திருட்டுகளில் மோசமான திருட்டு ஒருவரின் எழுத்துகளை திருடுவது அதிலும் உடலை வருத்தி பயிற்சி செய்து காட்டிய உழைப்பையும் திருடி இருக்கிறது மாலைமலர் என்கிற முன்னணி பத்திரிக்கை. எங்கு எடுத்தது என்று போடுவது அல்லது நன்றி போடுவது தானே எழுத்துலக ஒழுங்கு
பார்க்க ஸ்கிரின் ஷாட்
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.
திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது.
அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.
இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......
இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.
மேலேயுள்ள எழுத்துக்கள் அப்படியே நான் எழுதியது பார்க்க எனது பதிவு
http://www.valaiyugam.com/2011/02/2.html




