Tuesday, January 17, 2012

மிரட்டும் பணவீக்கம்...! மீளுமா தேசம்?

நாட்டின் பொருளதாரம் எப்படிப் போனால் எனக்கென்ன? எனக்கு நிரந்தரமான ஒரு வருமானம் இருக்கிறது என்று யோசிப்பவரா நீங்கள்? உங்கள் பையில் 100 ரூபாய் இருந்து,நாளை ரூபாயின் மதிப்பு 1 குறைந்தால் உங்கள் பையில் இருப்பது 99 ரூபாயாகத்தான் இருக்கும்.அரசு நேரில் வந்து அவரவர் பையில் இருந்து 100 ரூபாய் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; பணவீக்கத்தைக் காரணம் காட்டி பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டால் போதும்;ஏறும் விலையேற்றத்தை ஈடுசெய்ய உங்கள் பைகளை நீங்களே காலி செய்யத்தான் வேண்டும்.

இது குறித்து பொருளியல் வல்லுநர் சுபிக் பரூலா குறிப்பிடுகையில் “கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் மிகவும் அதிகரித்து இருந்தது.இதனையடுத்து பொதுமக்கள் அவர்களின் வருமனத்தில் பெரும்பகுதியை உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகச் செலவிட்டுள்ளனர்”என்கிறார்.

ஆசிய கண்டத்தில் கடன் சுமையுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி 39.3 லட்சம் கோடி கடன் உள்ளது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68 சதவீதம் ஆகும்.உலக வங்கியிடம் அதிக அளவு கடன் வாங்கியதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

“அரசின் நிதிக் கையிருப்பு குறைந்துள்ளதாலும் சிறு சேமிப்புத் திட்டங்களில் இருந்து அதிகப் பணம் திரும்பப் பெறப்பட்டதாலும் கூடுதலாகக் கடன் பெற வேண்டியுள்ளது” என மத்தியப் பொருளாதார விவகார்ங்கள் துறைச் செயலர் ஆர்.கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.ஆசியாவிலேயே இந்திய ரூபாயின் வெளி மதிப்பில் தான் டாலருக்கு எதிராக ஏப்ரல் முதல் இதுவரையில் 17% அளவிற்கு அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.டாலரின் தட்டுப்பாடுதான் காரணமென்றால் ஏன் மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பு அந்த அளவுக்குச் சரிவடையவில்லை?

“நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு நவம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 426 கோடி டாலர் (21,300 கோடி)சரிவடைந்து 30,437 கோடி டாலராக (15,21,850 கோடியாக) குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 34,50 கோடி டாலர் சரிந்து 261,20 கோடி டாலராக குறைந்துள்ளது.2,680 நிறுவனங்களின் நிகர லாபம் சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 25% வீழ்ச்சியடைந்துள்ளது பரஸ்பர நிதி நிருவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு நவம்பர் 30 வரையிலான காலத்தில் 13,782 கோடி ரூபாய் சரிவடைந்து 6,81 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது 2011 ஜனவரி-நவம்பர் வரையான 11 மாத காலத்தில் புதிய பங்குகள் மூலம் திரட்டப்பட்ட தொகை 89% குறைந்து114 கோடி டாலராக (5,472 கோடி) சரிந்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பிலும்,தங்கத்தின் விலையிலும்,பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.சற்று ஆழமாகச் சென்று பார்த்தால் சிறிது சிறிதாகச் சரிவை நோக்கியே செல்வது விளங்கும். சிறிது சிறிதாக நம்மீது சுமையை ஏர்றுகிறார்கள்;நாமும் பாரம் தெரியாமல் சுமந்து நடந்து கோண்டிருக்கிறோம்.

அண்மையில் அந்நிய நிதி நிறுவனங்கள் அவற்றின் மொத்த முதலீட்டில் இருந்து 3,263கோடி ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளன.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படிஜூன் மாதம் வரையில் வெளிநாடுகளில் இந்திய முதலீடு 5.04 லட்சம் கோடி ரூபாய்.இந்தியா கடனில் மூழ்கும் போது வெளிநாடுகளில் வசமுள்ள இந்திய முதலீடுகளும் சேமிப்புகளும் முடக்கப்படும்.

மொத்த விலை குறீயீட்டு எண்(டபிள்யூபிஐ) அடிப்படையில் அளவிடப்படும் உணவுப் பணவீக்கம் அக்டோபர் 22 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.21 % உயர்ந்துள்ளது கடந்த ஓர் ஆண்டில் காய்கறி விலை 28.89% உயர்ந்துள்ளது.முட்டை,கறி,மீன் ஆகியவற்றின் விலை 13.36% உயர்ந்துள்ளது. ஐநட் பிராங் என்ற நிறுவனம் ‘வீட்டு விலைஉயர்வு’ பற்றி சர்வதேச அளவில் 2010,2011 ஆம் ஆண்டுகளில் ஏப்ரல் ஜூன் காலாண்டை ஒப்பிட்டு நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் வீட்டு விலை 21.3% அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சராசரியாக 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிஸ்கட் நிருவனங்களான பிரிட்டானியா,ஐ.டி.சி,பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் மீது 2% முதல் 10% வரை உயர்த்தியுள்ளன.

“சோப் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது.இதனால் இந்த பொருட்களின் விலையை உயர்த்தத் தயாரிப்பளர்கள் திட்டமிட்டுள்ளனர்” என்று அடிப்படை இரசாயனம்,மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவின்சில் தலைவர் சதிஷ் வா குறிப்பிட்டுள்ளார். முண்ணனி மிண்ணனு நிறுவனங்களானஏசர்,எல்.ஜி.சாம்சங்,லாவா,மைக்ரோமேக்ஸ்,அகாய்,
ஒனிடா போன்ரவை தங்களுடைய பொருட்களின் விலையை 10% வரை உயர்த்தியுள்ளன.கோத்ரெஜ்,எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேர்ல்பூல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தொலைக்காட்சிப் பெட்டிகள்,வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் விலையை 8% வரை உயர்த்தியுள்ளன.


பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி ரூபாயின் மதிப்பை உயர்த்தாமல் போனால் பன்னாட்டு நிதியகத்தில் சேர்த்து வைத்துள்ளவற்றுக்கும் மதிப்பிருக்காது.இதுவரை வாங்கிய கடனோடு இன்னொரு லட்சம் கோடி லட்சம் கடன் வாங்கினாலும் அதற்கும் மதிப்பிருக்காது.


ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மதிப்பில் 2,00,000 கோடிக்கு 200 கோடி 1000 ரூபாய் நோட்டுகளையும், மதிப்பில் 1,00,000 கோடிக்கு 200 கோடி 500 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 61,000 கோடிக்கு 610 கோடி 100 ரூபாய் நோட்டுகளையும்,மதிப்பில் 60,000 கோடிக்கு 120 கோடி 50 ரூபாய் நோட்டுகளையும் அச்சடிக்க உள்ளது. இவை மட்டுமின்றி 10,000 வரை மதிப்பிலான ரூபாய் நோட்டையும்,1,000 வரை மதிப்பிலான நாணயத்தையும் வெளியிட ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
இந்தியரான நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். ‘எவ்வளவு பணம் நம்மிடம் இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல பொருளதார வளர்ச்சி. ‘நம்மிடம் இருக்கும் பணத்திற்கு உலக சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது’ என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் பொருளதார வளர்ச்சி. யோசித்துச் சொல்லுங்கள்,நாம் பொருளாதாரத்தில் வளர்கிறோமா? அதிகப்படியான பணத்தை அச்சிட்டு வெளிச்சந்தையில் உலவ விடுவது நாட்டின் பண மதிப்பை வெகுவாகக் குறைத்து விடும்.


இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த,அல்லது ஈடு செய்ய கடந்த 20 மாதங்களில் மட்டும் 13 முறை (3.75%) கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.இதனால் தொழில்துறை உற்பத்தி சரிவடைந்து வருகிறது. உற்பத்தி வரி கடந்த அக்டோபரில் மட்டும் 11,120 கோடிலிருந்து 5.3% குறைந்து 10,537 கோடியாக உள்ளது.

ஆனால் மறுபுரம் இந்தியாவில் கார்கள்,தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பலவேறு ஆடம்பரப் பொருட்களின் மொத்த விற்பனை மதிப்பு 20% உயர்ந்து 28,500 கோடி ரூபாயாக உள்ளது. “இந்தியாவில் முறையாக வருமான வரி செலுத்துவோர் 3.36 கோடி (மொத்த மக்கள் தொகையில் 2.77%)” என நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிக தனிநபர் சொத்துகள் வைத்திருப்பவர்கள் 21% உயர்ந்து 1,53,000 ஆக உள்ளது. ‘டி.என்.எஸ் இந்தியா நிறுவனம்’ ஒரு டாலருக்கும் (49,00,000) அதிகமாக ரொக்கப் பணம் வைத்துள்ளவர்களைப் பணக்காரர்களாக எடுத்துக் கொண்டு நடத்திய ‘குளோபல் அஃப்லூவன்ட் இன்வெஸ்டர்’ சர்வேயின்படி இந்தியா 30 லட்சம் மக்களுடன் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்தியாவில் பணக்காரர்கள் வரிசையில் 2,260 கோடி டாலருடன் முகேஷ் அம்பானி முதலிடத்திலும்,1,920 கோடி டாலருடன் உருக்காலை அதிபர் லஷ்மி மிட்டல் இரண்டாம் இடத்திலும், 1,300 கோடி டாலருடன் விப்ரோ அசீம் பிரேம்ஜி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அமெரிககாவின் போர்ப்ஸ் வணிக இதழ் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டாலர் முதல் 100 கோடி டாலர் (4,500 கோடி) வரை வருவாய் ஈட்டும் முன்னணி 200 நிறுவனங்களைப் பட்டியல்லிட்டதில் 35 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள்.2010-11 ஆம் நிதியாண்டில் பி.பி.ஒ நிறுவனங்களின் வருவாய் 13% உயர்ந்து 32,246 கோடியாக அதிகரித்துள்ளது.

இது சமநிலை இல்லாத பொருளாதாரம்;அரசிடமுள்ள கையிருப்பை விடவும் சில தனிமனிதர்களிடம் குவிந்திருக்கும் பொருளாதாரம். நாளை உலக நாடுகள் அவர்தம் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முற்படும். அந்த நாளில் மீண்டுவர முடியாத பொருளாதாரப் பின்னடைவை இந்த உலகம் சந்திக்கும். அரசு வரிகள் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முற்படுகிறது; அப்பாவிகள் அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.


இந்திய தேசம் தவறவிட்டுக் கொண்டிருக்கும் விஷயம் நாடு முழுமைக்கும் எப்படிப் பொருளாதாரத்தைச் சீராகப் பரப்புவது என்பதும்,நாட்டு மக்களின் செலவுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் தான்.

இந்த தேசத்தின் விலையேற்றத்தோடு போட்டி போட்டுத் தோற்றுப் போனவர்களைத் தெருவெங்கும் பார்க்கலாம்.


நன்றி: (சமரசம் 16-31 ஜனவரி 2012)

காதியானிகள்(அஹமதியாக்கள்) யார்? புத்தக அறிமுகம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சாபிலுள்ள ‘காதியன்’ எனும் ஊரில் மிர்சா குலாம் அஹமத் என்பவர் தன்னை ஒரு ‘நபி’ என்று அறிவித்துக் கொண்டார் அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க அரசு இவர்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தது.மிர்சா குலாம் அஹமதைப் பின்பற்றுபவர்கள் ‘காதியானிகள்’ என்றும் ‘அஹமதியாக்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மிர்சா குலாம் அஹமத் அவர்கள் தன்னை ‘நபி’ என்று மட்டுமல்ல, தானே ‘ஏசுவின் மறு வருகை’ என்றும் தானே ‘மாஸீஹ் மவ்ஊத்’(வாக்களிப்பட்ட மஸீஹ்) என்றும், தானே ‘கல்கி’ அவதாரம் என்றும் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டார்.தொடக்கத்தில் தன்னை ‘நிழல் நபி’ என்று அழைத்துக் கொண்டார், போகப் போக ,தானே நபி’என்றும் வாதிடத் தொடங்கினார்.

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் இந்த தீக்குறும்பர்களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இவர்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு உதவியது போல் இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கும் இன்றைய 'செங்கொடி' வகைறாக்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆகவே காதியானிகள் யார்?, அவர்களின் கொள்கைகள் என்ன?, அவருடைய தீய நோக்கத்தின் பின்னணி என்ன?,அவர் எந்த அளவுக்கு வழிகெட்டுப் போனவர் எனபதை அஹமதின் நூல்கலிலிருந்தே ஏராளமான எடுத்துகாட்டுகளைத் தந்து காதியானிசத்தின் முகத்திரையைக் கிழித்துள்ளது இப்புத்தகம்.

இந்நூலின் ஆசிரியர் P.P. அப்துல் ரஹ்மான், காதியானிஸத்தின் கொள்கை பற்றிய உர்தூ மூல நூல்களை எல்லாம் சேகரித்து,மிர்சா குலாம் பற்றியும் அவரது முன்னுக்குப் பின் முரணான,அபத்தமான நபித்துவ வாதங்கள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுத்தெழுதிய,
‘காதியானிஸம் ஓர் தொகுப்பு’ என்ற ஏழு தொகுதிகளைக் கொண்ட மலையாள நூலின் முதலாம் தொகுதி தமிழாக்கம் தான் இந்நூல்.

ஏழு தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியும் தனித் தன்மையுடன் இருப்பதால் தொடர்ச்சியாய் வாசிக்காவிட்டாலும் பாதகமில்லை;எனினும் அனைத்துத் தொகுதிகளையும் வாசிப்பதே பலனளிக்கும்.

பின்குறிப்பு:
 காதியானிகள் சம்மந்தமாக விரிவாக எளிமையாக விளக்கி தொடர் பதிவு (இன்ஷா அல்லாஹ்) எழுத போகிறேன் விரைவில்.

நூல்:காதியானிகள் யார்?
தொகுப்பாசிரியர்
P.P. அப்துல் ராஹ்மான்
தமிழில்
K.M முஹம்மது
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை-600012

Friday, January 13, 2012

தமிழ் முஸ்லிம்களின் நாட்டார் மரபு பழமொழிகள்

முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கில் உள்ள சில அழகிய பழமொழிகளை இப்பதிவின் மூலம் அறிமுகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

 ‘பள்ளியைத் தின்ற குடி பற்றி எரியும்’ 
‘பள்ளி’ என்ற சொல் பள்ளிவாசலுக்கு உரிமையான செல்வத்திற்கு ஆகி வந்தது என்றும்,‘குடி’என்ற சொல்லுக்கு வம்சம்,மரபுவழி,குலம் என்று பொருள் உணர்ந்து கொண்டால்,அப்பழமொழி உணர்த்தும் ஆழிய பொருளை நாம் அனுபவிக்க முடியும்.

‘சிவன் சொத்து குல நாசம்’ 
என்ற இந்து சமயத்தவரின் பழமொழியோடு,இப்பழமொழியை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

‘அன்பு’என்ற ஒற்றைச் சொல்தான் அவனியையே இயக்குகிறது.
அன்பில்லாதவனை மக்கள் வெறுக்கிறார்கள்.அன்பில்லாதவனை ஆண்டவனும் வெறுத்து ஒதுக்குவான் என்கிறது ஒரு இஸ்லாமிய பழமொழி
‘அன்பில்லாதவன் வீட்டில் அல்லாஹ் குடியிருக்க மாட்டான்’ 
என்பது தான் அந்த பழமொழி அகும்
“வாயில் ஓதல் இருந்தால் வழியெல்லாம் சோறு”
ஓதல் என்ற சொல்லை,கல்வி என்று பொருள் கொள்ளலாம்.படித்தல் என்ற பொருளைத் தருகிற ‘ஓதுதல்’என்ற சொல்லை இஸ்லாமியர்கள் பேச்சு வழக்கில் மிக இயல்பாகக் கையாள்கின்றார்கள்

“கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு”
என்ற பொதுத்தமிழ் பழமொழியுடன் இப்பழமொழியின் பொருளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது.இதே தொனியில் உள்ள இன்னொரு இஸ்லாமியப் பழமொழி. “ஞானமும் கல்வியும் ஆணமும் சோறு” என்பதாகும்.

‘ஆணம்’என்பது இஸ்லாமியர்களிடம் மட்டுமே புழங்கும் ஒரு வழக்குச் சொல்லாகும்.ஆணம் என்றால் கொழம்பு என்று பொருள்.

 “பொதுவாக மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியம். மனிதர்களின் கல்வியும்,அறிவும்,முதலில் அவர்களது பசியைப் போக்க உதவி செய்வதாக இருக்க வேண்டும்” என்ற கருத்தை இப்பழமொழி வலியுறுத்துகிறது.

சிலர் நெஞ்சுக்கு நேரே நம்மைப் புகழ்ந்து பேசுவார்கள்.அதே ஆள்,நம் முதுகுக்குப் பின்னே நம்மைத் தூற்றுவார்கள்.இந்த வாழ்வியல் நடைமுறையை , “கண்டா சாயுபே,காணாட்டி பாவியே” என்ற பழமொழிச் சுட்டிச் சொல்கிறது.
தொழுகையாளிகள் எதார்த்த வாழ்வில் நேர்மையுடன் வாழ வேண்டும் என்ற கருத்தை 
“தொழுகிறான்,தொழுகிறான் அல்லாஹ்வுக்காக,வைக்கோலை களவாடறான் மாட்டுக்காக!’
என்ற பழமொழி விளக்குகிறது.இப்பழமொழியில் ‘அங்கதச் சுவை’ அமைந்துள்ளது.
‘தொழாதவனின் ‘கிப்லா’ எல்லாத் திக்கிலும்’
என்கிறது இன்னொரு பழமொழி.திக்கு- என்ற வாட்டார வழக்கு சொல்லுக்கு ‘திசை’ என்பது பொருள். ஒரு முஸ்லிம் உலகத்தில் எந்த மூலையிலிருந்தும் இறைவனைத் தொழுதாலும்,தொழுகின்ற ஒவ்வொருவரும் ‘கிப்லா’ கஅபாவை முன்னோக்கி நின்றுதான் தொழுவார்கள்.

இறைவனை நம்புகிறவர்களுக்கும்,தொழுகையைக்
கடைப்பிடிக்கிறவர்களுக்கும் தான் ‘கிப்லா’வின் திசை தெரியும்...! இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கிப்லாவின் திசையைப் பற்றி கவலை இல்லை என்பது இப்பழமொழி விளக்க வரும் பொருளாகும்.

‘பிறவிக் குணத்திற்கு மட்டை வைத்துக் கட்ட முடியுமா?’’ என்று கேட்கிறது ஒரு தமிழ் பழமொழி.இதே கருத்தை அடியொட்டி, 
‘அரபிக் குதிரை என்றாலும் பிறவிக் குணம் போகாது’ என்கிறது ஒரு இஸ்லாமியப் பழமொழி.

சில பழமொழிகளைக் கேட்கிற போது நமக்குச் சிரிப்பு வந்து விடுகிறது.
 “உள்ளது ஒரு பிள்ளை என்று ஒண்பது தடவை சுன்னத் செய்தானாம்!”
என்ற பழமொழியில் நகைச்சுவை உணர்வு உள்ளது.

சகோதரச் சமுதாயத்தினரின் பேச்சு வழக்கில் 
“அப்துல் காதருக்கும்,அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்” என்பது போன்ற வழக்கு வழக்குத் தொடர்கள் பயன்படுத்தப் படுகின்றன.

அல்லாஹ்வை வணங்கினால், இம்மை -மறுமை இரண்டிலும் நன்மை கிடைக்கும் எனது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.இக்கருத்தை,
“அல்லாஹ்வைத் தொழுதால்-ஆகிரமெல்லாம் சொர்க்கம் தான்!”
என்கிறது ஒரு பழமொழி.ஆகிரம் என்றால் ‘மறுமை’யாகும்.

Thursday, January 12, 2012

சவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு



"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால்  உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உணவகத்தைப் பற்றிய செய்தி இது:

எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.


உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப் நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட அவர் விரும்பவில்லை.

இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.
நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து.  இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்.

நன்றி:http://ihzannetwork.blogspot.com/

Wednesday, January 11, 2012

யார் இந்த பக்கீர்ஷாக்கள்? இறுதி பாகம்


யார் இந்த பக்கீர்ஷாக்கள்? என்கிற முந்தைய மூன்று பாகங்களை வாசிக்காதவர்கள்கீழேயுள்ள இணைப்பை அழுத்தி, படித்துவிட்டு பின்னர் இந்த பகுதியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்..

யார் இந்த பக்கீர்ஷாக்கள்?

யார் இந்த பக்கீர்ஷாக்கள்-பாகம்2

யார் இந்த பக்கீர்ஷாக்கள்-பாகம்.3


மார்க்கம் தனிமையை, துறவறத்தை அனுமதிக்கவில்லை.
மார்க்கத்தைப் பொறுத்தவரை தீய செயல்களிலிருந்து விலகி வாழ்வதுதான் உண்மையான துறவறம்.தனிமை.தீயவர்கள்,வீணான கரியங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள், சீர்கேடுகளை விளைவிப்பவர்கள் ஆகியவர்களிடமிருந்து விலகிச் செல்வது தான் துறவறம்.


இந்த சூஃபியாக்கள்பக்கீர்கள் வேறு வகையான தவறான துறவறத்தை மேற்கொண்டு ஆசிரமம் அமைத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வாழ்ந்தார்கள். சமகால அரசியலில் என்ன நடந்தாலும் இவர்கள் சட்டை செய்வதுமில்லை.

இரண்டு வாசல்படிகளை எவன் மிதிக்கவில்லையோ அவன் பாக்கியசாலி,ஒன்று அரசனின் வாசல்படி, இரண்டு வைத்தினின் வாசல்படி” என்றுதத்துவம் பேசினார்கள். இவர்களுடைய சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் இதேபோதனையை செய்தார்கள். பூமிக்கு கீழேயுள்ள(மண்ணறை வாழ்க்கை)வைகளையும் வானுக்கு மேலேயுள்ள(மறுமை வாழ்க்கை)வைகளையும் பற்றி மட்டும் பேச வேண்டும் என்ற இவர்களின் தத்துவமே பின்னாளில் இவர்களின் வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் பாதையை திறந்துவிட்டது. அரசாளும்வர்க்கம் சபாஷ் இதுவல்லவா மார்க்கம்சூபி இஸ்லாம் அமைதி புறா என்று புகழ்ந்தார்கள்.

இவர்கள் ஆபத்தற்றவர்கள் என்பதால் அன்றைய ஆளும் அதிகார மையங்கள் இவர்களை பராமரித்தார்கள்இன்றும்கூட இந்தியாவின் ஆளும் வர்க்கமாக உள்ள பார்ப்பனர்கள் வஹாபிஸத்தை எதிர்ப்பதையும் சூஃபிஸத்தை இந்தியாவிற்கு ஏற்ற மார்க்கம் என்று புகழ்வதை பார்த்திருப்பீர்கள். இதற்குள் வலுவான கடந்தகால அரசியல் காரணங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை கொண்ட மவோயிஸ்ட்களிலிருந்து,நாத்திகர்கள்கம்யுனிஸ்ட்கள்பின்நவீனத்துவாதிகள் என அனைவருக்கும்,“இந்த உலக (துனியா) வாழ்க்கை தேவையில்லை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கேன்ன” என்கிற சூஃபிஸ கொள்கை சர்க்கரைப்பந்தலாக இனிப்பன் கராணமும் இதுதான். அரசியல் அதிகாரங்களை அடைய நினைக்கும் இவர்களின் அபிலாஷைகளுக்குஒருபோதும் சூஃபிகள் தடைகற்களாக இருக்கமாட்டார்கள்இருக்கவும்முடியாது.

தொடர்ந்து ஆளும் வர்க்கமாக தொடர நினைக்கும்
இந்துத்துவாவாதிகளும்,அதிகாரத்தை வருங்காலங்களில் கைப்பற்ற கனவு காணும் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதிகளும் மூடப்பழக்கமற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படைக் கொண்ட ஒரிறைவாதிகளை தூற்றுவதையும்தாயத்து,தட்டு, மாந்திரீகம்கல்லறைவழிபாடு போன்ற உச்சகட்ட மூடப்பழக்கத்தை மார்க்கமாக கொண்ட சூஃபிஸவாதிகளை மூடப்பழக்கத்தை ஒழிக்க பிறந்த முற்போக்குவாதிகள்(!?)’ என   கள்ளமவுனம் சாதிப்பதும் மறதியினாலோ,எதர்த்தமானதோ 
அல்ல.

சரி விஷயத்துக்கு வருகிறேன்
அன்றைய இஸ்லாமிய,இந்துமன்னர்கள் பற்றற்ற பக்கீர்களுக்கு காணிகளை ஒதுக்கிஅவர்களின் மஹான்களுக்கு தர்ஹா கட்டுவதற்கும், அதைச்சுற்றி சூழல் சார்ந்த ஆன்மீகம் வியாபரம் செய்வதற்கும் ஏதுவாக இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்தார்கள்.

தாயத்து விற்கும் பக்கீர்ஷா பிரிவை சேர்ந்த சாயிபுகளின் வியாபர கடைகள்
கட்டும் தாயத்துக்களை வீடு வீடாக சென்று அறுத்தெறியும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றும் தவ்ஹீத் பெண் பிரச்சாரகர்.

தற்கொலைஇணைவைப்பு இரண்டும் (ஹாரம்) இஸ்லாத்திற்கு விரோதமானது என எச்சரிக்கும் ஒரிறைக் கொள்கைவாதிகள். இவர்கள் ஆளும் ர்க்கங்களின் தலைவலிகள்.

வீடு வீடாக சென்று கொட்டடித்து, மஹான்களின்  அருமை பெருமைகளை பாடி காணிக்கைகளை பெற்ற இவர்களின் நடொடி வாழ்க்கைமுறை மாறி
பக்தர்கள் இவர்களின் குடியிருப்புக்களை (தர்ஹாக்களை) நோக்கி வர குடியிருப்புக்களில் ங்கி வியாபரம் செய்த பக்கீர்களில் சாயிபுகள்,லெப்பைகள் என இரு புதிய பிரிவுகள் உண்டாகியது (இன்றும் நாகூர்,ஏர்வாடி தர்ஹா போன்றவற்றினை நிர்வகிப்பது சாஹிபுகள் தான்).

இந்த இஸ்லாமிய புதிய பூசாரி (சாயிபுகள்) அல்லாத, வாய்ப்பு கிடைக்காத ஏழை பக்கீர்கள் அல்லது புகழ்பெற முடியாத ஒவ்வொரு ஊர்களிலும் இஸ்லாத்திற்கு விரோதமாக இருக்கும் தாய்த்து தெரு குடியிருப்புவாசிகள் கொட்டடித்து பாட்டு பாடி பிழைப்பது மட்டும் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால் வேறு தொழில்களிலும் ஈடுபாட்டார்கள்.

ஆரம்பத்தில் தியாகம்அர்ப்பணிப்புகொள்கைக்காக தன்னையே விட்டுகொடுத்தல்இந்தியாவில் இஸ்லாத்தின் தூதை பரப்பக்கூடியப் பணி தங்களுடைய தோளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து செயல்பட்ட சிறு கூட்டம் இவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?ஆனால் அதுதான் உண்மை! 

கிடைத்த ஒரு சில அழைப்பாளர்களுக்கென்று பிரத்யேகமான சட்டங்களை சூபிக்கள் உருவாக்கினார்கள். (இந்த சட்டங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேறு விஷயம்)

1.சூபிக்களிடம் உங்களுக்கு முழுமையாக கட்டுப்படுவேன் என்று பையத்(சத்தியப்பிராமணம்) செய்ய வேண்டும்.
(ஏனென்றால் குறைவான நபர்கள் இருந்ததால் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது.)

2.உழைத்து சம்பாதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும்.
(இருக்கிறதே அற்ப நபர்கள். இவர்களும் சம்பாத்தியம் வியாபரமென்று  போய்விட்டால்
அழைப்புபணியை யார் செய்யுறது? அதனால 24 மணி நேர ஊழியர் தேவை.)

3.இந்த வாழ்க்கையை ஒரு பயணியை போல் வாழ வேண்டும்.பயணி என்பதை நினைவில் மறக்காமல் இருப்பதற்காக தன்னை முஸாபர்என்றே அறிமுகப்படுத்த  வேண்டும். (அரபி மொழிப்படி (முஸாபர்) என்றால் பயணி.ஆனால் பேச்சு வழக்கில் 
பிச்சைக்காரர்களை குறிக்கும் சொல்லாக மாறியதற்கு இந்த பக்கீர்கள்  தான் காரணம்.)

4.உலக வாழ்க்கையில் மையத் (உயிரற்ற பிணம்) போல இருப்பேன்  என்று உறுதிமொழி  எடுக்க வேண்டும்.

இதை ஒரு சடங்காக செய்வார்கள். 6அடி குழி வெட்டி அதில் உயிரோடு சில நொடிகள் புதைத்து அப்புறம் வெளியே எடுப்பார்கள்அதாவது மெளத்தா(இறந்து) போய் விட்டார்.நடமாடுவது மையத்(பிணம்). அதற்கு எந்த ஆச பாசமும் கிடையாது என காட்டுவதற்கு!ஒருவர் பக்கீர் ஆவது என்றால் சும்மா ஆகிவிடமுடியாது. இதற்கு மேற்கூறிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

இப்படி அவர்களின் அன்றைய பார்வையில் தெளிவான பிரச்சார இயக்கமாக ஆரம்பித்து இன்று சிதைந்து சாம்பிராணி போடுவதுகந்தூரி மற்றும் திருவிழாக்களில் பலூன் வியாபரம்அம்மி,ஆட்டுக்கல் ஆகியவற்றை உளியை வைத்து கொத்தி கொடுப்பது,(மய்யத்) மரணித்த மனிதர்களை அடக்குவதற்கு குழி வெட்டுவதுவெளியூர்களுக்கு சென்று வீடு வீடாக கொட்டடித்து பிச்சை எடுப்பது  என இப்படி அடையாளம்மாறிபோனார்கள்.

பின் குறிப்பு:
இவர்களைப் பற்றிய நிறைய தகவல்களை ஆய்வுரீதியாக சேகரித்து வைத்திருக்கிறேன்.விரைவில் பிரபல பதிப்பகத்தின் மூலம் புத்தகமாக (இன்ஷா அல்லாஹ்) வெளியிப்போகிறேன்உங்களுடைய ஆரவை எதிர்ப்பார்க்கிறேன். பதிவு இத்தோடு முற்று பெறுகிறது.


Tuesday, January 10, 2012

அண்ணா கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்!-அருந்ததி ராய்

அருந்ததி ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. அதிரடிப் பேச்சுக்காரர். அறிவு ஆளுமைகளில் முக்கியமானவர். உலகமயமாக்கலுக்கு எதிரானவர். அதனாலேயே வளர்ச்சிக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். ஆங்கிலத்தில் 'புரோக்கன் ரிபப்ளிக்' என்ற தலைப்பில் தான் எழுதிய புத்தகம் 'காலச்சுவடு' பதிப்பகத்தால் 'நொறுங்கிய குடியரசு' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்திருந்த அருந்ததி ராயைச் சந்தித்தேன். இரு மாநில மக்களிடையே கொந்தளிப்பான சூழல் நிலவுவதால், இப்போதைக்கு 'முல்லைப் பெரியாறு' தவிர்த்து எதுவும் பேசலாம்" என்றபடி பேட்டிக்குத் தயாரானார்.

ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்துக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது?

"பெண்களைப் பொறுத்த வரையில், இந்தியா மிகவும் சுவாரஸ்யமான தேசம். வலிமை வாய்ந்த பெண்களும் இருக்கிறார்கள். வழி வழியாக ஒடுக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். இன்றும் கூட, 16-ம் நூற்றாண்டு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கும் ஒரு நாட்டில், ஒரு பெண் முதல்வராக இருப்பதை மட்டும் வைத்து பெண்கள் முன்னேற்றம் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது. ஆனால், இரண்டு விஷயங்களை நாம் எப்போதும் நினைவு கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளிலும் பல பெண்கள் கட்டுப்பெட்டிகளாக இருக்கிறார்கள். இங்கே அரசியல் போராட்டங்களில் குறிப்பாக, தண்டகாரன்யா போன்ற இடங்களிலும் பெண்கள் முன் நிற்கிறார்கள். ஆக பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பொதுப்படையாகப் பேசுவது சிக்கலான விஷயம்!"

மாவோயிஸ்ட்கள் பற்றிச் சொல்லும் 'புரோக்கன் ரிபப்ளிக்' புத்தகம் எழுதப்பட்டதன் பின்னணி குறித்துச் சொல்லுங்களேன்?

"இதை எழுத வேண்டும் என்ற ஐடியா எதுவும் என்னிடம் இருக்கவில்லை. சுவாசத்தில் கலந்திருக்கும் காற்றைப் போல கலந்துவிட்ட ஒன்றாக இந்தப் போராட்டத்தை நான் பார்க்கிறேன். கற்பனை செய்து, யோசித்து எழுதப்பட்டதல்ல. என்னுடைய 'காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்' புத்தகம் போன்று என்னைப் பாதித்த, நான் உணர்ந்த விஷயங்களைத் தான் இதில் சொல்லி இருக்கிறேன். 'இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது?' என்ற கேள்வி எதுவும் எழுப்பப்படாமல் பொதுவெளியில் இன்று மௌனம் நிலவுகிறது. 

ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் போன்றவை முறையாகக் கட்டமைக்கப்பட்ட புரிதல்களைக் கொண்டிருக்கவில்லை. 'ஏன் ஊழல் ஏற்படுகிறது?' என்ற கேள்விக்குப் பதில் தனியார்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் ஆகியவற்றால் கொண்டு வரப்படும் அதிகமான பணம் தான். அந்தப் பணம் ஜனநாயகத்தை விலை கொடுத்து வாங்கிவிடுகிறது. ஊழல் என்பது நடைமுறையில் இருக்கும் பிரச்னைகளின் ஒரு பகுதிதான். அதுவே பிரச்னை அல்ல. கிராமங்கள், காடுகள் போன்றவற்றில் நடைபெறும் போராட்டங்கள் இந்தக் கொள்ளையை எதிர்த்துத்தான் கிளம்புகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டுதான் புத்தகத்தை எழுதினேன்!"

உங்கள் கட்டுரை ஒன்றில் மாவோயிஸ்ட்களை 'காந்தியர்கள்' என்று குறிப்பிட்டு இருந்தீர்களே?

"இல்லை! கவனமாகப் படித்தால் நான் சொல்ல வருகிற கருத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். நான் தண்டகாரன்யாவில் இருந்த போது, மாவோயிஸ்ட்களின் நுகர்வுக் கலாசாரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறார்கள். எதையும் வீணாக்குவதில்லை. காந்தியத்தைப் பின்பற்றுபவர்களைக் காட்டிலும் இந்த விஷயத்தில் அவர்கள் அதிகமான காந்தியவாதிகளாக இருக்கிறார்கள். அரசியலை எழுதுவதில் உள்ள முக்கியப் பிரச்னை இதுதான்... முரண்நகைகளை வாசகர்கள் புரிந்து கொள்வதில்லை, எழுதுபவரையும் புரிந்துகொள்வதில்லை!"

இன்னமும் நீங்கள் 'மாவோயிஸ்ட் அனுதாபி' தானா?

"அப்படியென்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பிர்லாக்களை நீங்கள் காட்டுக்குள் விடலாம். ஆனால் ஆதிவாசிகளை நீங்கள் விடமாட்டீர்கள். 99 சதவிகிதம் மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகள். ஆனால் எல்லா ஆதிவாசிகளும் மாவோயிஸ்ட்கள் அல்ல. அவர்களுக்காக எழுதினால் அனுதாபி, ஆதரவாளர் என்கிறார்கள். கார்ப்பரேட் ஊடகங்கள் எனக்கு அளித்த பட்டம் தான் இது!"

உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?

"தீவிரவாதம் என்பது தனியார்மயப்படுத்தப்பட்ட போர். முதலாளித்துவமும் அப்படித்தானே? அமெரிக்காவால் சமீபகாலம் வரை நெல்சன் மண்டேலா கூட ஒரு தீவிரவாதியாகத்தானே பார்க்கப்பட்டார்!"

'காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்புகிறார்கள்' என்று ஒருமுறை பேசி இருந்தீர்களே... அவர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதுதானா?

"எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் ராணுவம், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தன் மக்களைத் தன்னுடையே தேசத்தில் தங்க வைக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை. தாங்கள் அந்த தேசத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் பெருமை கொள்ள முடியும். ஒரு தேசத்தின் மீது பற்றுகொள்ள வைக்க அதன் குடிமக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது. அதில் எந்த ஒழுக்கநெறியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நியாய தர்மங்களுடனும், ஒழுக்கநெறியுடனும் வெளிப்படையான விவாதத்திற்கு வரவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அதே உரிமையும் விருப்பமும் காஷ்மீரிகளுக்கும் இருப்பதில் தவறில்லை!"

ஜார்ஜ் புஷ்ஷை 'போர்க் குற்றவாளி' என்றீர்கள். தற்போது அமெரிக்காவின் அதிபராக ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தின் பிரதிநியாக ஒபாமா இருக்கிறார். ஏதேனும் நம்பிக்கை வருகிறதா?

"அதனால் அமெரிக்காவின் ஆட்சி முறையில் எந்த மாற்றமும் வரவில்லை. சொல்லப்போனால், பிற நாடுகளின் மீது செலுத்தப்படும் போர் விரிவடைந்து இருக்கிறது. கடாஃபியை அவர்கள் கொன்ற விதம் திட்டமிட்ட கொலை. அதற்காக, நான் கடாஃபி நல்லவர் என்று சொல்ல வரவில்லை. தஹ்ரீர் சதுக்கத்தில் ஹோசினி முபாரக்கிடம் இருந்து ராணுவம் பிடுங்கப்பட்டது. அதை அமெரிக்கா ஆதரித்தது. உடனே மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் 'ராணுவம் கைப்பற்றியது; எகிப்து அமைதியானது' என்று எழுதின. இப்போது ராணுவத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம்தான் உண்மையான புரட்சி. ஆனால் இதை அமெரிக்கா ஆதரிப்பதில்லை. அமெரிக்காவாலேயே எகிப்துப் படைகள் வழி நடத்தப்படுகின்றன. மக்களைக் கட்டுப்படுத்த அமெரிக்காவே ஆயுதங்களை வழங்குகிறது. இப்போது என்ன நடக்கிறது என்பது பற்றி ஊடகங்கள் கவலைப்படவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் புதிய பனிப்போர் மூண்டிருக்கிறது. முந்தைய பனிப்போரின் போது பாகிஸ்தான் ஆற்றிய பங்கை தற்போது இந்தியா செய்யும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அது அமெரிக்காவின் துதிபாடி!"

'பாராளுமன்றத் தாக்குதல் விசாரணை முழுமையாக நடத்தப்படாத வரை, முகமது அஃப்சலை தூக்கிலடக்கூடாது' என்று நீங்கள் சொன்ன கருத்துக்காக பா.ஜ.க. உட்பட பல கட்சிகள் உங்கள் மீது சீறின. இந்தியாவில் இஸ்லாமியர்கள் நடத்தப்படும் விதத்துக்கு அஃப்சல் ஓர் உதாரணமா?

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்துப் பார்த்தால் தெரியும். முதலில் நான்கு பேரைக் கைது செய்கிறார்கள். அதில் கிலானி தான் முக்கியக் குற்றவாளி என்றார்கள். இறுதித் தீர்ப்பிலோ 'கிலானிதான் செய்தார் என்பதற்குப் போதுமான ஆதாரமும் இல்லை' என்றார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒருமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளைச் சீண்டிவிடுவதற்காக ஊடகங்கள் தொடர்ந்து பொய்யையே சொல்லிக் கொண்டிருந்தன. நாட்டு மக்களின் கோபம் தணிக்க அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அறைகூவின. அது முற்றிலும் காட்டுமிராண்டித்தனம். பெரும்பாண்மையின் சீரழிக்கும் எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையான குற்றவாளிகள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே அஃப்சலைத் தூக்கிலடத் துடிக்கிறார்கள்!"

அண்ணா ஹஜாரேவைப் பற்றி...

"அவரைப் பற்றி என்ன? பல மக்கள் இன்னும் அவர்கள் அளித்த ஜன்லோக்பால் சட்ட வரைவைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மக்களின் போராட்டம் உண்மையானது. அந்த நியாயமான கோபம் முறையாக செலுத்தப்படவில்லை. இருப்பதிலேயே பெரிய ஊழல் கார்ப்பரேட்கள் செய்யும் ஊழல்தான். ஆனால் அண்ணா ஹஜாரேவின் சட்ட வரைவோ அரசின் கழுத்தைப் பிடிப்பதாக மட்டுமே இருக்கிறது. 24 மணி நேரமும் கார்ப்பரேட் ஊடகங்களால் கவரேஜ் கொடுக்கப்பட்டு அந்தப் போராட்டமும் ஊழல்படுத்தப்பட்டது. அந்த கவரேஜ் கூட ஒரு வகையில் ஸ்பான்ஸர்ஷிப்தான். மக்களின் நியாயமான கோபமும் கார்ப்பரேட் படுத்தப்பட்டுவிட்டது. ஒரு இடத்திலும் 'தனியார்மயமாக்கலுக்கு முடிவு கொண்டு வாருங்கள்' என்று கோஷம் எழவில்லை. ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதன் மூலம் ஊழலை ஒழித்துவிட முடியாது!"

தஹ்ரீர் சதுக்கம், ஜன்லோக்பால், வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என சென்ற வருடம் மக்கள் வீதிக்குத் திரண்டு போராடியது எதைக் காட்டுகிறது?

"இப்படி பொதுமைப்படுத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு போராட்டமும் வேறு வேறு பிரச்னைகளுக்காக எழுந்தது. 'பாப்ரி மஸ்ஜித்தை உடைக்க வாருங்கள்' என்று மக்கள் வீதிக்கு இறங்குவதும் தஹ்ரீர் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வருவதும் ஒன்றல்ல. ஆகவே, இதை ஏதோ மக்கள் செய்யும் புரட்சி என்றும், மக்கள் சக்தி என்றும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஒன்று தெரியுமா... ஊழலுக்கு எதிராகப் போராடும் அதே டெல்லியில் இருக்கும் மக்கள்தான் 'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்கிறார்கள்!"

எழுத்தாளராக இருந்து கொண்டு அரசியலையும் பேசுவது எப்படி சாத்தியமாகிறது?

"இதுவே 20-ம் நூற்றாண்டுச் சிந்தனைதான். சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் அன்று தங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்ததோ அதைத்தான் எழுதினார்கள். பேசினார்கள். நானும் அப்படித்தான் இருக்கிறேன். எழுத்தாளர் என்பவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்பவராக மட்டும் இருக்கக் கூடாது!"

நீங்கள் எதைப் பேசினாலும் எழுதினாலும் அது சர்ச்சையைக் கிளப்புகிறதே...?

"நான் சர்ச்சையைக் கிளப்ப எதையும் எழுதுவதில்லை. ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளான விஷயங்களைத்தான் எழுதுகிறேன். அந்தச் சர்ச்சைக்குரிய விஷயங்களில் என்னுடைய பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன். அவ்வளவே!"

அந்த சர்ச்சையைக் கிளப்புவதில் ஊடகங்களுக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிறீர்களா?

"நான் அவர்கள் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை!"

கூடங்குளம், முல்லைப் பெரியாறு, 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப் பல பிரச்னைகள் நாட்டில் இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது உண்மையிலேயே நமது குடியரசு நொறுங்கிவிட்டதாகத் தோன்றுகிறதா?

"நிச்சயமாக!"



Monday, January 9, 2012

ஒரு பெண்ணின் கதை...!

“எதற்கு வந்தீர்கள்? என்னுடைய படத்தை எடுத்து அச்சடிக்கவா? என்னிடம் என்ன இருக்கிறது? பசி, வறுமை,பட்டிணி,குருட்டு கணவன்,நோஞ்சான் குழந்தைகள்-என்னிடம் வேறு என்ன இருக்கிறது?

வழி விடுங்கள் உங்கள் படமும் வேண்டாம்;ஒரு மண்ணும் வேண்டாம்”

கழுத்து நரம்பு புடைக்க கண்களில் கண்ணீர் மின்ன,கைகளை குவித்துக் கொண்டு,புகைப்படக்காரரைப் பார்த்ததும் பொரிந்து தள்ளுகிறார்,அந்தப் பெண்.பத்திரிக்கை,போட்டோ என்றதும் எள்ளும் கொள்ளுமாய் வெடிக்கிறார்.

ஏன் இந்த கோபம்?

காரணம் மிகவும் சோகமானது.இதயத்தைப் பிழியக் கூடியது.அந்த பெண்ணின் கதையைக் கேளுங்கள்.

அவளுடைய பெயர் பனிதா வயது 42.இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1985-ல் ரூ 40க்கு விற்கப்பட்ட சிறுமிதான் இந்த பனிதா.

நாற்பது ரூபாய்க்கு விற்கப்பட்டார்,பனிதா.தேசத்தையே உலுக்கிய செய்தி அது.அபலையின் புகைப்படம் வாரத பத்திரிகையோ,நாளிதழோ கிடையாது.பனிதாவின் ‘விற்பனையை’க் கேள்விப்பட்ட பிரதர் ராஜீவ் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு மனைவி சோனியாவுடன் ஹெலிகாப்டரில் பறந்து வந்தார்.

வெகுசீக்கிரமே ஒரிஸா மாநிலத்தின் காலாஹண்டி மாவட்டத்தில் கஹ்ரியர் பிளாக்கில் இருக்கும் அன்லாபலி கிராமம்(அதுதான் பனிதாவின் கிராமம்) அரசியல் தலைவர்கள்,அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களின் சுற்றுலாத்தலமாகி விட்டது.
பனிதாவைப் பற்றி 1985ல் பத்திரிக்கை முகப்பு செய்தி (பனிதாவின் படம்)


ஆண்டுகள் உருண்டன.பனிதாவை அரசியல் உலகமும் பத்திரிக்கை உலகமும் மறந்து விட்டது. பனிதாவுடன் ஒட்டிக் கொண்ட வறுமையும் பசியும் தான் அவளை விட்டுப் பிரியவில்லை.இன்றும் ஒட்டுக் குடிசையில் நோஞ்சான் குழந்தைகளுடன் காலம் தள்ளுகிறார்,பனிதா.


இதயத்தை பிழியும் இன்னொரு தகவலும் உண்டு 28 ஆண்டுகளுக்கு முன்பு 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பனிதா இன்று தன்னுடைய கடைக்குட்டி மகளை விற்றுவிட முடிவு செய்துள்ளராம்.


அவர் முடிவை மாற்றிக் கொண்டாரா? பெற்றெடுத்த பிஞ்சை விற்று விட்டாரா?


யாருக்கு இருக்கிறது அக்கறை?

Friday, January 6, 2012

மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்


தூத்துக்குடி சேதுலட்சுமி படுகொலை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது அரசு மருத்துவர்கள் காட்டும் அயோக்கியத்தனம் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரை பதியப்படுகிறது. ஏற்றுக்கொள்பவர்கள் share செய்யுங்கள். நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.



“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

2010, ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி, 86 பேரிடமிருந்து 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்திருப்பதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம், உரிய நேரத்தில் உறுப்புகளைப் பயன்படுத்த முடியாமல் சட்ட நடவடிக்கைகள் தடுப்பதாக அரசுக்குப் புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, கடுமையாக இருந்த பழைய விதிமுறைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது தமிழக அரசு.

வெளிப் பார்வைக்கு இது உயிர் காக்கும் விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் ஈவிரக்கமற்ற கொலை வியாபாரம் ஒளிந்திருப்பதாக சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
‘‘இங்கு மூளைச் சாவு என்பது லாபகரமான ஒரு தொழில்’’ என்கிறார்கள் இம்மருத்துவர்கள்.

‘‘மூளை என்பது சிறுமூளை, பெருமூளை என இரண்டு வகையாக செயல்படுகிறது. இரண்டுமே செயலிழந்தால்தான் அது மூளைச் சாவு. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சிறுமூளை அல்லது மூளைத் தண்டு செயலிழந்தாலே போதும். சட்டப்படி அதை மூளைச்சாவு என்று அறிவிக்கிறார்கள்.

சிக்கல் என்னவென்றால், சிறுமூளை இறந்த பிறகும் பெருமூளை வேலை செய்யும் என்பதுதான். அப்படிப் பெருமூளை வேலை செய்தால், சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்றே அர்த்தம்.

உதாரணமாக, ஒரு கர்ப்பிணிக்கு பெருமூளை மட்டும் செயல்படுவதாக வைத்துக்கொள்வோம். அவரால் இயற்கையாக குழந்தை பெற முடியும், பால் கொடுக்கவும் முடியும். ஆண் என்றால், விந்தணுக்களை எடுத்து டெஸ்ட் டியூப் பேபி உருவாக்க முடியும். அடுத்த சந்ததியே இந்த நபரால்தான் என்கிற சூழ்நிலையில், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் இல்லையா?

எனவே, “சிறுமூளை செயலிழந்ததாகக் கூறி சாவு என அறிவிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது மட்டுமல்ல.  சட்ட விரோதமானதும்கூட’’ என்று எச்சரிக்கிறார் பிரபலமான ஒரு நரம்பியல் நிபுணர்.

‘‘நரம்பியல் சட்ட விதிமுறைகளின்படி, பெருமூளை செயலிழந்துவிட்டதை நியூக்ளியர் ஸ்கேன் செய்துதான் உறுதிப்படுத்த முடியும். ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் இதில்மிக பழங்காலத்து நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை. எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.

  ‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.  இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும். என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை. காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள். ஆனால், நம் நாட்டில் தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன. எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!

இதற்குத் தீர்வே இல்லையா?

‘‘இரண்டு விஷயங்கள்.

ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.

இன்னொன்று நோய்க்கான காரணம். என்டோசல்ஃபான் மாதிரியான தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக இந்தியாவில் புழங்குகின்றன. உள்நாட்டில் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு இந்த மருந்துகள்தான் காரணம். இத்தகைய மருந்துகளின் பின்னணியில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சக்திகள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, அரசு இதற்கென ஒரு நிபுணர் குழுவை நியமித்தோ அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்தோ ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விடிவே இல்லை.’’  இதை நான் சொல்லவில்லை. கார்ப்பரேட்டில் பணிபுரியும் மனைதநேமுள்ள ஒரு மருத்துவர் சொல்கிறார்.
கெடவர் கொள்ளைக்காரர்களின் கொடூர முகத்தை தோலுரித்த மருத்துவ உலகம்:


ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது தந்தைக்கு கல்லீரல் பிரச்னை. மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கிறார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்(இந்த மருத்துவமனை இப்போது சென்னைக்கும் வந்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது), இதுபோன்ற ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து குளோபல் மருத்துவமனையில் தன் தந்தையை அட்மிட் செய்கிறார் ஸ்ரீனிவாசன். பரிசோதனைகளுக்கு மட்டும் 95 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறார். அப்போது, லலிதா ரகுராம் என்கிற ‘கெடாவர் கோ-ஆர்டினேட்டர்’ ஸ்ரீனிவாசனைச் சந்திக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த மோகன் பவுண்டேஷன் எனப்படும் என்.ஜி.ஓ ஊழியர். சென்னையில் ஒரு கெடாவர் இருப்பதாகவும், பத்து லட்சம் கட்டினால் அதை வாங்கித் தருவதாகவும் ஸ்ரீனிவாசனிடம் கூறுகிறார்.

இதை நம்பி, நகையை விற்று, கடனும் வாங்கி அப்பாவுக்காகப் பணத்தைக் கட்டுகிறார் ஸ்ரீனிவாசன்.

சில நாட்கள் கழித்து, கெடாவர் ரெடியாகிவிட்டதாகவும், அதைத் தனி விமானத்தில்(எவ்ளோ பெரிய பிசினஸ் பார்த்தீர்களா?) கொண்டுவர ஏழு லட்ச ரூபாய் கட்டும்படியும் கேட்கிறார் லலிதா. ஆனால், ஸ்ரீனிவாசனால் கட்ட முடியவில்லை. ஆனால், அப்பாவின் நிலைமை சீரியசாகிவிட, உடனடியாக மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.

அப்போதுதான், ‘‘கவலையை விடுங்க. உங்க அம்மாவோட கல்லீரலை எடுத்து உங்க அப்பாவுக்குப் பொருத்திடலாம். இதுபோல நாங்க 55 ஆபரேஷன்களை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். ஆபரேஷன் செலவுகளை மட்டும் கட்டினால் போதும்’’ என்று மருத்துவமனையில் உறுதி கொடுக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறது.

ஆனால், அடுத்து நடந்ததுதான் ஒண்ணாம் நெம்பர் ‘மனிதாபிமானம்’.

ஸ்ரீனிவாசனின் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோகும் வழியில், (சமயம் பார்த்து) 23 லட்சம் கட்டச் சொல்லியிருக்கிறது ஹாஸ்பிட்டல் நிர்வாகம். இரண்டு பேரின் உயிர் என்பதால், அதையும் கட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாசன். வழக்கம்போல், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ எனக்கூறி வெளியே வந்திருக்கிறார் மருத்துவர்.

ஆனால், அடுத்த பதினைந்து நாளில் ஸ்ரீனிவாசனின் அப்பாவுக்கு உயிர் பிரிந்துவிட்டது. கல்லீரல் தானம் கொடுத்த அம்மா கோமாவுக்குப் போய்விட்டார். தொடர்ந்து 20 மாதங்கள்வரை கோமாவிலேயே இருந்திருக்கிறார் அந்த அம்மா.

முடிவில், 20 மாதங்கள் கோமா பேஷண்ட்டைப் பராமரித்ததாகக் கூறி இரண்டாம் கட்டமாக எக்ஸ்ட்ரா 45 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அதையும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவது ஆண்டில் அந்த அம்மாவும் இறந்து போய்விட்டார்.

கெடாவர் பிசினஸ் என்றால் என்ன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்று இப்போது புரிகிறதா? இதுதான் உடல் உறுப்பு தானமும் மருத்துவமனைகளின் ‘மனிதாபிமானமும்’.

நன்றி:http://marakkanambala.blogspot.com/ 
ஆதாரம்http://www.issuesinmedicalethics.org/133cv01.html