Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Monday, October 8, 2012

லேப்டாப் வைத்திருந்தால் பயங்கரவாதியா?

சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்ட செய்தி ஆகஸ்ட் 30 வியாழன் அன்று வெளிவந்தது. அதற்கு முந்தைய நாள் (புதன்) பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது இவர்களைக் கைது செய்தோம் என காவல்துறை கூறியது. ஆனால், சில நாட்களுக்கு முன்பே சாதாரண உடையில் வந்த சிலர் இவர்களை அழைத்துச் சென்றனர் எனவும், இது குறித்துப் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்தே கைது விவரத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர் எனவும்  அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் கைதுக்குப் பிறகு, ஊடகங்கள் வழக்கம் போன்று உச்சக்கட்ட கற்பனைக் கதைகள் பலவற்றை புனைந்து வெளியிட்டன. ஹூப்ளி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து மேலும் சிலர் கைது செய்யபட்டனர்.
                                தினமலர் என்கிற தினமலத்தின் உச்சக்கட்ட அவதூறு

கைது செய்யப்பட்டவர்களில் அஹ்மத் மிர்சா என்பவர் நாட்டின் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான டி.ஆர். டி.ஒ.வின் பொறியாளர் ஆவார். முதீஉர் ரஹ்மான் சித்தீகி, டெக்கன் ஹெரால்டு ஆங்கில நாளிதழின் கட்டுரையாளர் ஆவார். டாகடர் நயீம் சித்திகீ நாட்டின் முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனமான திலி ‘எய்ம்ஸ்’ நிறுவனத்தின் முதுகலை மாணவர் ஆவார். கைதான மற்றவர்களும் இதே போன்று உயர்கல்வி பயின்று வரக்கூடிய மாணவர்கள்.

கர்நாடகாவின் முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்யும் நோக்கோடு லஷ்கரே தய்யிபா, ஹுஜி ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இவர்கள் சதித்திட்டம் தீட்டி வந்தனர் என காவல்துறை கூறுகிறது. இதற்கு ‘ஆதாரமாக’ சில பொருள்களையும் அது கைப்பற்றியதாம்!?.மடிக்கணினி 2, சிம் கார்டுகள் 8 , புத்தகங்கள் 7, ஈரான், இந்தியா, சீனா ஆகியவற்றின் வரைபடங்கள், இருசக்கர வாகனம் 1, சில ஆயிரம் ரூபாய்கள், 1 கத்தி. முஸ்லிம் மாணவர்களைக் கைது செய்ய இந்தப் ‘பயங்கர’ ஆயுதங்கள் போதாதா?

பெங்களூர் போன்ற தகவல் தொழில்நுட்ப நகரத்தில் மடிக்கணினி இல்லாத மாணவர்கள் உண்டா? கூகுள் தேடுதலில் இந்தியா, சீனா என டைப் செய்தால் அந்நாடுகளின் எல்லா வகையான வரைபடங்களும் தகவல்களும் எளிதாக, யாருக்கும் கிடைக்கும் என்றிருக்கையில், இவற்றைத் தீவிரவாதக் கருவிகளாகச் சித்தரிக்கும் அறிவீனம் காவல்துறைக்கு இருக்கலாம். ஆனால், விவரம் தெரிந்தவர்கள் என நாம் கருதுகின்ற தேசிய நாளிதழ்கள் கூட அவ்வாறு கூறுவது அநாகரிகமானது.

சேரிகளிலும், காலனிகளிலும் வசித்துவந்த ஏழை முஸ்லிம் இளைஞர்கள் தாம் இதுவரை கைது செய்யப்பட்டு வந்தனர். அப்போதெல்லாம், இவர்களுக்குக் கல்வியறிவு இல்லாததால் ‘சமூக விரோத’ சக்திகளின் வலையில்  விழுந்துவிட்டனர் எனும் கருத்துருவாக்கத்தை அறிவுஜீவிகளும் ஊடகங்களும் ஏற்படுத்தினர். இன்று கதை மாறிவிட்டது. இந்த சமூகத்திலிருந்து தன்னம்பிக்கையும், கல்வியறிவும் பெற்ற புதிய தலைமுறை உயர்ந்து வருகின்றது. ஆனால் அனைவரும் பயன்படுத்துகின்ற மடிக்கணினியையும் கைப்பேசிகளையும் அவர்கள் பயன்படுத்தினால் அவை தேசவிரோத, தீவிரவாதச் செயல் என இப்போது சித்தரிக்கப்படுகிறது.

பின்குறிப்பு:
" நாங்கள் மடிக்கணினியையும் கைப்பேசியையும் புத்தகங்களையும் வைத்திருக்கும் பதிவர்கள் எங்களையும் சிறையில் அடையுங்கள்”
மடிக்கணினி வைத்திருக்கும் எனது புகைப்படம்

எனது நூலகத்தின் ஒரு பகுதி புத்தகங்களும் இருக்கு

கைது செய்தபிறகு தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள் என்று டேபிளில் அடுக்கி வைக்கும் சிரமமும் உங்களுக்கு இல்லை நானே அடுக்கி வைத்திருக்கிறேன் டேக்கிட்.

வாங்க சார் வந்து புடிச்சு உள்ளே போடுங்க சார்.