Wednesday, March 6, 2013

அண்ட புளுகன் மாலைமலரும் ஆகாச புளுகன் தினமணியும்

ஒரு பொய்யை தொடர்ந்து சொல் உண்மையாகிவிடும். கோயபல்ஸ் 
ஒரு பொய்யை தினமும் சொல் உண்மையாகிவிடும். தினமணி,மாலைமலர்,தினப்பத்திரிக்கை

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.இந்த சங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தீனதயாளன் மற்றும் சிவசங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தான் அத்வானி மதுரைக்கு வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்தார்களா என்றும் விசாரணை நடப்பதாக தகவல் வருகிறது.

இதே சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தினமனி,தினமலர், மாலைமலர் போன்ற ஊடகங்கள் சுறுசுறுப்பாகி கொட்டை எழுத்தில் 

இஸ்லாமிய தீவிரவாதி கைது கூடங்குளம் 
அணுமின் நிலையத்தை தகர்க்க சதியா? 

என்று தலைப்பிட்டு தமிழ்நாட்டையே பயமுறுத்தி இருக்கும். இதை எதோ மிகைப்படுத்தி சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முந்தைய அவர்களின் நடைமுறை அதுதான்.சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பெங்களூரில் கைது செய்யபட்டபோது தினமலர் வெளியிட்ட புகைப்படம்
“அணு உலை மீது தாக்குதல் திட்டம் முறியடிப்பு” இப்படித்தான் செய்தி வந்தது.

புதுவை எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பில் சங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்ட செய்தியை மிகவும் அமுக்கி வாசித்ததும் இல்லாமல் இந்த பயங்கரவாதியையும் முஸ்லிமாக அடையாளம் காட்ட வேண்டும் என்று இந்த ஊடக நரித்தனத்தோடு யானையை சோற்றில் மறைக்க நினைத்த சதியை பாருங்கள்.சங்கரை ஷாருக்கான் ஆக்கிய மாலைமலரும்,தினமணியும்.மாலை மலர் - சங்கர் என்ற ஷாருக்கான் - கொஞ்சம் எடிட்டிங். இவன் அண்ட புளுகன் என்றால் ஆகாச புளுகன் தினமணியில் - ஷாருக்கான் என்பவன் கைது.முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும் அசிங்கப் பட்டு போய் விடுகிறது. ஆனாலும் இவர்கள் தொடர்ச்சியாக ஒரே சமூகத்தை தீவிரவாதிகளாக்கி திட்டமிட்டு குறிவைத்து இயங்குகிறார்கள். மேலே உள்ளது தினந்தந்தி

உள்ளே சொல்வது... //வெடிகுண்டு போன்ற பொருளை//, 
ஆனால்... தலைப்பில்.. அந்த "போன்ற" மட்டும் மிஸ்ஸிங்..!

மேலும் சில ஆங்கில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமாக வந்த செய்திகள் இந்த பத்திரிக்கைகளில் எங்குமே ஷாருக்கான் என்கிற பெயர் இடம் பெற வில்லை.

பார்க்க சுட்டிகள்:

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F316055%2Fone-more-held-planting-bomb.html&h=zAQFSknm3

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fzeenews.india.com%2Fnews%2Futs%2Fman-arrested-over-planting-of-bomb-like-object-in-puducherry_832031.html&h=WAQFuk0qW

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fnews.outlookindia.com%2Fitems.aspx%3Fartid%3D791089&h=JAQExa8e4

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Fwire-news%2Fone-more-held-for-planting-bomb-like-substancetrain_833253.html&h=7AQHUheXq

13 comments:

 1. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
  இன்னாலில்லாஹி...!

  இதெல்லாம்.....
  இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு
  இந்தியதேசத்தந்தை மஹாத்மா காந்தியாரை கொன்ற அதே...
  இழிந்த காவி ஆர் எஸ் எஸ் புத்திதான்...
  இந்த சங்கரை ஷாருக்கானாக இப்போது மாற்றுகிறது..!
  இதுக எல்லாம் சமுதாயத்தில் பெரிய ஆளுங்க..! ஐயே..!
  இவ்வளவு கீழ்த்தரமாகவா ஊடக வியாபாரம் செய்து வயித்தை கழுவி குடிக்கணும்..? ச்சீ..!
  இதெல்லாம் ஒரு பொழப்பா..? த்தூ..!

  ReplyDelete
 2. இது மாதிரி பத்திரிக்கைகள் உள்நோக்கத்துடன் எழுதி எழுதி இரு மதததினருக்கும் தீரா பகையை உண்டடாக்கி மக்களைக் கேடுக்கிர்ர்கள். இது தேவையா? இவர்களை தண்டிக்க வேண்டாமா?

  நாங்கள் படித்த போது ஒவ்வொரு நண்பர்கள் குழுவிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் உண்டு; அந்தப் பெயரை வைத்துதான் அன்பாகக் கூப்பிடுவோம்: ஒரு பாய், ஒரு பாதிரி, ஒரு ஐயர், ஓர் நாயுடு எப்படியும் உண்டு...! ஏனோ மீதி ஜாதி பெயரை வைத்து நண்பர்களை கூப்பிடவில்லை!

  அப்படி அன்பாக கூப்பிடும் வழக்கம் இப்போது ஒழிந்து விட்டது என்று நினைக்கிறேன். அதோடு இந்த இளைய தலைமுறை அன்பு பாசம் இவைகளை விட்டு வெறுப்புடன் வாழ்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. You are right boss. Munnadiellam antha maathiri nick name solli koopidum podhu oru paasam irukkum. Ippo antha maadhiri koopta doubt than varuthu. Idhukku yaaru kaaranamnu nenaikiringa??

   Delete
  2. இன்றும் என் முஸ்லிம் நண்பர்கள் இருவரை பட்டப் பேர் வைத்துத்தான் கூப்பிடுவேன்; மற்றவர்களையும் அப்படிதான்...ஐயரெ என்று கூபிடுவதிலும் ஒரு சுகம். டேய் நாயுடு...அல்லது நாயுடு காரு; கிண்டல் பண்ண வேண்டுமென்றால் கொல்டி..இபபடி

   அவர்களும் எனக்கு ஒரு பேரை வைத்துத் தான் கூப்பிடுவார்கள். சில சமயம் என்னை ஒருத்தன் மாப்பிளே! என்பான் உன்னோருதன் மச்சான் என்பான்! என்ன எனக்கு சொந்தமா? இல்லவே இல்லை---இப்ப இந்தியாவிற்கு போனபோதும் இப்படிதான் கூப்பிட்டர்கள்.

   நாங்கள் வருத்தப் படுவோம்...தமிழ்நாட்டை--யும் இப்படி நாசம் பண்ணி விட்டுடானுன்களே என்று.

   Delete
 3. மலம் தின்னும் பன்றிக்கு ஒப்பானவர்கள்..

  ReplyDelete
 4. மலம் தின்னும் பன்றிக்கு ஒப்பானவர்கள்..

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்
  தவறான செய்திகளையும் உண்மைச் செய்திகளை திரித்தும் பச்சைப் பொய்களை பரப்பி சமூகத்தில் நிலவி வரும் அமைதியான சூழலை கெடுக்க நினைக்கும் இவர்கள் மனிதர்களே அல்லர் .

  ReplyDelete
 6. ம்ம்..கொடுமையான விடயம்தான்

  ReplyDelete
 7. சலாம், ஜனநாயகத்திற்கு பத்திரிக்கை ஒரு தூணாம். ஜனநாயகமே எங்கே என தேடும் போது இந்த தூண் தேவையற்ற ஒன்று அழியவேண்டியது

  ReplyDelete
 8. சரியான ஊடகம் முஸ்லீம்களுக்கு இல்லாததும் ,சரியான முஸ்லீம்கல் ஊடக துரையில் இல்லாததும் மிக முக்கிய காரனிகள் ஆகும்

  ReplyDelete
 9. போங்கடா ...போய் நடிகைகளின் கவர்ச்சிப்படத்தைப்போட்டு பிழைப்பு நடத்துங்க ...

  ReplyDelete
 10. போங்கடா ...போய் நடிகைகளின் கவர்ச்சிப்படத்தைப்போட்டு பிழைப்பு நடத்துங்க ...

  ReplyDelete