Friday, March 15, 2013

எனது உடற்பயிற்சி பதிவை திருடிய மாலைமலர்.

திருட்டுகளில் மோசமான திருட்டு ஒருவரின் எழுத்துகளை திருடுவது அதிலும் உடலை வருத்தி பயிற்சி செய்து காட்டிய உழைப்பையும் திருடி இருக்கிறது மாலைமலர் என்கிற முன்னணி பத்திரிக்கை. எங்கு எடுத்தது என்று போடுவது அல்லது நன்றி போடுவது தானே எழுத்துலக ஒழுங்கு
பார்க்க ஸ்கிரின் ஷாட்
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும். 

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. 

திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. 

அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம். 

இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......

இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.


மேலேயுள்ள எழுத்துக்கள் அப்படியே நான் எழுதியது பார்க்க எனது பதிவு

http://www.valaiyugam.com/2011/02/2.html

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்-பாகம் 2

21 comments:

  1. சகோ.ஹைதர்,
    தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக.

    ஷங்கரை ஷாருக்கானா மாத்தினவய்ங்கதானே இவய்ங்க..? வேற என்ன எதிர்பார்க்க..?

    ட்ரில் மாஸ்டர் ஹைதரை... அங்கே, அரை குறை ட்ரஸ் போட்ட ஒரு பொண்ணா மாத்திட்டாங்ய்க...!

    எதுக்கும் தினமணியையும் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாங்களேன்..!

    அடுத்த பதிவு போடலாம்..! :-))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீதும் அமைதி உண்டாகட்டும்
      ///ஷங்கரை ஷாருக்கானா மாத்தினவய்ங்கதானே இவய்ங்க..? வேற என்ன எதிர்பார்க்க..?//

      மிகச்சரியாக சொன்னீர்கள்

      Delete
  2. அடப்பாவியளா...

    எழுத்து பிழை, முற்றுப்புள்ளி என எதையும் கூட சரிபண்ணாம அப்படியே காப்பி அடிச்சுருக்கானுவ!

    என்ன பொழப்பு இது...க்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னபிறகுதான் எழுத்துப் பிழைகளை கவனிக்கிறேன் ஹா ஹா

      Delete
  3. இதை அந்நாளிதழுக்குத் தெரியப்படுத்தினீர்களா சகோ.? அவர்களிடம் இருந்து பதில் வரவில்லையானாலும் உங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி விடுங்கள்.நல்லா வாங்கிக் கட்டியதற்குப்பிறகாவது அவங்களுக்கு சூடு, சுரணை ஏதாவது வருதான்னு பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. மடல் அனுப்பியிருக்கேன் பார்ப்போம் சகோ

      Delete
  4. நிறைய பதிவர்கள் செய்தித்தாள் இணையதளத்திலிருந்து காப்பி அடித்துப் போடுவார்கள். உங்களுக்கு கிடைத்த வெற்றிதான்ன்னு சொல்லணும் ஒரு பத்திரிகையே உங்கள் பதிவை காபி அடித்திருக்கிறேதேன்றால் அதுவே பதிவின் வெற்றி.
    மாலை மலர் செய்தது கண்டிக்கத் தக்கது. என்பதில் ஐயமில்லை,

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. செய்தி பத்திரிக்கைகள் வார இதழ்களிடம் இப்போது சரக்கு குறைந்துவிட்டது அவர்களுடைய நிருபர்கள் திறமை இல்லாதாவர்களாக்வே இருக்கிறார்கள் இப்போது அவர்களால் சுயமாக சிந்திக்க இயலாது. இணையம் இல்லாத காலத்தில் அவர்கள் என்ன எழுதினாலும் காசு கொடுத்து வாங்கி படிக்கும் நிலமை இருந்தது ஆனால் இப்போது அப்ப்டி இல்லை அதுமட்டுமில்லாமல் இப்போது பதிவாளர்கள் நன்றாக சிந்தித்தும் ஆராய்ந்து எழுதுகிறார்கள் அதனால்தான் இவர்கள் நம் பதிவை திருடுகிறார்கள். உங்கள் பதிவை போலவே குமுதம் ரிப்போர்ட்டர் இதழும் என் பதிவை அப்படியே காப்பி அடித்து வெளியிட்டுள்ளார்கள்

    முரளிதரன் சொன்னது போல இதை நாம் . நமக்கு கிடைத்த வெற்றிதான்ன்னு சொல்லணும் ஒரு பத்திரிகையே நம் பதிவை காபி அடித்திருக்கிறேதேன்றால் அதுவே பதிவின் வெற்றி.
    மாலை மலர் செய்தது கண்டிக்கத் தக்கது. என்பதில் ஐயமில்லை,

    ReplyDelete
    Replies
    1. ///குமுதம் ரிப்போர்ட்டர் இதழும் என் பதிவை அப்படியே காப்பி அடித்து வெளியிட்டுள்ளார்கள்///
      உங்களுக்கும் இந்த வலி நன்றாக புரியும் இப்படித்தான் பொறுப்பில்லாமல் செய்கிறார்கள்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  6. கண்டித்தக் கடிதம் எழுதுங்கள்.சன்மானம் அனுப்பச் சொல்லுங்கள்.

    இன்னொரு முறை திருடுவதை இது தடுக்கக்கூடும்.



    ReplyDelete
    Replies
    1. சன்மானம் தேவையில்லை நண்பரே நாம் ஆன்ம திருப்திக்காக எழுதக் கூடியவர்கள்
      ஆனால் விளக்கம் கேட்டு மடல் எழுதியிருக்கேன்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  8. இதே பதிவு பல ஆண்டுகளாக இணையத்தில் சுற்றி வருவதாகத் தெரிகிறதே நண்பா!!! எப்படி உங்கள் பதிவைக் காப்பியடித்ததாகச் சொல்லுகிறீர்கள்?
    எங்கெங்கே இதே பதிவுள்ளது என கூகுளே தேதிவாரியா கொண்டு வந்து கொட்டுகிறது..
    https://www.google.com/search?hl=en&site=&source=hp&q=+நன்கு+பயிற்சி+கைகூடியபிறகு+50+முறை+கூட+செய்யலாம்.+&oq=+நன்கு+பயிற்சி+கைகூடியபிறகு+50+முறை+கூட+செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுகளிலேயே அதிகமாக திருடப்பட்ட பதிவு இதுதான் தொந்தி என்று தேடல் கொடுத்துப் பாருங்கள்

      Delete
  9. அடுத்தவர்களின் கருத்தை திருடுவது இவர்களுக்கு கை வந்த கலை

    ReplyDelete
  10. பாய், அது மாலை மலம்...

    ReplyDelete
  11. பெயருக்காக எழுதுபவர்கள் நாலு பேருக்கு நல்லது நடந்தால் போதும் என்று இருக்க மாட்டாங்க. நாலு காசு சம்பாதிக்கணும் அட்லீஸ்ட் பெயராவது கிடைக்கணும் என்றுதான் இருப்பார்கள். இப்படி எண்ணம் படைத்தவர்கள் திருட்டைக் கூடாதேன்பார்களே தவிர செய்ய வேண்டாமென்று சொல்லவே மாட்டார்கள்.. சினிமாக்கு அடிமைப்பட்டவர்களாச்சே.. புத்தி வேறு எங்கு போகும்..?

    ReplyDelete
  12. பெயருக்காக எழுதுபவர்கள் நாலு பேருக்கு நல்லது நடந்தால் போதும் என்று இருக்க மாட்டாங்க. நாலு காசு சம்பாதிக்கணும் அட்லீஸ்ட் பெயராவது கிடைக்கணும் என்றுதான் இருப்பார்கள். இப்படி எண்ணம் படைத்தவர்கள் திருட்டைக் கூடாதேன்பார்களே தவிர செய்ய வேண்டாமென்று சொல்லவே மாட்டார்கள்.. சினிமாக்கு அடிமைப்பட்டவர்களாச்சே.. புத்தி வேறு எங்கு போகும்..?

    ReplyDelete