அண்மையில் மூன்று மாத பெண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை எனும் செய்தியை படித்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பெண் சிசுக் கொலையை பற்றி பதிவு எழுதலாம் என்று அதற்கான கூடுதல் தகவல்களுக்காக கூகுளில் போய் தேடிப் பார்த்தால் இதுபோன்ற பாதகக் கொலைகள் இறைந்து கிடக்கின்றன.உதராணத்திற்க்கு ஒரு சில தேடல் முடிவுகளை தருகிறேன் பாருங்கள்.
1.பிறந்து 2 நாளேயான பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதந்தை கைது. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10, 2012, 13:48 [IST]. போபால்: மத்திய ...
2.2 நாட்களுக்கு முன்னர் – சங்கராபுரம் அரசு பஸ்சில் பிணம்: பெண்-குழந்தையை கொன்றகொலையாளி கைரேகை சிக்கியது; தனிப்படை போலீஸ் தீவிரம்.
3.பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையைகிணற்றில் வீசி கொன்ற தந்தைஇரவில் தூங்க செல்வதற்கு முன்குழந்தையைஉடல் முழுவதும் ...
4. சங்குரூர்: பிறந்து 4 நாட்களே ஆனபெண் குழந்தையை கொன்றதந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து பஞ்சாப் கோர்ட் அதிரடி தீர்ப்பு ...
5.Search ஜோதிடரின் பேச்சைக்கேட்டு மாதபெண் குழந்தையை கொன்ற
6.1 மார்ச் 2012 – கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி தனக்குப் பிறந்த பச்சிளம்பெண் குழந்தையை கொன்றநிகிதா அகர்வால் என்னும் அப்பெண் இதுவரை ...
மேலேயுள்ளவைகள் குழந்தைகள் பிறந்த பிறகு கொன்றவைகளில் மீடியாக்களின் பார்வைக்கு வந்த ஒரு சில சம்பவங்கள் மட்டுமே இன்னும் எத்தனை குழந்தைகள் அன்றாடம் கொல்லப்படுகின்றனவோ? குழந்தையை பிறக்க விட்டாதானே என்பது போல் கருவிலேயே வைத்து கொல்லப் படுகின்ற சிசுக்கொலை,என்ற கருக்கலைப்பை பற்றிய புள்ளி விபரங்களை பார்த்தால் இன்னும் அதிர்ச்சியடைவீர்கள்.
உலக அளவில்ஆண்டுக்கு சுமார் 4.2 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 2.2 கோடி மட்டுமே பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகும். மற்றவை பதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஆகும். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்.நமது நாட்டில் ஆண்டுதோறும் 1.10 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் 80 இலட்சம் பெண் சிசுக்களின் மரணம் நிகழ்கிறது. இதுபோன்ற கருக்கலைப்பு பொதுவாக திருமணம் ஆகாத பெண்களின் விஷயத்தில்தான் செய்யப்படுகிறது என்பது கூடுதல் வேதனை.
பொதுவாக திரைமறைவாக நடைபெறும் கருக்கலைப்பில் அரைகுறை வைத்தியர்களும் அறிவோ அனுபவமோ இல்லாத செவிலியர்களும் ஈடுபாடுகிறார்கள். அவற்றில் வயிற்றில் வளரும் குழந்தை செத்து விடுவதுடன் தாயின் வாழ்வும் முடிந்து விடுகிறது. இது எத்தகைய கொடுமை?
இஸ்லாம் வருவதற்கு முன்பு இருந்த அன்றைய அறியாமை அரபு சமூகம் பிறந்த பெண் குழந்தைகளைஅற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கித்தது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்:
பார்க்க: 16:58 وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (குர்ஆன்: 16 58)
16:59 يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ ۚ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ۗ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (குர்ஆன் 16:59)

சரி இந்த சிசுக் கொலைகளுக்கு தீர்வுதான் என்ன?
பிரச்சனை சிக்கலானது அறிவுரை, உபதேசத்தினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.சரி தீர்வுஅடுத்த பதிவில் தொடரும்.