

அன்று மவோ தொடங்கி வைத்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மக்கள் 60 வருடங்களாக அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனதுகோரிக்கையை சீனா செவி சாய்த்துவிடும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சீனா இதுவரை செவிசாய்க்கவில்லை. தேசிய இன விடுதலையை பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்ட்களும் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.


இதே கம்யூனிஸ்ட்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது கதற கதற அடித்து கம்யூனிஸ்ட்களை ஆப்கானியர்கள் வெளியேற்றியதை இந்த திபெத்தியர்கள் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டால் கம்யூனிஸ சர்வதிகார அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைக்கும்.