புது தில்லி:தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத் ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
1996 டிசம்பர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அடங்கும்.இந்த இருபது சம்பவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.
அமீர் 14 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.
அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.
அமீர் தனது வாய் பேசமுடியா தாயாருடன் |
தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போய்விட்டது.
18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.
14 வருட அநியாயச் சிறைவாச வேதனையை தன் முகத்தில் புதைத்து, வெற்றிகரமாக மறைத்து மலர்ந்த முகத்துடன், புன்சிரிப்புடன் ஆமிர் தனது திருமணத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.
பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய், இன்னொரு முக்கிய மனித உரிமைப் போராளியான ஷப்னம் ஹாஷ்மி, பத்திரிகையாளர் அஸீஸ் பர்னீ, வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, அரசியல்வாதிகள் ராம் விலாஸ் பாஸ்வான், முஹம்மத் அதீப் ஆகிய பிரபலங்களுடன், ஆமிரின் உறவினர்களும், நண்பர்களும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
மொத்த சமுதாயமே உதறித் தள்ளிய வேளையில் மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி அவரை அரவணைத்து தன் டெல்லி அலுவலகத்தில் வேலை கொடுத்தார். அமீரின் திருமணத்தில் கலந்துக் கொண்டு மகிழ்வித்த அவரையும், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக வஞ்சிக்கப்பட்டு இப்போது வாழ்வை தொடங்கியிருக்கின்ற அமீரை வாழ்த்துவோம் வாருங்கள்.
இனியாவது அமீரின் வாழ்வு நல்ல விதமாக அமைய வேண்டும்...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅன்பின் சகோதரர் ஹைதர் அலி பாய்,
வெறுமனே விசாரணை என்ற பெயரில் குற்றபத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல் ஆளும் அதிகார வர்க்கம் முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை குதறி எடுக்கிறது. தீவிரவாதத்தை வெறுக்கும் இளைஞர்கள் கூட நாளடைவில் அதை நோக்கி பயணிக்க வைக்க இத்தகைய உத்திகளை மத்திய உளவுத்துறையில் இருக்கும் சங்பரிவார கும்பல்கள் பயன்படுத்துகின்றன. மகாராஷ்டிரா முன்னாள் ஐ.ஜி.முஸ்ரிப் எழுதிய "ஹேமந்த் கர்கரேயை கொன்றது யார்" என்ற புத்தகத்தில் IB யின் இந்த அசிங்க முகத்தை முன்னாள் காவல்துறை அதிகாரி வெளிப்படுத்தியிருப்பார்.
அப்படி பழிவாங்கப்பட்ட ஒரு இளைஞர் தான் இந்த அமீர். இவரை குறித்து அதிகாரவர்க்கம் எடுத்த வாந்தியை பக்கம் பக்கமாக எழுதி தள்ளிய அச்சு ஊடகங்கள், இவரை பலவேறு கோணத்தில் அன்றைய தினம் கேமரா எடுத்த தொலைகாட்சி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டதா? (உங்கள் பதிவை படித்த பின்னர் தான் எனக்கு இவரை பற்றி தெரியும்). ஆனால் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் குறித்த தவறான செய்திகளை வெளியிட்டமைக்கு ஊடகங்கள், அறிவுஜீவிகள் எல்லோரும் வருத்தம் தெரிவித்தனர். ஆனால் அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை பற்றிய தகவல்கள் மட்டும் ஏன் வரவில்லை? இது தான் இன்றைய அவல நிலை. இங்கே இரட்டை நீதி என்று சொன்னால் மறுத்து பேசியவர்களுக்கு இதோ இன்னுமொரு ஆதாரத்தை நீங்கள் எடுத்து கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு பின்னாலாவது அவருடைய வாழ்வு அமைதியாக இருக்கட்டும்.
ReplyDeleteஅவரது வாழ்வில் ஒளிவீச பிரார்த்திப்போம்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஅசத்தியம் ஒழிந்தே தீரும் பாய். அவர் புது வாழ்வு மிக இனிமையாய் அமைய நம்முடைய பிரார்த்தனைகள் என்றென்றும் அவருடன்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஆட்சியாளர்களின் அத்துமீறலால் இப்படி சிறைக்குள் கருகிக் கொண்டிருக்கும் மொட்டுக்கள் ஏராளம். இன்று புது வாழவு காணும் அமீர் அவர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்கிவைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் து ஆச்செய்வோம்.
ReplyDeleteallah arulpaalipaanaaka.....
ReplyDeleteஎந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளவில்லையோ அல்லாஹ்வும் அவர்களை மாற்றுவதில்லை, இப்படி எல்லாருமே ஆதங்கப்பட்டு பிரயோஜனம் இல்லை, என்ன முயற்சி செய்தோம் நாம், ஒட்டு மொத்த சமுதாயமே ஆர்பரித்து எழ வேண்டும் நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் புரிய வைக்கவேண்டும், அதிகார வர்க்கத்தின் அநீதியை எல்லோரும் ஓரணியில் நின்று எதிர்ப்போம், நாங்கள் இந்தியாவை வளப்படுத்த வந்தவர்கள், கூறு போடவந்த காவிகள் அல்ல நாங்கள் என்று ஓங்கி முழங்குவோம் இந்தியா முழுவதும், அதற்கு நமக்கு நல்ல இயக்கம் வேண்டும், கடந்த மாதம் இந்தியா முழுவதும் 'அப்பாவி இளைஞர்களை விடுதலை செய், ஆள் தூக்கி சட்டங்களை ரத்து செய்' என்று இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்தது ஒரு இயக்கம் அது கவனிக்க தக்கதும், பாராட்டத்தக்கதும் ஆகும்...
ReplyDelete