Saturday, March 17, 2012

செவப்பு சட்டயே பாத்தா பயமா இருக்கு (நிஜக்கதை)


இராமநாதபுரம் To மதுரை போர்டு போட்ட பஸ் மதுரை மாட்டுதாவணி பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது பரமக்குடியிலிருந்து வந்த பலூன் வியாபாரி மைதீன் பஸ்க்குள்ளே இருந்து சுத்திமுத்தி நோட்டமிட்டார். அவிய்ங்கே நிக்கிறாய்ங்களா? ஆமா இம்பூட்டு பேரு நிக்கிறாய்ங்கே இவிய்ங்ககிட்டயிருந்து எப்படி தப்பிக்க போறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது யோவ் மாட்டுத்தாவணி வந்துருச்சு எறங்குயா கிழே என்ற நடத்துனர் குரல் குறுக்கிட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

அவுட்டோருலே மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டு கட்டுறதுக்கு முன்னாடியெல்லாம் நேரே அண்ணா பஸ் ஸ்டாண்டில் பஸு நிக்கும் அங்கே இறங்கி போடி நடையாக நடந்து போனால் பலூன் சரக்கு எடுக்கிற மொத்த கொள்முதல் கடை இருக்கும் இப்ப இங்கிருந்து அங்கே போறதுக்கு ஒரு பஸ் மாறனும் அதுக்கு வேறே ஆறு ஓவா தெண்டம் கட்டனும். டீ கடையில் டீ குடிக்கனும் போல இருந்துச்சு இருந்தாலும் வேண்டாம். அண்ணா பஸ் ஸ்டாப் வண்டியில் எறிக் கொண்டு உள் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

 பஸ் முன்னோக்கி கிளம்பியது இவரின் சிந்தனைகள் மறுபடிக்கும் பின்னோக்கி போனது. வர செவ்வாக்கிழமை தங்கச்சிமடம் சூசையப்பர் கிறிஸ்துவ கோவில் திருவிழா பலூன் கம்பு போட்டா நல்ல வியாபரம் ஓடும் சரக்கு எடுக்க காசு இல்லாம ஆயிஷாவின் கையில் கெடந்த அரை பவுன் மோதிரத்தை வித்து காசாக்கியதும், அம்மா யாவாரம் பாத்து ஒனக்கு திருப்பி வாங்கி தந்துருவம்மா என்று சொன்னதும் நினைவுக்கு வர பத்து ரூபாயை மட்டும் எடுத்து முன் பாக்கேட்டில் வைத்துக் கொண்டார்.

வண்டியை விட்டு இறங்கி பலூன் ஓல்சல் சேட்டு கடைக்கு போனார்
கிலுக்கு----- --------------------ஒரு டஜன்
சக்திமான் கொட்டு ----------ஒரு டஜன்
பொம்ம தூப்பக்கி-------------ஒரு டஜன்
பாப்பா ஆப்பிள் பாலுன்----- பத்து பாக்கேட்டு

இப்படி ஒவ்வோரு சரக்காக இவர் சொல்ல சேட் கட பையன் எடுத்து அட்டை பெட்டியில் அடுக்கிக் கொண்டே இருந்தான் சேட்டு சிட்டை கொடுங்க எவ்வளவு வந்துச்சு நாலயிரம் தான் பாய் இந்தங்கோ சிட்டை என்றார் சிட்டயை பார்த்தாதும் மைதீனின் மனக்கணக்கு தவறாக இருந்தது நாலயிரம் வராதே கிலுக்கு ஒரு டஜன் எவ்வளவு சேட்டு 33 ரூபாய் தானே. இல்லே பாய் 36 ரூபாய் பேட்ரோல் விலை கூடிவிட்டது பிளாஸ்டிக் சரக்கு விலையும் கூடி விட்டது பாய் என்ற சேட்டின் பதிலை கேட்டு இப்படி விலையை கூட்டினால் நாங்க என்ன விலைக்கு விக்கிறது என்று சலித்துக் கொண்டே ரெண்டு டஜன் சரக்க எடுத்துக் கொள்ளுங்கள் பஸ்ஸுக்கு காசு இல்லே என்று சொல்லி வேகமாக அட்டை பொட்டி நிரைய இருந்த சரக்கை தலையில் வைத்து நடக்க ஆரம்பித்தார்.

சரக்கு கடைக்கு பக்கத்தில் பத்து ரூபாய்க்கு தயிர்சாதம் விக்கிற கடை இருந்தது சாப்பிடனும் போல இருந்தது,.மதுரையில் 12 மணிக்கு பஸ் எறினால் எப்புடியும் 2 மணிக்குள்ளே வீடு போய் சேர்ந்து விடலாம் வீட்டில் சாப்பிட்டு கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு கடையை கடந்தார். மாட்டுதாவணி போற பஸ்ஸில் அட்டை பெட்டி சரக்கை ஏற்றினார் இதை பார்த்த கண்ட்ரக்டர் யோவ் இவ்வளவு பெரிய அட்டை பெட்டியை உள்ளே ஏத்துறே இரண்டு ஆளு எடத்த மறைக்குது இரண்டு டிக்கேட் லக்கேஜ் போடுறேன் என்ன என்றார்? மைதீன் சரிங்கே சரிங்கே என்று தலையாட்டி காசை கொடுத்தார் கொடுக்கும் போதே மனக்கணக்கில் இதே ஆட்டோவ இருந்தா நூறு ரூபா கேப்பாய்ங்கே 12 ரூபாயோட போச்சு என்று சொல்லிக் கொண்டார்.
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப் வருவது முன்பாகவே இறங்கி தலையில் பலூன் சரக்கு நிரம்பிய பெரிய அட்ட பெட்டியை தலையில் சுமந்துக் கொண்டு வந்தார் வரும்போதே மனதில் பயம் கவ்வியது அவிய்ங்கே கண்ணுல மட்டும் பட்டுற கூடாது எப்புடியாவது சரக்கே பஸ்ஸுக்குள் ஏத்திடனும் பஸ் ஸ்டாண்டு முன்புறமாக வந்த தானே சரக்கே பறிப்பிங்கே நான் பின்புறமாக வருகிறேன் பார் என்று மனதில் பயத்தோடு சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தர் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டே இராமநாதபுரம் பஸு கிட்ட வரும்போது யோவ் நில்லுயா குரல் கேட்டு திரும்பி பார்த்தார்.

செவப்பு சட்ட போட்ட கூலி தூக்கும் அடாவடி தொழிலாளிகள் போச்சு எல்லாம் போச்சு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே பயந்து போய் நின்றார். அங்கிருந்து வந்தவனின் ஒருவன் உனக்கு தெரியாது பஸ் ஸ்டாண்டில் எந்த லக்கேஜாக இருந்தாலும் தூக்குறது எறக்குறது எல்லாம் நாங்க தான் நீ எப்படி தூக்கிட்டு வந்து பஸ்ஸுக்குள் ஏற்ற போகலாம்? என்று அதட்டினான் இல்லேண்ணே பணக்காரவுக லக்கேஜ தூக்க முடியாதவுக இவுங்களுக்கு தான் உங்க ஒதவி தேவைப்படும் நான் சாதாரண பலூன் வியாபாரிண்ணே விட்டுறுங்கண்ணே என்று கேஞ்சிக் கொண்டிருக்கும் போதே

டேய் வேலா அந்த லக்கேஜ பஸ்ஸுக்குள்ளே ஏத்து என்று கட்டளையிடும் தோணியில் சக கூலித் தொழிலாளியை ஏவி விட்டு நூறு ரூபா எடு என்று மைதீனை மிரட்ட ஆரம்பித்தார் அண்ணே அவ்வளவுலாம் இல்லேண்ணே பஸ்ஸுக்கு தானே காசு வச்சுருக்கேன் சொன்ன கேளுங்கண்ணே அழுதுவிடும் தோணியில் கெஞ்சுவதை பொறுட்படுத்தாமல் அந்த செவப்பு சட்டைக்காரன் டேய் வேலா அந்த லக்கேஜ பஸ்ஸ விட்டு வெளியே ஏறக்கி போடு இவன் எப்படி ஊரு போயி சேருகிறான் என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே நாங்க யாரு தெரியுமில்லே கம்யூனிஸ்டு எங்களுக்கு சங்கம் இருக்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் எங்கள யாரும் மதுரையிலே ஆட்ட முடியாது எங்கள மீறி சரக்க பஸ்ஸுலே ஏத்திரு பாப்போம் சவால் விட்டான்.

அண்ணே வேண்டாம்ணே சரிங்க இந்தங்கே 50 ரூபா சத்தியமாக இது தான் எங்கிட்ட இருக்கிற காசு சாப்பிடகூட இல்லேண்ணே என்று கையை நீட்டினார் 50 ஓவா மயிரு இதுக்கு.... சரி கொண்ட என்று வாங்கி கொண்டு சரக்கே நீயே ஊள்ளே ஏத்திக்க என்று சொல்லி விட்டு நடையை கட்டினார்கள்.

39 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சூப்பர் கதை. அப்படியே ரயில் நிலைய, பஸ் நிலைய அடாவடிதனங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.

  வஸ்ஸலாம்...

  ReplyDelete
 2. சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
  இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

  அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

  எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

  எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

  ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


  இதில் மிக வேதனைக்குறிய விடையம்

  இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

  சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


  இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

  சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

  ReplyDelete
 3. தங்களிடம் கொடிஇருக்கிறது சங்கம் இருக்கிறது என்று அடாவடி செய்யும் இவர்கள் வழிப்பறி செய்யும் திருடர்களை விட கேவலமானவர்கள்.கேரளத்தில் இந்த பொறுக்கிகளின் அட்டகாசம் தாங்க முடியாது. உண்மை நிலையை படம் பிடித்து காட்டி இருக்கின்றீர்க

  ReplyDelete
 4. அட பாவிகளா....சங்கம் என்ற பெயரில் இப்படியும் கொடுமைகளா...இவர்கள் பிழைக்க சங்கம் வைக்கிறார்கள...அடுத்தவரின் பிழைப்பைக் கெடுக்க சங்கம் அமைக்கிறார்களா... வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திய பணத்தை கொள்ளையடிக்கும் இவர்களை என்ன சொல்வது.... மைதீன் போன்றோர்கள் இப்படி இழந்த பணத்தை இறைவன் அவர்களிடமே திரும்ப கிடைக்கச் செய்வானாக.

  ReplyDelete
 5. சலாம் சகோ!

  அருமையான ஆக்கம். இன்றைய கம்யூனிஸ்டுகள் எவ்வாறு தடம் மாறி சென்று விட்டனர் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. சலாம் சகோ.ஹைதர் அலி,
  நடக்கும் உண்மைகளை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.
  மிகவும் மனதை பாதிக்கும் பதிவு.
  அக்கிரம முதலாளிகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்க சங்கம் அவசியம்தான்.

  ஆனால, அது கம்யுனிச கொள்கை சார்பானதும் அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சி சார்பானதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், ஒரே நிறுவன தொழிலாளர்களிடையே பல சங்கங்கள் முளைத்து தொழிலாளர் ஒற்றுமையே குலைகிறது.

  இப்படியாக,
  கம்யுனிஸ்டுகள் சங்கம் என்று வைத்துக்கொண்டு 'பேட்டை தாதா'-க்கள் போல அடாவடி அராஜகத்தில் இறங்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சில சந்தர்பங்களில் இதை நானே நேரில் அனுபவித்து உள்ளேன்.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!

  சங்கம் இருக்கு என்று மிரட்டி மிரட்டியே, உழைக்கும் வறியவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள் பாவிகள். இதைத் தட்டிக்கேட்க நாலுபேராவது முன் வந்தால்தான் இப்படிப்பட்ட அராஜகங்களை ஒழிக்கமுடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் பன்மடங்கு செல்வங்களை பெருக்கிக் கொடுப்பானாக!

  பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 8. வணக்கம் சகோ,
  முடிவு வேதனையாக இருக்கிறது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாதாரண வியாபாரியிடம் இப்படித் தான் நடந்து கொள்வார்களா என நினைக்கையில் வேதனை எஞ்சுகிறது.

  கதையினை நகர்த்திய விதம் அருமை. ஆங்காங்கே பேச்சு மொழி கலந்து முடிவில் ஓர் திருப்பம் தந்திருப்பது கதைக்கு சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 9. வணக்கம் சகோ!
  தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு கட்டாயம் சங்கம் தேவை. ஆனா இப்பிடியான ரவுடிகள் தேவையில்லை.. இந்த கதையில் கட்டாயம் உங்கள் அனுபவம் இருக்கும் என்றபடியால் உண்மை கதையோ? :-((

  ReplyDelete
 10. வணக்கம் நானா! 
  கதையில் இப்படி ஒரு வேதனையைச் சொல்லி கம்னீஸ்ட் என்றால் யார் என்று முகத்தைக்காட்டிவிட்டீர்கள் !அந்த பஸ்தரிப்பில் நானும் போய் இருக்கின்றேன்  என்ற உணர்வைத் தருகின்றது!

  ReplyDelete
 11. நண்பரே தொழிற்சங்கங்கள் உண்மையில் தொழிலாளர்களின் சங்கங்களே அல்ல. தொழிலாளர்களை வைத்து சலுகைகளை அனுபவித்து தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு அடிபணிய வைக்கும் ஒரு முதலாளித்துவ சரக்கு. இதைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.

  ReplyDelete
 12. இது போன்ற சம்பவங்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன், சென்னை எக்மோரில் இந்தக் சிவப்புச் சட்டைக்காரர்களைப் பார்த்தாலே (இவர்கள் கேட்கும் அநியாயமான கூலியால்) இவர்களின் மேல் ஒரு அச்சம் நிலவுவதைப் பார்க்கலாம், 20 கிலோ மதிப்புள்ள ஒரு அட்டைப் பெட்டியை 10 நிமிடத்தில் தூக்கி இறக்குவதற்கு இவர்கள் கேட்க்கும் கூலி ரூ 100 அல்லது ரூ 150 ஆனால் 8 மணி நேரம் ஒரு தொலிற்சாலையில் பஸ் ஏறி, ரெயில் ஏறி (நைந்து நாயாகி) பல கிலோ மீட்டர்கள் கடந்து சென்று உழைக்கும் ஒரு கூலித் தொழிலாளிக்குக் கிடைப்பதோ ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ 300/-.

  இதுக்கு பேர் என்னன்னு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

  ReplyDelete
 13. முதலில் இந்த சங்கங்களை எல்லாம் காலி பண்ணனும்...சமூகத்தில் அன்றாடம் நிகழும் அராஜகங்களை அருமையாக சொல்லி இருக்குறீர்கள்...

  ReplyDelete
 14. @Aashiq Ahamed

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  //அப்படியே ரயில் நிலைய, பஸ் நிலைய அடாவடிதனங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.//

  நன்றி சகோ இது உண்மை சமபவம் சகோ

  ReplyDelete
 15. @eelatamilan

  வீடியோ பார்க்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை

  ReplyDelete
 16. @சகோ
  Barari


  //தங்களிடம் கொடிஇருக்கிறது சங்கம் இருக்கிறது என்று அடாவடி செய்யும் இவர்கள் வழிப்பறி செய்யும் திருடர்களை விட கேவலமானவர்கள்.கேரளத்தில் இந்த பொறுக்கிகளின் அட்டகாசம் தாங்க முடியாது. உண்மை நிலையை படம் பிடித்து காட்டி இருக்கின்றீர்//

  உண்மை சம்பவங்கள் நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்து கற்பனைகளுக்கு இந்த பலம் கிடையாது சகோ

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 17. @Seeni

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 18. @சகோ
  enrenrum16


  //அட பாவிகளா....சங்கம் என்ற பெயரில் இப்படியும் கொடுமைகளா...இவர்கள் பிழைக்க சங்கம் வைக்கிறார்கள...அடுத்தவரின் பிழைப்பைக் கெடுக்க சங்கம் அமைக்கிறார்களா... வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திய பணத்தை கொள்ளையடிக்கும் இவர்களை என்ன சொல்வது.... மைதீன் போன்றோர்கள் இப்படி இழந்த பணத்தை இறைவன் அவர்களிடமே திரும்ப கிடைக்கச் செய்வானாக.///

  வருகைக்கும் கோபம் கலந்த பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ

  ReplyDelete
 19. @சுவனப்பிரியன்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  //அருமையான ஆக்கம். இன்றைய கம்யூனிஸ்டுகள் எவ்வாறு தடம் மாறி சென்று விட்டனர் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//

  நன்றி சகோ

  ReplyDelete
 20. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

  வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

  //கம்யுனிஸ்டுகள் சங்கம் என்று வைத்துக்கொண்டு 'பேட்டை தாதா'-க்கள் போல அடாவடி அராஜகத்தில் இறங்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சில சந்தர்பங்களில் இதை நானே நேரில் அனுபவித்து உள்ளேன்.//

  உங்கள் அனுபவத்தையும் எழுதாலமே சகோ

  ReplyDelete
 21. @சகோ
  அஸ்மா


  வ அலைக்கும் வஸ்ஸலாம்

  ///சங்கம் இருக்கு என்று மிரட்டி மிரட்டியே, உழைக்கும் வறியவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள் பாவிகள். இதைத் தட்டிக்கேட்க நாலுபேராவது முன் வந்தால்தான் இப்படிப்பட்ட அராஜகங்களை ஒழிக்கமுடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் பன்மடங்கு செல்வங்களை பெருக்கிக் கொடுப்பானாக!///

  வறியவர்களை மிரட்டுவது தான் மிகப் பெரிய மனவேதனை சகோ

  பிரார்த்தனைக்கு நன்றி

  ReplyDelete
 22. @சகோ
  நிரூபன்


  நலமா சகோ

  //முடிவு வேதனையாக இருக்கிறது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாதாரண வியாபாரியிடம் இப்படித் தான் நடந்து கொள்வார்களா என நினைக்கையில் வேதனை எஞ்சுகிறது.//

  அனுபவித்தவரின் உளவேதனையை என்னதான் எழுதினாலும் முழுமையாக சொல்ல முடியவில்லை சகோ நமக்கு 50, 100 சில்லறை காசுகளாக இருக்கலாம் ஆனால் ஏழைகளுக்கு?

  //கதையினை நகர்த்திய விதம் அருமை. ஆங்காங்கே பேச்சு மொழி கலந்து முடிவில் ஓர் திருப்பம் தந்திருப்பது கதைக்கு சிறப்பாக உள்ளது.///

  உண்மை சம்பவம் சகோ அதை அப்படியே கொடுத்தேன்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 23. @சகோ
  காட்டான்

  நலமா சகோ

  ///தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு கட்டாயம் சங்கம் தேவை. ஆனா இப்பிடியான ரவுடிகள் தேவையில்லை.. இந்த கதையில் கட்டாயம் உங்கள் அனுபவம் இருக்கும் என்றபடியால் உண்மை கதையோ? :-((///

  இந்த சம்பவத்தில் வருபவர் என் நண்பர் இன்னும் பலூன் வியாபாரம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்
  ஊருக்கு போகும் போது போட்டோவோடு திருவிழாக் கடையில் எடுத்து பதிவிடுகிறேன்

  ReplyDelete
 24. @தனிமரம்

  வாங்கே தனிமரம்

  //கதையில் இப்படி ஒரு வேதனையைச் சொல்லி கம்னீஸ்ட் என்றால் யார் என்று முகத்தைக்காட்டிவிட்டீர்கள் !அந்த பஸ்தரிப்பில் நானும் போய் இருக்கின்றேன் என்ற உணர்வைத் தருகின்றது!//

  உண்மை சம்பவங்களை கதை வடிவில் கொடுக்க முயற்சித்தேன் சில சறுக்கல்களை நீங்களே பார்த்திருப்பீர்கள் உங்களை போன்ற நல்லுல்லங்கள் கொடுக்கின்ற ஆதரவினால் இன்னும் சிறப்பாக எழுத ஆசையாக இருக்கிறது

  உங்கள் வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 25. @Anonymous

  //நண்பரே தொழிற்சங்கங்கள் உண்மையில் தொழிலாளர்களின் சங்கங்களே அல்ல. தொழிலாளர்களை வைத்து சலுகைகளை அனுபவித்து தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு அடிபணிய வைக்கும் ஒரு முதலாளித்துவ சரக்கு. இதைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.//

  இதில் போலி வேறா ஆனால் பாதிக்கப் படுபவர்கள் உண்மையான ஏழைகள்

  ReplyDelete
 26. @சகோ
  Syed Ibramsha  //இது போன்ற சம்பவங்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன், சென்னை எக்மோரில் இந்தக் சிவப்புச் சட்டைக்காரர்களைப் பார்த்தாலே (இவர்கள் கேட்கும் அநியாயமான கூலியால்) இவர்களின் மேல் ஒரு அச்சம் நிலவுவதைப் பார்க்கலாம், 20 கிலோ மதிப்புள்ள ஒரு அட்டைப் பெட்டியை 10 நிமிடத்தில் தூக்கி இறக்குவதற்கு இவர்கள் கேட்க்கும் கூலி ரூ 100 அல்லது ரூ 150 ஆனால் 8 மணி நேரம் ஒரு தொலிற்சாலையில் பஸ் ஏறி, ரெயில் ஏறி (நைந்து நாயாகி) பல கிலோ மீட்டர்கள் கடந்து சென்று உழைக்கும் ஒரு கூலித் தொழிலாளிக்குக் கிடைப்பதோ ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ 300/-.//

  சரியாகச் சொன்னீர்கள் சகோ தூக்குனாப்புளே பணத்த தூக்கிட்டு போற கொடுமை சகோ இது

  //இதுக்கு பேர் என்னன்னு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!//

  வழிப்பறியை தவிர வேறேன்னே

  ReplyDelete
 27. @சகோ
  NKS.ஹாஜா மைதீன்


  //முதலில் இந்த சங்கங்களை எல்லாம் காலி பண்ணனும்...சமூகத்தில் அன்றாடம் நிகழும் அராஜகங்களை அருமையாக சொல்லி இருக்குறீர்கள்...//

  காலி பண்ணுவதை விட முறைப்படுத்துதல் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன் சகோ

  ReplyDelete
 28. சலாம் சகோ,

  உண்மையிலே ரொம்ப நல்ல பதிவு. திருடர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் சகோ.

  ReplyDelete
 29. ஸலாம் அலைக்கும் சகோ
  என்ன நலமா
  நிறைய கதை கைவசம் இருக்குபோல பலே
  கதை நல்ல இருக்கு எல்லா இடங்களிலும் அடாவடித்தனங்கள் பெருகிபோச்சு . சிகப்பு சட்டை போட்டதுனாலே அவர்கள் கம்யூனிஸ்ட் என பாவித்திருப்பது தவறு என நினைக்கிறேன். சகோ உண்மையான பொதுவுடமை கொள்கை ஏற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள்

  ReplyDelete
 30. மஸ்தூக்கா: கதையும் எழுதுவீங்களா? சொல்லவே இல்ல!
  வலையுகம்:இது கதையல்ல ஒரு ஏழை சிறு வியாபாரியைப் பற்றிய கண்ணீர்க் காவியம்
  மஸ்தூக்கா: அப்படியே அரபு நாட்டிலிருந்து சென்னை திருச்சி விமான நிலையங்களில் நாம் இறங்கும்போது படும் அவஸ்தையையும் ஒரு கதையாகப் போடுங்களேன்.
  வலையுகம்: இன்ஷா அல்லாஹ்
  ---------

  ReplyDelete
 31. கரையில் இருந்துMarch 19, 2012 at 9:00 PM

  அருமையான பதிவு !!!

  இவர்கள் செய்யும் வழிப்பறி என்ற நவீன தொழிலை தொளுரித்து காடியமைக்கு மிக்க நன்றி !!
  இந்த பாவிகளின் வினவு என்ற வலைதளத்தை அடிகடி பார்வை இடும் நபரில் நானும் ஒருவன் ....இவர்கள் இஸ்லாத்தை சீண்டும் செயல் மிகவும் அருவருக தக்கது மட்டும் அல்ல உண்மைக்கு புறம்பான செயலும் கூட .....இவர்களுக்கு பதில் கூடுக வேண்டும் எனபது ஆஷை ஆனால் ஏனக்கு போதிய திறமை ஏழுத்து வடிவில் இல்லை . உங்கள் வலை தலத்தில் வரும் செய்திகள் இவர்களுக்கு ஒரு மரண அடிவாங்கி கொடுகிறது எனபது நிதர்சன உண்மை !!!
  இறைவன் உங்கள் செயலுக்கு இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நற்குளி வழங்க இறைவனிடத்தில் பிராத்தனை செய்கிறேன்!!

  உங்கள் போராட்டம் தொடரட்டும் வாழ்த்துக்கள் !!!
  சமுதாய சிந்தனை இல்லாதவன் மிருகங்களை போன்றவன் !!!

  ReplyDelete
 32. @சகோ
  சிராஜ்


  வ அலைக்கும் வஸ்ஸலாம்

  //திருடர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் சகோ.//

  சில இடங்களில் அதிகமாகவே இருக்கிறார்கள் சகோ

  ReplyDelete
 33. @சகோ
  Rabbani


  வ அலைக்கும் வஸ்ஸலாம்

  //கதை நல்ல இருக்கு எல்லா இடங்களிலும் அடாவடித்தனங்கள் பெருகிபோச்சு . சிகப்பு சட்டை போட்டதுனாலே அவர்கள் கம்யூனிஸ்ட் என பாவித்திருப்பது தவறு என நினைக்கிறேன். சகோ உண்மையான பொதுவுடமை கொள்கை ஏற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள்//

  அந்த உண்மையான பொதுவுடமை கொள்கைவாதிகளை உண்மையாக உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

  யார் அவிய்ங்கே எந்த கிரகத்தில் இருக்கிறார்கள்?

  ReplyDelete
 34. @மஸ்தூக்கா

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  நீங்களே கேள்வி கேட்டு பதிலும் சிறப்பாக சொல்லி விட்டீர்கள் அடிக்கடி இங்கிட்டு வாங்கோ சகோ

  ReplyDelete
 35. @சகோ
  கரையில் இருந்து


  //சமுதாய சிந்தனை இல்லாதவன் மிருகங்களை போன்றவன் !!!//

  அருமையான வாசகம் சகோ

  நல்லாத்தான் எழுதுகிறீர்கள் உங்களிடம் திறமை இருக்கு சகோதரரே

  கண்டிப்பாக எழுத ஆரம்பியுங்கள் எதிர் பார்க்கிறேன்

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 36. முதாளித்துவம், ஏகாதிபத்தியம் எதிர்ப்பு என்று இவனுங்க பன்ற ரவுசு தாங்க முடியல சகோதரரே, கேட்டால் போலி கம்யூனிசம் அது இது என்று நழுவுவனுங்க, உலகமாக உண்மை கம்யூனிட் என்று ஒருத்தன் இணனையத்தில் கிறுக்குகிறான் அவனுக்கு வற்ற பின்னுட் டங்களை, பார்த்து வியந்திருக்கிறேன் அப்புறந்தான் தெரிந்தது அவனே எழுதி அவனே பின்னூட்டங்களை போட்டுகிறான்னு. இவனுங்களை பார்க்கும்போது என் நன்பர் சொல்லியது நினைவுக்கு வருகிறது. ' போங்கடா போய் வயல்ல கட்டு அடிக்கிற வேலையாவது ஒழுங்கா பாருங்க கம்பியூட்டர்ல கம்யுசம் பேச வந்துடானுங்க'

  ReplyDelete