சொராஸ்டிரிய மதச்சின்னம்
சொராஸ்டர் (Zoroaster)
இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.
அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.
அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.
மகா சைரஸ்
அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.
சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு
தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
கோபுர உச்சியில் பிணங்கள் கழுகுகளால் தின்னப்பட்டு கிடக்கும் காட்சி
ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்
உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.
சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.
சொராஸ்டர் (Zoroaster)
அத்வைதமும் (Monotheism) துவைதமும் (Dualism) இணைந்த ஒரு கவர்ச்சிகரமான கலவையாகச் சொராஸ்டிரா இறைமையியல் அமைந்துள்ளது. இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’) என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.
உண்ம உலகில் நன்மையை ஆதரிப்பதா,தீமையை ஆதரிப்பதா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையுடையவர். இவ்விருதரப்புகளுக்கிடையிலான போராட்டம் தற்போதைக்கு மிக நெருங்கிய போராட்டமாக இருந்த போதிலும், நீண்ட காலக் போக்கில் நன்மையே வெல்லும் என்று சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். மறுமை வாழ்விலும் அவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.
அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார்.
விஷ்டாஸ்பா மன்னரிடம் ஆதரவு பெறுவது போன்ற ஒவியம்.
அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது.
மகா சைரஸ்
அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது.
சொராஸ்டிரா பார்சீகளின் புனித தீப்பிழம்பு
தீப்பிழம்பை வணக்குகிறார்கள்
சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும். அவர்கள் இறந்தவரின் உடலை எறிப்பதோ, புதைப்பதோ இல்லை மாறாக, கோபுரங்களின் உச்சியில் கொண்டு போய் வைத்துக் கழுகுகள் தின்னும்படி விட்டு விடுகிறார்கள். (பிணத்தைக் கோபுரத்தில் வைத்த சில மணி நேரத்திற்குள்ளேயே கழுகுகள் அதன் தசைகளைத் தின்று விட்டு எழும்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன.
ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள்.எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
மும்பையில் சொராஸ்டரா பார்சீகள்
இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.
தீப்பிழம்பை வணங்கும் முறை
இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
இதுவரை நான் கேள்வி படாத மதம் இது...இப்போது தெரிந்துகொண்டேன்....
ReplyDeleteஇங்கே குவைத்தியர்களும், துபாய் வாசிகளும் கூட பார்ஸி மொழி பேசிவருவதை பார்த்திருக்கிறேன்; ஆனால் அவர்கள் சரித்திரத்தை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!
ReplyDeleteசகோ ஹைதர் அலி,
ReplyDeleteநீங்கள் எடுக்கும் ஒவ்வொரு களமும் வித்தியாசமாக இருக்கிறது, அதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அருமையான பதிவுக்கு நன்றி சகோ.
கூடுதல் தகவல்...
ReplyDeleteரத்தன் டாடா வும் பார்சி தான்.
தமன்னாவும் பார்சி தான்... ஹீ..ஹீ..ஹி..
ஒப்பீட்டளவில் இந்தியாவில் பார்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும். இந்தியாவின் வணிகத்தில் குறிப்பிட தக்க அளவு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ReplyDeleteஇது தொடர்பாக ஒரு மெயில் என்னிடம் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவை. முடிந்தால் தேடித்தருகிறேன். ஆனா முடியாதுன்னு தான் நினைக்கிறேன்.
ஹி....ஹீ..ஹீ....
ஆனாலும் கொஞ்சம் பதிவுகளோட எண்ணிக்கைய குறைத்துக்கொள்ளுங்கள். இல்லாட்டி எங்க எதிர்பதிவோட எண்ணிக்கை கூடிடும். ஓவர் ஸ்பீட் உங்களுக்கு நல்லதில்ல.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசுப்ஹானல்லாஹ்...பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.
//சொராஸ்டிரார்கள் இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறைதான் மிகவும் விசித்திரமானதாகும்.// - இது ரொம்பவே விசித்திரம்.
ஜசாக்கல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஅண்ணா
வித்தியாசமான விஷயம். அவர்களின் வித்தியாச வித்தியாசமான பழக்க வழக்கங்கள்,வழிபாட்டு முறைகள் நடைமுறையில் கடைபிடிக்கும் விஷயங்கள் என அதிகப்படியான விஷயம் தெரிந்துக்கொண்டேன்.
அடிக்கடி இது போன்று எழுதுங்கள் அண்ணா
உங்க பதிவை படிச்சு எங்கே நானும் ஜீனியஸ்ஸாய்டுவேனோன்னு எனக்கு பயம்ம்ம்ம்ம்மா இருக்கு அவ்வ்வ்வ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDelete//இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம்//
உண்மைதான் சகோ..
தேடி தேடி வரலாறுகளை ஆராய்ந்து இங்கு படைக்கிறீர்கள் சகோ.. அரைகுறையாக அறிந்திருக்கும் விஷயங்களை உங்கள் படைப்புக்கள் மிகுதி அடையச் செய்கிறது..
இதுபோல் நிறைய ஆக்ககங்கள் உருவாக்க இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteமச்சான்
பார்ஸி மதம் குறித்த முழுமையான
அலசல்...
இதுவரை தெரியாத செய்திகள் அறிய தந்தமைக்கு நன்றி
ஜஸாகல்லாஹ் கைரன்
ஆச்சரியமானதும், அறியவேண்டியதும் உள்ளடக்கியது இப்பதிவு. விசித்திரமான கலாச்சாரம்! வேடிக்கையான வழிபாடு! அல்லாஹ் ஒருவனே நேர்வழி காட்ட போதுமானவன்!
ReplyDeleteAriyaatha thakavalkal!
ReplyDeleteTheriyaatha visayNgal!
Theriya paduthiyathukku-
Mikka nantri!
எங்கள் ஊரில் உள்ள செளராஸ்ட்ராவினர் தங்கள் பதிவுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள்!
ReplyDeleteஇறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறை-இது இந்தியாவில் யூதர்கள் வழ்க்கம் என்று இந்தியாடுடே புத்தகத்தில் படித்ததாக நினைவு,
ஹைதர் அலி, தெரியாதவிடயங்களை தேடி அறிந்து விபரமாக எங்களுடனும் பதிவுகளாக பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் கணவரும் பார்சி இனத்தவர் என்பதாக ஞாபகம்.
ReplyDelete@NKS.ஹாஜா மைதீன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@எம் அப்துல் காதர்
ReplyDelete//இங்கே குவைத்தியர்களும், துபாய் வாசிகளும் கூட பார்ஸி மொழி பேசிவருவதை பார்த்திருக்கிறேன்;//
குவைத் பாரிசீ மண்டலத்தில் தான் ஆரமப்த்தில் இருந்தது அவர்களும் ஆரமப காலத்தில் பார்சீகள் தான்
//ஆனால் அவர்கள் சரித்திரத்தை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!//
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ
@தமிழ்மகன்
ReplyDeleteஎனக்கு காசு வேண்டாம் நட்பு வேண்டும் கிடைக்குமா?
@சகோசிராஜ்
ReplyDelete//நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு களமும் வித்தியாசமாக இருக்கிறது,//
இதுக்காகவே ஒக்காந்து யோசிக்கிறாம்லே
@சகோசிராஜ்
ReplyDelete//ரத்தன் டாடா வும் பார்சி தான்.
தமன்னாவும் பார்சி தான்... ஹீ..ஹீ..ஹி..///
முன்னாடியே சொல்லபிடாதா?
தமன்னா மதம் பற்றி ஓர் ஆய்வு
பதிவு தலைப்பு இப்படி வைத்திருப்பேன்
கூட்டம் அள்ளியிருக்கும் ஒருவேளை இது போன்ற தலைப்பு வைக்க மாட்டேன் என்று தெரிந்து இப்போது சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சரியா?
@சகோசிராஜ்
ReplyDelete//ஒப்பீட்டளவில் இந்தியாவில் பார்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும். இந்தியாவின் வணிகத்தில் குறிப்பிட தக்க அளவு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.//
ஆமாம் இது ஆச்சரியப்பட வைக்கும் உண்மை
@சகோசிராஜ்
ReplyDelete//ஆனாலும் கொஞ்சம் பதிவுகளோட எண்ணிக்கைய குறைத்துக்கொள்ளுங்கள். இல்லாட்டி எங்க எதிர்பதிவோட எண்ணிக்கை கூடிடும். ஓவர் ஸ்பீட் உங்களுக்கு நல்லதில்ல.//
ஒவர் ஸ்பீட் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான் நல்லதில்லை எதிர் பதிவு போடுற உங்களுக்கும் தான் ஹா ஹா ஹா
@Aashiq Ahamed
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@தங்கை
ReplyDeleteஆமினா
வ அலைக்கும் வஸ்ஸலாம்
//உங்க பதிவை படிச்சு எங்கே நானும் ஜீனியஸ்ஸாய்டுவேனோன்னு எனக்கு பயம்ம்ம்ம்ம்மா இருக்கு அவ்வ்வ்வ்//
ஆமா யாரு இங்கே ஜீனியஸ் எங்கப்ப அந்த பக்கி
@Syed Ibramsha
ReplyDeleteவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
//இதுபோல் நிறைய ஆக்ககங்கள் உருவாக்க இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.//
உங்கள் பிரார்த்தனை மிக்க மகிழ்ச்சி சகோ ஜஸாக்கல்லாஹ் கைர
@மச்சான்
ReplyDeleteG u l a m
வ அலைக்கும் வஸ்ஸலாம்
வருகைக்கு ரொம்ப நன்றி
@அபூவஸ்மீ (நெய்னா முஹம்மது)
ReplyDelete//ஆச்சரியமானதும், அறியவேண்டியதும் உள்ளடக்கியது இப்பதிவு. விசித்திரமான கலாச்சாரம்! வேடிக்கையான வழிபாடு! அல்லாஹ் ஒருவனே நேர்வழி காட்ட போதுமானவன்!//
பின்னூட்ட வார்த்தைகளில் புகுந்து விளையாடி இருக்கிறீர்கள் ஆசிரியர் என்றால் சும்மாவா?
வருகைக்கு நன்றி சார்
@சகோ
ReplyDeleteSeeni
//Theriya paduthiyathukku-
Mikka nantri!//
வந்து தெரிந்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி
@மு.ஜபருல்லாஹ்
ReplyDelete//இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவதற்கு கையாளும் முறை-இது இந்தியாவில் யூதர்கள் வழ்க்கம் என்று இந்தியாடுடே புத்தகத்தில் படித்ததாக நினைவு,//
இது தவறான செய்தி சகோ யூதர்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்
அடக்கம் பன்னும் பழக்கத்தை உடையவர்கள்.
அப்புறம் இந்தியா டுடேயின் தரம் பற்றி நாம் அறியாததா?
@சகோதரர்அம்பலத்தார்
ReplyDelete//ஹைதர் அலி, தெரியாதவிடயங்களை தேடி அறிந்து விபரமாக எங்களுடனும் பதிவுகளாக பகிர்ந்துகொள்வதற்கு நன்றி.//
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
//முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் கணவரும் பார்சி இனத்தவர் என்பதாக ஞாபகம்.//
அது உண்மைதான்
மாப்ள பல தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி..."பார்சி" இந்தியர்கள் மறக்க முடியாத விஷயம் ஆச்சே...இந்திரா கணவர் பெரோஸ்..இதுக்காகவே பெரோஸ் காந்தி ஆக்கப்பட்டு இன்னிக்கி வரைக்கும் நாட்டை காந்தி பேரு சொல்லி அழிச்சிட்டு இருக்காங்களே..இந்த உதாரணம் போதுமே!
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் பாவா,
ReplyDeleteநல்ல பதிவு, ஒரு வரலாற்றை படித்த திருப்தி...
இன்னும் மேலும் மேலும் எழுத அல்லாஹ் அருள் புரிவனாக
அஸ்ஸலாமு அலைக்கும் பாவா,
ReplyDeleteநல்ல பதிவு, ஒரு வரலாற்றை படித்த திருப்தி...
இன்னும் மேலும் மேலும் எழுத அல்லாஹ் அருள் புரிவனாக
இதெல்லாம் பொய்யா ? உண்மையா ?
ReplyDeleteஇல்லை உண்மை பொய்யா ?
@மாப்ள
ReplyDeleteவிக்கியுலகம்
//"பார்சி" இந்தியர்கள் மறக்க முடியாத விஷயம் ஆச்சே...இந்திரா கணவர் பெரோஸ்..இதுக்காகவே பெரோஸ் காந்தி ஆக்கப்பட்டு இன்னிக்கி வரைக்கும் நாட்டை காந்தி பேரு சொல்லி அழிச்சிட்டு இருக்காங்களே..இந்த உதாரணம் போதுமே!//
க.க.க.போ கச்சிதமாக பிடித்து விட்டீர்கள்
@பாவா
ReplyDeleteMohamed Shaheed
வ அலைக்கும் வஸ்ஸலாம்
//இன்னும் மேலும் மேலும் எழுத அல்லாஹ் அருள் புரிவனாக//
உங்கள் பிரார்த்தனைக்கு ரொம்ப நன்றி
@Anonymous
ReplyDelete//இதெல்லாம் பொய்யா ? உண்மையா ?
இல்லை உண்மை பொய்யா ?//
அவனா நீ???
வணக்கம் பதிவுலக நண்பர்களே உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக தமிழ் திரட்டி இணையத் தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் palani.muruganandam.nilavaithedi@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து
ReplyDeleteபிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவையாகும்.
@சிராஜ்
ReplyDeleteTamana is not "parsi" She's "Sindhi"
I heard hindi actor john abraham is Parsi
சகோ அனானி,
ReplyDeleteஆமாம்.. நீங்கள் சொல்வது தான் சரி. தவறான தகவலுக்கு மன்னிக்கவும். சிறிது confuse ஆகிவிட்டேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,இதுவரை நான் இந்த மதத்தை பற்றி அறிந்தது கிடையாது அண்ணே.கழுகு உண்ணும் பிணங்களின் படங்களை பார்த்ததும் ஏதோ ஒரு தளத்தில் பிணத்தை கழுகுக்கு இறையாக்கும் விசித்திர மனிதர்கள்னு படித்ததாக நியாபகம் அதில்கூட இது மதச்சடங்காக குறிப்பிட்டதாக தெரியவி(பல மாதங்களுக்கு முன் படித்தது நியாபகமி)ல்லை.சவுராஸ்ட்ரா - சொராஸ்டரா இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே பதமா?
ReplyDeleteநெருப்பை வணங்குவதை விட்டு விட்டு,படைத்த இறைவனை வணங்கினால் சொர்க்கம் கிடைக்கும்,இல்லையேல் இவர்கள் இன்று வணங்கும் நெருப்பே அவர்களை நாளை எரிக்கும்(நரகத்தில்).
ReplyDelete//சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி.//
தீர்க்கதரிசி என்றால் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே,எனவே இவரை தீர்க்கதரிசி என எழுதாதீர்கள்.
@சகோதரர்அர அல
ReplyDelete//தீர்க்கதரிசி என்றால் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே,எனவே இவரை தீர்க்கதரிசி என எழுதாதீர்கள்.//
தீர்க்கதரிசி என்பதை இறைத்தூதர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வில்லை சகோ
எதாவது ஒரு கொள்கை அடிப்படையில் ஒன்று திரட்டுபவர்களை குறிக்கும் சொல் அது தவ்றான கொள்கையாகவும் இருக்கலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteவாசித்ததும்
உண்மையில் பிரம்மித்து விட்டேன்
இதுவரை அறியாத தகவல்
அறிய தகவல்
அறிய தந்தமைக்கு நன்றிகள் சார்