Monday, October 15, 2012

ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்

முன்குறிப்பு: ஹாலிவுட்டை பற்றி பதிவு எழுதாதவர் எல்லாம் ஒரு பதிவரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.

ஓடு, ஓடு, மிருகம் வேற துரத்துது மழை வேற பேயிது காரு வேற கிடைக்கலே ஓடு, ஒடு. கொட்டாம்பட்டி சினிமா கொட்டாய் வரை அமெரிக்கத் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜுராஸிக் பார்க்” ‘தி லாஸ்ட் வேர்ல்ட். திரைப்படத்தில் வரும் அருமையான வசன வரிகள்.

உங்களுக்கு தேவை  திறமையான பொறியியலாளர், யாரும் நினைத்திராத உருவங்களை வடிக்கும் கணிப்பொறி வல்லுநர், இந்த ஊடகத்தைப் புரிந்து கொண்டு திரைக்கதை வார்க்கும் படைப்பாளி - இது போதும், உலகம் உங்கள் வசப்படும்; ஆயிரம் கோடி டாலர் உங்கள் கூரையைத் துளைத்துக் கொண்டு கொட்டும்” என்கிறார், ஹாலிவுட் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்’ செய்து கொடுக்கும் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் அதிபர்.
நீல வானத்தை பார்த்து விட்டும், அடர்ந்த கானகத்தின் இருளில் பயந்தவாறும் நடித்து விட்டு, நடிகர்கள் போய் விடுவார்கள். வானத்தில் செவ்வாய்க் கிரகம் வெடிப்பதையும் காட்டிற்குள் டயனோசர் விழிகளை உருட்டுவதையும் கணிப்பொறி மூலம் உருவாக்குகின்ற டிஜிட்டல் - ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் வல்லுநர்கள்தான் இன்றைய ஹாலிவுட்டின் நட்சத்திரங்கள்- நடிகர்களல்லர்.

ஹாலிவுட் ஃபார்முலா


காதல், குடும்பம், கிராமம், பழிக்குபழி, சகோதர பாசம், தேசபக்தி போன்ற 9 ஃபார்முலாக் கதைகள் மட்டும் தமிழ் திரைப்படங்களில் உலவுவதாகச் சொல்வார்கள். ஹாலிவுட் படங்களும் கிட்டதட்ட அப்படித்தான்.நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் வில்லனை வீழ்த்தும் கெளபாய், பெல்ட்டில் தொலைபேசி - பேனாவில் துப்பாக்கி - முதல் பார்வையிலேயே எந்தப் பெண்ணையும் படுக்கையில் வீழ்த்தும் ஜேம்ஸ்பாண்ட், சிலந்தி மனிதன் - வெளவால் மனிதன் -சூப்பர் மேன் போன்ற சின்னபுள்ளையில் படித்த காமிக்ஸ் நாயகர்கள். மாஃபியா அல்லது தீவிரவாதியை வென்று அமெரிக்கா தர்மம் காக்கும் போலிஸ் - இவையெல்லாம் ‘ஆக்‌ஷன்’ படங்கள்.

சுடுகாட்டு,கல்லறைப் பேய், டி.வி. பிசாசு ஷைத்தான்,உருகும் மனிதன், டிராகுலா, வண்டாக, கொசுவாக, சிங்கமாக - கழுதையாக மாறும் மனிதன்,கொடூரக் கொலையாளிகள் போன்றவை திகில் படங்கள்.இயந்திர மனிதன், வேற்றுக் கிரக வாசிகளுடன் நட்பு - போர் டயனசோர்,எலியன்ஸ், எந்த காலத்திலும் சென்று வரும் தற்கால மனிதன், விண்வெளிச் சாகசங்கள் - போன்றவை ‘அறிவியல்’ படங்கள்! மீதி - குடும்பம், காதல், நகைச்சுவை, பாலுணர்வு போன்றவை ‘செண்டிமெண்ட்’ படங்கள், இறுதியாக மேற்கண்ட அனைத்திலும்  இழையோடியோ அல்லது தனிச்சிறப்பாகவோ எடுக்கப்படும் கம்யூனிச எதிர்ப்புப் படங்கள், வெளிப்படையாக வெறித்தனமாக எடுக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படங்கள் இவைதான் ஹாலிவுட் ஃபார்முலா.

தொழில்நுட்பமே கலையாக!


அமெரிக்காவின் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மாளிகை’ என்றழைக்கப்படும் ‘இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மேஜிக்’ எனும் நிறுவனத்தின் அதிபர் ஜார்ஜ் லூகாஸ். 77 லிருந்து இவரால் வெளியிடப்பட்ட ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசைப் படங்கள் ஹாலிவுட்டிற்குப் புதிய திசை வழியைக் காட்டின. இதன் பின்னர் வந்த ஸ்டார் ட்ரெக், யங் ஷெர்லாக் ஹோம்ஸ், தி அபீஸ் போன்ற படங்களில் முதன்முறையாகக் கணிப்பொறி கிராஃபிக்ஸ் முப்பரிமாண  டிஜிட்டல் முறை மூலம் காட்சிகளும், பாத்திரங்களும் உருப்பெற்றன. படத்தொகுப்பில் புதுமையையும், ஒலி - ஒளிச் சேர்க்கையில் துல்லியத்தையும் - வேகத்தையும் கொண்டு வந்தது அவிட், லைட் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் ‘டிஜிட்டல் எடிட்டிங்’ என்ற புதிய முறை. இதற்காகவே திரையரங்கில் பொருத்தப்பட்ட புதிய ஒலி உபகரணங்கள் பார்வையாளர்களை மயங்க வைத்தன.


‘ ஜாஸ் வரிசைப் படங்களில் மனிதர்களை வேட்டையாடும் சுறாமீனைப் படைத்தபோது ஸ்பீல்பெர்க்கின் வயது இருபத்தேழு. 23 வருடங்கள் கழித்து அவரது படங்களில் வேட்டையாடும் டயனசோர்தான் கடந்த இடைக்காலத்தில் கலைத்துறையில் அவர் கண்ட பரிணாம வளர்ச்சி.

கற்பனை உருவங்கள், இயற்கை, கனவுகளுக்குப் பொருத்தமான குழந்தைகள் ஸ்பீக்பெர்க்கின் படங்களில் தவறாமல் இடம்பெறுவர். ‘முன்னேறிய மேற்குலக நாகரிகத்தின்’ பார்வையில் மூன்றாம் உலகம் காட்டு வாசிகளாய் இருப்பதால் விரக்தியுற்ற தனது அமெரிக்கக் குழந்தைகளுடன் நட்பு கொள்ளும் தகுதியை வேற்றுக் கிரக வாசிகளுக்கு அளிக்கிறார் போலும் ஸ்பீல்பெர்க்! டயனசோரையும், வேற்றுக் கிரக வில்லன்களையும் வீழ்த்திக் காட்டும் அமெரிக்காவை உலகின் விடிவெள்ளியாகவும், லட்சிய நாடாகவும் மூன்றாம் உலகிற்குக் காட்டுகின்றனர் ஸ்பீல்பெர்க்கும், ஏனைய ஹாலிவுட் இயக்குநர்களும்.

நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நல்லது வெல்ல வேண்டும் என்ற அவா, திரையரங்கில் அமெரிக்க ஹீரோக்கள் வில்லனை வீழ்த்தும்போது கைதட்டுகின்றது. இதில் நல்லது எது, கெட்டது எது என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிப்பார்கள். ஆமெரிக்கா நன்மையின் பிரதிநிதிகளாக ஆர்னால்டு,ஹாரிசன் ஃபோர்டு, புரூஸ் வில்லிஸ், சில்வஸ்டர் ஸ்டல்லான், மெப்கிப்ஸன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்.

ஒரு படத்தில் எத்தனை நபர்களைக் கொல்கிறார்கள் என்பதை வைத்து இவர்களின் நட்சத்திர அந்தஸ்து உருவாகிறது. நாயகனின் போராட்டத்திற்கு நீங்கள் தார்மீக ஆதரவளிக்க, கொடூரமாக ஒரு கொலை இருக்கும். கதையின் வேகத்தையும் கூட்ட அதிவிரைவுத் துரத்தல் காட்சியும் இடம்பெறும். இறுதியில் பெரும் குண்டுவெடித்து, கட்டிடங்கள் தகர்த்து அமெரிக்க நன்மை வெற்றி பெற்றதும் மந்திரத்தில் கட்டுண்ட பார்வையாளர்கள் வெறும் வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

கனவும் நனவும்


கார் சவாரி கூடக் கைகூடாதவர்களை விண்கலத்தில் ஏற்றி வெளியை ஊடுருவி வலம் வரும் வண்ணமயமான விண்வெளி அனுபவம் தாலாட்டுகின்றது. படம் முடிந்து வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் பன்னும்போது அல்லது பேருந்து நடத்துநரிடம் காசை நீட்டும் போதுதான் பெட்ரோல் விலை உயர்வும், கட்டண உயர்வும் நினைவுக்கு வருகிறது. அழகான மாந்தார்கள், எழிலான இருப்பிடம், உல்லாச வாழ்க்கை என்று ஹாலிவுட் சித்தரிக்கும் சராசரி அமெரிக்க வாழ்க்கையானது மூக்கு வழியும் குழந்தைகளையும், சமையல் பாத்திரம் கழுவும் பெண்களையும் வியர்வையில் நாறும் ஆண்களையும் கொண்ட நமது நரக பூமியை நினைத்து வெட்கப்பட வைக்கிறது; வெறுக்க வைக்கிறது. கணிப்பொறியில் உயிர்பெற்றுவரும் விதவிதமான கொடூர வில்லன்கள் ஏற்கனவே விதியை நொந்து வாழும் நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தன்னிரக்கம் எனும் புதிய பரிமாணத்தை சேர்க்கின்றனர்.


அவர்களுடைய நாகரீகத்தின் சின்னங்களான பெப்சியும், கோக்கும் நம் நாட்டின் பெட்டிக்கடை வரை வந்து மதுரை மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா கம்பெனியையும், காளிமார்க் போன்றவற்றையும் அடித்து நொருக்கி விட்டது. இளைய தலைமுறை பாப் கலாச்சாரத்தின் எம்.டி.வியும், அமெரிக்கக் கொள்கை பரப்பும் சி.என். என் -னும் ஓரளவு வீடுகளில் குதித்து விட்டன. தினசரி 4 காட்சிகள் மூலம் நிகழ்த்தப்படும் திரையரங்க அமெரிக்கக் கனவு, தனது பிரம்மாண்டத்தின் மூலம் மெல்ல மெல்ல மூன்றாம் உலக மூளையில் ஊடுருவுகிறது.

அதற்காகத்தான் தொழில் நுட்பம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் ஒலி.ஹெச்டீ தரம். நம்மிடம் இருக்கும் சமூகத் தன்மையை உறிஞ்சி எல்லையற்று நுகரும் இயந்திரமாக மாற்றி, அதையே ரசனையாக, பண்பாக, வெறியாக மாற்றுவதற்குத்தான் அத்தனை முயற்சிகளும். 

23 comments:

  1. கட்டுரை அருமை! சகோ.

    //படம் முடிந்து வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் பன்னும்போது அல்லது பேருந்து நடத்துநரிடம் காசை நீட்டும் போதுதான் பெட்ரோல் விலை உயர்வும், கட்டண உயர்வும் நினைவுக்கு வருகிறது.//

    உண்மைதான்!.

    ReplyDelete
    Replies
    1. சொந்த அனுபவத்தை பற்றி எழுதும் போது அது உண்மையாக தானே இருக்கும்

      Delete
  2. வித்தியாசமான பதிவு உங்களிடமிருந்து....அருமையான அலசல்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்ந்த ஆதாரவுக்கும் நன்றி சகோ

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நல்ல பதிவு சகோரே.

    அபாண்டத்ததை பிரம்மாண்டமாக கட்டுவதுதான் ஹாலிவுட்டின் வேலை

    //இதில் நல்லது எது, கெட்டது எது என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிப்பார்கள்.//
    //இளைய தலைமுறை பாப் கலாச்சாரத்தின் எம்.டி.வியும், அமெரிக்கக் கொள்கை பரப்பும் சி.என். என் -னும் ஓரளவு வீடுகளில் குதித்து விட்டன.//
    உண்மைத்தான் சகோ. இப்படி ஒவ்வொன்றாக மாறுவதினால் இன்னும் சிறிது காலத்தில் நம் நாட்டிலும் கலாச்சாரத் சீர்கேடு வரும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

      //இப்படி ஒவ்வொன்றாக மாறுவதினால் இன்னும் சிறிது காலத்தில் நம் நாட்டிலும் கலாச்சாரத் சீர்கேடு வரும் ///

      வரும் என்ன வந்துருச்சு தண்ணீரில் மூக்கு மட்டும் தெரிய மூழ்கிக் கொண்டிருக்கிறோம்

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் உண்மைப் படுத்தியதற்க்கும் நன்றி சகோ

      Delete
  5. கொடூரமாக ஒரு கொலை இருக்கும். கதையின் வேகத்தையும் கூட்ட அதிவிரைவுத் துரத்தல் காட்சியும் இடம்பெறும். இறுதியில் பெரும் குண்டுவெடித்து, கட்டிடங்கள் தகர்த்து அமெரிக்க நன்மை வெற்றி பெற்றதும் மந்திரத்தில் கட்டுண்ட பார்வையாளர்கள் வெறும் வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

    உண்மைதாங்க யதார்த்தமான அலசல்.

    ReplyDelete
    Replies
    1. //உண்மைதாங்க யதார்த்தமான அலசல்.///

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மச்சான்.. எதார்த்தமான அலசல்

    ஹாலிவுட்
    பிரம்மாண்டமான பொய் மட்டுமல்ல

    பொய்களிலே மிக பிரம்மாண்டமானதும் கூட!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் மச்சான்

      ///பொய்களிலே மிக பிரம்மாண்டமானதும் கூட!//

      தமிழில் அண்ட புளுகன் ஆகாச புளுகன் என்பார்கள் இவிய்ங்கே ஆகாச புளுகன்கள்

      Delete
  7. தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற விஜயகாந்த்தும் ஏலியன்களிடமிருந்து உலகத்தை காப்பாற்ற ஹாலிவுட் ஹீரோக்களும் இருக்கிறவரை நமக்கு கவலையில்லை. ஹா...ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா செம செம

      ஆமா விசயகாந்தும் ஹாலிவுட் ஹீரோக்களும் இருக்கும் வரை டோன் டொரி பீ ஹேப்பி
      நிம்மதியாக தூங்குவதே இவுக நாளேதேன்

      Delete
  8. நல்ல பதிவு....நல்ல அலசல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete
  9. ஹாலிவுட் பிரம்மாண்டங்கள் முந்தைய விட்டலாச்சார்யா படங்கள் போல்தான்.ஆனால் தொழில் நுட்பம்,உண்மைக்கு மிக அருகிலான பிம்ப காமிரா,ஒலி,ஒளி என யதார்த்தத்துக்கு பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

    பெப்சி குடிப்பதாலும் திரைப்படத்தாலும் கலாச்சாரம் மாறி விடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை!இன்னும் சொல்லப்போனால் பிரியாணி சாப்பிட்டால் செவன் அப் நல்ல பானம் என்று யாரோ ஒரு சகோ சொன்னதா நினைவு:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் நன்றி சகோதரரே

      Delete
  10. சென்னையில் என் விட்டுக்கு எதிரில் குடியிருக்கும் சினிமா ஸ்டில்
    போட்டோ கிராபருக்கு அவ்வபோது கிடைக்கும் புது பட பீரி பாஸ்,
    பீரிவியு ஷோக்களுக்கு தன் வீட்டினரை நல்ல படங்களுக்கு மட்டும்
    அழைத்து செல்வார்,ஒரு மாதிரியான படங்களின் பீரி பாஸ்களை & அழைப்பிதழ்களை
    தெருவில் உள்ளவர்களிடம் கொடுத்துவிடுவார் ........
    இதிலிருந்து நமக்கு என்ன தெரிது பாய் ...!!!!!

    ReplyDelete

  11. வணக்கம்

    வலையுகப் பக்கம்! கலையுகப் பக்கம்!
    நிலைபெற வாழ்துமென் நெஞ்சு

    ReplyDelete
  12. வணக்கம்

    வலையுகப் பக்கம்! கலையுகப் பக்கம்!
    நிலைபெற வாழ்துமென் நெஞ்சு

    ReplyDelete
  13. இல்லாததைச்சொல்லி பணம் பண்ணுவதில் கெட்டிக்காரர்களாக அவர்கள்/

    ReplyDelete
  14. மருந்தியல் துறை ஆய்வு மக்களுக்கு நன்மை தரும்.மனோநிலை உயர்வடைய ஆய்வின் கட்டுரைகளும் பயன் தரும் பலகலை பெற்று பல்சுவை தரும் தங்களின் மேன்மை பெருமையை சேர்க்கும்

    ReplyDelete