Wednesday, November 24, 2010

வானம் வசமானதா? விஷமானதா?

விண்மீன்கள் கண்சிமிட்டும் வான்வெளியில் வியாபித்திருக்கும் சாட்லைட்கள் யுகத்தில் தொழில் நுட்பத்தின் தவிர்க்க முடியாததுமான வலையுகத்தில் விரும்பியோ (விரும்பாமலோ) வெறுத்தோ வாழ்கிறோம்.
வானிலிருந்து சாட்லைட்கள் அமுதையும் பொழிகிறது. விஷ அமிலத்தையும் பொழிகிறது. துரதிஷ்டவசமாக அதிகமான இணைய பயனாளர்கள் அமில மழையில் நனைந்து இணையம் சார் தீமைகளுக்கு அடிமையாகி விட்டிருக்கின்றனர்.

இணையத்தின் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அறிவுக்களஞ்சியம். கேட்டதை கொடுக்கும் அலாவுதீன் பூதம் என்ற
கற்பனையை விஞ்சக்கூடிய தேடு பொறிகள். இறைக்க இறைக்க நீர் சுரக்கும் கிணறு.
இணையத்தில் உலாவ ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இது என்னை போன்றவர்களுக்கு இனிப்பானச் செய்தி.
நம் உள்ளம் கவர்ந்த உரைகள்.  கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்கள். ஆச்சரியமூட்டும் அசையும் காணொளிகள். மனம் கிளரும் ஒளிப்படங்கள். இவற்றை கேட்பதோடு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்
அன்றாட தமிழ் பத்திரிக்கையின் (பிராடு) மற்றும் உண்மைசெய்திகள்
வித்தியாசமான நாடு கடந்த நண்பர்களால் நடத்தப்படும் குழுமங்கள்
எழுத்து திறனை உளி கொண்டு செதுக்கி நம்மை ஒளிர செய்யும் நட்புகள்.
வாசிப்பார்வத்தை தண்ணீருற்றி வளர்க்கும் ஏராளமான பதிவாளர்களின் கவிதை கட்டுரை சிறுகதை மற்றும் நேர்காணல்களை தாங்கி வரும் இணைய தளங்கள்.
யாரிடமும் முறையிட முடியாத சில பிரச்சனைகளுக்கான தீர்வுகள்.
உலகின் எந்த மூலையிலிருந்தும் உறவை வளர்க்கும்
உபயோகமான இணையதோழமைகள்.

இணையத்தின் விஷம் தோய்ந்த மறுபக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

அரசியலில் அடாவடித்தனம் செய்பவர்கள், தம் சுயத்தை
இழந்து நடிப்பு,விளையாட்டு விளம்பரத்துறைகளில் விலைபோனவர்கள்,
மேக்-அப் மன்னர்கள், வெகுளி வேடம் தரித்தவர்கள், ஆபாசப் பேர்வழிகள், சமூக விரோதிகள், கீழமை எண்ணம் கொண்டவர்கள், இவர்களின் பாதுகாப்பான புகலிடமாக இணையம் மாறிபோயிருக்கிறது
இணையம் ஒரு திறந்த ஊடகம். தெளிந்த மனதையும் சிதறடிக்கும் சக்தி கொண்டது.
இயற்கையான வெட்கத்தின் பாற்பட்ட மெல்லுணர்வுகளை வக்கிரமாக தீர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இணையத்தில் உண்டு
தன் சொந்த வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்திருப்பவர்கள் (பஸ் ஸ்டாண்ட்) பொது கழிவறையை அசிங்கப்படுத்துபவர்கள். யார் வந்தார்கள் அசிங்கமாக கிறுக்கினார்கள் என்று யாருக்கும் முகம் தெரியாது.
பொது கழிவறையில் பொறுப்பில்லாமல் கிறுக்குபவர்களை விட மூர்க்கமான வக்கிர ஆபாச பேர்வழிகள் திறந்த இணைய ஊடகத்தில் இறைந்து கிடக்கிறார்கள்.
தன் வீட்டை தன் குடும்ப பெண்களை பாதுகாத்துக் கொண்டே அடுத்த வீட்டு குடும்ப பெண்களை திருடுகிற திருட முயற்சிக்கிற கேடு கெட்டவர்களுக்கு இணையம் எளிமையான பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
புகழ் பெற வேண்டும் என்பதற்காக இணையத்தில் பொறுப்பில்லாமல் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க தயங்காத விளம்பர பிரியர்களின் விளம்பரங்கள் குப்பைபோல் கொட்டி கிடக்கின்றன.

ஒரு பெண்ணும் இளைஞனும் சாட்டிங்கில் நீண்ட நாட்களாக (அசிங்கமான) நட்பாக பழகியதில் அந்த இளைஞனின் ரோமண்டிக்கான பேச்சில் மயங்கிய அந்த பெண் இருவரும் நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து நகரின் மத்தியுள்ள பூங்காவில் சந்திக்க திட்டமிட்டனர்.அடையாளம் கண்டுக் கொள்ள welcome  என்ற பெயர் பொறித்த சிகப்பு கலர் டி சார்ட் அணிந்து வர வேண்டும் என்று முடிவெடுத்து சந்தித்தார்கள். சந்தித்த பிறகு தான் தெரிந்தது இத்தனை நாள் தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞான் தன்னுடைய மகன் என்று.
இது அமெரிக்காவில் 2006-ல் நடந்த உண்மை சம்பவம்.

தீயை விளக்கேற்ற பயன்படுத்தாமல் தானும் அந்த வீட்டில் தான்வசிக்கின்றேன் என்ற பொது அறிவுகூட இல்லாமல் வீட்டை எரிக்க பயன்படுத்துகிறவர்களை தனிமைப்படுத்துவது அல்லது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
இந்த இணையத்தை அழிவு பனிகளுக்கு பயன்படுத்தாமல் ஆக்கப் பனிகளுக்கு எப்படி பயன்படுத்துவது என்கிற விஷயத்தை
பதிவாளர்களும் கருத்து சொல்லுபவர்களும் இனைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து தெரிவிப்பவர்களிடம் விட்டு விடுகிறேன்
எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உங்களுடைய கருத்தை பதியுங்கள்


1.இந்த தீமைகளை களைய வேண்டும் ஏன்றால் உண்மையான இறைநம்பிக்கைஆன்மீகம் ஊடக களைய முடியும் இப்படியும்


2.எல்ல பிரச்சனைகளுக்கும் மத புத்தகத்தில் ஏன் தீர்வை தேடுகிறீர்கள் சமூக அக்கறையும் மக்களை நேசிக்கின்ற பண்புள்ளவர்கள் இருந்தால் போதுமானது என்றும்


3. பெரிய சமூதாய அக்கறையெல்லாம் தேவையில்லை சுயநலமாக யோசித்து பாருங்கள் யார் பாதிக்கப்படுகிறர்களோ அந்த இடத்தில் நாம் மகனை மகளை வைத்துப்பாருங்கள் இப்படி சுயநல சிந்தனை இருந்தால் போதும் இணையத்தை சீர்திருத்தி விடலாம் இப்படியும் கருத்து கூறலாம்


வாருங்கள் சகோதரர்களே சகோதரிகளே நண்பர்களே
வலையுகத்தை சரியான இலட்சிய நோக்கத்திற்காக பயன்படுத்துவோம்
அதன் பிறகு இரண்டாவது பதிவில் எனக்கு தெரிந்த உடன்பாடன தீர்வை சொல்லுகிறேன்
தொடரும்

24 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்ல பதிவு. நிறையபேர் இப்படி குளியில் விழுந்துடுறாங்க. எனக்கு தெரிந்து பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்கே வேண்டுமானாலும் பதிவு போடலாம், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் வரைமுறையோடு!

  முடிந்த வரை எல்லோரையும் எங்கு சந்திகிரோமோ அத்துடன் மட்டுமே வைத்துக்கொள்ளலாம். சாட்டிங், மெயில் வரை கொண்டு வந்தால் பிரச்சனை தான். குறிப்பாக ஜீடால்க்கில் ஒரு முறை பேசினாலே போதும். நம் பைலில் உள்ள போட்டோக்கள், ரகசியங்கள் எல்லாமே காப்பி அடிக்கப்படும். நானே கண்கூடாக பார்த்த உண்மை இது. சோ எல்லாரும் ஜாக்ரதையா இருக்கலாம்.

  ReplyDelete
 2. நல்ல கருத்து, பொதுவாக 99 % ஈமெயில் சாட்டிங்லதான் கலிகுராங்க இன்டர்நெட்இல் எவளவோ நில்லா விஷயங்கள் இருகிறது. இருந்தாலும் சைத்தான் கெட்ட விஷயங்கள் பக்கம் தான் இந்த இளய தலைமுறையை கொண்டு செல்றான். திருந்துகப்ப....................

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் நிதானமாகவும்,மிகவும் அழகாகவும் தொகுத்தளித்துள்ளீர்கள். ------லெனின்-------

  ReplyDelete
 4. தேவையனப்பதிவு சொல்லவேண்டிய விசயத்தை அழகா சொல்லியிறுக்கீங்க.  சொல் சரிபார்ப்பை எடுத்திடுங்க.

  ReplyDelete
 5. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சரியாக சொன்னீர்கள்
  இணையத்தின் பலம் பலஹீனம் இரண்டையும் தெரிந்து வைத்திருப்பது
  இணைய தீமைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும்

  ReplyDelete
 6. சகோ ரஹீம்
  ///இருந்தாலும் சைத்தான் கெட்ட விஷயங்கள் பக்கம் தான் இந்த இளய தலைமுறையை கொண்டு செல்றான். திருந்துகப்ப....................///

  பிறர் மீது கையை நீட்டாமல்
  நாம் இணையத்தில் என்ன செய்கிறோம் அல்லது என்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் உபயோகமாக இருக்கும்

  ReplyDelete
 7. சகோ ராஜவம்சம்
  மறுபடியும் எடுத்து விட்டேன்
  நன்றி

  ReplyDelete
 8. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சகோ லெனின் அவர்களின் வருகைக்கும்
  வாழ்த்துக்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 9. ASSALAMU-ALAIKUM

  Dear brother in Islam

  A common subject written excellently with mature thoughts & right examples - MASHA-ALLAH!

  Allah says in the Holy Quran
  Ch 13 V 11. ...Allah changeth not the condition of a folk until they (first) change that which is in their hearts; ...

  We know what's right & what's wrong ALHAMDULILLAH. Our community should leaders should utilize it to the fullest extent possible to bring awareness in our ummah but unfortunately they are using it to divide the Ummah.

  Encouraging you to write more & serve the community in future INSHA ALLAH. May Allah make it easy for you - Ameen.

  May Allah guide us all - Ameen.

  ReplyDelete
 10. Aslamu alaikum,
  This is Very good descussion.
  My suggestion
  "We think and work anything watch God" this word analize all person . Will Solve this problem.

  Hidhayathullah

  ReplyDelete
 11. ஆகா இன்றுதான் தங்கள் தளத்தை பார்த்தேன், Riyadh ல் தானா? உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி.

  அருமையான பதிவு தொடருங்கள்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. மகாதேவன்-V.K
  உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நான் ரியாத்தில் தான் நீங்க எங்கே இருக்கீக

  ReplyDelete
 13. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சகோ முஸம்பில் உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  ஹிதாயத்துல்லாஹ்
  உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி

  ReplyDelete
 15. //ஹைதர் அலி கூறியது...
  மகாதேவன்-V.K
  உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நான் ரியாத்தில் தான் நீங்க எங்கே இருக்கீக

  28 நவம்பர், 2010 6:21 am//

  Doha Qatar

  ReplyDelete
 16. நல்ல ஆரம்பம். தொடரட்டும் உயரிய நோக்குடன்.

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  அனைதிலும் கவனம் மிக முக்கியம் அதிலும் இணையம் அதில் ரொம்ப முக்கியம்.
  அனைவருக்கும் தேவையனப்பதிவு .நல்ல பதிவு
  உங்களின் நற்பணி தொடரட்டும்.

  ReplyDelete
 18. அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...
  சகோ மலிக்கா
  உங்களுடைய கருத்துக்கும் ஆதரவுக்கும்
  நன்றி (ஜஸக்கல்லாஹ் கைர்)
  உங்களை போன்ற மூத்த பதிவாளர்களின் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களை ஊக்குவிக்கும் சிறப்பாக செயல்பட உதவி செய்யும்

  அல்லாஹ் போதுமானவன்

  ReplyDelete
 19. உங்கள் உற்சாகம் எனக்கு ஆர்வம் தருகிறது.வரதட்சணை பற்றி மேலும் உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.

  yours is nice blog

  ReplyDelete
 20. மி(ஸ்)டர் வேண்டாம் வரதட்சணை அவர்களுக்கு(இப்புடி ஒரு பெயரா)
  விரைவில் வரதட்சனை சம்பந்தமாகவும்
  கண்டிப்பாக பதிவு இடுகிறேன்

  சின்ன வேண்டுகொள்
  ஒங்களுக்கு ஒரு நல்ல பெயராக வச்சுக்கங்க

  ReplyDelete
 21. சகோதரரே கவலையே வேண்டாம் வானம் வசமானது தான்,

  உலகம் தோன்றிய காலம் தொட்டே புதிதாக வரும் எல்லா துறைகளுமே இப்படிதான் இருந்து வந்திருக்கிறது.நல்லவையும் தீயவையும் கலந்ததே எல்லா துறையும், மற்றதுறைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதைப்போலவே இந்த துறையையும் நாம் பயன்படுத்தவேண்டும் அத்தோடு நாம் குடும்பத்தவருக்கும் இதை எப்படி பயன்படுத்தவேண்டும் என ஆலோசனைகளை வழங்கவேண்டும் புலியோ சிங்கமோ தனது பசிக்காக இரையை துரத்தும்போது பலகீனமான மான் தானே அகப்பட்டுக்கொள்ளும்? இதை இந்த துறையை பயன்படுத்தும் நாம் உறவுகளுக்கு நாம் புரியவைத்துவிடவேண்டும்.இறுதியாக ஊடகத்துறையில் மட்டுமில்லை எல்லாதுறையிலுமே உண்மையான இறைநம்பிக்கை மட்டுமே தீமைகளை கலையாமுடியும் ஏன் எனில் மனிதனுக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு முதலாவது மனிதன் சகமனிதர்கள் முன்னிலையில் வாழ்வது இரண்டாவது தனித்த நிலையில் தான் தன்னோடு வாழ்வது, நான் மேலே சொன்ன முதலாவது வாழ்க்கையில் மனிதன் நடித்துவாழ்ந்துவிடாலாம் ஆனால் இரண்டாவது வாழ்வில் அவனால் நடிக்க முடியாது அவன் அவனாகவே இருதால் தான் அவன் மனிதன், இல்லை எனில் மனப்பிரழ்ச்சியாடைந்துவிட்டான் எனப்பொருள். இரண்டாவது நிலையில் தான் மனிதன் பல முடிவுகளையும் எடுக்கிறான் இந்த மாதரி வாழ்வில் இறைவனின்மீது நம்ம்பிக்கை இருக்குமாயானால் அவன் இறையின் சட்ட திட்டங்களுக்கு அடிபணிந்து நல்ல முடிவுகளை எடுக்க முடியும். ஆகவே ஏன் நிலை உண்மையான இறை நம்பிக்கையே உண்மையான இறைநம்பிக்கையே மனிதனை தவறுகளின் பக்கம் போகாமல் பொதுச்சபையிலும் தனிமையிலும் தடுக்கும்.

  ReplyDelete
 22. சகோ, சே.முகம்மது ஆதம்.
  //உண்மையான இறைநம்பிக்கையே மனிதனை தவறுகளின் பக்கம் போகாமல் பொதுச்சபையிலும் தனிமையிலும் தடுக்கும்//.
  சரியாக சொன்னீர்கள் நான் இதை அனுபவரீதியாக உனர்ந்துயிருக்கிறேன்

  ReplyDelete
 23. Dear brother,
  Assalamu Alaikkum
  Masha Allah, An excellent rational thinking and caring about all the society.. Well done, keep going on for Ur good efforts, Allah Subahanthallah may give the reward to you here and hereafter.....
  Wassalam
  Mohamed Ibrahim- Riyadh

  ReplyDelete
 24. அன்புச் சகோதரர்
  முஹம்மது இபுராஹீம் அவர்களுக்கு
  அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

  உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ

  ReplyDelete