Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Friday, March 18, 2016

பயங்கரவாதத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை

இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமான டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி எழுதிய ‘பயங்கரவாதம் மற்றும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஃப்த்வா’ என்ற நூல் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் வெளியீட்டிற்காக டெல்லி வந்திருந்த டாக்டர் தாஹிரை Frontline ஆங்கில இதழுக்காக நேர்காணல் கண்டவர் அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா.

‘ஷெய்குல் இஸ்லாம்’ எனப் பிரபலமாக அறியப்படும் டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி, புகழ்பெற்ற இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமாவார். 1951இல் பாகிஸ்தானின் ஜாங் நகரில் பிறந்தார். மதினாவிலுள்ள பாரம்பரியமிக்க ‘மதரசா-அல்-வுலும்-அல்-ஷரிய்யா’வில் மார்க்கக் கல்வியை 12 வயதில் தொடங்கினார். அரபு செவ்வியல் மற்றும் அறிவியல் மரபுவழிக் கல்வியைத் தன் தந்தையிடமிருந்தும் மார்க்க அறிஞர்களிடமிருந்தும் பெற்றார்.

 பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (லாகூர், பாகிஸ்தான்) ஆனர்ஸ் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறிய டாக்டர் தாஹிர் இஸ்லாமியக் கல்வியியலில் தனிச்சிறப்புடன் முதுகலைப் பட்டமும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் இஸ்லாமியச் சட்டவியல் விரிவுரையாளராகவும் இஸ்லாமியச் சட்டமியற்றல் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 
இஸ்லாம், இறையியல், சூஃபியிசம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் தாஹிரின் நூல்கள் நானூற்றுக்கும் அதிகமாக வெளிவந்துள்ளன. ஆய்வாளர்; சிறந்த சொற்பொழிவாளர். உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் உலகு முழுவதும் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார். மின்ஹஜ்ஜுல் குர்ஆன் என்ற சர்வதேச அமைப்பின் நிறுவனர். தீவிரவாதமற்ற இஸ்லாத்தைப் போதிக்கும் இந்த அமைப்பு உலகில் 55 நாடுகளில் இயங்கிவருகிறது.

சமீபகாலமாகப் பல முஸ்லிம் அறிஞர்கள் ஜிகாத் (அறப்போர்) என்பதன் பொருளை அரசியல்ரீதியாக விளக்க முயன்றுள்ளனர். ஆனால் நீங்களோ பயங்கரவாதத்திற்கும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் இஸ்லாமியத் தத்துவத்தில் இடமில்லை என ‘ஜிகாத்’திற்குப் பகுத்தறிவுக் காரணகாரியங்களுடன் மதரீதியாக விளக்கம் தர முயன்றுள்ளீர்கள்.

உள்நோக்கங்கொண்ட தங்களின் குறிக்கோளை அடைவதற்காக மதத்திற்குள்ளிருந்தே சிலர் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இஸ்லாம், குர்ஆன், சுன்னா (நபி வழி) இவற்றுக்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காக குர்ஆன் விளக்க உரைகள், இஸ்லாமியச் சட்டவியலாளர் கருத்துகள், இஸ்லாமியச் சமுதாயம் ஆகியவற்றை நுணுகி ஆராய வேண்டியதிருந்தது. அமைதிக்கும் சமாதானத்திற்குமே இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது. தீவிரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விளக்கங்கள் உண்மையான இஸ்லாமியப் போதனைகளிலிருந்து விலகியவையாகும்.

உதாரணமாக ஜிகாத், உயிர்த்தியாகம் அல்லது சண்டையிடல் என்னும் கருத்தாக்கம் ‘சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வது’ என்பதாக எந்த இஸ்லாமிய நூல்களிலும் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்தச் சொற்களில் எதுவும் பெண்கள், குழந்தைகள், முதியோர், மதபோதகர், நோய்நொடியுற்றோர் ஆகியோரைக் கொல்வது என்பதாகவும் பொருள்படாது. இவர்களைக் கொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை. கோயில்கள், சர்ச்சுகள், யூதவழிபாட்டு ஆலயங்கள், பிற வணக்கத்தலங்கள் ஆகியவற்றை இடித்துத் தகர்ப்பது என்பன இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ‘நியாயமான போர்’ அல்லது ‘தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே போரிடல்’ ஆகிய சந்தர்ப்பங்களில்தாம் இச்சொற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. 

போர்க்களத்தில் இரு படைகள் மோதிக்கொள்ளும்போது மட்டுமே இந்தச் சொற்கள் இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும். ஒரு தனிக்குழு ‘ஜிகாத்’தைப் பிரகடனப்படுத்த முடியாது. இது அத்தகைய குழுக்களின் உரிமையோ சிறப்புச்சலுகையோ அல்ல. இரண்டு ராணுவங்கள் அல்லது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரின்போது கூட பல கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது. தளர்ந்துபோய்விடாமல் நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் காரணத்தால் வர்த்தகர்களும் விவசாயிகளும் கொல்லப்படக்கூடாது. 

பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பிற குழுக்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.அவசியமில்லாமல் மரங்களை வெட்டுவதற்கும் அனுமதியில்லை. இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை என்பது முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான். 

‘ஒரு முஸ்லிமைக் கொல்வது மனித குலம் முழுவதையும் கொல்வதற்குச் சமமாகும்’ என்பதாக குர்ஆன் வாசகத்திற்குத் தவறான பொருள்விளக்கம் தந்து அதனைச் சில பயங்கரவாத அமைப்புகள் பரப்பிவருகின்றன. ஆனால் குர்ஆனோ ‘மனித உயிரைக் கொல்வது’ எனத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகிறது. (‘முஸ்லிமைக் கொல்வது’- என்பதாக அல்ல). எனவே ‘ஒரு மனித உயிரைக் கொல்வதென்பது மனிதகுலம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம்’ என்பதே குர்ஆன் வாசகம். ‘மனித உயிர்’ என்ற பொருளில் நஃப்சன் என்ற சொல் குர்ஆன் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் அரசியல் செயல் திட்டம்தான் இஸ்லாமியச் சட்டத்தை இவ்விதம் குறிப்பிட்டவிதமாகப் பொருள் விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களா?

அரசியல் செயல் திட்டமோ அல்லது சர்வதேசச் செயல் திட்டமோ மட்டுமல்ல. சமூகப் பொருளாதாரக் காரணிகளும், ஆங்காங்கே உள்ள அரசாங்கங்களின் சித்தாந்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறை, அதன் சித்தாந்தப் புரிதல்களுடன் இஸ்லாத்தில் ஊடுருவிப் பரவியுள்ளது. முஸ்லிம் உலகு நெடுகிலும் வாழும் மக்களின் சமூக அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். எனினும் இத்தகைய அரசியல் பிரச்சினைகளும் சமயப் புரிதல்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல் கூடாது. 

அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைதியான ஜனநாயக வழிமுறைகள் இருக்க முடியும். சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வதற்கு (ஏன் முஸ்லிம்களைக் கொல்வதற்கும்தான்) இஸ்லாமோ இஸ்லாமியப் போதனைகளோ அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்படவேண்டும். ஆனால் தற்போது நிலவும் நிகழ்வுகள் கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, திருக்குர்ஆனின் போதனைகளைக் கருத்தில்கொண்டு விளக்கப்பட வேண்டியவையுமாகும்.

இஸ்லாத்தில் தாராளமயக் கொள்கைகள் குறித்து உங்கள் புத்தகம் பேசுகிறது. கருத்துவேறுபாடுகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் இடமுண்டு என்பது பற்றியும் இறையியல் ரீதியாக அது எவ்விதம் நியாயப் படுத்தப்பட்டது என்பது பற்றியும் கூறமுடியுமா?

பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே கருத்து வேறுபாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமிருந்து வந்திருக்கிறது. ‘லா இக்ற ஐ தீன்’ என குர்ஆன் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் யார்மீதும் இல்லை. அதே சமயம் இஸ்லாத்தின் தீனுக்குள்ளும் நிர்ப்பந்தம் ஏதுமில்லை. எனவேதான் இஸ்லாத்தில் சட்டவியல் சிந்தனைக் குழுக்கள் பலவற்றில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காண்கிறோம். இஸ்லாமிய வரலாற்றில் ஒரே சம்பவத்திற்காக வேறுபட்ட தீர்ப்புகள் இந்தச் சிந்தனைக் குழுக்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. வேறுபட்ட சிந்தனை முறைகளையும் வேறுபட்ட வழிமுறைகளையும் இக்குழுக்கள் கொண்டிருந்தமையே இதற்குக் காரணம். 

உலகளாவிய ஒரு கட்டமைப்பினுள் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. இதனாலேயே சட்டவியலில் வேறுவேறு சிந்தனைப் போக்குகள்கொண்ட குழுக்கள் நிறுவப்பட்டன. எந்தக்குழுவும் - ஷியா தத்துவம் உட்பட, காஃபிர்களை (இறை மறுப்பாளர்கள்) இஸ்லாத்திற்கு வெளியே உள்ளோராகப் பிரகடனப்படுத்தவில்லை. ‘ஹதீத் - இக்தெதா- உம்மத்தி - றஹ்மத்துல்’ என்ற தத்துவத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ‘ஒரு நல்ல மத நம்பிக்கையில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் அந்தச் சமுதாயத்திற்கு இறைவனின் அருட்கொடையாகும்’ என்பது இதன் பொருளாகும். இது (கருத்து வேற்றுமை) மாற்றீடுகளைத் தருகிறது. ஒன்றில்லையெனில் இன்னொன்று -என்ற விருப்பத் தேர்வையும் நமக்குத் தருகிறது. கடந்த இரண்டாண்டுகளாய் இளையோர் இப்புரிதலைச் சிரம மேதுமின்றி எளிதாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர்.

‘ஃபத்வா’வின் வரலாறு என்ன?

ஃபத்வா எனும் சொல்லின் பூர்வீகம் திருக்குர்ஆனும் சுன்னாவும் ஆகும். புனித நபி மற்றும் அவரது சகாக்களின் காலத்தில் இந்தச் சொல் ஓர் ஆட்சிமுறைக் கருவியாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, தெற்காசியா நாடுகளில் சில மதகுருமார்கள் தங்களின் தனிப்பட்ட முற்சாய்வுகள் காரணமாக இந்தச் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தியபோது பிரச்சினை எழுந்தது. மருத்துவத்தில் ‘போலி டாக்டர்கள்’ எப்படியோ அதுபோலவே இஸ்லாமியத் தத்துவத்திற்கு இந்த மதகுருமார்கள் என்பதாகக் கொள்ளலாம். ஃபத்வா என்பது மிகுந்த அளவு வரையறைக்குட்பட்ட சட்டபூர்வமான சொல். 

காதிகளும் (நீதிபதிகள்) முஃப்திகளும் (தீர்ப்பு வழங்குவோர்) காலகாலமாக இச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஃபத்வா அல்லது இஃப்தா என்ற இரு சொற்களுமே ஒரே பொருள் கொண்டவைதாம். மிக முக்கியமான தீர்ப்புகளில் மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

(நன்றி: காலச்சுவடு தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி )

Thursday, April 2, 2015

உமர் இப்னு கத்தாப் (ரலி) எளிமையான வல்லரசர்

உமர் இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலாம். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக் வயதில் இளையவரான உமறும் மக்காவிலே பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அநேகமாக கி.பி. 586 ஆம் ஆண்டாக இருக்கலாம்.
துவக்கத்தில் உமறு, முஹம்மது நபி (சல்) அவர்களுடைய, புதிய மார்க்கத்திற்கும் கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். (தூய பவுல்-கிறிஸ்தவத்தில் சேர்ந்த நிகழ்ச்சிக்கு ஒப்பாகக் கருதத்தக்கது). முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆலோசகர்களில் ஒருவராய் உமறு ஆகி அன்னாரின் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.
தமக்குப் பின்னால் யார், பதவிக்கு வர வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே முஹம்மது நபியவர்கள் 632 ஆம் ஆண்டில் காலமானார்கள். உடனேயே உமறு தயக்கம் எதுவுமின்றி முஹம்மது நபியவர்களில் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர் பதவி ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்தார். இதனால், பதவிப் போட்டி தவிர்க்கப்பட்டு, அபூபக்கர் முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முடிந்தது.
உமறு கி.பி. 634 இல் பதவியேற்று, 644 வரை பதவியில் இருந்தார். அந்த ஆண்டில் அவரை பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் குத்திவிட்டான். மரணப் படுக்கையில், உமறு தமக்குப் பின் பதவிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க அறுவர் கொண்ட ஒரு குழுவை அமைத்து (அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று) ஏற்பாடு செய்தார். இவ்வாறாக, மீண்டும் பதவிக்கான ஆயுதப் போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலீபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர்கள் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார்கள்.
உமறுடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான், அரபுகளுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமறு பதவியேற்ற சிறிது காலத்தில், அப்போது பைஸாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி கண்டனர். அதே ஆண்டு டமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஜெரூசலேமும் சரணடைந்தது. கி.பி. 641 -க்குள், பாலஸ்தீன் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றி கொண்டு, இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். 639 இல் பைஸாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது.
உமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. கி.பி. 641-க்குள் ஈராக் முழுமையும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது. அது மட்டுமல்ல அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுத்தது. நஹாவந்துப் போரில், கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமறு 644 இல் காலமானார். அப்போதே, கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டு விட்டது. உமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்ரிக்காவை நோக்கி அவை முன்னேறின. உமறு அவர்களுடைய வெற்றிகளின் பரப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை நிரந்தரமாகவும் இருந்தன என்பதுதான். ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்றாலும், இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையாக அரபு மயமாகின என்பதுடன், இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.
தம்முடைய படைகள் வெற்றி கொண்ட இப்பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்வதற்குரிய தக்க திட்டங்களை உமறு வகுக்க வேண்டியதாயிற்று. அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகி கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் உமறு முடிவெடுத்தார். பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும். இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேருமாறு செய்யக்கூடாது என்றும் அன்னார் வழி செய்தார்கள். (இதிலிருந்து அரபிகளில் போர் வெற்றிகளுக்கு தேசிய விரிவாக்கம் நோக்கமாக இருந்ததே தவிர, அவை (மதத்தைப் பரப்பும்) புனிதப் போர் அல்ல என்பது மேற்கண்டவற்றிலிருந்து தெளிவாகும். எனினும், மத அம்சமும் இல்லாமலில்லை)
உமறுடைய சாதனைகள் நிச்சயமாக எவர் மனதிலும் ஆழ்ந்து பதிந்து நிற்கக் கூடியவை. முஹம்மது நபியவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு அன்னார் முக்கியமான காரண புருஷராக விளங்குகிறார்கள். அவர்களுடைய வேகமான வெற்றிகள் இல்லாதிருந்தால், இஸ்லாம் இன்றிருக்கும் அளவுக்குப் பரவியிருக்குமா என்பது சந்தேகம்தான். அன்றியும், அன்னார் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் பல இன்றும் அரபுத் தன்மையுடையதாகவே இருக்கின்றன. இவ்வளர்ச்சிகளை முக்கியமாக இயக்கி வைத்தவர் என்ற நிலையில் முஹம்மதுஅவர்களுக்குப் பெருமளவு புகழுண்டு. எனினும், உமறு அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிப்பது பெருந்தவறாகும். உமறு கண்ட வெற்றிகள் முஹம்மது நபி தந்த ஊக்கத்தினால் மட்டுமல்ல (இஸ்லாமிய ஆட்சியின்) ஓரளவு விரிவாக்கம நிச்சயமாக நிகழக்கூடியதுதான். ஆனால் உமறு அவர்களின் ஒளிமிக்க தலைமையின் கீழ் வெற்றி கண்ட அளவுக்கல்ல.
உமறு அவர்களின் தலைமையின் கீழ் அரபுகள் வெற்றி கொண்ட நிலங்கள் அவற்றின் பெரும் பரப்பையும் அவை நிலையாக அவர்கள் ஆட்சியில் இருந்துவரும் கால அளவையும் கொண்டு கணக்கிட்டால், அவர் சீசர், சார்லமான் ஆகியோரின் வெற்றிகளைவிட உறுதியான முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை என்கிற the 100 (நூறு பேர்) புத்தகத்திலிருந்து நூலாசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவரின் கருத்துக்களை மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன் இப்பதிவில்.


Saturday, March 21, 2015

காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா?

மனிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.

இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.

ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். வெளிச்சத்தை வேண்டுமென்றே கைகளால் மூடிக் கொண்டு இருள் என்பதுபோல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மதங்களின் மீதான இத்தகைய விமர்சன ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.


குர்ஆனில் சில வசனங்களை காட்டி முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லச் சொல்கிறது பாருங்கள் என்று வரலாறு தெரிந்து கொள்ளாத தெரிந்துக் கொள்ள முயற்சிக்காத பிரிவினைவாத கூட்டத்தினர் தவறான விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால் உண்மை என்ன அந்த வசனம் இறங்கிய பிண்ணனி என்ன? என்பதை பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. வகுப்புவாதிகள் பாமர மக்களின் இதயத்தி நஞ்சை விதைக்க திரித்துக் கூறும். இரண்டாம் அத்தியாயத்திலுள்ள் 191 வது வசனம் இது. 

இவ்வசனத்தில் ”அவர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களை குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.

இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும். 

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)

உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.

அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.

ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?

போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் திருக்குர்ஆன் ”அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்” எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.

நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.

இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.

அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் ”உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை” எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?

திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும். 

முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.

போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?

சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது. 

மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர். எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.

நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.

இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது. என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாக உத்தரவிடுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)

தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)

முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்
 போரின் இலக்கணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.
இதன் பிறகும் மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந் தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் மற்றொரு நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.
"கொல்லுங்கள்' "வெட்டுங்கள்' என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.
* வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13)
* சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40)
* போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக் குர்ஆன் 2:192)
* அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக் குர்ஆன் 4:75, 22:39-40)
* சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61)
* மதத்தைப் பரப்ப போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.
சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.
போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 2:190, 9:12,13)
(இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9).

(நன்றி சகோதரர் பிஜே அவர்களின் தழிழாக்க குர்ஆனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Sunday, December 29, 2013

பொருளை விட்டு அருளைத் தேடியவர்: சஹாபாக்கள் வரலாறு.

நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப் -படமாட்டீர்கள்.(அல்குர்ஆன் 2:272)

சுஹைப் (ரலி) ரோமபுரியிலிருந்து மக்கா வந்து இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். இறைத்தூதரை ஆழமாக நேசித்தவர். இறைநெறியை வாய்மையாகப் பின்பற்றியவர்.

நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தவுடன் சுஹைபிற்கு மக்காவில் இருப்பு கொள்ளவில்லை. மதீனா செல்வதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தார். ஒருநாள் மதீனா செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டார். அவர் புறப்பட்ட செய்தி அறிந்த மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆவேசமடைந்து அவரைப் பின்தொடர்ந்து மடக்கி விடுகின்றனர்.

“ சுஹைபே! நீரோ வெளியூரிலிருந்து வந்தவர் உமது சொத்துக்கள் எல்லாம் எங்களது பணத்தால் உருவானவை. நீர் மதீனா செல்வதாயிருந்தால் உம்முடைய உடமைகளையும் செல்வத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்” என குறைஷியர் கூறியதைக் கேட்ட சுஹைப் (ரலி) அவர்கள் “ உங்களுக்கு எனது செல்வமும் சொத்துக்களும்தான் தேவை என்றால் அவற்றை இழப்பதில் எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவற்றை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதைக் கேட்ட மக்காத்து இறைநிராகரிப்பாளர்கள் அதிர்ந்து போயினர். சுஹைபோ எவ்விதச் சலனமுமில்லாமல் மதீனா நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்.

மதீனா சென்றடைந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) சுஹைபை வரவேற்று பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:207)

“சுஹைபே! உமது வியாபாரம் வெற்றி அடைந்து விட்டது” என வாழ்த்து கூறி நபியவர்கள் வரவேற்றார்கள்.

இதே சுஹைப் அவர்கள், உமருக்கு அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் வரை தற்காலிக இமாமத் பொறுப்பு ஏற்றிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களின் ஜனாசா தொழுகையையும் சுஹைபே முன்னின்று நடத்தினார்கள்.

இந்நிகழ்வின் மூலம் கிடைக்கும் படிப்பினைகள்:

இறைவழியில் அனைத்தையும் துறப்பது நஷ்ட்டமல்ல: லாபம்தான் என்பதை உணர்ந்து செயல்படுத்திக் காட்டியவர் சுஹைப் (ரலி). தற்காலிக வாழ்வை விட நிரந்தரமான மறுமை வாழ்விற்கு முன்னுரிமை அளித்தவர்.

Tuesday, November 12, 2013

அரபி பெண்களை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?

பிறப்பின் அடிப்படையில் மனிதனை இழிவாக கருதுகிற பார்ப்பனியவாதிகள். உலகில் பிறந்த அனைவரும் ஒரே தாய் தந்தையிலிருந்து ஒரே ஒரு ஜோடியிலிருந்து பல்கி பெருகியவர்கள் என்று சொல்லக் கூடிய இஸ்லாமியக் கொள்கையை திரித்து இஸ்லாத்திலும் மனிதர்களை பிரித்து கூறுபோடும் பார்ப்பனீயம் இருப்பதாக போலி பரப்புரைகளை பலமுறை சந்தித்திருக்கிறேன். அதுபோலவே இணையத்தில் நீண்ட வருடங்களாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ வாதிகள் அரபி முஸ்லிம்பெண்களை இந்திய முஸ்லிம் ஆண்கள் மணக்க முடியுமா? என்று அடித்த வாய்ச்சவடால்களை முறியடிக்கிறது இக்கணொளி.
முஸ்லிம்கள் இதுநாள்வரை தேச எல்லை கடந்து மலாய், இந்தோனேஷியா,ஆப்பிரிக்கா ஐரோப்பிய இனகலப்பு திருமணம் முடித்திருந்தாலும். அரேபிய பெண்களை திருமணம் முடிக்க முடியுமா என்று சவடால் அடித்தவர்கள் இன்னொரு செய்தியையும் தருகிறேன்.
இந்திய ஆண் மலாய் பெண் திருமணம்
34 சவூதி பெண்கள் ஆஃப்கன் வங்காளிகளை மணந்துள்ளனர்!

ரியாத்: கடந்த ஆண்டு 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும், 17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று சவூதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே காலக் கட்டத்தில் 55 சவூதி ஆண்கள் ஆஃப்கானியப் பெண்களையும் 27 பேர் வங்கதேசப் பெண்களையும் மணந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பார்க்க: செய்தி http://www.inneram.com/news/middle-east/3253-34-saudi-ladies-married-bangalis-and-pakistanis.html)

Tuesday, February 26, 2013

திருமாவளவன் அவர்களின் பார்வையில் நபிகளார்

இஸ்லாம் உலகின் தலைசிறந்த ஜனநாயகத் தத்துவம். ஒவ்வொரு மனிதனும் ஆணவம் இல்லாமல் அகந்தை இல்லாமல் மனிதநேயத்தோடு வாழ்வதற்கான ஒரு வாழ்க்கை நெறி.

1400  ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் தோன்றிய மகத்தான மானுடத்தின் அற்புதம் நபிகள் நாயகம். மனிதன் எப்படி பக்குவப்பட வேண்டும், ஒழுங்கு பட வேண்டும், அமைதியாக வாழ வேண்டும் என்பது பற்றி எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில் தோன்றி பரப்புரை செய்து இருக்கிறார்கள். கெளதம புத்தர், இயேசு பெருமான் போன்ற மகான்களின் வரிசையில் நபிகள் நாயகம் மகத்தான ஒரு மனிதர்.

ஆனால் அந்த மகான்களிடமிருந்து இவர் மாறுபடுகிறார் அவர்கள் மக்களுக்கு வாழ்க்கை நெறியை வழங்கினார்கள். வழிகாட்டினார்கள். என்றாலும் அந்தத் தத்துவத்தில் ஒரு ஜனநாயகப்பூர்வமான, காலம் காலமாகத் தொடர்ந்து வலுவாக மக்களை வழிநடத்திச் செல்லக் கூடிய சிறந்த ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறைகளை வழிமுறைகளை, வகுத்தளித்தவர் நமது நபிகள் நாயகம்.

உருவ வழிபாடு, அருவ வழிபாடு என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இறைவழிபாட்டில் நடைமுறையில் இருக்கிற முறைகள். அருப வழிபாடு என்பது பல மதங்களால் பின்பற்றக் கூடியது என்றாலும்கூட இஸ்லாத்தில் அது மிகவும் இறுக்கமாகவும் வலுவாகவும் பின்பற்றப்படுகிறது. உருவம் கூடாது என்று தனிமனிதனின் ஆணவத்தை, அகந்தையை அழிப்பதற்கான உத்தியாகவே நபிகள் நாயகம் கையாண்டிருக்கிறார். இறைவனுக்கு உருவம் கொடுப்பது, தனிமனித துதிக்கு வழிகாட்டுவதாக அமைந்து விடுகிறது. எந்த இறைவனைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு தூதர் வருகிறாரோ அந்தத் தூதருக்கே உருவ வழிபாட்டைச் செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் திசை திருப்பப்படுகிறார்கள்.

இயேசு பெருமானுக்கு உருவம் கெளதம புத்தருக்கு உருவம். இவர்கள் இறைவனின் தூதர்களாக மக்களால் அறியப்பட்டாலும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று நம்புகிற காரணத்தால் இந்தத் தூதர்களுக்கும் உருவம் இருக்கும். அதன் மூலம் அதைப் பின்பற்றக் கூடிய அல்லது மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பரப்பக் கூடிய பின்னால் வருகிற மதகுருமார்கள், மடாதிபதிகள் தங்களை முன்னிறுத்தி தங்களுக்கான உருவத்தை உயர்த்திப் பிடித்து மக்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டு வருகிற நிலையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

மதம் என்பது மூலதனமாக வளர்ச்சி பெற்று அந்த மதத்தை வழிநடத்தக் கூடிய மதகுருமார்கள், மடாதிபதிகள் தாங்களே இறைவனின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு நிலை பிற்காலத்தில் வளர்ந்து விடுகிறது. இதைக் காலச்சுவடுகளில் நம்மால் காண முடிகிறது.

ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய நபிகள் நாயகம் அவர்க:ள் இறைவனுக்கு உருவம் இல்லை; உருவ வழிபாடு கூடாது என்று மக்களுக்கு வழிகாட்டியதோடு தம்முடைய உருவத்தை எந்தச் சூழ்நிலையிலும் முன்னிறுத்த விரும்பவில்லை. தம்முடைய உருவப் படத்தையோ சிலைகளையோ மக்களுக்கு ஒரு வடிவமாக அடையாளமாக உயர்த்திப் பிடிப்பது தம்மை இறைவனால் அனுப்பப்பட்ட ஆளுமைமிக்க, என்னை வழிபட்டால் அது கடவுளை வழிபட்டது போல் ஆகும் என்கிற வகையில் எப்போதும் மக்களைத் தவறாக வழிநடத்தவில்லை.

சாதாரணமாக ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னிறுத்துவது இயற்கை. தன்னுடைய உருவத்தையும் வடிவத்தையும் திரும்பத் திரும்ப மக்களின் கண் முன்னால் நிறுத்தி அவர்களின் நெஞ்சத்தில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். தலைவர்களாக இருப்பவர்கள் அது அரசியல் தளமாக இருந்தாலும் மதத் தளமாக இருந்தாலும் அந்தத் தளங்களில் பணியாற்றக் கூடிய ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாம் பார்க்கிறோம். 100க்கு 99 %  அப்படித்தான்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் தம்மை எந்தச் சூழலிலும் எந்த வகையிலும் அடையாளப்படுத்துவதற்கு, முன்னிறுத்துவதற்கு அவர் விரும்பவில்லை என்பது அடிப்படை  கொள்கையிலிருந்து வழிதவறி விடக் கூடாது, திசை மாறக் கூடாது என்பதுதான். தமக்குப் பின்னால் வருபவர்கள் உருவ வழிபாட்டை உயர்த்திப் பிடித்தால் தமது வழிபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அடிப்படை நோக்கத்தைச் சிதைத்து விடக் கூடும். ஆகவே இறைவனுக்கு  உருவம் இல்லை; வடிவம் இல்லை என்கிற அந்த கோட்பாட்டை மிக அழுத்தமாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சொன்னவர் நபிகள் நாயகம்.

இதில் மிகச் சிறந்த ஜனநாயகத் தத்துவத்தை மானுடத்தின் அற்புதத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த 1400 வருடங்களில் பலரையும் மறந்தும் நாயகத்தின் திருவுருவப் படத்தையோ திருவுருவச் சிலையையோ உலகத்தில் எந்த நாட்டிலும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு எத்தனிக்கவில்லை; முயலவில்லை என்பது அவருடைய சிறந்த ஆளுமையை. அவருடைய தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. அந்த அளவுக்கு அதில் அவர் ஓர் உறுதியான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார்.

ஒரு மனிதனை வணங்குவதின் மூலம் அகந்தை உள்ளவனாக ஆணவம் மிக்கவனாக மாறுகிறான். அதனால் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அவன் அரசனாக இருந்தாலும் சரி; தற்போதைய காலத்தில் இருக்கிற முதலமைச்சர், பிரதமராக இருந்தாலும் சரி, தனிமனிதர் வழிபாடு என்பது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அடிமைத்தனத்தை வளர்ப்பதற்கும் வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. ஆகவே  ஆண்டாம் அடிமை யாரும் இல்லை என்கிற ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டுமானால் தனிமனித வழிபாடு என்பது கூடாது. எனவே மனிதனை வழிபடுவது என்பது இந்த மானுடத்தை சிதைக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. மன்னர்கள் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இறைவன் என்றால் கடவுளையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். கோயில் என்றால் கடவுள் இருக்கிற இடத்தையும் குறிக்கும். அரசன் இருக்கிற இடத்தையும் குறிக்கும். ஆகவே மன்னம் வேறு அல்ல; இறைவன் வேறு அல்ல என்று எண்ணக் கூடிய அளவுக்குத் தனிமனித ஆதிக்கம் இந்த மண்ணுலகில் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது ஆகவே ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வழிபட விரும்புகிறான் அல்லது வழிபட வைக்கப்படுகின்றான் என்ற நிலை வருகின்றபோது அங்கு இயல்பாகவே அடிமைத்தனம் வந்து விடுகிறது.

ஆகவே தான் மனிதனை வணங்கக் கூடாது இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அந்த இறைவனும் உருவமற்றவன்; அவனுக்கு எந்த வடிவமும் இல்லை என்ற கோட்பாட்டை இந்த உலகுக்கு வழங்கி, அதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லாமல், தளர்வுக்கும் இடமில்லாமல் திசை மாறுவதற்கோ வழி தவறுவதற்கோ வாய்ப்பு இல்லாமல் ஓர் இறுக்கமான கோட்பாட்டை இந்த உலகிற்கு வழங்கியவர்தான் நமது நாயகம். அவர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். 

அவருடைய வாழ்க்கை முறை என்பது மிகச் சிறந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை. எளியவர்களை மதிப்பது, எளியவனாகவே வாழ்வது, கடைசி மனிதர்களோடு உறவாடுவது, கடைசி மனிதர்களின் விடுதலைக்காக உழைப்பது, இவற்றுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி தலைவராக நபிகள் நாயகம் விளங்கி இருக்கிறார்.

(இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்)

நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Jan_13/index.htm )

Saturday, January 21, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2

இந்த பதிவின் முதல் பாகத்தை பார்வையிட இங்கே அழுத்துங்கள் 


அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கையும் இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது.அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம்,ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதாரவளிக்கப்படவில்லை. இக்கலைகளை கற்றோர் செல்லக்காசுகளாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர்.அதேவேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல்,கணிதம்,வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது.மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது.அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன.சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக தோற்றத்தில் திகழ்ந்த ஈரானிலிருந்தும் குராஸானிலிருந்தும் குடியேறியவர்கள் ஒழுக்க,சமூகச் சீர்கேடுகளைத் தம்மோடு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விருவகை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை, ஒன்றோடொன்று இணையாத இருவகைக் காலச்சாரங்களைக் கொண்ட ஒரு புதுமையான கலவையாக அமைந்தது.அதனையே அவர்கள் ‘இஸ்லாமியக் கலாச்சாரம்’ என மொழிந்தனர். அதில் சிலைவணக்கம்,இன வர்க்க பேதங்கள்,மூடநம்பிக்கைகள் போன்றவையும் அனைத்துக்கும் மகுடமாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரியைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியிருந்தன.உலக ஆசைவயப்பட்ட ஆலிம்களும் சமய குருமாரும் அவற்றைப் பின்பற்றுவோராகவும் அவற்றின் மதகுருக்காளாகவும் மாறினர். மக்கள் தம் காணிக்கைகளை அவர்கள்முன் சமர்பிக்க,அவர்களோ ஆழ்ந்த மதப்பிரிவினை வேறுபாட்டுணர்வோடு அவற்றை ஆசிர்வதித்தனர்.


தனிமனித வாழ்க்கை வேறு,பொது வாழ்க்கை வேறாகத் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக சட்டமுறைக்கும் சட்ட முரணுக்கும் மார்க்கம் விதித்துள்ள எல்லைகள் நிராகரிக்கப்பட்டன; மார்க்கக் கட்டளைகள் நடைமுறையில் மீறப்பட்டன;வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. விதித்துரைக்கப்பட்ட இஸ்லாமியக் கட்டளைகளை மறுத்துரைப்பதும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயங்களுக்கு பூரண சட்ட அங்கீகாரம் அளிப்பதும் சர்வசாதாரண வழக்கமாகிப் போனது.

சூஃபித்துவ அத்வைத அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சூழலுக்கு உடனே இரையாயினர் ஏனெனில் அவர்கள் தத்துவரீதியாக சூஃபிக் கொள்கையின் போதையூட்டும் செல்வாக்குக்கு இரையாகியிருந்ததோடு அக்கொள்கை பலதெய்வ வழிபாட்டுக்கு அளித்த விளக்கமானது வாழ்க்கை மற்றும் யதார்த்த நிலை பற்றிய அவர்களின் உணர்வையும் மறக்கச் செய்திருந்தது.

சூஃபிகள் மஸ்த் (மஸ்த் என்ற பாரசீக சொல்லுக்கு போதை என்று பொருள்) தில் தன் நிலைமறந்து இருந்தபோது. மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் (பிறப்பு: ஹி.975(கி.பி.1563),இறப்பு: ஹி. 1034 (கி.பி 1624) பிறந்தார்கள்.அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்கள் மத்தியிலேயே வளர்ந்தார்.அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும் செயலில் சிறந்தவராகவும் விளங்கினார்.அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை,மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் ஷேக் அஹ்மத் அவர்கள்தான்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம் முழு சக்தியையும் திரட்டி அவரை அடக்கியொடுக்க முயன்று சிறையிலும் தள்ளியது.இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு அஹமத் ஸிஹிந்த் அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் ஷேக் அஹ்மத் அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வர் குர்ரத்தையும் மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார்.

இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும் சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும் விலக்குகளும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம்,முற்றாக ‘ஜாஹிலியத்தின்’(அறியாமையின்) கைகளுக்கு மறுவதை தடுத்தது மட்டுமின்றி,ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார்.ஷரீஅத்தை,மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’ இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார். (முற்றும்)

பின்குறிப்பு:
அவ்ரங்கசீப் பற்றி வரலாற்றுரீதியான ஆதாரங்களோடு நடுநிலையோடு எழுதப்பட்ட நூல்கள் ஏராளமாக இருக்கின்றன அதில் குறிப்பிடத் தக்கது சே.திவான் அவர்கள் எழுதிய அவ்ரங்ஜேப் அந்த புத்தகம் வேறு கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது முடிந்தால் அந்த நூலை வாங்கி படியுங்கள்.

பின்குறிப்பு: 2
சென்ற முதல் பதிவில் ஆதார நூல்களை சகோதரர்கள் கேட்டு இருந்தார்கள் அவர்களுக்காக.
இஸ்லாமிய மறுமலர்ச்சி என்ற இந்த நூல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் தாக்கப்படும்போதேல்லாம் தோன்றி முகம் கொடுத்த ‘முஜத்தித்’ (இஸ்லாத்திற்கு புத்துயிரளித்து அசல் நிலைக்கு கொண்டு வருபவர்)களைப் பற்றிய தொகுப்பு புத்தகம்.
இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்-பாகம் 1.2
வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று இடங்கள்,காலப்பகுதி,ஆய்வுக்காக

Tuesday, January 17, 2012

காதியானிகள்(அஹமதியாக்கள்) யார்? புத்தக அறிமுகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாபிலுள்ள ‘காதியன்’ எனும் ஊரில் மிர்சா குலாம் அஹமத் என்பவர் தன்னை ஒரு ‘நபி’ என்று அறிவித்துக் கொண்டார் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க அரசு இவர்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தது.மிர்சா குலாம் அஹமதைப் பின்பற்றுபவர்கள் ‘காதியானிகள்’ என்றும் ‘அஹமதியாக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மிர்சா குலாம் அஹமத் அவர்கள் தன்னை ‘நபி’ என்று மட்டுமல்ல, தானே ‘ஏசுவின் மறு வருகை’ என்றும் தானே ‘மாஸீஹ் மவ்ஊத்’(வாக்களிப்பட்ட மஸீஹ்) என்றும், தானே ‘கல்கி’ அவதாரம் என்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டார்.தொடக்கத்தில் தன்னை ‘நிழல் நபி’ என்று அழைத்துக் கொண்டார், போகப் போக ,தானே நபி’என்றும் வாதிடத் தொடங்கினார்.

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு உதவியது போல் இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் இன்றைய 'செங்கொடி' வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆகவே காதியானிகள் யார்?, அவர்களின் கொள்கைகள் என்ன?, அவருடைய தீய நோக்கத்தின் பின்னணி என்ன?,அவர் எந்த அளவுக்கு வழிகெட்டுப் போனவர் எனபதை அஹமதின் நூல்கலிலிருந்தே ஏராளமான எடுத்துகாட்டுகளைத் தந்து காதியானிசத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது இப்புத்தகம்.

இந்நூலின் ஆசிரியர் P.P. அப்துல் ரஹ்மான், காதியானிஸத்தின் கொள்கை பற்றிய உர்தூ மூல நூல்களை எல்லாம் சேகரித்து,மிர்சா குலாம் பற்றியும் அவரது முன்னுக்குப் பின் முரணான,அபத்தமான நபித்துவ வாதங்கள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுத்தெழுதிய,
‘காதியானிஸம் ஓர் தொகுப்பு’ என்ற ஏழு தொகுதிகளைக் கொண்ட மலையாள நூலின் முதலாம் தொகுதி தமிழாக்கம் தான் இந்நூல்.

ஏழு தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் தனித் தன்மையுடன் இருப்பதால் தொடர்ச்சியாய் வாசிக்காவிட்டாலும் பாதகமில்லை;எனினும் அனைத்துத் தொகுதிகளையும் வாசிப்பதே பலனளிக்கும்.

பின்குறிப்பு:
 காதியானிகள் சம்மந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்.

நூல்:காதியானிகள் யார்?
தொகுப்பாசிரியர்
P.P. அப்துல் ராஹ்மான்
தமிழில்
K.M முஹம்மது
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012

Friday, May 6, 2011

வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தாலிபானா..? பதில் சொல்..!

       அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.

இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?

 ஆனால் அந்த நபர் வருகிறார் அடிவாங்கி கிழிந்த சட்டையின் ஒட்டை வழியாக அந்த உள்பனியனை பார்க்கிறார். ஆ பச்ச பனியன் உள்ளே அல்லாஹு அக்பர் என்று எழுதியிருக்கிறது. இவருக்கு முகம் சிவக்கிறது செவப்பு பனியன் போட்டு அதில் செவ்வணக்கம் என்று அல்லவா இருக்க வேண்டும்? அவர் எதிர்பார்த்தது இல்லை ஏண்டா இப்படி திருடுற சார் இவனை அடியுங்க சார் என்கிறார்

  இது புனைவாக இருந்தாலும் சுடும் உண்மை


டிப்டாப் ஆசாமி அமெரிக்க வல்லாதிக்க வெறியர்கள் காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு மண் வீடுகளில் வசிக்கின்ற ஆப்கானியர்களின் வீட்டில் புகுந்து திருடுகிறான் கொல்லுகிறான் ஊடக பலமில்லாத ஊமையர்களான ஆப்கானியர்களின் வீட்டில் நடக்கும் எழவு வீட்டு ஒப்பாரி வெளியே கேட்பதில்லை.

தங்களை முற்போக்குவாதிகள், நடுநிலைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்கள் என்று சொல்லி கொள்கிற வினவு குழுவினர் பாதிக்கப்பட்டவன் செவப்பு சட்டைக்காரனா என்று குழியைத் தோண்டி பார்க்கிறார்கள். செவப்பு சட்டையாக இருந்தால், பார்த்தீர்களா அநியாயத்தை மக்களுக்காக போராடிய போராளிகளை புதைத்து விட்டார்கள் என்று அலறுகிறார்கள். அதே வேறு கலராக இருந்தால் இவர்களும் சேர்ந்து மண்ணை அள்ளி மூஞ்சியில் போடுகிறார்கள்.

ஆம் வினவு என்கிற நக்சலைட்டுகள், அல்லது ம.க.இ.க அமைப்பைச் சேர்ந்த  குழுவினர்.
பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்! என்ற பதிவில் அப்பட்டமாக அதை தான் செய்தார்கள்.

இந்த அவதூறு பதிவில் வரிக்குவரி அவதூறுகள் அள்ளி வீசப்பட்டு இருக்கிறது. தாலிபான்களை பயங்கரவதிகளாக சித்தரிக்கிற ஊடகங்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, இப்படி ஒரு பிரச்சாரத்தை யார் முடுக்கி விட்டு சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் அரசியல் ஆதாயம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா வினவு?

  
கடந்த நூறு ஆண்டுகளில் உலகளவில் சுமார் நூறு செய்தி நிறுவனங்கள் சேவையாற்றிக் கொண்டிருந்தன. ஆனால் இன்று அது இருபதாகச் சுருங்கிவிட்டது. இதில் 66% செய்தி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது உலகில் 0.3விழுக்காட்டினராக இருக்கும் யூதர்களே ஆவர். அவர்கள் தரும் செய்திகளை ஊடகங்கள் எவ்வித விசாரணையுமின்றி அப்படியே வெளியிடுகின்றன.

இந்தியாவில் எட்டு விழுக்காட்டினராக (8%)இருக்கும் உயர் ஜாதிப்பிரிவினரே தேசிய ஊடகத்தின் மேல்மட்டத்தில் எழுபத்தோரு (71%) விழுக்காடு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இவர்கள் மாவோயிஸ்ட்களை பற்றி வெளியிடும் செய்திகளை மட்டும் மறுத்து பாசிச முதலாளிவர்க்க ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் என்று சொல்ல தெரிகிற வினவுக்கு தாலிபான்களை பற்றி வெளியிடுகிற செய்திகள் மட்டும் எப்படி உண்மையாக்கப்படுகிறது?

 1980,90 களில் கம்யூனிஸ நாடுகளை குறிவைத்து உள்ளே புகுந்து துவம்சம் செய்த ஜேம்ஸ்பாண்ட், ராம்போ போன்ற ஹாலிவுட் கதாபத்திரங்கள் இப்போதெல்லாம் கம்யூனிஸ நாடுகளுக்குள் நுழைவதில்லை. பெரிய முண்டாசு கட்டி, தாடி வைத்திருப்பவர்களை ஹாலிவுட்டில் துவம்சம் செய்து கொண்டிருக்கின்ற விஷயம் வினவு குழுவினருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லையே?
மாவோயிஸ்ட்களின் அரசியலை தெரிந்துக் கொள்வதற்காக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க நேர்ந்தது. 

இந்த புத்தகத்தில். 112 வது பக்கத்தில் ஒரு செய்தியை பாருங்கள்.

இயக்கத்தில் புதிதாகச் சேருவோருக்கு -குறிப்பாகச் சிறுவர்களுக்கு வன்முறையின் மீதான பயம் போகவேண்டுமென்பதற்காக மாவோயிஸ்ட்கள் மேற்கொள்ளும் ஓர் உத்தி, ஆப்கனிஸ்தானில் தாலிபன் இயக்கத்தில் எப்போதும் கடைப்பிடிக்கப்படுவது.

குற்றவாளி என்று அவர்கள் தீர்மானிக்கும் ஒருவரைப் பொது இடத்தில் கட்டிவைத்து ரத்தம் வர அடிப்பது, விரல்களை வெட்டுவது போன்ற தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றுவது, சுட்டுக் கொல்வது ஆகியவற்றைப் புதியவர்கள் முன்னிலையிலேயே பெரும்பாலும் செய்வார்கள். இம்மாதிரி ஏழெட்டு தண்டனை நிறைவேற்றங்களைப் பார்த்தபிறகு, ஒரு சில தண்டனைகளைப் புதியவர்களே நிறைவேற்றவும் வாய்ப்புத் தரப்படும். அதன் பிறகு அவர்களுக்கு ரத்த பயம் இராது.

அதே புத்தகத்தில் 114ம் பக்கத்தில் இன்னொரு செய்தியை பாருங்கள்.


கடத்தல் மாவோயிஸ்ட்களின் மிக முக்கியமான வருமான வழி இதுதான். ஆள்கடத்தல்,வழிப்பறி, பெரும் நில உடமையாளர்களிடமிருந்து அபகரிப்பது என்று சில வழிகளில் மாவோயிஸ்டுகள் தமது வருமானத்தைப் பெறுகிறார்கள். தவிரவும் மலைக்காடுகளில், மறைவிடத்தில் போதைப் பயிர் விளைவித்து, அதை ஏற்றுமதி செய்வதன் மூலமும் மாவோயிஸ்டுகள் தமது தேவைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அப்புறம் 115ம் பக்கத்தில்.

ஆகஸ்ட் 14,2007 அன்று ஒரிஸ்ஸா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்டத்தில் ஒரு கிராமவாசியை(போலீஸ் இன்ஃபார்மர் என்று சொல்லப்பட்டவர்) மாவோயிஸ்ட்கள் வெட்டிக் கொன்றார்கள். தனி இடத்தில் கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலை ஊர்ப் பொதுவுக்குக் கொண்டு வந்து போட்டு, ஆதிவாசி மக்களை சத்தமிட்டு அழைத்து, அவர்கள் எதிரே, கொல்லப்பட்ட மனிதரின் உடலைப் பிய்த்து அப்படியே பச்சையாகத் தின்னத் தொடங்கினார்கள்.

இறந்தவர் பெயர் முகுந்த மாதி.சம்பவம் நடந்த இடம்,பண்டிகுடா. மாவோயிஸ்ட் இயக்கத்தின் பப்லூர் பிரிவு கமாண்டர் பகத் என்பவரே அப்படிக் கொலை செய்து மனித மாமிசத்தைத் தின்றார்.

இந்த புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்களா வினவு? முடியாது தானே?

கிழக்கு பதிப்பகம் படிக்காதீர்கள், ஏதாவது பரபரப்பாக எழுதி வியாபரத்தை பெருக்கும் உத்தி. மாவோயிஸ்ட்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? கீழைக்காற்று பதிப்பக புத்தகங்களை படியுங்கள் என்று சொல்ல உங்கள் வாய் எத்தனிக்கிறதா? தேவையில்லை, நாங்கள் நிதானமாகத்தான் இருக்கிறோம். உங்களை போன்று பிற கொள்கைகளை இழிவுபடுத்தி எங்கள் கொள்கைதான் சரி என்று நிரூபிக்கிற தேவை எங்களுக்கு இல்லை.
மாவோயிஸ்ட்களை சந்தித்து பேசும் எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள்


மாவோயிஸ்ட்கள் நல்லவர்கள் என்பதற்காக அவர்களை நேரடியாக சந்தித்த அருந்ததி ராய் அவர்களை பற்றிய விளக்கங்களை விரிவாக எழுத தெரிந்த உங்களுக்கு, தாலிபான்களின் சிறைக் கைதியாகி இருந்து தாலிபான்களைப் பற்றி உண்மைகளை சொன்ன யுவான் ரிட்லியின் செய்திகளை மறைக்கும் அவசியமென்ன வினவு?

பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்! இந்த பதிவில் நீங்கள் வைத்த அவதூறுகள் பா.ராகவனையும் மிஞ்சி விட்டீர்களே.


இதோ உங்களுடைய அவதூறுகள்


//பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர்.//


இது அப்பட்டமாக இந்துத்துவா வாதிகளின் பொய் பிரச்சாரத்தை அதாவது மதரசாக்களில் பயங்கரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்ற அவதூறுகளை வினவும் தனது பங்கிற்கு மெருகேற்றி விடுகிறார். இஸ்லாமிய அடிப்படையிலான மதரசாக்களுக்கும் தீவிரவாத‌த்திற்கும் என்ன சம்பந்தம்? குர்ஆன் வாங்க அமெரிக்க டாலர் கொடுப்பதற்கு முன் இஸ்லாமியரிடம் யாரிடமும் குர்ஆன் இல்லை அப்படித்தானே? 

//பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்///


அல்கைய்தா என்ற ஒரு அமைப்பே கிடையாதாம், உங்களுக்கு தெரியுமா வினவு? கீழேயுள்ள இரண்டு வீடியோவையும் பாருங்கள்.

                                              


// பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது.//

அய்யா வினவு பர்தா போடாவிட்டால் பெண்களை அடிக்க முடியுமா? கட்டுன புருஷன் மனைவியை அடிப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கும்போது அது எப்புடியிண்ணே புர்கா போடாத பெண்களை அடிக்க முடியும்?


”என் துணைவியரிடம் மதீனாவை சேர்ந்த பெண்கள் பலர் தங்கள் கணவர்கள் தங்களை அடிப்பதாக முறையிட்டுள்ளனர்.இவ்வாறு மனைவியை அடிப்பவர்கள் உங்களில் சிறந்தவர்கள் இல்லை.மக்களே! அல்லாஹ்வின் பெண் அடியார்களை உங்கள் மனைவிமார்களை அடிக்காதீர்கள்!” (நூல்:அபூதாவூத்)
இப்படி நடைமுறையில் ஒரு ஹதீஸ் இருப்பது உங்களுக்கு தெரியுமா வினவு?


அப்புறம் கல்வி கற்ற பெண்களுக்கு கல்லடி கிடைத்ததா? இந்த செய்தி ஒங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
”கல்வி கற்பது ஆண் பெண் இருவர் மீதும் கட்டாய கடமையாகும்” (அல்குர்ஆன்) என்று ஒரு வசனம் இருப்பது ஒங்களுக்கு தெரியுமா வினவு?

தீவிர மதவாதிகளான கடுங்கோட்பாட்டு கொள்கையுடைவர்கள் என்று உங்களால் சான்றிதழ் கொடுக்கப்பட்ட தாலிபான்கள் எப்படி குர்ஆன் கட்டளைக்கு எதிராக செயல்படுவார்கள்?


தாலிபான் என்கிற புஷ்துன் மொழி வார்த்தையின் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா? கல்வி அளிப்பவர்கள் என்று பொருள்.

யுவான் ரிட்லி (Yvonne Ridley) என்கிற செய்தி சேகரிப்பாளர் தாலிபான்கள் கூட இருந்து தாலிபான்களின் உண்மை சித்திரத்தை உலகுக்கு சொன்னாரே அவரைப் பற்றி சொல்ல உங்களை தடுத்தது எது? இதுல நடுநிலைவாதியாம்!


இனி யுவான் ரிட்லி சொல்வதை பாருங்கள்.
யுவான் ரிட்லி அவர்கள்
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டியிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை, என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.



//புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது.//
இஸ்லாமிய சட்டப்படி இப்படி இடிப்பது தவறுதான். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விஷயத்தில் அவர்கள் கம்யூனிஸ்ட் போல செயல்பட்டார்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனும்போது ஜெகத்தினை எரிப்போம் என்று பாரதியார் சொன்னது போல.
இதே தமிழீழவாதி சீமான் சொல்வதை கேளுங்கள்.
//ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது.//


இப்படி உங்கள் பார்வையில் காலாவதியான இந்த மார்கத்தைப் பற்றி இவ்வளவு பெரிய பதிவா? இதில் ஒன்று மட்டும் தெரிகிறது இன்னும் உலகம் அழியும் வரை இயங்குவியல் மார்க்கமாக இருக்கிறது என்பதை உங்கள் எதிர்ப்பின் மூலம் விளங்கிக் கொள்கிறோம் வினவு.