Monday, February 13, 2012

தேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை

பொட்டு கட்டிவிடுதல் அல்லது தேவதாசி முறை என்று சொல்லப்படுகின்ற இந்த பழக்கம் 1947ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு விட்டது.இருப்பினும் தேவதாசி முறை தமிழ்நாட்டில் உள்ள வேலூர்,திருவள்ளூர்,விழுப்புரம் மாவட்டங்களிலும்,ஆந்திராவிலும், கர்நாடாகவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசினால்,“பேசுபவரது நாக்கு எரிந்துவிடும்” என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்வர். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தனர்.ஆனால் நாளடைவில் தேவதாசிகளை மன்னர்களும்,நிலபிரபுக்களும்,முக்கியப் பிரமுகர்களும் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது இது வக்கிரமானது, அக்கிரமமும் கூட.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சிலபடித்த அறிஞர்கள், பக்தர்கள் இந்த தேவதாசி முறையை வெறுக்கதக்க ஒன்றாகக் கருதி அதனை ஒழிக்க வேண்டும் என குரலெழுப்பத் துவங்கினர். காஞ்சிபுரம் ஆரிய மிஷன் செயலர் ராமச்சந்திரன் தேவதாசி முறையை எதிர்த்து பகிரங்கமாகக்குரல் எழுப்பினார். இந்த பழக்கத்தை தடை செய்யவும், பருவமடையாத குழந்தைகள் அர்ப்பணிக்கப்பட்டால் அவர்களை பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கும் சட்டம் ஒன்றை அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு செயலர் தாதாபாய் 1912 செப்டம்பர் 18ல் “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

“தேவதாசி ஒழிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்” என காந்திஜி தனது ஹரிஜன் இதழில் எழுதினார்.இதனால் இதனை முடிவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டி சட்டமன்றத்தில் ஜனவரி 24, 1930-ல் சென்னை மாகாணத்தில் உள்ள கோயில்களில் இந்த அர்ப்பணிப்பு முறை தடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். பிறகு 1947-இல் ஒ.பி.ராமசாமி முதல்வராக இருந்தபோது சென்னை தேவதாசி தடுப்பு மசோதா கமிட்டியின் தலைவராக இருந்த சுப்பராயன் பரிசீலனையின் பேரில் நவம்பர் மாதம் இம்மசோதா சட்டமாகியது.

சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும் கூட சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறை இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவதாசி முறை கூடாது என்று சட்டம் இருப்பதால் சம்பிரதாயம், விமர்சையாகப் பின்பற்றப்படுவதில்லை.ஆனாலும் அந்த சம்பிரதாயம் மக்களிடையே வழக்கொழிந்து போய்விடவில்லை.காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் இன்றும் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது.
தேவதாசி பெண், திருமண உறவில்லாமல் அவருக்கு பிறந்த குழந்தைகள்

தேவதாசியை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மனைவியைப் போல் நடத்தலாம். ஆனால் மற்றவர்களால் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டது. ஒர் உதாரணத்தைப் பார்ப்போம். பழனியம்மள் என்பவர் 14 ஆண்டுகாலம் ராஜன் என்பவருடன் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் உன்னை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் என்று ராஜன் பிரிந்து சென்று விட்டார். பழனியம்மாள் எந்த உரிமையும் கொண்டாட முடியாமல் அவர் இப்போது தவித்து வருகிறார். விவசாய கூலியாகப் பணியாற்றி பிழைப்பை ஓட்டி வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை மறைமுகமாகப் பின்பற்றப்பட்டு ஒரு சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.சியோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. 25 வயதான அவர் சிறுமியாக இருக்கும் போது இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அவரது பெற்றோர் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி விட்டனர். அவர் தேவதாசியாகி விட்டார். தேவதாசிகள் அனைவரின் முகப்பெழுத்தும் ‘எம்’ என்பதுதான். மாரியம்மாவைக் குறிக்கும் எழுத்துதான் எம் என்பதாகும். உண்மையில் தேவதாசிகள் அனைவரின் பொதுப் பெயரும் மாரியம்மா தான்.

ராஜவேணி என்ற ஏழுவயதுச் சிறுமியும் மாரியம்மாவுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராஜவேணிக்கு விரைவில் பொட்டுக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்திலி கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு நேர்ந்துவிடப்பட்டுள்ள ராஜவேணிக்கு,நித்திய சுமங்கலி’ சடங்கு செய்துவைக்க வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் உறுதியாக உள்ளனர். ராஜவேணிக்கு பொட்டுக்கட்டும் சடங்கை செய்து கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை.ராஜவேணிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது என்கிறார்.
கிருஷ்ணவேணி உளுந்தூர்பேட்டையில் படித்து வருகிறார்.15 வயதான அவர், அவர்களது பெற்றோருக்கு இரண்டாவது மகள்.அந்திலி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-அஞ்சலி தம்பதியினரின் மூத்தமகள் ராஜலட்சுமி ஆவார்.ராஜலட்சுமியின் கணவர் சிறுது காலத்திற்கு முன் தற்கொலை செய்து  கொண்டார். இந்த அதிர்ச்சிலிருந்து அந்த குடும்பம் மீளவில்லை. கிருஷ்ணவேணிக்கு பொட்டுக் கட்டி விட்டால்தான் குடும்பத்துக்கு விடியல் ஏற்படும் என்று நினைக்கின்ற அளவுக்கு அஞ்சலியிடம் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர். வேறு வழியில்லாமல் தனது இளையமகள் கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்ற முடிவுக்கு அஞ்சலி வந்துள்ளார்.அவரது கணவர் ராமகிருஷ்ணரும் இதற்கு உடன்பட்டுள்ளார்.

இந்நிலையில் எதிர்பாராத திடீர் திருப்பமாக சமூகநல ஆர்வலர்கள் சிலர் இப்பிரச்சனையை மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் ஆஸ்டல் ஒன்றில் தங்கிப் படித்து வருகிறார்.

பின்குறிப்பு:
இதனுடைய தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தேவதாசி முறை- வரலாற்று பார்வை (இறைநாடினால்) விரைவில் எழுதுகிறேன்.


ஆதாரங்கள்:
1. http://tehelka.com/story_main4.asp?filename=Ne071704Reluctant.asp
2. http://www.paramparai.eu/html/prod02r4.htm
3.The Lord's last consort
தமிழ்மண ஓட்டு போட http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1140873

38 comments:

  1. சலாம் அண்ணா


    என்ன சொல்வதென்றே தெரியல :-(

    ReplyDelete
  2. வணக்கம் அண்ணா...

    ஃஃஃஃஃஅவரை அவரது பெற்றோர் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி விட்டனர். அவர் தேவதாசியாகி விட்டார்.ஃஃஃஃஃ

    அப்படியானால் அவர்கள் பிறப்பால் தேவதாசியாகப் பிறப்பதில்லையா?

    பல சந்தேகம் இருக்கிறது அண்ணா... அடுத்த பதிவு வரும் போது ஒரு சின்ன உதவி... அதற்கான தொடுப்பை அனுப்பி வைக்க முடியுமா?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்

    ReplyDelete
  3. முஸ்லிம் பென்களின் நிகாப்பை விட இதுவெல்லாம் பெரிய வன்முறையா? அதனால்ல இதப்பத்தியெல்லாம் கண்டுக்காம போய்கிட்டே இருப்போம்ல..->இதுதான் தமிழ்பேசும் பெண்விடுதலை குரலாக்கும்.

    ReplyDelete
  4. தேவதாசி முறை இன்னும் தொடர்வது இந்த நூற்றாண்டின் அவலம்.

    ReplyDelete
  5. //தேவதாசி பெண், திருமண உறவில்லாமல் அவருக்கு பிறந்த குழந்தைகள்//

    சுமைகள் பெண்களுக்கு மட்டும், என்ன ஒரு கொடுமை, இந்தப்பிள்ளைகளைக் கொடுத்த ஆண்வர்க்கம் எங்கோ ஒரு சுகமான வாழ்க்கையில்.

    படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ.... வேதனை........புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளதா?நானும் அந்த மாவட்டத்தை சேர்ந்தவன்தான்...ஆனால் கேள்விப்பட்டதில்லை....உடனே களை எடுக்கப்படவேண்டிய ஒன்று..

    ReplyDelete
  7. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    விழிப்புணர்வூட்டும் நல்ல பதிவு.


    ///1947ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு விட்டது.///


    ///சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும் கூட சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறை இன்றும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காரைக்குடி பகுதியில் உள்ள சில சாதியினர் இன்றும் தேவதாசி முறையை கடைப்பிடிக்கின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் உள்ளனர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்பழக்கம் நடைமுறையில் உள்ளது.///


    ///எதிர்பாராத திடீர் திருப்பமாக சமூகநல ஆர்வலர்கள் சிலர் இப்பிரச்சனையை மாவட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.///


    சட்டம் ஏன் தன் கடமையை செய்யவில்லை..?

    யார் அதை தடுப்பது..?

    ReplyDelete
  8. சலாம் சகோ ஹைதர் அலி,

    தேவதாசி முறை ஒழிந்ததா??? யார் சொன்னது சகோ. விபச்சார விடுதிகள் என்னவாம். தேவதாசி முறையின் மறு உருவாக்கம் தானே??? சொல்லப்போனா முன்னைவிட இப்பதான் ஜெகஜோதியா நடக்குது.

    ReplyDelete
  9. சலாம் சகோ ஹைதர் அலி,

    தேவதாசி முறை ஒழிந்ததா??? யார் சொன்னது சகோ. விபச்சார விடுதிகள் என்னவாம். தேவதாசி முறையின் மறு உருவாக்கம் தானே??? சொல்லப்போனா முன்னைவிட இப்பதான் ஜெகஜோதியா நடக்குது.

    ReplyDelete
  10. /பழனியம்மள் என்பவர் 14 ஆண்டுகாலம் ராஜன் என்பவருடன் குடும்பம் நடத்தினார். ஒரு நாள் உன்னை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் என்று ராஜன் பிரிந்து சென்று விட்டார். பழனியம்மாள் எந்த உரிமையும் கொண்டாட முடியாமல் அவர் இப்போது தவித்து வருகிறார். விவசாய கூலியாகப் பணியாற்றி பிழைப்பை ஓட்டி வருகிறார்./ முறையாக திருமணம் செய்தவர்களுக்கே பல இடங்களில் இந்த கொடுமைகள் நடந்து வருகின்றன. சட்டங்கள் கடுமையாக இல்லாததே இத்தகைய குற்றங்களுக்கு முதலும் முக்கியமுமான காரணமாக இருக்கிறது. பாதிப்பும் பெண்களையே செருகிறது. இந்த பெண்களுக்கு என்றுதான் விடிவுகாலமோ?

    ReplyDelete
  11. தேவதாசி முறை இன்றளவும் நடைமுறைப் படுத்தப்படுகிறது எனபது உண்மையில் அதிர்ச்சியூட்டுகிறது.மனித உரிமைகளுக்கு எதிரான நாகரீகமற்ற இந்த நடைமுறை அறவே இல்லாதொழிக்கப்பட வேண்டும்.இப்படி ஒரு அவமானத்தை நீடித்திருக்க அனுமதித்தால் நாகரீக சமூகம் என சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  12. பெண்கள் இந்தத் தீமைகளை எதிர்த்து போர் செய்ய வேண்டு இந்த தேவ தாசி முறையை ஆதரித்து வரும் ஊடகள் அனைத்தையும் புறக்கனிக்க வேண்டும்.

    ReplyDelete
  13. பெண்கள் இந்தத் தீமைகளை எதிர்த்து போர் செய்ய வேண்டு இந்த தேவ தாசி முறையை ஆதரித்து வரும் ஊடகள் அனைத்தையும் புறக்கனிக்க வேண்டும்.

    ReplyDelete
  14. @தங்கை ஆமினா

    வ அலைக்கும் வஸ்ஸலாம்
    எனக்கும் படித்த போது வருத்தமாகத்தான் இருந்தது

    ReplyDelete
  15. @tamilan

    சுட்டிகளுக்கு நன்றி
    ஆனால் எழுத்து நடை அசிங்கமாக இருக்கு இவ்வாறு இருந்தால் கோபப்படுவார்களே தவிர சிந்திக்க விடாது கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்

    ReplyDelete
  16. @♔ம.தி.சுதா♔

    வாங்க மதிசுதா அவர்களே

    //அப்படியானால் அவர்கள் பிறப்பால் தேவதாசியாகப் பிறப்பதில்லையா?//

    பிறப்பு வாரிசு முறையிலும் தொடர்கிறது நேர்த்தி கடன் மூலமும் இந்த முறை இருக்கிறது அடுத்த பதிவில் விரிவாக சொல்கிறேன்

    கிழே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. @zalha

    //முஸ்லிம் பென்களின் நிகாப்பை விட இதுவெல்லாம் பெரிய வன்முறையா? அதனால்ல இதப்பத்தியெல்லாம் கண்டுக்காம போய்கிட்டே இருப்போம்ல..->இதுதான் தமிழ்பேசும் பெண்விடுதலை குரலாக்கும்.//

    இன்றைய போலித்தனமாக பெண்விடுதலை பேசும்வோர் முகத்திரையை ஒரே பின்னூட்டத்தில் கிழித்து விட்டீர்கள் சகோ ரசித்தேன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. @ரஹீம் கஸாலி

    மிகப்பெரிய அவலம்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  19. @Syed Ibramsha

    //சுமைகள் பெண்களுக்கு மட்டும், என்ன ஒரு கொடுமை, இந்தப்பிள்ளைகளைக் கொடுத்த ஆண்வர்க்கம் எங்கோ ஒரு சுகமான வாழ்க்கையில்.//

    இதுபோன்ற ஆண்களை கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டும் அப்போது தான் மாற்றம் ஏற்படும்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  20. @NKS.ஹாஜா மைதீன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளதா?நானும் அந்த மாவட்டத்தை சேர்ந்தவன்தான்...ஆனால் கேள்விப்பட்டதில்லை....உடனே களை எடுக்கப்படவேண்டிய ஒன்று..//

    விராலிமலை புதுக்கோட்டை மாவட்டம் தான் சகோ அங்கு இந்த முறை ரொம்ப பாப்புலர்

    கண்டிப்பாக களையேடுக்க வேண்டிய தீயமுறை இது

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  21. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //சட்டம் ஏன் தன் கடமையை செய்யவில்லை..?//
    ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறது எப்ப முழிக்குமோ அப்ப செய்யும்.
    ஆனாலும் ஒரு சந்தேகம் தூங்குதா இல்லை மரணித்து விட்டதா என்று தெரியவில்லை

    ReplyDelete
  22. @சிராஜ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    //முன்னைவிட இப்பதான் ஜெகஜோதியா நடக்குது.//

    மிக சரி சகோ இன்றைய நடிகைகள் கூட தேவதாசிகளின் நவீன வடிவம் தான்

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  23. @enrenrum16

    //முறையாக திருமணம் செய்தவர்களுக்கே பல இடங்களில் இந்த கொடுமைகள் நடந்து வருகின்றன. சட்டங்கள் கடுமையாக இல்லாததே இத்தகைய குற்றங்களுக்கு முதலும் முக்கியமுமான காரணமாக இருக்கிறது. பாதிப்பும் பெண்களையே செருகிறது. இந்த பெண்களுக்கு என்றுதான் விடிவுகாலமோ?//

    கடவுளின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மோசமான பழக்கங்களைத் தொடரும் வரை இப்பெண்களுக்கு விடுதலை இல்லை

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  24. @திப்பு

    //அவமானத்தை நீடித்திருக்க அனுமதித்தால் நாகரீக சமூகம் என சொல்லிக் கொள்ள நாம் வெட்கப்பட வேண்டும்.//

    உண்மைதான் சகோதரரே வெட்கப்படவேண்டிய அவமானகரமான செயல் இது தொடர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி இதனை ஒழிப்போம்

    வருகைக்கு நன்றி சகோதரரே

    ReplyDelete
  25. @kaleelsms.com

    நிச்சயமாக சகோ

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  26. @ஜீவன்பென்னி

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  27. //தேவதாசி முறை இன்னும் தொடர்வது இந்த நூற்றாண்டின் அவலம்.//

    ஆமாம் பாஸ். பலதார மணம் கூட இன்னும் தொடர்வது இந்த நூற்றாண்டின் பேரவலமாம், பெண்களுக்கு செய்யும் துரோகமாம்.

    ReplyDelete
  28. //Anonymous said... 32

    ஆமாம் பாஸ். பலதார மணம் கூட இன்னும் தொடர்வது இந்த நூற்றாண்டின் பேரவலமாம், பெண்களுக்கு செய்யும் துரோகமாம்.
    February 15, 2012 1:21 AM //


    Dear Anonymous

    Please Listen to the videos below


    சொடுக்கி >>>>>> பலதார மணம் பெண்களுக்கு பாதிப்புதானே? இஸ்லாம் பலதார திருமணத்தை ஏன் அனுமதிக்கிறது? "சின்னவீடு" - "வைப்பாட்டி" வைத்துக் கொள்ளலாமா? நான்கு பெண்களை திருமணம்..? <<<<< விடியோ காணுங்கள்.

    .
    .
    .

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    படுவேகமான தொடக்கம்..

    பத்தி பத்தியாய் தகவல்கள்

    சமூக அவலங்கள் மற்றோரு கோணத்தில் உங்கள் பதிவில் எடுத்துக்கட்டபட்டிருக்கிறது

    பகிர்ந்த பதிவிற்கு நன்றி சகோ

    ReplyDelete
  30. வணக்கம் ஹைதர் அண்ணா,
    நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    விபச்சாரம் - தேவதாசி இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

    இந்த தேவதாசி முறைமை பத்தி ஏலவே இக்பால் செல்வனுடமும் விவாதம் செய்திருக்கிறேன்.

    விபச்சாரம் எனப்படுவது, மனம் ஒத்து, அல்லது நிர்ப்பந்தத்தின் பேரில் பணத்திற்காக
    அல்லது வறுமையின் நிமித்தம் செய்யப்படுவது. ஆனால் தேவதாசி முறமைமை அப்படி அல்ல!

    காலதி காலமாக தமிழர் தம் பண்பாட்டியல் அடிப்படையில் பின்பற்றப்பட்டு வருவது!

    உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
    மேற்குலகில் விபச்சாரம் என்ற ஒன்று ஆரம்பிக்க முன்னரே தமிழகத்தில் தமிப் பிரபுக்கள் காலத்தில் இந்த தேவதாசி முறமைமை ஆரம்பித்து வைக்கப்பட்டு விட்டது! மேலும் விடயங்களை தங்களின் இப் பதிவின் இரண்டாம் பாகத்தில் பகிர்கிறேன்!

    ReplyDelete
  31. நாம் சமூக அவலங்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் !இருளிளிருந்துதான் ஒளி உண்டாக்க பட்டது !சமுகம் அவலத்தின் உச்சத்தில் இருந்து இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது !

    ReplyDelete
  32. நல்ல பதிவு, தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete