பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்
அது பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்.
தனக்கு வேண்டிய பொருள்களைத் தள்ளுவண்டியில் நிறைத்துக் கொண்டு, காசாளரிடம் கணக்கைப் பார்த்துப் பணத்தைச் செலுத்துவதற்காக நின்ற வாடிக்கையாளர்களுள் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்த முஸ்லிம் பெண்மணியொருவர்!
பிரான்சில் ‘ஹிஜாபு’க்கு இருக்கும் எதிர்ப்பு பற்றித் தெரியுமல்லவா?
சில நிமிடங்களில், இந்த முஸ்லிம் பெண்ணின் முறை வந்தது. தான் வாங்கிய பொருள்களை ஒவ்வொன்றாகக் காசாளர் (கேஷியர்) முன்னால் எடுத்து வைக்கத் தொடங்கினார் இந்தப் பெண்மணி.
அந்தக் கவுண்டரின் காசாளரும் முஸ்லிம் பெண்தான்! ஓர் அரபு நாட்டிலிருந்து வந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்று வாழ்பவர்! தன் முன்னால் நிற்கும் வாடிக்கையாளர் முழுமையாக ‘ஹிஜாப்’ அணிந்து ( ‘நிகாப்’ எனும் முகத்திரையுடன்) இருப்பதைப் பொறுக்க முடியாத காசாளப் பெண், அவரை முறைத்துப் பார்த்தாள்.
“ இந்த நாட்டில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்! எல்லாம் உங்களைப் போன்றவர்களால்தான்! ‘ஹிஜாப்’, ‘நிகாப்’ எனும் தீவிரவாத அடையாளங்கள்! வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வேலை செய்யும் நாம், சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வந்துள்ளோம்; மாறாக, நமது மார்க்கத்தை அடையாளம் போட்டுக் காட்டவல்ல! நமது வரலாற்றை இங்கு வெளிச்சம் போட்டுக் காட்ட அல்ல! நீ உன் மார்க்கத்தை நடைமுறைப்படுத்த நாடினால், உனது அரபு நாட்டுக்குப் போக வேண்டியது தானே!? அங்கே போய், நீ விரும்பியபடி நடந்துகொள்!” பொரிந்து தள்ளினார், பொறுமையிழந்த அந்தக் காசாளப் பெண்.
இத்தகைய ஏச்சு ஏவுகணையைக் கேட்ட அந்த முஸ்லிம் பெண்மணி, தான் எடுத்து வைத்துக்கொண்டிருந்த பொருள்களை நிறுத்தினார். காசாளரைக் கண்களால் சந்தித்தார்! ஒன்றும் மறுமொழி பேசவில்லை! அமைதியாகத் தனது ‘நிகாபை’ விலக்கினார்.
அரபு நாட்டுக் காசாளப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனாள்!
தனக்கு முன்னால் நின்ற பெண்ணோ, பிரெஞ்சுக்காரி! இதை, அப்பெண்னின் செம்பட்டை முடியும் நீலக் கண்களும் வெளிச்சம் போட்டுக் காட்டின!
அடுத்து அமைதியாகச் சொன்னாள் அந்த முஸ்லிம் பெண்மணி:
“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”
அசடு வழியத் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த காசாளப் பெண்ணைப் பார்த்து அமைதியாகக் கூறினார் அந்தப் பேறு பெற்ற இஸ்லாமிய பெண்மணி:
“ சரி போகட்டும். இப்போது என் கணக்கைப் பார்!”
பிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார். பார்க்க வீடியோ.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.
இந்த பேறு பெற்ற பெண்மணி அழகாக சொன்னார் என்னை யாரும் மிரட்டி இஸ்லாத்திற்கு மாற்றவில்லை... மாற்றவும் முடியாது.
ஸலாம்
ReplyDeleteஎதயுமே ஆராய்ந்து அதை படித்து செயல்படுபவர்களுக்கு தான் அதனுடைய அருமை தெரியும்
சிறந்த பதிவு ...
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Delete///எதயுமே ஆராய்ந்து அதை படித்து செயல்படுபவர்களுக்கு தான் அதனுடைய அருமை தெரியும் சிறந்த பதிவு ...///
உண்மை உண்மை சகோதரரே
“ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!”
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள்..,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமாஷா அல்லாஹ், மிக நெகிழ்ச்சியான பதிவு.
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Deleteஉங்களின் வருகைக்கு நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரர் ஹைதர் அலி,
நிழலின் அருமை வெயிலில் நின்று விட்டு வந்தால் தான் தெரியும் என்பார்கள். அந்த பிரெஞ்ச் முஸ்லிம் சகோதரியின் வார்த்தைகள் சுருக்கென குத்தியிருக்கும் அந்த பிறவி முஸ்லிம் பெண்மணிக்கு. இஸ்லாத்தை ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டவர்கள் அல்லவா அவர்கள். எனவே அதன் பெருமையும் வலிமையையும் உணர்ந்து வந்திருப்பார்கள். ஆனால் பிறவி முஸ்லிம்களில் பலருக்கும் இத்தகைய ஆய்வு குணமே இல்லை. ஆகையால் இஸ்லாத்தின் அருமை பெருமைகளும் தெரியவில்லை.
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Deleteஅறிந்து வருவது தான் அறிவு
விரிவான கருத்துக்கு நன்றி சகோ
சலாம் சகோ.ஹைதர்,
ReplyDelete// “ நான் பிரெஞ்சுக்காரி. உன்னை போல் அரபு நாட்டவள் இல்லை! இது எனது நாடு! இஸ்லாம் எனது மார்க்கம்! இஸ்லாத்தில் பிறந்த நீங்களெல்லாம் மார்க்கத்தை விற்றுவிட்டீர்கள், உலகை தேடுவதற்காக! நாங்கள் அந்த உண்மை மார்க்கத்தைத் தேடி, விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்!” //-----'நொச்'..!
//எதயுமே ஆராய்ந்து அதை படித்து செயல்படுபவர்களுக்கு தான் அதனுடைய அருமை தெரியும்//---அஃதே..!
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Deleteவழக்கமான நெத்தியடி பின்னூட்டத்திற்கு நன்றி
நடந்த நிகழ்வை சுவைபட எழுதி மன நிறைவு தந்து ஆர்வமுடன் பலமுறை படிக்க வைத்து சிந்திக்க வைத்தமைக்கு வாழ்த்துகள். இஸ்லாமியனாக பிறந்து வாழ்பவனைவிட படித்து அறிந்து இஸ்லாத்தின் அருமை அறிந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் வாழும் இஸ்லாமிய பற்று சிறப்பாகவே உள்ளது. அவர்களை சிதைக்க வைக்கும் முயற்சியில் இஸ்லாமியர்களே ஈடுபடுவது மிகவும் வருத்த வைக்கின்றது.
ReplyDelete///நடந்த நிகழ்வை சுவைபட எழுதி மன நிறைவு தந்து ஆர்வமுடன் பலமுறை படிக்க வைத்து சிந்திக்க வைத்தமைக்கு வாழ்த்துகள்.///
Deleteஜஸாக்கல்லாஹ் கைர சகோதரரே
///அவர்களை சிதைக்க வைக்கும் முயற்சியில் இஸ்லாமியர்களே ஈடுபடுவது மிகவும் வருத்த வைக்கின்றது.///
தமிழகத்தில் கூட இந்நிலைதான் வருந்த வைக்கிறது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteநெகிழ்வான பதிவு
மாஷா அல்லாஹ்
அப்படியே புது டெம்லேட்., அள்ளுது போங்க
கலக்குங்க., மச்சான்
வஅலைக்கும் வஸ்ஸலாம் மச்சான்
Delete///மாஷா அல்லாஹ்
அப்படியே புது டெம்லேட்., அள்ளுது போங்க
கலக்குங்க., மச்சான்///
மறுபடிக்கும் மாற்றி இருக்கிறேன் பாருங்கள்
ச்சூ....ச்சூ....
ReplyDeleteவலையிலே நிறைய மீன் மாட்டி இருக்காப்ல இருக்கு....
எங்கே பார்த்தாலும் ஒரே காக்காவா சுத்துது..!
சைட் பாருக்கு வெளியே பறக்க சொல்லுங்க அந்த காக்காக்களை..!
அங்கே உள்ளதை எல்லாம் படிக்க முடியலை..!
ஹா ஹா மாத்தியாச்சு மாத்தியாச்சு இது நல்லா இருக்கா?
Deleteஅருமையான பதிவு. மீண்டும் மீண்டும் படித்து படித்து களித்தேன், மகிழ்ந்தேன். இப்படியான மகிழ்வை அடிக்கடி கொடுங்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி சகோ
Deleteதங்கள் வருகைக்கு நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
ReplyDeleteமாஷா அல்லாஹ்
வஅலைக்கும் வஸ்ஸலாம்
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் :)
ReplyDeleteமாஷா அல்லாஹ், அந்த இஸ்லாமிய பெண்ணை போன்ற மன உறுதியை வல்ல ஏகன் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கட்டும் - ஆமின்.
வ அலைக்கும் வஸ்ஸலாம்
Deleteவருகைக்கும் துஆவுக்கும் நன்றி சகோ
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை வலையில் பார்க்கிறேன்
الحمد لله
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்).....
ReplyDeleteஇஸ்லாத்திற்க்காக உயிரையும் துச்சமாக மதிக்கும் இது போன்ற பெண்களுக்கு இறை அருள் உன்டாகட்டும்