Monday, February 27, 2012

கடன் பயங்கரவாதமும் குட்டி போடும் கூட்டு வட்டியும்!

காட்சி:1
இடம்: அமெரிக்க தூதரகம்.


ஆயுதாங்கிய காவலர்கள்,ரகசிய தொலைக்காட்சி காமிராக்கள்,இரண்டு அடுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள்,மெடல் டிடெக்டர்கள் எல்லாவற்றையும் மீறி கழிப்பறை வழியாக மூன்று மூகமுடி அணிந்த நபர்கள் தூதரக அதிகாரியைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.

சரியாக அதே நேரத்தில் தூதரக அலுவலக வாயிலிலும் துப்பக்கிச் சண்டை..!

இரண்டே நிமிடங்களில் முழு அலுவலகமே மூகமுடி மனிதர்களின் கையில்...!

தூதரக அதிகாரி,அவரின் மனைவி,துணை அதிகாரி,பி.ஆர்.ஒ.என அறுவரை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு மற்ற எல்லாரையும் வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

சில கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல் பணயக் கைதிகளை ஒரு நாளுக்கு ஒருவர் என்கிற ரீதியில் கொன்று விடுவோம் அல்லது முழு கட்டடத்தையே தரைமட்டமாக்கி விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

காட்சி : 2
இடம் : ஒரு ஏழை நாட்டின் விமான நிலையம்


நீலவானில் வட்டமிட்டபடி வந்து தரையிறங்குகிறது சிறப்பு போயிங் 737 விமானம் பளபளவென மின்னும் கருப்பு கோட்,கருப்பு கண்ணாடி,கருப்பு டை,கருப்பு ஷூவுடன் மூன்று மிடுக்கான அதிகாரிகள் விமானத்திலிருந்து இறங்குகின்றார்கள்.

நிதி அமைச்சக அதிகாரிகள் கும்பிடு போடாத குறையாக,மிகுந்த பணிவுடனும் அடக்கவொடுக்கத்துடனும் அவர்களை பளபள மகிழுந்துகளில் அழைத்துச் செல்கிறார்கள்.

வறட்சி,ஊழல்,நிர்வாகச் சீர்கேடு,பங்குச்சந்ததை வீழ்ச்சி,அந்நிய செலாவணிப் பற்றாக்குறை,தேசிய உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சி என எல்லாமாகச் சேர்ந்து ஒட்டுமொத்த தேசப் பொருளாதார நிலை தத்தளித்துக் கொண்டிருந்தது....

பசி பட்டினிச்சாவு, பஞ்சம் என மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்- குளுகுளு அறையில் கூடிய மிடுக்கான அதிகாரிகள்- ஐ.எம்.எப்-உலக வங்கியின் மூத்த அதிகாரிகள் எனச் சொல்லவும் வேண்டுமா- நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் 50 பில்லியன் டாலர் கடன் தரத்தயார் என அறிவிக்கிறார்கள்.அதே மூச்சில் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் ஒவ்வொன்றாக பட்டியலிடத் தொடங்குகிறார்கள்.

என்ன நடக்கும்?


முதல் காட்சி எப்படி முடியும்? மூகமுடி மனிதர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அதிரடிப் படையினாரல் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.

பயங்கர தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகத்தில் பரபரப்பாக செய்தி வெளியாகும்.

இரண்டாவது காட்சி...? ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சேவைக்காக மிடுக்கான அதிகாரிகளுக்குப் பெரும் பரிசு தரப்படுகிறது.

கடன் பொறியில் சிக்கிய நாட்டின் வருமானம் முழுமையாக முடக்கப்படுகின்றது. அதன் வருவாய் ஈட்டும் திறனும் மடக்கப் படுகின்றது.

கடன் கொடுத்த நிறுவனங்களோ 50 பில்லியன் டாலரை விட பல மடங்குத் தொகையை அடுத்த பத்தாண்டுகளில் ஈட்டிவிடுவர். கடனை அறிவித்த அதிகாரிகளோ போனஸ்,பதவி உயர்வு என செழிப்பார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐ.எம்.எஃபும், உலக வங்கியும் ஏழை நாடுகளின் மீது இத்தகைய ‘பொருளாதார வளர்ச்சியை’- கொழுத்த முதலாளிகளுக்கும், பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே சாதகமாக இருக்கும் வளர்ச்சியை- திணித்திருக்கிறார்கள்.

இந்த ‘வளர்ச்சி’மேற்குலகுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.ஆனால் மூன்றாம் உலக நாடுகளையோ அடிமையாக்கி விடும்.

இந்த வகையில் இந்தப் பன்னாட்டு கடன் முதலைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை தங்களின் கிடுக்குப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
கடன்கள், பன்னாட்டு நிதியுதவி,கடன் நிவாரணம்- எல்லாமே எப்போது வழங்கப்படும்? ஐ.எம்.எஃபும், உலக வங்கியும் முன்வைக்கும் நிபந்தனைகளையும் விதிகளையும் அந்த நாடுகள் ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே இவையேல்லாமே கிடைக்கும்.

பொருளாதார ஸ்திரத்தன்மை நிறுவப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? பொருளாதார சீர்திருத்தங்கள் என்கிற பெயரில் உள்நாட்டு வணிகத்தைத் திறந்து விடுங்கள்; சந்தையை தாரளமயமாக்குங்கள்; அடிப்படையான இயற்கை வளங்களையும், முக்கியமான, இன்றியமையாத துரைகளையும், சேவைகளையும் தனியார்மயமாக்குங்கள் என்று நிபந்தனை விதிக்கப்படும்.

கழுத்தை நெரிக்கும் வட்டி விகிதம் தாறுமாறாக எகிறும் போது உடல்நலம், மருத்துவம்,கல்வி, போக்குவரத்துவசதி,சாலைவசதி போன்ற சேவைத்துறைகள் மீதுதான் கை வைக்கப்படும்.

இந்த துறைகளுக்கு அரசு மானியங்களும், முதலீடுகளும், நிதியுதவிகளும், சலுகைகளும் நிறுத்தப்படும்.இது கோடிக்கணக்கான ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும்.

அதே சமயம் இந்த நாடுகளை ‘பொருளாதார நெருக்கடியிலிருந்து’ காப்பாற்றிய வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கொழுத்த லாபம் சம்பாதிக்கும்.

மனிதனால் உருவாக்கப்படுகிற பெரும் துயரங்களான போர்கள் மூளும்போது கூட முதலீடு செய்வதற்கான பணம் வைத்திருப்பவர்களின் காட்டில் மழைதான்...! பணம் பண்ணுகின்ற அருமையான வாய்ப்புகளாக போர்கள் ஆக்கப்பட்டுவிட்டன.
பத்தாண்டுகளுக்கு முன்பே முதுபேரும் பொருளாதார வல்லுநர் ஜே.டபிள்யூ.ஸ்மித் எச்சரித்தார்: “ஒரு சமூகத்தின் உபரி உற்பத்தி முழுவதையும் விழுங்கிக் கொள்கின்ற வகையில் கடன் பொறியின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் கூட்டுவட்டி பெருமளவுக்கு வளர்வதைத் தடுக்காமல் விட்டுவிட்டோமெனில் கடன் பொறியை யாதொன்றாலும் கட்டுப்படுத்தவும் முடியாது: அதனை நிர்வகிக்கவும் முடியாது.மிகப்பெரும் கொடுமையாக பேருவம் எடுத்துவிடும்; எல்லவற்றையும் நாசமாக்கி விடும்.

ஆண்டுக்கு 20 சதவீதம் என்கிற கணக்கில் கூட்டுவட்டி குட்டி போட்டுக் கொண்டே போகிறது.1973-இல் 100 பில்லியன் டாலராக இருந்த மூன்றாம் உலகக் கடன் 1993-இல் 1.5 டிரில்லியனாக ஊதிப்பெருகி விட்டது. (1.5 டிரில்லியன் டாலரில் 400 மில்லியன் டாலர்தான் கடனாக வழங்கப்பட்ட தொகை.மற்றதெல்ல்லாம் கூட்டு வட்டி...!) மூன்றாம் உலகக் கடன் நிலை இதே போல ஆண்டுக்கு 20 சதவீதம் கூட்டு வட்டியாக வளர்வது நீடித்தால் அது பதினெட்டு ஆண்டுகளுக்குள் 117 டிரில்லியன் ஆகிவிடும்; 34 ஆண்டுகளில் 13.78 குவாட்ரில்லியன் ஆகிவிடும்.”

ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடிக்குச் சமம்...! அம்மாடி....! மலைக்க வைக்கிறதா? அதைவிட திகைப்படையச் செய்கிற,இரத்தத்தை உறைய வைக்கக் கூடிய இன்னொரு உண்மையும் உண்டு.

இந்தக் கடன் பொறி ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உபரி உற்பத்தி அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பதுதான் அது. கடன்பொறி ஒரு நாட்டின் உழைப்பை மட்டும் உறிஞ்சுவதில்லை.அதன் இரத்தத்தையே உறிஞ்சி சக்கையாகப் பிழிந்து விடுகிறது.
கடன் என்கிற பெயரில் அரங்கேற்றப்படும் இத்தகைய பயங்கரவாதம் குழந்தைகளின் எதிர்காலத்தை அபகரிக்கிறது; நோயாளிகளைக் கை விடுகிறது; உழைப்பாளிகளை அடிமைகளாக்குகிறது.இதுதான் கடன் பயங்கரவாதம்...!

உலக வங்கிக் கடனால் உருவான வறுமை காரணமாக ஒரு நாளுக்கு 24 பிலிப்பைன்ஸ் குழ்ந்தைகள் செத்து மடிகிறார்கள்.

உணவோ மருந்தோ வாங்க சக்தியின்றி, பணம் இன்றி மூன்றாம் உலக நாடுகளில் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் செத்து மடிகிறார்கள்.அந்த குருத்துகளின் பெற்றோரால் நாள் முழுக்க இருபது மணிநேரம் உழைத்தாலும் ஒரு நாளுக்கு 2 டாலரை விட அதிகமாகச் சம்பாதிக்க முடியாது.

நாற்றமடிக்கும் சாக்கடைகளும், தேங்கி நிற்கும் குட்டைகளுமாக வாழ்வதற்கே தகுதியில்லாத சேரிகள் இன்று மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே பல்கிப் பெருகி விட்டன.

டிஸ்கி  வங்கியில் கொள்ளையிட்டவர்களை என்கவுண்டர் செய்தவர்கள் மக்களை வட்டியின் மூலம் கொல்லுகின்ற வங்கிகளின் கொள்ளை அதிகாரிகளை யார் கொல்வது.

பின்குறிப்பு: இதன் தொடர் (இறைநாடினால்)கடன் பயங்கர வாதம் தீர்வு என்ன? தொடரும்.

References:டாக்டர் மன்சூர் துர்ரானி
பேராசிரியர். மலிக் முஹம்மத் ஹுஸைன்

28 comments:

  1. மிக அருமையான சிந்தனைகள் நிறைந்த பதிவு ஹைதர் அவர்களே! ஒரு சாதாரணமனிதன், அடுத்தவனிடம் கடன் வாங்கினாலே, அவனது நிம்மதி போய்விடுகிறது! அதுவும் வட்டிக்கு கடன் வாங்கினால் சொல்லவும் வேண்டுமோ? அந்த மனிதனின் நிம்மதியே போய்விடுகிறது!

    ஒரு மனிதனுக்கே இப்படி என்றால், ஒரு நாடு கடன் வாங்கினால் என்ன ஆகும்? அதைத்தான் உங்கள் பதிவு அருமையாக விளக்கியுள்ளது!

    மேலும், இந்தக் கடன் தொல்லையில் இருந்து மீள்வது பற்றி அடுத்தபாகம் எழுதுவதாக சொல்லியுள்ளீர்கள்! அதை சீக்கிரமே எழுதுங்கள்!

    என்னிடம் சில கேள்விகள் உள்ளன! அவற்றிற்கும் பதிலை எதிர்பார்க்கிறேன்!

    நாம் வெளிநாடுகளிடம் கையேந்தாமல், சுய உற்பத்தி, சுய பொருளாதாரம் என்று முயற்சிகளில் இறங்கினால், ஏனைய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் யாதேனும் சிக்கல்கள் எழக்கூடுமா?

    அடிப்படையில் நாம் மேற்கு நாடுகளாகட்டும், அல்லது ஏனைய நாடுகளாகட்டும், அவற்றுடன் நெருக்கமான பொருளாதார உறவினை பேணினால் மட்டுமே, ஏனைய ஒத்துழைப்புக்கள் சாத்தியமாகலாம்!

    காரணம் இவ்வுலகில் யாரும் தனித்து வாழ்ந்துவிட முடியாது! ஆக, உலகோடு ஒத்தோடு என்பது எவ்வகையில், சுயபொருளாதாரத்துக்கு நேர்முரணாகிறது என்பதை விபரிக்க முடியுமா?

    ReplyDelete
  2. "சல்லிக்கு ஏழு சட்டி வாங்கி
    சட்டி ஒன்று ஏழு சல்லிக்கு விற்றாலும்
    செட்டி வட்டிக்கு ஈடாகாது"

    சிறுவயதில் கேட்டது.

    கொள்முதல் 7 சட்டிகள் 1 சல்லி
    விற்பது 1 சட்டி = 7 சல்லி.
    7 சட்டி X 7 சல்லி = 49 சல்லி.

    இப்படி 1 சல்லி 49 மடங்காகும் தொழில் செய்தாலும் வட்டி தொழிலுக்கு ஈடாகாதாம்.

    ReplyDelete
  3. Salam to all!
    Super post bro!
    Thanks for sharing jazhkallahu kair!

    ReplyDelete
  4. /* பணம் பண்ணுகின்ற அருமையான வாய்ப்புகளாக போர்கள் ஆக்கப்பட்டுவிட்டன. */

    மன்னிக்கணும் சகோ. இந்த கருத்தில் இருந்து முற்றிலும் மாறு படுகிறேன். பணம் பண்ணுவதற்காகவே போர்கள் தொடுக்கப் படுகின்றன என்பதை நான் சத்தமிட்டுச் சொல்வேன். மற்றபடி ஜனநாயகத்தை பாதுகாக்கிறேன் பேர்வழின்னு சொல்றதெல்லாம் ஹம்பக். இன்னும் நிறைய இருக்கு....பின்னூட்டாங்கள் தொடரும்...

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.ஹைதர் அலி,
    விழிப்புணர்வூட்டும் அருமையான ஆக்கம். நன்றி சகோ.

    ReplyDelete
  6. நல்ல கட்டுரை .வாழ்த்துகள் .
    திருக்குர்ஆனில் அல்பகறா என்ற இரண்டாவது அத்தியாத்தின் 282வது வசனத்தில் விசுவாசிகளே நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். உங்களில் எழுதுபவன் நீதமாக எழுதவும். கடன் வாங்கியவரே வாசகத்தை கூறவும். நீங்கள் சாட்சியாக்கக்கூடிய உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்குங்கள் அவ்வாறு இரு ஆண்கள் ஓர் ஆணுடன் இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும். இன்று எழுதப்படும் கடன் உறுதிப்பத்திரம் இந்த இறைவசனத்திற்கு ஒத்தது போல் இருக்கிறது. வட்டி வாங்குவது, கொடுப்பது ஹராம், என்பதால் அது தொடர்பான வாசகத்தை விட்டு விட வேண்டும்.
    வட்டி குட்டி போடும் .குட்டி போடுவது மிருகம் . வட்டியில் பலவகை அறிய கண்டுபிடிப்பு அதிசியம்
    http://nidurseasons.blogspot.in/2009/09/blog-post_4858.html

    ReplyDelete
  7. ஸலாம் சகோ
    வட்டிக்கு கடன் கொடுத்து அளப்பெரிய சொத்துக்களை ஆட்டைய போடுவது நகர்புறங்களிலும் கிராமங்களிலும் தொன்று தொட்டு நிலவி வருகிறது இதைப்போல் அதிகார வர்க்கம் மக்களை தன் கட்டுக்குள் வைக்க வட்டியுடன் கூடிய கடனை இலாவகமாக திணிக்கிறார்கள் இது புரியாது அப்பாவி மக்கள் ஆடம்பர வாழ்வுக்காக கடன் அட்டைகளை வாங்கி வரவுக்கு மீறிய செலவு செய்து பழகி வட்டி குட்டி போட்டு பின்பு பரதேசியாகவும் பைத்தியமாகவும் ஆகிய நடப்புகளும் உண்டு. பணம்படைதவர்கள் வட்டியுடன் கூடிய கடன் வாயிலாக வறியவர்களின் விலை மதிப்பில்லா வளங்களையும் தன்மைகளையும் அபகரிப்பதை உணர்த்திய விதம் அருமை

    ReplyDelete
  8. அருமையான கட்டுரை. தொடருங்கள்..

    ReplyDelete
  9. வணக்கம் சகோ!
    அருமையான கட்டுரை.. சிராஜ் சொல்வது முற்றிலும் உண்மையான விடயம்தான். இன்றைய நாட்டு நடப்புக்களே அதற்கு உதாரணம். அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. உலக வங்கி கடனின் பயங்கரத்தை மிகத் தெளிவாக விளக்குகிறது உங்களின் கட்டுரை.

    பதிவு அருமை சகோ....

    ReplyDelete
  11. @Seeni

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  12. @ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

    வாங்க சகோதரர்

    //அடிப்படையில் நாம் மேற்கு நாடுகளாகட்டும், அல்லது ஏனைய நாடுகளாகட்டும், அவற்றுடன் நெருக்கமான பொருளாதார உறவினை பேணினால் மட்டுமே, ஏனைய ஒத்துழைப்புக்கள் சாத்தியமாகலாம்!

    காரணம் இவ்வுலகில் யாரும் தனித்து வாழ்ந்துவிட முடியாது! ஆக, உலகோடு ஒத்தோடு என்பது எவ்வகையில், சுயபொருளாதாரத்துக்கு நேர்முரணாகிறது என்பதை விபரிக்க முடியுமா?//

    ஒருவரை ஒருவர் சாரமல் இந்த உலகில் வாழ முடியாது உண்மைதான் அதே சமயத்தில் நண்பர்களாக வாழலாம் அடிமையாக வாழ சொல்லி நிர்பந்தம் செய்தால் மூன்றாம் உலக நாடுகளிடம் மேற்கத்திய நாடுகள் கடன் கொடுத்து விட்டு அதைத்தான் செய்கிறார்கள்

    தங்கள் வருகைக்கும் அழமான கருத்தான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ

    ReplyDelete
  13. @s.jaffer.khan

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    ஜஸாக்கல்லாஹ் கைர சகோ

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    @மச்சான் ஹைதர்.,

    மாஷா அல்லாஹ்
    மூன்றாம் உலக நாடுகள் (((கடன்))) குறித்த
    முழுமையான பதிவு

    ReplyDelete
  15. @VANJOOR

    சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  16. @சிராஜ்
    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    ///மன்னிக்கணும் சகோ. இந்த கருத்தில் இருந்து முற்றிலும் மாறு படுகிறேன். பணம் பண்ணுவதற்காகவே போர்கள் தொடுக்கப் படுகின்றன என்பதை நான் சத்தமிட்டுச் சொல்வேன்.///
    இதில் முரண்பாடு ஒன்றுமில்லை நீங்கள் படுத்து போர்த்தினான் என்பதை நான் போர்த்திக் கொண்டு படுக்கிறான் என்கிறேன் அவ்வளவுதான்
    /// மற்றபடி ஜனநாயகத்தை பாதுகாக்கிறேன் பேர்வழின்னு சொல்றதெல்லாம் ஹம்பக். இன்னும் நிறைய இருக்கு....பின்னூட்டாங்கள் தொடரும்.../// ஜனநாயகத்தை பாதுகாக்க அல்ல சகோ பணநாயகத்தை கைப்பற்ற இது தான் சரி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. @VANJOOR

    இந்த பதிவுக்கு மிகப் பொருத்தமான கருத்தாழமிக்க பின்னூட்டாம் நன்றி சகோதரரே

    ReplyDelete
  18. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. @nidurali

    மூத்த பதிவாரன உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    அழகான அல்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டிமைக்கு நன்றி

    ReplyDelete
  20. @Rabbani

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ
    வட்டியின் கொடுமையை விளக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கு நன்றி சகோ

    ReplyDelete
  21. @bandhu

    தொடருகிறேன் உங்கள் ஆதரவுடன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. @Syed Ibramsha

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  23. @காட்டான்அவர்களுக்கு

    //இன்றைய நாட்டு நடப்புக்களே அதற்கு உதாரணம். அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறேன்.//

    உங்கள் வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  24. @G u l a m

    வ அலைக்கும் வஸ்ஸலாம் மச்சான்

    //மூன்றாம் உலக நாடுகள் (((கடன்))) குறித்த
    முழுமையான பதிவு//

    நன்றி மச்சான் இன்னும் இருக்கு wait an see

    ReplyDelete
  25. அஸ்ஸலாம் அலைக்கும்
    // வங்கியில் கொள்ளையிட்டவர்களை என்கவுண்டர் செய்தவர்கள் மக்களை வட்டியின் மூலம் கொல்லுகின்ற வங்கிகளின் கொள்ளை அதிகாரிகளை யார் கொல்வது.//
    சரியான சாட்டையடி கேள்வி.....
    இதற்கு சரியான ஒரே தீர்வு "இஸ்லாமிக் பேங்க் மட்டுமே"
    கூடிய விரைவில் உலகமுழுக்க இஸ்லாமிக் பேங்க்
    நடைமுறையில் வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை .....

    ReplyDelete
  26. நல்லதொரு பதிவு !

    ஒன்றுபட்டு உயிர்க்கொல்லியை விரட்டுவோம்.

    சமூகத்தில் வட்டி வாங்குவது, கொடுப்பது பரவலாக - பகிரங்கமாக நடந்து வரும் போது அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் சமூகத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுவரும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இக்குடும்பக் கொல்லியை தொடர விடாமல் ஊரைவிட்டு மட்டுமல்ல சமூகத்தை விட்டே துரத்த ஓன்றுபட்டு போராட வேண்டியது அவசியமானதொன்றாகிறது.

    ReplyDelete