ஒரு பொய்யை தொடர்ந்து சொல் உண்மையாகிவிடும். கோயபல்ஸ்
ஒரு பொய்யை தினமும் சொல் உண்மையாகிவிடும். தினமணி,மாலைமலர்,தினப்பத்திரிக்கை
புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.இந்த சங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தீனதயாளன் மற்றும் சிவசங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தான் அத்வானி மதுரைக்கு வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்தார்களா என்றும் விசாரணை நடப்பதாக தகவல் வருகிறது.
இதே சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தினமனி,தினமலர், மாலைமலர் போன்ற ஊடகங்கள் சுறுசுறுப்பாகி கொட்டை எழுத்தில்
இஸ்லாமிய தீவிரவாதி கைது கூடங்குளம்
அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா?
என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டையே பயமுறுத்தி இருக்கும். இதை எதோ மிகைப்படுத்தி சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முந்தைய அவர்களின் நடைமுறை அதுதான்.சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்டபோது தினமலர் வெளியிட்ட புகைப்படம்
“அணு உலை மீது தாக்குதல் திட்டம் முறியடிப்பு” இப்படித்தான் செய்தி வந்தது.
புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்ட செய்தியை மிகவும் அமுக்கி வாசித்ததும் இல்லாமல் இந்த பயங்கரவாதியையும் முஸ்லிமாக அடையாளம் காட்ட வேண்டும் என்று இந்த ஊடக நரித்தனத்தோடு யானையை சோற்றில் மறைக்க நினைத்த சதியை பாருங்கள்.சங்கரை ஷாருக்கான் ஆக்கிய மாலைமலரும்,தினமணியும்.
மாலை மலர் - சங்கர் என்ற ஷாருக்கான் - கொஞ்சம் எடிட்டிங். இவன் அண்ட புளுகன் என்றால் ஆகாச புளுகன் தினமணியில் - ஷாருக்கான் என்பவன் கைது.முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் அசிங்கப் பட்டு போய் விடுகிறது. ஆனாலும் இவர்கள் தொடர்ச்சியாக ஒரே சமூகத்தை தீவிரவாதிகளாக்கி திட்டமிட்டு குறிவைத்து இயங்குகிறார்கள்.
மேலே உள்ளது தினந்தந்தி
உள்ளே சொல்வது... //வெடிகுண்டு போன்ற பொருளை//,
ஆனால்... தலைப்பில்.. அந்த "போன்ற" மட்டும் மிஸ்ஸிங்..!
மேலும் சில ஆங்கில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமாக வந்த செய்திகள் இந்த பத்திரிக்கைகளில் எங்குமே ஷாருக்கான் என்கிற பெயர் இடம் பெற வில்லை.
பார்க்க சுட்டிகள்:
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F316055%2Fone-more-held-planting-bomb.html&h=zAQFSknm3
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fzeenews.india.com%2Fnews%2Futs%2Fman-arrested-over-planting-of-bomb-like-object-in-puducherry_832031.html&h=WAQFuk0qW
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fnews.outlookindia.com%2Fitems.aspx%3Fartid%3D791089&h=JAQExa8e4
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Fwire-news%2Fone-more-held-for-planting-bomb-like-substancetrain_833253.html&h=7AQHUheXq



