Wednesday, March 14, 2012

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்

தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் கர்நாடகாவில் 10934 பேரும் ஆந்திராவில் 9433 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

* முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் மட்டும் நாள்தோறும் 32 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வண்ணமயமான வாழ்விலிருந்து விடுபட்டு வெள்ளைத் துணியில் அடைக்கலம் தேடும் இவர்கள், தங்களின் வாழ்வை விட்டு ஒதுங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? ஒரு துண்டுக் கயிற்றிலோ,ஒரு துளி விஷத்திலோ இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும்போது அவற்றுக்கான காரணத்தை நாம் அறியாமால் போவது ஏன்? அந்த மர்ம முடிச்சுதான் என்னவோ? தற்கொலைகள் நடைபெறுகின்றபோது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்டும் வேகம், பிறகு படிப்படியாகக் குறைந்து அந்த வழக்குகள் தூசு படிந்த கோப்புகளில் உறங்கிக் கிடப்பது ஏன்?

கடந்த 2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் 1.8 % 14 வயதுக்கும் கீழே உள்ள சிறுமியர்கள் ஆவர்.(இது சிறுவர்களின் விகிதத்தை விட அதிகமாகும்) 15 முதல் 30 வயது வரையுள்ளவர்களின் விழுக்காடு 25.7% ஆகும்.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் குடும்பப் பிண்ணனி, சமூக சூழல் ஃஆகியவற்றை மையப் படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.

குடும்பம்

* தாய் தந்தையரின் அவசரகோல வாழ்க்கை 

* குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் இல்லாமை

* தவறு செயுதால் தன்னைப் பாதுகாக்க குடும்பத்தில் எவருமே இல்லை என்ற எண்ணம்

* எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்ற தாய்,தந்தை இருவரில் ஒருவரை மிக எளிதாக தனது ‘கைக்குள்’ போட்டுக் கொள்வதில் கிடைக்கின்ற வெற்றி.

நாகரிகச் சூழல்

* செல்பேசி கேமரா, இணையம் ஆகியவற்றின் தவறான பயன்பாடு

* போட்டி மனப்பாங்கு

* ஆடம்பர வாழ்வின் மீதான மோகம்

* தவறான ஆண்-பெண் உறவு

*பொருளாதார நெருக்கடிகள்

உளவியல் சார்ந்தவை

* உணர்ச்சிவசப்பட்டு நடுநிலை தவறுதல்

* பருவம் அடைகின்றபோது ஏற்படுகின்ற உளவியல் பிரச்சனைகள்

* தனிமை எண்ணம்

* அன்பு,காதல் ஆகியவை குறித்த தவறான புரிந்துணர்வு

* எதையும் சாமளிக்கின்ற திறமை இன்மை

* துக்கம், கவலை

உடல் சார்ந்தவை

* மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹார்மோன்களின் காரணமாக உண்டாகும் வேதனை

* ஆரோக்கியமின்மை

*தீரா நோய்கள்

* அழகின்மை

அரசியல்-கல்வி சார்ந்தவை

* மாஃபியா ரவுடி கும்பலின் துணையுடன் நடைபெறுகின்ற விபச்சாரம்.

* விபச்சாரக் கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கு

* ஊடகங்கள் தருகின்ற அதிகப் படியான முக்கியத்துவம்

* துன்புறுத்தப்படுதல்

* கல்வித் திட்டங்களில் ஒழுக்கப் பாடங்களை இணைக்காதது

* ஆரோக்கியமற்ற பள்ளிக்கூட சுற்றுப்புறம்

மொபைல் கேமராவில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி, வன் புணர்ச்சி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற முறையற்ற செயலகளில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்கள் அல்லர். இதன் பின்னணியில் பல விபச்சாரக் கும்பல்கள் உள்ளன.

மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இந்தியாவில் 43000 கோடி ரூபாய் அளவுக்குப் பாலியல் தொழில் நடைபெறுகிறது. சுற்றுலா வளர்ச்சி எனும் பெயரில் அரங்கேற்றப்படுகின்ற செயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மஸாஜ் செண்டர்கள் என்னும் போர்வையிலும் அழகு நிலையங்களின் பின்னணியிலும் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களைப் பாதுகாப்பது யார் தெரியுமா? அரசியல்வாதிகள்தாம். இவர்களின் செயல்களினால் சீரழிகின்ற பெண்கள் இறுதியாகத் தற்கொலை செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதனை தடுக்க பள்ளி நிர்வாகம், பொற்றோர், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.விழிப்பு உணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். பெண்களின் கைப்பேசிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களையும் படங்களையும் அனுப்புகிற ஈனர்களைக் கண்டறிந்து கைது செய்யும் வசதியை செல்பேசி நிறுவனங்களே உருவாக்கித் தர வேண்டும். அத்தகையர்களின் சிம் கார்டுகளைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒருமுறை இவர்களின் வலையில் ஒரு பெண் சிக்கிவிட்டால் அதன் பாதிப்புகளை மனம் விட்டுப் பரிமாறிக் கொள்ள குடும்பத்திலோ பள்ளிக்கூடத்திலோ அவர்களுக்கு யாரும் இல்லை. பள்ளியிலேயே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஓர் ஆலோசனை மையத்தை நிறுவலாம்.

ஒழுக்கக் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும். பாடத் திட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மணவர்களின் செல்பேசி,கணினி, புத்தகங்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றோம் எனும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாதவாறு இது அமைய வேண்டும் என் தற்கொலைத் தடுப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தற்கொலைக்கான எண்ணம் இறுக்கமான வாழ்க்கை முறையிலிருந்துதான் தொடங்குகின்றது.குறிப்பாக சமூகத்தில் பெருகி வருகின்ற ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எல்லாமே தொடங்குகின்றது. உலகம் அடைந்து வருகின்ற முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்காமல் விலகி இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அன்று. கைவிட்டுப் போன நன்மைகளைப் பற்றிய, அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.

நன்றி: சமரசம்
படம் கூகுள்


12 comments:

 1. இன்றைய நிலையை அழகாக படம் பிடித்து கட்டி இருக்கிறீர்கள் உண்மையில் பெருக்கிவரும் சூழல் கேடு மற்றும் தவறான புரிதல் உளவியல் கரணங்கள் பல்வேறு உலா போராட்டம் தவறான புரிதல் முறையில்லாத வளர்ப்பு ...இப்படி இன்றைய தற்கொலைக்கு கரணங்கள் தொடர்கிறது ... சிறந்த அலசல் பாராட்டுகள் எத்தனைபேர் உள்வாங்கிக் கொண்டார்கள் புரிவில்லை ....

  ReplyDelete
 2. “இறந்த கணவருடன் சேர்த்து என்னை உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள். காப்பாற்றுங்கள்"

  3 குழந்தைகளுடன் போலீசில் பெண் தஞ்சம்

  ராமநாதபுரம், மார்ச்.13-

  ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன.

  இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பேரும், வேனில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 8 பேரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த வேன் டிரைவர் லகன்சிங், பீபல்சிங் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனர்.

  ஆனால் வழியில் பீபல்சிங் இறந்தார்.

  இவர் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தான மாவட்டம் நகோடு தாலுகா சித்துபுராவை சேர்ந்த நிக்குசிங் என்பவரின் மகன் ஆவார். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தபோது விபத்தில் சிக்கி இறந்து போனார்.

  இவருடைய மனைவி வீராபதி (வயது27), மகன் அனில்(3), 5 மாத குழந்தை பாதல், மகள் பூனம்(7) ஆகியோர் காயமடைந்தனர்.

  பீபல்சிங்கின் உடலை பெற அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று ராமநாதபுரம் வந்தனர். அவர்கள் பீபல்சிங்கின் உடலை பெற்றுக்கொண்டு வீராபதி மற்றும் குழந்தைகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர்.

  ஆனால் வீராபதி தனது குழந்தைகளை கட்டி அணைத்துக்கொண்டு வரமுடியாது என கூறினார். அவர்கள் வீராபதியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கவே கதறி அழுதார்.

  பின்னர் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்டு அழுதுகொண்டே ராமநாதபுரம் டவுன் போலீஸ்நிலையத்துக்கு ஓடி வந்து தஞ்சம் அடைந்தார்.

  அங்கு, "போலீசாரிடம் காப்பாற்றுங்கள் காப்பாற்றுகள்'' என்று இந்தியில் அலறினார்.

  போலீசார் அவரை ஆறுதல் படுத்தி விசாரித்தனர்.

  "ஏன் கணவர் வீட்டாருடன் செல்ல மறுக்கிறாய்?'' என்று அவரிடம் போலீசார் கேட்டபோது வீராபதி கூறிய பதில் போலீசையே அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

  "எங்கள் குல வழக்கப்படி கணவர் இறந்துவிட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறவேண்டும்.

  இறந்த கணவருடன் சேர்த்து வீட்டின் பின்புறம் என்னையும் உயிரோடு புதைத்து விடுவார்கள்.

  குழந்தைகள் இருந்தால் கணவரின் பெற்றோர் தான் அவர்களை வளர்ப்பார்கள். என்னையும் என் கணவரோடு புதைக்கவே வருமாறு வற்புறுத்தி அழைக்கிறார்கள்.

  எனது கணவர் இறந்தாலும் எனது பிள்ளைகளை நான்தான் வளர்ப்பேன். அவர்களுக்காக நான் உயிர்வாழ வேண்டும். எனவே என்னை அவர்கள்பிடியில் இருந்து காப்பாற்றுகள்.

  நான் எனது தந்தை ராம்ஜிலாலுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். அவர் வந்து என்னை அழைத்துச் செல்வார்.''

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதனை அடுத்து வீராபதியை அவருடைய மாமனார் குடும்பத்தினருடன் அனுப்ப போலீசார் மறுத்துவிட்டனர்.மேலும் அவர்களை

  source: http://www.dailythanthi.com/article.asp?NewsID=715630&disdate=3/13/2012

  ReplyDelete
 3. சலாம் சகோ ஹைதர் அலி,

  ரொம்ப நல்லா, புள்ளி விபரங்களோட தற்கொலை பற்றி விளக்கி உள்ளீர்கள். நன்றி சகோ. இதில கொடுமை என்னன்னா??? தென் இந்திய மாநிலங்கள் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்குபவை. ஆனால் தென்னிந்தியாவில் அதிகம் தற்கொலை நடப்பது தான் மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. எனவே, கல்வி அறிவிற்கும் சிந்திப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
 4. முக்கியமான ஒரு விஷய
  தன்னம்பிக்கை இல்லாத நிலைமை..
  இந்த நிலைமை ஏன் வருகிறது என்று அவர் அவர் யோசித்தாலே தற்கொலை எண்ணம் அறவே ஒழிந்து விடும்

  ReplyDelete
 5. @சிராஜ்// சரியாக சொன்னீங்க சகோ :-(

  ReplyDelete
 6. இன்றைய புதிய சமுதாய மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் தந்த எதிர்மறை விளைவுகளில் முக்கியமான ஒன்றைப்பற்றி விபரமான பதிவிட்டதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 7. இந்த பிரச்சனைக்கு தற்காலத்தில் எமது குடும்ப வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றமும், உறவுகள்மத்தியில் முன்புபோல் தொடர்புகள் இல்லாது அரிகிவருவதும் ஒருகாரணமாகும்.

  ReplyDelete
 8. உடன்கட்டை ஏறச்சொல்லி கொன்று விடுவார்கள். காப்பாற்றுங்கள்.

  தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

  மேலே உள்ள பதிவு வலையுகம் வலைப்பூவில் பதியப் பட்டுள்ளது பதிவை தாண்டி ஒரு பின்னூட்டம் சமுக அவலத்தை தோலுரிக்கிறது அந்தப் பின்னூட்டத்தை கீழே பதிவிடுகிறேன்.

  ஒரு தற்கொலையின் கோர முடிவு பலகீன மான இதயம் கொண்டவர்கள் படிக்க வேண்டாம். என் மணைவி ஷாமிளாவை கொலை செய்தேன். மகேஸ் குமார் தற்கொலையின் பின்னனி மனதை உலுக்கும் உண்மைகள்.


  கற்புக் கொள்ளையர்லகள் தினம் காதல் என்ற மாயத்தோற்றம்

  http://www.kaleelsms.com/2012/03/blog-post_2346.html

  ReplyDelete
 9. சலாம் சகோ.ஹைதர் அலி....
  விழிப்புணர்வூட்டலுக்கு நன்றி சகோ..!

  /// இந்தியாவில் ௧௫ நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.////

  ---எனில், ஒரு நாளைக்கு நாட்டில் இருநூத்தி எம்பத்தெட்டு பேர் தற்கொலை செய்து சாகிறார்கள். வருஷத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேலே..! அடப்பாவமே..!

  "தற்காலிக பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தற்கொலை" என்ற முட்டாள்ததனமான முடிவுதான் இதற்கு காரணம்.

  இப்படி ஒரு எண்ணத்தை மக்களிடம் விதைத்த - விதைத்துக்கொண்டு இருக்கிற சினிமா, சீரியல், நாவல், சிறுகதைகள், அப்புறம்... இதுபோன்ற தற்கொலை செய்யும் கோழைகளை ஏதோ உலகமகா புரட்சி வீரர்கள் போல, தியாகிகள் என்று கூறி பிரேம் போட்ட போட்டோவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அரசியல் பிழைப்புவாத- பயங்கரவாத- பழமைவாத- முற்போக்கு- பிற்போக்கு- முன் பின் நவீனத்துவ- புரட்சி இயக்கங்கள்... கட்சிகள்... அமைப்புகள்.... மற்றும், இவர்களுக்கு துணைபோகும் மீடியாக்கள்... எல்லாரும்தான் இந்த தற்கொலை புள்ளிவிபரத்துக்கு பொறுப்பு..!

  தற்கொலை செய்பவன் எவனாயிருந்தாலும் / எவளாயிருந்தாலும்... அவன்/அவள்,
  முட்டாள்...
  கோழை...
  பெரும்பாவி...
  ஃபிராடு...
  420 ....
  ---என்று சட்டப்பூர்வமாக அறிவித்து அவர்களை அரசும் சமூகமும் ஊடகமும்
  கேவலப்படுத்த வேண்டும்..!

  இது தற்கொலை செய்யும் அனைவருக்கும் பொருந்தும்..!

  ReplyDelete
 10. kavalai kuriya visayam !
  neengal pakirnthathaal naalu perukkavathu-
  vizhippunarvu varum!
  nalla muyarchi!

  ReplyDelete
 11. அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.// மிகச்சரியான உண்மையை மிக அருமையாக சொன்ன விதம் அருமை

  ReplyDelete
 12. பாவா உங்க மகிமையே மகிமை....
  அல்லாஹ் அருள் புரிவனாக !

  ReplyDelete